ராஜனின் காதலி

This entry is part 13 of 14 in the series ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

ராஜனின் காதலி

23
காதலும் காதல் சார்ந்த இடமும். ஆம், கடற்கரை. அங்கேதான் ராஜன் அவர்களை கூட்டி வந்திருந்தான். பாதிவழி கடந்த பிறகுதான் நித்யா மயக்கத்திலிருந்து விழித்து ‘இது வீட்டுக்கு போகும் வழியில்லையே’ கேட்க, ‘பரவால்லையே, இவ்ளோ சீக்கிரம் கண்டுபிடிச்சிட்ட’ கிண்டலடித்தான். சிரித்துக்கொண்டே ஹெல்மெட் அணிந்திருந்த அவன் தலையில் லேசாய் தட்டி, ‘சரி, எங்க போறோம் சொல்லுங்க’ என்கவும் ‘சொல்லமாட்டேன் சர்ப்ரைஸ்’ பதில் தர ‘ஹும்.. இன்னும் கொஞ்சதூரம் போனா நானே கண்டுபிடிச்சிடுவேன், இந்த சென்னைல நாம சுத்தாத இடமா?’ பழிப்பு காட்டினாள்.
‘அதெல்லாம் இன்னும் ஞாபகம் வச்சிருக்கியா நித்யா?’
‘ஏன்? எனக்கு அம்னீஷியா வியாதியா இருக்கு மறந்துபோக?’
‘இல்லை, என்மேல இருக்க கோவத்துல மறந்துருப்பன்னு நெனச்சேன்’
‘சரி, இனிமே மறந்துடுறேன்’ 
‘ஓய்’ என தன் பின்னாந்தலையால் அவள் நெற்றியில் இடித்து ‘என்னை மறக்கமுடியுமா உன்னால?’ கேட்டான். 
‘அது தெரிஞ்சுதான நீ ஓவரா ஆடுற?’ அவளும் அவன் முதுகில் கைவைத்து லேசாய் தள்ளிவிட்டாள். 
பேசிக்கொண்டே கடற்கரை வந்துவிட, நால்வரும் மணலில் இறங்கி நடந்தனர். மிரேவுக்கும் ஆரோனுக்கும் மணலை கண்டதும் ஒரே கொண்டாட்டம். மாறி மாறி துரத்திக்கொண்டே முன்னால் ஓடினர். ராஜனும் நித்யாவும் அவர்களை கவனித்துக்கொண்டே பின்னால் நடக்க, ராஜன் மெதுவாய் அவள் இடுப்பில் கைபோட்டான். நித்யா இடுப்பாலேயே அவனை இடித்து தூரம் தள்ளினாள். ராஜனோ ‘இப்போ எப்படி தள்ளிவிடுற பாக்குறேன்’ சொல்லி அவள் தோளில் கைப்போட்டு நடக்கதுவங்க, தள்ளிவிட வசதியில்லாததால் நித்யா அங்கேயே மணலில் அமர்ந்துவிட, இதை எதிர்பார்க்காத ராஜன் தடுமாறி அவளோடு சேர்ந்து மண்டியிட்டு விழுந்தான் மணலில். நித்யா அவனை பார்த்து சிரிக்க, தன் மேலிருந்த மணலை தட்டிவிட்டு எழுந்தவன், அவளை குண்டுகட்டாக தன் கைகளில் தூக்கிக்கொண்டு ‘இப்போ என்னடி பண்ணுவ’ என ‘யோவ், இறக்கி விடுறா, எல்லாரும் பாக்குறாங்க’ சினுங்க,  ‘பாத்தா பாக்கட்டும், நானே ரொம்ப காலம் கழிச்சு உன்கூட இங்க வந்துருக்கேன், பக்கத்துல கூட சேர்ந்து நடக்க மாட்டுற’ என, ‘சரி, வரேன் வரேன், இறக்கி விடு ராஜு’ கூச்சத்தில் சிரித்துக்கொண்டே கெஞ்ச, ‘முடியாது முடியாது, இது என்னோட டர்ன், இப்போ நான்தான் பிகு பண்ணுவேன்’ சொல்லிகொண்டிருக்கயிலேயே மிரேவும் ஆரோனும் இவர்களை கண்டு ஓடிவந்து, ‘அப்பா என்னையும் தூக்குங்க’ என்று கூச்சலிட்டனர். ‘நம்ம ரொமான்சுக்கு வெளியே இருந்து எதிரி யாரும் வர வேணாம் நித்யா, நாம பெத்து வச்சிருக்கதே போதும்’ சொல்லி அவளை இறக்கிவிட்டு பிள்ளைகள்  இருவரையும் தூக்கி கொண்டான்.
நித்யா மணலில் அமர்ந்து அவர்கள் மூவரும் விளையாடுவதை பார்த்துக்கொண்டே இருந்தாள். மனம் இந்த நிமிடத்திற்காய் கடவுளுக்கு நன்றி சொன்னது. எத்தனை முறை எண்ணி கலங்கியிருப்பாள் தன் பிள்ளைகளுக்கு தகப்பன் அன்பு இல்லையே என? ராஜன் எந்த கேள்வியுமின்றி இயல்பாய் அவர்ளோடு ஒன்றிப்போனது நிம்மதி, தன் மனம் அவனிடம் மீண்டும் இழைய பிள்ளைகளின் இந்த சிரிப்பும் ஒரு காரணம் என்பது மறுப்பதற்கில்லை. ‘அப்போ பிள்ளைகளுக்காக மட்டும்தானா? உனக்கு எதுவும் இஷ்டமில்லையா?’ மனம் கேள்வியெழுப்ப, கடல்காற்றில் கேசம் பறந்து, சிரிப்பில் முகம் இன்னும் வசீகரிக்க கண்முன்னே அவன் நிற்கக்கண்டும், தன் நெஞ்சிடம் பொய்யுரைக்கலாகுமா? இயலவில்லை எனவே ஏற்றுக்கொண்டாள்.
நித்யா தன்னையே பார்ப்பதை கண்டுவிட்ட ராஜன் கண்களாலேயே என்ன என்று கேட்டான். ஒன்றுமில்லை என நித்யா தலையாட்டினாள். பிள்ளைகளிடம் போக்கு காட்டி அவர்கள் மணலில் விளையாடுவதில் மும்முரமாகவும் ராஜன் நித்யாவின் அருகே வந்து அவள் தோளில் கைப்போட்டு அமர்ந்துகொண்டான். இருவரும் எதுவும் பேசாமல் விளையாடும் பிள்ளைகளை பார்த்தபடி இருந்தனர். மௌனத்தை கலைக்கும் விதமாய் ராஜன் ‘ஐ லவ் யூ நித்யா’ என்க நித்யா திரும்பி அவன் முகம் பார்த்து ‘என்ன திடிர்னு’ என்று கேட்டாள். 
‘சும்மா சொல்லணும் தோணுச்சு’ என ராஜன் பதில் தர நித்யா எதுவும் சொல்லாமல் கடலை நோக்கி வெறித்தாள். 
‘உனக்கு என்மேல இன்னும் கோவம் இருக்குல்ல நித்யா?’
‘தெரியல’
‘எனக்கு தெரியும். உன்னால என்ன முழுசா மன்னிச்சு ஏத்துக்கவும் முடியல. போகட்டும்னு விட்டுத்தொலையவும் முடியல. சரியா?’
‘அப்படிலாம் இல்லை. இன்னொரு தடவை உன்னை பாப்பேன்னு எதிர்பாக்கல. பாத்ததுக்கு பிறகு மறுபடியும் உன் கண்ணுல படாம எங்கயாவது போயிடணும்னுதான் தோணுச்சு. ஆனா இனிமே அது நடக்கும்னு தோணல. நான் தனியாத்தான் இருக்கணும்னு விதி இருந்தா உன் கண்ணுல பட்டுருக்கவே மாட்டேன். அதே நேரம் விதி விதிச்ச வாழ்க்கையை ஏத்துக்கவும் மனசு உறுத்துது. என் நிலைமை யாருக்கும் வர கூடாது. வாழ்வுக்கும் சாவுக்கும் போராட்டம் போல நான் ஆசைக்கும் தன்மானத்துக்கும் நடுவுல மாட்டி இழுபடுறேன்.’
