தீராத மோகம் தெவிட்டாத தாகம்
6. தீராத மோகம் தெவிட்டாத தாகம்!!..
சிம்மன் சர்வேஸ்வரனின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்ததும் பிரகாஷ் மதியை தள்ளி விட்டு அவனை தாக்க கத்தியுடன் ஓடி வருகையில் சர்வேஸ்வரனின் இரு கைகளையும் முதுகுப் பக்கம் சேர்த்து பிடித்துக் கொண்டு பிரகாஷை நோக்கி தரையில் சுட்டான்.
“என்ன மிஸ்டர் ஈஸ்வர், எனக்கு அருவாள் வீச மட்டும் தான் தெரியும்ன்னு நீங்க நெனச்சீங்களா”?. இதெல்லாம் சும்மா ஒரு டீசர் மாதிரி இன்னும் டிரெய்லர், மெயின் பிக்சர் என இன்னும் செம சீன் இருக்கு. “என்னை பத்தி உங்களுக்கு தெரிந்ததை விட உங்களைப் பத்தி ஆதி முதல் அந்தம் வரை தெரிஞ்சுதான் உங்க பொண்ணை தூக்குனேன்.
“உங்க மேனேஜரை பேசாம நிற்க சொல்லுங்க, இல்லை,”இப்போ தரையில் பாய்ந்த தோட்டா உங்க நெற்றியில் பாய ரொம்ப நேரம் ஆகாது”. என்றவன் அலட்சிய புன்னகை ஒன்றை வீசியபடி, அவரின் அடியாட்களைப் பார்த்து “எவனாவது இருக்கும் இடத்தை விட்டு அசைந்தால் உங்க முதலாளி பொட்டுன்னு போய்டுவார். நான் உங்களை மாதிரி பேசிட்டு இருக்க மாட்டேன் மிஸ்டர் ஈஸ்வர்.”. “உங்க ஆட்கள் கிட்ட புத்திசாலித்தனமா நடந்துக்க சொல்லுங்க”..என்று கர்ஜித்தவனை பார்த்து சர்வேஸ்வரனே சற்று பயந்துதான் போனார்.
மதியைப் பார்க்கும் போது அவனது கண்களில் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்த சர்வேஷ்வர் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்த
எண்ணிய அந்த ஈவு இரக்கமில்லா அரக்கன் சிம்மனின் தோட்டாவில இருந்து தப்பித்த பிரகாஷிடம் அங்கு நின்று கொண்டிருந்த மதியை கண்ஜாடை காட்டினார்.
உடனே சுதாரித்த பிரகாஷ் தன் கையில் இருந்த கத்தியை மதியின் கழுத்தில் வைத்து “சிம்மா அவர விடு இல்ல , ” உன் மனைவி மதியை கொன்னுடுவேன்” என்று மிரட்டினான். அதற்கு சர்வேஷ்வர் வெரிகுட் பிரகாஷ், உனக்கு சம்பளம் கொடுத்ததற்கு இன்னிக்குத் தான் நீ உருப்படியா ஒரு வேலை செஞ்சிருக்க” என்று பாராட்டிய படி சிம்மனை பார்க்க,
தற்போது தனக்கு மதியின் மீதுள்ள அக்கறையை பயன்படுத்தி அவரும் தப்பித்து தன்னையும் கொன்று விட திட்டமிடும் சர்வேஸ்வரனின் எண்ணத்தை அறிந்தவன்
ஓர் அலட்சிய புன்னகையுடன் சர்வேஸ்வரனிடம் “உனக்கே உன் பொண்ணு உயிர் முக்கியமில்லை என்கிற போது எனக்கும் அவள் தேவையில்லை ” உன்னை பழிவாங்கத் தான் அவள் கழுத்தில் தாலி கட்டினேன் என்றான் சிம்மன் வன்மமாக.
தன் எண்ணம் பொய்த்து போனதை எண்ணி அந்த ஆத்திரத்தை மதியின் மீது காட்டினார். சர்வேஷ்வர். “உன்னால எனக்கு ஒரு பிரயோஜனமும் இல்ல. எப்பவும் பிரச்சனை தான். உனக்கான செலவை உன் கல்யாணத்தின் மூலமாக சிவேஷை வைச்சு ஈடுகட்டிரலாம்னு பார்த்தா அதையும் இவன் வந்து கெடுத்தான். இப்போ உன்னை வைச்சு என்னை காப்பாத்திக்கலாம் ன்னு நினைச்சா இவனுக்கும் உன்ன பிடிக்கல போல. இதுக்கு “நீ பிறக்காமேயே இருந்திருக்கலாம். என மதியை தன் வார்த்தைகளால் கொன்றார்.
அதுவரை நடப்பதனைதையும் வேடிக்கை பார்த்திருந்த மதி, சர்வேஸ்வரனை இதுவரை
கண்டிப்பான தகப்பன் என்றாலும் தன் மீது பாசம் இருக்கும், இதுவரை தனக்கு பாசம், அன்பு தான் கிடைக்கவில்லையே தவிர தன் தேவைகள் எதிலும் குறை வைக்கவில்லை என நினைத்திருந்தாள். ஆனால் இன்று தன்னை பெற்று வளர்த்தை பிஸினஸ் போல் லாபம் நஷ்டங்கள் என நோக்கத்தோடு பேசியதும், தன்னை காத்துக் கொள்ள அவள் உயிரையே பணயம் வைக்க துணிந்தவரை ஒரு வெற்றுப் பார்வை பார்த்தாள். ஆனால் சிம்மனின் பதிலில் மனம் வெறுத்துப் போனாள். “மதிக்கு சிம்மனின் மீது இதுவரை இருந்த ஒரு சிறு நன்மதிப்பு உடைந்தது. மனிதர்கள் மேல் இருந்த நம்பிக்கையும் சிதறியது.
தன் உயிரை அவரவர் பழி உணர்ச்சிக்கும், சுயநலத்திற்காகவும் எடுக்க அவள் தந்தையும், தனக்கு தாலி கட்டியவனும் பேசிக் கொண்டிருந்ததை பார்த்து “இதுவரைக்கும் நீங்க இரண்டு பேரும் உங்க இஷ்டப்படி தானே நான் இருக்கனும் நினைச்சுட்டு ஒரு பொம்மை
போல ஆட்டி வைச்சீங்க. இன்று என் இஷ்டப்படி என் உயிர் போகட்டுமே என மனதில் நினைத்து சிம்மனை ஓர் தீட்சண்யமாக உயிர்வரை ஊடுருவும் பார்வை பார்த்தாள். அவள் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தன் தலையை உலுக்கிய சிம்மனை நோக்கி
ஒரு கசந்த புன்னகை சிந்திய படி சட்டென்று பிரகாஷின் கையில் இருந்த கத்தியை பிடித்து தன் கழுத்தில் தானே நன்கு அழுத்தி கொண்டாள்.. அவளது கழுத்து சற்று ஆழமாக கீறப்பட்டு அவளது சந்தன நிற சல்வார் செங்குருதியால் நனைந்தது. வேரற்ற செங்கொடி போல் அப்படியே மயங்கி சரிந்தாள் மதி.
பிரகாஷ் சிம்மனை மிரட்டுவதற்காக மதியின் கழுத்தில் கத்தி வைத்திருந்தான். அவள் சட்டென்று இப்படிச் செய்ததை யாரும் எதிர்பார்க்கவில்லை. சர்வேஸ்வரனோ, “முட்டாள்” யாருக்கும் பிரயோஜனப்படாமல் இப்படி பண்ணி தொலச்சுட்டா சை” என அந்த நேரத்திலும் அவளைத் திட்டிக் கொண்டு நின்றார்.
சிம்மனுக்குத் தான் இது பேரதிர்ச்சி.. கழுத்திலிருந்து இரத்தம் சொட்ட கீழே விழுந்த மதியை பார்த்தவன்,உயிர்போகும் வலியை உணர்ந்தான். மதி உயிரை விடத் துணிவாள் என அவன் நினைக்கவில்லை.இதுவரை அவளின் மீது தனக்கு இருந்தது ஈர்ப்பு என நினைத்திருந்தவன் சர்வேஸ்வரனின் பெண் என்ற நினைப்பை முன்னிருத்தி அவளிடம் கடுமை காட்டிக் கொண்டிருந்தான். ஆனால் இன்று தான் மதி இல்லை என்றால் தனக்கு எதுவுமே இல்லை என்று உணர்ந்தான் சிம்மன்.
“மதி” என்ற அலறலோடு அவளை நெருங்க அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சர்வேஸ்வரன் அவனிடமிருந்து தப்பி காரில் ஏறிக் கொண்டார். பிரகாஷிடம் “அவர்கள் இருவரையும் இங்கேயே கொன்று விடு” என உத்தரவிட்டு சென்று விட்டார்.
அதை எல்லாம் உணராத சிம்மன் கீழே விழுந்து கிடந்த மதியை தன் கையில் ஏந்தி அவளது கழுத்துக் காயத்தை ஆராய்ந்து கொண்டிருந்தான். தன்னை தாக்க வந்தவர்களை கையில் இருந்த துப்பாக்கியால் சுட்டதில் பாதி பேர் இறந்து விட்டனர். மதியின் நிலைமை மோசமாவதைக் உணர்ந்தவன் அவளைத் தூக்கிக் கொண்டு வேகமாக தன் காரை நோக்கி சென்றவனை மீத மிருந்த அடியாட்கள் தடுத்தனர். மதியை தூக்கிக் கொண்டு அவர்களை அடித்து துவம்சம் செய்ததை பாதுகாப்பாக தன் காரில் ஒளிந்துகொண்டு பார்த்திருந்த பிரகாஷ்
தான் அழைத்து வந்த அனைவரும் வீழ்ந்து கிடக்க சர்வேஸ்வரனின் உத்தரவை நிறைவேற்ற வில்லை என்றால் தன்னை உயிருடன் விட மாட்டார் என அவரைப் பற்றி
நன்கு அறிந்தவன் தானே அவர்களை கொல்ல முடிவெடுத்தான்.
காரின் டேஷ் போர்டில் அவன் பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மதியை காரில் படுக்க வைத்துக்
கொண்டிருந்த சிம்மனின் முதுகை நோக்கிச் சுட்டான். தோட்டா அவன் தோளில் ஆழமாக பாய்ந்தது.
மதியை தன் காரில் பத்திரமாக படுக்க வைத்த சிம்மன் தன் தோளில் இரத்தம் வழிய ஆவேசமாக திரும்பி கையில் அகப்பட்ட கம்பியை எடுத்து பிரகாஷின் காரை நோக்கி வீசினான். கம்பி சரியாக அவனின் கார் கண்ணாடியை உடைத்து அவன் குரல்வளைக்கு சிறிது இடை வெளியில்
சொறுகி நின்றது. இதற்கு மேல் இங்கிருந்தால் தன் உயிருக்கு ஆபத்து என நினைத்து வேகமாக காரை கிளப்பிக் கொண்டு சென்று விட்டான்.
அவனது தோளில் இருந்தும் இரத்தம் அதிகமாக வெளிப்பட்டதால் தன் சட்டையை கழற்றி இரத்தம் அதிகமாக வெளிப்படாதவாறு கட்டிக் கொண்டவன், அவளை தன் மடிமீது வைத்து காரில் இருந்த தண்ணீரை எடுத்து மதிக்கு மயக்கம் தெளிவிக்க முயன்றான். அதிக இரத்தம் வெளியேறியதால் மதிக்கு சுயநினைவு தப்பி விட்டது. அவளிடம் எந்த அசைவும் இல்லை. இதுவரை எதற்கும் கலங்காத சிம்மனின் கண்கள் முதல் முறையாக அவளுக்காக கலங்கியது. நீர் வழிய “மதி” – மதி” என்று பைத்தியம் போல் அவள் கன்னத்தை தட்டிக் கொண்டு இருக்கையில்
அங்கே ஒரு பெரிய ரோல்ஸ் ராய்ஸ் கார் வந்து நின்றது. அதிலிருந்து இரண்டு பாடிகார்டுகள்
கையில் துப்பாக்கியுடன் இறங்கினர். அவர்களுக்குப் பின்னால் ஆறடி உயரத்தில் மெரூன் கலர் பிளேசரில் வேக நடையுடன் வேங்கை என சிம்மனின் காரை நோக்கிச் சென்றான் RK என அழைக்கப்படும் “ரித்விக் கிருஷ்ணா”.
அங்கு சிம்மனும் மதியும் இருந்த நிலையைப்
பார்த்ததும் சற்றும் தாமதிக்காமல்
இருவரையும் தன் காரில் ஏற்றிக் கொண்டு கோவையின் மிக பிரபலமான மல்டி ஸ்பெஸாலிடி ஹாஸ்பிடல் நோக்கி பறந்தான் ரித்விக்.
RR குரூப்ஸின் CEO. உலக அளவில் அவன் செய்யாத தொழில்கள் இல்லை. மோஸ்ட் சக்ஸஸ்புல் அன்ட் எலிஜிபிள் பேச்சிலர் இவன் சிம்மனின் ஆருயிர் நண்பன். அவன்
அழைப்பை ஏற்றே தனி விமானம் மூலம் இன்று கோவை வந்தவன் ஏர்போர்டில் இருந்து கிளம்பும் போது சிம்மன் போன் செய்து
தன்னை கொல்வதற்காக சர்வேஸ்வரன் முயற்சிப்பதாக காரை வேகமாக ஓட்டி சாமளித்துக் கொண்டிருப்பதையும் தெரிவித்து தான் இருக்கும் லோகேஷனை சேர் செய்து அங்கு வருமாறு அழைத்திருந்தான்.
சிம்மனின் லோகேஷனை டிரேஸ் செய்து வேகமாக வந்தும் அவனை இரத்த வெள்ளத்தில் பார்த்தவன் சிம்மனை மடியில் தாங்கிக் கொண்டு வேங்கையின் ஆவேசத்தோடு சர்வேஸ்வரனை துண்டு துண்டாக கிழித்து எரியும் கோபத்தோடு அமர்த்திருந்தான் RK. இன்னும் வேகமாக செல்லுமாறு தன் டிரைவரை திட்டிக் கொண்டிருந்தான்.
கோவையில் அந்த பிரபலமான மருத்துவமனைக்கு போன் செய்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அர்ஜென்டாக எல்லாம் தயார் செய்ய சொன்னவன் பதினைந்து நிமிடங்களில் ஹாஸ்பிடல் அடைந்ததான். அவன் யார் என்று அறிந்ததும் கோவையின் சிறந்த மருத்துவர் குழுவே தயார் நிலையில் வாசலில் நின்றது.
மதியையும் சிம்மனையும் ICU வில் அட்மிட் செய்து விட்டு கூண்டு புலி போல் ICU வின் முன்னால் நடந்து கொண்டிருந்தான் ரித்விக் .
சிம்மனுக்கு துப்பாக்கித் தோட்டா வெளியே எடுக்க ஆப்ரேஷன் செய்ய வேண்டும் எனவும் மதிக்கு நல்லவேளையாக கழுத்தின் பக்கவாட்டில் கீறப்பட்டதால் காப்பாற்றி விடலாம் என்றும் இரத்தம் அதிகம் வெளியேறியதால் இருவருக்கும் உடனடியாக இரத்தம் செலுத்த வேண்டும் என ICU வில் இருந்து வந்த சீஃப் டாக்டர் ரித்விக்கிடம் தெரிவித்தார்.
சிம்மனுக்கும் தனக்கும் ஒரே ப்ளட் குரூப் என்பதால் அவனுக்கு தேவையான இரத்தத்தை தானே தருவதாக கூறிய ரித்விக் மதிக்கு தேவையான இரத்தத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு சொன்னான். முதலில் சிம்மனுக்கு ஆப்ரேஷன் செய்து புல்லட் ரிமூவ் செய்தனர். மதிக்கு கழுத்தில் காயம் சற்று ஆழம் என்பதால் நான்கு மணி நேரத்திற்கு மேல் ஆப்ரேஷன் செய்யப்பட்டது.
இரவெல்லாம் விழி மூடாது ICU வின் முன்னால் காத்திருந்தான் ரித்விக். தோளில் புல்லட் பாய்ந்ததால் சிறிய ஆப்ரேஷன் என்றதால் மறுநாள் காலையில் சிம்மனை நார்மல் வார்டிற்கு மாற்றி விட்டனர். மதி இன்னும் சுயநினைவிற்கு வராததால் ICU வில் இருந்தாள்.
“மதி” என்ற அலறலுடன்தான் கண் திறந்தான் சிம்மன். அங்கு கண் கலங்க தன் கைகளை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த ரித்விக்கை பார்த்தவன் “ரித்து மதியை இப்போ நான் பார்க்கனும்” என்று எழ முயற்சி செய்தான்.
அவனை எழ விடாமல் படுக்க வைத்து “ருத்ரா”
மதிக்கு ஆப்ரேஷன் முடிந்தது. ICU வில் தான் இருக்கிறாள். ஒன்றும் பிராப்ளம் இல்லை என டாக்டர் கூறி உள்ளார். என அவளின் நிலையை விளக்கி விட்டு “என்னை மன்னிச்சிடு ருத்ரா” சரியான நேரத்தில் வர முடியாத பாவி ஆகிடேன். கொஞ்சம் லேட்டா வந்திருந்தா உன்னையும் மதியையும் காப்பாற்ற முடியாமல் போயிருக்கும்ன்னு டாக்டர் சொல்லும் போது என்னால என்னை மன்னிக்க முடியல டா”.
என்று இரவெல்லாம் உறங்காது சிவந்த விழிகளுடன் கலைந்த தோற்றத்தில் சிறு பிள்ளை போல் கண்கலங்கி நிற்கும் தன் நண்பனைப் பார்த்து
“எனக்கு ஒன்னுமில்லை டா , ஐ யம் ஆல்ரைட்”
இந்த உயிர் போயிருக்கும்னா இருபது வருஷத்திற்கு முன்னே போயிருக்கும் டா” என்றவனை சப்பென்று அடித்து விட்டான் ரித்விக். இன்னொரு தடவை இந்த மாதிரி பேசுன உன்னை நானே கொன்றுவேன். உன்னை இரத்த வெள்ளத்தில் பார்த்ததும் உயிரே போயிடுச்சுடா எனக்கு ,என்று சொல்லிக் “சை” ஆத்திரத்தில் நானே உன்னை அடிச்சிட்டேன் சாரி டா பிளீஸ் சாரி ருத்ரா ” என கெஞ்சிக் கொண்டு இருந்தவனின் அன்பில் நெகிழ்ந்தவன் அவன் கைகளை ஆதரவாக பற்றி அழுத்திவிட்டு “இட்ஸ் ஓகே டா ” என கூறியவன் சட்டென்று தன் தாயின் நினைவு வந்தவனாக
“ரித்வி நேற்றே அம்மாவை டிஸ்சார்ஜ் பண்ணனும்டா “, தங்கம்மாவை ஊருக்கு போகப் சொல்லிட்டேன், அவங்களை இப்போ யார் பாத்துக்கு வா?… “ஷிட்” அதுக்குள்ள என்னன்மோ நடந்திருச்சு, என்றவனை பார்த்த ரித்வி “அதுக்கு தானே என்னையும் வர சொன்ன. அம்மாவிற்கு கொஞ்சம் நினைவு திரும்பியிருக்குன்னு சொன்னதும் எவ்வளவு சந்தோஷமாக கிளம்பினேன் தெரியுமா?”… என வருந்தியவன். ருத்ரா நீ டைம்க்கு அங்க வரவில்லை என்றதும் டாக்டர் சதாசிவம்
எனக்கு போன் செய்தார்.இன்னும் இரண்டு நாட்கள் மேனேஜ் செய்யுமாறு சொல்விட்டேன். யூ டோன்ட் வொரி டா” ருத்ரா என்றவன் எல்லாம் அந்த மதின்னு பேர் வைச்சிகிட்டு மதியே இல்லாத மாதிரி நடந்ததவளால் தான் என்று மதியை திட்டிக் கொண்டிருந்தவனை மெதுவாக தன் வாய்குள் பேசியவனை ஒரு மெல்லிய சிரிப்புடன்
“ரித்வி மதியை பார்க்கனும் டா” இப்பவே என்ன அவகிட்ட கூட்டிட்டு போ பிளீஸ் என்றவனை பார்த்த ரித்விக், முதலில் டாக்டர் வந்து உன்னைப் பார்க்கட்டும் அப்புறம் அவளை பார்க்க போலாம், கையை ரொம்ப அசைக்காதே என்று முறைத்து விட்டு டாக்டரிடம் சிம்மனுக்கு நினைவு வந்து விட்டது என கூற அவரின் அறையை நோக்கிச் சென்றான்.
இங்கு பிரகாஷ் சர்வேஸ்வரனின் முன்பு பவ்யமாக கை கட்டி நின்று தன்னை தாக்க வந்த சிம்மனை சுட்டு விட்டதாகவும் மதியும் பிழைக்க வாய்ப்பில்லை எனவும் முன்தினம் நடந்ததை தனக்கு சாதகமாக கதை சொல்லிக் கொண்டிருந்தான். தன்னை அவமதித்த சிம்மன் அழிந்தான் என மகிழ்ந்த சர்வேஸ்வர் பிரகாஷை ஜென்ரல் மேனேஜராக ப்ரமோட் செய்தார்.
இவர்களை அழிக்க சிம்மனோடு ரித்விக் கிருஷ்ணா என்ற வேங்கையும் புறப்பட்டு இருப்பதை அறியாமல் “தன்னை எதிர்க்க எவனும் இல்லை என்ற ஆணவத்தோடு சிரித்துக் கொண்டிருந்தார் சர்வேஸ்வரன்.
