மீமிகை அழகானது நம் நேசம் – 8

மீமிகை அழகானது நம் நேசம்

மீமிகை அழகானது நம் நேசம்

மீமிகை அழகானது நம் நேசம்

மீமிகை அழகானது நம் நேசம் – 1

மீமிகை அழகானது நம் நேசம் – 1

மீமிகை அழகானது நம் நேசம் – 2

மீமிகை அழகானது நம் நேசம் – 2

மீமிகை அழகானது நம் நேசம் – 3

மீமிகை அழகானது நம் நேசம் – 3

மீமிகை அழகானது நம் நேசம் – 4

மீமிகை அழகானது நம் நேசம் – 4

மீமிகை அழகானது நம் நேசம் – 5

மீமிகை அழகானது நம் நேசம் – 5

மீமிகை அழகானது நம் நேசம் – 6

மீமிகை அழகானது நம் நேசம் – 6

மீமிகை அழகானது நம் நேசம் – 7

மீமிகை அழகானது நம் நேசம் – 7

மீமிகை அழகானது நம் நேசம் – 8

மீமிகை அழகானது நம் நேசம் – 8

மீமிகை அழகானது நம் நேசம் – 9

மீமிகை அழகானது நம் நேசம் – 9

மீமிகை அழகானது நம் நேசம் – 10

மீமிகை அழகானது நம் நேசம் – 10

மீமிகை அழகானது நம் நேசம் – 11

மீமிகை அழகானது நம் நேசம் – 11

மீமிகை அழகானது நம் நேசம் – 12

மீமிகை அழகானது நம் நேசம் – 12

மீமிகை அழகானது நம் நேசம் – 13

மீமிகை அழகானது நம் நேசம் – 13

மீமிகை அழகானது நம் நேசம் – 14

மீமிகை அழகானது நம் நேசம் – 14

மீமிகை அழகானது நம் நேசம் – 15

மீமிகை அழகானது நம் நேசம் – 15

மீமிகை அழகானது நம் நேசம் – 16

மீமிகை அழகானது நம் நேசம் – 16

மீமிகை அழகானது நம் நேசம் – 17

மீமிகை அழகானது நம் நேசம் – 17

மீமிகை அழகானது நம் நேசம் – 18

மீமிகை அழகானது நம் நேசம் – 18

மீமிகை அழகானது நம் நேசம் – 19

மீமிகை அழகானது நம் நேசம் – 19

மீமிகை அழகானது நம் நேசம் – 20

மீமிகை அழகானது நம் நேசம் – 20

மீமிகை அழகானது நம் நேசம் – 21

மீமிகை அழகானது நம் நேசம் – 21

மீமிகை அழகானது நம் நேசம் – 22

மீமிகை அழகானது நம் நேசம் – 22

மீமிகை அழகானது நம் நேசம் – 23

மீமிகை அழகானது நம் நேசம் – 23

மீமிகை அழகானது நம் நேசம் – 24

மீமிகை அழகானது நம் நேசம் – 24

மீமிகை அழகானது நம் நேசம் – 25

மீமிகை அழகானது நம் நேசம் – 25

மீமிகை அழகானது நம் நேசம் – 26

மீமிகை அழகானது நம் நேசம் – 26

மீமிகை அழகானது நம் நேசம் – 27

மீமிகை அழகானது நம் நேசம் – 27

மீமிகை அழகானது நம் நேசம் – 28

மீமிகை அழகானது நம் நேசம் – 28

மீமிகை அழகானது நம் நேசம் – 29

மீமிகை அழகானது நம் நேசம் – 29

மீமிகை அழகானது நம் நேசம் – 30

மீமிகை அழகானது நம் நேசம் – 30

மீமிகை அழகானது நம் நேசம் – epilogue

மீமிகை அழகானது நம் நேசம் – epilogue

அத்தியாயம் : 8

மீமிகை அழகானது நம் நேசம்

மறு நாள் காலை உறங்கி எழுந்த சுமோ பழக்க தோஷத்தில் இவன் இருப்பது நினைவு இல்லாமல் நெளிந்து தன் சோம்பலை முறித்து கட்டிலை விட்டு இறங்க கீழே படுத்து கிடப்பவனை பார்க்காமல் அவனை மிதிக்க அவனோ கத்த ஆரம்பித்து விட்டான்… அப்பொழுது நினைவு வந்து கீழே கிடப்பவனை , “டேய் கத்தி தொலையாதே யாராவது என்னை தப்பா நினைக்க போறாங்க”.. என்று கூற , “அவனோ ஏன் டி என் ரூம் ல என்ன பண்ற நீ… நான் எப்படி கீழே படுத்தேன் “என்று தனக்கு தானே புலம்ப அவளோ, ” இது என் ரூம் ….அதான் நீ கீழே படுத்து இருக்க”.. என்று கூற அவனோ எழுந்து மேலே ஏறி அவள் கட்டிலில் படுத்து கொண்டான்…