‘எதையும் நெனச்சி பயப்படாத பாப்பா. இனி என்ன நடந்தாலும் நான் உன்கூட நிப்பேன். யாருக்காகவும் எதுக்காகவும் உன்னை விட்டுக்கொடுக்க மாட்டேன்.’
நித்யா பதிலேதும் சொல்லாமல், திரும்பி அவன் முகம் கூட பார்க்காமல், கடலை பார்த்தவாறே லேசாய் புன்னகைத்தாள். ‘உன் வார்த்தையில் எனக்கு நம்பிக்கையில்லை’ எனும் அர்த்தம் அதில் ஒளிந்திருந்தது. 
“என் பேச்சை நம்புறது உனக்கு கஷ்டமாத்தான் இருக்கும், நான் இனிமே சொல்லாம செஞ்சி காட்டுறேன் பாப்பா. என்னை நம்பணும்னு உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன். நீயே ஒரு நாள் நான் மாறிட்டேன்னு உணர்ந்து மனசு மாறி என்னை ஏத்துக்குவ பாரேன்” என்று ராஜன் சொல்ல, அப்படி நடந்தால் எவ்ளோ நல்லா இருக்கும் என்று மனதுக்குள் நினைத்து கொண்டாள் நித்யா. இவனை முழுதும் மன்னிக்க முடிந்தால் வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருக்கும் என்ற ஏக்கத்தில் பெருமூச்சு கூட வந்தது. ஆனால் மறதி வரம் அவளுக்கு வாய்க்கவில்லையே! என்ன செய்ய? 
சிலநிமிடங்கள் எண்ண அலைகளில் முழ்கி பின் மீண்டு எழுந்து திரும்பி பார்க்க ராஜனை காணவில்லை. திகைப்புடன் பிள்ளைகள் இருந்த பக்கம் திரும்பி பார்க்க அவர்கள் காற்றில் பறந்து வந்த குட்டி குட்டி பலூன்களை பிடிக்க முயன்றபடி விளையாடிக் கொண்டிருக்க ராஜனை மட்டும் காணவில்லை. ‘போய்விட்டானா? அவ்வளவு தானா? ஏன் வரணும்? எதற்கு போகணும்? சற்றுமுன் சொன்னதெல்லாம் வெறும் வசனங்களா? என்னை நம்பவைத்து ஏமாற்றுவத்தில் அவனுக்கு என்ன கிடைக்க போகிறது? இதற்கு மீண்டும் என் வாழ்வில் வராமலே இருந்திருக்கலாமே?’ கேள்விகள் ஒன்றின் மேல் ஒன்று எழும்ப, காற்றில் அணையாதிருக்க போராடும் மெழுகின் ஒளிச்சுடர் போலே அவள் இதயம் எகிறி துடித்து தன் வேலையை மும்முரமாய் செய்தது. மூளை கண்டதும் யோசித்து சரியான பதில் தெரியாமல் இந்த நான்கு நாட்களாய் நடந்த அனைத்தும் கனவோ என எண்ணி தன் செயல்திறனில் சந்தேகித்தது. விழிகளோ, ‘இதோ வந்துவிட்டோம் எங்கள் வேலையை செய்ய’ என்னும்விதமாய் கண்களில் சுளீரென ஒரு வலி தந்து தங்கள் மதகுகளை திறந்தன. அவனை தேடுவதற்காய் எழுந்து நின்றிருந்த கால்கள் தொய்ந்து நிற்க வலுவின்றி மண்டியிட்டு மீண்டும் மணலில் அமர்ந்தாள் பாவை.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *