மோகத்தால் கொல்லாதே முத்தக்காரா
முத்தம் 8
காமினியின் செயலில் சற்று அதிர்ந்தாலும் பொது இடம் என்பதால் தன்னை சமாளித்து நின்றவனின் பார்வையோ கயலை தழுவ இதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதுபோல் அலட்சிய பார்வையுடன் இதழ்கள் சுளிக்க இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தாள்.
ருத்ரா திமிர் பிடித்தவன், சக மனிதரை மதிக்க தெரியாதவன், காமிநியின் தோற்றமும் செயலும் நிச்சயம் நல்லவளாக காட்டவில்லை. இந்த பொருத்தம் போதுமே இருவருக்கும் என்னும் எண்ணமே மேலோங்கி இருந்தது கயலுக்கு.
அர்ஜுனுக்குத்தான் மனம் பொருக்கவில்லை கயளிடம் பொரிந்து தள்ளி கொண்டிருந்தான் இவர் பாஸா? இல்லை லூஸா? இந்த மேனாமினுக்கி முத்தம் கொடுத்தாள் அந்த இடத்தில் இரண்டு அறை விடாமல் ஏதோ விருது வாங்கியது போல் போஸ் கொடுப்பதை பார்…. எனக்கு வரும் ஆத்திறதுக்கு பத்துகிலோ கேக்கையும் அவளது தலையில் அபிஷேகம் செய்துவிடுவேன்.
அர்ஜுன் வருங்கால முதலாளி அம்மாவை பகைத்து கொள்ளாதே? சேதாரம் உனக்குத்தான்…. கயல் கேலியுடன் கூற
இவளா? அப்படி ஒன்று நடந்தால் பாஸை டைவர்ஸ் செய்வது தவிர வேறு வழி இல்லை என்றவனை கண்டு கயல் சிரிக்க இவர்களின் சம்பாசனையை பார்த்து கொண்டிருந்த ருத்ரா விரைந்து வந்தவன் கயளின் கரம் பற்றி மேடைக்கு அழைத்து வந்தவன் சாரி பார் தி இன் கண்விஏணியன்ஸ்….. ப்ளீஸ் பீ சீடட்…. அண்ட் மீட் மை ஹனி…. கயல்விழி…. என அனைவருக்கும் அறிமுகப்படுத்த அதிர்ச்சியில் விழிகள் சாசர் போல் விரிய நிமிர்ந்து ருத்ராவை பார்க்க அவனோ நெடுங்காலம் இருவரும் காதலர்கள் போல் காதல் பார்வை பார்த்து கண்ணடிக்க அவனது பார்வையின் வீச்சை தங்க முடியாமல் தலை குனிந்தவள் கையை விலக்க போராட அவளது விலகலை சடுதியில் முறியடித்து இடையில் கரம் கொடுத்து தன்னுடன் சேர்த்து அணைக்க கயல் விழி தீப்பார்வை பார்க்க சற்று முன் விலகி நின்றாயே பெண்ணே இப்போது என்ன செய்வாய் என்பது போல் பார்த்தவனை வெட்டவா குத்தவா என்பது போல் பார்த்தாள்.
அவளது சேலை மிகவும் இறங்கி இருந்தது அதனை உணராமல் அவள் வேலை செய்ய அதனை சரி செய்யவே அவள் அருகில் சென்றான் ஆனால் அவளது மருட்சி கலந்த விலகல் சினம் மூட்ட அவள் நீரில் விழுவாள் என அறிந்தும் உதவி செய்யவில்லை.
மேடையில் நிற்கும் போது அவளது ஏளனம் கலந்த பார்வையும், அவளது சிரிப்பும் வெறுப்பேற்ற அவளை அழைத்து வந்துவிட்டான். அவள் மேல் காதல் இல்லை பழி வெறி மட்டுமே இருந்தது.
காமினிக்கோ எரிச்சல் வந்தது. தான் இத்தனை நாட்கள் கட்டிய மனக்கோட்டை நொடியில் சரிந்ததை அவளால் ஏற்க முடியவில்லை. கயலை அவமானப்படுத்த எண்ணியவள் ருத்ரா…. உங்கள் முடிவு இத்தனை கீழ் தரமானதாக இருக்கும் என்று நினைக்கவில்லை போயும் போயும் ஒரு வேலைக்காரித்தான் உங்களுக்கு கிடைத்தாளா? ஒரு வேளை உங்கள் உடம்பில் ஏதேனும் பிரச்சனையா? அதை மறைக்கவே இவளை திருமணம் செய்கிறீர்களா? வார்த்தையிலும், கண்களிலும் குரூரம் மேலோங்க கேட்டவளை கொல்லும் வெறி எழுந்தாலும் மீடியா இருப்பதால் பொறுமை காத்தவன் வீட்டுக்கு வந்த விருந்தினர்களை வீட்டு ஆட்கள் உபசரிப்பதுதான் முறை…. மிஸ் காமினி…. உங்கள் அம்மா உங்களுக்கு உணவு பரிமாறினாள் அவங்க உங்க வீட்டு வேலைக்காரியா? ஒற்றை புருவத்தை ஏற்றி கேட்டவனின் கேள்வியில் தலை குனிந்து நின்றவளின் அருகே வந்தவன் முகத்தில் புன்னகையை தவழ விட்ட படி என்னுடைய ஆண்மையை உன்னிடம் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை…. என் மனைவி கூறட்டும் என்றவன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்றவனின் முகம் பார்த்தவள் அதிர்ந்து நின்றாள்.
அவசர பட்டு வாயை விட்டு விட்டோமோ? என எண்ணியவள் மன்னிப்பு வேண்ட அவளை கண்டுகொள்ளாமல் அனைவரையும் நோக்கி திரும்பியவன் விரைவில் திருமண தேதி அறிவிக்க படும் என்றான்.
சார் இந்த பார்ட்டி உங்கள் திருமணத்தை அறிவிக்க தானா? கூட்டத்தில் ஒருவர் கேட்க ஆம் என்றவரிடம் சார் அப்ப மோதிரம் மாற்றலாமே….. ஒய் நாட் என்றவன் மோதிரத்தை எடுத்து கயலின் கரத்தில் மாட்டிவிட்டு புறங்கையில் முத்தம் கொடுக்க அவளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தாங்காமல் தான் எங்கே மயங்கி விடுவோமோ என்ற அச்சம் எழுந்தது.
அர்ஜுன் கயலிடம் மோதிரம் போட சொல்ல அவளது கரம் பயத்தில் நடுங்கியது அவளது நடுக்கத்தை கண்டவன் இப்ப போடல… கையில் கொடுத்த முத்தம் இதழுக்கு மாறிவிடும் என்றவனை கண்டவலோ எங்கே செய்தாலும் செய்துவிடுவான் படுபாவி என அர்ச்சித்தவள் மோதிரம் போட்டுவிட்டு அர்ஜுன் பக்கம் திரும்ப அவளது காதில் இந்த பொறுக்கிக்கு ஏற்ற ஜோடி நீதான் ஹனி என்க இவனுக்கு எப்படி அனைத்தும் தெரிகிறது…. என விழி அகல பார்த்தவளுக்கு எங்கே தெரிய போகிறது அவளது விழியே அவளது எண்ணங்களை பிரதிபலிக்கிரது என்று.
அர்ஜுனுக்கு மிக்க மகிழ்ச்சி ருத்ராவின் மீது இருந்த வருத்தம் கோபம் அனைத்தும் பனி போல் விலக அவனை ஆரதழுவிக்கொண்டான். சூப்பர் பாஸ்… இப்பதான் ரொம்ப சந்தோஷமா இருக்கு என தன் வாழ்த்துக்களை தெரிவித்தவன் கயலுக்கும் வாழ்த்து கூற தவறவில்லை.
காமினியின் பிறந்தநாள் என வந்த ஊடகவியாளர்களுக்கு லட்டு போல் ருத்ராவின் திருமண செய்தியும், அவர்களது மோதிரம் மாற்றும் படைப்பும் கிடைக்க மறுநாள் விடியலின் ஹாட் டாபிக் ஆனார்கள்.
கயலின் குடும்பம் அவளின் திருமண செய்தியை பார்த்து அதிர்ந்தவர்கள் நிச்சயம் இத்திருமனம் அவளது விருப்பமின்றி தான் நடக்கும் என்பதை அறிந்தாலும் ருத்ராவிடம் கேட்கும் தைரியம் யாருக்கும் வரவில்லை.
கயல்விழியோ தனது அறைக்கு வந்தவள் மோதிரத்தை கழட்டி தூர எறிந்தவள் இப்போதே இங்கிருந்து சென்றே ஆக வேண்டும் என எண்ணியவள் பின்பக்கம் சென்று வழியை பார்க்க அவளை வரவேற்றது என்னவோ மிகப்பெரிய சுவர்தான்.
சுற்றிலும் தேட சிறு கம்பு கூட அவளுக்கு கிடைக்க வில்லை. மனம் சோர்வுற திரும்பியவளை வரவேற்றது என்னவோ ஜிம்மியும், டாமியும்தான். அய்யோ இதை எப்படி மறந்தோம் பயத்தில் நா உலர அடுத்து என்ன செய்வது என புரியாமல் நிற்க ஜிம்மி, டாமி அட்டாக் ஹேர் என்ற கட்டளை பிறக்க இரண்டும் பாய்ந்து சென்றன.
அதன் கோர பற்களை கண்டு உயிர் பயத்தில் இருந்தவள் இன்றுடன் வாழ்க்கை முடிந்தது போல் கண்கள் மூடி சுவரில் பல்லி போல் ஒட்டி நின்றாள்.
ஐந்து நிமிடம் ஆகியும் எதுவும் ஆகாமல் இருப்பதை கண்டு விழிகளை மெல்ல திறக்க நாய்கள் இரண்டும் ருத்ராவின் இருபக்கம் நாக்கை தொங்க போட்டுகொண்டு நின்றது. கோ என்றதும் இரண்டும் தங்கள் இடத்திற்கு செல்ல அவள் அருகில் வந்தவன் என்ன பணம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டு செல்லலாம் என்று பார்கிறாயா?
ஏமாற்றுவதே வேலையாக செய்வாயோ? ம்ம்ம்… என்றவனிடம் எனக்கு பிடிக்கலை…. என்னையவா? இல்லை இந்த திருமணத்தையா? இரண்டும்தான் மெல்லிய குரலில் கூறியவளின் நாடியில் கைவைத்து தன்னை பார்க்க செய்தவன் எங்கே மறுபடியும் கூறு என்றவனை உறுத்து விழித்தவளோ…. எனக்கு உங்களை….. பிடிக்க…. என்றவளின் இதழ் வன்மையாக சிறைபடுத்தப்பட்டது ருத்ராவால்.
ருத்ராவின் தந்தை மகனது திருமண செய்தி கேள்வி பட்டு சந்தோசம் அடைந்தார். எங்கே தன் மேல் உள்ள வெறுப்பில் திருமணம் செய்யாமல் இருந்து விடுவானோ என அஞ்சியவருக்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்தது.
ருத்ராவின் அதிரடியில் மிரண்டவள் அவனது மார்பில் கை வைத்து தள்ள அவனது பிடியோ இரும்பு பிடியாக இருந்தது. ஆணின் முதல் ஸ்பரிசம் காதலுடன் முத்தமிட்டால் இந்நேரம் அவனது முத்தத்தில் மயங்கி கிறங்கி இருப்பாள்.
கட்டாயப்படுத்தி ஒருவரின் மனதை மாற்ற முடியாது. பிடிவாதமாக அவனை தள்ளியவள் மேல்மூச்சு வாங்க அவனை பார்க்க அவனோ இனிமேல் தப்பிக்க நினைத்தால் இதுதான் நடக்கும் என கூற இதற்கு என்னை கொன்றே விடலாம் என்றவளை விளங்கா பார்வை பார்த்தவன் முகத்தை கடினமாக்கி மறக்காமல் மோதிரத்தை போடு இல்லையென்றால் அதை நானே போட்டுவிடுவேன் எப்படி வசதி எனவும் அவனை தாண்டி சென்றவள் சட்டென்று அறையை சாத்தி அடைத்தாள்.
ருத்ரா அங்கிருந்த புல்வெளியில் தலை வைத்து படுத்தவன் வானத்தில் உலா வரும் நிலவை பார்க்க அதுவோ மேகத்தில் நுழைந்து கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்தது.
மித்ரா காரணமே இல்லாமல் அர்ஜுன் மேல் கோபம் கொண்டாள். மாலில் சந்தித்த பிறகு அவனை பார்க்கவில்லை ஏனோ அவளே அறியாமல் அவளது மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்துவிட்டான்.
அக்காவின் திருமணம் பற்றி கட்டாயம் அவனிடம் பேச வேண்டும் என எண்ண அதற்கான சந்தர்ப்பம் எதிர்பாராமல் அவளை தேடி வந்தது.
முத்தம் தொடரும்…..