என்னமோ பண்ணி தொலை என்ற முடிவில் அவள் குளிக்க போக அவள் சென்றதை உறுதி படுத்தி விட்டு அவனும் அவன் அறைக்கு சென்றான்…

அவன் குளித்து ரெடி ஆகி வரும் போது இவள் லாங் ஸ்கிர்ட்யும் ஒரு பனியனும் அணிந்து இருக்க அதற்கு அங்கே இருக்கும் பெண்கள் அணி அவளை ரவுண்ட் கட்டி திட்டி கொண்டு இருந்தனர்…

அந்த அணியின் தலைவி ஆன சிவகாமி அம்மா, “ஏன் டி கல்யாணம் பண்ணியும் இதை தான் போடுவியா ஒரு சேலை கட்ட கூடாதா “…என்று தொடங்க அதற்கு அந்த குழுவின் மெம்பர்கள் அனைவரும் ஆமாம் என்று ஒத்து ஓதி கொண்டு இருக்க அது ஆண்கள் செவியில் எட்டியாலும் கேக்காத பாவத்தில் அமர்ந்து இருக்க அப்போது அங்கே வந்தான் ஸ்ரீராம்….

அவன் மாடியில் இருந்து இறங்கி வரும் போதே அவர்கள் சம்பாஷனையை கேட்டு விட்டதால் , “பாட்டி அவளுக்கு பிடிச்சது போடட்டும் ஏன் கம்பெல் பண்றீங்க “…என்று கேட்டான் ஸ்ரீராம்…

அதற்கு சிவகாமி அம்மாவோ பேரமகன் அல்லவா அவனிடம் குழைந்து , “இல்ல கண்ணு கல்யாணம் ஆன பொண்ணு இப்படி உடுத்துனா யாராவது ஏதாவது சொல்லுவாங்க” என்று கூற

“அது தான் கல்யாணம் பண்ணி வெச்சுட்டீங்களே என் பொண்டாட்டி என்ன ட்ரஸ் போடணும் னு முடிவு பண்ண வேண்டியது நான்…மத்தவங்க இல்லை பாட்டி “…என்று சொல்லி அவளை இழுத்து தன் அருகே நிறுத்தி கொண்டான்…மற்றவர்கள் என்ன சொன்னாலும் கவலை இல்லை அவள் விருப்ப படி அவள் இருக்கட்டும் என்று சொல்லாமல் சொன்னான்…

அவன் கூறியதை கேட்டு எல்லோருக்கும் அதிர்ச்சி தான் ஒரு நாளிலே இந்த மாற்றமா என்று எண்ணி அவனிடம் அதை கூறாமல் இருந்தனர்…அதை வேறு கூறினால் வேறு ஏதாவது குதர்க்கமாக பேசுவான் என்று எண்ணி வாயை மூடி கொண்டனர்…

சிவகாமி அம்மாவோ வாயே திறக்க வில்லை….பேரமகன் கூறியதை கேட்டே அடங்கி விட்டார்…உள்ளுக்குள் அவர்கள் இருவரையும் நினைத்து சந்தோஷமே இருந்தாலும் இன்னும் இவர்கள் இன்னும் திருமண பந்தத்தில் என் பேர மக்கள் இருவரும் சந்தோசமாக வாழ வேண்டும் என்று நினைத்து கொண்டார்…

திருமணம் முடிந்து மூன்று நாட்கள் கழிந்து இருக்கும் நிலையில் அனைவரும் குல தெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து விட்டு வந்தனர்…வரும் வழி முழுவதும் அனைவரும் மகிழ்ச்சியாக வந்தனர்…. ஸ்ரீராம் மட்டும் ஆலோசித்து கொண்டே வந்தான்…அவன் கூற போகும் விஷயத்தை கேட்டால் வீட்டில் ஒரு பிரளயம் வெடிக்கும் இருந்தாலும் பரவாயில்லை… எனக்கு கூற வந்ததை கூறியே ஆக வேண்டும்….

வீட்டுக்கு வந்த அனைவரும் பயண களைப்பில் உறங்க செல்ல என்ன ஆனாலும் குண்டு தான் அதை காலையிலே வீசி கொள்ளலாம் என்று நினைத்து அமைதியாக இருந்தான்…அவனும் அவனது அறைக்கு சென்று குளித்து படுக்கையில் சரிந்தான்…. பின் மெல்லே அவன் அறைக்குள் நுழைந்தாள் சுமோ…அவன் படுக்கையில் படுத்து கொண்டு இருக்க ஒரு தலையணை எடுத்து கொண்டு அங்கு கிடக்கும் சோபாவில் போய் படுத்தாள்…அவள் செய்வதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த ஸ்ரீராம் அவளிடம்

“சுமோ நாளைக்கு நான் ஒரு விஷயத்தை பத்தி பேச போறேன் இனி என்கூட நான் என்ன பண்ணினாலும் கூடே இருப்பேன் னு நீ எனக்கு வாக்கு குடுத்து இருக்க மறந்துடாத “..என்றான்…

அவளும் “நீ என்ன சொல்ல போறேன் னு எனக்கு தெரியாது ஆனால் அது தான் நான் உனக்கு வாக்கு குடுத்து இருக்கேன் ல அப்புறம் என்ன டா”.. என்று உறக்க கலக்கத்தில் உளறி விட்டு படுத்து விட்டாள்…

பொழுது புலர்ந்தது இடியை இறக்க தயாராக வந்தான் ஸ்ரீராம்.. வந்தவன் நேரே மோகனிடம் சென்று “மாமா “..என்று அழைக்க …அவரும் தலை நிமிர்ந்து அவனை பார்த்து சொல்லு ஸ்ரீ என்றான்…

“மாமா நான் ஒரு விஷயம் உன்கிட்டே கேக்கணும் நான் அதை சொல்லி முடிச்சதும் நீங்க என்னை தப்பா நினைச்சாலும் எனக்கு கவலை இல்லை சொல்ல வந்ததை நான் சொல்லிடுறேன்”…

அவரோ என்ன சொல்ல போகிறான் என்ற பதைப்பில் இவனை நோக்கி கொண்டு இருக்க, “மாமா எனக்கும் சுமேதாவுக்கும் திருமணம் முடிஞ்சது…. கல்யாணத்துக்கு முன்னாடியே நான் கேட்டு இருப்பேன் கேக்கல அதான் இப்போ கேக்குறேன் உங்க பொண்ணு க்கு நீங்க செய்ய வேண்டிய சீரை செஞ்சுடுங்க”… என்றான் கூலாக

எல்லோரும் இவன் என்ன உளருகிறான் என்று பார்க்க, ” அது தான் மாமா நீங்க உங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி போனா கொடுக்க வேண்டிய வரதட்சணை யை கொடுங்க”… என்று கேட்க…அந்த வீடே அமைதியாகவும் அதிர்ச்சியாகவும் ஒரு குண்டு ஊசி விழுந்தால் கூட சப்தம் கேக்கும் அளவுக்கு அமைதியாக இருந்தனர்….

” எந்த வீட்டுக்குள்ள இருந்துட்டு இவன் வரதட்சணை வேணும் னு கேப்பான் “என்று முதலில் வாயை திறந்து அவனை அடிக்க வந்தது சிவசிதம்பரம் தான்…அவரும் எவ்வளவு தான் பொறுமையாக போவார் அன்று மும்பையில் வைத்தும் பிரச்சனை, இங்கே வரும் போதும் போலீசில் மாட்டி பிரச்சனை கல்யாணம் செய்து வைத்தால் ஆவது இவன் திருந்துவான் என்று பார்த்தால் அதுவும் இல்லை…

படிச்சு முடிஞ்சதும் வந்தவனை நம் தொழிலை பார்த்து கொள் என்று சொன்னால் நான் குடும்ப தொழிலை பார்க்கமாட்டேன் செய்தால் தனியாக தான் செய்வேன்…அதும் எனக்கு பிடிச்ச வேலையை தான் செய்வேன் என்று ஸ்ரீராம் குதிக்க அதுக்கு வீட்டில் உள்ள ஆண்கள் வேண்டாம் என்று மறுக்க…பணம் கொடுங்க நான் சாதித்து காட்டுகிறேன் என்று ஸ்ரீராம் கூற , இவர்களோ இல்லை இனி சிறிது காலம் நம் தொழிலை கற்று கொள்… என்று இவர்கள் வாதிட மறுத்தவனை இறுதியில் சிவசிதம்பரம் உன்னை நம்பி பணத்தை கொடுத்தா அது ரெண்டு நாளில் முடிந்துவிடும் அத்தனை கேடு கெட்ட பழக்கவழக்கங்கள் உன்னிடம் உள்ளது உன்னை நம்பி நாங்கள் பணம் தர தயாராக இல்லை என்று மறுத்து விட அன்று தொடங்கியது ஸ்ரீராம் இன் ஆட்டம்…

எந்த பழக்கவழக்கங்கள் உங்களுக்கு இல்லை இந்த வீட்டுக்கு ஒத்து வாரதோ அதை மட்டுமே செய்வேன்…என் தனிப்பட்ட வாழ்க்கை முறையை பற்றி உங்களுக்கு என்ன வந்தது…இது என் வாழ்க்கை எனக்கு பிடிச்சு இருக்கு நான் வாழுறேன் உங்களுக்கு பிடிக்கலை யா ஒதுங்கிக்கோங்க என்று கூறி விட்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டான்….

அதும் அவன் படித்த படிப்பு சான்றிதழ்களை கொண்டு சென்று வங்கியில் கடன் கேக்க போக அவர்களோ உங்க கிட்ட இல்லாத பணம்மா என்று கூறி அவனை விரட்டி விட அதற்கும் வீட்டில் என் மானத்தை வாங்க தான் அங்கே சென்று கடன் கேட்டாயோ என்று குதித்தார் சிவசிதம்பரம்….

சிவசிதம்பரத்திற்கு கோபம் அது என்ன குடும்ப தொழிலை பார்க்க மாட்டேன் என்று கூறிகிறான்…இவனுடைய நடத்தை சரியில்லாத காரணத்தினால் பணம் கொடுத்தால் எங்கே இவன் மேலும் கேட்டு போய் விடுவானோ என்ற பயம் ஆனால் அவருக்கு அப்போது தெரியவில்லை தன் மகனை பற்றி அவர் பணம் கொடுக்க வில்லை என்றாலும் மகன் அப்படி தான் நடப்பான் அவனை அவரால் இது போன்ற காரியங்களால் அவனை திருத்தி விட முடியாது என்று பாவம் அந்த தந்தைக்கு தெரியவில்லை..

அது தான் அன்று சிவசிதம்பரத்தின் முன் வேண்டும் என்றே அந்த பெண்ணிடம் இழைந்தது…இவர்கள் அனைவரையும் வேண்டும் என்றே வெறுப்பு ஏற்றுவதும் இதனால் தான்…ஸ்ரீ கூறுவது என்ன வென்றால் அது என் தனிப்பட்ட வாழ்க்கை அதுக்கும் நான் தனியாக தொழில் செய்ய வேண்டும் என்று கூறுவதருக்கும் என்ன சம்பந்தம்… ஏன் தனிப்பட்ட வாழ்க்கை யில் யாரும் அவர்களுக்கு பிடித்த வாழ்க்கை யை வாழ்வது இல்லை யா …அவர்கள் எல்லாம் சாதிக்க தகுதி அற்றவர்கள்ளா….அந்த கோபத்தின் வெளிப்பாடே இது எல்லாம்….

சிவசிதம்பரம், “எந்த வீட்டுக்குள்ள இருந்துட்டு நீ இப்படி பேசிட்டு இருக்க ஸ்ரீராம் “…ஒரு வித இயலாமையுடன் அவர் கேக்க

ஸ்ரீராம், “நான் உங்க கிட்ட எதுவும் பேசல நான் மாமா கிட்டே தான் பேசுறேன் “..அவனோ அவரை வெட்டி விட்டு பேசினான்..

மோகன் இடையில் வந்து “பிரச்சனை வேண்டாம் நான் ஸ்ரீ கேக்குறதை கொடுக்குறேன் “…என்று கூற

மோகனுக்கோ எப்போது என்றாலும் அது மகளுக்கு போய் சேர வேண்டியது தானே இப்பொழுது கொடுப்பதால் பிரச்சனை முடிவுக்கு வரும் என்றால் பிரச்சனையை இத்தோடு முடித்து கொள்ளுவோம் வீண் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஏதேனும் சண்டை வர வேண்டாம் என்று அவர் முன்னெச்சரிக்கை யாக கூற அவர்கள் இருவரும் கேப்பதாக இல்லை…

சிவசிதம்பரம் மோகனிடம் , “நீங்க ஒரு பைசா அதும் வரதட்சணை அப்படிங்கிற பெயர் ல கொடுக்காதீங்க… இந்த வீட்டுக்கு னு ஒரு பேர் இருக்கு அதை இப்படி செஞ்சு அசிங்க படுத்தாதிங்க…நீங்களும் என் தங்கச்சியை கல்யாணம் பண்ணும் போது வாங்கவில்லை…நாங்க எங்க திருமணத்திலும் வாங்கவில்லை…அப்படி இருக்க இவன் என்னை அசிங்க படுத்தனும்னே செய்யறான்”..என்று அவர் கொதித்து எழ அவனோ கண்டு கொள்ளாமல் தன் கோபத்தை கட்டு படுத்தி கொண்டு நின்றான்…

அந்த வீட்டில் உள்ள அனைவரும் அவனிடம் பேசி பார்க்க தன் முடிவில் இருந்து அவன் இறங்கவில்லை…எல்லோரும் அவனிடம் பேசி பார்த்தனர் திட்டி பார்த்தனர் இறுதியில் அரவிந்த் வந்து , “நான் பணம் தருகிறேன் ‘என்க

அப்போது ஸ்ரீ அவனை முறைத்து, “இதை நீ ஒரு வருஷம் முன்னாடி சொல்லி இருந்தீன்னா பரவாயில்லை… போடா”.. என்று விரட்டி விட்டான்…..

ஸ்ரீக்கு வேறு வழி இல்லாமல் தான் அவன் இந்த முடிவுக்கு வந்தது….அவன் நண்பன் தொழில் செய்ய அனுமதி கிடைத்து விட்டது பணம் தயார் செய்ய வேண்டும் என்று கூற அதும் இனி ஒரு வாரத்துக்குள் வேண்டும் என கூற இவனுக்கு ஒன்றும் விளங்காமல் தான் இந்த முடிவுக்கு வந்தது…அவனுக்கும் இது தவறு என்று தெரியும்… ஆனால் நிலைமை கை விட்டு சென்று விடும் என்று நினைத்து தான் அவன் இந்த முடிவை எடுத்தது….அவனுடைய கனவை அவன் இளக்க தயாராக இல்லை…இவர்களை நம்பி காத்திருந்தது போதும் …இனி நானே பார்த்து கொள்கிறேன் என உறுதி எடுத்துக்கொண்டு தான் இந்த குண்டை இப்போது தூக்கி எரிந்து விட்டான்…அதும் இனியும் வெடித்து கொண்டு இருக்கிறது….

நித்யா சென்று சுமோவிடம் பேச சொல்ல அவளோ வாயை மூடி கொண்டு நின்றாள்…இவன் நேற்று இரவும் , அன்றும் வாக்கு வாக்கு என்று சொல்லும் போதே யோசித்து இருக்க வேண்டும்…அவளுக்கோ ஒன்றும் சொல்ல முடியாத நிலையில் இருந்தாள்… எப்படி இதுபோல அவனால் பேச முடிந்தது…அதே சமயம் ஸ்ரீராமை பார்த்து அவள் முறைக்க யாரும் பார்க்காத வண்ணம் அவளை பார்த்து கண் அடித்து விட்டான்…

அவளுக்கோ எல்லாரையும் கஷ்ட படுத்திட்டு என்னை பார்த்து கண் அடிக்குறான் பாரு பொறுக்கி னு நிரூபிக்கறான் பாரு என்று இப்போது நடந்து கொண்டு இருக்கும் பெரிய சண்டையை மறந்து விட்டு என்னை பார்த்து இவன் எப்படி கண் அடிக்கலாம் ….கொழுப்பு டா உனக்கு என்பது போல முறைக்க அவள் மனதை சரியாக படித்த ஸ்ரீராம் மீண்டும் உதட்டை குவித்து முத்தம் கொடுப்பது போல ஜாடை காட்ட பொங்கி விட்டாள் சுமோ…..இவன் என்கிட்டே மிதி பட்டு தான் சாவான் போல என்று நினைத்து நீ ரூமுக்கு வா உனக்கு இருக்கு என்று கண்களாலேயே பொசுக்கி கொண்டு நின்றாள் சுமேதா ……

இது மீமிகை நேசமடி சகியே…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *