உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி

உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி


    அதிகாலை வீடு சென்று சேர்ந்தனர் இருவரும், இவர்களுக்காக அனைவரும் காத்திருந்தனர்
விவரங்களை நேரம் கிட்டும் போதெல்லாம் இவர்களிடம் பகிர்ந்துகொண்டான்.


ஆனால் சமுத்திரைக்கு மிதமிஞ்சிய பதட்டம் தன்னைப்  பற்றி ஏதும் பேசி இருவருக்கும் பிரச்சனை வந்திருக்குமோ,
கோபம் கொண்டு திட்டியிருப்பாரோ என்று அவன் முகத்தையே பார்த்திருந்தாள்.


சுற்றிலும் அனைவரும் அமர்ந்திருக்க அவள் சுபாவின் பின்னால் நின்றிருந்தாள்,
சோபாவில் அமர்ந்திருந்தவன் கை நீட்டி அவளை அழைக்க, விரைந்து அவனிடம் வந்தவளை அருகில்
அமர்த்தி அணைத்து அவள் உச்சியில் நாடிப் பதித்தான், அவள் பதட்டம் மெல்ல அடங்க” ஒன்னும்
பிரச்னையில்லை பயப்படாத” என்றான்.


 இருவரின் மனநிலையும்  அனைவருக்கும் புரிந்தது  “ மச்சான் நீ தங்கச்சிய கூட்டிட்டு போ, நா பேசிக்கிறேன்”
என்றான் பார்த்தி, சமுத்திரையுடன் அறைக்கு வந்தவன் “உன் மடில படுத்துக்கவா” என்க அவனை
மடிசாய்த்துக்கொண்டாள், நிம்மதியான உறக்கம் சிறிது நேரத்திலேயே.


அவனின் தலை கோதி அவனையே பார்த்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.


ருத்ரனின் மாற்றத்தை அவர்களால் நம்ப முடியவில்லை!!, மரணத்தின் விளிம்பு
வரை சென்று மீளும் மனிதர்கள் சிலர் வாழ்வின் நிதர்சனத்தை புரிந்து கொள்கிறார்கள் அதும்
வெகு சிலரே.


தங்கள் அறையில் பார்த்திபனின் மடியில் படுத்திருந்த சுபா “தாத்தா எவ்ளோ
கிரேட்ல இந்த மாதிரி மனுஷங்களாம் ரொம்ப கம்மியா இருக்காங்க”.


“ஹ்ம்ம் உண்மைதான் இவன் இருக்கானே அதுக்கும் மேல” என்றவன் குரல் நண்பனை
எண்ணி நெகிழ்ந்தது

சென்னைக்கு வரும் வழியில் வண்டி ஒட்டிக்கொண்டிருந்தவனிடம் “எனக்கு இடம்லாம்
வேண்டாம் மச்சான், அதோட குத்தகை பணம் கூட வேண்டாம், எல்லாம் நியாயமா உனக்கு சேரவேண்டியது
டா” என்றவன் பேச்சில் சடன் பிரேக் இட்டவன் “கரெக்ட் தான் இன்னையோட என் உறவு வேண்டாம்னு
சொல்லு, மொத்தமா நானே எடுத்துக்குறேன் நீ உன் வழிய பாத்து போ” என்க.


அவனை ஒரு நிமிடம்  “எப்படி கேட்
போடுறான் பாரு” என்று  முறைத்தவன் “ஏன் மச்சான்
நம்ம இடத்தை இப்போ மாதிரி குத்தகைக்கே கொடுக்கலாமா இல்ல நாமளே ஏதாச்சும் பண்ணலாமா”
என்று சீரியசாக முகத்தை வைத்து  கேட்டவணை பார்த்து
சிரித்துவிட்டான் வளவன்,
சுபாவிடம் கூறி முடிக்க.


அவனையே பார்த்திருந்த சுபா “எல்லாம் நல்லா  நடக்கும் அப்படியே அவங்க சேந்து வாழ ஆரம்பிச்சிட்டா
இன்னும் நிம்மதியா இருக்கும்” என்க அவனும் “ம்ம்” கொட்டினான் .


சுபாவின் பெற்றோர் ருத்ரனை காண விருதாச்சலம் சென்றுவிட்டனர், செம்பாவுக்கு
ஒரு நல்ல வரனை அவள் தாயிடம் கூறினான் வளவன், அவர்கள் ஹோட்டலில் பணிபுரிபவன் தாய் மட்டுமே,
நல்ல குணம் தங்கையின் படிப்பை பற்றி அவள் யோசிக்க “எல்லோரும் சேர்ந்து பார்த்துக்கொள்ளலாம்
நீ திருமணம் செய்துகொள்” என்று விட்டாள் சமுத்திரை

செம்பா திருமணம்  நல்ல முறையில்
நிச்சயிக்கப்பட்டது, ஆறு மாதத்திற்கு பிறகு திருமணம் நாள் முடிவு செய்யப்பட்டது.


பார்த்திபனும் வளவனும் தங்களுக்கு திருப்தியாக தோன்றிய காலேஜ் ப்ரொபஸர்
விவரங்களை நந்தினியிடம் கூறி பேசிப்பார்க்க சொல்ல, மூன்று முறை அவர்கள் சந்திப்பு நடந்தது,
புரிதலோடு கூடிய நிம்மதியான ஒரு வாழ்வு அவரோடு 
சாத்தியம் என்று தோன்றிய நிமிடம் திருமணத்திற்கு  சம்மதம் தெரிவித்தாள் நந்தினி.


ருத்ரனும் கார்த்தியும் நல்ல முறையில் தேறி வந்தனர், இவர்கள் சென்னை வந்து
இருபது தினங்கள் கழிந்து இருந்தது, கணவன் மனைவி இடையில் பெரிய மாற்றம் இல்லை, அன்று
இரவு நேரம் பதினொன்றை கடந்தும் உறங்க வராத மனைவியை தேடி சென்றவன் கண்டது , பால்கனி
இருளில் தீவிரமான சிந்தனையில் இருந்தவளை தான்.


 “இங்க என்ன பண்றா” என்ற யோசனையில்
அருகில் செல்ல பேப்பரில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தாள், அவள் இல்லாமல் உறங்க முடியவில்லை
அவனால், சத்தத்தில் திரும்பிப் பார்த்தவள் இவனை பார்த்ததும்  திரு திரு என்று விழித்துக்கொண்டிருக்க, அவளிடம்
ஒன்றும் பேசாமல் அவளை கைகளில் அள்ளிக் கொண்டான்.


முட்டைக்கண்ணை விரித்து பார்த்தவளை அறைக்குள் சென்று கட்டிலில் விட்டவன்,
அறை கதவை அடைத்துவிட்டு வந்து அவள் மார்பில் முகம் புதைத்து படுத்துவிட்டான்.


படபடவென்று விழிகள் அடித்துக்கொள்ள, அவன் மீசை குறுகுறுப்பில் நெளிய தொடங்கினாள்
“மச்” என்றவன் மீண்டும் அழுத்தமாக முகம் புதைத்தான்.


மீண்டும் அவள் நெளிய “மச் என்னடி உனக்கு பிரச்சனை” என்றான், அவன் மீசையையும்
தாடியையும் தொட்டு காண்பிக்க “குத்துதா?”

“ஹ்ம்ம்”

“நல்லா குத்தட்டும்” என்று கழுத்தில் முகம் வைத்து தேய்க்க, அவள் கிலுங்கி
சிரிக்க தொடங்கினாள், ஒரு கட்டத்தில் அவன் முடியை பிடித்து தன்னில் இருந்து அவன் முகத்தை
விலக்கினாள்.


அவன் நிமிர்ந்து பார்க்க சரியாக பனிரெண்டு மணி குயிலோசை அவள் அலைபேசியில்
அடித்தது “இப்போ எதுக்கு அலாரம் வெச்சுருக்க” என்றவன் அதை எடுத்து அணைக்க, அவன் முகத்தை
தன் கைகளில் ஏந்தியவள் “ஹாப்பி பர்த்டே மாமா” என்றாள் அவன் கண்களை பார்த்து.


அவள் முகத்தையே பார்த்திருந்தான் “இப்பொழுது ஏதும் பேசினாளா, இல்லை எனக்கு
தோன்றியதா!! கனவு காண்கிறேனா?” என்று அவளையே பார்க்க மீண்டும் கூறினாள் அவன் செவிகளில்
“பிறந்தநாள் வாழ்த்துக்கள் வளவரே, ஐ லவ் யு..”


 அவனால் நம்ப முடியவில்லை, அவளை
தன்னில் இருந்து பிரித்து அவள் முகம் பார்த்து “பொம்மி…” என்று அழைக்க விழியில் கடல்
பொங்க, இதழில் புன்னகை பூக்கள் விரிய கேட்டாள் “என்ன மாமா” அவள் புன்னகையை தன் இதழ்களுக்குள்
அடக்கிக் கொண்டான்.


அவள் இதழ் விடுத்து நெற்றியில் முத்தம் பதித்து கேட்டான் “எப்படி?”.

“புது கோர்ஸ் சேர போறேன்னு கேட்டேனே, அது இதுக்கு தான்”.


“ ஏன் சொல்லல”.


“இப்படி சொல்லணும்னு தோணுச்சு” அவளை அப்படியே அள்ளி மடி மீது அமர்த்திக்கொண்டான்.


“எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா” ஏதேதோ கதைகள் பேசிக்கொண்டிருந்தான்,
அவனையே பார்த்திருந்தவளை நோக்கி “என்னடி” என்க “எனக்கு இப்போல்லாம் பயமா இல்ல” என்றாள்.


“என்ன பயம்” என்றவன் அவள் உடலின் நடுக்கத்தையும் முக சிவப்பையும் அப்பொழுது
தான் பார்த்தான் “என்ன சொன்ன” என்ற அவனின் ஆழ்ந்த குரலில் அவன் மார்பில் முகம் மறைத்தவள்
“எனக்கு பயம் இல்ல” என்றாள்.


வேறு என்ன வேண்டும் காத்திருந்த காதலனுக்கு, ஒரு துளி  நீரில் நனைந்துவிட மாட்டேனா என்று ஏங்கி தவித்தவனுக்கு
கடல் என்னுள் மொத்தமாக மூழ்கிவிடு என்கிறது.


மூழ்கித்தான் கிடந்தான் மொத்தமாக, எங்கோ தெரிந்த வெளிச்சப்புள்ளியில்
சமுத்திரை விழித்துக்கொண்டாள், அவன் கைவளைவில் இருந்து மணி பார்க்க பத்து “ஐயோ” என்று
பதறியவள் அசைவில் விழித்தவன் “பொம்மிமி” என்று அழைக்க “போச்சு லேட் ஆயிடுச்சு எல்லாரும்
எழுந்திருப்பாங்க” என்க.


“அவங்க நல்லா தூங்கியிருப்பாங்க சீக்கிரம் எழுவாங்க, நாம எழவேண்டாம்”.


“எனக்கு குளிக்கணும்” என்று அவசர அவசரமாக டவலை எடுக்க போனவளை “சரி சீக்கிரம்
வா நானும் குளிக்கணும்”.


 “ம்ம் ம்ம்” என்று பாத்ரூம் சென்றவள்
கண்டது உள்ளே நின்று அவளை இழுத்த கணவனை “ஐயோ மாமா என்ன பண்றீங்க”.


“காலைல இன்னும் ஒன்னும் பண்ணல இனிமே தான் ஆரம்பிக்கணும்” என்று கதவடைதான்,
இருவருமே டவலை மட்டும் சுற்றிக்கொண்டு வெளியில் வர அப்படியே அவளை கைகளில் ஏந்தியவன்
ஹாலிற்கு வர அவள் வெகுவாக பதறிவிட்டாள்

“விடுங்க விடுங்க என்ன பண்றீங்க” என்று அழும் நிலைக்கு சென்றுவிட்டாள்.


ஆனால் வீடே நிசம்பதமாக இருந்தது, சுற்றிலும் பார்க்க கதவுகள் அனைத்தும்
அடைத்து இவர்களை தவிர யாரும் இல்லை “எங்க எல்லாரு..” அவளை முடிக்க விடாமல் வாயில் இட்லியை
வைத்தான்.


“பஸ்ட் சாப்டு” என்றவன் அவளுக்கும் ஊட்டி அவனும் உண்டு முடித்தான்

“எங்க எல்லாரும்?”.


“காலைலே சுபக்கிட்ட ரெண்டு நாள் எங்களுக்கு பிரைவசி வேணும்னு சொல்லிட்டேன்”
என்க “ஐயோ ஏன் இப்படி பன்னீங்க” என்றவள் முகமே வெட்கத்தில் செந்தூரம் பூசிக்கொண்டது.


