மோகத்தால் கொல்லாதே முத்தக்காரா
முத்தம் 3
உன்னைக் காணாது நான் இன்று நானில்லை
விதை இல்லாமல் வேரில்லையே
உன்னை காணாது நான் இன்று நானில்லை
விதை இல்லாமல் வேரில்லையே
மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமகலைஞன் கண்ணா கண்ணா
மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமகலைஞன் கண்ணா கண்ணா
உன்னைக் காணாது நான் இன்று நானில்லை
விதை இல்லாமல் வேரில்லையே
உன்னை காணாது நான் இன்று நானில்லை
விதை இல்லாமல் வேரில்லையே
நிதம் காண்கின்ற வான் கூட நிஜமில்லை
இதம் சேர்க்கும் கனாக் கூட சுகமல்ல
நீ இல்லாமல் நானில்லை
உன்னை காணாமல் உன்னை காணாமல்
வெள்ளை நிற சுடிதார் அணிந்து பாடலின் வரிகளுக்கு ஏற்ப பாவனைகள் காட்டி ஆடிக்கொண்டிருந்த கயல்விழியை பார்த்த ஆண்களும் பெண்களும் விசிலடித்து ஆரவாரம் செய்தனர். அவளுக்கு கண்ணன் மிகப்பிடிக்கும் என்பதால் முகத்தில் நவரசங்களும் நர்த்தனம் ஆட ஆடிக்கொண்டிருந்தாள் கயல்விழி. அவளது மனம் முழுவதும் மாயகண்ணனே நிறைந்திருந்தான்.
ஆடி முடித்து அனைவருக்கும் வணக்கம் வைத்தவள் மேடையை விட்டு இறங்க அவளது தோழிகள் அவளை சூழுந்து கொண்டு சூப்பரா ஆடுநடி அதிலும் காவ்யா இன்னைக்கு முதல் பரிசு உனக்குத்தான் என்று உற்சாகப்படுத்தினாள்.
அனைத்து போட்டிகளும் முடிந்து வெற்றி பெற்றவர்களுக்கான் பரிசுகள் வழங்க ஆரம்பித்தனர். கயல்விழி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று ஓவர் ஆல் சாம்பியன் கோப்பை அவளுக்கு அறிவிக்கப்பட மேடை ஏறியவள் தலைமை விருந்தினர் பதக்கத்தை அவளது கழுத்தில் அணிவித்தவர் என்ன கண்ணன் மேல் அத்தனை காதலோ? உருகி உருகி ஆடுகிறாய்… இங்கே தான் உனது கண்ணன் இருக்கிறானோ? குத்தலான கேள்வியில் தூக்கி வாரிப்போட நிமிர்ந்தவள் ஓற்றை புருவத்தை மேலேற்றி என்ன அப்ப்டிதானா? என்பது போல் ஆறடி உயரத்தில் தன் முன் நின்றவனை கண்டவளின் மனதில் யார் இவர்? என்றே தோன்றியது. இதற்கு முன்னர் இவரை பார்த்தது கூட இல்லையே… அதுவும் இத்தகைய வார்த்தைகளை கூறியவனை காணும் போது கோபமே எழுந்தது.
மேடை என்பதால் அமைதி காத்தாள். என்ன நான் கூறியதை கேட்டதும் அடிக்கனும் போல் இருக்கிறதா? ம்ம்… மனதில் தோன்றினாலும் அவனிடம் கூறவா முடியும் அவளது முக பாவனைகளை மாற்றாமல் நின்றவள் அவனிடமிருந்து கோப்பையை பெற்றுக்கொண்டு விரைந்து மேடையை விட்டு கீழ்றங்கி நண்பர்களுடன் நின்றுகொண்டாள்.
விழாவிற்கு வந்திருந்தது ருத்ராதான். சமூகத்தில் அவனுக்கு நல்ல பெயர் இருப்பதால் அவனை விருந்தினராக அழைத்திருந்தனர். அன்று முக்கிய வேலை வந்து விட்டதால் நேரம் கழித்து வந்தவன் கண்டது கயலின் நடனத்தைத்தான்.
அவளது பாவனைகளும், நளினமும் அவனைத்தூண்ட அவளிடம் அத்தகைய கேள்வியை கேட்க தூண்டியது. எந்த பெண்ணிடமும் தானே சென்று பேசாத ருத்ராவை எது பேச தூண்டியது என அவனே அறியவில்லை. அவளை பிடித்திருக்கிறதா என்றாலும் நிச்சயம் இல்லை என்றுதான் கூறுவான். ஏனென்றால் அந்த அளவிற்கு அவன் காதலை வெறுக்கிறான்.
விழா நன்றாக முடிய ருத்ரா அவ்விடத்தை விட்டு கிளம்பி சென்றான். ஆனால் அவனது மனதிற்கு என்ன வேண்டும் என்ன எதிர்பார்க்கிறது என அவனே அறியவில்லை. கல்லூரியை விட்டு வரும்போது அவனது கண்கள் கயல்விழியை நோக்க அவளும் அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளது கண்கள் கோபம் கலந்த அச்சத்தையும் அதே நேரம் ஒருவித நிம்மதியையும் அவளது கண்கள் பிரதிபலிக்க அவளை பார்த்தவாரே கடந்து சென்றான்.
கயல்விழிக்கோ பயத்தில் இதயம் வெளியே எகிறி குதித்துவிடும் அளவுக்கு படபடவென அடித்து கொண்டது. அவன் வெளியே சென்ற பின்னர்தான் சற்று நிம்மதி ஆனாள்.எப்போதடா வீட்டுக்கு செல்வோம் என்று இருந்தது.
பெரிய நகைகடைக்கு முன் வண்டியை நிறுத்த அவனுக்குக்காக ஏற்கனவே காத்திருந்தான் அர்ஜுன். என்ன அர்ஜுன் என்ன சொல்றார் அந்த ரெட்டி… வழிக்கு வருவாரா? வரமாட்டாரா? நமக்கே விளையாட்டு காட்டுகிறார் பாஸ் அதனால் தான் உங்களை அழைக்க வேண்டியதாயிற்று. இருவரும் உள் நுழைவதை கண்டு முதலாளி போல் இருந்த ரெட்டிக்கு நெஞ்சில் நீர் வற்ற அதனை மறைத்தவாறே ஆயியே சாப் சொல்லிருந்தா நானே வந்துருப்பேனே வாயெல்லாம் பல்லாக மிகவும் பணிந்தவராக இடை வரை குனிந்தவரின் செயல்களை பார்த்த ருத்ராவோ இது எல்லாம் எனக்கு பழக்கபட்டதுதான் என்பதுபோல் ஸ்டைலாக கால்மேல் கால் போட்டு அமர்ந்தவன் முன்னால் பழச்சாறு அடங்கிய குவளை வைக்கப்பட அதை எதனையும் ஒரு பொருட்டாக கொள்ளாமல் பணத்தை எடுத்துட்டு வாங்க ரெட்டி ஐ காண்ட் வெய்ட் எனி மோர்…. வார்த்தைகளில் அழுத்தத்துடன் கூறியவனின் மேல் அச்சம் எழுந்தாலும் எப்படியாவது இதனை சமாளிக்க வேண்டும் என எண்ணியவர்…. சாப் இந்த மாதம் சரியாக வியாபாரம் நடக்கவில்லை விலை அதிகம் ஆனதால் மக்களும் நகை பக்கமே வரவில்லை ஏதோ கடையே கடனில் ஓடுவது போல் கூறியவரை கண்டவன் ஓகோ…. அப்படியா?
இந்து உங்க அக்கவுண்ட் நம்பர் தானே ரெட்டி தாளை வாங்கி பார்த்தவர் அதிர்ச்சியுடன் ஆம் என்றார் அதில் சுமார் ஐம்பது லட்சம் டெபாசிட் செய்யப்பட்டதற்கான ரெசிப்ட் இருந்தது.
சாப் என்னை மன்னிச்சுறுங்க தெரியாமல் செய்துவிட்டேன் என்றவரை யாருக்கு வேண்டும் உன் மன்னிப்பு எனக்கு தேவை என்னுடைய பணம் என்றவாரே அனல் பார்வை பார்த்தவன் விருட்டென்று எழுந்து வைர நகை பிரிவு பக்கம் சென்றவனை கண்ட மேனேஜர் விலை உயர்ந்த வைர நகையை வாங்கியவன் கடையை விட்டு வெளியேறும்போது ருத்ரா பார்த்த பார்வையில் எச்சில் கூட்டி விழுங்கினார் ரெட்டி.
அவன் நகை வாங்கியதே ஒரு வித ஆச்சரியத்தோடு பார்த்திருந்த அர்ஜுன் அவனது கையில் இருந்த நகையை கண்டதும் விழி விரித்தவன் பாஸ்…. இது… வார்த்தைகள் வராமல் தடுமாறியவன் என்றும் போல் இன்றும் அவனது செயலுக்கான அர்த்தம் புரியாமல் குழம்பியவன் எப்படியும் தான் கேட்டால் கூறப் போவதில்லை அவரே கூறட்டும் என்று விட்டுவிட்டான்.
செல்வ நாயகம் தனது கடையை விரிவுபடுத்தும் வேலையை தொடங்கினார். கடையை விரிவு படுத்துவதை மாட் வீட்டில் கூறியவர் அதற்கான பணம் எப்படி வந்தது என்பதை கூறவில்லை. சில ஆண்கள் தொழில்களை பற்றி வீட்டில் கூறாமல் விடுவதால் அதில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி வீட்டு பெண்களுக்கு தெரியாமலே போகிறது.
வீட்டுக்கு வந்த கயல்விழி யாரிடமும் எதுவும் கூறாமல் படுக்கையில் விழுந்தவள் மனம் முழுவதும் கல்லூரியில் சந்தித்த நபரை பற்றியே வலம் வந்தது. அவனால் தனக்கு ஏதும் பிரச்சனை வருமா? இதனை வீட்டில் கூறலாமா? ஒரு மனம் கூறு என்க மறு மனமோ ஏற்கனவே பயந்த சுபாவம் என்ற கவலையில் உள்ளனர் அதனால் கூறாதே என்க இறுதியாக கூற வேண்டாம் என்று முடிவு செய்தாள்.
மித்ராவுக்கு அன்று பள்ளி இறுதி தேர்வு முடிந்ததால் நண்பர்களுடன் மாலுக்கு வந்திருந்தாள். அங்கிருந்த ரெஸ்டாரண்டில் அமர்ந்து தங்களுக்குள் அரட்டை அடைத்தபடி உண்டவர்களின் பேச்சு அடுத்து என்ன என்பதை பற்றி வர ஒவொருவரும் தங்களது விருப்பத்தை கூற மித்ராவோ நான் கல்யாணம் பண்ண போகிறேன்… வாட் கல்யாணமா?
ஏண்டி இந்த முடிவு தோழிகள் அதிர்ச்சியுடன் பார்க்க கல்யாணம் தான முடிக்க போறேன் சொன்னேன் என்னவோ ஓடிப்போக போறேன் சொன்ன மாதிரி இவ்வளவு ஷாக் எதற்கு சாப்பிடுங்க சாப்பிடுங்க…. மாப்பிள்ளை யாருடி…. தோழி ஒருத்தி கேட்க வேர யாரு அர்ஜுன் தாஸ் தான்… ஏய் அவரு வில்லன்டி ஆமா இப்பெல்லாம் வில்லன்தான் கெத்து என்றவளின் அருகில் வாலிபன் ஒருவன் நிற்க யாருடா இந்த சுமார் மூஞ்சி குமாரு என பார்த்தவளிடம் என்ன?… ஏதாவது வேணுமா? சேரை விட்டு எழவும் ஒன்னும் இல்லை சிஸ்டர் என ஓடிவிட்டான்.
யாருடி அந்த பையன் நம்ம சீனியர்தான் பையன் ஆறுமாதமா பின்னாடியே வருகிறான். ஏற்கனவே ஒரு முறை அறை வாங்கி இருக்கிறான் இன்னொரு முறை கொடுத்தால் சரியாகி விடும்.
உனக்கு அவனை பார்த்தால் பயம் இல்லையா? நான் ஏன் பயப்படனும்? இந்த மித்ரா யாருக்கும், எதுக்கும் பயப்பட மாட்டாள். சாக்லெட்டை உண்டபடி லிப்பிடில் ஏறிவள் கவனம் முழுவதும் சாக்லேட்டின் சுவையில் லயித்து இருந்தததால் தோழிகள் தன்னுடன் வராததையோ தான் மட்டும் லிப்டில் ஏறியதையோ அறியாமல் நின்றவளின் காதில் யார் உன் பின்னாடி வந்தாலும் அடிப்பியா பேபி? எங்கே இந்த மாமனையும் அடி என முன்னால் வந்தவனை கண்டவள் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். அவளது அதிர்ச்சியை கண்டு மனதிற்குள் சிரித்தவன் வாய் ஓரத்தில் வழிந்த சாக்லேட் துளிகளை துடைத்தவன் கையில் இருந்த சாக்லேட்டின் ஒரு பகுதியை கடித்தவன் வெரி டேஸ்டி அண்ட் லிட்டில் பிட் பிட்டர் லைக் யூ புஜ்ஜி என்ற அர்ஜுன் அடுத்து வந்த தளத்தில் வெளியேறியவன் அவளை பார்த்து கண்ணடித்தபடி அங்கிருந்து சென்றான்.
எங்கிருந்து வந்தான்? என்ன செய்தான்? என்பது எதுவும் புரியாமல் உறைந்து நின்றவள் லிப்ட் நின்ற பின்னரே கீழ் தளம் வந்ததை அறிந்தவள் ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டதை போல் வெளிவந்தவளை அவளது தோழிகள் சூழுந்து கொண்டனர். அவர்கள் பேசிய எதுவும் அவளது காதில் விழவில்லை.
முத்தம் தொடரும்….
