ராஜனின் காதலி

This entry is part 10 of 14 in the series ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

20
காதல் ஒரு விசித்திரம். காமம் அந்த விசித்திரத்தின் விந்தைகளில் ஒன்று. காமம் உடல் சம்பந்தமென உலகம் சொல்லும். நித்யாவுக்கோ அது உள்ளசம்பந்தம். ராஜன் அவள் உள்ளத்தை கரைத்து உடலை படித்தான்.  அவள் இதயம் தேடும் பதில் தந்து தன் இரை கொண்டான். 
உன்னை போலவே நானும் விரதம் காத்தேன் என்ற ஒரு வரியில் வலுவிழந்தாள் நித்யா. தன்னைப்போல அவனும் காதலின் உறவுக்கு ஏங்குகையில், விலகியிருந்து எதை சாதிக்க என்று தன் வீம்பை விட்டுக்கொடுத்தாள். 
பிரிந்தவர் கூடுகையில் பேசவும் வேண்டுமோ? அந்த பின்னிரவில் பேச்சுக்கு வேலையின்றி காதல் கொண்ட இரு உடல்கள் தங்கள் இணையிடம் நலம் விசாரித்து கொண்டன. வருடகணக்கில் தனக்காய் காத்திருந்த துணைக்கு இன்பத்தில் பரிசளித்து இரண்டு மடங்காய் பெற்றுக்கொண்டன. 
விடிகாலை. ஜன்னல் வழி வந்த வெளிச்சத்தில் கண் கூசி விழித்துக் கொண்டான் ராஜன். நித்யா இன்னும் தூங்கி கொண்டிருக்க வெளிச்சம் அவள் மீது படாதவண்ணம் ஜன்னல் திரையை இழுத்து மூடிவிட்டு வந்தான். இரவு ரொம்ப நேரம் விழித்து அழுததால் பிள்ளைகள் இருவரும் இன்னும் எழவில்லை. கட்டிலில் நித்யாவின் அருகே அமர்ந்து அவள் நெற்றியில் விழுந்த முடிகோதி காதோரம் விட்டு அவளை பார்த்துக்கொண்டே இருந்தான். நித்யா ஒன்றும் அழகி அல்ல. மாநிறத்திற்கும் சற்றே குறைவுதான். உடல்வாகு கூட சராசரிதான். எதைக்கொண்டு தன்னை ஈர்க்கிறாள் இதுவரை விளங்கவில்லை. ஆனாலும் அவள் அன்புக்கு அவன் அடிமை. நித்யா அளவுக்கு யாருமே அவனை நேசிக்கவில்லை உண்மை. முதல்முதல் அவள் காதலை தெரிந்துகொண்ட நாள் அவன் நினைவில் வந்துபோனது.
அன்றொருநாள் வழக்கம்போல போனில் பேசிகொண்டிருக்கயில் தனக்கு நடந்த கசப்பான ஒரு அனுபவத்தை நித்யாவுடன் பகிர்ந்து கொண்டான். தன் நண்பன் ஒருவன் சில விஷயங்களை தன்னிடம் மறைத்தது தெரியவர, இப்படி செய்துவிட்டானே என்று நித்யாவிடம் புலம்பினான். தான் அவனிடம் வெளிப்படையாக எல்லாவற்றையும் சொல்லும் போது அவன்  இப்படி செய்வது கஷ்டமாக இருப்பதாக சொன்னான். நீயாவது எனக்கு உண்மையா இருப்பல்ல நித்யா என்று கேட்டான். நித்யாவுக்கு மனது உறுத்த ‘நானும் சில விஷயங்களை உன்னிடம் மறைக்கிறேன்’ என சொல்லிவிட்டாள்.  தன் காதலை மறைத்து தோழியாக இருப்பதைத்தான் அப்படி சொன்னாள். ராஜன் ஏன் எதற்கு என்று கேட்க நித்யா தன் காதலை சொல்ல தயங்கி பதில் சொல்ல திணறினாள். பேச்சு வாக்குவாதமாகி வளர்ந்து சண்டையானது. கடைசியில் நீயும் எல்லார் போலத்தான் நித்யா. உன்னைப்போய் உண்மையானவனு நம்பினேனே என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டான்.
நித்யாவுக்கு அன்று இரவெல்லாம் தூங்க முடியவில்லை. இதற்கு முன்னும் அவர்கள் பல விஷயங்களில் வாக்குவாதம் செய்திருக்கிறார்கள். ஆனால் அதெல்லாம் சாதாரண  காரணங்களுகாக. இன்று தன் நம்பகதன்மை மீது களங்கம் வந்ததில் என்ன நடந்தாலும் பரவாயில்லை அவனிடம் உண்மையை சொல்வது என்று முடிவெடுத்து தூங்கபோனாள். மறுநாள் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு நித்யா ஊருக்கு போவதாய் இருந்தது.  எப்போதும் ஊருக்கு போகையில் ராஜன்தான் அவளை விடுதியில் இருந்து கூட்டிப்போய் கோயம்பேட்டில் பஸ் ஏற்றிவிட்டு வருவான். அதேபோல ஊரிலிருந்து திரும்பும் போதும் ராஜன்தான் அவளை பஸ் ஸ்டாண்டில் இருந்து விடுதிக்கு அழைத்து கொண்டுவிடுவான். முன்தினம் மாலை சண்டை வந்ததால்  தன்னை அழைத்துப்போக இன்று ராஜன் வரமாட்டான் என்றே நினைத்தாள் நித்யா. சரி எதற்கும் இருக்கட்டும் என்று எண்ணி அவள் டைரியையும் கவிதைகள் எழுதி வைத்திருந்த பேப்பர் கட்டுகளையும் தூக்கி பைக்குள் வைத்து கிளம்பி வெளியே வந்தாள். ஆம் பேப்பர் கட்டுகள்தான். கிடைக்கும் பேப்பரில் எல்லாம் தினம் அவன் புராணம் எழுதியதில் ஒன்னரை வருடத்தில் கட்டாக சேர்ந்தந்திருந்தது. இரண்டு டைரி போதவில்லை. எண்ணங்கள் வெளியிட தைரியம் இன்றி எழுத்தில் வடித்து காதல் வளர்த்தாள். விடுதி விட்டு வெளியே வந்தால்  ராஜனோ அவளுக்கு முன்னே வந்து அவள் விடுதி அருகே எப்போதும் சந்திக்கும் இடத்தில் காத்திருந்தான். நித்யாவுக்கு அவன் வந்ததற்கு சந்தோஷப்படுவதா இல்லை எப்படி அவனிடம் உண்மையை சொல்வது என்று பயப்படுவதா எனும் நிலை. சரி நடப்பது நடக்கட்டும். பொய்யானவள் என்ற பெயரோடு கூட இருப்பதைவிட உண்மை சொல்லி பிரிந்து போவது மேல் என எண்ணி அவன் அருகே போனாள். முந்தையை நாளின் பிரதிபலிப்பு ராஜன் முகத்தில் இன்னும் இருந்தது. நித்யா பக்கம் வந்ததும் உட்காரு என்ற ஒரு வார்த்தையுடன் வண்டியை ஸ்டார்ட் செய்தான். வண்டி அதன் பங்குக்கு உருமி நித்யாவை இன்னும் பயமுறுத்திற்று. எதுவும் பேசாமல் ஏறி அமர்ந்து கொண்டாள். ஐந்து நிமிட பயணம்தான். பேருந்து நிலையத்தின் உள்ளே வந்து வண்டியை பார்க்கிங்கில் விட போனான். பார்க்கிங் வாசலில் காத்து நின்ற ஒவ்வொரு நொடியும் வைரமுத்து சொன்னதுபோல நித்யாவின் வயிற்றுக்குள் பயப்பந்து உருண்டது. வண்டியை விட்டு வந்தவன் எப்போதும் போல் இல்லாது அவளை விட்டு முன்னே நடந்து பேருந்து நிலையத்தின் உள்ளே போனான். ஒரு பொய் சொன்னதுக்கே இவ்வளவு பாரமுகம் காட்டுபவன் காதலித்தாள் என்று தெரிந்தால் என்ன செய்வானோ? சொல்லலாமா வேண்டாமா என தன் முடிவை மீண்டும் பரிசீலித்து கொண்டே அவன் பின் நடந்தாள் நித்யா. இதோ அவள் ஏற வேண்டிய பேருந்து அருகே வந்தாயிற்று. பயம்தான் ஆனாலும் இதற்குமேல் கடத்துவதற்கு நேரமில்லை, சொல்லித்தான் ஆகவேண்டும் என உறுதியுடன் முன்னே சென்ற ராஜனை கூப்பிட்டாள். 
‘என்ன?’ முகம் சுளித்தபடியே கேட்டான் ராஜன். தோளில் மாட்டியிருந்த பையை கழட்டி அதிலிருந்து டைரியும் பேப்பர் கட்டயும் எடுத்து அவனிடம் நீட்டினாள். “நான் உங்ககிட்ட எதையும் வேணும்னு மறைக்கல, என் நேரமா நிலைமையா தெரியல, என் மனசுல இருக்கறத உங்ககிட்ட சொல்ல தைரியம் வரல. அப்படியே சொன்னாலும் இருக்கறதும் இல்லாம போயிடுமோன்னு பயம். இதுவரைக்கும் நான் உங்ககிட்ட மறைச்ச எல்லாமும் இதுல இருக்கு. இனியும் நான் உங்ககிட்ட பொய்யா இருக்க விரும்பல, அந்த ஒரு காரணத்துக்காகதான் இத உங்ககிட்ட தரேன். வேற எதும் நான் உங்ககிட்ட எதிர்பாக்கல, ஏன்னா எனக்கே தெரியும் நீங்களும் நானும் ஒன்னாக முடியாதுன்னு. நீங்க எனக்காக எதுவும் செய்ய வேணாம். நான் உங்கள நெனச்சிட்டே இருந்துடுவேன். நான் வரேன்” என்று சொல்லிவிட்டு பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
ராஜனுக்கு ஒன்றும் சரிவர புரியவில்லை. அவள் தந்த பேப்பர்களை பார்க்க ‘இவ்ளோவா எங்கிட்ட மறைச்ச’ என்றுதான் தோன்றியது. இவ்வளவு எழுதும் அளவுக்கு என்ன இருக்கும் என்ற நினைப்போடே பேருந்தில் அமர்ந்திருந்த நித்யாவை பார்க்க ஓரிரு நிமிடங்களில் பேருந்தும் கிளம்பிவிட்டது.  ஆர்வம் தாங்காமல் அங்கேயே நின்று சிலதை படித்தான். அவன் படித்த வரிகள் எல்லாம் அவனை பற்றிய வர்ணனையே இருக்க இதழ்கள் புன்னகையில் விரிந்தது. அவள் மீது கோபமாக இருந்ததெல்லாம் மறந்து போனது. எதற்கு சண்டை போட்டோம் எதற்கு இதெல்லாம் தன்னிடம் கொடுக்கப்பட்டது என்று எந்த நினைப்பும் இன்றி அவள் எழுத்துக்களை சுவாரஸ்யமாய் படிக்க ஆரம்பித்தான். படித்துகொண்டிருக்கயிலேயே வீட்டிலிருந்து போன் வரவும் கிளம்பி வீட்டுக்கு போய்விட்டான். அன்று மாலை வரை மீதியை படிக்க சூழ்நிலை அமையவில்லை.  ஆனால் மனதுக்குள் நித்யாவின் கவிதைகள் ஓடிக்கொண்டேயிருந்தது. முழுதும் எப்போது படிக்க? இன்னும் என்னென்ன இருக்கும்? என்றே எண்ணம் ஓடியது. ஆனால் எதற்கு இப்படியெல்லாம் எழுதி வைத்திருக்கிறாள் என்று ஆராய தோணவில்லை. ஆணாக தனக்கு பிடித்த பெண்ணின் வர்ணனையை ரசித்தான். 
மாலை ஆறு மணி போல பைக் சீட்டுக்கு அடியில் வைத்திருந்த நித்யாவின் டைரியயும் பேப்பர்களயும் எடுத்துக்கொண்டு அவன் வீடு இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் மாடிக்கு போய் கைப்பிடி சுவற்றில் சாய்ந்து அமர்ந்து படிக்க தொடங்கினான். படிக்க படிக்க ராஜனுக்கு அடக்க முடியாது அழுகை வந்தது. தன்னையும் ஒருத்தி இவ்வளவு நேசிக்க முடியுமா என்ற எண்ணத்தில் நெஞ்சம் விதும்பியது. பெரும்பாலான வரிகளில் நீ கிடைக்காவிட்டாலும் உன்னை நினைத்து கொண்டே வாழ்வேன் என்ற பொருளே மேலோங்கி இருந்தது. ஏன்? எதற்கு? என்ன செய்தேன் நான் அவளுக்கு? எதுவும் இல்லையே! பின்னே எப்படி இவ்வளவு நேசம்? அவள் காதலின் தீவிரம் ஏனோ இதயத்தை பிசைந்தது. அத்தனையும் படித்து முடிக்க நெடுநேரம் ஆகியது. மாடியில் வெளிச்சம் இல்லாததால் செல்போன் டார்ச் வெளிச்சத்திலதான் படித்தான். அதுவும் பேட்டரி குறைந்து நின்று போயிற்று. பிறகு சட்டைக்குள் வைத்து மறைத்து வீட்டுக்குள் தன் அறைக்கு கொண்டுபோய் படிப்பதை தொடர்ந்தான். சாப்பிட அழைத்தபோது கூட போகவில்லை.  இது நடந்து கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடமாவது இருக்கும். ஆனால் இப்போது கூட அந்த வரிகளில் பலது அச்சு பிசகாமல் ஞாபகம் வரும். அந்த அளவுக்கு அவன் மனதில் பதிந்து போனது அவள் சொன்ன காதல். ஒருவேளை அந்த வார்த்தைகளும் அதான் பொருளும்தான் நித்யாவை நோக்கி அவனை இழுத்ததோ? விடையில்லை, ஆனால் அதில் எழுதியிருந்த ஒன்று கூட வெறும் வார்த்தையில்லை என்று இன்றளவும் வாழ்ந்து காட்டி நிரூபித்துவிட்டு நிச்சலமான முகத்துடன் தன் முன்னே உறங்கும் நித்யாவின் மீது தனக்கு காதல் வராமல் போனால்தான் அதிசயம் என்று நினைத்துக்கொண்டே மீண்டும் அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *