மோக மந்திரப் பூவே

This entry is part 20 of 28 in the series மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

அத்தியாயம் 24

“பொண்ணை அழைச்சுண்டு வாங்கோ..” என்ற ஐயரின் குரலை கேட்டதும், மணப்பெண்களை மணமேடைக்கு அழைத்து வந்தனர். தன் அருகில் தேவதையென அமர்ந்திருந்தவளை பார்க்க பார்க்க தெகட்டவில்லை ஆதித்தனுக்கு.. யாரும் அறியாது அவளது கன்னத்தில் முத்தமிட்டவனை பார்த்து முறைத்த சிவன்யா, நறுக்கென அவனது இடையை கிள்ள, துள்ளி விட்டான் ஆதித்தன். 

“மாப்ள செத்தநாழி சும்மா இருக்கேளா? உங்க விளையாட்டையெல்லாம் பிறவு வைச்சுக்கோங்கோ..” என்று ஐயர் கூற, அங்கிருந்த அனைவரும் புன்னகைத்தனர்.  

“பொண்ணுக்கு கன்னியாதானம் பண்ணணும்.. பொண்ணோட பெத்தவாளை கூப்பிடுங்கோ..” என்று கூற, தேன்மொழிக்காக மணமேடைக்கு வந்தனர் நாராயண மூர்த்தி மற்றும் பூங்குழலி தம்பதியினர். 

“ஐயரே.. எங்க அண்ணி இறந்துட்டதுனால.. அண்ணனுக்கு பதிலாக நாங்க கன்னியாதானம் கொடுக்குறோம்..” என்று நாராயண மூர்த்தி கூற, தேன்மொழியின் கையை அதர்வனின் உள்ளங்கையோடு சேர்த்து வைத்து, கன்னிகாதானம் செய்யத் தொடங்கினர். 

“நாழியாகுது.. இந்த பொண்ணோட பெத்தவாளை வரச் சொல்லுங்கோ..” என்று ஐயர் கூற,

“இருந்தால்தானே வர்றதுக்கு.. ரோட்டுல கிடக்குற கண்ட கண்டதையெல்லாம் கல்யாணமேடைல ஏத்துனா.. இப்படி தான் நடக்கும்..” என்ற வானதியை பார்த்து ஆதித்தன் முறைக்க, அவமானத்தில் கூனி குறுகிப் போய் அமர்ந்திருந்தாள் சிவன்யா.  

“யார் சொன்னது அவளுக்கு யாருமில்லைன்னு.. நான் இருக்கேன்..‌அவளுக்கு கன்னியாதானம் பண்ண..” என்றவாறு அங்கு வந்து சேர்ந்தார் விநாயகமூர்த்தி. 

“அண்ணா.. நம்ம பொண்ணு.. இங்க இருக்கா.. நீங்க என்னன்னா யாரோ பெத்த பொண்ணுக்கு கன்னியாதானம் பண்ணப் போறேன்னு சொல்றீங்க?” என்று நாராயண மூர்த்தி கேட்க,

“யாரா இருந்தா என்ன? என் தங்கச்சி வீட்டுக்கு மருமகளா வரப்போற பொண்ணு.. அப்போ அவளும் என்னோட பொண்ணு தானே?” என்ற விநாயக மூர்த்தி, மணமேடை ஏறி வந்து, சிவன்யாவின் கையைப் பிடித்து ஆதித்தனின் கையில் வைத்தார். அதனைப் பார்த்த தேன்மொழி, 

“அப்பா.. என்னப்பா இதெல்லாம்?” என்று கேட்க,

“இனிமே சிவன்யாவும் உன்னோட அக்கா தான்.. கனிமொழிக்கு நீ என்ன மரியாதை கொடுப்பியோ.. அதை சிவன்யாவிற்கும் கொடுக்கணும்..” என்று தேன்மொழியிடம் கூறியவர், ஐயரை பார்த்து,

“நீங்க மந்திரம் சொல்லுங்க ஐயரே..” என்றவர் கூற, சிவன்யாவை ஆதித்தனின் கையில் வைத்து கன்னியாதானம்  செய்து வைக்க, 

“கெட்டி மேளம்.. கெட்டி மேளம்..” என்ற ஐயர் தாலி எடுத்து கொடுக்க, சிவன்யாவின் கழுத்தில் ஆதித்தன் மூன்று முடிச்சிட்டு தனது சரிபாதியாக ஏற்றுக்கொள்ள, தேன்மொழியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன் சரிபாதியாக ஏற்றுக்கொண்டான் அதர்வன். திருமணம் முடித்த கையோடு, சிவன்யாவின் கர்ப்பத்தை காரணம் காட்டி, ஒரு சில சடங்குகளை மட்டும் செய்யும்படி உத்தரவிட்ட ஆதித்தன், சடங்குகள் முடிந்ததும், சிவன்யாவை தனது மாளிகைக்கு அழைத்துச் சென்று, கலாவதி பாட்டியின் பொறுப்பில் விட்டுவிட்டு, வெளிநாட்டு கலந்துரையாடலுக்கு சென்று விட்டான். அதனை பார்த்த தேன்மொழிக்கு  உள்ளுக்குள் புகைந்தாலும், அதை வெளியில் காட்டாது, அதர்வனுடன் இணைந்து பல சடங்குகளை செய்தவளை ஆராத்தி எடுத்து வீட்டுக்குள் அழைத்து வந்தார் காமாட்சி.

“இந்த வீடு என்னைக்கும் சந்தோஷமும் நிம்மதியுமா இருக்கணும்.. வாழையடி வாழையாய்.. நம்ம வம்சம் தழைக்கணும்னு நினைச்சு.. இந்த குலவிளக்கை ஏத்துமா..” என்று காமாட்சி கூற,

“ஏன் அண்ணி.. உங்க மூத்த மருமக.. எங்க காணோம்? முறைப்படி அவ தானே.. முதல்ல குலவிளக்கு ஏத்தணும்..” என்றார் பூங்குழலி. அதனை கேட்ட காமாட்சி,

“ஆதி தான் அவனோட வீட்டுக்கு சிவன்யாவை கூட்டிட்டு போய், அங்க இந்த சடங்குகளை எல்லாம் செஞ்சுக்குறேன்னு.. சொல்லிட்டானே அண்ணி.. அவ பேச்சை மீற முடியாதே..” என்று வருத்தத்தோடு கூற,

“அப்போ.. நீங்களும் பொண்ணையும் மாப்ளையையும் உங்க வீட்டுக்கே.. கூட்டிட்டு போக வேண்டியது தானே அண்ணி? எதுக்காக.. இங்க.. இந்த வீட்டுல விளக்கேத்தணும்?” என்றார் பூங்குழலி. 

“என்ன பேச்சு பேசுறீங்க சித்தி? இந்த வீடு தான் அத்தை வாக்கப்பட்டு வந்த வீடு.. இங்க தான் எங்க வாழ்க்கை சந்தோஷமா ஆரம்பிக்கணும்னு அத்தை நினைக்குறாங்க.. அவங்க மனசை கஷ்டப்படுத்திட்டு, அந்த வீட்டுக்கு போய் விளக்கேத்தினா நல்லாருக்குமா? அத்தை செய்றதெல்லாம்.. எங்க நன்மைக்கு தான்.. நீங்க தீப்பெட்டியை கொடுக்க அத்தை..” என்ற தேன்மொழி, காமாட்சியிடம் இருந்து தீப்பெட்டியை வாங்கி, விளக்கேத்தினாள். அதனைப் பார்த்த அதர்வனின் மனதில், அவள் மீதான முதல் நல் அபிப்பிராயம் வந்தது. மதிய உணவை சாப்பிட்டு விட்டு ஓய்வெடுக்க சொல்லி, அவளது அறைக்கு தேன்மொழியை அனுப்பி வைத்தார் காமாட்சி. தனது அறைக்குள் நுழைந்த மறுநொடியே, தன் தந்தையை அழைத்த தேன்மொழி, 

“ஏன் ப்பா.. இப்படி பண்ணீங்க? அந்த ஆதித்தனால தானே என்னோட அக்கா இப்ப வரைக்கும் இங்க வரமாட்டேங்குறா.. அன்னைக்கு என்னோட அக்கா.. அவமானப்பட்டு நின்ன மாதிரி.. இவனும் நிக்கணும்னு தானே.. நான் அவனை கல்யாணம் பண்ணவே சம்மதிச்சேன்.. இன்னைக்கு அதுவா சமயம் கூடி வரும் போது, எதுக்குப்பா.. இடையில வந்து ஆட்டையை களைச்சு விட்டீங்க?” என்று கோபத்துடனும் வருத்தத்துடனும் கேட்க, அவளிடம் உண்மையை கூற முடியாது தவித்த விநாயக மூர்த்தி,

“இப்போ தான் புதுசா கல்யாணம் பண்ணிருக்க.. மனசுல எந்த வன்மத்தையும் வைச்சுக்காம.. மாப்ளையோட சேர்ந்து சந்தோஷமா வாழப் பாரு.. உங்கக்கா விஷயத்தை நான் பார்த்துக்குறேன்.. தேவையில்லாததை செஞ்சு.. உன் வாழ்க்கையை நீயே கெடுத்துக்காத.. அதர்வன் மாப்ள ரொம்ப தங்கமானவரு.. மாப்ள மனசு கோணாம நடந்துக்கோம்மா.. எது நல்லது கெட்டதுன்னு சொல்லி கொடுக்க.. உங்கம்மா இல்லாம இருக்கலாம்.. ஆனா, இந்த அப்பா சொல்லுறதையும் கேட்கலாம்.. தப்பில்லம்மா..” என்றவர், இறுதி வரை எதற்காக சிவன்யாவை கன்னியாதானம் செய்து கொடுத்தார் என்பதை சொல்லாமலேயே அங்கிருந்து சென்று விட்டார். 

“மாமாக்கு எந்த பேய் பிடிச்சதுன்னே தெரியல.. இப்படி ஆளே மாறி போயிட்டாரு..” என்று பூங்குழலி, தன் முகத்தாடையில் கை வைக்க,

“ஆனா, நான் மாறமாட்டேன் சித்தி.. என் அக்காவோட வாழ்க்கைக்கு அந்த ஆதி பதில் சொல்லியே ஆகணும்..” என்றவள் ஜன்னல் வழியாக பார்க்க, அங்கே நீச்சல் குளத்தின் படிக்கட்டில் அமர்ந்து தன் கால்களை அலம்பிக் கொண்டிருந்தாள் சிவன்யா. அவளருகே வந்து, அதே காட்சியை கண்ட பூங்குழலி,

“பழி வாங்குறதெல்லாம்.. சரி தான் தேனு.. ஆனா, அதுக்காக உன் வாழ்க்கையை தொலைச்சுடாத..” என்று கூற,

“என் அக்கா மாதிரி என் வாழ்க்கையை நான் கெடுத்துக்கமாட்டேன் சித்தி.. அதுக்காக இவங்களை சந்தோஷமா வாழ்வும் விடமாட்டேன்..” என்றவள் அங்கு நடப்பதை கூர்மையாக பார்க்கத் தொடங்கினாள்.  அங்கே நீச்சல் குளத்தில் வானதியும் சிவன்யாவின் அருகில் அமர்வதை கண்டவள், தானும் அங்கு செல்லலானாள். 

“எங்க அத்தானை கல்யாணம் பண்ணிகிட்டோம்னு ரொம்ப சந்தோஷப்படாத.. இனிமே தான் உனக்கிருக்கு..” என்ற வானதி சிவன்யாவை வம்பிழுக்கத் தொடங்கினாள். 

“இப்போ எதுக்கு என்னைய வம்பிழுக்குற? உன்னைய மாதிரி சின்னப்புள்ளைங்க எல்லாம்.. இப்படி பேசிட்டு திரியுறதை பார்த்தா.. எனக்கு சிரிப்பு.. சிரிப்பா வருது.. போ.. போயி பெரியவங்க இருந்தா வரச் சொல்லு.. போ.. உனக்கிது செட்டாகல..”

“என்ன கடுப்பேத்துறியா? நீ மாசமா இருக்கேன்னு தானே எங்க அத்தானை கல்யாணம் பண்ணிக்கிட்ட.. யாருக்கு தெரியும்.. அது எங்க அத்தானோட குழந்தை தான்னு? நீ அடிக்கடி கொஞ்சி கொஞ்சி பேசுறியே.. அந்த டாக்டரோட குழந்தையை வயித்துல சுமந்து கிட்டு, எங்க அத்தானோடதுன்னு எல்லோரையும் ஏமாத்திட்டு திரியுற..”

“என்ன சொன்ன நீ? அந்த.. ச்சே.. சொல்லவே வாய் கூசுது.. இப்படி பொய் பொய்யா பேச உனக்கு எப்படி மனசு வருது?”

“உண்மையை சொன்ன கோபம் வருதோ?”

“வேணாம் வானதி.. எனக்கு கோபம் வந்தா.. நான் என்ன பண்ணுவேன்னே.. தெரியாது..”

“அப்படித்தான் பேசுவேன்.. உன் அம்மா அப்படி.. அதுனால தான் நீ இப்படியிருக்க..” என்று கூறிய வானதியின் மீது புலியாக பாய்ந்தாள் சிவன்யா. இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள முயல, அங்கு வந்த தேன்மொழி, இருவரையும் விலக்கிவிட முயற்சிப்பது போல் நடித்தவள், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சிவன்யாவை தண்ணீருக்குள் தள்ளிவிட்டிருந்தாள். 

“ஆஆஆஆவென நீருக்குள் விழுந்த சிவன்யா, நீருக்குள் சென்று, வெளியே வர, அதனைப் பார்த்த வானதி,

“நடிக்காத.. உன்னோட ஆக்டிங் எல்லாம் என்கிட்ட செல்லாது.. போதும் நடிச்சது.. மேலேயேறி வா..” என்றவள் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே, மூச்சற்ற நிலையில் நீருக்குள் செல்லத் தொடங்கியிருந்தாள் சிவன்யா. 

“அய்யோ.. அவ தண்ணிக்குள்ள போறா.. யாராவது வந்து காப்பாத்துங்க..” என்று கத்திய வானதி, தேன்மொழியை பார்த்து,

“அக்கா.. நீதான் இறங்கி காப்பாத்தேன்.. உனக்கு தான் நீச்சல் தெரியுமே?” என்று கேட்க,

“இந்த ஸ்விங் ஃபூல் ரொம்ப ஆழமானது வானதி.. என்னால இது ஸ்விம் பண்ண முடியாது.. இரு யாராவது ஹெல்புக்கு வர்றாங்களான்னு பார்ப்போம்..” என்று தேன்மொழி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, தண்ணீருக்குள் குதிந்திருந்தாள் வானதி. நீருக்குள் போனவளை தண்ணீருக்கு  மேலே கொண்டு வந்த வானதிக்கு, அவளை தரையில் ஏற்ற முடியாது போனது. தனது அறையில் கைபேசியில் கலந்துரையாடல் நடந்து கொண்டிருக்கும் போது, எதார்த்தமாக வெளியே பார்த்த ஆதித்தன், சிவன்யாவையும் வானதியையும் தண்ணீருக்குள் தத்தளிப்பதை பார்த்ததும், மின்னலென ஓடி வந்தான்.  ஆதித்தன் ஓடி வருவதை பார்த்த, ஆருத்ரனும் அவனுடன் சேர்ந்து ஓடிவர, இருவரும் ஒரு சேர தண்ணீருக்குள் குதித்தனர். மயங்கிய நிலையில் சிவன்யாவை தூக்கி தோளில் போட்ட ஆதித்தன், அவளை நடைபாதையில் கிடத்தி, வயிற்றில் இருக்கும் தண்ணீரை வெளியே எடுக்க முயற்சிக் கொண்டிருக்க, ஆருத்ரனால் காப்பாற்றப்பட்ட வானதியோ, கவலையோடு சிவன்யாவை பார்த்திருந்தாள். வானதியின் கன்னத்தை தட்டி,

“ஹேய் வானதி.. உனக்கு ஒன்னும் ஆகலைல? ஆர் யூ ஓகே?” என்று கேட்க,

“நான் வேணும்னு எதும் பண்ணல.. தெரியாம கை தவறி.. இதெல்லாம் நடந்துருச்சு.. அவளுக்கு ஒன்னும் ஆகாதுல?” என்று குழந்தையென கேட்டவளை அள்ளி அணைத்து ஆறுதல் கூறத் தோன்றிய மனதை அடக்கிக் கொண்டான் ஆருத்ரன்.  

“இல்ல அண்ணிக்கு எதுவும் ஆகாது.. அண்ணன் பார்த்துப்பாங்க..” என்றவன் கூற, “இல்ல.. எல்லாம் என்னால் தான்.. நான் இங்க வந்துருக்கேன் கூடாது..” என்று தன்னைத்தானே வருத்திக் கொண்டிருந்தவளை, தன்னோடு அணைத்துக் கொண்டான் ஆருத்ரன். சிவன்யாவின் வாயோடு வாய் வைத்து, தன் மூச்சை கொடுத்தவன், அவளது இதயத்தின் மேல் கை வைத்து தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்க, வயிற்றில் இருந்த தண்ணீரை வெளியே துப்பியவாறு கண் விழித்தாள் சிவன்யா. அவள் கண் விழித்த மறுநொடி, அவளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் ஆதித்தன். உயிர்வலி என்பது.. தன் கண்முன்னால் தன் இணைபடும் வேதனையை காண்பது தானோ?

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *