தீராத மோகம் தெவிட்டாத தாகம்!!

தீராத மோகம் தெவிட்டாத தாகம்

தீராத மோகம் தெவிட்டாத தாகம்!!

தீராத மோகம் தெவிட்டாத தாகம்!!

தீராத மோகம் தெவிட்டாத தாகம்!!

தீராத மோகம் தெவிட்டாத தாகம்!!

தீராத மோகம் தெவிட்டாத தாகம்!!

தீராத மோகம் தெவிட்டாத தாகம்!!

தீராத மோகம் தெவிட்டாத தாகம்!!

தீராத மோகம் தெவிட்டாத தாகம்!!

தீராத மோகம் தெவிட்டாத தாகம்!!

தீராத மோகம் தெவிட்டாத தாகம்!!

தீராத மோகம் தெவிட்டாத தாகம்!!

தீராத மோகம் தெவிட்டாத தாகம்!!

தீராத மோகம் தெவிட்டாத தாகம்!!

தீராத மோகம் தெவிட்டாத தாகம்!!

தீராத மோகம் தெவிட்டாத தாகம்!!

தீராத மோகம் தெவிட்டாத தாகம்!!

தீராத மோகம் தெவிட்டாத தாகம்!!

தீராத மோகம் தெவிட்டாத தாகம்!!

தீராத மோகம் தெவிட்டாத தாகம்!!

அந்த கல்யாணமண்டபமே அதிர்ச்சியில் உறைந்தது…
கெட்டிமேளம் முழங்க தாலி கட்டும் நேரத்தில் பறந்து வந்து விழுந்தது வீச்சரிவாள்…. தட்டில் இருந்த தாலி பறந்து வந்து உள்ளே வந்தவன் கையில் தஞ்சமடைந்தது..
எல்லோரும் அருவாள் வந்த திசையைப்
பார்க்க.. ஆறடியில் முறுக்கு மீசையில் கண்ணில் ரெளத்திரம் மின்ன, கம்பீரமாக கொஞ்சமும் குறையாது நின்றான் ருத்ர சிம்மன்..
வேகமாக சிம்ம நடை நடந்து உள்ளே வந்தவன்.. மாலையில் கல்யாணக் கலையில் இருந்த மாப்பிள்ளையை எட்டி மிதித்து விட்டு.. பக்கத்தில் நடப்பது புரியாது மிரண்டு முழித்த மணமகள் கழுத்தில் யாரும் எதிர்பாராத நேரம் தாலியை தூக்குகயிறாக கட்டி அவளை தர தரவென இழுத்து சென்று தன் காரில் பின் இருக்கையில் தள்ளியவன் புயல் என கிளம்பி விட்டான்.
தாலி கட்டிய அதிர்ச்சியில் இருந்தவள்.. அவன்
இழுத்துச் செல்வதை கூட உணராதிருந்தாள்..
அவள் சுகமதி… மதி போல் பிரகாசமானவள்… 
 எல்லாம் கண்ணிமைக்கும்
நேரத்திற்குள் நடந்துவிட்ட அதிர்ச்சியில்!!!
“சிம்மா ” என்று அந்த மண்டபம் அதிரும்
 வகையில் கர்ஜித்தார் சர்வேஷ்வர்.மதியின் தந்தை.
சர்வேஷ்வர் கோவையில் மிக முக்கியமான தொழில் அதிபர். அவரது பெண் சுகமதிக்கும் அவரது பிசினஸ் பார்ட்னர் மகன்சிவேஷூக்கும் தான் திருமணம் செய்ய முடிவெடுத்தார். 
ஆனால் ருத்ர சிம்மன் இப்படி நடப்பான் என்று யாரும்
எதிர்பார்க்கவில்லை .
அவன் செய்கையும், அவன் விழி சிந்தும் வன்மும் அவளை பயத்தில் அப்படியே உரய வைத்தது. சற்று நேரத்தில் அதிர்ச்சி தெளிந்து காரை செலுத்தி கொண்டு இருந்தவனின் மேல் படிந்தது . 
யாரிவன்?? எதற்காக இந்த மாங்கல்யம்? எதற்காக தன்னை இப்படி இழுத்து கொண்டு, காரில் எங்கு கூட்டி செல்கிறான்?? என்று பல விடை அறியா கேள்விகள் அவளை வண்டாக குடைய, அவளது யோசனைகளை தடை செய்யும்படியாக ஒரு பெரிய வீட்டின் முன் பகுதியில் இருந்த இரும்பு கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே வந்து காரை நிறுத்தினான் சிம்மன். 

பின் கதவை திறந்து “மகா ராணி நீங்களா இறங்கு ரீங்களா” இல்லை, நான் என்று சொல்லிய வாரே கை பற்றி இழுக்க போக, சட்டென்று சுதாரித்து வேகமாக இறங்கி நின்றாள் மதி. 

அவளை அலட்சிய பார்வை பார்த்த படி , 
கருப்பா, மணி என்று கர்ஜித்தான். அவன் குரலில் நடுநடுங்கி போய் நின்ற மதியை பார்த்தபடி.
அந்த குரலுக்கு பின் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்த அந்த வீட்டு காவல் நாய்கள் இரண்டும் குதூகலத்துடன் தாவி வந்தது. 
ஏற்கனவே பயத்தில் இருந்தவள் நாய்களை கண்டதும் பயத்தில் சிம்மனை பின்புறம் கட்டிக் கொண்டாள்.
அவளது செய்கையை எதிர்பார்க்காத சிம்மன் 
அப்படியே அசையாமல் நின்றான். 
பின்பு நாய்களை போக சொல்லி விட்டு சுகமதி யை
தன்னில் இருந்து பிரித்து எடுத்தான்.அப்போது தான் சிம்மன் மதியை முழுதாக பார்த்தான். ஆம் அவன் அவள் முகம் பார்க்காமல் தான் திருமணம் செய்து இழுத்து வந்தான். அவனை பொறுத்தவரை சர்வேஷ்வர் மகள். அவரை பலி வாங்கவே அந்த திருமணம்.
 
பயத்தில் அவளது “மையிட்ட கண்கள் அலை பாய; செவ்விதழ் நடுங்க, பால் வெண் நிறத்தில் சிவந்த தாமரை போல் பட்டு உடுத்தி, மணமகள் அலங்காரத்தில், தேவலோக ரம்பை என மிளிந்த மதியைப் பார்த்ததும், அவளை ஆட்கொண்டு விட ஆவல் கொண்டது சிம்மனின் ஆண்மை.
தன் மனம் போகும் போக்கை எண்ணி தன் மீதே கோவம் கொண்டு அதை சுகமதி மேல் காட்டினான். அவளை விலகி பிடித்திருந்த கையை சட்டென விட்டு விட்டு வீட்டுக்குள் சென்று விட்டான். மதி அப்படியே தரையில் விழுந்தாள்.
 
விழுந்ததும் தான் பயத்தில் இருந்து வெளியே வந்தவள் அப்பொழுது தான் சுற்றுப்புறத்தை ஆராய்ந்தாள். தப்பிக்க வழி தேடி !!
ஆனால் அவள் கண்களில் பட்டது என்னவோ வழி தெரியாத அளவுக்கு சுற்றி மரங்களும் பிரமாண்டமான வீடும் தான்.
அது ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் வீற்றிருக்கும் மாளிகை போன்ற பண்ணை வீடு. பின்புறம் கிணற்றுடன் கூடிய சுற்றிலும் பெரிய தோட்ட அமைப்பில் இருக்கும். முன்புறம் பல வகை வாசனை மலர்களுக்கான செடிகள். பின்புறம் மா, பலா, வாழை முதல் தென்னை, கொய்யா, மாதுளை என பல கனி வகை மரங்கள் ஓங்கி வளர்ந்திருக்க… இடதுபுறம் காய்கறி, கீரை வகைகள் அந்த வீடும் அந்த இடமும் எப்போதும் ஒரு வித ரம்மியத்துடன் நகரத்தின் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்கும் குட்டி நந்தவனம் தான்.
ஆனால் சுகமதிக்கு இனி அது அசோக வனம் தான். 
ராமனே ராவணன் ஆனால் சீதையின் கதி என்னவோ????

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *