உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி
ஒன்றா? இரண்டா?
கோடிகள், அதும் இரண்டு கோடி,
எப்படி? எங்கிருந்து கொடுப்பது?, பத்து தினங்களாக பைத்தியக்காரன் போல் அலைகிறான் வழி
மட்டும் தெரியவில்லை .
அணைத்து
கதவுகளையும் முட்டியாயிற்று, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் உறுதுணையாய் இருந்து,
கைபிடித்து உயர்த்தி தோழனை போல் தோள் கொடுத்த தாத்தாவும் மறைந்து மூன்று மாதங்கள் கடந்து
விட்டது.
இன்று
அந்த எம்பெருமான் சந்நிதியில் இனி நீயே துணை, எங்காவது ஒரு வெளிச்சப் புள்ளியை காட்டி
விடு இறைவா!!! என்று கண்மூடி தூணில் சாய்ந்து அமர்ந்துவிட்டான்.
இமையோரம் கசிந்த நீர்த்துளி அவன் மன பாரத்தை குறைப்பதாகயில்லை.
மனம் முழுதும் இருள் சூழ்ந்து கிடக்கிறது, ஒரே சிந்தை ஒரே பிரார்த்தனை
“ஆயிரம் கை உண்டென்றால்
நீ ஒரு கை தர கூடாத
ஈராயிரம் கண் கொண்டாய் உன் ஒரு
கண் என்னை பாராத”
எத்தனை
மணித்துளிகள் கடந்தது என்று அறியவில்லை…
தோளில்
அழுந்திய கரம் அவன் உணர்வுகளை மீட்டது, நிமிர்ந்து பார்த்தான் ஆருயிர் நண்பன் பார்த்திபன்
நின்றிருந்தான்.
நண்பனை
வேதனையாக பார்த்த பார்த்தி அவன் அருகில் அமர்ந்து தரையை வெறித்து கொண்டு இருந்தான்.
அவனேயே
உற்று பார்த்த வளவன் “என்னடா? என்ன விஷயம் ?” என்றான் , பார்த்திபனிடம் இருந்து வார்த்தைகள்
வெறுப்பாக வந்தது , “அண்ணா போன் பண்ணாரு வளவா
!! காசு …, காசு தரேன்னு சொன்னாரு” என்றான்.
சட்டறென்று
துள்ளி எழுந்தான் வளவன், “ஏன்டா நல்ல விஷயம் தானே அத ஏன் இப்படி சொல்ற?” என்றான்.
ஆனால்? நண்பனின் தயக்கத்திற்கு பின், மிக பெரிய காரணம்
இருக்கும் என்று அறிவான் வளவன், எதுவாகினும் பார்த்தியே சொல்லட்டும் என்று காத்திருந்தான்.
பார்த்திபனின்
பொறுமை பறந்தது “பணம் கிடைக்கறது நல்ல விஷயம் தான்,.. ஆனா அதுக்கு அவர் சொல்ற கண்டிஷன
எப்படி ஒத்துக்க முடியும் ,நம்ம சூழ்நிலையை அவர்க்கு சாதகமா முடிக்க பாக்குறாரு, அதுக்கு
மாமாவும் கூட்டு”.
“உனக்கு அப்பாவாவும் அத்தைக்கு புருஷனாவும் போய்ட்டாரு
இல்ல” என்று பல்லை கடித்தான்.
இப்பொழுதும் தன்னை விட்டு கொடுக்காமல், “நம்ம
சூழ்நிலை” என்று தான் சொல்கிறான்.
வளவனுக்கு மனம் கனிந்தது இது போன்ற ஒரு நட்பு கிடைக்க
என்ன புண்ணியம் செய்தேனோ என்று.
“பார்த்தி”
ஆழ்த்த குரலில் அழைத்தான் வளவன், தன் முகம் பார்த்த நண்பனிடம், “இப்போ தேவை நமக்கு
தான் ,உன் உசுர குடு காசு தரேன்னு யாராவது
சொன்ன…, நான் அதுக்கும் தயாரா தான் இருக்கேன்”.
வளவனின் கையை பிடித்த பார்தி அவன் கண்களை பார்த்து,
“ நீ ஏன் டா உயிரை குடுக்கணும் நான் எதுக்கு இருக்கேன் உசுர குடுத்தாதான் பணம் கிடைக்கும்னா
என்னோடது தான் முதல்ல” என்றான்.
பார்த்திபனை ஆரத்தழுவிக்கொண்டான் வளவன், இருவரும்
எம்பெருமானுக்கு சாஷ்டாங்கமாக விழுந்து ஒரு நன்றியை உரைத்து விரைந்து வீடு சென்றனர்.
வீட்டின்
முன் சென்று வண்டியை நிறுத்தி இறங்கினான் வளவன், பிறந்தது முதல் ஓடி விளையாடி, மகிழ்ந்து,
வாழ்ந்த வீடு, இனி இது தனக்கில்லை, மனதில் எங்கோ ஒரு சிறு வலி தோன்றியது.
ஆனால்
இந்த வீட்டை இழப்பதால் தனக்கு கிடைக்கப்போவது வாழ்வின் மிக பெரிய நிம்மதி. பார்த்திபனும்
வீட்டைத்தான் பார்த்திருந்தான், அவன் தன் வீட்டில் இருந்த நேரத்தை விட இங்கு வாழ்ந்ததே
அதிகம்.
குடும்பம்
முழுதும் அந்த நேரத்தில் அங்கு குழுமி இருந்தது ,அழுது வீங்கிய முகமும் சிவந்த கண்களுமாக,
வந்த கேவலை முந்தானை தலைப்பால் அடக்கிய படி வளவனின் தாய் தங்கம்மை அமர்ந்திருந்தார்
.
குடும்ப
தலைவர் ருத்ரன், “இறுதியில் நீ எங்களிடம் கை ஏந்தி நிற்கிறாய்” என்று ஏளனப்பார்வை வீசி
நின்றார், அண்ணன் கார்த்தி முகத்தில் வெற்றிப்புன்னகை.
எப்பொழுதும்
போல் அண்ணி நந்தினி எந்த உணர்வுகளும் காட்டாமல் கணவனை வெறித்து கொண்டு இருந்தாள், இவர்கள் இருவருக்கும் மூத்தவள் கோதை அவள் முகமும்
அழுது கலங்கி இருந்தது ,அவளின் கணவன் பெருமாள் இதில் தனக்கு ஏதும் லாபம் கிட்டுமா என்று
அனைவரையும் ஆராய்ந்து கொண்டு அமர்ந்திருந்தான்.
பார்த்திபனை
பார்த்து கார்த்தி “என்னடா அவன் கிட்ட எல்லாம் சொன்னியா??” என்று வினவ , அவன் நண்பனை
பார்த்துகொன்டே “சொல்லிட்டேன்” என்றான், “அப்புறம்? சார் என்ன சொல்லறாரு” என்றான் கார்த்திக்
.
இப்பொழுது
வளவன் தன் அண்ணனை நேரே பார்த்து “எனக்கு சம்மதம்” என்றான் பெரிய கேவல் ஒன்று அவன் தாயிடம்
இருந்து எழுந்தது .
“வேண்டாம்
பெரியவனே ரொம்ப பெரிய தப்பு செய்ற, அவன் உன் தம்பி டா.., அவனுக்கு அநியாயம் பண்ணாத
சாமி”.
“அவன்
செய்யறது மட்டும் நியாயமா? இவன் எவளோ தெரியாத ஒருத்திக்கு வேண்டி என்ன வேனா செய்வாராம்
நாங்க கேள்வி கேக்க கூடாதாம் நல்லா இருக்கு உங்க நியாயம்” எண்ணையில் இட்ட கடுகாய் பொரிந்தான்
கார்த்தி.
“அது
அவன் தனிப்பட்ட விஷயம்., உங்களுக்கு பிடிக்கலைன்னா அவனுக்கு சேர வேண்டியதுல இருந்து
குடுங்க, நாளா பின்ன சொத்த பிரிக்கும்போது இப்போ குடுக்கறத கழிச்சுக்கோங்க, என் பிள்ளை
நியாயஸ்தன் அவனுக்கு சொந்தமில்லாத ஒத்த பைசா எடுக்க மாட்டான்”.
அழுகையினுடே பெரிய மகனிடம்
பேசினாலும் பார்வை கணவனிடம் இருந்தது.
“இங்க பாருமா என் முடிவை சொல்லிட்டேன், நா யாரையும்
கட்டாய படுத்தல
உன் புள்ளைக்கு
பணம் வேண்டானா இந்த பேச்சை இதோட விட்ரலாம்”.
பேசினாலும் பார்வை கணவனிடம் இருந்தது.
“இங்க பாருமா என் முடிவை சொல்லிட்டேன், நா யாரையும்
கட்டாய படுத்தல
உன் புள்ளைக்கு
பணம் வேண்டானா இந்த பேச்சை இதோட விட்ரலாம்”.
அழுத்தமான பார்வையை தம்பியின் மீது வைத்து
பேசினான் அண்ணன்.
பேசினான் அண்ணன்.
தன் இளைய மகனை ஆற்றாமையோடு பார்த்தார் தங்கம்மை,
என்ன இல்லை இவனிடம்?? காற்றாற்று வெள்ளம் போல் எந்த கட்டுப்பாடுகளுக்கும் அடங்காமல்
திரிந்தவன் ,கவலைகளை அவன் அருகில் கூட அண்டவிட மாட்டான், பேச்சிலும் நடத்தையிலும் வயதுக்கு
மீறிய கம்பீரம் இருக்கும் .
தன் இரு
பிள்ளைகளும் தன் நிறத்தை கொண்டு இருக்க, வளவன் அவர் கணவரின் கருமை நிறத்தையும் , மாமனாரின்
கம்பீரத்தையும் கொண்டு இருந்தான், ஆளுமையான பார்வை,.. எவரையும் பார்த்தவுடன் அவன் முகத்தில்
தோன்றும் புன்னகை அறியாதவரையும் அவனை நோக்கி புன்னகைக்க சொல்லும்.
தன் மகனின் வாழ்வு
அப்படியே நிம்மதியாக போயிருக்கக்கூடாதா?? .
அப்படியே நிம்மதியாக போயிருக்கக்கூடாதா?? .
“முடிவா
என்ன சொல்ற வளவா, எனக்கு வேற வேல இருக்கு” கார்த்திக்கின் வார்த்தைகள் சூடாக வந்து
விழுந்தது , நன்றாக
நிமிர்ந்து நின்று, தலை உயர்த்தி, கார்த்தியின் கண்களை ஊடுருவி ஆளுமையுடன் கேட்டான்
“எங்க கையெழுத்து போடணும்”.
உள்ளநிறைவிலோர்கள்ளம்புகுந்திடில்உள்ளம்நிறைவாமோ?-
நன்னெஞ்சே
தெள்ளியதேனிலோர்சிறிதுநஞ்சையும்சேர்த்தபின்தேனாமோ?-
நன்னெஞ்சே!
வாழ்வைநினைத்தபின்தாழ்வைநினைப்பதுவாழ்வுக்குநேராமோ?-
நன்னெஞ்சே!
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற சாதிரங் கேளாயோ?-நன்னெஞ்சே!
