அழகிய திராட்சை இரசக் கனவுகள்
கனவுகள்! – 12
அடுத்த நாள் மதியம்..
உச்சியினில் ஏறிக் கொண்டிருந்த வெயில்.. மெல்ல மேற்குவானோடு இணைந்திருந்த ஆழியினை நோக்கி.. சாய்ந்து கொண்டிருந்த முன்னந்தி நேரத்துக்கும், நண்பகல் நேரத்துக்கும் இடைப்பட்ட.. ஆசுவாசமான பொழுது அது!!
கரையை நோக்கித் தழுவ ஓடோடி வரும் கடலலைகளோ.. அவ்விடத்தில் கரையையே காணாது போன ஆத்திரத்தில்.. கடலோடு வளர்ந்திருந்த அந்த கருங்குன்றின் மீது மோதி மோதித் தெறித்துக் கொண்டிருந்தது.
அப்படித் தெறித்த உவர்க்கும் நுரை நீரின் துகள்கள்.. அந்தக் குன்றின் மீது அமைந்திருந்த.. ஆளுநர் மாளிகையின்.. கடலோரம் அமைந்திருந்த ஒரு பக்க சாளரச் சுவற்றிலும் தெறிக்கத் தான் செய்தது.
ஆனால் ஆளுநரின் வெள்ளை மாளிகைக்கு உள்ளேயோ..கடல் இரையும் சத்தம் துளியும் கேட்காதளவுக்கு.. அவ்விடம் முழுவதும் களைகட்டியிருந்தது மிக விஸ்தாரமான விருந்தினால்!!
அங்கிருந்த அனைவருமே.. ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி… வெள்ளைக்காரர்களாகவே இருப்பதை அவதானித்தாள்.. அதே இடத்தில்..
நடுக்கூடத்தில்..விரிக்கப்பட்டிருந்த நீண்ட வெல்வட் கம்பளத்தின் மீது நின்றிருந்த லொவீனா அபோன்சுவா.
அதிலும் அங்கே ஒன்றிரண்டு சுதேசப் பணியாளர்கள்.. விருந்துக்கு என்று வந்திருந்த ஆங்கிலேயே பிரபுக்களுக்கும், அம்மணிகளுக்கும் அவர்களுக்கு வேண்டிய மதுவகைகளை உயர்ரக கண்ணாடிக் குவளைகளில் ஊற்றி.. தட்டில் ஏந்திய வண்ணம் பரிமாறிக் கொண்டிருப்பதையே காணக்கிடைத்தது அவளுக்கு.
வெள்ளை நிறக் கூந்தல் கொண்ட மங்கையரும், சிவப்பு நிறக் கூந்தல் கொண்ட மங்கையரும், பொன்னிற வண்ண கூந்தல் கொண்ட மங்கையரும்.. பத்தொன்பதாம் நூற்றாண்டில்.. மங்கையர்களின் ஸ்டைலான.. ‘விக்டோரியன் கால… பார்ட்டி ஃப்ரோக்கினை” அணிந்து… தம் கைகளில் கையுறையுடன்.. குழுமிக் குழுமி நின்ற வண்ணம் பேசிக் கொண்டிருந்ததை… பார்த்தவளின் கண்கள்..
அவர்கள் வைத்திருந்த சீனர்களின் விசிறிகளைக் கண்டதும்… இருபத்தோராம் நூற்றாண்டைய மங்கையல்லவா?
விசிறி பாவிப்பது இங்கே காண்பதற்கும் அரிதல்லவா? அவற்றையே தான் ஒரு சில மணித்துளிகளாக.. அதிகப்படி ஆர்வத்துடன் பதியவும் செய்தது அவள் கண்கள்.
அதன் பின் அவளது கருமை அஞ்சனங்கள் தீட்டப்பெற்ற நயனங்களோ.. தன்னை இந்த பிரம்மாண்டமான விருந்துக்கு அழைத்த தன் முறைப்பையன் ‘டோனியை’யே தேடலானது.
ஆம், இந்த ஆங்கிலேயர்கள் மட்டும் கலந்து கொள்ளும் விருந்துக்கு இலங்கையின் முதன்முதலாக பட்டதாரிப் பட்டம் வென்றவன் என்ற பெருமை கொண்ட ‘ஆன்டனி பெர்னாண்டஸ்’ஸூம் அழைக்கப்பட்டுத் தான் இருந்தான்.
இருந்தாலும் அழைத்த விருந்துக்கு தனியாகச் செல்லாமல்.. அவளை நாடி வந்து.. காலில் விழாத குறையாக.. அவள் கையைப் பற்றிக் கெஞ்சி,
“லொவீனா.. காலனியல் ஸ்டாஃப்ஸ் எல்லாருக்கும் ஒரு பார்ட்டி… அதுவும் பேர்ரா.. இரண்டு பேர் அட்டென்ட் பண்ணியாகணும்..ப்ளீஸ்.. எனக்காக நீ வந்து தான் ஆகணும்..”என்று கூற, ஆங்கிலேயர்கள் இருக்கும் விருந்தில் அவளெப்படி என்று தர்மசங்கடத்துக்கு ஆட்பட்டுத் தான் போனாள் லொவீனா.
அதனால் சுருங்கிய விழிகளுடன், “நா.. நான் எப்படி..?”என்று அவள் அசடுவழியக் கேட்க, அவனோ ஒற்றைக் காலில் நிற்கும் கொக்குப் போல விடாப்பிடியாக,
“யெஸ்.. உன்னை விட்டா அந்த பார்ட்டியை அட்டன்ட் பண்ண யாருக்கு தகுதியிருக்கு.. உன்னால இங்கிலீஷ் ஃப்ளூவன்ட்டா பேச முடியும்.. அதனால ஈஸியா அவங்க கூட மிங்கிள் ஆகிரலாம்..அதனால இந்த பார்ட்டி கண்டிப்பா உனக்கு போர் அடிக்காது.. .. ப்ளீஸ் ஏமாத்திடாம வந்து சேரு..”என்று யாருமில்லாமல் அவள் வீட்டில் தனித்திருந்த பொழுதில் டோனி கூறிவிட்டுச் செல்ல அவளாலும் தான் அதனை மறுக்க முடியவில்லை.
அவளும் அதனை மறுக்கத் தோன்றாமல் இதோ.. இப்போது ஆளுநர் தாமஸின் வெள்ளை மாளிகையில்.. வந்து நிற்கின்றாள்.
அந்த விருந்துக்கு மிகவும் பொருந்திப் போகும் வகையில்.. அவள் அணிந்திருந்த.. சிவப்பு நிற “ப்ரோக்”ஆடை.. பிற மங்கையர்களில் நின்றும் ரொம்பவும் வித்தியாசமாக.. அதே சமயம் அத்தனை அழகுற அமைக்கப்பட்டிருந்தது.
ஏனைய வெள்ளைக்கார மங்கையர்களின் ஆடைகள்.. தன் இடைக்கு கீழே.. பிருட்டப் பாகத்தில்.. உடை அப்பலம் போல பொங்கி வந்திருப்பது போல அமைந்திருக்க.. லொவீனாவின் ஆடை மட்டும்.. அப்படி பின்னெழில் பொங்கி வந்திருக்காமல்.. சரியாக அவளது பிருட்டத்தை நெருக்கிப் பிடிக்குமாறே அமைந்திருந்தது.. அங்குள்ள பெண்கள் அனைவரிலும் அவளை ஒரு நொடிக்கு மேலாக ஆராய்ந்து பார்க்கத் தான் தூண்டியது.
தன் முன்னெழில் பாகத்திற்கு மேற்பட்ட.. கழுத்து வளைவுக்கு கீழ்ப்பட்ட வெண்மையான பிரதேசத்தில்.. சின்னச் சின்ன சிவப்பு நிறப்பவளங்கள் கோர்த்து செய்யப்பட்ட மாலை.. பளபளக்க, கூந்தல் அனைத்தையும் கழுந்துக்கு கீழே படரவிடாமல்… அப்படியே தூக்கி.. உச்சந்தலையில் ஓர் பூப்பூத்திருப்பது போல அடக்கியிருந்தவளின்.. பாதி சிகையலங்காரத்தை மறைக்கும் வண்ணம்.. சரித்து அணிந்திருந்தாள் அடர்சிவப்பு நிற செயற்கை ரோஜா கொண்ட தொப்பியினை.
கைகளிலே.. சிவப்பு நிற கையுறை அணிந்து.. ஆசிய ஐரோப்பிய கலவையில் மிளிர்ந்து கொண்டிருந்தவளின் இதழ்களில் பூசியிருந்த அடர் சிவப்பு நிற உதட்டுச்சாயம்.. அவளை.. அங்கிருந்த மங்கையர்கள் அனைவரிலும் ஓர் பேரழகு மங்கையாகவே காட்டியது.
பெரும்பாலும் வெள்ளைக்கார பெண்மணிகள்..
வெள்ளைவெளேரென்று குழைத்து வைத்த சுண்ணாம்பு போல இருப்பதினாலோ என்னவோ.. அவர்கள் அத்தனை வாக்காக இருக்காமல்..முகமெங்கிலும் சின்னஞ்சிறு சிவப்பு நிறப் புள்ளிகள் கொண்ட சருமத்தவர்களாகவே இருக்க..
போர்த்துக்கல் தந்தைக்கும், இலங்கை தாய்க்கும் பிறந்த.. லொவீனாவோ.. பார்ப்பவர் யார் மணதையும் கவரும் ஓர் அழகிய பொன்னிறமாகவே இருந்தது.. அவள் அழகுக்கு ஓர் ப்ளஸ்.
அதிலும்.. நடனப் பேராசிரியை அவள்!! அவளது.. ஊளைச்சதையே இல்லாத வயிறும்.. கச்சிதமாக வளைந்திருக்கும் இடையும்.. இடையின் மேற்புறமாக பருத்த முன்னெழில்களும், அதே போல கீழ்ப்புறமாக பருத்த தொடையோடு.. இணைந்த கண்ணைக்கவரும் கொழுப்பும்… அங்கிருக்கும் வெள்ளைக்கார ஆடவர்களையும் ஒருமுறைக்கு இருமுறை அவளைத் திரும்பிப் பார்க்கத் தான் செய்தது.
அங்கே இருந்த ஒருசில வெள்ளைக்கார பிரபுக்கள்.. இந்த அழகிய ஜிப்சி நடனக்காரியின் ஆஸ்தான பார்வையாளர்கள் மற்றும்.. உயிரைக் கூட கொடுக்கும் அளவுக்கு.. தீவிர விசிறிகளும் கூட என்பதை அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்.
அதிலும்.. அந்த வெள்ளைக்கார அம்மணிகளும்… கையில் மது ஏந்திய குவளைகளுடன்.. இவளை பொறாமைக் கண்களுடன்.. அவளை உச்சாதி பாதம் வரை நோக்கியவர்களாக தங்களுக்குள் அவளைப் பற்றி, “இஸ் ஷீ அ டான்சர்?”என்று தங்களுக்குள் கேட்டுக் கொள்ளவும் செய்ய, அவளோ அதை எதையுமே பொருட்படுத்தாதவளாக..
தன்னை இந்த விருந்துக்கு வரவழைத்த டோனியை கண்களால் துலாவிக் கொண்டே.. தான் நடந்தாள்.
எப்போதுமே இரவிலேயே ஆளுநர் மாளிகைக்கு வந்து பழக்கப்பட்டிருக்கிறாள் அந்த பேரழகு மங்கை.
ஒருநாள் அவனது பிறந்தநாளிற்காக அவள் நடனமாட அழைக்கப்பட்டிருந்த போதிலும் சரி, நேற்று.. மதங்கொண்ட யானையிடமிருந்து அவளைக் காப்பாற்றியதற்காக… மிக உயர்ந்த பொருளான அவள் உடலை.. அவனுக்கு அர்ப்பணிக்க வந்த போதிலும் சரி.. இரு சமயங்களிலும் இரவாகவே இருந்தது.
ஆனால் இன்று முதன்முறையாக.. ஆளுநர் மாளிகைக்கு.. பட்டப்பகலில் வந்திருப்பது.. அவளுக்கு அத்தனை வித்தியாசமாகத் தெரிந்தது.
அங்கே இருந்த ஒவ்வொரு தூணும்.. வெள்ளை வெளேரென்ற நிறத்தில்.. நேர்த்தியான பூவலங்காரங்களைக் கொண்டிருக்க.. அந்த ஹாலின் உத்திரத்திலே தீட்டப்பட்டிருந்த பழங்கால எண்ணெய் வர்ணச் சித்திரங்கள்!!
எங்கோ இதற்கு முதல் இதன் கலைநுணுக்க ஏற்பாடுகளையும் கவனித்திருப்பது போலத் தோற்றமயக்கம்.
கூடவே நடு உத்திரத்தில்.. மிகவும் பெறுமதி வாய்ந்த சரவிளக்கு.. பத்தொன்பதாம் நூற்றாண்டின் கலைநுட்பத்துடன் மிளிர்ந்து நிற்க, பின்னணியிலே ஒலிக்கப்பட்டுக் கொண்டிருந்தது ரொம்பவும் நுண்மையான வயலின் கீதம்!!
ஆடவர்கள் அணிந்திருந்த கோட்டின் பின்புறத்தில் எல்லாம் கரப்பான் பூச்சியின் பின்புறம் போல ஒரு வால் போன்ற அமைப்புத் தொங்கிக் கொண்டிருக்க.. தலையிலே.. குப்புறக் கவிழ்த்துப் போட்டக் கப்பல் அமைப்புடைய முக்கோண மூலைத் தொப்பி அணிந்த ஒரு சிலரும்,
மேலும்.. கழுத்தைத் தாண்டித் தொங்கும் அலை அலையான, சுருள் சுருள் கொண்ட கேசம் வைத்திருந்த ஒரு சிலரும், கூடவே கைகளில்.. இன்னும் முதுமை தட்டாமலேயே வாலிபர்கள் கூட கைத்தடி வைத்திருப்பதையும் அவதானிக்கலானாள் லொவீனா.
அங்குள்ள மாந்தர்கள் அனைவரையும் கூட… இதற்கு முதல் கண்டிருப்பது போல ஓர் தோற்றம்.
ஆனால் எங்கே என்று..மூளை அவளுக்குக் காண்பிக்காமல் போகவே, தன் அழகிய பிறை நுதலில் யோசனை இரேகை மீதூறப் பார்த்துக் கொண்டிருந்த வேளையிலே, அவளை நோக்கி வந்தார் ரொம்பவும் பருத்த உடலமைப்பு கொண்ட.. அவளை விட உயரத்திலும் குறைந்த ஒரு வெள்ளைக்கார பிரபு.
அவரின் தலையோ.. பாதி வழுக்கை விழுந்திருக்க..பின்னந்தலைப் புறமாகவும்,காதுக்கு அண்மித்த பகுதிகளிலும் மாத்திரம் நரை முடியிருக்க..அவரது பானை வயிற்றுத் தொப்பையை மறைக்க முடியாமல்.. அடிவயிற்றில் ஒளிந்து கொண்டிருக்கலானது அவர் இடுப்பிலே அணிந்திருந்த பெல்ட்.
கருநிறத்தில்… வால் வந்த கோட்டும், அதே நிறத்தில் பேன்ட்டும் அணிந்திருந்தவர்.. அவள் புறமாக நடந்து வந்து தன் கையுறை அணிந்த கையை நீட்டி, “வூட் யூ ப்ளீஸ் டான்ச் வித் மீ பியூட்டிபுள் லேடி?”என்று அழைக்க, அவள் ஒரு கணம் அந்த அழைப்பை ஏற்க முடியாமல் திண்டாடித் தான் போனாள்.
இந்தப் பருத்த மனிதருடன் இவள் நடனமாடச் சென்றால்… டோனி அவளைத் தேடி வரும் போது.. அவன் என்ன செய்வான்?
உள்ளுக்குள் சங்கடம் கனன்ற போதும்.. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நின்றவள்.. நாகரீகம் கருதி.. அவர் நீட்டிய கையை மறுக்கத் தோன்றாமல்.. தன் கையை மெல்லமாக வைத்தவள், “ஓ.. ஷூர்”என்று வலுக்கட்டாயமாக புன்னகையொன்றை வரவழைத்துக் கொண்டு அங்கிருந்து.. அந்தப் ‘பெரீய்ய’ பிரபுவுடன் சென்றாள் லொவீனா.
விருந்துபசாரம் நடந்து கொண்டிருந்த ஒரு பாதி பக்கத்தில்.. வயலின் இசைக்கச்சேரிக்கு எதிரில்.. ஆண்களும், பெண்களுமாக கை கோர்த்து ஆடிய வண்ணம் இருக்க.. அந்தப் பெருத்தப் பிரபுவுக்கோ.. தன்னைப் போன்ற ஆளுடன் பொன்னிற மேனியாள்… ஆட சம்மதம் தந்ததில் முகத்திலோ கொள்ளை கொள்ளையாக பெருமிதச் சிரிப்பு.
அங்கே சரியாக நடுமத்திய இடத்தில் அவர்கள் போய் நின்று கொள்ள.. நடனப் பேராசிரியைக்கா.. மேலைத்தேய நடனத்தைப் பற்றிச் சொல்லிக் கொடுக்கவும் வேண்டும்??
ஆனால்.. சற்றே சிருங்கார எண்ணம் கொண்ட அந்தப் பிரபு தான்.. கைகளில் தோடம்பழம் கிடைத்து விட்டது என்று எண்ணினாரோ? என்னவோ? அவளைச் சாறு பிழிந்து எடுத்து.. ஒருவழிப் பண்ணிக் கொண்டு தானிருந்தார்.
அவள் இடையில் ஒரு கையும், அந்தரத்தில் நீளும் அந்த வழுவழுப்பான கைகளில்.. கோர்த்த விரல்களுமாக ஒரு கையும் வைக்க வேண்டிய வெள்ளைக்கார பிரபுவோ, இடையில் வைக்க வேண்டிய கையை.. அவளது அழகிய பின்னெழில்களின் ஒரு பாதியில் வைத்து.. அதை அழுத்திய தினுசில்.. அகல விரிந்தன அவள் நயனங்கள்;நின்று வந்தது அவள் மூச்சு.
அதிலும்.. ரொம்பவும் குட்டையான அவரது தலையோ.. அவளது பங்கய மலர்கள் போலக் கூம்பிய மார்புக்கூட்டின் நடுவில் வந்து நிற்க.. அந்த கொழுத்த பிரபு.. அவள் கண்கள் இருப்பது அங்கே என்று எண்ணிக் கொண்டாரோ?
அவளது தனங்களில் பதிந்த அவர் கண்கள்.. அவள் நயனங்களை நோக்கி மேலெழவேயில்லை.
அவரோ.. கிறங்கிச் சிவந்த கண்களுடன்.. பின்னழகை அழுத்திய விரல்களால் கோலம் போட்டுக் கொண்டே..தன் பாதங்களை ஒரே இசைக்கு அசைத்தவாறு ஆட,
அத்துமீறும் அவர் கைகளை.. விரிந்த நயன.. அவஸ்தைப்புன்னகையுடன் எடுத்து.. இடையில் வைத்துக் கொண்டே அவள் ஆட முற்பட்ட போது தான் அவள் கண்கள் கண்டு கொண்டது.. அவள் வெகுகாலம் தவமாக தவமிருந்து,
‘காணக்கிடைக்காதா?’என்று ஏங்கிய ஓர் உருவத்தை.
சரியாக அவளுக்கு நேரெதிரே குழுமி நின்றிருந்த… நடுத்தர வயதுள்ள ஆடவர்களுடன் பேசிக் கொண்டிருந்த அந்த உருவம்.. ஓர் ஆணுருவம்!!
அந்த மொத்த விருந்திலுமே.. அவளுக்கு புறமுதுகிட்டபடி நின்றிருந்த ஆடவன்.. அவன் மட்டும் தான்.. அந்தக்காலத்திலே அரச பரம்பரை வம்சத்தைச் சார்ந்த, உயர் குழாத்தினர் அணிந்த “சாம்பல் நிற” அலைஅலையான கேசம் தொங்கும் “விக்” அணிந்திருந்தான்”.
சாம்பல் நிற ‘பெரிவிக்’!! அதனோடு இணைந்த வெள்ளை வெளேரென்ற பட்டினாலான.. வெள்ளி நிற பூ அலங்காரத்தில் முழங்கால் அளவு நீளமுள்ள கோட், கழுத்திலே ஃப்ரில்ஸ் அலங்காரம் வைக்கப்பட்ட சட்டை என்பன அணிந்து வெள்ளையும், சொள்ளையுமாக நின்றிருந்தான் அவன்!!
கூடவே. . குதிகால் கொண்ட பட்டு காலுறைகள் மற்றும் தோல் காலணிகளை அணிந்து நின்றிருந்த அந்த ஆடவனின் புறமுதுகுத் தோற்றத்திலிருந்தும் அத்தனை கம்பீரம் அவனில் மிளிர்ந்து கொண்டு தானிருந்தது.
அவனைக் கண்ட மாத்திரத்தில்.. திகைப்பூண்டை மிதித்தாற் போன்று நின்றவளுக்கு.. இங்கு நடைபெறும் அனைத்தையும் முன்பு எங்கு கண்டிருக்கிறாள் என்று ஞாபகம் வர திகைப்பூண்டை மிதித்தாற் போல.. நடனத்துக்கு அடுத்த எட்டை எடுத்து வைக்க முடியாமல் ஸ்தம்பித்து நின்று போய் விட்டிருந்தாள் நடனமங்கை லொவீனா.
என்ன? அப்படியானால் இந்த இடம், மாந்தர்கள்.. இந்த விக் வைத்த சிகைக்காரன் எல்லாவற்றையும் இதற்கு முன் எங்கு கண்டிருக்கிறாளாம்??
கனவில்!!
ஆம்.. இதே பின்னணியில்.. இதே களத்தில்.. இதே போன்ற வெண்ணிற பட்டில்… இதே மாதிரி உயர் குழாத்தினர் அணியும் விக் அணிந்து தானே நின்றிருந்தான் அவன்!!
அவன்??
அவளது திராட்சை இரசக் கனவுகளுக்குச் சொந்தக்காரன்!!
ஏன்…. அவனைப் போல வேறு யாரும்.. விக் அணியவே மாட்டார்களா என்ன?
அவன் தான்.. திராட்சை இரசக் கனவுகளில் நித்தமும் வந்து காதல் தொல்லை தருபவன் என்று எப்படி உறுதியாக நம்புவாள் அவள்?? அவள் பொல்லாத மூளை அவளிடயே இடித்துக் கேள்விக் கேட்டது.
அவள் மூளையின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் வண்ணம்.. அங்கே சிலவும் நடந்தேறத் தான் செய்தது.
இத்தனை நேரம்…. அங்கே நின்றிருந்த சமவயதுடைய ஆடவர்களுடன் பேசிக் கொண்டிருந்த அந்த வெண்ணிற சிகைக்காரனோ.. பேசிக் கொண்டிருந்தவாறே.. இலேசாக அவன் பக்கவாட்டில் திரும்ப.. அவன் முகத்தை அவளால் காணக்கிடைக்கவில்லை தான்.
இருப்பினும் அவன் தான்..நித்தமும் அவளது துயில் கனவுகளில் வந்த சொர்ப்பணக்காரன் என்பதற்கான தெள்ளத் தெளிவாகக் கிடைத்தன.
அப்படி அவள் ஆதாரமாக கருதும் அளவுக்கு அவள் எதைக் கண்டாள்?
அவளது நிர்மலமான கண்களோ.. அவன் அப்படியே இலேசாகத் திரும்பிய போது.. அவளது வெண்மையான கைகளின் விரலில்.. .. கறுப்பு நிற வட்ட வடிவ மாணிக்கமும்.. அதைச் சூழ குட்டிக்குட்டி வைரங்களும் பதிக்கப்பெற்ற மோதிரத்தையும்,
அந்த மோதிரக் கையில் அவன்.. அழகுற ஏந்தியிருந்த.. அடர் சிவப்பு நிற திராட்சை இரசக் குவளையையும் கண்டு கொண்டன!!
அவள் கனவில் வருவது போலவே இம்மி பிசகாமல்.. திராட்சை இரசக் குவளையை ஏந்திய படி அவன்!!
அது அவன்!!
அவளது “அழகிய திராட்சை இரசக்கனவுகளுக்கு சொந்தக்காரன்”என்று தோன்ற… இந்த முறையாவது இருட்டில் வந்து சில்மிஷம் செய்யும் ஆடவனை.. வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும்.. அவனது முகத்தைக் காண வேண்டும் என்ற அவா பெரிதும் எழுந்து பரவி.. அவள் நெஞ்சமெங்கணும் காதல் நேசவலையில் நிறைக்கலானது.
அந்தக் கொழுத்த முதியவருடன் ஆடிக் கொண்டிருந்தவளின் பார்வையோ.. ஒருவித காதல் அவஸ்தையுடன்… அவன் செல்லும் திசையெங்கணுமே… தொடர்ந்து சென்றது.
இப்படியொரு நடனக்காரிகை தன்னை கனவிலேயே கண்டு.. உருகி மருகிக் காதலித்திருப்பது அறியாத.. திண்மையானதும்,
முறுக்கேறியதுமான தோள்புஜங்களைக் கொண்ட ஆஜானுபாகுவான ஆண்மகனோ..
தன் முகத்தை பூங்காரிகையிடம் காட்டாது.. புறமுதுகிட்டவாறே நடந்து சென்று.. அங்கே மதுக்குவளைகளுடன் நின்றிருந்த ஒரு சில பெண்களுடன் உரையாடுவதை உணர்ச்சி துடைத்த முகத்துடன் பார்த்திருக்கலானாள் லொவீனா.
அதிலே.. ரொம்பவும் தேய்ந்த பலகை போல.. முன்னேயும், பின்னேயும் பெண்களுக்கேயுரிய அங்கலாவண்யங்கள் ஏதுமற்று இருந்த மிகுந்த ஒல்லியான பெண்ணொருத்தி..
காமம் சொட்டும் கண்களுடன்.. லொவீனாவுக்குச் சொந்தமான இந்திரனின் மார்பினைத் தொட்டு.. ஏதோ தூசு தட்டுவது போல பாவ்லா செய்ய இவளுக்கு வந்ததே கோபம்.
‘எனக்கு உடைமையான பொருளையா தொடுகிறாய்?’என்று உள்ளுக்குள் எரிமலைக் குழம்பு கொதிப்பது போல உஷ்ணப் பெருமூச்சு விட்டவள், தன்னவனின் மார்பைத் தொட்ட பெண்ணின் விரல்களை நசுக்குகிறேன் பேர்வழி என்று…
தன்னுடன் ஆடிக் கொண்டிருந்த அந்த வெள்ளைக்கார முதியவரின் விரல்களை.. கோபத்துடன் நசுக்கிப் பிடிக்கலானாள் லொவீனா.
அவரோ தன் வெண்ணிற முகம்.. அப்படியே மாறி செந்நிறங் கொள்ளுமளவுக்கு.. வலியில் துடித்தாலும்.. கத்துவது நாகரிகம் அல்ல என்றெண்ணி.. வாயை இறுக மூடிக் கொண்டிருந்தவரின் முகமோ இஞ்சித் தின்ற குரங்கு போல் தான் மாறியது.
தன்னை ஓர் பெண் தொட்டால் என்பதற்காக.. இன்னோர் ஆடவரின் விரல்கள் நசுக்கப்படுவதை அறிய மாட்டாத அந்த இந்திரன்.. தன்னைத் தொட்ட பெண்ணிடமிருந்து இலாவகமாக கழன்று கொண்டு…. அப்போதும் அவளுக்கு முகம் காட்டாமல் புறமுதுகிட்ட வண்ணமே.. நடந்து கொண்டேயிருந்தான் அவன்.
இவளும் மிகக் கவனமாக அவன் முகத்தைப் பார்த்து விடும் நோக்கில்.. அவன் தன் கண் பார்வைக்கு அப்பால் சென்று விடக் கூடுமோ என்ற அச்சத்தில், தன்னுடன் ஆடிக் கொண்டிருந்த குண்டரிடம், “எக்ஸ்கியூஸ் மீ”என்று கழன்று கொண்டவளாக.. அவனைத் தான் பார்வையாலேயே… தேடிய போது..
அவன் அந்தப் பிரம்மாண்டமான மாளிகையில் நடுக்கூடத்திலே அமைக்கப்பட்டிருந்த இருபுறமும் வளிவு நெளிவான வெள்ளை வெளேரென்ற கைப்பிடி வரிசை கொண்டு.. நடுவிலே சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டிருந்த படிகளில் இரண்டிரண்டாகத் தாவித் தாவி ஏறியவன்.. மேல் மாடிக்குச் செல்வது புரிந்தது அவளுக்கு.
அவளும் பின்னாடியே செல்ல நாடி தன் கவுனின் கீழ்த்துண்டை இலேசாகத் தூக்கிப் பிடித்துக் கொண்டு.. அவனை நோக்கிச் செல்ல முற்பட்ட போது.. அவளின் பெயரை மிகவும் அழுத்தம் திருத்தமாக அழைக்கலானது அவளுக்கு மிகவும் பரிச்சயப்பட்ட ஓர் ஆண்குரல்.
அது அவனது வருங்கால மணவாளன் ஆன்டனி பெர்னாண்டஸ்.
“லொவீனா” என்றழைத்த படியே.. தன்னழகு மங்கையை நாடி வந்தவன், அவள் இன்னும் தன்னை நோக்கித் திரும்பாமல் இருப்பதைக் கண்டு.. உரிமையுடன் அவள் கைச்சந்தினைப் பற்றித் தன்னை நோக்கித் திருப்பியவன்,
“உன்னை எங்கேயெல்லாம் தேடுறது?? .. நீ வரமாட்டேன்னு நெனச்சே.. ஓ மை காட்.. தேங்க் காட்.. யூ கேம் ஹியர்..” என்று பேசுக் கொண்டே செல்ல தன் கனவுகளில் வந்து பாடாய்ப்படுத்துபவனின் முகத்தைக் கண்டிவிட சந்தர்ப்பம் வாய்த்தும்.. இந்தப் பாழாய்ப்போன டோனியினால் எல்லாம் பாழாய் போய் விடுமோ என்று அவஸ்தையுடன் தான் பார்த்தாள் அவள்.
அவனுடன் மேற்கொண்டு நின்று பேசப்பிடிக்காமல், அவனின் புறமுதுகுப் பக்கம் யாரையோ சுட்டிக் காட்டியவள், அவசரமான தொனியில், “அங்கே பாரு டோனி.. உன்னை யாரோ கூப்பிடுறாங்க..”என்று மட்டும் சொன்னவள், அவன் திரும்பி அது யாரென்று பார்த்த வேளையின் மின்னலென அங்கிருந்து எஸ்ஸாகித் தான் போனாள் லொவீனா.
அவளால் ஏமாற்றப்பட்டதை அறிந்திராத அப்பாவி டோனியோ,நிஜமாகவே யாராவது ஒரு வெள்ளைக்கார பிரபு தன்னைக் கூப்பிடுகிறார் போலும் என்றெண்ணித் துலாவித் துலாவிப் பார்த்து..
அப்படி யாரும் கூப்பிடவில்லை என்பதை அறிந்து ஏமாற்றம் கமழும் விழிகளுடன் , “எங்கே… அப்படி யாரும் கூப்பிட்ற மாதிரி தெரியலையே?” என்று திரும்பிய போது அவனுக்காக அங்கே லொவீனா காத்திருக்கவில்லை.
‘இவள் எங்கே போனாள்?’ என்று எண்ணி தன் தாடையை சொறிந்தவாறே.. விழிகளால் சுற்றுமுற்றும் தேடியும் எங்கும் அவள் இல்லை.
ஆனால் சாமர்த்தியக்காரி லொவீனா.. அவன் யார் தன்னை அழைப்பது என்று பார்த்து விட்டுத் திரும்பிய சின்ன இடைவெளியில்.. அங்கே இருந்த சாளரத் திரைச்சீலை மறைவில்..
அரவமே எழுப்பாது பதுங்கி இருந்தவள்.. டோனி அந்த இடத்தை விட்டும் அகன்றதும் தான் தாமதம்.. தடதடவென மாடிப்படிகள் ஏறி… அவன் சென்ற பாதை வழியே தான் போனாள்.
அங்கே.. அவன் தேடி வந்த கண்ணாளன் இருந்தது.. ரொம்பவும் பலநூறு வருடக்கணக்கில் பழைமையான.. திராட்சை இரசப் போத்தல்கள் எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.. திராட்சை இரச போத்தல்கள் களஞ்சியப்படுத்தவென்றே ஒதுக்கப்பட்டிருக்கும் ஓர் அறைக்கு!!
அவளும் அவனைப் பின்தொடர்ந்து போய்.. அந்த அறையின் வாயிலில்.. தன் உள்ளமும், ஒட்டுமொத்த உடலும் அலைபாய.. காதல் கண்களில் ஊற்றெடுத்துப் பாய.. தன் உரோமக்கால்கள் சிலிர்த்தெழ.. அவன் முகம் காண அவஸ்தையுடன் தான் நின்றிருந்தாள் மங்கை.
அவனோ அங்கே சிறியளவிலிருந்து.. பெரிது வரை.. உயரத்திற்கேற்ப அடுக்கப்பட்டிருக்கும் வைன் போத்தல்களில் இருந்து.. ‘1756’ என்று எழுதப்பட்டிருந்த ஓர் போத்தலை எடுத்தவன்…
அதனைத் தான் கையோடு கொண்டு வந்திருந்த திராட்சை இரசக் குவளையினை.. மேசை மீது வைத்து விட்டு.. போத்தலோடு திரும்பி ஊற்ற.. அங்கே தன் இனிய கனவுகளுக்குச் சொந்தக்காரனைக் கண்டு அதிர்ந்து தான் போனாள் அவள்.
அழகிய திராட்சை இரசக்கனவுகளுக்குச் சொந்தக்காரன் அவனா??
இந்த நாட்டின் ஏகாதிபதி.. தாமஸ் மெயிட்லேண்டா??
எப்போதுமே இந்த சாம்பல்நிற விக்கினையும், அந்த கருநிற மாணிக்க மோதிரத்தினையும் அணியாதவன்.. இன்று அணிந்ததால் தான்.. தன் இந்திரக் கனவுகளுக்குச் சொந்தக்காரன் இந்த ஆங்கிலேயே வாலிபன் என்று அறிந்தாளோ??
அவனோ.. குவளையில் திராட்சை இரசம் ஊற்றியவன், அறையில் நிழலாடுவதை உணர்ந்து அண்ணாந்து பார்த்தவன்.. அப்போது தான் முதன் முதலாக.. தன் இதயத்தைக் களவாடிய பெண்ணின் பிரசன்னம் உணர்ந்து இனிதாக அதிர்ந்து தான் நின்றான் அவனும்.
ஆனால் லொவீனாவோ.. இது நாள் வரை தான் தேடித் தேடிக் களைத்த வாலிபன் இவன் தானா என்று.. மனதுக்குள் ஏங்கி.. வெளியில் கல்லாகி ஸ்தம்பித்து நிற்க.. அவளின் ஸ்தம்பித்த கோலம் கொண்டு சற்றே அச்சங்கொண்டான் ஏகாதிபதி.
திராட்சை இரசப் பானத்தை விடுத்து.. அவளை நோக்கி அழுத்தமான காலடிகள் எடுத்து வைத்து.. மெதுவாக நடந்து வந்தவன்.. அவள் கைச்சந்தினைப் பற்றி இலேசாக உலுக்கி, “என்னாச்சு லொவீனா.. ஆர் யூ ஆல்ரைட்..?”என்று கேட்டதில் தான்.. ஸ்மரணை பெற்றாள் லொவீனா.
அவள் இத்தனை நாளாக.. காணக்கிடைக்காதா என்றேங்கிய முகம்.. அது தாமஸின் முகம்!! அவளைக் கண்ட நாள் முதலாக ஊனூகி.. உயிராகி காதலிக்கும் முகம்!!
மதங்கொண்ட யானையிடம் நின்றும் தன்னுயிரைத் துச்சமாக பணயம் வைத்து.. அவள் உயிரைக் காத்த அவனது முகம்!!
நேற்றிரவு உயிருக்கு பிரதியுபகாரமாக.. அவளையே தர விளைந்த போது.. காமம் வேண்டாம் பெண்ணே காதல் மட்டும் போதும் எனக்கு என்று சொன்ன அதே முகம்!!
சங்ககாலப் பாடல்களில் வர்ணிக்கப்பட்ட.. அழகிய காயாம்பூக்களின் நீலம் பூத்த நயனங்கள் உடைய அவன் முகம்!!
காதல் மிகுதியில்.. அவனது இரு முரட்டுக்கன்னங்களையும், தன் கையில் ஏந்திக் கொண்டவள்.. கிசுகிசுப்பான குரலில்.. கண்ணோரம் நீர்த் துளிர்த்து.. அவன் முகம் இரட்டை விம்பங்களாகத் தெரிய,
“இட்ஸ் யூ.. அது நீ தான்..”என்றவள், அடுத்த கணம் குருஷேத்திரப் போரில் வெற்றி கண்ட அர்ஜூனனை.. தன் கொங்கைகள் இரண்டும் வலிக்க வலிக்க கட்டியணைத்த பாஞ்சாலி போல.. அவன் கழுத்தோடு கையிட்டு..தன்னை நோக்கி இழுத்து… அவனிடேயே காற்றுக்கும் கூட இடமின்றி கட்டியணைத்துக் கொண்டாள் லொவீனா.
அவளது கொங்கைளின்… தாமரை விதை போன்ற காம்புகள் அழுந்தக்கீறி நசுங்கியதில்.. அவள் அத்தனை இறுக்கமாக அழுத்துவதில்.. ஓர் புதுசுகம் தோன்றி.. கண்கள் தாபத்தில் திளைத்தாலும் கூட… அவளின் அதிரடி அணைப்புக்கான காரணம் புரியாமல் திகைத்து நின்றிருந்தான் தாமஸ்.
காதல் என்பது ஒருவகை காட்டுப்பூச்செடி. ஆணோ பெண்ணோ.. அவர்களுள் காதல்ப்பூ அரும்பும் தருவாயில்.. அந்தப் பூமணத்தை.. அவர்களின் இணை ஜோடியும்.. அந்த சுகந்தத்தை முகரத் தான் செய்யும்.
அந்த வன்மையான ஆண்மகன் அவனுக்குள்ளும்..மென்மையான காதல் உணர்வுகள் இழையோட அவன் ஓர் இன்ப அதிர்ச்சியில் நிற்க, இவளோ காதல் வசத்தில்..
தன் நுனிக்கால் விரல்கள் எம்பி எம்பி.. அவன் கன்னம், மூக்கு, கண்கள், நெற்றி என அனைத்தையும் ஈரப்படுத்தியவளாக, தழுதழுக்கும் குரலில், “அது நீ.. என்னோட கனவுக்காதலன் நீ..”என்று சொல்ல.. அன்றைய நாளில்.. அவள் மொழி கேட்டு இரண்டாம் முறையாக அதிர்ந்தான் தாமஸ்.
“நானா..?”-தன் இளநீல நிற ஆழி நயனங்கள்.. மயில் நிறமாக பரிணமிக்கக் கேட்டான் நாட்டின் ஏகாதிபதி.
லொவீனாவின் கைகளில் ஒன்று.. அவனது பிடரிமயிர் அளைய, மற்றையதோ அவனது விக்கிற்குள் நுழைந்து.. அவனது பின்னங்கழுத்தைத் தடவ.. காதல் இழையோடும் சொக்கிப் போன குரலில்,
பெரும் பெரும் மூச்சுக்களை எடுத்து விட்டுக் கொண்டே, “ஆமா.. தாமஸ் அது நீ தான்..” என்றவள்,
அவன் கையிலிருக்கும் கணையாழி, மற்றும் அவனது விக் ஆகியவற்றை சுட்டிக் காட்டியவளாக, “இதே மோதிரம்.. இதே விக்.. இதே டிரஸ்.. இதே மாதிரி கையில வைன் க்ளாஸோட… என் கனவுகள்ல தொடர்ந்து வந்து என்னை காதலிச்சது.. எல்லாமே நீ தான் தாமஸ்..”என்றவள் கனவுகளிலும் கூட காதலித்திருப்பது தன்னை என்பதில் முதல் இன்ப அதிர்ச்சியானால்…
அடுத்த இன்ப அதிர்ச்சி… மையல் மயக்கத்தின் உச்சத்தில்.. அவனது சிவந்த முரட்டு அதரங்களைப் பார்த்துக் கொண்டே.. சொக்கும் விழிகளுடன் நின்றிருந்த நடனக்காரிகையோ.. அவனது மேலதரங்களை லபக்கென்று முழுவதுமாகக் கௌவி.. அவன் இதுவரை அருந்திய திராட்சை இரசத்தினையும் எச்சிலோடு எச்சிலாக உறிஞ்சவாரம்பித்தாள்.
அவளது.. அதிரடியில்… தன் தீட்சண்யமான நீலக்கண்கள்.. அடர்ந்த கறுநீலநிறமாக மாற.. கண்களைக் கூட மூடாமல் தான் நின்று விட்டிருந்தான் நீல நயனக்காரன்.
அவளோ கண்கள் மூடி.. ஓர் இதமான வீணை மீட்டுவது போன்ற இதத்துடன்.. அவன் இதழ்களில் சுரந்த திராட்சை இரசத்தை…. இழுத்துக் கவ்விச் சப்ப.. நாட்டின் ஏகாதிபதிக்கும் காதல் தலைக்கேறிய தருணம் அது.
அதற்குப் பின்னர்.. நாட்டையே ஆள்பவன்.. தன் இதழ்களை ஆளும் எதிராளிப் பெண்ணின் மீதிருக்கும் தன் வல்லமையை நிலைநாட்ட.. முத்தயுத்தத்தின் அதிரடியை தன் வசமாக்கிக் கொண்டான்.
அவனது திண்மையான.. முறுக்கேறிய இராட்சத கைகளில் ஒன்று.. அவளது ஒருபாதி பின்னெழிலை.. கொத்தோடு பற்றி.. தன்னை நாடியிழுக்க… மறு இராட்சதக் கையோ.. அவள் இடையைத் தழுவித் தழுவி மேலேறி.. அவள் முன்னெழிலின் ஒருபாதியில் நங்கூரமிட்டு.. அழுத்த.. அந்த அழுத்தம் வலித்தாலும்.. தன் காதலன் இன்னான் தானென்று அறிந்து கொண்ட சந்தோஷத்தில்.. அவனிடம் தன் உடலையும், மனதையும் ஒப்படைத்து விட்டு பாந்தமாக அடங்கிப் போனாள் பெண்!!
அவனின் கை தந்த சுகபோதை தாளமாட்டாமல்.. ஓர் சுக முனகல் அவளிடமிருந்து மெல்லிய சீறல் போல கேட்க, அதில் இருவரும் ஒரு மனநிலையடைந்து.. ஒருவர் இதழ்களில் இருந்து ஒருவர் பிரிந்து கொண்டாலும்.. அவனது பொல்லாத கைகள் மட்டும்.. அவள் உடலில் சேர்ந்த கொழுப்புக்களினை இன்னும் பரிசோதித்துக் கொண்டேயிருக்கலானது.
தன் காதல் கை கூடிய காதல் உல்லாசத்தில், ஆழ ஆழ மூச்சுக்கள் எடுத்து விட்ட வண்ணம், “ஹப்படியாஹ்? ஏம் ஐ த மேன் இன் யோர் ட்ரீம்ஸ்?”என்று கேட்ட வேளை, அவள் தந்த எச்சிலில் பளபளத்துக் கொண்டிருந்தது தாமஸின் முரட்டு இதழ்கள்.
அவளும் மேலும், கீழும் தலையாட்டியவளாக,காதலில் மிருதுவான விழிகளுடன், “ஆமா… நான் இவ்வளவு நாளா மனசுக்குள்ள காதலிச்ச ஆளு தான் நீ..ஐ லவ் யூ..”என்று சொன்னவள்.. அவனது கழுத்துவளைவில் தலை புதைத்து.. அவனது திடகாத்திரமான நெஞ்சாங்கூட்டில் முகம் விதைக்க.. அவன் நெஞ்சுக்காடெங்கிலும்.. அவளுக்கான காதல் ஊற்றெடுத்துப் பாய்ந்து கொண்டிருந்தது மாயநதியில் நின்றும்.
தாமஸ் அன்று புதிதாகப் பிறந்த குழந்தை போல உணர்ந்தான். பிரித்தானிய பேரசர்.. அவனை அழைத்து.. அவனை முழங்காலில் அமர வைத்து.. தன் உறையில் நின்றும் வாளினை உருவியெடுத்து..
தாமஸின் தோள்முனையில்.. தன் வாள்முனையை வைத்து எடுத்து, ‘சிலோனுக்கான ஏகாதிபதி’யாக அவனை நியமித்த போது வராத அத்தனை சந்தோஷம்..
அவன் ஆளும் நாட்டில் வாழும் ஓர் சுதேசிப்பெண், “ஐ லவ் யூ”என்று சொன்ன ஒற்றை வாசகத்தைக் காதார கேட்ட போது.. அவனுள் உணர முடியுமானதாக இருந்தது.
அவளது காதல் சொட்டும் விழிகளையே.. தான் மனிதனாகப் பிறந்ததன் பிறவிப் பயனை அடைந்தாற் போன்ற வெற்றிக் களிப்புடன் பார்த்திருந்தவன், எதுவோ ஞாபகம் வந்தது போல.. அவளது மிருதுவான முன்னங்கையைப் பற்றிக் கொண்டு, “என்னோட வா… உனக்கு ஒண்ணு
காட்டணும்…” என்றவன்..அவளை அழைத்துக் கொண்டு.. அந்த வைன் களஞ்சிய அறையின் கதவினைத் திறந்து கொண்டு.. தன்னறைக்குத் தான் சென்றான்.
அவன் தன்னை அவன் படுக்கையறைக்கு அழைத்து வந்ததற்கான காரணம் அறியாது.. புருவங்கள் இடுங்க, “இங்கே எதுக்கு தாமஸ்?”என்று படபடப்புடன் கேட்க, அவனோ ஏதும் உடனடியாக பதிலிறுக்காமல்,
“நீ வா வீணா.. சொல்றேன்”என்றவன்.. அவளை அழைத்துக் கொண்டு.. இன்னோர் கதவு திறக்க… அது அத்தனை இருட்டாக இருப்பதை அவதானித்த.. லொவீனாவுக்கு சிறு அச்சம் எட்டிப் பார்க்க,
அவனது திண்ணிய கைச்சந்தினை இறுகப் பற்றி.. அவன் புறமுதுகோடு.. தன் ஒரு பாதி தனங்களும், பூவுடலும் அழுந்த நின்றவள், “ம்ஹூஹூம்.. நான் வர மாட்டேன்..எனக்கு பயமா இருக்கு”என்று சொல்ல.. அவனோ ஐயுறும் தன் பைங்கிளியைக் கண்டு.. குழந்தை போல முத்துமூரல்கள் தெரிய.. கவர்ச்சியாக நகைத்தான்.
ஒரு ஓரமாக நடந்து சென்று.. இருட்டில் துலாவி.. ஓர் கம்பம் ஒன்றினை கையில் எடுத்தவன்.. தன் கோட் பாக்கெட்டிலிருந்த லைட்டர் கொண்டு.. கம்பத்தின் தலையைப் பற்ற வைக்க, வெறும் கம்பம் அந்நொடியிலிருந்து இருட்டுக்கு பயப்படும் தீப்பந்தமாக ஆனது.
அவள் நின்றிருந்த இடத்துக்கு கீழே ஓர் நிலவறைப் படிகள் சென்றிருக்க… முதலில் தான் இறங்கியவன்..தன்னவளை நோக்கி கை நீட்டி, “வா.. நான் இருக்கேன்ல.. நான் இருக்கும் வரை உனக்கு ஏதும் ஆக விட மாட்டேன்.. என் கூட வா”என்றழைக்க.. தன்னையழைக்கும்.. அவனது நீல நிற நயனங்களில்..
தீயின் செந்நின ஜூவாலை பிரதிபலிக்க.. அந்த விழிகளுக்கு கட்டுப்பட்டாளா? இல்லை அவனுக்குக் கட்டுப்பட்டாளா?
அவன் கைகளில் தன் கை வைத்தவள்.. ஏதோ மந்திரத்துக்கு கட்டுண்டது போல… தன் கவுனினை இலேசாகத் தூக்கிப் பிடித்துக் கொண்டு.. மெல்ல மெல்ல அவனுதவியுடன்.. அங்கிருந்து இறங்கித் தான் போனாள்.
அவன் கைப்பிடியில் மிகவும் நீளம் நீளமாக பயணம் பாதை முடிவுறவேயாமல் போய்க் கொண்டிருக்கவே அப்போது தான் உணர்ந்தாள் அது அவன் இல்லத்திலிருந்து குடைந்தெடுத்து கட்டப்பட்டிருக்கும் ஓர் சுரங்கப்பாதை.
அந்தச் சுரங்கப் பாதையின் முடிவெல்லை இருந்ததுவோ.. அன்றொரு நாள்.. அவள் ஓர் பாழுங்கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்றாளே.. அதே பாழுங்கிணற்றின்.. உள்புறமாக இருந்த படிக்கட்டுக்களிடம் முடிவடைந்ததைக் கண்டு அதிசயித்தாள் ஆசிய- ஐரோப்பிய கலவையில் இருந்த மங்கை!!
சுரங்கப்பாதை முடிவிலிருந்த கிணற்றின் வழியே மேலே பார்த்த போது.. பரந்த தெளிவான வானமும், நெடிதுயர்ந்து வளர்ந்த தென்னை மரங்களும் காணக்கிடைக்க.. அவள் எட்டிப் பார்த்த தினுசில், அவள் தண்ணீருக்குள் விழுந்து விடுவாளோ என்று பயந்தவன்,
அவளைப் பிடித்து சுரங்கப்பாதை சுவரோடு சாய்த்துப் பிடித்து, “ஹேய் பார்த்து.. விழுந்துடப் போற?”என்றவன் கண்களில் அவளை இழந்து விடுவோமோ என்ற அச்சம் இழையோடிக் கொண்டிருப்பதை அவதானித்தாள் லொவீனா.
அந்த அச்சத்தில் புதுக்காதல் இழையோட.. அவன் கழுத்து வளைவூடு தன் கைகளை மாலை போலக் கோர்த்தவள், “இது எதுக்கு..?”என்று கேட்க.. அதற்கு அவன் சொன்ன பதிலில்.. இந்நிமிடமே அவன்.. அவள் உயிரைக் கேட்டாலும் ஈய்நதளிக்க வேண்டும் என்ற வெறியே முகிழ்த்தது அவளுக்கு.
தன் மூக்கோடு அவள் மூக்கு உரசி.. அவளது பிரத்தியேக மணம் உணர்ந்தவனாக, “என் காதலை நீ ஏத்துக்கிட்டாலும்.. ஏத்துக்கலைன்னாலும் உன்னை தூரத்திலிருந்தாவது பார்த்துக்கிட்டே இருக்கணும்னு ஆசை லொவீனா”என்றவன்.. அவளது புறங்கைப் பற்றி..
புறங்கை, முழங்கை முழங்கை மடிப்பு என்று ஈர முத்தங்கள் கொடுத்து கொடுத்து அவளை சூடாக்கியவன், ஹஸ்கி குரலில், “எனக்கு நம்பிக்கையானவங்களை வைச்சு இரகசியமாக கட்டிய டனல் இது… இனி நான் உன்னை எப்போ பார்க்கணும்னு நினைச்சாலும் சரி.. நீ என்னை எப்போ பார்க்கணும்னு நினைச்சாலும் சரி.. யார் கண்ணுக்கும் உறுத்தாம பார்த்துக்கலாம்.. பேசிக்கலாம்”என்று சொல்லியவாறு..
அவளது கையும், தோளும் இணையும் இடத்தில் முத்தமிட.. அவள் கண்கள் மூடிக் கிறங்கி.. கண்கள் திறந்த வேளை.. அவளது தேனூறும் இதழ்களை.. அதிரடியாகக் கௌவிக் கொண்டான் அவள் மனதின் ஏகாதிபதி.
அவளது பருத்த தொடையை வாகாகத் தூக்கி.. தன் இடுப்பு வரை தூக்கிப் பிடித்துக் கொண்டவன்.. அவளுக்காக தன்னுள் எழுந்து நிற்கும் ஆசைப்பெருக்கை.. அவள் அடிவயிற்றில் உரசிக் காட்ட.. அவளுக்குள்ளோ.. அவன் எச்சில் ஊடுகடத்தப்பட்ட தினுசில் சர்ரென்று மின்சாரம் பாய்வது போல இருந்தது
அந்த முத்தம்.. லிப்ட்டிற்குள் வைத்து இருபத்தோராம் நூற்றாண்டைச் சேர்ந்த தாமஸ் தந்த அதே நனவு முத்தம்!!
அந்த முத்தம்.. கனவில் வந்த ரயில் சுரங்கப்பாதை இருட்டில் வைத்து கனவின் சொந்தக்காரனான அவன் தந்த அதே கனவு முத்தம்!!
அந்த இரு முத்தங்களையும் இணைக்கும் முத்தயுத்தமாக இருக்க..அப்படியானால் இவன்.. தினமும் கனவில் வந்து அன்புத் தொல்லை.. கட்டில் தொல்லை.. காதல்த் தொல்லை செய்வது இவனா?
அவன் ஏன்.. தாமஸை தன் உடலில் அளையும் அனுமதியைக் கொடுத்தாள்? திராட்சை இரசக் கனவின் சொந்தக்காரன் மீது அவள் ஏற்கனவே காதல் வயப்பட்டிருந்ததனாலா?
இல்லை.. கனவில் வரும் ஆடவனும், இந்த நீலநிற நயனங்களுக்குச் சொந்தக்கார ஆடவனும் ஒருவன் என்று அறிந்ததால் விளைந்த புது மையலா?
அதை எண்ணும் போது.. காதலின் உச்சத்தில் வெளிப்பட்டது மீண்டும் ஒரு முனகல் ஒன்று.
அந்த முனகலில்.. ஒற்றை முத்தத்தில் உச்சநிலை அடைந்தவன், அவளை விட்டும் பிரிந்தவாறு.. அவளை நோக்கிய போது.. அந்தக் கண்களில்.. இந்த உலகத்தையும் விட உயர்ந்த வானளாவிய காதல் பூத்துக் கிடந்ததை அவதானித்தான் அவன்.
அந்த முத்தத்தின் விளைவாக… அவளது இதழ்கள் இரண்டும் சிவந்து வீங்கிப் போயிருக்க.. அவற்றில் எல்லாம் அவனதும், அவளதும் எச்சில் கலந்த பளபளப்பு.
அவளது இதழ்களை தடவி விட்டது வெண்மையான அவனது பெருவிரல்கள்.
