வேள்வி தீயில் வெந்து தணியும் காதலே
3 வேள்வி தீயில் வெந்து தணியும் காதலே !!
விதவிதமாக போட்டோ ஷூட் ,காயத்ரி நொந்து போகும் அளவிற்கு அவனிடம் வசவு வாங்கினாள், அவளுக்கோ அவள் தன் தோளைப் பிடிப்பதும் தன் இடையை பிடிப்பதும் என்று இருப்பது எப்படியோ இருந்தது..ஆனால் அவனோ தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஊரார் கண்களுக்கு ஜோதி ஏற்றி வைக்க கூடாது என்பதற்காக வேண்டுமென்றே அவளோடு ஐக்கியமாய் இருப்பது போல மிகவும் நெருக்கமான போட்டோக்களை எடுப்பதற்கு முட்டுக்கட்டையாக நிற்கும் அவளின் இடையை பிடித்து வலிக்க வைப்பதும், தன் கையோடு கோர்த்திருக்கும் அவள் கையை முறுக்கி..
“ஒழுங்கா வைடி மூஞ்ச , சிரிடி ” என்று தன் இஷ்டத்திற்கு அவளை ஆட்டி விட்டான்.. திருமணம் முடிந்து வலது காலை எடுத்து வைத்து அந்த வீட்டுக்குள் மருமகளாக ,காயத்ரி ராகவாக அடியெடுத்து வைத்தாள்..அமைதியா பொத்திட்டு போனா ராகவுக்கு அழகா நெவர் .. அவளை பிடித்து நிறுத்தியவன்..
“என்னோட பொண்டாட்டி, இந்த வீட்டோட மருமக அப்படிங்கிற அந்தஸ்து எல்லாம், இந்த வாசலுக்கு வெளியே தான்.. இந்த வீட்டுக்குள்ள எப்போதும் போல, நீ எங்க வீட்டு வேலைக்காரிதான் .. நான் உனக்கு முதலாளிதான், கல்யாணம் முடிஞ்சுருச்சுன்னு என்னங்க, ஏனுங்கன்னு கெஞ்சுறது, எங்க அம்மாவா அத்தைன்னு சுத்துறது இதையெல்லாம் இருக்கக்கூடாது …புரியுதா? ..
“ம்ம் …
“முன்ன எப்படி இந்த வீட்டில வேலையெல்லாம் பார்த்துட்டு இருந்தியோ, அதேபோல இப்பவும் பண்ற.. இதுல எந்த மாற்றமும் இல்ல புரியுதா? என்று உள்ளே வந்ததும் முதல் கண்டிஷன் புருஷன் போட …
“சரிதாங்க ..
“ஏய் இப்பதான சொன்னேன்…
“சரிங்க சார் …
“ஆங், குட் கீப் இட் அப் ..”
“என்னடா பட்டுக்குட்டி இப்படி பண்ற”…சிந்து மருமகளுக்கு பாதுகாப்புக்கு வர..
“என்ன பண்ணினேன் ,ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன் சொல்றேன் இதுல என்ன தப்பு .. “
” அந்த புள்ள வீட்டுக்குள்ள கூட வரல அதுக்குள்ள ஆரம்பிக்காதடா… முதல்ல நீ போய் குளிச்சிட்டு வா உனக்கு புடிச்ச குழிப்பணியாரமும், கார சட்னியும் வச்சு வைக்கிறேன்…”
“ம்ம் அவளை கொத்தமல்லி சட்னி அரைச்சு வைக்க சொல்லு “என மாடி ஏறிப் போகும் மகனை பரத்வாஜ் சிந்துவும் மாறி மாறி பார்த்துக் கொண்டனர்.. காயத்ரியோ..
” அப்பாடா!! இத்தோட விட்டான்” என்று பெருமூச்சு விட்டு, வேகமாக தன்னுடைய அறைக்கு போய் எப்பொழுதும் கட்டுவது போல ஒரு சாதாரண நூல் புடவையைக் கட்டிக்கொண்டு சமையலறையில் வேலையை தொடங்கிவிட்டாள்..
போன மச்சான் திரும்பி வந்தான் அடுத்த ஓரண்டையோடு, வந்த ராகவ் , 14 குழிப்பணியாரத்தை தொண்டையில் இறக்கிவிட்டு..
“இத்தனை நாள் வேலை பாக்குற, சம்பளம் வாங்குறதான?
“ஆமாங்க சார்…
“எவ்வளவு ?
“20000 சார்..
“அச்சோ அச்சோ, இந்த அநியாயத்தை கேட்ட நாதி இல்லையா, நான் குவாரியில கிடந்து வெந்து சம்பாதிச்சா, எவளுக்கோ தெண்டம் பண்ணி இருக்க அம்மி, ஆட்டு உரல் போல சுத்தி வர்றியே இதை எல்லாம் என்னன்னு பார்க்க மாட்டியா? “தாயை கண்டிக்க
“அது பட்”
“பட்டு குட்டி , பன்னிக்குட்டின்னு வந்த அம்மான்னு பார்க்க மாட்டேன் கொட்டி விட்டிருவேன், யார கேட்டு அவளுக்கு இவ்வளவு சம்பளம் கொடுத்த ..”
“உன்ன கேட்டுதான்டா …
“ஏதே, என்ன கேட்டியா எப்ப? “
“அதான் ரஞ்சனி கூட போன் பேசும் பேசும் போது நான் 15000 சொன்னேன் ,நீதான்டா 20000 கொடுன்னு சொன்ன…”
“அப்படியா சொல்லி தொலைச்சேன்….
“அப்படியேதான் சொல்லி தொலைச்ச …
“சரி விடு அம்மி , சொன்னதை வாபஸ் வாங்குறேன் .. இன்னையிலிருந்து வேலைக்காரிக்கு 10000 ருபாய் சம்பளம், என் வீட்டுக்காரி வேலை பார்க்க 10000 ரூபாய் சம்பளம் ….
“ம்க்கும் இரண்டும் ஒன்னுதான்டா கிறுக்கு பயலே” என்று சிந்து தலையில் அடித்து கொணடவர்..
“மகாபிரபு!! உங்க கருணையே கருணை, அப்படியே ஆகட்டும், நீங்க சாப்பிடுங்க… மறுபடியும் பத்தை அணகோண்டா வாயில் விழுங்கி விட்டு..
“தெண்டம் தெண்டம்!! காசு எல்லாம் போச்சு..நீ ஒரு நாள் கூட நீ ஒழுங்கா சமைச்சு நான் பார்த்ததே இல்லை .. உப்பு இல்லை ,காரமும் இல்லை என்ன எழவத்தான் சமைப்பியோ தெரியல.. ஒரு நாள் கூட திருப்தியா சாப்பிட முடியல” என்று தட்டில் கை கழுவி வைத்துவிட்டு ஃபோனை எடுத்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்தான்… காயத்ரி எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு, மதியம் பொங்கிய சாதத்தை எடுத்து தட்டில் வைத்து கிச்சனில் ஒரு மூலையில் அமர போக.. சிந்து பதறி போய் அவளை எழுப்பப் போனார்..
“என்னம்மா நேத்து வரதான் நீ இந்த வீட்டு வேலைக்காரி.. அப்படி சொல்ல எனக்கு மனசு வரலதான் இருந்தாலும், அந்த நாய் உன்ன வீட்ல விட்டு வைக்க மாட்டானேங்கிற பயத்துல அவன் போக்கில் விட்டா, நீ இன்னைக்கும் அதே போல போய் தரையில உட்கார்ந்து சாப்பிடுறியே,” ராகவுக்கு மூக்கு வேர்த்து விட்டது ..
“அம்மீஇஇஇஇ உனக்கு வேற நான் தனியா சொல்லனுமா வீட்டுக்கு வெளியே தான் அவ மருமக .. எப்பவும் எப்படி சாப்பிடுவாளோ அப்படியே சாப்பிடட்டும் சும்மா அவளுக்கு கொடி பிடிக்க நினைக்காத … ஏய் சாப்பிட்டுட்டு நல்லா இஞ்சி தட்டிப்போட்டு டீ கொண்டு வா ..”
“சரி சார் “என்றுவிட்டு காயு வேக வேகமாக சோற்றில் பழைய குழம்பை உற்றி சாப்பிட ஆரம்பித்தாள் சிந்துவுக்கு குமுறிகொண்டு வந்தாலும் ஓவர் பிளோவாகி விட்டால்.. மகன் வீட்டை காலி பண்ணி போய் விடுவான் .. ஏற்கனவே இரண்டு தடவை இதே போல காயத்ரிக்கு சப்போர்ட் பண்ணப் போய், அந்த மலைமாடு பத்து நாட்கள் போய் கெஸ்ட் ஹவுஸில் தங்கி கொண்டான் .. அதன் பிறகு அங்கபிரதட்சனை பண்ணி, காலில் கையில் விழாத குறையாக விழுந்துதான் அவனை இழுத்துக்கொண்டு வந்து வீட்டில் போட்டிருந்தார்கள்…
இரவு அனைவரும் படுக்க ரெடியாக… சிந்து மருமகளை அழைத்து
“காயு இந்தா ராகவ் ரூம் போ என பால் சொம்பை மருமகள் கையில் கொடுத்தார்..
“மேடம் அது …
“ப்ச் அவன்தான் இல்லையே வாய் நிறைய அத்தைன்னு சொல்லு …
“சரிங்க அத்தை, இது வேண்டாமுங்க…. நான் இங்கேயே ஓரமா படுத்துக்கிறேன் … “அவள் குளிக்க வாங்க தனி அறை உண்டு, ஆனால் உள்ளே படுக்க விடாது, அந்த அதிசய ஜந்து …
“வேலைக்காரிக்கு தனி ரூம், கிழிஞ்சு போகும் … ஹால்ல படுக்க சொல்லுங்க, இல்ல, கிச்சன்ல படுக்க சொல்லுங்க “என்று சொன்னதுதோடு விடாது .. தலையணையை எடுத்து கொண்டு ஹாலில் போட்டு விட்டு போனவன் …தன் அறையில் அவளைச் சேர்ப்பானா? அதனால் வந்த வந்த தயக்கம் ..
“அம்மாடி வாங்கு , அவன் வராதன்னு சொன்னா இந்த ரூம்ல படு … “
“ம்ம் சரி அத்தை” காயத்திரி சொம்பை வாங்க போக, பால் சொம்பு வானத்தில் பறந்து அவள் மீது பால் அபிஷேகம் நடந்தது …
“வேறு யாராக இருக்க கூடும்? அவள் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு காட்டேரி பயதான்…
“டேய் ராகவ்இஇஇஇஇ …..
“ஸ்ஊஊஊஊஊ ஏய் அவங்கதான் புரியாம தர்றாங்கன்னா நீ வாங்குற “… அவள் மாமியாரை காப்பாத்துங்க என்பது போல் பார்வை பார்க்க..
“ராகவ் நான்தான் டா…
“உங்கள சும்மா இருக்க சொன்னேன்.. இது புருஷன் பொண்டாட்டி பிரச்சனை, ரூம்ல போய் லாக் பண்ணிட்டு தூங்குங்க… பரத்வாஜ் வந்து மனைவியை அழைத்து கொண்டு உள்ளே போய்விட்டார் ..
“ஏங்க அவன்…
“ஸ்ஊஊஊஊஊ காலையில வேலைக்காரனின்னு சொன்னான் , இப்ப அவனே பொண்டாட்டிங்கிறான் இதுல நாம எதுக்கு இடையில சொல்லு …”
“ஆனா காயு பாவமே…
“பாவம்தான் , அவளை எதுவும் பண்ண மாட்டானனு எனக்கு நம்பிக்கை இருக்கு ..”
“எனக்கு சத்யமா நம்பிக்கை இல்லைங்க…
“நாம ஏதாவது பேசினா ,அதுக்கும் சேரதது அவள போட்டு வதைப்பான் தேவையா ?”..
“அது என்னவோ உண்மைதான் ,நம்ம கையால அந்த புள்ள வாழ்க்கையை அழிச்சிட்டோம் ,அதுதான் எனக்கு கவலையா இருக்கு” … அழுத மனைவியை சமாதானம் பண்ணிப் படுக்க வைத்தார்
இந்த பேயிடம் இரக்கம் இல்லாமல் தனியாக விட்டு செல்கிறார்களே என்று முகத்தில் வடிந்த பாலை கூட காயத்ரி துடைக்காது ராகவ்வை பார்த்தபடி நிற்க..
“என்னடி இவனால முடியாதுன்னு கிண்டல் பண்ண வேணும்னு பாலை வாங்கிட்டு வந்து என்ன சுரண்டி விட பார்க்கிறியா…. “
“இல்லை அத்தை சாரி மேடம்தான்” ..திருத்தி கொண்டாள் திருவாலிக்காத்தான் வாய் இல்லாது ஆக்கி விடுவானே..
“அத்தை சொன்னா சீவி சிங்காரிச்சு என்கூட வருவியோ”…. அவள் அமைதியாக குனிந்து கொள்ள…
‘இவர்தான் மாட்டேன் மாட்டேன்னு கதறுன என்னை கல்யாணம் கட்டிகிட்டு, என்னவோ இப்போ நான் மயக்கி அவர கல்யாணம் கட்டிக்கிட்ட மாதிரி பேசுறார் ‘என்று மனதில் புலம்பிக்கொண்டு கையைப் பிசைந்து கொண்டே அவனை எவ்வளவு நேரம் தான் பார்க்க .. ராகவ் சிறிது நேரம் அவளை சுற்றி சுற்றி வந்தான் .. அவள் உடலை ஒவ்வொரு இஞ்சாக பார்த்துவிட்டு..
“எனக்கு உன்னை பிடிக்கவே செய்யாதே, எதுக்கு உன்ன கல்யாணம் பண்ணி இருக்கேன்னு யோசனையாய் இருக்கா? என்றதும் அவள் தலையை நிமிர்த்தி ராகவ்வை பார்க்க…
“வேற ஒன்னும் இல்ல என்னோட சோதனை எலி நீதான் … என்னால முடியுமா? முடியாதான்னு உன்ன வெச்சுதான் டெஸ்ட் பண்ண போறேன்.. காயத்ரி எச்சில் விழுங்கினாள்..
“பயமா இருக்கா , ஒனனும் பீல் பண்ணாத ஹனி .. என்னால முடிஞ்சதுன்னு வச்சுக்கோ ,உன்ன கழட்டி விட்டுட்டு ஏன் வசதிக்கு தகுந்த மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் கெட்டி வாழப்போறேன்.. ஒருவேளை முடியலன்னு வச்சுக்கோ கடைசி வரைக்கும் நீ என் கூட தான் இருந்தாகணும்… “அவள் என்னடா இது வம்பா போச்சு என்று பார்த்து வைத்தாள் ..
“சோ ஹனி டியர் , அதனால சீக்கிரம் முதலாளிக்கு முடியட்டும்னு , நீ எல்லா கடவுள்கிட்டேயும் வேண்டுகிற , வேண்டுவ தான..
“ம்ம் …
“என்ன வேண்டுவ?…
“முதலாளிக்கு சுகமாகட்டும்..
“ஏய் நான் என்ன சாகவா கிடக்கிறேன், மேட்டர் பண்ண முடியட்டும்னு வேண்டு ..எப்படி வேண்டுவ சொல்லு பார்ப்போம் …
“அது அது..
“ப்ச் சொல்லு மாத்தி சொல்லி சோதனை தப்பா போச்சுன்னா ,என் வாழ்க்கை என்னாகிறது சொல்லு சொல்லு …
“முதலாளிக்கு அது பண்ண முடியட்டும்…
“அது இதுன்னா எதுடி.. கடவுளுக்கு ஆயிரம் அப்ளிகேஷன் வரும் ,, எதுன்னு கன்ப்யூஸ் ஆகி என்ன டீல்ல விட்டிற போறார் …சோ ஒழுங்கா சொல்லு..”
“என் முதலாளிக்கு…
“சின்ன முதலாளிக்கா ,பெரிய முதலாளிக்கான்னு சேர்த்து சொல்லு… நீ பாட்டுக்கு குண்டக்க மண்டக்க வேண்டி , எனக்கு தம்பி வந்துட போகுது, பிள்ளை வளர்க்கிற வயசுல தம்பி வளர்ததா நல்லாவா இருக்கும் ஒழுங்கா ப்ளோவா சொல்லு..”
“ம்ம் என் சின்ன முதலாளிக்கு…
“இரு இரு ராகவ் பரத்வாஜ்ஜையும் சேர்த்துக்க, அப்படியே இடையிடையே அவர் நல்லவர் வல்லவர்னு அதையும் சேர்த்துக்க, மானே தேனே போட்டுக்கிட்டாலும் சரிதான் ஆங் இப்போ சொல்லு ….”
“ம்ம் என் சின்ன முதலாளி ராகவ் பரத்வாஜ் சாருக்கு மேட்டர் பண்ண தெம்பு கொடு ஆண்டவான்னு வேண்டிக்கிறேன் ஓகேவா…”
“டபுள் ஓகே போய் தோப்புகரணம் போட்டு வேண்டு.. நான் என்ன பண்ணுவேன் தெரியுமா, நீ ஒழுங்கா தோப்புகரணம் போடுறியான்னு பார்க்கிறேன். இதையே சொல்லி சொல்லி போடு” என்று அவளை தூக்கி கொண்டு சாமி முன்னால் விட்டவன்… அவள் அய்யோ அம்மா என்று அதை சொல்லி கொண்டே தோப்புகரணம் போட ..
“மேட்டரை அழுத்தி சொல்லு டார்லிங், சாமி காதுல விழாம போயிடாம” என்று சிப்ஸை தின்று கொண்டே, தப்பும் தவறுமாக எண்ணி கொண்டிருந்தான் ராகவ் பரத்வாஜ் …வேண்டு வேண்டு என வேண்டி விட்டு முட்டுவலிக்க வந்து ராகவ் முன்னாடி நின்றவள் ..
“வேண்டிட்டேன் சார் போகவா?” கடமையே கண்ணாக நின்றாள்..
“என்ன அவசரம் டார்லிங் ,இப்பதான சொன்னேன் உன்ன வெச்சுதான் நான் சோதனை பண்ண போறேன்னு… எப்போ எனக்கு திருப்தியா பண்ண முடியுதுன்னு ஃபீல் வருதோ, அப்போ உனக்கு விடுதலை, எக்கேடோ கெட்டுப் போன்னு விட்டிருவேன் ..இன்னையிலிருந்து உன்னோட டாஸ்க் என்ன தெரியுமா? ஒன்னும் முடியாத உன் மாமனுக்கு மூட் ஏத்துற வேலையை கனகச்சிதமாக பார்க்கிற.. நான் ஃபுல் ஸ்டேடி ஆயிட்டேன்னு வச்சுக்கோ.. உன் காட்டுல அடைமழை நாளைக்கே கூட அனுப்பி வச்சிடுறேன், எனக்கும் உன்ன என் பொண்டாட்டியா சகிச்சு வாழவே முடியாது.. எவளையோ ஒருத்தியை கட்டி அவ கேவலமா சிரிச்சா கொன்னு போட்டிருவேன் , அதுக்கு நீன்னா வாய திறக்க மாட்ட பாரு, அதான் உன்ன தேர்ந்தெடுத்தேன்.. என்று கோழி முட்டை கண்ணை உருட்டி நின்ற அவளை இழுத்துக்கொண்டு அறைக்குள் போனான் ராகவ் பரத்வாஜ்..
மையல் விழி கண்ணில் தையலாகி காதலாகி தணியும் காலம் வேகம் தூரம் என குறிக்கப்பட்டு விட்டது …
குறிச்ச ஜோசியர் நீதான!!
