ஒரு சுந்தர வார்த்தை சொல்லடி பைங்கிளி
12. ஒரு சுந்தரவார்த்தை சொல்லடி பைங்கிளி
சொன்னது போலவே தேவ் சௌமியை வெளியில் அழைத்து வந்திருந்தான்…இன்னும் இரண்டு தினங்களில் திரும்பவும் அவளை பிரியும் நெடுந்தூர பயணம்… இதற்கு முன்னும் இரு நாட்கள் அவளை பிரிந்திருக்கிறான் வேலை நிமித்தமாக… ஆனால் அப்பொழுது தோன்றாத ஒரு உணர்வு…
ஏனோ இந்த முறை இன்னும் இரு நாட்கள் கூடும் போல் உள்ளது எனும் பொழுது நெஞ்சை அழுத்தும் உணர்வில் தத்தளிக்கிறான்… அந்த பிரிவின் போது இவளுடன் கழிக்க போகும் இந்த இன்பமயமான தருணங்களின் நினைவுகள் அவனுக்கு அவசியம் என்றே தோன்றியது… அதனை கொண்டே இந்த பயணம்….
காரில் பக்க இருக்கையில் முகத்தை இவன் பக்கம் கூட திருப்பாமல் அமர்ந்து வரும் தன் பூனை குட்டியை நினைத்து உள்ளுக்குள் சிரிப்பு தான் வந்தது அவனுக்கு…
மனத்திலோ உன்னை எப்படி வழிக்கு கொண்டு வரனும்னு எனக்கு தெரியாதாடி என் செல்ல பூனை…
ஒரு சாக்லேட் பார் வாங்கி கொடுத்தா போதும் வந்து என் கூட ஒட்டிக்கிட்டு ‘ஐ மாமா…எவ்ளோ பெரிய சாக்லேட்ன்னு ரொம்ப தான்க்ஸ் மாமான்னு பச்சக்குன்னு ஒன்னு கன்னத்தில வைப்பா’ என்ற சுகமான நினைவுகளுடன் பயணமானான் அவளுடன் ஊர் சுற்றி பார்க்க…
இப்பொழுதெல்லாம் தன் பணி முடித்து வந்து வீட்டினுள் நுழையும் போதே அவளின் முகதரிசனம் கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் தான் வருகிறான்… ஆனால் சௌ குட்டிக்கு அவனின் நிலை புரிந்தால் தானே… அவன் வரும் வேளையில் ஒன்று கிச்சனில் இருப்பாள்… இல்லையேல் பெட் ரூமில் அவளின் மொபைலில் ஏதாவது ஒரு கார்ட்டூனில் மூழ்கியிருப்பாள்…
தேவ் ஆஃபீஸ் செல்லும் பொழுது ஒரு லேப்டாப் எடுத்து சென்றாலும் வீட்டினிலும் ஒன்று வைத்திருந்தான்… மிகவும் முக்கியமான பேக்அப் டேட்டாஸ் மற்றும் கான்ஃபிடென்ஷியல் ஃபைல்கள் எல்லாம் அதில் தான் சேமித்து வைத்திருந்தான்…
அன்று தேவ் வீட்டிற்குள் வரும் போது அவனின் லேப்டாப்பில் அவள் வீடியோ பார்ப்பதை பார்த்து அவனின் இதம் எல்லாம் காணாமல் போக “ஏ அரைக்காப்படி!!!!!! என்னடி பண்ற… உனக்கு எத்தனை முறை சொல்றேன்… அந்த லேப்டாப் எடுக்காதே… அதுல ரொம்ப ரொம்ப முக்கியமான ஃபைல்ஸ் எல்லாம் இருக்கு அப்படின்னு… ஒரு முறை சொன்னா கேட்க மாட்டியா நீ… கொஞ்சம் கூட பொறுப்பில்லை… சொல்ற பேச்சும் கேக்குறது இல்ல… எப்போ பாரு விளையாட்டுதனம்…” என்று அவன் எப்பொழுதும் போல் வசை மாரி பொழிய தொடங்க… பூனை குட்டியின் முகம் எலிக்குட்டியின் முகம் போல சுண்டி விட்டது…வீடியோ பார்த்து உண்மை தான்…
ஆனாலும் ரோஷத்துடனும் கண்ணில் கண்ணீருடனும் “போதும் நிறுத்துங்க மாமா… சும்மா சும்மா ஏசிக்கிட்டே இருக்கீங்க… நான் ஒன்னும் வீடியோ பார்க்கல… நீங்க தானே நான் இன்னும் படிக்கணும்னு சொன்னீங்க… அது தான் அடுத்து என்ன படிக்கலாம்… எப்போ அப்ப்ளிகேஷன் எல்லாம் தர ஆரம்பிக்கிறாங்க… எந்த காலேஜ்ல எந்த கோர்ஸ் நல்லா இருக்கும்னு பார்த்திக்கிட்டு இருந்தேன்… நீங்க சொன்னதை தானே நான் செய்றேன்… அதுக்கு இப்படி கேப் விடாம ஏசிக்கிட்டே இருக்கீங்க… போங்க போங்க… உங்க பேச்சு க்கா…” என்று சொல்லி லேப்டாப்பை மூடி ஓரமாக வைத்து விட்டு தலையணையை கட்டி கொண்டு கவிழ்ந்தடித்து படுத்துக்கொண்டாள்…
‘என்னவோ படிப்பின் மேல் ரொம்பவும் அக்கறை போல தான்… ஹாஹா… ‘
இவளின் ஓவர் ரியாக்ஷன் பார்த்து தேவ்விற்க்கே குழப்பம் ஆகிவிட்டது… “என்னடா இது… தேவையில்லாம ரொம்ப திட்டிட்டோமோ” என்று…
இப்படி எண்ணம் ஓடி கொண்டிருந்தாலும் கைகள் அதன் பாட்டிற்கு தன் வேலையை செய்து கொண்டிருந்தது… அவள் அப்படியே மூடி வைத்த லேப்டாப்பை எடுத்து ஒழுங்காக ஷட்டவுன் செய்து அதன் இடத்தில் வைத்து தானும் உடை மாற்றி ரெப்ஃரெஷ் ஆகி வரும் வரையிலும் அவள் படுத்த நிலையிலுருந்து இம்மி அளவிலும் நகரவில்லை…
நல்ல வேலை… அவன் உடை மாற்றும் பொழுது அவள் பார்க்கவில்லை… இல்லையென்றால் அவனை ஒரு வழி படுத்தி எடுத்திருப்பாள்… அவளின் தந்தை தவிர வேற்று ஆண்களை சட்டையில்லாமல் பார்த்ததில்லை ஆதலால் அவனின் ஃபுல் ஃபிட் எக்சர்சைஸ் உடம்பை ஒரு நாள் அவன் ஆஃபீஸ் கிளம்பும் போது உடை மாற்றி கொண்டிருக்கையில் பார்த்திலிருந்து அவளுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும்…”ஐ மாமா எப்படி இப்படி உடம்பு வச்சுற்றுக்கீங்க… செம்மயா இருக்கு… கொஞ்சம் சொல்லுங்க மாமா… அப்பாவுக்கும் சொல்லனும்… அப்பா ரொம்ப ஒல்லியா இருக்காங்க… ஒல்லியா இருந்தாலும் குட்டியா ஒரு தொப்பை கூட இருக்கும்… உங்களுக்கு தொப்பையே இல்ல…” என்று ஏதோ திருவிழாவை சுற்றி சுற்றி பார்க்கும் சிறுமி போல் அவனின் உடலை பார்த்து கொண்டிருந்தாள்…
பார்வையால் மட்டுமில்லாமல் கைகளாலும் அலைந்து கொண்டிருந்தாள் அவன் மேனியில்… அன்றிலிருந்து அவன் உடை மாற்றும் போதோ இல்லை உடுத்தும் போதோ இவள் பார்த்து விட்டால் அவ்வளவு தான்…
ஏதோ செல்ல பிராணியை தொட்டு தொட்டு தடவி விளையாடும் குழந்தை போல அவனின் சிக்ஸ் பேக்கில் ஆரம்பிக்கும் அவளின் விரல்களின் ஊர்வலம் ஒவ்வொரு படியாக கீழிறங்கி அவனின் ஒட்டிய வயிற்றில் முடிந்து திரும்பவும் மேலேறி அவனின் தேக்கு மர தோள்களில் பதிந்து முறுக்கேறிய புஜங்களில் அழுத்தம் கொடுத்து… என்று ஒரு சிறு பிள்ளையின் குதூகலத்துடன் செய்யும் செயல்களில் இவன் தான் தன் மேனியில் ஊரும் அவளின் கைகள் கொடுக்கும் சிலிர்ப்பில் மயிர்கூச்செறியும் சுக அவஸ்தையில் மேனி கொதிக்க அவள் கைகள் மட்டும் உணரும் தன்னுடைய அங்கங்களை அவளின் அங்கங்களும் உணர செய்ய வேண்டும் என்று கனன்று எரியும் ஆசை தீ வீறு கொண்டு எழும்ப என்ன செய்து இந்த உணர்வை கட்டுப்படுத்த என்று தெரியாமல் தவிப்பான்…
அது போல் ஒரு நிகழ்வு இப்பொழுது நிகழாமல் இருந்தது அவனிற்குள் சிறு நிம்மதியையும் ஆனால் அவள் தன்னை பார்க்காததால் இதுவரை அவளின் ஸ்பரிசதையாவது அனுபவித்து வந்த அவனின் மெய் அது வேண்டும் என்று ஆடம் பிடித்ததால் வந்த எரிச்சலும் ஒன்று சேர தேவ்வின் நிலை அவனுக்கே விளங்காது தவித்தான்…
சௌவ்வை பார்க்க இன்னும் எழாமல் இருந்தாள்… அவளின் அருகில் சென்று அவளை தொட்டு எழுப்பி பார்க்க அப்படியே தூக்கி விட்டிருந்தாள் அவனின் மியா பூனை குட்டி… சாப்பிடாமல் படுத்தால் இரவில் சரியாக உறங்க மாட்டாள் தன்னையும் உறங்க விட மாட்டாள் என்று புரிந்து அவளை எழுப்பி கெஞ்சி கொஞ்சி சமாதானப்படுத்தி இரவு உணவு உண்ண அழைத்து வந்தான்… எல்லாவற்றையும் தயாராகவே வைத்திருந்தாள்…
உணவு வேளையின் போது தான் அவளிடம் சொல்ல வந்த விஷயம் ஞாபகமே வந்தது அவனுக்கு… “நாளைக்கு வெளிய போறோம் மியா… சோ கெட் ரெடி இயர்லி ஓகே…” என்று சொல்ல முகத்தை உம்மென்று வைத்து கொண்டு தலையை மட்டும் ஆட்டினாள்… அவனின் மீது கோபமாம் தேவ்வின் செல்ல பூனைக்கு…
மறுநாள் வீட்டில் இருந்து கிளம்பும் முன்னர் நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகள்…. யாருக்கு என்று நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா என்ன…
நம் சௌ குட்டி தான் வெளியில் செல்ல வேண்டும் என்றால் அழகாக பொம்மை போல தயாராகி விடுவாளே… அதே போல் இன்றும் அழகாக ஒரு அனார்கலி சுடி போட்டு தலை முடியை தளர்வாக பின்னி அவள் போட்டிருக்கும் சுடிக்கு ஏற்ப அழகான டிசைனர் கண்ணாடி வலயல்களுடன் முகத்திற்கு கிரீம் போட்டு நெற்றியில் ஒரு கல் வைத்த பொட்டு உதட்டிற்கு லிப் க்ளோஸ் என்று கச்சிதமாய் ரெடி ஆகி அவன் முன் சென்று தான் கிளம்பி விட்டதாக அறிவிப்பு கொடுக்கும் வகையில் சென்று நிற்க…
தேவ் இவளின் அழகில் அசந்து நின்றாலும் இப்பொழுது இன்னும் கொஞ்சம் குளிர் கூடி இருந்ததால் அவளின் உடை தான் அவனுக்கு உறுத்தியது…
“என்ன மாமா அப்படி பார்க்குறீங்க…”
“மியா… அன்னைக்கு நான் உனக்கு வாங்கி கொடுத்த ட்ரெஸ் எல்லாம் எங்க… போய் மாத்திட்டு வா… வெளிய குளிர் அதிகமா இருக்கு… அதுக்கு இது செட் ஆகாது… போ…” என்று அவன் இயல்பை மீறி தன்மையாகவே சொல்ல… உடனே நம் சௌ குட்டி சொன்னதை செய்யும் ராகமா என்ன… அவனிடம் வாங்கி காட்டாமல் இருக்க முடியாதே அவளுக்கு…
“போங்க மாமா… இன்னைக்கு வெளிய போறோம்னு எவ்வளவு ஆசையா இது போட்டேன்… இது வரைக்கும் போடவே இல்ல… புதுசு மாமா இது… ப்ளீஸ் மாமா… மேல நீங்க வாங்கி கொடுத்த கோட் மட்டும் போட்டுகிறேன்… ஆனா இதுவே இருக்கட்டும் மாமா… ப்ளீஸ்” என்று பல ப்ளீஸ் போட்டு அவனை ப்ளீஸ் செய்ய முயல
ம்ஹூம்… எங்கே அவன் அசைந்து கொடுத்தால் தானே… “சொல்றதை எதுவும் கேட்க கூடாதுன்னே இருக்கியா… உன் ஹெல்த் கண்டிஷன் தெரியும்ல… அப்புறம் என்னடி பிடிவாதம் உனக்கு… இது சரி பட்டு வராது… நீ வா… “என்று அவளை அறையினுள் இழுத்து சென்று அவளின் உடைகள் அடுக்கி வைத்திருக்கும் கப்போர்டில் தேடி எடுத்து…
இந்த ட்ரெஸ் ஒழுங்கா போடு… என்று சொல்லி வெளியில் கொஞ்சம் நேரம் காத்திருக்க இன்னும் சௌ வெளியில் வந்த பாட்டை காணோம்… கடிகார முட்கள் நிற்காமல் நகர்ந்து கொண்டே இருக்க தேவ்வின் பொறுமையும் கரைந்து கொண்டிருந்தது…
இன்னும் சற்று நேரத்தில் அவள் அவனை தினரடிக்க போகிறாள் என்பதை அறியாமல்…
“மியா என்ன பண்ற… ரெடியா” என்று கேட்க பதில் இல்லை… என்ன தான் செய்கிறாள் என்று பார்க்க… அப்பொழுது தான் உடை மாற்ற ஆரம்பித்திருந்தாள்… மேலெ ஸ்லிப்ஸ் மற்றும் கீழே தொடையை கவ்வி பிடித்திருக்கும் ஷார்ட்ஸுடன் நின்று கொண்டு அவன் வாங்கி கொடுத்தவற்றை எப்படி அணிவது என்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தாள் இவன் உள் வந்ததை அறியாமல்…
இவன் தான் அவள் நிற்கும் நிலை கண்டு சிலையாகி நின்றான்… ‘ஏற்கனவே நான் தவிச்சு வெந்து போய்க்கிட்டு இருக்கேன்… இப்படி எல்லாம் மனுஷனை உசுப்பேத்தி கொல்றாளே முடில… இன்னைக்கு கண்டிப்பா வெளிய போய் தான் ஆகனுமா… தேவா கன்ட்ரோல் கன்ட்ரோல்…
நான் எங்கடா கன்ட்ரோல் பன்றது… இப்போ எல்லாம் இவளை பார்த்தாலே ஆட்டோமேட்டிக்கா ஹார்மோன்ஸ் உள்ளுக்குள்ள குத்தாட்டம் போடுது… இதுல இவளும் சேர்ந்து என்னை கதி கலங்க வச்சா நான் பாவம் தானே…’
தான் ஒருவனை பித்தாக்கி கொண்டிருக்கிறோம் என்று அறியாமல் “மாமா… மாமா…” என்று அவன் அருகில் சென்று கத்தி அழைத்து அவனை மீட்டெடுத்தாள் அவனின் மனையாள்… “இத்தனை ட்ரெஸ் இருக்கு… இதை எப்படி போடுறதுன்னு சொல்லி கொடுங்க… எனக்கு எது முதல்ல போடணும் அடுத்து எது போடணும்னு தெரியல…”
முதலில் ஒரு காட்டன் பேன்ட் போட செய்து அவளின் ஸ்லிப்ஸ் மேல் ஒரு மெல்லிய டீஷிர்ட் அதன் மேல் இன்னொரு ஷிர்ட் மற்றும் காட்டன் பேன்டின் மேல் ஒரு ஜீன் என்று தேவ் சொல்ல சொல்ல அவள் அணிந்து கொண்டே வந்தாள்… ஜீன்ஸை போட்ட பிறகு… “என்ன மாமா இது… இந்த பேன்ட்ல நாடாவே இல்ல… ஏதோ பட்டன் மாதிரி இருக்கு இது எப்படி நிக்கும்…” என்று அவனை கேள்வி மேல் கேள்வி கேட்டு கொலையாய் கொன்றாள்… அவனே அவளுக்கு ஜீன் ஜிப்பையும் பட்டனையும் போட்டு விட்டான்… அதற்கும் மேல் ஒரு ஃபர் கோட்டை அணிய செய்து பனிக்கு ஏற்றார் போல் அணியும் ஷூக்களை அவளுக்கு அணிவித்த பிறகே அவனால் ஓய முடிந்தது…
அவனுக்குள் ஏற்படும் ரசாயன மாற்றம் சௌவ்விடம் இருந்ததா என்றால் நிச்சயமாக இல்லை… தன் தாயிடம் எப்படி நடந்து கொள்வாளோ அது போல தான் தேவ் தெரிந்தான்… தேவ்விற்க்கோ முதலில் அவளை கண்ட பொழுது இருந்த தடுமாற்றம் போய் புரியாத குழந்தைக்கு விளக்கம் அளிக்கும் தாயை போல மாறி நின்றான்…
இப்படியான அலப்பறைகள் ஓய்ந்து ஓருவழியாக வீட்டை பூட்டி காரில் கிளம்பி வந்தார்கள்… காரில் வரும் போது தான் மியா பூனை முகத்தை தூக்கி வைத்து கொண்டது… அவளுக்கு பிரியமான உடை அணியவிடவில்லை என்ற கடுப்பில்…
இதை எல்லாம் நினைத்து அவனின் இதழ் ஓரம் ஒரு மந்தகாச புன்னகையுடன் வண்டியை செலுத்தி கொண்டிருந்தான்…
இயற்க்கை எழில் மிகு காட்சிகள் சாலையோரம் கடந்து செல்ல நகரின் சில முக்கியமான இடங்கள் மற்றும் பூங்காக்கள் என்று அவளை அழைத்து வந்து சுற்றி காட்டினான்… ஒவ்வொன்றையும் ரசித்து சிரித்து மகிழ்ந்து என்று அவள் கண்களும் முகமும் காட்டும் பாவங்களில் மொத்தமாக வீழ்ந்து கொண்டிருந்தான் தேவ்… நிறைய போட்டோக்கள் செல்ஃபிக்கள் என்று எடுத்து தள்ளினான்…அவளை தன்னுடைய கை அணைப்புக்குள் இருக்கும்படி பின்னிருந்து அணைத்தபடி கன்னத்தோடு கன்னம் இழைந்தபடி என்று அவளை அவனின் ரசனைக்கேற்ப வளைத்தான்…
இன்னும் சில நாட்களில் இந்த நிழற்படங்கள் மட்டுமே தன்னுடைய துணையாய் இருக்கும் என்று ஏதேனும் அசரீரி கேட்டதோ அவனுக்கு… அது போல் ஏதும் நிகழாமல் இருக்க நாம் வேண்டுவோமாக… ஆனால் அவரவர் விதிப்பயனை அவரவர் தானே அனுபவிக்க வேண்டும்…