“அவங்க கோவிச்சுக்கலயா” என்க.


“ஆமா சுபா ரொம்ப கோவிச்சுகிட்டா”.


 “அச்சச்சோ நீங்க ஏன் அப்படி சொன்னீங்க,
நாம போய் பேசலாம் மாமா, அண்ணி  பேச மாட்டாங்களா
அண்ணா கிட்ட சொன்ன அண்ணியை பேச வெச்சுடுவாங்க தான வாங்க போலாம்” என்று படபடத்தவளை பிடித்து
அமர வைத்தவன் “இப்படியேவா
போற!!” என்க.


 “நா டிரஸ் மாத்திட்டு வரேன்”.


 “ஏய் பொம்மி சாரீ கட்டிக்கோ அப்படியே
கோவில் போலாம்” என்க “ஹ்ம்ம்” என்று உள் சென்றவள் புடவை மாற்றி தயாராகி வர, அவன் வேட்டி
சட்டையில் தயாரானான்.


ஹாலில் இருந்தவளை அழைக்க “போலாம் மாமா நேரம் ஆகுது” என்று வந்து நின்றாள்.
“போலாம் ஆனா போ இல்ல, ஈவினிங்”.


 “ஏன்”.


“ஏன்னா நமக்கு இப்போ பஸ்ட் பகல்”.


“ஹா” என்று அவள் பார்க்க “ஆமா பொண்டாட்டி பஸ்ட் நைட் முறையா கொண்டாட முடியல,
நாம இந்த ட்ரெஸ்ல தான பஸ்ட் நைட் கொண்டாடணும், சோ இப்போ ஆரம்பிக்கலாம்” என்று இழுத்து
அணைத்து இறுக்க, தொண்டைக்குழியில் சிக்கிக் கொண்ட வார்த்தைகளை தேடி எடுத்து “அண்ணிய..”.


“ஹ்ம்ம் சுபா ரொம்ப கோவிச்சுக்கிட்டா, ஏன்டா மடையா எங்களை மட்டும் ஒரு
வாரம் ஹனிமூன் அனுப்பின, என் நாத்தனாருக்கு ரெண்டு நாள் குடுக்குற, கஞ்சனே! ஒரு வாரம்
சிம்லா டிக்கெட் எடுத்து வெக்குறேன், ரெண்டு நாள்ல  கெளம்புற வழியப்பாருனு சொன்னா” என்று அவளின் வெற்றிடையில்
விரல்கள் கோலமிட இனி எங்கு பேச.


மாலை அனைவரையும் சந்தித்தது பிறந்தநாள் கொண்டாடி, கோவிலுக்கு சென்று வந்து
மூன்றாம் நாள் சிம்லா நோக்கி பறந்தனர்.


சுபாவிற்கு வளைகாப்பு நடந்து கொண்டிருந்தது, அனைவரின் முகத்திலும் மழிச்சி
தளும்பி நின்ற தருணம் .


கல்யாணி தங்கம்மையுடன் ருத்மூர்த்தியும் வந்திருந்தார், விழாவிற்கு சிறிய
மண்டபம் புக் செய்து சிறப்பாக செய்தனர், அவளை ஊருக்கு அழைத்துப்போக விரும்பினார் அவளின்
தந்தை, ஆகையால் வளைகாப்பு முடிந்த நான்காம் நாள் அவளுடன் அவர்கள் செல்ல இருந்தனர்.


காரணம் நாளை நந்தினியின் திருமணம், முன்ணில் நின்று நிறைவாக அவளை ஆசிர்வதித்தார்
தங்கம்மை, பெரிதாக பேசவில்லை என்றாலும் “நல்லா இரு” என்று வாழ்த்தினார் ருத்ரமூர்த்தி,
சுபாவையும் சமுத்திரையையும் கட்டிக் கொண்டு அழுது தீர்த்தாள், முறையாக அவளை புகுந்த
வீட்டில் விட்டு வந்தனர், அவளின் குடும்பத்தில் இருந்து எவரையும் அழைக்கவில்லை.


சுபா பார்த்தியின் தேவதை இலக்கியாவிற்கு ஐந்து மாதங்கள் நிறைவு, இன்று
தான் வந்து சேர்ந்தாள் தாய் தந்தையுடன் சென்னைக்கு, சுபாவின் பிரசவத்திற்கு அனைவரும்
சென்றிருந்தனர்.


கார்த்தி வேலையை விட்டுவிட்டு முழு நேரமும் கடையை பார்த்துக் கொள்கிறான்,
நிறைய மாற்றங்கள் அவனிடம், இப்பொழுதும் யாரோடும் பெரிதாக ஓட்டுதல் இல்லை என்றாலும்
தந்தையிடம் தங்கள் வியாபாரத்தை பற்றி பேசுகிறான், தாயிடம் கொஞ்சம் இணக்கமாக போக முயற்சி
செய்கிறான்.


 இப்பொழுது தனிமையை உணர தொடங்கியிருக்கிறான்,
கையில் இருந்த பொக்கிஷத்தை தொலைத்த குற்றஉணர்வு உள்ளில் அரித்துக் கொண்டிருக்கிறது

 தங்களுடைய இத்தனை வருட சேமிப்பை  எதில் முதலீடு செய்யலாம் என்று நண்பர்கள் அலசி ஆராய்ந்து
“ஈவென்ட் மேனேஜ்மென்ட்” ஒன்று தொடங்கிவிட்டனர்.


 பேஷன் டிசைனர் சுபா, கேட்டரிங்
அண்ட் மேனேஜ்மென்ட் நண்பர்கள், கேக் சமுத்திரை, வேலைக்கு நம்பிக்கையான ஆட்கள், செம்பா,
அவளின் வருங்கால கணவன், அவளின் தாய் என்று தொடங்கி விட்டனர்.


ஆறுமுகம் இவர்களுக்கு என்று கொடுத்த பணத்தில்  தாம்பரம் உள்ளே மூன்று  கிரௌண்ட் இடம் வாங்கி விட்டனர் , அதில் இருந்த எந்த
மரத்தையும் வெட்டாமல் அழாகான பெரிய வீடு ஒன்று முடியும் தருவாயில் இருந்தது.


மா, பலா, சப்போட்டா ,தென்னை, வாழை ,பூச்செடிகள் என்று வீட்டை சுற்றி இயற்க்கை
விளையாடியது.

மதில் சுவர் எங்கும் போகன் வில்லா பூத்துக் கிடந்தது, இந்த அழகான கூட்டுக்
குடும்பத்திற்கு தங்குவதற்கு ஏற்றதாக நிறைய அறைகள், பெரிய ஹால் , உணவு அறை சமயல் அறை
என்று விஸ்தாரமாக இருந்தது.


பெயர் கூட முடிவு செய்து விட்டார்கள் “அன்புக்குடில்”.

தன் பொம்மியை தன்னோடு சேர்த்தணைத்து மனம் நிறைந்த பூரிப்போடு  வீட்டை பார்த்திருந்தான் வளவன் , அவனை நிமிர்ந்து
பார்த்தவள் “பாரதிய பாடுங்க மாமா” என்க அவனோடு வந்து தோள் சேர்த்துக் கொண்டான் பார்த்திபன்,
சுபா மற்றும் மகளுடன்.


இதழில் உறைந்த புன்னகையோடு வீட்டை பார்த்துக்கொண்டே பாடினான்.

 

காணி நிலம் வேண்டும் – பராசக்தி

 காணி நிலம் வேண்டும், – அங்கு

தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்

துய்ய நிறத்தினதாய் – அந்தக் காணி நிலத்தினிடையே – ஓர்மாளிகை

 கட்டித் தரவேண்டும் – அங்கு

 கேணியருகினிலே – தென்னைமரம்

 கீற்று மிளநீரும்.

பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்

 பக்கத்திலே வேணும் – நல்ல

 முத்துச் சுடர்போலே – நிலாவொளி

 முன்பு வரவேணும், அங்கு

 கத்துங் குயிலோசை – சற்றே வந்து

காதிற் படவேணும், – என்றன்

 சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாயிளந்

தென்றல் வரவேணும்.

பாட்டுக் கலந்திடவே – அங்கேயொரு

 பத்தினிப் பெண்வேணும் – எங்கள்

 கூட்டுக் களியினிலே – கவிதைகள்

 கொண்டுதர வேணும் – அந்தக்

 காட்டு வெளியினிலே – அம்மா! நின்றன்

 காவலுற வேணும், – என்றன்

 பாட்டுத் திறத்தாலே – இவ்வையத்தைப்

 பாலித்திட வேணும்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *