tragula
4(2)
முத்தமோ? மோகமோ?
நேற்று போல் தன் கைகளுக்குள் அவளை பொதிந்து உச்சிக்கு தூக்கி ….
மேலே போக போக..ராட்டினத்தில் ..பாதி ரௌண்ட் மேல ஏறும் போது கூட லைட்டா பயம் வரும் சமாளிச்சுக்கலம்…ஆனா மேலிருந்து கீழிரறங்கும் வீழ்ச்சி சுற்றில்..வயிற்றில் ஒரு காலியான உணர்வு வருமே….
கூண்டு சீட்டில் இருந்து பாரமில்லாத உடல் விழுந்திருமோ? பயப்பட்டு பக்கத்திலிருப்பவரையும் இறுக்கி பிடித்து ஐயோ அம்மா…என்னை இறக்கிவிட்ருங்க…என்று கத்துவோமே அப்படி தேனு…அவனை இறுக்கி….
ஐயோ…அம்மா..நைனா…. பயமா இருக்கு….ஊஊஊ ஆனா நல்லார்க்கு….ஊஊஊ…. ஜிஷ்ணு….!என்ன நல்லா பிடிச்சுக்கோ…ஹாஹா…ஹாஹா….ஐயோ!!!
ரொம்ப பயமா இருக்கு…ஜிஷு….முடில….வயிறு கலங்குது…
மேல உயரம் போகும் போது பயந்து அவன் நெஞ்சுக்குள் சுருண்டு விட்டாள் ஓவர் பயம்..பேச்சே வரவில்லை…
இவனுக்கு மூச்சே விடமுடில…முதல் மயக்கம்….அவளின் மென்மை பெண்மைகளின் உரசல் அவனுள் வாலிபனாய் மாற்றங்கள்…
தப்பு..தப்பு…தேன் என் அச்சு மாறி பிரன்ட்….தடுமாறி…ஜிஷு…
அதற்குள் உச்சி வந்துவிட….
முக்கோணவடிவில் மேற்பரப்பு சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டு…பாதுகாப்பாய் லைட் ஹௌசின ்உச்சி
மாடியின் நடுவில் சுழலும் பட்டை விளக்கு இரண்டு றெக்கையின் அமைப்பில்….
கிட்டே இறங்க போகும் போது அந்த விளக்கின் சூழச்சிக்கு பயந்தே போனாள் தேனு…
பார்த்து ஜிஷு…தன்னை அறியாமலேயே சொன்னாள்..
ஒர் ஓரமா முக்கோண முனையில் பத்திரமாய் சேர்த்த ஜிஷ்ணு..
போதுமா? தேன்… ஆசை நிறவேறுடுச்சா?
ம்ம்…தலை ஆட்டியவள் கவனம் அவன் பேச்சில் இல்லை….
மாடி முழுக்க சிறுபிள்ளை போல ஓடி திரிந்து…..
மிக அழகிய செழித்த கடற்கரை நகரமான சென்னையின் அதிக சந்தடி இல்லாத அந்த இருட்டு பொழுதின் ரம்யமான அழகை ரசித்துக்கொண்டிருந்தாள்…..தேன் மொழி….
கனவை கிட்டேர்ந்து தொட்டு உணர்ந்து ரசிப்பவள் போல….
ஒரு முனையில் அலையோசையில் விளக்குகள் ஒளிர கப்பல்கள் கொண்ட கடல்..
மறுமுனை மெல்லிய விள க்கொளிகளோடு பிரமாண்ட அரசாங்க கட்டுமானங்கள்….
இன்னோரு முனை பக்கா மெயின் ரோடு…நாலு வழிகளில் …. கடற்கரை சாலையில் சங்கமம் ஆவது போல தூங்காமல் திரிந்த வாகனங்கள்….
பட்ட பகலென ஒளியில் தெரிந்த vip சதுக்கங்கள்…வாவ்….
நல்லா ஆளையே தூக்கி போகும் அளவு கடல் காற்று ..இவளின் சுடி…ஷால் லாம் ஒரே பற பற தான் அதுகலை பிடித்து சொருகிக்கொள்வதே தேனுக்கு பெரிய வேலையாய் போனது….
இங்கு ஜிஷு க்கு.. கீழே செயற்கை அலங்காரங்களை சுற்றி பார்க்க போர் அடிக்க…
நிலவையும்…..வானத்தையும்…..மினுங்கி கண்ணடித்த .நட்சத்திரங்களையும்….கண்ணை சுருக்கி….நீட்டி…பார்த்து விளையாடிக்கொண்டிருந்தான்…
அச்சு… வா வா…காதில் செய்தி கொடுக்க….
போலாமா? உங்கப்பா கேப் க்காக நிக்குறாராம்…வா…கை பிடித்து வேனுக்குள் விட்டான்…
மிகச் சரியாக…மாரியம்மன்கோயில் வாசல் வர… அச்சுவும் ஜிஷுவும்…கூடவே இறங்கினார்கள்…
இவளுக்கு தான் அவ நைனா நிக்கிறது தெரியுமே….
அவரை பார்த்து புன்னகைத்தே …இறங்கினாள்….
நைனா..என்று அன்பாய் விளித்தே….தன் தந்தையோடு இணைந்துகொண்டாள்.. முகத்தில் துளி களைப்பு கூட இல்லை…
அத்தனை மகிழ்ச்சி…இனி போய் படுத்தாலும் தூக்கம் வருமோ? தெரியவில்லை தேனுக்கு….
வாவ்…செம்ம அனுபவம்…ஒப்படி யாருக்குமே வாய்த்திருக்கது….eeeee
ட்ராகுலா கூட சுற்றுலா போனது தான் ஸ்பெஷல்….
நன்றி கூட ஜிஷ்ணுக்கு சொல்லல…நினைத்து பின் பார்க்க…
அதுக ரெண்டும் இப்ப இவ வீட்டு மாடியின் முற்றத்தில் நின்று கை காட்டி …
இவளை வெறுப்பேற்ற…
என்ன அவசரம் இதுகளுக்கு???!!! ஹுக்கும்…பறக்க தெரிஞ்ச ஒரே காரணத்தால… மானர்ஸ் இல்லாம….வடிவேலு மாதிரி காண்டானாள்….
நல்லா சதை பகுதி பார்த்து கிள்ள ஆவல் வர….
வரேன் இரு…..ஜிஷு…உனுக்கு வலிக்குதா பார்ப்போம்…உடம்பு உண்மைதானா?…
இல்லையே கை ஜில்லுன்னு இருந்தாலும் கை மாதிரியே தானே இருந்துச்சு……
அப்புறம் இது யூத் லுக் ல இருக்கு…ஆனா வயசானதோ?? ஐய…
ஒரே ஒரு ட்ராகுலா பிரின்ட் பிடிச்சிட்டு…ஓராயிரம் டவுட்டு…..
தலையில் அடிச்சிக்கிட்டாள்…eeeee
ஏன்டா அடிச்சுகிற?
ஐயோ ..!! மாட்டினேனா?
இல்லப்பா வேன் பீச் ரோட்ல நின்னு லேட் ஆகிருச்சு …அத நெனச்சேன்….
ஓஓ..அதான் பிள்ளை இன்னும் வரலயே ..உங்கம்மா பார்த்துட்டு வர சொன்னா….ஏம்மா இப்டியே எப்பவும் நைட் தானா?
இல்ல நைனா…ட்ரைனிங் முடிச்சிட்டா…பகல்ல தருவாங்க..நினைக்கிறேன் ..பார்ப்போம் நைனா…
அப்பாவை போக விட்டு மெதுவாவே நடந்தவள்…வழியில் நின்றிந்த ஜிஷுவின் விரல் பிடித்து ..நன்றி என்று முகம் விகசிக்க சொல்ல…
என்னை கிள்ளு தேன்…
இவள் புருவம் அகல ஜிஷ்ணுவை பார்க்க…
நீ மனதில் நினைப்பது கூட எனக்கு தெரியும்…தேன் என்க…
நல்லாவே இடுப்புக்கு கீழே கிள்ளியெடுத்தாள்…
அந்த நரம்பெலாம் கட் பண்ணிரு ஜிஷு…எனக்கு பிடிக்காது..போ… கடுப்பாகி…
கையை அவன் மீதிருந்து எடுக்க போக….இப்ப ஜிஷு பிடித்துக்கொண்டது…
நான் கிழவன் இல்ல…உன்னை போல இளமையானவன் தான் தேன்…
இவள் கண்களை உற்று பார்த்தவாறே சொல்ல…அவன் கண் கலர் மாறி இருப்பதை இப்போ தான் கவனித்துபார்த்தாள்…தேன்
நாளைக்கு பார்ப்போம்…ஜிஷு…என் ஆஃபீஸ் க்கு வந்திரு…சும்மா தான் இருப்பேன்..அச்சு நீயும் வா…eeee
கையை உருவி சென்றுவிட்டாள்..
அவள் விரல்களின் இளம் சூடு ஜிஷுவின் குளிர் ரத்தத்தில் இதம் கிளப்ப…இதே சுகம் வேணும் உணர்வு கிளர்ந்தது …
அவளை மடிக்குள்ளேயே வைத்து பொதிந்தே வைத்திருக்க பேராசை எம்பியது…எங்கும் மென்மை… சுகந்த வாசம்…அவள் உடலே இவனை அதிசயம் காட்டி மயக்கியது…
தங்கள் பேய் வீட்டிற்கு …இருவரும் நடந்தவாறே..
ஆளி..உங்களை அழைத்தது…தேன் அப்பாவிற்காக அல்ல…
வேறு? என்ன அச்சு…
ஏதோ ஒரு அலைவரிசை தட்டு படுது.. அதுவும் உங்களை நோக்கி….ஆளி..இனி கவனம்…அக்கம் பக்கம் பாருங்கள்…தனியே இனி செல்லாதீர்கள்…நான் கூட வருகிறேன்….சரியா?
சரி…அச்சு…தேனு நினைப்பது கேட்காத மாதிரி எனக்கு மாத்தேன்….
அது மாத்தவே முடியாது…ஆனால் அதை இனி வேண்டாம் என்றால் அழித்துவிடலாமே தவிர…திரும்ப பெற முடியாது…ஆளி…
அது உங்க பரம்பரைக்குண்டான சிறப்பு சக்தி…எதிரியின் மனதை அறிந்து கொள்ள..
எனக்கு எதிரியே இல்லையே… வேண்டாம் அச்சு…
ஆளி..உங்க அப்பாவிற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டி வரும்…
எனக்கு வேண்டாம்..எடுத்துவிட்டேன்…சொல்லிக்கொள்கிறேன்…
கடைசியா யோசிச்சுக்கோங்க…
ஒருத்தருக்கு நம் சக்தி தொல்லையா இருக்குன்னா…அது எதுக்கு? தாராளமா எடுத்துவிட்டுடு…எனக்கொன்னும் இல்ல…
மிக சாதாரணமாய் ஜிஷ்ணு….
இங்கு….இவர்கள் லீலைகளையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு..இரண்டு கண்கள்…சிவப்பாய் லேசர் ஒளி அனைய செக்க சிவந்து…ஆகன்…ட்ராகுலா….
