வாராயோ எனை நீ சேராயோ

This entry is part 9 of 20 in the series வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ

வாராயோ எனை நீ சேராயோ – 10

இரண்டு நாள் கழித்து சுந்தரேசனை அழைத்தார் ஜெயராமன். “நாளைக்கு நாள் நல்லா இருக்கு, உங்களுக்கு சரினா நாம பொருத்தம் பார்க்க நாளைக்கு போலாம்.”

“அப்படியா? எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. போலாம்”

“முசிறில இருக்கார் எங்க ஜோசியர். நான் போன் பண்ணி நேரம் வாங்கிடுறேன்.”

“சரிங்க நல்லது. எங்க காரிலே போலாம். நான் வந்து உங்களை பிக்அப் பண்ணிக்கிறேன்.”

“இல்லை இல்லைங்க, என் பொண்ணுக்கு தெரிஞ்சுடும். நாங்க வந்து உங்களை அழைச்சுக்கிறோம்!”

“ஓ! சரி சரி.”

போனை வைத்தவரிடம் “யாரு? என்ன விஷயம்?” என்றார் சுகுணா.

அறைக்குள் எல்லாம் சிக்னல் சரியாக வராததால் வாயில் கதவு அருகே அமர்ந்திருந்த பேரனை காட்டி, பிறகு சொல்கிறேன் என்று கண்ணை காட்டினார் சுந்தரேசன்.

அதை சரியாக கவனிக்காமல், “கேட்கிறேன்ல சொல்லுங்க!” என்றார் சுகுணா.

இதே மற்ற நேரமாக இருந்தால் தன்னை தவிர்க்கிறார்கள் என்று புரிந்து சட்டென்று எழுந்து உள்ளே சென்றிருப்பான் சரத். ஆனால் இப்போது மனதில் தீ ஒன்று கொழுந்து விட்டு எரிய அதை அணைக்கும் வகை தெரியாமல் இருப்பவன் ஆயிற்றே அதனால் அப்படியே அமர்ந்து இருந்தான். அவனுக்கு நிச்சயமாக தெரியும் அது சஞ்சனாவின் வீட்டில் இருந்து தான் என்று.

அதனால் வேண்டுமென்றே “நான் உள்ளே போகணுமா தாத்தா?” என்றான் அப்பாவியாக!

“அட எங்க பேரனுக்கு தெரியாம இங்க ஒன்னும் இல்லை, நீ இரு டா கிருஷ்ணா” என்று முந்திக் கொண்டார் சுகுணா.

இந்த கிழவியை, தலையில் அடித்துக் கொண்டவர்( மானசீகமாக தான், இல்லையென்றால் சுந்தரேசன் நிலைமை வயசான காலத்தில் என்ன ஆவது?)

தயங்கியபடி சரத்தை பார்த்துக் கொண்டே விவரம் சொன்னார் சுந்தரேசன்.

“அப்பாடி ஒரு வழியா ஜாதகம் பார்க்க ஒத்துகிட்டங்களா? இப்போ மட்டும் அந்த பொண்ணு ஒத்துக்கிச்சா?”

சரத்தும் ஆர்வமாக கவனித்தான். ஒரு வேளை தன்னிடம் பேச தயங்கினாலும் திருமணத்திற்கு ஒத்துக்க கொண்டாளோ?

“இல்லை, இது நான் கேட்டதால் அவங்க செய்றாங்க! அந்த பொண்ணுக்கு தெரியாது.” பேரனின் குணம் தெரிந்தவர் யோசித்தபடி சொன்னார்.

“ஓ! இந்த காலத்தில பொண்ணுங்க பேச்சுக்கு ரொம்ப ஆடுறாங்க இந்த பெத்தவங்க.” சலித்துக் கொண்டார் சுகுணா.

அவளுக்கு தெரியாமல் செய்கிறார்கள் என்பது இன்னும் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல் ஆயிற்று. வேண்டாம் அப்படி ஒன்றும் தேவையில்லை என்று சொல்ல முடியாத தன் நிலையை வெறுத்தான் சரத்.

திருமணத்தை பற்றிய எண்ணம் எதுவும் பெரிதாக இல்லாதவனை, இப்போது விடாப்பிடியாக அவளை தான் திருமணம் செய்வேன் என்ற நிலைக்கு கொண்டு வந்த விதியை திட்டாமல் சஞ்சனாவை மென்று துப்பினான் சரத்.

ஆனால் வெளியில் எதையும் காமித்துக் கொள்ளவில்லை. அமைதியாக யாரையோ பற்றின பேச்சு போல் இருந்தான்.

என்ன பா, நாளைக்கு வரேன் சொல்லிட்டேன்! போய்ட்டு வரவா? உனக்கு சம்மதம் தானே?

“உங்களுக்காக ஒரு தடவை கல்யாண விஷயத்தில இறங்கி வந்துட்டேன். இதுக்கு மேல நான் எந்த பொண்ணும் பார்க்க வரமாட்டேன் தாத்தா. அதனால் இதில என்ன முடிவோ அதான்! அவ்ளோ தான்” என்றான்.

இதை எப்படியாவது முடித்து விடுங்கள் இல்லயேல் கல்யாணமே இல்லை என்று பேரன் சொல்லும் செய்தி புரிந்தது அவருக்கு. கடவுளே ஜாதகம் பொருந்தி வரணும் வேண்டிக் கொண்டார் மனதில்.

இரண்டு நாளாக நான் ஏன் கிளம்பாமல் இன்னும் இங்கேயே இருக்கேன்? என்ன எதிர்பார்த்து இங்கேயே இருக்க சரத்? அவனிடம் பலமுறை அவனே கேட்டுக் கொண்டிருந்தான். இந்த விஷயம் தெரிந்தவுடன் பராவயில்லை, என்ன தான் ஆகுது பார்ப்போம் என்று நினைத்துக் கொண்டான்.

திருச்சியில் இருந்து அவன் வேலை பார்ப்பதை யாருமே நம்பவில்லை. வாணிக்கு பெரிய அதிர்ச்சி. சரத்திடம் போன் செய்து சண்டை போட்டாள்,

“கிளம்பும் போது கூட எனக்கு சொல்லனும்னு தோணலையா உனக்கு? அவசரமா கிளம்பி இருந்தா கூட பரவாயில்லை பிளான் பண்ணி தான் போய் இருக்க? அவ்ளோ தானா?”

இவன் எதற்கும் அசரவில்லை. “சும்மா தான் வந்தேன் சித்தி. வந்து சொல்லலாம் இருந்தேன். இப்படி சண்டை போட்டா வந்தும் சொல்லமாட்டேன்!”

“அடப்பாவி!” அவள் தான் அமைதியாக வேண்டி இருந்தது.

கிருபாகரன், அவனின் தங்கை சுமதி விஷ்வாவிற்கு அக்கா உள்ளூரிலே இருக்கிறாள், அனைவரும் வந்து பார்த்து விட்டு சென்றார்கள். போகும் போது சுமதி நல்லா சமைச்சு போடுங்க அம்மா, எவ்ளோ வருஷம் ஆச்சு இவன் இப்படி வந்து தங்கி என்று உணர்ச்சிவசப்பட்டாள்.

அன்றிரவு அறையில், “கிருஷ்ணா முன்னாடி இதெல்லாம் பேச வேண்டாம்னு கண்ணை காட்டுறேன்! புரியலை யா உனக்கு?”

“ஏன் அவனுக்கு தெரிஞ்சா என்ன? அந்த பொண்ணுக்காக அவன் இவ்ளோ தூரம் வந்து இருக்கான். அது புரியலையே அந்த பொண்ணுக்கு. எனக்கு ஆறலை! அவனும் தெரிஞ்சுக்கட்டும்!”

“ஏன் தெரிஞ்சுக்கணும்? தெரிஞ்சுகிட்டு? அவன் நல்லா வாழ வேண்டாமா? அவன் குணத்தை பத்தி தெரியும் தானே! பிடிவாதமா இருப்பான்! ஒரு சொல் சொல்லிட்டா எவ்ளோ ரோஷம் பார்ப்பான். இது மாதிரி பொண்ணு வீட்டுக்காரங்க பத்தி அவன் மனசில தப்பான செய்தி படணுமா? அது அவன் வாழ்க்கைக்கு நல்லது இல்லை சுகுணா. இனிமேயாச்சும் அவன் முன்னாடி யோசிச்சு பேசு!” என்று கொஞ்சம் கடிந்தார் மனைவியை.

அதில் இருந்த உண்மை புரிய, அமைதியாக இருந்தார் சுகுணா. அவர் மேற்கொண்டு வாதம் பண்ணாததில் இனிமேல் செய்ய மாட்டார் என்று புரிந்து கொண்டார் சுந்தரேசன்.

மறுநாள் ஜாதகம் பொருத்தம் எல்லாம் அமோகமாக இல்லாவிட்டாலும் தேவையான முக்கியமான பொருத்தம் இருக்கிறது. தாராளமாக இருவருக்கும் திருமணம் செய்யலாம், சஞ்சனாவிற்கு தான் சீக்கிரம் குரு பலன் முடிகிறது. அதனால் பத்து மாதத்திற்குள் திருமணம் முடித்து விட வேண்டும் என்று சொன்னார் ஜோசியர்.

சுந்தரேசனை அவர் வீட்டில் விட்ட பின், இன்னும் நாளை தள்ளாமல் நல்ல வேளை இப்போவவது பார்த்தோமே என்று சந்தோஷப்பட்டனர் அவளின் பெற்றோர்.

ஏற்கனவே மூன்று மாதம் வேலைக்கு சென்று விட்டாள், இன்னும் ஒரு ஐந்து மாதம் செல்லட்டும் திருமணத்தை முடித்து விடுவோம் என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டனர். இந்த இடைவெளியில் மாதவனிடம் நன்றாக கேட்டுக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

ஜாதகம் பொருந்தி விட்டது என்று கேட்ட சுகுணா ஓடி சென்று கற்பூரம் காட்டினார் சாமிக்கு. பேரனின் ஆசை நிறைவேற சுந்தரேசன் கிளம்பி சென்றதில் இருந்து விளக்கை அணைக்காமல் ஏற்றியபடியே வைத்து இருந்தார்.

இதையெல்லம் கண்ட சரத்திற்கு இவ்ளோ டென்ஷன் ஆகிற அளவு கொண்டு வந்து விட்டுட்டா என்று வழக்கம் போல் அவளின் மேல் பழியை தூக்கி போட்டான்.

அதே கோபத்துடன், “ஐ வான்ட் டு மீட் யூ” என்று சஞ்சனாவிற்கு மெசேஜ் போட்டான். ஜாதகம் தான் பொருந்தி விட்டதே இனி தடை எதுவும் இல்லயே அவர்களுக்கு.

அப்போது தான் சாப்பிட்டுவிட்டு வந்தவள், என்ன இது இப்படி போட்டு இருக்கான் என்ற யோசனையுடன், “எனிதிங்க் இம்ப்?” என்று கேட்டு அனுப்பினாள்.

“ப்ரெட்டி மச்!” என்று பதில் அனுப்பினான்.

“ரிகார்டிங்?” என்று அவள் அனுப்பவும் இவனுக்கு தீப்பிடித்தது போல் எரிய,

“எய்தர் கம் இன்டு மை லைப் ஆர் ஜஸ்ட் லீவ். டோன்ட் ஸ்டாண்ட் இன் தி மிடில்.” நீ ஏதாவது முடிவு சொல்லி தான் ஆக வேண்டும் என்று தன் அவசரத்தை அவளிடம் திணித்தான் சரத்.

இப்போ என்ன ஆச்சு இவனுக்கு? என்று குழம்பி, ஒன்றும் புரியாமல், அவள் வீட்டுக்கும் பள்ளிக்கும் நடுவில் இருக்கும் ஒரு கோயிலை சொல்ல, அவன் மறுத்து,

“ஐ வில் பிக் யூ அப் பிரம் ஸ்கூல். மெசேஜ் மீ தி டைமிங்!” என்று முடித்து விட்டான்.

அடப்பாவி ஸ்கூல் வரை வந்து இருக்கான், என்னை ஒருத்தன் பாலோ பண்ணது கூட தெரியலை எனக்கு என்று முழித்தாள் சஞ்சனா. இன்னும் அவனின் முழு பரிமாணம் தெரிய வரும் போது?

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *