காதல்!! கசடற கற்க…

This entry is part 4 of 24 in the series காதல்!! கசடற கற்க

காதல்!! கசடற கற்க

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

4
காதல்!! கசடற கற்க…
ஜியா ஜானவி ❤️
வீட்டிற்கு வந்த கொண்டிருந்த ஹரிணிக்கு சித்தார்த்தின் பேச்சே நினைவடுக்குகளில் சுழன்று கொண்டிருந்தது. ‘அப்படி நான் என்ன தவறாக சொல்லிவிட்டேன் அவரிடம்.. தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டு அதன் பின் காதல் செய்யலாம் என்று சொன்னது அப்படி ஒரு பெரும் குற்றமா?? அப்போது நானும் சிறு பெண் தானே எனக்கும் காதலை பற்றி என்ன தெரிந்திருக்கும்.. இந்த காதல் அடித்து துவைத்து ஆழியென தமக்குள் சிறை வைத்துக் கொள்ளும் என்று கனவா கண்டேன்!!’ என்று யோசித்துக் கொண்டே வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தாள்.
“இப்போ வந்த காதல் ஏன் எனக்கு அப்போது அவர் மீது வரவில்லை?? 
‘சொல்லி வருவதில்லை காதல்!! சொன்னாலும் புரிவதில்லை காதல்!!’ என்று அவன் சொன்ன வார்த்தைகள் அவளின் மனதில் ஆட.. உண்மைதான் இப்போது நான் உணர்ந்து கொண்டேன் என்று கூறினாலும் அது அவருக்கு தவறாகத்தான் படும். வேண்டாம்!! வேண்டாம்!! இந்த காதல் என் மனதுக்குள்ளேயே புதைத்துக் கொள்கிறேன்,
இல்லையென்றால் சீனியர் சொன்னது போல அவரின் பணத்திற்காகத்தான் நாம் அவர் பின்னே சுற்றுகிறோம் என்ற நினைப்பு அவருக்கு வந்துவிடும். ஏற்கனவே என்னைப் பற்றிய நல்ல எண்ணம் அவருக்கு இல்லை அதனோடு இதுவும் சேர்ந்தால்.. அவ்வளவு தான்!! வேண்டாம் சாமி!!” என்று வெகு சரியாக தவறான முடிவை எடுத்தவள் சித்தார்த்தின் நினைவினிலே வண்டி ஓட்டிக் கொண்டே செல்ல, அடுத்த வந்த திருப்பத்தில் வேறொரு வண்டி மீது மோதி விட்டாள்!!
மோதிய வேகத்தில் சட்டென்று பேலன்ஸ் தவறி வண்டியோடு அவள் சாய்ந்து விட.. எதிரில் வந்தவனுக்கு தவறு இவள் மீது என்று தெரிந்திருந்தாலும் இப்படி விழுந்து கிடப்பவளை பார்த்தவனுக்கு மனது கேட்காமல் சென்று உதவினான். முதலில் வண்டியை தூக்க, அவளது காலோ சக்கரத்தில் அடியில் மாட்டிக் கொண்டிருந்தது.. “வெயிட்! வெயிட்!! மிஸ்!!” என்றவன் மெதுவாக அவளது காலை விடுவித்து வண்டியை ஓரமாக நிறுத்தி அவளது கையைப் பிடித்து எழுப்பினான்.
“ஸ்ஸ்ஆஆஆஆ..” என்று காலை கீழே ஊன்ற முடியாமல் அவள் வலியில் துடிக்க.. 
“ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ் காலை காட்டுங்க நான் வேணா பார்க்கிறேன்” என்றான்.
கணுக்காலில் வலி மிக.. அந்நிய ஆண் ஒருவனிடம் காலை காட்ட அவளுக்கு சற்றும் விருப்பமில்லை “இட்ஸ் ஓகே சார்!! நான் பாத்துக்குறேன்” என்றவள், வண்டியை எடுக்க செல்ல.. ஆனால் அவளால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை, முகத்தை சுழித்திலிருந்தே அவளின் வலியை கண்டு கொண்டான் அவன்.
“சற்று பொறுங்க” என்றவன் அவள் மறுக்க சட்டென்று அவளது காலை எடுத்து தன் தொடை மீது வைத்து பார்த்தான். அவன் அப்படி செய்ததில் அவள் பேலன்ஸூக்காக அவனது தோளைப் பற்றிக் கொள்ள.. 
“காலில் அடியெல்லாம் ஒன்னும் படல.. ஸ்பிரெய்ன் மாதிரி இருக்கு. போகும்போது டாக்டர் கிட்ட காட்டிட்டு போங்க.. இல்ல நடக்கவே முடியாம கால் வலிக்கும்” என்று அவன் காலை ஆராய்ந்து கொண்டே அவளிடம் கூறினான்.
அவளும் நெளிந்து கொண்டே காலை அவனிடமிருந்து பிரிக்க முயல.. “இவ்வளவு டென்ஷன் வேண்டாம்!! டாக்டர் பாக்குற மாதிரி நினைச்சுக்கோங்க” என்றவன் அவளை பார்த்து புன்னகை செய்ய.. அதில் தெரிந்த ஸ்நேகம் அவளையும் புன்னகைக்க சொன்னது. அவளும் இதழ் விரித்து “கண்டிப்பா டாக்டரை பார்த்துட்டு தான் போகணும்” என்றாள்.
ஹரிணி கிளம்பிய சற்று நேரத்திலேயே ஷூட்டிங்க்காக அந்த வழியே சென்ற சித்தார்த்தின் கண்களுக்கு இந்த காட்சிப்பட்டது..  அவள் கீழே விழுந்தது இவன் காப்பாற்றியது எல்லாம் அவனுக்கு தெரியாது. புன்னகை முகமாக தனது காலை அவனிடம் காண்பித்துக் கொண்டிருக்கும் ஹரிணியின் முகம் மட்டுமே அவனின் கோபத்தை தூண்ட போதுமானதாக இருந்தது!! போதாக்குறைக்கு அவளது மென்கரங்கள் அந்த முகம் தெரியாத முதுகை காட்டி அமர்ந்திருக்கும் வாலிபன் தோளின் மீது இருக்க.. சொல்லவும் வேண்டுமா அவனது உக்கிரத்தின் அளவை!!
ஏற்கனவே ஆடுபவன்.. இப்போது சலங்கை வேற கட்டி விட.. அய்யோ பாவம் ஹரிணி!!
போகும் வழியில் மருத்துவரிடம் காட்ட “லேசான மசில் ஸ்ப்ரெய்ன் தான்.. கொஞ்சம் ஐஸ் கட்டி வைச்சு ஒத்தடம் கொடுங்க.. கூடவே இந்த டேப்லெட் எடுத்துக்கோங்க” என்று விட..
இரவு வேலை முடிந்து வந்த தியாகராஜன் மகள் லேசாக கால் உந்தி உந்தி நடப்பதை பார்த்து பதறி போய், “என்னாச்சு டா ஹரி?” என்று பதட்டத்துடன் கேட்க..
இவள் வண்டியில் போய் மோதியதைக் கேட்டால் இன்னும் அவர் பயந்து போவார் என்று நினைத்து “வண்டியில் வரும்போது லேசாக சறுக்கி விட்டுடுச்சு பா, டாக்டர் கிட்ட காட்டிட்டு வந்துட்டேன் ஒன்னும் ப்ராப்ளம் இல்லை பா.. கூல்” என்றாள்.
ஆனாலும் அவருக்கு மனது சமாதானம் ஆகவில்லை “இதுக்கு தான் உனக்கு வண்டி வேண்டாம்.. கார் வாங்கி தரேன்னு சொன்னேன். நீ தான் கேட்கவே இல்லை. இனி கால் சரியாகும் வரை வண்டியை தொடவே கூடாது” என்று அவர் கண்டிப்போடு சொல்ல.. பெரும்பாலும் மகள் விருப்பத்திற்கே நடக்கும் அன்பு தந்தை அரிதாகத்தான் கண்டிப்பார். அதுவும் மகளின் நலனுக்காகவே!!
நாளைக்கு சித்தார்த் வீட்டுக்கு போவதா வேண்டாமா என்ற யோசனையில் இவள் இருக்க..  “ஹரி நாளைக்கு உன்னால் முடிஞ்சா சித்தார்த் வீட்டுக்குப் போ.. இல்லைன்னா ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு நாளை மறுநாள் போகலாம்” என்று தந்தை கூறவும் அதுவே சரி என்று நினைத்தவள் மறுநாள் அவனைப் பார்க்க செல்லவில்லை.
ஏற்கனவே ஹரிணியை வேறு ஒருவனோடு பார்த்ததுமே அவனது கோபம் பன்மடங்காக பெருக, ஷூட்டிங் ஸ்பாட்டில் அவன் அவனாகவே இல்லை. பெரும்பாலும் அனைவரிடமும் இன்முகமாக பழகும் “இவனுக்கு இன்று என்ன ஆச்சு??” என்று கேட்கும் அளவுக்கு இருந்தது அவனோட பர்ஃபாமென்ஸ்!!
டைரக்டரிலிருந்து ப்ரொடியூசர் அவனது கோ ஆக்டர்ஸ் என்று அனைவரும் மாறி மாறி கைலாசத்தை தான் கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைந்து எடுத்தனர். அவனுக்கும் பதில் தெரிந்தால் அல்லவா சொல்லுவான்??
அதே கோபத்தோடு வீட்டுக்கு வந்தான் சித்தார்த்.. “மை சன்!!” என்று அன்னையின் அழைப்பில், முகத்தை சீர் செய்து கொண்டான். எப்பொழுதும் கோபத்தை அவரிடம் மட்டும் காட்டவே மாட்டான். தந்தை இல்லாமல் அன்னை அவர்களை வளர்க்க என்ன பாடு பட்டார் என்பதை அவன் நன்கு அறிவான். அதனால் எவ்வளவு கோபம் என்றாலும் அது வீட்டுக்கு வெளியில் செருப்பை கழட்டி போடுவது போலவே தான் அவனுக்கு!!
“மா கொஞ்சம் டயர்டா இருக்கு. எனக்கு சாப்பாடை மேல கொடுத்துவிடுங்க” என்றவன் விடுவிடுவென்று சென்று விட.. அவ்வப்போது இதுமாதிரி நடப்பதுதான் அதனால் சித்தார்த்தின் அம்மா பார்வதி சரி என்று வேலையாளிடம் உணவு கொடுத்து அனுப்பினார்.
“டேய் கைலாசம்..
மை சன்னுக்கு என்ன ஆச்சு.. ஏன் இவ்ளோ டல்லா இருக்கான். இன்னிக்கு ஜாஸ்தி வேலையா?” என்று அன்னையாக அவர் விசாரிக்க.. 
திருதிரு என்று விழித்தவன் “ஆமாம் மம்மி இன்னிக்கி பைட் சீன் அதான் சாருக்கு ரொம்ப டயர்ட் ஆயிட்டாரு” என்றவன் அதற்குமேல் நின்றால் அவர் கேட்கும் கேள்விகளுக்கு ஏதாவது உளறி வைப்போம் என்று அவர்கள் வீட்டுக்குப் பின்னால் இருந்த அவுட் ஹவுசுக்கு சென்று விட்டான். 
அறைக்கு வந்தவனுக்கோ கொஞ்சமும் கோபம் மட்டும் பட மறுத்தது..‌ இவ்வளவு நாட்களாக அவளிடம் கோபத்தை எப்படி காட்டுவது என்று தெரியாமல் விழித்தவன்.. இன்று கோபத்தோடு தாபத்தையும் காட்டியிருக்க..  அது சிறு துளி கூட பெரு வெள்ளமாய் இவனை மூழ்கடித்தது.
“நாளைக்கு வரட்டும்??” என்று இவன் காத்திருக்க.. அவளோ  உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வரவில்லை என்று கைலாசத்திற்கு போன் செய்து கூறிவிட்டாள்.
அவனும் அதை சித்தார்த்திடம் கூற, ஜிம்மில் தெரட் மில்லில் இருந்தவன் இன்னும் வேகமாக ஓடத் தொடங்கினான் கோபத்தை தணிக்க..  அவனுடைய வேகத்தைப் பார்த்து அருகிலிருந்த கைலாசம் தான் “ஐயோ சார் இந்த வேகத்தில் ஓட்டினால் காலுல உள்ள ஜவ்வு மட்டுமில்லை நரம்பும் சேர்ந்து பிய்ச்சிக்கும்” என்று அவனை கஷ்டப்பட்டு தெரட் மில்லை ஆப் செய்து இறக்கி விட்டான்.
வியர்வை ஆறென பெருகி வழிய வெற்று மார்போடு அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தவன்.. எப்படி அவள் வராமல் இருக்கலாம் என்று எண்ணம் ஓட..
அந்த எண்ணம் கொஞ்சம் கொஞ்சம் வலுக்க நேற்றைய விட இன்றைக்கு அனைவரையும் வறுக்க தொடங்கினான்.
இன்று ஷூட்டிங்கில் அவனுக்கு காதலியோடு இணைந்து நடக்கும் முத்தக்காட்சி ஒன்று படமாக்கப்பட இருந்தது. 
இந்த சீனை அசிஸ்டன்ட் டைரக்டர் வந்து சித்தார்த்திடம் விவரிக்க.. கேட்டுக்கொண்டிருந்த சித்தார்த்தை விட கைலாசலத்திற்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. “நேற்றிலிருந்து சார்.. சாராகவே இல்லை!! என்னாச்சுன்னு கேட்டாலே நெற்றிக் கண்ணை திறக்கும் சிவன் போல உக்கிரமா பாசமா பார்க்கிறாரு.. இதுல இவனுங்க வேற வந்து லவ் சீன சொல்றாங்க.. என்ன ஆகப் போகுதுன்னு தெரியலையே.. பாவம் யாரு பெத்த பிள்ளையோ??” என்று சற்றுத்தள்ளி குடைக்கு கீழே அமர்ந்து தனது மேக்கப்பை பத்தாவது முறையாக சரிசெய்து மேலே ஒரு கோட்டிங் கொடுத்துக்கொண்டிருந்த ஹீரோயினை தான் பாவமாக பார்த்தான் கைலாசம்.
“டேக் போசிஷன்!! ஆக்ஷன்?!” என்று டைரக்டர் குரல் கொடுக்க..
“பேபி..‌ நீ எனது உயிர்த்துடிப்பு.. அதை எனக்கு நிரூபிக்க தெரியல.. எனக்கு தெரிந்த வழி இதுதான்” என்றவன் தனக்கு முன்னால் இருந்த ஹீரோயினை இடை வளைத்து முகத்தை அவனை நோக்கி நிமிர்த்தி மெல்ல குனிந்து முத்தமிட செல்ல.. 
நேற்று இதே நேரம் வெல்வெட்டா போர்த்தியது போல வலு வலு என்ற இடையும்.. நன்றாக சிவந்த செர்ரிப்பழ உதடுகளும்.. அவளின் பிரத்தியேக வாசமும்.. கூடவே என்ன சுவை என்று தெரியாத இதழ் ரசத்தின் சுவையும் அவன் நாவில் இன்னும் மிச்சம் இருக்க.. சடுதியில் நினைவு வந்த அனைத்தும் சித்தார்த்தை அந்தப் பெண்ணிடம் மேலும் நெருங்க விடாமல் தடுத்தது.
ஆனாலும் இத்தனை நாட்களாக அவளை மறக்க முயற்சி செய்து அதற்குப் பலனும் கண்டவன் ஆயிற்றே!!
‘அதனால் நீ எப்படி என் ஞாபகத்திற்கு இப்போது வரலாம்?’ என்று அவள் மீது கோபம் கொண்டு அந்தக் கோபத்தின் விளைவாய் எதிரே இருந்தவளை, ஹரிணி என்று நினைத்து அவளது இடையை அழுத்தமாக பற்றி தாடையை இறுக்கமாக அழுத்த.. அந்த பெண் இவனின் இந்த செயல்களை கண்டு சற்று மிரண்டு போக, சட்டென்று ஞாபகம் வந்தவனாய் அவளை தள்ளி நிறுத்தியவன் “இன்னைக்கு வேற சீனு வச்சுக்கலாம்” என்று தன் கேரவனுக்குள் புகுந்து கொண்டான்.
உள்ளே நுழைந்தவனோ கேரவன் உள்ளேயே வீறு கொண்ட வேங்கையென விடுவிடு என நடைபயின்று கொண்டிருந்தான். “எப்படி அவள் என் ஞாபகத்திற்குள் வரலாம்? இவ்வளவு நாட்களாக நான் வளர்த்து வந்த என் இமேஜை எல்லாத்தையும் ஒரே ஒரு ஷாட்டுல தூக்கிப் போட்டு மிதித்து விட்டாள் ராட்சசி!! ராட்சசி!!” என்று எங்கோ சென்னையின் ஒரு மூலையில் தன் வீட்டு அறையில் கால் வலிக்கான மருந்தை உட்கொண்டு உறங்கிக் கொண்டிருந்தவளை திட்டிக் கொண்டிருந்தான் யஷ் சித்தார்த்!!
அவளை மறந்தால் அல்லவா ஞாபகப்படுத்த.. நீர் புத்த நெருப்பென அவளின் காதல் இருக்க.. கங்குகளாய் கோபம் கனன்றது நடிகனுக்குள்!!
அதன்பின் பலநாள் பழக்கமாக கடினப்பட்டு தனது மனதை ஒருநிலைப் படுத்தி மற்ற சீன்களை எல்லாம் வெகு சிறப்பாக நடித்துக் கொடுத்து அதன் பின்னே வீடு வந்து சேர்ந்தான் சித்தார்த்!!
வீட்டிற்கு வந்தாலும் அவள் ஏன் வரவில்லை என்ற வினாவே தான்.. அவள் சொன்ன உடம்பு சரியில்லை என்ற காரணத்தை எல்லாம் இந்த நடிகன் நம்பவே இல்லை.. 
“என்கிட்டயே நடிக்கிறா.. நாளைக்கு வாடி!!” என்று பஞ்சு மெத்தையில் படுத்தாலும் உறக்கம் கொள்ளாமல் அவன் கண்களுக்குள் சிரித்த முகத்துடன் மற்றவனின் தோளில் கை வைத்து இருந்த ஹரிணியின் முகமே திரும்பத் திரும்ப வந்து போக..
ஒருவேளை அவன் அவளின் காதலனாக இருப்பானோ?
இருவரும் இன்று வெளியே பார்த்துக் கொள்வதற்காக உடம்பு சரியில்லை என்று பொய் சொன்னாளோ?
நிஜமாவே என்னை மறந்து வேறு ஒருவனை தேர்ந்தெடுத்து விட்டாளா??
இல்லையே அன்று பிப்ரவரி போர்டின் காதல் தினத்தன்று கடற்கரையில் காத்துக் கொண்டு நின்றாளே!!
அவள் பார்க்க வேண்டும்.. நான் வராததை எண்ணி கேட்க வேண்டும் என்று தானே வேண்டுமென்றே அவ்வழியே நான் சென்றேன்.. 
என்ற மனதின் சிந்தனைகள் பலவாறு சுற்றி சுழன்றது சித்தார்த்துக்கு!!
மனம் ஒரு குரங்கு!! எதை நினைக்காதே என்று சொல்லாகிறோமோ?? அதை தான் வம்படியாக நினைத்து நினைத்து மறுகி கிடக்கும்!! மனதை கட்டுக்குள் வைக்க இவன் என்ன அந்த புத்தனெனும் சித்தார்த்தனா?? வெறும் சித்தார்த்தன் தானே!!
மறுநாள் தன்னெதிரில் உதடு சுளித்து திமிராய் நின்ற
பெண்ணவளை இழுத்து அணைத்தான் சித்தார்த் வெகு மூர்க்கமாக!!
அவனின் இடது கை அவள் முதுகை அணைத்த நிலையில் அவளது புஜத்தை இறுக்கிப் பிடித்தது… அவனின் வலது கையோ அவளின் ஆலிழை வயிற்றின் மேல் படர்ந்து அவற்றின் மென்மையை சோதித்து கொண்டிருக்க.. அவளை நெருங்கி முத்தமிடப் போனான் இந்த கள்வன்…
அவளோ இவனை சிறிதும் மதியாது சட்டென முகத்தை திருப்பிக் கொண்டாள்… அதில் அவன் உதடுகளோ பச்சை நரம்புகள் ஓடிய  அழகாக இருந்த வெண் சங்கு கழுத்தில் பச்சக்குன்னு அழுத்தமாக முத்தம் கொடுத்தது… அதில் தாபத்தின் மோகத்தின் மீட்டர் சரசரவென்று ஏறியதை உடல் வெளிப்படுத்துவது போல அவளது புஜத்தைக் கொஞ்சம் அழுத்திப் பிடித்தான் ஹீரோ. அவள் கழுத்து பக்கத்தில் அவனின் முகத்தை ஆழமாக புதைத்து, அவளது இனிய வாசத்தை ஆழமாக இழுக்க..‌ அதில் அவளது 
உடம்பு சிலிர்த்தது அடங்கியது…
“ப்ளீஸ்.. ப்ளீஸ்.. சீனியர்.. வேணா.ம்..ம்..” என்ற‌ வார்த்தைகள் எல்லாம் அவள் தொண்டை குழியிலேயே அடங்கியது. மூச்சு ஏகத்துக்கும் ஏறி இறங்கியது அவளுக்கு… அப்போது அவளது வெல்வெட் உதடுகள் கொஞ்சமாக பிரிந்து.. அவளுடய வெண்ணிற பற்களைக் காட்டிக் கொண்டிருக்க.. அவளது பவழ இதழ்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் பனிச்சுனை நீரை அவன் உதடுகளால் உறிஞ்சி எடுக்க வேண்டும் போல ஒரு தாபம் பொங்க, மெல்ல தன் நாவினால் தீண்டியப்படி அந்நீரை ருசித்தவன், அடுத்து நொடி.. அவளின் கீழ் உதட்டை அவன் அதரங்களுக்குள் ஒளிந்திருந்தான். எது எவர் அதரங்கள் என்று தெரியாத லயிப்பில் இருவரும் ஆழ்ந்திருக்க.. கோமகன் கைகளோ பெண்ணவள் உடம்பில் கோலமிட.. அவனின் கை நளின பெண்ணவளின் துடியிடையை இறுகிப் பிடிக்க, அதில் வலி மிக, இவளோ அவனின் அதரங்களை பற்களால் கடித்து விட.. 
“ஆஆஆ ராட்சசி!!.. விடுடி” என்று கத்திக் கொண்டே கனவு கலைந்து இருந்து எழுந்தான் நம் சித்து!!
“ச்ச!! கனவா? சுற்றும் முற்றும் பார்த்தவன், “அதுவும் கெட்ட கனவு” என்று தனது உதடுகளை தடவி பார்த்துக் கொண்டான்…
கனவா?? கனவா?? எல்லாமே கனவா கோபால்???
கனவின் தாக்கம் உடலெங்கும் உன்மத்தம் தர அதன் வெக்கை தாளாது படுக்கையில் புரண்டவன், கடுப்பாகி இரவோடு இரவாக நிஜத்திடம் ஓடிச் சென்றான்!! நட்ட நடு இரவில் ஏன் கனவில் வந்து தொல்லை செய்கிறாய்? உனக்கு வேற வேலையே இல்லையா? என்று திட்டி தீர்க்க.. ஹரிணியை காண சென்று விட்டான் இந்த பிராடு ஆக்டர்!!
காதலில்லா தாபம்! மோகம்! எங்கிருந்து வரும் என்று அவன் மறந்திருந்தான். காதல் கொண்ட பெண்ணில் ஏற்படும் உணர்வே தாபமும்.. மோகமும்.. மற்ற பெண்களிடம் ஏற்படுவது காமம். ஆனால் இவன் காமுகன் இல்லையே!! காதலை கோப கண்களால் பார்க்கும் கருப்பு கண்ணாடி போட்ட காதல் மன்மதன் யஷ் சித்தார்த்!!
ஒருத்தன் தன்னால் இரண்டு நாட்களாக தூக்கம் இல்லாமல் தவிப்பது எல்லாம் அறியாமல்.. அப்போதுதான் ஐஸ் ஒத்தடம் கொடுத்து சற்றே வீக்கம் குறைந்த காலுக்கு அணைவாக தலையணையை வைத்து படுத்திருந்தாள் பெண்ணவள்!!
சட்டென்று திரும்பி படுக்கும் பொழுது காலில் சுளீரென  வலி ஏற்பட மெதுவாக எழுந்து காலை நீவி விட்டாள்.
ஆனாலும் வலி சற்றும் குறையாமல் இருக்க அருகிலுள்ள தெர்மா பாக்ஸிலிருந்து ஐஸ் கட்டி  ஒன்றை எடுத்து காலில் சிறிது நேரம் ஒத்தடம் கொடுக்க.. வலி மட்டுப்பட்டது போல் தோன்றியது. 
பின் கொஞ்ச நேரம் குறுக்கி படுத்திருந்தது உடம்பை வலி எடுக்க.. இரண்டு கைகளையும் மேலே உயர்த்தித் நெட்டி முறித்தவள், தன்  எதிரில் இருந்தவனை பார்த்து அதிர்ச்சியில் கண்கள் விரிய, வாயோ மீன்குஞ்சு வாயை போல பிளக்க.. தூக்கிய கை தூக்கிய மாதிரியே அந்தரத்தில் நின்றது.
அவளது கட்டிலுக்கு எதிரே இருக்கையில் அமர்ந்து  இரு கால்களையும் அவளது மெத்தையில் வைத்து, கைகளை தலைக்கு பின்பு கட்டிக்கொண்டு சாவதானமாக அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த்!!
கற்பார்களா காதலை??

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *