ராஜனின் காதலி

This entry is part 14 of 14 in the series ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

24

எவ்வளவு கட்டுப்படுத்தியும் அவள் பின்னே ஆர்ப்பரித்த கடல் போலே அவள் நெஞ்சமும் பொங்கி பெருகி, ‘நினையாதே நினையாதே’ என்று அவள் அடக்கி வைத்திருந்த, அவனின் கைவிடல் படலத்தின் முதல் அத்தியாயத்தில் மூழ்கி, மூச்சுக்கு தவித்து மேலெழும்பி வந்து, அவன் இன்று நடத்திய இரண்டாவது அத்தியாயத்தின் பாரம் தாங்காது, மீண்டும் பழம்நினைவுகளின் உள்ளே மூழ்கி உயிர்மூச்சுக்கு ஏங்கி தவித்தது பேதையவள் காதல் நெஞ்சம்.
அன்று மென்சாரலின் துணையுடன் அவளை பஸ் ஏற்றி ஊருக்கு அனுப்பி வைத்தவன், நித்யா சென்னைக்கு திரும்பி வரும் நாளும், மறக்காமல் பேருந்து நிலையம் வந்து அவளை அழைத்துக்கொண்டான். இத்தனைக்கும் அவள் ‘நான் கோயம்பேடு வந்துவிட்டேன், நானே விடுதிக்கும் போய்க்கொள்ளுவேன்’ என்று சொன்னப்போதும் ‘இல்லை, நான் வருகிறேன், காத்திரு’ சொல்லி போனை வைத்துவிட்டான். தேர்வு முடிவு வெளியான பின்னே அதை காணப்போகும் அந்த ஒரு நொடி நெஞ்சுக்குள் ஏதோ பிசையுமே, அதே மனநிலையில் அந்த பேருந்து வளாகத்தினுள் காத்திருந்தாள் நித்யா. அவ்வளவு பதட்டத்திலும் முகம் கழுவி தலை திருத்திக்கொள்ள மறக்கவில்லை அவள். அவன் வந்தான், வண்டியில் ஏறு என்றான், ஏறியதும் விடுதி நோக்கி ஓட்ட தொடங்கினான். தேர்வு முடிவை பார்க்க எண்ணெல்லாம் போட்டப்பிறகு, முடிவை காட்டாமல் சுற்றும் கணினி போலே அவன் இருந்தான். விடுதிக்கு போகாமல் அதன் அருகே இருக்கும் சிவன் கோவில் வாசலில் வண்டியை நிறுத்தி அங்கே இருக்கும் மண்டபத்துக்குள் கூட்டிப்போய் அமர்ந்தான். டீசார்டை தூக்கி, பேண்ட் விளிம்பில் வயிற்றோடு அணைத்தபடி சொருகி வைத்திருந்த டைரியயும், கவிதைகள் எழுதியிருந்த பேப்பர் கட்டுகளையும் உருவி நித்யாவின் கையில் கொடுத்தான்.
‘எல்லாவற்றையும் படித்தேன்’ என்று தொடங்கினான். அவன் அடிக்கடி சொல்லும் ‘பாப்பா’ என்ற விளி காணாமல் போயிருந்தது. அதிலேயே முடிவு என்ன என்று முடிவு செய்துகொண்டாள் நித்யா.
‘இத நான் எதிர்பாக்கவே இல்லை நித்யா. நான் உன்கூட நட்பாதான் பழகுனேன். உனக்கு என்மேல லவ் வரும்னோ, இல்லை நீ என்ன லவ் பண்ணனும்னோ, நான் ஒரு நாளும் நினைக்கல. உன்கிட்ட அந்த மாதிரி நான் பழகவே இல்லைதானே, நீயே சொல்லேன்’ என்க, ஆமாம் எனும்விதமாய் தலையசைத்தாள் நித்யா. 
உண்மைதான், பேச ஆரம்பித்த நாள் முதல் நட்பு எனும் கோட்டை அவன் தாண்டியதில்லை. ஆனால் ஒரு நண்பனுக்கும் மேலே தன்னிடம் அவன் அக்கறை காட்டியதையோ, பெண் தோழிகளிடம் அதிகமாக பேசினால் கூட பொறாமை கொண்டதயோ, இப்போது சொன்னால் கோவம் கொள்வானோ?
அவள் யோசனையில் இடையிட்டு, ‘உனக்கே தெரியும், உண்மையான பிரண்ட்னு எனக்கு யாரும் இல்லை. நீ கெடச்சனு நினைக்கும்போது ரொம்ப சந்தோசமா இருந்தேன், ஆனா உனக்கு இப்படி ஒரு எண்ணம் வரும்னு நான் கொஞ்சம்கூட எதிர்பாக்கல. இதே வேற யாராவது இருந்தா ஒரு பொண்ணே வந்து ஆசைப்படறேன் சொல்லும் போது, எப்படி எப்படியோ யூஸ் பண்ணிட்டு, பின்னாடி எதும் தெரியாதுன்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பாங்க, ஆனா நான் அப்படி இல்லை, உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும், நான் உனக்கு ஒரு நல்ல நண்பனா கடைசி வரைக்கும் இருப்பேன், நீ மட்டும் இந்த ஆசைய மறந்துடு நித்யா’ என இன்னும் ஏதேதோ சொன்னான். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் பேசியிருப்பான். ஆனால் அதன் உள்ளர்த்தம் ஒன்றே ஒன்றுதான். அது ‘நாம் இனிமேலும் நண்பர்களாக மட்டுமே இருப்போம்’ என்பதுதான்.
நித்யாவுக்கோ இப்போது மனதில் எந்த சலனமும் இல்லை. முடிவு என்ன என்று தெரியும்வரை மட்டுமே மனம் அலைபாய்ந்தது. நிராகரிப்பு என்று தெரிந்தபின்னோ மனம் எதிர்காலத்தை எப்படி எதிர்கொள்ள என்று திட்டமிட்டது. ஐந்து பெண்களில் தலைச்சனாய் பிறந்த தான் எப்படி கல்யாணம் வேண்டாம் என்று வீட்டில் சொல்வது, என்ன பொய் சொன்னால் பொருத்தமாய் இருக்கும், எந்த வழியில் கல்யாணம் வேண்டாம் என தவிர்த்து, ராஜனின் நினைவுகளோடு எப்படியெல்லாம் ஆனந்தமாய் வாழ்வது என சுககற்பனையில் மிதந்தாள். ஆம் அவளை பொறுத்தவரை அவனை எண்ணி வாழ்தல் கூட சுகமே. காரணம் அவன் தன்னை ஏற்பான் என அவள் ஒருநாளும் கனவு காணவில்லை. அந்த அழகனுக்கு தான் பொறுத்தமில்லை என்றே எண்ணிப்பழகிய மனது ராஜனின் நிராகரிப்பை இயல்பாக ஏற்றுக்கொண்டது.
அவன் சொன்னதற்கு எல்லாம் நித்யா தலையாட்டி வைக்கவும், ‘சரி வா, ஹாஸ்டலில் கொண்டுவிடுறேன்’ என்று சொல்லி வண்டி அருகே சென்று அதன் மீதேறி அமர்ந்து ‘உட்காரு போலாம்’ என்றான். நித்யாவும் ஏறி  அவனை தொடாமல் சீட்டின் பின்னே இருந்த வளைவான கம்பியை பிடித்துக்கொண்டு அமரவும் ‘ஏன் என்ன தொடக்கூட மாட்டியோ?’ என்று கேட்டு அவள் கையை எடுத்து தன் தோளை பிடிக்கவைத்து பின் வண்டியை எடுத்தான். வெறும் தோழி ஏன் தொட்டுக்கொண்டு அமர வேண்டும்? சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பின்றி இருந்த நடத்தையை அன்றுபோல் என்றுமே அவன் உணரவில்லை. நித்யாவும் ராஜன் மீதிருந்த மயக்கத்தில் அந்த முரணை உணரவில்லை.
அந்த நாளுக்கு பிறகு வாழ்க்கை முன்போலே நகர்ந்தது. இடையில் சொன்ன இந்த காதல் விவகாரம் நடக்கவே இல்லாதது போல இருவரும் நடந்துகொண்டார்கள். காதல் என்ற வார்த்தை அவர்களிடயே எழவேயில்லை அதற்குப்பின். ஆனால் ஒரு காதலன் காட்டும் அத்தனை அக்கறையும் ராஜன் நித்யாவிடத்தில் காட்டினான். மணிக்கணக்கில் அவளோடு பேசினான். அவள் காரியம் அத்தனையிலும் உடனிருந்தான். வகுப்பில் பெண்களோடு சிரித்து பேசினாலும் பொறாமை கொண்டான். நித்யாவின் பெயர் வகுப்பில் வேறு ஏதேனும் ஆணுடன் அடிபட்டால் அவளிடம் கோபம் கொண்டான்.
அப்படித்தான் பொங்கல் விடுமுறைக்கு முன்பான கடைசி நாள் கல்லூரி விட்டு கிளம்பி, தன் விடுதி தோழிகளோடு பேசியபடி நடந்துப் போய்க்கொண்டிருந்தாள். பைக் பார்க்கிங் தாண்டி போகையில் அவள் வகுப்பில் படிக்கும் ஒருவன் நித்யாவை கூப்பிட்டு பொங்கல் வாழ்த்து சொல்ல, இவளும் திரும்பி பார்த்து பதிலுக்கு ஹாப்பி பொங்கல் என்று சொல்லிவிட்டு தன் வழியே போனாள். அன்று விடுதிக்கு போய் சேர்ந்தவுடனே ராஜனிடமிருந்து போன். ஏன் அவனை பார்த்து சிரித்தாய் என்று கேட்டு. உண்மையில் நித்யா அவனை பார்த்து சிரிக்கவில்லை. தன் தோழிகளோடு சிரித்து பேசி நடந்துகொண்டிருந்தவள் அந்த பையன் கூப்பிடவும் அதே முகத்தோடு திரும்பி பார்த்து அவனுக்கு பதில் வாழ்த்து சொல்லியிருந்தாள். ஒரு நிமிடத்தில் நடந்து முடிந்த அதில் அவள் முகம் சிரித்தபடி இருந்ததையோ, ராஜன் அதே பார்க்கிங்கில் இருந்து அதை பார்த்ததையோ அவள் உணரவில்லை. ஒன்றுமில்லா இதற்காக பலநாட்கள் அவளுடன் சண்டை.
இப்படி இன்னும்பல சண்டைகளோடும் சமாதானங்களோடும் அவர்களின் காதல் வளர்ந்தது, ஆனால் காதல் என்று பெயரிடப்படவில்லை அவ்வளவே. இவ்விதமாய் அக்கறைகளோடு சில நேரம் உரிமையும் எடுத்துக்கொண்டான் ராஜன். பேச்சளவில் வளர்ந்த அந்த உரிமை ஒரு கட்டத்தில் பேச்சோடு சேர்த்து மெய்யில் உயிர் வளர்த்தது. அதன் தொடக்கமாய் அவன் பிறந்தநாளுக்கு அடுத்த நாள், காரில் வைத்து நித்யாவின் கன்னத்தில் முத்தமிட்டான் ராஜன். பிறகும் கூட தோழி என்ற பெயரை அவன் மாற்றவில்லை. அவளும் தோழிக்கு ஏன் முத்தமிடுகிறாய் என்று கேட்கவில்லை. 
நித்யாவின் காதலை நிராகரித்த அந்த நாளில் கோவில் மண்டபத்தில் வைத்து எதையெல்லாம் தான் செய்யமாட்டேன் என்று சொன்னானோ அந்த அநியாயம் அத்தனையும் செய்துமுடித்து ஒருநாள் அவளை நிரந்தமாய் பிரிந்தான் ராஜன். ஆனால் அது நடக்கும் நாளில் அவள் வயிற்றில் இரண்டு உயிர்கள் வளர்ந்து கொண்டிருந்தது. நித்யாவின் நெஞ்சில் இருந்த காதலோ கருகி நாசமாய் போனது. 

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *