tragula 6

This entry is part 7 of 9 in the series tragula

tragula

tragula 1

tragula 1

tragula 2

tragula 2

tragula 3

tragula 3

tragula 4

tragula 4

tragula 4 .2

tragula 4 .2

tragula 5

tragula 5

tragula 6

tragula 6

tragula 7

tragula 7

tragula 1

tragula 1

6

முத்தமோ? மோகமோ?

ஜிஷுவுக்கு மாகிழ்ச்சியோ மகிழ்ச்சி….இமயமலை பயணத்துக்கு தன் தேனு வை கூட்டிவந்தது… நல்ல வழி துணை…

அச்சு இங்கே என்றால் போகவே வேண்டாம் என்று விடுவான்…

பாதுகாப்பு …இருக்காது சொல்வான்..அப்படி என்ன வரும்?…ஆபத்து..

ஜிஷுவுக்கு தெரியவில்லை….

உச்சி போக போக…தேனுக்கு மூச்சு மூட்ட ஆரம்பிக்க….பயந்தாள் இறந்தே விடுவோமா? என்று….

ஜிஷுவின் காதில் திக்கி திணறி சொல்ல…

குலுங்காமல் விண் அடுக்கிலிருந்து சட சட ன்னு கீழிறங்கிக்கொண்டே…இப்ப..இப்ப கேட்டு வர..

ஓர் குறிப்பிட்ட லெவல் வந்தபோது…அவளுக்கு சுவாசிப்பதில் எந்த தொல்லையும் வராது இருக்க..

இந்த ஹயிட் வச்சிக்கோ எப்பவும் ஜிஷு என்றாள் தேனு..

அவன் முதுகில் சுகமாய் தொத்தி…

தேவ சுகம்…அம்மையாருக்கு….eee

யாருக்கு வாய்க்கும் இந்த படா சொகுசுவாகனம்…ம்ம்ம்ம்

பறந்து விரிந்து ராட்சஸ பறவையின் உருவில் இருந்தாலும் பழகுவதற்கு இனிய…ஜிஷுவின் மென்மை… புதுமை….சேவை மிக அருமை….

இப்படி ஓர் அடிமை யாருக்கு வாய்க்கும்…ஒன்லி டு மி…eeee

தேன் மைண்ட் வாய்ஸ்….eee

மனம் …

அவள் சுற்றும் வானை போல காற்றை போல இலகுவாக…

முன்பு வயதுவந்த பெண்ணாய் கொஞ்சம் ஒதுக்கத்தை கடை பிடித்தவள்….

இப்ப ஓர் உல்லாச மனநிலையில் விளையாட எண்ணினாள்…

விழுந்தால் என்ன செய்வான்?..பிடித்துக்கொள்வானா?…

தன் முதுகு பகுதியை குழிவாக்கி இவளை தொட்டிலில் படுத்துகிடப்பது போன்று உணரவைத்து…வாகாய் பத்திரமாய் சுமந்தவன் மீது..

ஓவர் அன்பு பெருகியது…eee

டேய் ட்ராகுலா …திமிராய் கூப்பிட்டாள்… ஜிஷ்ணு வை…

பாவம் ..நம் அப்பாவி ஜிஷு என்ன….பூமியில் பிறந்த விடலை பையனா? டா வை ரசிக்க…ஆர் கோவப்பட…

ஆனால் ஏதோ இன்டிமேட் விளி மட்டும் புரிய…

சொல்லு தேனு….

நான் ஊந்துட்டேன்னா என்ன பண்ணுவ?…

ஊந்து…ஊர்ந்து….மூலச்சொல்…

அர்த்தம்…தவழ்ந்து….eeee

ஜிஷு வின் சதுரகராதி எட்டுபக்கம் சுழன்று அர்த்தம் சொல்ல….

ஏன் ஊறனும்… இப்படியே இரு…..அவன் சொல்ல…

காண்டானாள் சென்னைக்காரி…

இதுக்கு காதே கேட்கலை போல…ன்னு…அவன் கழுத்தில் முகம் பதித்திருந்தவள்…லேசாய் அவன் சிறகின் இறகுகளை வலிக்காமல் பிடித்துக்கொண்டே மேல காது கிட்டே தன் வாயை கொண்டு சென்றாள்..

ஜிஷு …

காதில் தேனாய் தேனின் குரல்…வாவ்…உணர்வு …இந்த காட்டேரிக்கு…

ஏற்கனவே நட்பு நரம்பு அதுக்கு ஊதிக்கிச்சு…

தேனுவின் பெண்மையின் மென்மைக்கு அடிமை ஆகி வாய் திறவாமல் வந்தவனை சீண்ட துவங்கினாள் …இந்த குறும்புகாரி…

கீழே விழுந்தா என்ன பண்ணுவடா?

நேர் பார்வை இலக்கை நோக்கி இருந்ததை …கொஞ்சம் பக்கவாட்டில் திருப்பி அவனுடைய இயல்பில் மழலையாய் மயக்கும்சிரிப்பு சிரித்தான்..ஜிஷு..

பின்…

விழவே மாட்டே…நான் இருக்கும் வரை…பயமா இருக்கா?

இல்லை..முதலில் மேலே ஏறும்போது ராட்டினம் மாறி தலை சுத்துச்சு…இப்ப ஒரே மாறி தானே போற… எதுமே தெரில…ஆனா ஜிலு ஜில்லுன்னு குளிரா ஒருமாறி தென்றல் கூடவே பயணிக்கிற மாறி..இருக்கு…

குளூருதா தேன்?

தாங்குற அளவு தான்…ரொம்பன்னா சொல்றேன்…

தூரத்தில் கருத்த மேகங்கள் தெரிய….புருவம் முடிச்சிட…

வழியை மாற்ற…

என்ன வளையிர… ஜிஷு…

அவன் தலையை தட்டி வம்பிழுத்தாள் தேன்…

மழை வரும் போல இருக்கு அதான் அந்த மேகம் தாண்டுறேன்…

மழையா?..அப்ப மழை மேகமா?…ஏய் காட்டு காட்டு ஜிஷு..நானும் பார்க்கிறேன்..

நனைஞ்சுடுவ…

பரவால்ல..இன்னைக்கு விட்டா எப்ப நான் இதையெல்லாம் கிட்ட போய் பார்க்கிறதாம்…நனையிரத நெனச்சா ஆகுமா?
வா ..வா போலாம்…ப்ளீஸ்..ப்ளீஸ்…ஜிசும்மா.. என் நாய் இல்ல..என் பூனை இல்ல..என் எலி இல்ல…

அஃறிணை பேர் சொல்லி சொல்லி ஓர் காட்டேரியை கொஞ்சி..கொஞ்சி ஐஸ் வைத்தாள் தேனு…

அதுவும் லூசுமாறியே கொஞ்சம் கூட காரியம் இல்லாமல் மயங்கியது…eee

இங்கு அவள் நாய் சொல்ல…நாய் படம் கற்பனையில் விரிந்தது…பூனையும் எலியும் கூட…

அதனால் ஜிஷு க்கு வாய் கொள்ளாத சிரிப்பு…eee

நெஞ்சுக்குள்ள வரியா?

கேள்வியின் அர்த்தம் புரியாது விழித்தவள்…

என்னது? ம்ம்ம்… கேட்க…

முதுகில் இல்லாமல் மார்பில் வா…நனையாமா ரசிக்கலாம்…

ஓ…..அவனின் கேர் ரில் மனம் மகிழ்ந்தாலும்….

என் குட்டி பாகை தண்ணி படாம வச்சிக்க..அதில் செல் இருக்கு…கொடுத்து விட்டு…

ஆசை மிக…

நோ நோ…நனஞ்சுட்டு தான் ரசிப்பேன்…இதோடா…இதோடா..அப்படி வேடிக்கை வேடிக்கை நிறய பார்த்தாச்சே….இப்படி பார்ப்பது தான் அதிசயம்…நேரடியா..மழை மேகத்திலிருந்து தண்ணீர் ..வாவ் வாவ்…அதிலே நனைய …அச்சோ…அச்சோ அச்சச்சோ…யார் கிட்டேயும் சொல்ல கூட முடியாதே…ஜிஷு…

என் கன்னு குட்டி…என் பன்னி குட்டி…யூ ஆர் மை ஸ்வீட்….குட்டி சாத்தான்…பயங்கரமா கொஞ்ச..

ஜிஷுவின் கற்பனை காட்சிகளெல்லாம் குழம்பி தப்பு தப்பா காட்ட…புரியவில்லை ஆனாலும் அந்த வார்த்தைகள் சொன்ன குழைவு …அமிர்தம் உண்ட சுவை அவனுக்கு….

ஜிஷு செம்ம ஹாப்பி அண்ணாச்சி….

இப்படி கட்டி கொஞ்சினால்…தேனுவுக்கு…மூவுலகம் காட்ட கூட ஆசை…

இருவரும் சூல் கொண்ட பெண்ணை போன்ற கருமேகம் தன் தண்ணீரை துளி துளியாய் வேகத்துளிகளை அனுப்ப….ஏற்கனவே குளிர் காற்றில் சிலிர்த்து கிடைந்தவளுக்கு…ஊசியாய் மழை துளிகள் குத்த….

உஸ்..உஸ்…ன்னு… சுக அனத்தல்….

பயந்தே போன ஜிஷு…

என்னாச்சு…என்னாச்சு…கேட்க..

தேனுவுக்கு கேட்கலை….

தேனு..கேக்குதா?…ஜிஷு கத்த…

இப்ப தான் அவன் பேசுவது கேட்டது…

இன்னும் அவன் கழுத்தை இறுக்கி கட்டிக்கொண்டாள்…

சொல்லு ஜிஷு…நல்லாருக்கு…..அருவில குளிக்கிற மாறி..இருக்கு…கண்ணே திறக்க முடில…தன் உணர்வுகளை அவள் அவனுக்கும் கேட்காது என்று நினைத்து….கத்தி கூற…
இவனுக்கு அந்த நுட்ப உணர்வு கூட…அதனால் அவன் இதய அறைவரை சென்று ஒலித்தது அக்குரல்..

போதுமா?…கடந்துடலாமா? தேனு…

அவளுக்கு இந்த மழை ஈரம் சேருமா? கவலை வந்தது…

நோ..இங்கேயே சுத்து…நல்லா இருக்கு…அவன் பின்னந்தலை மேல் தன் நாடி வச்சி…வேடிக்கை தேன்…

டைட்டானிக் படத்தில் குண்டு நாயகியை முன் நிற்க வைத்து…அவளின் தம்பி போன்ற நாயகன்…பின் நின்று கை கோர்த்து…
கப்பலில் முன் கூர் பகுதியில் நின்று..கடற்காற்றை கிழித்து கொண்டு கப்பல் போகும் போது அந்த முகப்பில் ஆடாமல் அசையாமல் நின்று போஸ் கொடுப்பதை போன்ற…ஓர் அழகியல் காட்சி…இது…

ராட்சஸ ராஜாளி உருவில் ஜிஷு…அவன் முதுகில் படிமானமாய் படுத்தவாக்கில் தேனு…அவன் தலையோடு தன் முகம் சேர்த்து…முடிகள் திரித்திரியாய் மழையில் நனைந்து கலைந்து இடம் மாறி…ஜிஷுவின் கண்ணுக்கு மேல் சிலநேரம் பட்டு பட்டு விலகும்…

கழுத்தின் இறகுகளை கையில் பிடிமானத்துக்கு சும்மா வேணும் பிடித்திருக்கும் தேனு…

வானிலிருந்து யாரேனும்…இவர்களை போட்டோ எடுத்தால் அற்புதமாய் இருந்திருக்கும்..அப்படியொரு அதிசய காட்சி இது..

சூப்பரா இருக்கு …ஜிஷு..நீ ரொம்ப நல்லவன்…உன்ன ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு…இமய மலை கூட வேணாம் போ.. இதுவே செம்ம போ.. அன்னிக்கு லைட் ஹவுஸ் கூட்டிட்டு போனப்ப கூட பயம் தான் அதிகம் இருந்துச்சு…கோச்சிக்காத.. அப்ப நீ தான் என் மேல பிரியமா இருந்த…நான் சந்தேகமா தான் இருந்தேன்…இப்ப உன்ன பத்தி நோ டவுட்… நீ கடிச்சி தின்னா கூட திண்ணுக்கோ..!நீ ரொம்ப நல்லவன் ஜிஷு…என் ட்ராகுலா பிரன்ட போல யாரு மச்சான்… eee

தேனு குடிகாரி மாறி உளறி கொட்டினாள்…

சந்தோசம் சந்தோசம்…அப்படியே பொங்கி பொங்கி வழிந்தது ஓடியது..முடில.!இந்த கணத்தை அவளால்..அமைதியா கடக்க முடில..கத்தி கத்தி பேசி தீர்த்தாள்… ஜிஷுவுக்கும் அவளுடைய மகிழ்ச்சி தொத்த..இன்னும் இன்னும் அவளுக்கு விளையாட்டு காட்டி..சிரிக்க வைத்தான்…

மழை வலுத்தே பெய்ய…இப்ப ஜிஷுவே பயந்தான்..

இடி மின்னல் வரும் போல…மேகம் ஒரு மாறி இருக்கு…உனக்கு பயம் உண்டா? தேன்…

ஐயோ…பயமா தான் இருக்கும்…என்ன பண்றது? மழை வேணுமே? ..ஏய் …நீ ஏதாவது பண்ணேன்..ப்ளீஸ்..ப்ளீஸ்…

அதை விட்டு நகரவே மனமில்லாமல்….இந்தம்மா குரல் விழுந்து சொல்ல…

சல் லென்று…கீழே இறங்கினான்… மின்னல் வந்தால் …தப்பிக்கும் தூரம்…

இவள் இப்ப கீழே தரையா? கடலா? மலையா? எட்டி பார்க்க…கடல்…
அட வீணா கடலுக்கு மழை பெய்யுது…நிலத்தில் பெய்தால் கூட உதவும்…இந்தம்மாக்கு ஒரே பீலிங்ஸ்…eee

சமூக அக்கறை எப்பவும் வேணும்…eee

அதற்குள் இடியும் மின்னலும் தெறிக்க ஆரம்பிக்க…

ஓர் கையால் முதுகில் வேணும்னே நனைந்து கொண்டிருந்த தேனுவை தன் சிறகெனும் கைகளால் இழுத்து நெஞ்சுக்குள் வைத்து…பொதிந்து கொண்டான்….பொம்மை போல…

எல்லாம் இரு செகன்டில் நிகழ்த்திவிட்டான்…

அவள் இப்படி படக்கென்று இழுத்து பயப்படும் நேரத்தை அதை உணர வைக்காமல் செய்துவிட்டான்…

மின்னல்களுக்கு இடையில் இவளை மேல் வைத்துக்கொள்வது சிரமம் என்பதால்…அவளிடம் அனுமதி கேட்கவே..இல்லை….

இப்ப தான் ஜிஷுவின் ஆட்டம் சூடு பிடித்தது…

மின்னல்கள் கண்டமேனிக்கு பட்டாசின் நாளா திசையில் சீற்றமென புறப்பட…அதன் இடை இடையில் வளைந்து….நெளிந்து…தப்பித்து தப்பித்து….ஒற்றே விளையாட்டு.. தான்…

கிட்டே மின்னல் கடக்கும் போது..

தேனும் அவனும்…ஒன்றாய் …ஓய்ய் என்று கத்துவது…செம்ம…

இடி இடிக்கும் போது….தேனுவின் காதுகளை தன் சிறகுகளால் ஜிஷு பொத்தி பாதுகாப்பு தர ….

இது ஓர் காட்டேரி கவிதை…eeee

கொஞ்சம் கொஞ்சமாய் தேனு….ஜிஷுவின் நெஞ்சு சூட்டில் இதம் கண்டாள்… அவன் காட்டிய அன்பு உள்ளம் கொண்டது…

ஒரு முத்தம் பரிசாக கொடுப்போமா? விபரீத எண்ணம் கூட வந்தது ….eee
எண்ணம் மாறி விட்டதால்…

இன்னும் இன்னும் அவன் உடம்போடு இவள் அழுத்தி ஒன்றி.. அவன் கத கதப்பை விரும்பினாள்…

வேறென்ன வேணும் உலகத்திலே….பீல் …

தேன் மொழிக்கு….

உயிர் உருகியது…கூட வந்தவனின் மெய்யன்பில்…இவன் பிசாசாய் இருந்தால் கூட…லவ் பண்ணும் ஆசையும் வந்தது…

கணவனிடம் என்ன எதிர் பார்க்க போகிறேன்…
இனிக்கும் இணக்கம்…என்னை கண்டால் முகம் மலர்..நான் சிரித்தால் சிரி…என்னை உன் உயிராய் நினை…என்று தானே…இவன் தான் எல்லாமும் செய்றானே…. காதலிக்கலாமா?…ம்ம்ம்

தேன்… eee

நிறைவேறுமா? தெரியாமலேயே…!!!

ஏற்கனவே அவள் பால் ஈர்க்கப்பட்டிருந்த
ஜிஷுவுக்கு…ஜிவ் வென்றது…ஒவ்வொரு அணுவும் …அறிவு ….சக்தி…கூர்ப்பானது என்பதால் என்னென்னவோ செய்தது…

ஆண் பிள்ளை….. பெண்ணை பற்றி நினைக்க தொடங்கினான் என்றாலே….சிறுபிராயம் என்பதிலிருந்து விடலை பருவத்தை எய்துகிறான்…அர்த்தம்…

வாழ்வின் அடுத்த படி….பிரோமோசன்…

ஜிஷுவின் குழந்தை தன்மை போகவே…

அவனுடைய தந்தை பூமிக்கு அனுப்பி மாற்ற நினைத்த எண்ணங்களில் ஒன்று தானாய் மலர்ந்தது…

இனி அவரும் முழு ஆசையும் நிறைவேறும்…எப்படி என்றால் பெண்ணில் அன்பை கொள்பவன்..

அவளை காப்பாற்ற நினைப்பான்..

காதல் கொள்வான்…குழந்தைகள் பெறுவான்…

ஒவ்வொன்றிலும் கடமைகள் வரும் போது எதிர் கொள்ளும் சூழ்நிலைகள் ஒருவனை தேர்ந்த ஆணாக பரிமளிக்க உதவும்…

இது ஆண்கள் வாழ்வின் சக்கரம்…தானாய் தன் சூழலுக்குள் இழுக்கும் சக்கரம்…

நம் ஜிஷுவுக்கும் இப்ப பெண்ணை ஆசை வைப்பதால் தொடங்குகிறது…

இங்கு ஜிஷ்ணுவும் தேன் மொழியும்…இப்படி …உணர்வுகள் பிடியில் உழன்று கொண்டிருக்க…

ஜிஷுவின் அலைவரிசை பற்றிக்கொண்டு…பின்னோடே வந்து கொண்டிருந்த ஆகன்..

முதன் முறை ஜிஷு உயரம் மாற்றி தாழ்வாய் பறந்ததில் குழம்பி ..
பின் இவனும்..அந்த பாதை கண்டு பிடித்து…

எங்கு தான் செல்கிறான் இந்த கிறுக்கு பய ஆளி…

கடுப்பானான்…தொடர்ந்தபோதே…

பின்னர் இரண்டாவது…மழையில் போனது..

சுத்தமாய் தொடர்பு அறுந்தே போனது…..

அடச்சே…தேடி தேடி பார்க்க….எந்த பக்கமும் அதிர்வும் …ஆளியின் தனிப்பட்ட வாசமும் இல்லை..

மழை எல்லாவற்றையும்…தடை பண்ணிவிட்டது..

இயற்கையாகவே….ஜிஷ்ணுவுக்காய்….

தோல்வி தோல்வி…தோல்வி…சுற்றும் முற்றும் பார்த்து…கொஞ்சம் காத்திருந்தும்… ஆளியின் அரவம் இல்லாது போகவே…சித்திரக்குள்ளன் அச்சு கிட்ட தான் போவான்…இங்க விட்டதை அங்கு பிடிப்போம்…..இலக்கை தவறவிட்ட கோபத்தில்…

எதிர் பட்ட நகரத்தில் இறங்கி…ஒரு சின்ன வயசு பையனை…வெறி நாய் குதறுவது போல குதறி…ரத்தம் குடித்து..கொன்று…தன் ரத்த பலி வாங்கும் வேகத்தை குறைத்து விட்டே…சென்னை நோக்கி பறந்து போனது அந்த வெறி பிடிச்ச காட்டேரி…

மனித உயிருக்கு நடந்தது…ஜிஷுவுக்கும் தேனுக்கும் தான் நடந்திருக்கும்….கொஞ்சம் கிட்டே மாட்டியிருந்தால்….

அவர்களின் மழை மேக விளையாட்டில்…இவனிடமிருந்து தப்பியிருந்தார்கள்….

இப்ப அச்சுவை கண்டுபிடிக்கும் அவசரத்தில்…
திரும்ப சென்னையை நோக்கி …ஆகன் பயணித்தான்…

போதும் தேனு…நாம இமயமலை போலாம்..அப்புறம் நேரமாகிடும்…
தன்னுள் நிகழும் மாற்றங்களின் வேகத்தை கண்டு பயந்தான்…ஜிஷு…
அதனாலேயே இப்படி கேட்க…

பசிக்குது..ஜிஷு..சூடா எதாச்சும் சாப்பிடணும்..

இப்பவா?…

யா யா..யா….

யா ..னா?

வேணும் எஸ் ன்னு அர்த்தம்…

ஓ..

ஜிஷு தன் பறவை கண் கொண்டு…பிஸியான கடை தெருவை பார்க்க…
அது ஒரு பெரிய நகரமாக இருக்க..இரவும் பகல் போல மின்னியது…
அங்கும் லேசாய் தூறிக்கொண்டு தானிருந்தது….

வா…

ஓர் பெரிய விளம்பர பானர் மறைவில் இறங்கியவன்…

பண்டங்கள்…சும்மா கிடைக்குமா பாஸ்?…eee

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *