முழுதாய் ஈர்த்தாய் முத்தக்காரா

முழுதாய் ஈர்த்தாய் முத்தக்காரா

முழுதாய் ஈர்த்தாய் முத்தக்காரா

முழுதாய் ஈர்த்தாய் முத்தக்காரா

முழுதாய் ஈர்த்தாய் முத்தக்காரா

முழுதாய் ஈர்த்தாய் முத்தக்காரா

முழுதாய் ஈர்த்தாய் முத்தக்காரா

முழுதாய் ஈர்த்தாய் முத்தக்காரா

முழுதாய் ஈர்த்தாய் முத்தக்காரா

முழுதாய் ஈர்த்தாய் முத்தக்காரா

முழுதாய் ஈர்த்தாய் முத்தக்காரா

முழுதாய் ஈர்த்தாய் முத்தக்காரா

முழுதாய் ஈர்த்தாய் முத்தக்காரா

முழுதாய் ஈர்த்தாய் முத்தக்காரா

முழுதாய் ஈர்த்தாய் முத்தக்காரா

முழுதாய் ஈர்த்தாய் முத்தக்காரா

முழுதாய் ஈர்த்தாய் முத்தக்காரா

முழுதாய் ஈர்த்தாய் முத்தக்காரா

முழுதாய் ஈர்த்தாய் முத்தக்காரா

முழுதாய் ஈர்த்தாய் முத்தக்காரா

முழுதாய் ஈர்த்தாய் முத்தக்காரா

முழுதாய் ஈர்த்தாய் முத்தக்காரா

முழுதாய் ஈர்த்தாய் முத்தக்காரா

முழுதாய் ஈர்த்தாய் முத்தக்காரா

முழுதாய் ஈர்த்தாய் முத்தக்காரா

முழுதாய் ஈர்த்தாய் முத்தக்காரா

முழுதாய் ஈர்த்தாய் முத்தக்காரா

முழுதாய் ஈர்த்தாய் முத்தக்காரா

முழுதாய் ஈர்த்தாய் முத்தக்காரா

முழுதாய் ஈர்த்தாய் முத்தக்காரா

முழுதாய் ஈர்த்தாய் முத்தக்காரா

முழுதாய் ஈர்த்தாய் முத்தக்காரா

முழுதாய் ஈர்த்தாய் முத்தக்காரா

முழுதாய் ஈர்த்தாய் முத்தக்காரா

முழுதாய் ஈர்த்தாய் முத்தக்காரா

முழுதாய் ஈர்த்தாய் முத்தக்காரா

முழுதாய் ஈர்த்தாய் முத்தக்காரா

முழுதாய் ஈர்த்தாய் முத்தக்காரா

முழுதாய் ஈர்த்தாய் முத்தக்காரா 17

ஈசு நீனுவை சுற்ற அவள் போக்கு கான்பிக்க
ரஞ்சிதம் செலதுரை என்று எல்லோரும் அவனிடம் நீனு சம்மதிக்கும் முன் கல்யாணம் இல்லை
என்று சொல்லிவிட அவனோ வேறு யாரிடம் தன் ஆதங்கத்தை கொட்டி தீர்க்க என்ற தெரியாமல் அவளிடமே
சென்று நிற்க..


அவளோ இவனை கண்டதும் உட்கார்ந்து இருந்த இடத்தை
விட்டு சற்று நகர்ந்து வழியை விடுவது போல் அமர்ந்திருக்க.. இன்று விடுவதாக இல்லை
அவன் அவள் அமர்ந்திருந்த படிக்கட்டு போன்ற குறுகிய இடத்தில இவனும் அவளோடு
ஒட்டிகொண்டு அமர அவள் எழுந்து கொள்ள நினைக்கும் முன் அவள் தோளில் கையிட்டு தன்னோடு
இறுக்கி பிடித்தவன் “எதுக்கு இப்போ எந்திருச்சு போகோணும் கொஞ்ச நேரம்
உக்காரலாமில்ல” என்று கேட்க


அவளோ “இல்லை உள்ள உள்ள கூப்புடறாங்க”என்று எதோ
சொல்லி சென்றாள். அவளுக்கு நடந்தவை அனைத்தும் ஞாபகத்தில் இல்லை என்றாலும் இவர்கள்
காண்பிக்கும் அனுசரணையும் அன்பும் அந்த குழந்தை தன்னுடையது தான் என்கிற தெளிவும்
வந்து இருந்தது. ஆனால் தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளாமல்
இருந்தவள் கொஞ்சம் கொஞ்சமாக தன் பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டு இருந்தாள்.


இங்கு அவன் ஒட்டி உட்கார்ந்தது மட்டும் இல்லாமல்
குழந்தையை கொஞ்சுகிறேன் என்று அவள் மடியில் அமர்ந்து இருக்கும் மகனை குனிந்து
முத்தம் வைக்கிறேன் பேர்வழி என்று அவள் மீது நன்றாக உரச அவளோ ஒடுங்கி ஒடுங்கி
அமர்ந்தவள் அவனை முறைத்துவிட்டு தன் கையில் இருந்த குழந்தையை அவனிடமே
கொடுத்துவிட்டு எழுந்துகொள்ள..

அவனோ நீனுவின் கையை பிடித்து இழுத்து தன்னுடைய
மடியில் அவளை இருத்திகொண்டான் அவள் துள்ள பார்க்க அவள் மடியில் குழந்தையை
வைத்துவிட்டு “இப்போ என்ன பண்ணுவ?” என்று மிதப்பாக பார்க்க..


அவளோ ஒன்றும் சொல்ல முடியாமல் அவனையே
பார்த்துவைக்க.. “அப்படி இருக்க பழகு புருஷன் சொன்னா கேக்கோணும் டி பொண்டாட்டி”
என்க அவள் அதற்கும் விழிக்க.. அதன் பின் தன்னை ஏற்றுகொள்ளும் மனநிலைக்கு அவள்
வரவேண்டும் என்று அவளுடனே சுற்றி திரிந்தான்.


மேலும் சில நாட்கள் கடந்து அவர்கள் கோவில்
திருவிழாவும் துவங்க அங்கு செல்ல அனைத்தும் தயார் செய்யப்பட்டு இருக்க.. பூவும்
அறிவும் கிளம்பி வெளியே வர அங்கு அமர்ந்த செல்வியோ “எப்பு என் கண்ணே பட்டுக்கும்
போல பூவு போய் செத்த உப்பு மிளகாய் எடுத்துட்டு வா ஆத்தா சுத்தி போடுதேன் “ என்று
சொல்லும் அளவுக்கு அவர்கள் இருவரும் பொருத்தமாய் நின்றார்கள்.


அழகு அரக்கு நிற மேல்சட்டையுடன் அதற்கு
பொருந்தும் அரக்கு கரை வைத்த வேஷ்டி சட்டையிலும் கொத்துபூ அதே நிறத்தில் சிறிய
தங்க கரை இட்ட புடவையிலும் கிளம்பி இருக்க இப்பொழுது சற்று பிரச்சனைகள் ஓய்ந்த
நிலையில் அவளது அகமும் புறமும் ஒளியாய் மின்ன..

இரண்டு பெரும் அவ்வளவு பொருத்தமாக நின்றனர்.
செல்வியே கண்வைக்கும் அளவுக்கு இருந்த பொருத்தத்தில் சுற்றி போட்டவர் அங்கு
நெருப்பில் இட.. அங்கு ஒருவன் மனமும் அகமும் கருவி இவர்கள் மீதான வன்மத்தையும்
அந்த நீர் பூத்த நெருப்பினை போல் மனதில் ஏற்றிக்கொண்டு இருந்தான்.


செல்வி பூவரசு அழகு கொத்துபூ மற்றும் எல்லோரும்
தயாராக கிளம்பி நிற்க வாசலில் வந்த ஓபன் டெம்போ வேனில் ஏற்கனவே இருந்தபடி இவர்களை
கூப்பிட இவர்களின் குடும்பமும் அதில் ஏறிக்கொள்ள கோவிலை நோக்கி புறப்பட்டது அந்த
வாகனம்.

பூவாயி அம்மன் கோவில்,


மலைபகுதியில் உச்சியில் ஆடு மேய்க்கும் வேலையில்
எதோ காத்து கருப்பு அடித்தது என்று பூவாயி என்னும் சிறுமி இறந்த நிலையில் கிடக்க..
அங்கு போனவர்கள் கண்டு தூக்க அந்த சிறுமியின் உடல் கற்சிலையாக மாறி இருந்தது கண்டு
அங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட துவங்கியதாக கூறப்படும். அந்த பூவாயி அம்மனின்
பெயர் விளங்க அந்த ஊரில் பூக்கள் மற்றும் பூவின் பெயர்கள் எல்லா குழந்தைகளுக்கும்
வைக்கப்படும்.


அந்த தெய்வமே குடி தெய்வமாய் வழங்கி ஊரையும்
ஊர்மக்களையும் காப்பதாக நம்பி திருவிழா எல்லாம் எடுத்து வழிபாடு செய்யும் இடம்.
அங்கு காலபோக்கில் மற்ற குடிதெய்வ வழிபாடுகளும் சேர்த்து நடக்க துவங்கியது.


இன்று திருவிழா பூவாயி அம்மன் இறையடி சேர்ந்த
நாள் அன்று அம்மனுக்கு மஞ்சளில் நீராட்டி மண்ணை விட்டு விண்ணுலகம் சென்ற
தேவமங்கைக்கு புனிததிருநாள்.


ஊரே கூடி பொங்கலும் படையலும் இட்டு பூவாயி
பிறந்த வீட்டின் சீராக புடவை நகைகள் என்று எல்லா விதமான பொருட்களும் ஊரே சேர்ந்து
கொண்டு வந்து இரண்டு நாட்கள் சீரும் சிறப்புமாய் செய்வர். அங்கு முதல் நாளில்
அனைவரும் பொங்கல் வைத்து அங்கேயே இரவு முழுவதும் கூத்து நாடகம் போன்ற நிகழ்சிகளை
கண்டு கழித்து மறுநாள் கறிவிருந்து ஆடு விடுதல் போன்ற நேர்த்தி செய்துவிட்டு
தங்கள் இல்லங்களுக்கு திரும்புவார்கள்.


இன்று பொங்கல் வைக்க எல்லோரும் வந்து இறங்க
அங்கு ஏற்கனவே நிறைய மக்கள் கூட்டம் கூட்டமாக பொங்கல் வைக்க துவங்கி இருக்க..
செல்வி பூவை கல் எடுத்து வைத்து அடுப்பை மூட்ட சொல்லி அவளுக்கு உதவ அங்கு நீனு
மட்டும் சுற்றிலும் வேடிக்கை பார்த்தபடி நிற்க.. யாரும் பார்க்காமல் அவள் இடையில்
லேசாக விரலால் கூசிவிட்ட ஈசு “ஒய் என்ன இங்கன நிக்கிற போ ஐத்தை அங்க இருக்காவ”
என்று ரஞ்சிதத்தை காண்பித்து சொல்ல அவளும் வேகமாய் குழந்தையுடன் அவரி நோக்கி செல்ல
துவங்க..


மீண்டும் அவளை தடுத்தவன் அவள் மீது உரசும்படி
நின்றுகொண்டு “பையனை என்கிட்ட கொடுத்துட்டு போ” என்று வாங்கிகொண்டான். அவள்
பொங்கல் வைத்து உதவி செய்து பின் எல்லோருமாக சாமி கும்பிட.. இரவு நேரம் துவங்கி
மலை குன்று போன்ற அந்த இடத்தில நிலா வெளிச்சத்தில் கையில் கொண்டு சென்ற உணவுடன்
பொங்கல் மற்றும் வேறு சிலவற்றையும் அனைவரும் வட்டம் வட்டமாக அமர்ந்து சாப்பிட்டு
கொண்டு இருக்க அது அவ்வளவு ரம்மியமாக இருந்தது.


இரண்டு குடும்பமும் ஒன்றாக அமர்ந்து நீண்ட நெடிய
வருடங்களுக்கு பின்னான சேர்கையில் அமர்ந்து உணவை சாப்பிட எல்லோருக்கும்
மகிழ்ச்சி.. பூவோ பொங்கல் உணவு என்று எல்லோரது இலையையும் நிரப்பும் வேலையை செய்ய
அவள் உண்ணாதது கண்டு அறிவு அவளை கண்ணாலேயே சாப்பிட சொல்ல..


அவல் பொறு சாப்பிடுகிறேன் என்று சமாதானம் சொல்ல
இருவரின் கண் பாஷைகள் கண்ட ஈசு தன்னவளை பார்க்க அவளோ எங்கோ வெறித்து பார்த்தபடி
இருந்தாள். பெருமூச்சோடு குனிந்து கொண்டவனது தோளில் ஒரு கை விழ யாரென்று
பார்த்தான் அவன்.


யாரோ அவனது தோளில் தட்டிவிட்டு மாயமாக போக
குடும்பத்தில் அனைவரும் அங்கேயே இருக்க யாராக இருக்கும் என்ற யோசனையோடு
அமர்ந்திருந்தான்.

சற்று நேரம் கழிந்து எல்லோரும் கொண்டு வந்து
இருந்த போர்வைகளை விரித்து அங்கொன்றும் இங்கொன்றுமாய் படுத்து தூங்க துவங்க மறுநாள்
நடக்கவிருக்கும் கரி விருந்து பற்றி சிலர் பேசிக்கொண்டும் படுத்திருக்க..


அடுத்தநாள் பொழுது யாருக்கும் காத்திராமல் விடிய
துவங்கியது. எழுந்தது முதலே அறிவு மனதுக்கு எதோ தவறாக பட அவன்பார்வை முழுவதும் பூ
நீனு மற்றும் குடும்பத்தினர் மீதே இருக்க ஈசு கூட எதோ யோசனையில் இருந்தான்.


அபிசேக ஆராதனைகள் துவங்க எல்லோரும் குலவை இட்டு
பிராத்தனைகளை சொல்லி வேண்டியபடி நிற்க அங்கு திடீரென கூட்டத்தில் ஏற்பட்ட
சலசலப்பில் திரும்பி பார்க்க அங்கு நீனுவின் கழுத்தில் கத்தியை வைத்துகொண்டு
எல்லோரையும் விலகி போக சொல்லி கத்திக்கொண்டு இருந்தான்  தீனா.


அதனை பார்த்து அதிர்ச்சியிலும் ஆத்திரத்திலும்
அவனை பிடிக்க பாய போன அறிவையும் ஈசுவையும் மற்றவர்கள் தடுக்க அவனோ பைத்தியம்
பிடித்தவன் போல அவளது கழுத்தில் இன்னமும் கத்தியை வெட்டும்படி நெறுக்கி பிடிக்க..
மற்றவர்கள் எல்லோரும் அவனை மிரட்ட துவங்கினர்.


ஈசுவும் அறிவும் “டேய் ஒழுங்கா விட்டுடு டேய்
அவள் விட்டு நகரு உன்னைய ஒன்னும் செய்ய மாட்டோம்” என்று பேரம் பேச துவங்க அவனோ
வெறி பிடித்தவன் போல “ம்ம்ம்முடியாது முடியாது இவ இவளை விட மாட்டேன் எனக்கு எனக்கு
மட்டும் தான் இவளை வேற யாருக்கும் தர மாட்டேன்” என்று சொல்லிக்கொண்டே அவளை
பிடித்துக்கொண்டே அந்த கோவில் இருந்த வட்டப்பாரையின் மீது பின்னோக்கி சென்றுகொண்டே
இருக்க..


அவனுக்கு பின் பெரிய பள்ளம் வேறு இருக்க
மற்றவர்களுக்கு பயம் சூழ துவங்கியது. எல்லோரும் பயத்துடன் கடவுளை வேண்டி நிற்க
அறிவு ஈசுவிடம் கண்ணை காட்டி மெல்ல தீனா நிற்கும் இடம் நோக்கி நெருங்க..


ஈசு அவனிடம் பேசிக்கொண்டே அவனது கவனத்தை தனது
புறமாக திருப்பினான். “டேய் நீ ஆரு எதுக்கு அவளை கொல்லனுனு துடிக்கித? ஒழுங்கா
அவளை விடு இல்லையின்னா உன் பிணம் கூட ஆருக்கும் கெடைக்காம பண்ணிருவேன் டா” என்று
மிரட்ட..

தீனாவோ “ம்ம் நான் யாரா நான் யாரா இதோ இவ கையில
இருக்கே அந்த பிள்ளைக்கு அப்பன் டா.. 


அப்பன் இதோ இவளை காதலிச்சு பொண்ணு கேக்க
வீட்டுக்கு போனா அவ அப்பன் என்னை பத்தி என்னனவோ எழுதி பைலை தூக்கி போட்டான்..

அதுல நான் பைத்தியம் சைகோ மென்டலுனு எழுதி
இருக்காம் அதான் பொண்ணை கொடுக்க மாட்டேன்னு சொன்னான்..


ஹா ஹா ஹா சொன்னான் அதான் போட்டேன் அவனை.. சும்மா
சொல்ல கூடாது கத்தியால ஆறு தடவை வயித்தில குத்தியும் .. ஹ்ம்ம் ஹா ஹா ஆவான் சாகல
பொண்ணை காப்பாத்தாம விட மாட்டேனு என்னை அடிக்க தான் செஞ்சான்..

வடக்கு பக்கம் இல்லை அவனுக்கு நல்லா வலு அதிகம்
தான் அந்த பொம்பளை இதோ இவ அம்மா புருஷன் கத்தி குத்து வாங்கி கிடக்கவும் அவனை
பார்த்து அழுதுகிட்டே வந்துச்சு சரி புருஷன் கூடாவே போகட்டும்னு கத்தியால.. ஹ்ம்ம்
உடனே போயிருச்சு

நான் எதுக்கு ஆசை பட்டேன் இதோ இவ சொத்து பத்து
அழகு எல்லாமே இருந்துச்சு அதான் கட்டிகிட்டா எல்லாத்தையும் அனுபவிக்கலாம்..
எல்லாத்தையும்” என்றவன் போதை வஸ்துவை முகர்ந்து பார்ப்பவன் போல நீனுவை கழுத்தோடு
முகர..


இங்கு ஈசுவோ “எல்லே அவளை தொட்ட தொட்டகைய இனிமே
துண்டா தேன் பாப்ப விட்ரா அவளை” என்று கர்ஜித்துகொண்டே அவனை நோக்கி பாய போக…
அவன் நீனுவின் கழுத்தில் லேசாக கத்தியால் சிறிய கீறல் போட பதறி போன ஈசு பின்வாங்கி
நின்றான்.


அங்கு அவனது கவனத்தை கவராமல் அவன் இருந்த
பக்கமாக மெல்ல மெல்ல ஒவ்வொரு அடியாக நகர்ந்து சென்றுகொண்டு இருந்தான் அறிவு. பூ
பதற்றமாக அவனை பார்த்துக்கொண்டே நிற்க அங்கு எல்லோரது முகத்திலும் கலவரம்.


தீனாவோ தன் வீரதீர பராக்ரமங்களை எல்லோர் முன்
கடைபரப்பும் ஒரு அநியாய ஆசையில் ஈசுவிடம் மேலும் பேச துவங்கினான்.. “எப்படி எப்படி
இவளை தொட கூடாதா டேய் இவளை தொட்டு ஏற்கனவே பிள்ளை கொடுத்தவன் டா நானு இவ என்னோட
நீனா டா..


காதலிக்கும்போது என்னை தொட கூட விடமாட்டா அதான்
அதான் அன்னைக்கு அவ அப்பன் என்னைய வேண்டாம்னு சொல்லும்போது சும்மா பழகுன
பாவத்துக்கு ஏதாவது பணமா தரேன் எடுத்துட்டு ஓடிடுனு சொன்னான்.


எந்த தைரியம்? எந்த தைரியம் அவன் பொண்ணு கைபடாம
இருக்கான்னு தானே அப்படி சொன்னான் அதான் டா அதான் அவளை அன்னைக்கே அனுபவிக்கனும்னு
முடிவு பண்ணினேன்.. ஹ்ம்ம் ஹ்ம்ம் செஞ்சேன்..


மறுபடியும் தடுக்க வந்த அவ அப்பனை இப்போ இவ
கழுத்துல வெச்சு இருக்கேன் பாரு கத்தி அது போல அது போல” என்றவன் செய்கை எங்கே
அவளது கழுத்தை அறிந்து விடுவானோ என்பது போலவே அச்சு அசப்பில் இருந்தது.


அவன் பேசுவது கண்டு எல்லோருக்கும் ஒன்றே ஒன்று
மட்டும் தெளிவாக தெரிந்தது அவனது புத்தி சுவாதீனம் இல்லாத தன்மை.. அங்கு கூடி
இருந்த மற்ற ஆட்கள் அவனை கண்டு “இவனுக்கு பைத்தியம் போல அதேன் இப்படி என்ன செய்ய
அந்த பொண்ணு கழுத்தில கதியை வெச்சுபுட்டான் இப்போ நாம என்ன செய்ய?


ஆத்தே பைத்தியகார பய போலவே” என்று ஒவ்வொருவரும்
ஒவ்வொரு விதமாக பேச துவங்க அவனோ உண்மையாக பைத்தியம் போலவே சிரித்து “ஆமா நான்
பைத்தியம் தான் ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு பைத்தியம் எனக்கு இதோ இவளை மாதிரி பொண்ணு
மேல… இவளோட பணம் மேல அவ அப்பன் சேர்த்து வெச்ச சொத்து மேல.. எல்லாத்து மேலயும்
பைத்தியம் அதான் கொன்னேன் அவுங்க ரெண்டு பேரையும் கொன்னேன் தடுத்தா உங்களையும்
கொள்ளுவேன்


இதோ நிக்கிறானே இவன்.. இந்த ஈசுவரன் இவன்  நீனுவை கல்யாணம் பண்ணிக்க போறானாம் அவனையும்
கொள்ளுவேன்” என்று என்னனவோ பேசிக்கொண்டு இருக்க..


அவனது கைபிடிக்குள் நின்ற நீனுவின் கண்களோ
கொவ்வை பழம் போல் சிவந்து எடுத்து கண் நரம்புகள் முழுக்க செந்நிற ரத்தம் பாய்ந்து
அவன் செய்த அட்டூழியங்கள் யாவையும் அவன் வாயாலே கேட்க நேர்ந்து..


மனதுக்குள் புதைந்து ஞாபக அடுக்குகளில் ஒளிந்து
மறைந்து போன அந்த நாட்களின் கொடூர ஞாபகங்களை அவனாகவே கொண்டு வந்து விட்டான். அன்று
தான் இருந்த நிலையும் காதலன் என்று நம்பியவன் செய்த அந்த அயோக்கிய செயலும்
முற்றிலுமாக நினைவுக்கு வந்து கண்கள் சிவந்து அந்த ருத்திரகாளி தெய்வத்தின்
அவதாரமாக தெறிக்கும் விழிகளில் கோபம் மின்ன காட்சி தந்தாள் நீனு.


உடலுக்குள் எதோ தெய்வ சக்தி புகுந்தது போல அவள்
ஆங்காரமாக
புசுபுசுவென்று மூச்சு விட்டு நின்ற கோலம் கண்ட அனைவருமே பயபக்தியுடன் “அம்மா
பிள்ளை மேல ஆத்தாவே வந்து எறங்கிட்டா மா” என்று சொல்லி கூச்சல் போட..

அறிவு மிக சரியாக அந்த நேரத்தை பயன்படுத்தி
பின்னால் இருந்து கையில் கத்தியோடு நின்ற தீனாவின் கையை பிடித்து கத்தியை
பிடுங்க..


 அதுவரை மதகு இட்ட தண்ணீர் பெருவெள்ளம் போல ஆக்ரோசமாக அவனது இறுகிய
பிடிக்குள் நின்றிருந்த நீனுவோ மிகபெரும் சப்தமாக “லேய் என்னடா செஞ்ச? ஹ்ம்ம் என்
குடும்பத்தை என்ன செஞ்ச? உன்னை உயிரோட விடமாட்டேன் டா காதல் காதல்னு சொல்லி என்
பப்பு மம்மாவை கொன்னு என்னை என்னையும்.. உன்னை இனிமே உயிரோட விட்டா இன்னமும்
என்னென்ன அக்ரமங்களை செய்வ ஹ்ம்ம் சாவுடா சாவு” என்று அவளது உடலில் மீறிய
சக்தியோடு அவனை ஓங்கி ஒரு மிதி மிதிக்க அவளிடம் இருந்து இப்படி ஒரு செய்கையை
யாருமே எதிர்பார்க்கவே இல்லை. அவளோ இன்னமும் நிறுத்தாமல் அவனை ஓங்கி நெஞ்சிலே
மிதித்து “இது என் நம்பிக்கைய கொன்னதுக்கு இது காதலுன்னு சொல்லி என்னை உயிரோட
கொன்னதுக்கு.. இது இது” என்று தன்னுடைய ஏமாற்றங்கள் மனதின் இத்தனை நாளைய வெக்கைகள்
தீரும் அளவுக்கு அவனை புரட்டி எடுத்தவள் அவன் கைநழுவி கீழே போட்டு இருந்த கத்தியை
எடுத்துகொண்டு அவனை குத்த போக..


அவனோ அவளது தாக்குதல்களில் இருந்து தப்பித்து
தப்பித்து விலகி உருண்டு தப்பி போய்கொண்டே இருந்தான். அவளோ அவனை விடும் எண்ணம்
இல்லாதவள் அவன் மேனி எங்கும் கத்தியால் கீறி காயப்படுத்திகொண்டே “இது எங்க அப்பாவை
கொன்னதுக்கு இது என் அம்மாவை கொன்னதுக்கு “ என்று வரிவரியாக அவனை கத்தியால் செதில்
செதிலாக கீற துவங்கிவிட்டாள்.


அதை பார்த்து தடுக்க போன அத்தனை பேரையும்
ஈசுவும் அறிவும் சேர்ந்து தடுத்து விட்டனர் அவளது இத்தனை நாளைய புழுக்கங்கள்
தீரட்டும் என்று.. எல்லோரது மனமும் நீனுவை பார்த்து கண்ணீரை பொழிய அங்கு நடந்து
கொண்டிருந்தது அசுர வதம் அன்றி வேறேதுமில்லை.


அவளோ பெண் என்னும் பராசக்தி போல் காளி ரூபிணியாக
அவனை முழுவதும் உடலில் உயிர் கொஞ்சமாய் ஒட்டிக்கொண்டு இருக்கும் நிலைக்கு ஆளாக்கி
இருக்க.. அதற்குள் அங்கு அன்று அவனுடன் 
பார்த்த வயதான பெரியவர் ஓடி வந்து அவனை உயிர் போகும் வதையில் இருந்து
காப்பாற்ற முயற்சி செய்தார்.


ஆங்காரமாக கத்தியை தீனாவின் தொண்டை குழியை
நோக்கி குத்த போன நீனுவின் கால்களில் விழுந்து “எம்மா தாயே எம்பிள்ளை பண்ணினது
எல்லாமே தப்பு தான் அம்மா உன்னைய என் தாயா சாமியா நெனச்சு கேக்குறேன் கருணை
காட்டம்மா விட்டுடு தாயி” என்று கெஞ்ச..


நீனுவோ மேனி எங்கும் தீனாவின் அசுர ரத்தம் பூசி ஆக்ரோஷ
மூச்சுக்கள் சகிதம் அவனை சம்ஹாரம்ம் செய்யும் நோக்கிலேயே நிற்க அவரோ இன்னமும்
இறங்கி கெஞ்சியவராக “அம்மா தாயே நான் செஞ்ச பாவம் என் மகனை தீண்டாம
இருக்கொனுமின்னு நெனச்சு தேன் இந்த ஊரை விட்டு வெளியூருக்கு கொண்டு போயி
வளர்த்தேன் ஆனா அவனாக இப்படி பாவம் பண்ணி இந்த நிலைக்கு வருவான்னு நான் நெனகல
ம்மா.. பெத்தவுக செஞ்ச பாவம் பிள்ளைகளுக்கு சேரும்மின்னு சொல்லுவாக இங்க நான்
செஞ்ச பாவமே இன்னமும் போகாம கிடக்கையில இவன் பண்ணுன வேலையை நான் என்னனு சொல்லுவேன்


இவன் என் குலத்துக்கு இருக்குற ஒரே வாரிசு மா
விட்டுடுங்க ஐயா எனக்கும் பெருவியாதி.. கடைசி காலத்துல கொள்ளி போடவாவது இவனை
விட்டு வைங்க சாமி” என்று கெஞ்ச..


அங்கு கூட்டமாக நின்று இருந்தவர்கள் “எல்லே
ஆருயா நீயி இந்த பிள்ளை குடும்பத்தை மொத்தமா சிதச்சி போட்ருக்கேன் உம்மட மொவன் அவனை
ஆத்தாளா பார்த்து தண்டிக்க வந்துட்டா பாவம் பண்ணுனா இது தேன் நிலைமை” என்று
சொல்ல..

அந்த பெரியவரோ சற்றும் யாரும் எதிர்பார்க்காத
நேரம் வேகமாக எழுந்து நீனுவை பிடித்து கீழே தள்ளிவிட்டு அவனை தூக்க முயற்சி செய்ய
அவரை பாய்ந்து பிடித்தான் அறிவு 


அவரோ “என்ற பையனை காப்பாத்திக்க எனக்கு தெரியும்
நான் அப்போ இருந்தது போல இருந்தாத்தேன் அவனை காப்பாதிக்க முடியும்னா அப்படியே
இருந்துக்கிறேன்” என்றவர் தான் இடையில் ஒளித்து வைத்து இருந்த சிறிய கத்தி ஒன்றை
எடுத்து அறிவை குறி வைத்து தாக்க..


அவனது வயிற்றில் இருந்து ரத்தம் பெருக்கெடுக்க..
கீழே விழுந்த நீனுவை தூக்க சென்ற ஈசு நடந்துவிட்ட இந்த செயலில் அதிர்ந்து அந்த
முதியவரை ஓங்கி உதைக்க.. அவர் மேலே மூடி இருந்த கரிய நிற போர்வை பறந்து சென்று அந்த
பாறையின் ஓரத்தில் வளர்ந்திருந்த காட்டு மரத்தில் மாட்டிகொண்டது.

அங்கு மகனை கத்தி காயம் பட்டதும் விந்தி விந்தி வந்து
அறிவை மடியில் தாங்கிய செல்வியோ அந்த முதியவரை பார்த்ததும் அதிர்ச்சியில் கண்களை
அகல விரிய “நீ நீ தர்மா தர்மா தானே” என்று மகனை மடியில் ஏந்திக்கொண்டு அவரஈ
பார்த்த அதிர்ச்சியிலே மொழிய..


அந்த முதியவரோ பொய்யான ஆச்சர்யம் மிகுந்த
நையாண்டி குரலில் “அடே செல்வி என்னைய ஞாபகம் வெச்சு தேன் இருக்க போலவே மறந்து
போயிருப்பன்னு நெனச்சேன்” என்க..


அவரோ “நீ நீ இங்க எப்படி?” என்று என்ன கேட்பது
என்று தெரியாமல் விழிக்க.. அந்த முதியவரோ “ஆமா நாந்தேன் அதே தர்மராஜன் தேன் இருபது
வருசத்துக்கு முந்தி எப்படி இருந்தவன் உன்ற குடும்பத்தால இந்த நிலையில நிக்கிதேன்”
என்று மொழிய


அவரோ “நீ இந்த ஊரை விட்டு போனதே எங்களுக்கு
தெரியாதே இப்போ மறுபடியும் உள்ளூருக்கு வந்து எம்பிள்ளைய இப்படி குத்துயிறா போட்டு
இருக்கியே நீ நல்லா இருபியா டா பாவி” என்று இறைந்து கத்த..

தர்மாவோ “ஆஹ்ன் நான் எதுக்கு ஊரை விட்டு
போனேன்னு தெரியாது இல்லை உன் குடும்பத்து நாலு உசுரு போனிச்சே அது யாரால என்னால
என்னாலதேன்” என்று சிரிக்க..


மற்ற எல்லோரும் என்ன சொல்லுகிறார் இவர் என்று அவரையே
உற்று பார்க்க அவரோ இருபது வருட பழைய கதையை கூற துவங்கினார். நான் கண்மாய்
பிரச்சனைய கண்ணுல வெச்சு தேன் அந்த நாளுல காத்து கெடந்தேன் ஆனால் அதெல்லாம் என்னோட
நண்பன் அதேன் உங்க வீட்டு ரேவதிய கட்டுநானே அவன் என்னோடவே சுத்திக்கிட்டு திரிஞ்ச
பய

உங்க வீடு பொண்ணு ரேவதிய விரும்பி அவளையே கல்யாணம்
கட்டிக்கிட்டு வசதிகார வீட்டு மாப்பிள்ளையா வலம் வந்தானே அப்போ வரைக்கும் தேன்..


சும்மா பொறுக்கியா சுத்தினோம் ரெண்டு பேருமே ஆனால்
அவன் காதல் கீதல்னு சொல்லி அந்த பொண்ணை கட்டிகிட்ட பொறவு ஊரே அவனுக்கு கொடுத்த
மருவாதி என்னமோ அவந்தேன் இந்த ஊரையே காப்பாத்தினவன் மாதிரி தூக்கி வெச்சு கொண்டாடி
தீர்த்தாய்ங்க


நான் எங்க ஊரு கண்மாயை ஊரை பகைச்சுக்கிட்டு என்
நண்பனுக்காக விட்டு கொடுத்தா எங்க ஊருக்குள்ள என்னைய எல்லோரும் தூத்தி பேச இங்க அவனை
மட்டும் எல்லோரும் தூக்கி வெச்சு கொண்டாடி தீர்த்தாய்ங்க நான் செஞ்ச நல்லதுக்கு
அவனுக்கு பேர் கிடைக்க..


அதை கூட பொறுத்துக்கலாம் ஆனா என் ரேவதி.. என்
ரேவதி..” என்று கண்களை மூடி எதையோ யோசிக்க.. செல்வியோ “அடப்பாவி அப்போ எல்லாத்தையும்
செஞ்சது நீ தானா” என்று இடையில் தான் வெண்கல குரலில் கத்த..


அவரோ “ஆமாம் நானும் அவனுமா போயி எனக்காக எனக்காக
தேன் ரேவதிய பார்க்க போவோம் ஆனா அவளும்.. ஹ்ம்ம் அவளும் என்னைய விட அவனை பெருசா
நெனச்சு அவனையே கல்யாணம் செஞ்சுகிட்டா அப்போ எனக்கு கிடைக்க வேண்டிய பேரு புகழ்
என்னோட ரேவதி எல்லாமே அவனுக்கு கெடச்சு அவன் மட்டும் நிம்மதியா வாழ நான் மட்டும்
புழுங்கி புழுங்கி சாகனுமா?


அதேன் காத்துகிட்டு இருந்தேன் அவனை பழி தீர்க்க
வஞ்சம் வெச்சி காத்துகிட்டு இருந்தேன்..அதுக்கான சந்தர்ப்பம் சரியா அமைய..


அன்னைக்கு ஊருக்குள்ள பயங்கர மழை வெள்ளம்
எப்படியும் வரும் அதுக்காக அவன் வருவான்னு எதிர்பார்த்து காத்துகிட்டு இருந்தேன்
நான் போய் அவனுக்கு வீட்டுல தகவலை சொல்லிட்டு ஊருக்குள்ள போய் ஆளுங்களை திரட்டி கூப்டுக்கிட்டு
வரேன்னு சொல்லிட்டு போனேன்


அவனும் என் ரேவதியை தனியா விட்டு போய்ட்டான்..
ஆனா அவ அவளோட வயித்தில அவன் வாரிசு.. அதை கொன்னுட்டா என் ரேவதி எனக்கே எனக்குனு
கிடைப்பா… ஆனா அவளும் கேட்கல..


அவளை என்னோட வந்துடுன்னு கூப்பிட வரமாட்டேனு
அடம்பிடிக்க… நான் தெரியாத்தனமா ஹ்ம்ம் ஹ்ம்ம் இல்லை வேணும்னே அவளை கீழே தள்ளி
விட்டேன் எனக்கு கிடைக்காத அவளை அவனுக்கு இதுக்கும் மேலும் விட்டு கொடுக்க மனம்
இல்லை..


அதான் அவளையும் கொன்னேன்.. பொறவு ஒண்ணுமே
தெரியாதவன் மாதிரி நான் பாட்டுக்கு அவளை அங்கேயே போட்டுட்டு தப்பிச்சு போய்டேன் பொறவு
உன் குடும்பமே வெட்டிக்கிட்டு சாவ மக்காநாளு பார்த்தேன் பார்த்து பார்த்து
பூரிச்சு போனேன்


அன்னைக்கு உன்குடும்பம் அழியரத்தை பார்த்துட்டு
ஊரை விட்டு போனவன் என் பையன் மறுபடியும் இந்த ஊருக்கு வந்துட்டான்னு தெரிஞ்சு தான்
இங்க வந்தேன்” என்று சொல்லிவிட்டு


பிறகு “ம்ம் அதுவும் நல்லதுக்கு தேன் விட்டு போன
மிச்ச சொச்சம் இருக்குற உசுரை எல்லாம் போக்கி கொன்னுட்டு போகலாம்னு மறுபடியும் ஒரு
வாய்ப்பு கொடுத்து இருக்கு அந்த ஆத்தா..” என்றவர் மீண்டும் கோபமாக அறிவை நோக்கி
போக


உடல்நிலையில் தொழு நோயுடன் யாரும் தொட்டு பேசும்
யோக்யதை அற்று இருக்கும் நிலையிலும் மனதில் வஞ்சத்துடன் தன்னை தாக்க வரும் அவரை
வயதை கூட நினைக்காமல் தன் காலால் வயிற்றில் தாங்கி தூக்கி வீச.. வலு இல்லாத
தர்மாவோ அங்கிருந்து தூக்கி வீசப்பட்டு அந்த குன்றின் ஓரத்தில் இருந்து கீழ்
நோக்கி உருண்டு விழ துவங்க..


அந்த கொடூர மனம் கொண்டவரை காப்பாற்ற யாருக்கும்
துளி கூட எண்ணம் எழவில்லை. அவர் உருண்டு விழும் வரையில் அங்கு இருந்த சூழல் மாறி
தேவதை ஆக்ரோஷத்தில் இருந்து மீட்கும் மழை நீர் துளிகள் சடசடவென்று பெய்ய துவங்க..

அறிவின் பக்கத்தில் அமர்ந்து அழுதுகொண்டு இருந்த
பூவு அவனை கைத்தாங்கலாக பிடித்து கீழே தாங்கள் வந்த வண்டியை நோக்கி கூட்டி செல்ல
அவன் அவளது தோளில் கைபோட்டபடி மெதுவாக நடந்து போனான்.


அங்கோ தன் கையால் உடலில் பல்வேறு இடங்களில்
காயத்தோடு உடல் எது ரத்தம் எது என்று பிரித்து அறிய முடியாத தன்மையில் கிடந்த
தீனாவின் உடல் முன்பு அமர்ந்து கதறி அழ துவங்கினாள் நீனு.

அவள் தன் நினைவடுக்கில் தொலைந்து போன அத்தனை
சம்பவங்களையும் ஒருசேர இங்கு தொலைக்க முயன்று கண்ணீராக அத்தனையும் மனதை விட்டு
நீக்க முயன்றுகொண்டு இருக்க..


அவள் தோளில் விழுந்த கரத்தில் முகத்தை புதைத்து
ஆதரவாக வைத்துகொண்டு தன் அழுகையை தொடர.. அதற்காக காத்து நின்றவன் போல் அதே கையால்
அவளை தூக்கி நிற்கவைத்து தன் தோளோடு சேர்த்து அணைத்து அங்கிருந்து நடந்து போக
துவங்கினான் ஈஸ்வரன்.


இருவரும் சற்று தூரம் போனதும் மழையின்
சத்தத்திற்கு நடுவிழும் நாராச குரலுடன் அவர்களை நோக்கி தீனா எழுந்து ஓடி வர.. அதனை
எதிர்பார்த்தவன் போல தன் கையில் நீனுவை மறுபுறம் மாற்றி அணைத்து பிடித்தவன்
மீண்டும் அவனை ஓங்கி உதைக்க.. அவனது தந்தை போன இடத்திற்கே அவனும் உருண்டு போனவனாக
அந்த குன்றில் இருந்து கீழே விழுந்து உயிரை விட்டான் தீனா.. நீனாவின் பழைய கருப்பு
பக்கங்களாக அவளது வாழ்கையில் தொடர்ந்து கொண்டு இருந்த தொல்லையானவன்!  

   

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *