ஒரு சுந்தர வார்த்தை சொல்லடி பைங்கிளி
4. ஒரு சுந்தர வார்த்தை சொல்லடி பைங்கிளி
நியூயோர்க் கிளை….
அவனுக்கு கண்டிப்பாய் தெரிந்தது இந்த அழைப்பு யாரிடமிருந்து வந்திருக்கும் என்று…
ஹாஹா…
இப்பொழுது திரும்பவும் அவனை பெற்ற அப்பாவி ஜீவன்களை என்ன வார்த்தை சொல்லி கடித்து துப்புவது என்று தெரியாத நிலை….
என்னவோ பொண்ணை எவனோ ஒருத்தன் கூட அனுப்பிட்ட மாதிரி ஒரு நாளைக்கு எத்தனை ஃபோன்.
அவங்க பொண்ணை புருஷன் கூட தானே அனுப்பி இருக்காங்க…… நான் பார்க்க மாட்டேனா அவளை….
அய்யா ராசா!!!!!!! தேவா… நீயா இது….
கொஞ்சம் கொஞ்சமா ஷாக் கொடுடா…..
எங்களுக்கு நெஞ்சு வலி வந்துடும் போல இருக்கு…… புருஷனாமே???????? ஹாஹா
குளிச்சியா… சாமி கும்பிட்டியான்னு…. முடில இவங்க கூட…
இப்போ என்ன சொல்ல போறாங்கன்னு தெரியலையே….. ” என்று ஃபோனை அட்டெண்ட் செய்த படியே
அதற்குள் அந்த பக்கம் இருந்த நபர் இவனிடம் அலவளாவ ஆரம்பித்து விட்டார்…
அது தான் இப்போ உங்களுக்கு கூப்பிட்டேன்….
அன்னைக்கு கூட ஏர்போர்ட்ல சாக்லேட் வாங்கி கொடுத்ததை அவ்ளோ சந்தோஷமா சொல்லுச்சி….
நாங்க பாப்பாக்கு அவ்ளோவா இனிப்பு பழக்கினதில்லை அதே போல தான் குளிர்ச்சியான பொருளும்..…..
இப்படி சொல்றது கூட தப்பு தான். கட்டி கொடுத்த பிறகு…..
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு வளத்துட்டோம்….”
காந்திராமன் பெயருக்கு ஏற்றார் போல மிகவும் பொறுமையானவர்….. அவர் பேசினால் வார்த்தைக்கு வலிக்குமோ என்ற அளவில் தான் இருக்கும்….
இந்த இனிப்பு மற்றும் கூல்ட்ரிங்க்ஸ் ஐஸ் தவிர நம் சௌ எது சொன்னாலும் எது கேட்டாலும் உனக்கு வேண்டுமா மகளே இதோ அடுத்த நிமிடம் உனக்கு உண்டு என்று சொல்லும் ரகம்….
ஆனாலும் பெற்றவர் இருவருக்கும் சௌ தான் உயிர் மூச்சே…. இது வரை உறவினர் வீட்டிற்கு கூட பிள்ளையை தனியாக அனுப்புயதில்லை….
இங்கு இவனுக்கோ ஒரு ஆண் மகன் அதிலும் வயதில் பெரியவர் கண் கலங்கும் படி பேசுவது புதுமையாக இருந்தது…..
அதே போல் ஒருவருக்கு சமாதானம் சொல்லி அவரை அமைதி படுத்துவதும் புதிது…..
“நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க… அவளை நான் பார்த்துக்கிறேன்…..”
என்று ஆயிரம் சமாதானம் சொல்லி அந்த பெற்றவரை அமைதி படுத்தினான்….
ஆமாம்!! ஆமாம்!!! இருக்காதே பின்னே…. சின்னதிலிருந்தே யாரிடமும் ஒட்டாமல் வளர்ந்தவன் ஆயிற்றே….
அவனை சொல்லியும் குற்றமில்லை….
அதற்காக பெண் பிள்ளைகளை கொண்டாடவில்லை என்று அர்த்தம் இல்லை…. அவர்களும் பெற்றவர்களுக்கு பிரியமானவர்கள் தான்….
விடுமுறை தினங்கள் கூட ஏதேனும் ஒரு சிறப்பு வகுப்பு என்று அவனை செப்பனிடுவத்திலேயே இருந்தனர்…
அவனும் எந்த வகுப்பிற்கு சென்றாலும் அவன் தான் தினித்துவமாக தெரியும்படி தேர்ந்து வருவான்…..
அதில் பெற்றவர்களுக்கும் உடன் பிறந்தவர்களுக்கும் கூட இடமில்லை என்கிற நிலை……
ஒட்ட முடியவில்லை…. பாவம் என்ன செய்ய….இதில் யாரை குற்றம் சொல்ல..
தன்னுடைய உலகத்தில் யாரையும் அனுமதிக்க வில்லை….
கேட்ட நேரத்தில் அளவில்லாத பணமும் சுதந்திரமும் அவனுக்கு இன்னொரு பிளஸ்….
அவனின் தேவைகளையாவது பூர்த்தி செய்வோம் என்று அவன் கேட்கும் முன்பே அவனுக்கு வேண்டிய பொருளாதார நிலையை அமைத்து கொடுத்தனர்….
அந்தளவு உயர்ந்து விட்டான்…
மாத வருவாய் லகரங்களிலும் ஆண்டு வருவாய் கோடிகளிலும்……
பெற்றவர்களுக்கு இவன் இங்கு என்ன செய்கிறான்… எந்த பணியில் இருக்கிறான்….என்ன சம்பளம்….
ம்ஹூம் ஒன்றும் அறியாத நிலை….
அதனாலேயே இங்கேயே இருந்து விட்டான் என்பது வரை தான் தெரியும்…
“தேவ், ஷால் வீ ஸ்டார்ட்” என்று அவனின் கதவை தட்டி கூப்பிட்டதும் தான் நிஜம் கண் முன் விரிந்தது…..
ஓவர் பாச மழையா இருக்கு….. எப்படி தான் இப்படி இருக்காங்களோ…….என்ற அலட்சியம் தானாக வந்து ஒட்டிக்கொண்டது…
ஆனால் அதே எண்ணத்திலேயே உழன்று கொண்டிருந்தால் அவன் நம் தேவா இல்லேயே…
‘நம்ம ஆளு வேலைன்னு வந்துட்டா தீயா மாறிடுவாறு… ஹாஹா…’
வேற எதுக்குங்க….. பார்ட்டிக்கு தான்…..
எல்லோருக்கும் வரும் வாரத்தில் விடுமுறை நாளில் ஒரு ஹோட்டல் பெயரை சொல்லி அங்கு உள்ள பார்ட்டி ஹாலில் மாலை நேரத்தில் ஒன்று கூடும் படி சொல்லி விட்டு வெளியேறினான்…..
அவர்களின் ஒட்டு மொத்த குரலும்
“என்னடா இது நம்மை பார்த்து இப்படி ஆச்சர்யமா கேள்வி கேட்டுட்டு போரானுங்க???? கல்யாணம் பண்ணது ஒரு குத்தமாய்யா” என்று அவனையே நினைக்க வைத்து விட்டார்கள்…..
ஹாஹா…..
ஆனால் அவர்களின் சகாக்கள் நினைப்பது போல் ப்ளே பாய் எல்லாம் இல்லை இவன்…. ஆனால் அப்படி ஒரு பிம்பம் பதிந்து விட்டது அவன் மேல்….
என்னமா நீ இப்படி குழப்புரியே அப்படின்னு நீங்க என்னை தாளிக்கிறது எனக்கு கேட்குது….. என்ன பண்றது…. பய புள்ள ரொம்ப ரொம்ப வித்யாசமான கேரக்டர் ஆச்சே….
அய்யாவுக்கு சின்ன வயசுல இருந்து ஒரு சின்ன காம்ப்ளக்ஸ்… என்னன்னு கேட்குறீங்களா….. அவன் வீட்ல எல்லாருமே திராவிட நிறம்ங்க…..
என்ன கொஞ்சம் கொஞ்சம் ஷேட் தான் வித்தியாச படுமே தவிர……
அவனுக்கு ஃபாரின் பொண்ணுங்க இன்னும் அலர்ஜி….
அவருக்கு இந்தியன் பொண்ணுங்கன்னா தான் ரொம்ப புடிக்கும்… முக்கியமா சவுத் இந்தியன் பொண்ணுங்க…. ஆனா அந்த லிஸ்ட்ல தமிழ் பொண்ணுங்க மட்டும் இல்லவே இல்ல……..
முக்கியமாக மொழி பிரச்சனை இருக்காது….
அப்படி சந்திக்கும் போது இவனிடம் காதல் சொல்லியவர்கள் ஏராளம்….
ஆனால் இவன் அசைந்து கொடுக்க மாட்டான்…ஒரு சின்ன சிரிப்புடன் கடந்து விடுவான்…
அவனிடம் மிகவும் அந்தரங்கமாக பழகிய பெண்கள் சிலர்… அவனை பற்றி அவனிடமே அடிக்கும் கமெண்ட்….
ஆம். அவனை வசியப்படுத்துவது என்பது மிக மிக கடுமையான டாஸ்க் தான் அவனிடம் மயங்கிய பெண்களை பொறுத்தவரை…..
அதனால் தான் ஒரு ப்ளேபாய் இமேஜ் அவனுக்கு… நான் அப்படி இல்லை என்று யாரிடமும் போய் விளக்கவேண்டும் என்று அவசியமில்லை என்பது அவனின் எண்ணம்…
கட்டி அணைப்பதோ முத்தம் கொடுப்பதோ அவனுக்கு தவறாக தோன்றியதில்லை….
வெகு சாதரணமான ஒன்று…. அதுவும் ஆபிஸில் அடிக்கடி நிகழும் நிகழ்வு….
இப்படி ஒரு நிகழ்வு இனி தொடருமா தொடர்ந்தால் என்ன என்ன எதிர்வினை வரும் என்று பார்ப்போம்…..
தேவா உள்ளே ஒரு ஃபுள் ஹாண்ட் டீ ஷிர்ட் ஒரு காஸ்டலி ஜீன் மேல ஒரு மிகவும் பிரபலமான ஆடை நிறுவனத்தின் காஸ்டலியான ப்ளேஸர்…..ஷூ, கையில் சிறிய அளவில் ஒரு பிளாட்டினம் ப்ரஸ்ட்லெட்….
நம் சௌ குட்டி அழகானதொரு பிங்க் நிற டிசைனர் புடவையில் அவளுக்கு ஏற்றார் போன்று குட்டி குட்டி அணிகலன் அணிந்து….
வேற என்னங்க பண்றது…. நம்ம ஊரா பூ கிடைக்க….
கையில் தங்க வலயல்களுடன் புடவையின் கலருக்கு ஏற்றார் போல் கண்ணாடி வளையல்கள் அணிந்து கண்ணிற்கு மை தீட்டி உதட்டிற்கு லிப்கிளாஸ் போட்டு நிஜமாகவே தான் ஒரு குட்டி தேவதை தான் என்பது போல் தயாராகி இருந்தாள்…..
திகைக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றறியாது…
