வாய்மொழி விடுகதை
தங்க மாம்பழம் திங்க முடியலை
பதில் : நெருப்புத்துண்டு
கருப்பு காட்டில் வெள்ளை ரோட்டில் கருப்பு கார் போகுது
பதில் : தலை முடி, பேன்
தோலை உறுத்தலும் அழாத இவன் உரித்தவர்களை அழ வைப்பான்
பதில் : வெங்காயம்
செத்தவன் சந்தைக்கு போறான்
பதில் : கருவாடு
சில்லுக்கு சேலை காரி சந்தைக்கு போறாள்
பதில் : வெங்காயம்
கழுத்து உண்டு தலை இல்லை கை உண்டு விரல் இல்லை
பதில் : சட்டை
இந்த மரத்திற்கு கை உண்டு
பதில் : முருங்கை மரம்
அப்பன் செரியன் அம்மா சடச்சி பிள்ளைகள் முத்து குட்டி
பதில் : பலாப்பழம்
அறிவுள்ள மிருகம்
பதில் : நரி
(இந்த விடுகதைகள் உங்களுக்கு தெரிந்து இருக்கலாம் இதுமாதிரி உங்கள் குழந்தைகளிடம் கேட்டு விளையாடும் )
