மீமிகை அழகானது நம் நேசம்
அத்தியாயம் : 19
மீமிகை அழகானது நம் நேசம்
சாக்ஷி தன் தோள் தொட திரும்பிய சுமோ அவளை பார்த்து சிரிக்க அவளும் ஒரு வித கோணல் சிரிப்பை உதிர்த்தாள்…. அப்போது தான் சுமோ க்கு நியாபகம் வந்ததது இவள் அன்று என்னவோ ஸ்ரீயும் இவளும் காதலிப்பதாக கூறினாலே என்று நினைத்து கொண்டே அவளை பார்த்தவள் …எப்படி போனாலும் அவன் என் கணவன் அதை யாராலும் மாற்ற முடியாதே என்று சாக்ஷியை ஏறிட்டாள் சுமோ..இவர்களை பற்றி அறியாத சாக்ஷியும் அதேயே தான் நினைத்து கொண்டு இருந்தாள்…நான் அவ்வளவு கூறியும் அவனோடு இழைந்து கொண்டு இருக்கிறாயே என்று…
ஆனால் படித்த அல்லது ஒரு நிலையில் இருக்கும் அனைவர்களும் தங்கள் மனதில் மற்றவர்களை பற்றி ஏதேனும் தவறாக நினைத்தாலும் அதை உள்ளுக்குள் வைத்து கொள்வார்களே தவிர தங்கள் முகத்தில் அதை பிரதிபலிக்க மாட்டார்கள்…அதேபோல தான் இவர்கள் இருவரும் உள்ளுக்குள் ஒருவர் மற்றவரை பற்றி தவறாக கருதினாலும் வெளியே அதை கூறாமல் மறைத்து சிரித்து கொண்டு மரியாதை நிமித்தமாக அணைத்து பின் இருவரும் அங்கே போட பட்டிருக்கும் இருக்கையில் அமர்ந்தனர்…
பின் மெதுவாக சாக்ஷி வேண்டும் என்றே ஸ்ரீயை பற்றி கூற தொடங்கினாள் …”ஸ்ரீக்கு பெண்கள் என்றாலே ஒரு வித போதை…சிறிது காலம் தான் ஒரு பெண்ணுடன் சுற்றுவான்…அதன் பின் கழட்டி விட்டு விடுவான்..அப்படி உள்ள பெண்கள் ஏராளம்…நான் அதை எல்லாம் கண்டு கொள்வதில்லை” என தொடங்கி ..”அவனை நான் விரைவில் திருமணம் செய்ய போகிறேன் அதற்கு யார் தடையாக வந்தாலும் எனக்கு கவலை இல்லை….இனி ஸ்ரீயை விட்டு வைப்பதாக இல்லை” என்று கூற …சுமோ அவள் கூறுவதை கேட்டு கொண்டு இருக்கிறாள் என்ற திருப்தி யில்.. அதுமட்டுமின்றி கொஞ்சம் கூடுதலாக தான் கர்ப்பம் ஆக இருப்பதாவகும் இதற்கு ஸ்ரீ பதில் கூறி ஆக வேண்டும் என்று கொஞ்சம் காரமாக சாக்ஷி சுமோவிடம் கூற அதை கேட்டு அவளை முறைத்தாள் சுமோ…
தான் கூறுவதை கேட்டு சுமோ அதிர்ச்சி அடைவாள் என்று எதிர்பார்த்த சாக்ஷி ஆனால் சுமோவோ அவளை முறைத்தாள்…
சுமோ முறைப்பதை பார்த்து சாக்ஷி சற்று தடுமாற சுமோ அவள் தடுமாற்றத்தை கண்டதுமே சுமோ புரிந்து கொண்டாள் அவள் பொய் உரைக்கிறாள் என்று…..
சாக்ஷி பொய் கூறுவதை அறிந்த சுமோ
சுமோ அழுத்தமாக , “நீ ப்ரெக்ராண்ட் ஆஹ் இருக்கியா” என்றாள்..
சாக்ஷி தடுமாற மேலும் சுமோ தொடர்ந்தாள்..”நீ எப்படி வேணும்னா இருந்துட்டு போ ஆனால் அதுக்கு ஸ்ரீ தான் காரணம் னு சொல்லாதே…ஸ்ரீயை பத்தி எனக்கு நல்லா தெரியும் “..என்றாள் பட்டென்று..
அதை கேட்ட சாக்ஷி ஒரு கேவலமான சிரிப்பை சுமோவை நோக்கி உதிர்த்து..”அப்போ ஸ்ரீ நல்லவன் னு சொல்றியா…அவனை பத்தி உன்னை விட எனக்கு நல்லா தெரியும் ..எங்க கிட்டே ஒன்னும் அவன் மறைக்கமாட்டான் தெரியுமா..அவன் குடும்பத்தை விட அவனுக்கு நாங்க தான் முக்கியம் தெரியுமா”….உன்னை விட எனக்கு தான் ஸ்ரீயை பற்றி தெரியும் என்பது போல கூற
சுமோ நிதானமாக அவளை ஏறிட்டு , “ஸ்ரீ நல்லவன் னு நான் சொல்லல …உனக்கு அவனை பத்தி தெரியும் அப்படிங்கிறதையும் நான் ஒத்துக்கறேன்…உங்க எல்லோருக்கும் தெரியாத ஒண்ணு சொல்றேன்…ஸ்ரீக்கும் எனக்கும் கல்யாணம் ஆகி பத்து மாசம் ஆச்சு…சோ அவனை பத்தி உங்களுக்கு தெரியுறதை விட என் புருஷனை பத்தி எனக்கு தெரியும்…அதுமட்டும் இல்லை அவனை பத்தி எல்லாம் தெரிஞ்சு தான் நான் கல்யாணம் பண்ணி இருக்கேன்….அவனை உங்களுக்கு ஒரு ஐந்து வருசமா தெரியுமா எனக்கு அவனை பொறந்ததிலிருந்து தெரியும்…சோ என்கிட்டே வந்து அவனை பத்தி அது தெரியமா இது தெரியுமா னு என்கிட்டே வந்து சொல்லிட்டு இருக்கற வேலையை இத்தோட விட்டுடுங்க”…
அத்தோடு நிறுத்தாமல் ,”வேற ஏதாவது என்கிட்டே பேசனுமா “..என்றாள் சுமோ
சாக்ஷிக்கு அடித்த சரக்கு எல்லாம் தெளிந்து விட்டது…பின்னே சுமோவிடம் ஏதாவது கூறினால் நம்பி ஆவனை விட்டு போய் விடமாட்டாள் ளா என்று கொஞ்சம் இட்டு கட்டி பேச சுமோ வோ அவள் கூறுவதை எல்லாம் ஒரு சிறு அதிர்ச்சி கூட இல்லாமல் கேட்டு அதை அப்படியே அவளுக்கு திருப்பி விட்டாலோ எப்படி இருக்கும்…
அதுமட்டுமின்றி ஸ்ரீக்கும் சுமோவுக்கு திருமணம் நடந்தது ஒரு பெரிய அதிர்ச்சி தான் சாக்ஷி க்கு …இதை அவள் சற்றும் எதிர் பார்திருக்கமாட்டாள் என்பதை சாக்ஷியின் முகமே காட்டி கொடுக்க அதை ஒரு வித திருப்தி உடன் கண்டாள் சுமோ….
சுமோவும் சாக்ஷியை பற்றி நினைத்து கொண்டு இருந்தாள்..அவள் மேல் சுமோவுக்கு கோபம் எல்லாம் இல்லை…சாக்ஷி க்கு தான் ஸ்ரீயை பற்றி தெரியும் உனக்கு எல்லாம் அவனை பற்றி தெரியாது என்று கூறியது அவளை உசுப்பி விட கொஞ்சம் பொங்கி விட்டாள் சுமோ…அதும் அவள் ஸ்ரீயின் மனைவி என்ற நிலையில் அவள் சிறிது அல்ல கொஞ்சம் கூடுதலாக வே சாக்ஷியிடம் நடந்து கொண்டாள்…அதும் இது போல ட்ராமா எல்லாம் இனி எத்தனை வர இருக்கிறதோ என்ற சலிப்பு தான் அவள் மனதில் தோன்றியது…
இன்று சாக்ஷியை சரி கட்டி விட்டோம் இனியும் யாரும் வர மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்…இனி ஸ்ரீயை தான் திருத்த வேண்டும்…அவனை பற்றி நினைத்தாலே அவளுக்கு மலைப்பாகவும் ஒரு சிறு இதத்தையும் அளித்தான் அந்த நவியுக கிருஷ்னன்…செய்யும் எல்லாம் செயலிலும் ஒரு குறும்பை வைத்துள்ளான்…இது தான் அவனை விட்டு விலக முடியாமல் சாக்ஷி போல பெண்கள் இன்னும் சுற்றுகின்றனர்… இதற்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று உறுதி எடுத்து கொண்டாள் சுமோ…எதிர் காலத்தில் இது போல இன்னல்களை தவிர்க்க ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டே சாக்ஷியை பார்க்க அவளோ விடாமல் இரு கோப்பையில் உள்ள மதுவை அடித்து கொண்டு இருந்தாள்…
அவளை பார்க்கும் போது பாவமாக தான் இருந்தது சுமோவுக்கு என்ன செய்ய…இது தான் வாழ்க்கை நாம் எதிர் பார்க்காததை சில நேரங்களில் நமக்கு தகுந்து விடுகிறது…நமக்கு கிடைத்ததை இன்முகத்துடன் ஏற்று கொள்ள பழகி கொள்ள வேண்டும்…உதாரணமாக சுமோ ஹரிஷுக்கு வேண்டி தான் எல்லாம் செய்தாள்… ஆனால் இன்று அவனை விட்டு ஸ்ரீ மட்டும் தான் என் வாழ்க்கை என்று ஏற்று கொள்ள வில்லையா அது போல சாக்ஷிக்கு இப்பொழுது தாங்க இயலா வருத்தத்தை கொடுக்கும் நாளடைவில் சரி ஆகும் என்று நினைத்து ஸ்ரீகாக்க காத்து இருந்தாள்….
ஸ்ரீயை இழுத்து சென்ற அவன் நண்பர்கள் குழுவோ சுற்றி வளைக்காமல் நேரடியாக சுமோ வை பற்றி கேக்க… அவளை பற்றி இவர்கள் எதுக்கு கேக்கிறார்கள் என்று நினைத்து கொண்டே , “ஏன் என்ன பிரச்சனை “..என்று கேட்க அவர்கள் சாக்ஷியை பற்றி கூற இதை சுத்தமாக எதிர் பார்க்காத ஸ்ரீ , “அவளை மட்டும் அல்ல யாரையும் நான் காதலிப்பதாகவோ இல்லை என்று உங்களுக்கு தெரியாதா காதல் என்ற ஒரு வார்த்தை இந்த உலகத்தில் இல்லை “…என்று கூற அவர்களோ திரு திருவென முழித்து அப்போ சுமோவை பற்றி கேக்க
அவனோ எனக்கும் சுமோக்கும் திருமணம் நடந்த விஷயத்தை கூறினான்…அவர்களோ எப்போ என்று அதிர்ந்து கேக்க ஒரு பத்து மாசம் இருக்கும் என்றான் கூலாக…பின்னே பொண்டாட்டி என்று ஒருத்தி வந்தும் இவன் பெண்கள் பின்னாடி சுற்றினானே என்ற கேள்விக்கு , “அதுக்கு என்ன இப்போ அவளுக்கு என்னை பற்றி தெரியும்தெரிஞ்சு தான் எல்லாம் நடந்து இருக்கு “….என்று கூற இவனை என்ன செய்யலாம் என்று நினைத்து ஆயாசமாக இருந்தது அவர்களுக்கு…
நண்பர்கள் ஒவ்வொருவரும் அவனுக்கு இது தவறு என்று அறிவுரை கூற ஆரம்பிக்க கடுப்பு ஆகி விட்டான் ஸ்ரீ..”என்ன எல்லோரும் எனக்கு அட்வைஸ் பண்றீங்க”… என்று கேட்க…”ஸ்ரீ சுமோ உனக்கு யாரு அதை சொல்லு “…என்ற கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை …அந்த கேள்வி அவனை மேலும் குழப்ப அவளுக்கு கொடுத்த வாக்கை மீறி அவன் கை நீண்டு மது கோப்பையை எடுத்தது…
ஆம் சுமோ எனக்கு வேண்டும் ஆனால் அவளை எப்படி நம் மனதில் நினைத்து கொண்டு இருக்கிறோம் என்ற கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை…. மெல்ல மது உள்ளுக்குள் ஏற தன்னை தானே குழப்பி கொண்டு இருக்க அதே சமயம் சுமோ அவனை தேடி வர அவன் தூரத்தில் அமர்ந்து இருப்பது தெரிய அவனுக்கும் இவள் வருவதை கண்டவன் தள்ளாடி கொண்டே வந்து அவளை கட்டி கொண்டான்….
சுமோவோ அருகில் அவன் ஆடி கொண்டு வருவதை பார்த்ததும் அவளுக்கு புரிந்தது அவன் குடித்து இருக்கிறான் என புரிய வந்து அவளை அணைத்து கொள்ள அணைத்த வாக்கிலே “குடிக்காதே னு சொன்னேன் ல எருமை …சொன்னா கேக்கவே மாட்டியா…இன்னிக்கு வீட்டுக்கு வா உனக்கு இருக்கு”… என்று கூற
ஸ்ரீயோ அவள் முகத்தை பார்த்து சிரித்து கொண்டே ,”நானா குடிக்கல இவங்க தான் ஏதோ சொல்லி குடிக்க வெச்சுட்டாங்க… வீட்டுக்கு போனா என்ன இருக்கு பேபி “..என்று குழைய தன் கண்களால் இருக்கும் இடத்தை சுற்றி காட்டிய சுமோ போதும் வீட்டுக்கு போகலாம் வா என்று அவனை அழைத்து செல்ல தயாரானாள்…
அவனை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த நண்பர்களுக்கு பைத்தியம் பிடிக்காத குறை தான்…அவனால் தான் தாலி கட்டிய மனைவியை மனைவி என்று அவனால் கூற முடியவில்லை….ஆனால் அவளை கண்டதும் கட்டி கொள்கிறான் …அவள் திட்டுவதை கூட சிரித்து கொண்டே கேக்கிறான்…அவளிடம் வழிகிறான்…அவளிடம் பாசம் வைத்துள்ளதை இதை வைத்தே அறிந்து கொண்ட நண்பர்கள் எப்படியோ இவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்தால் போதும் என்று கூறி அவ்விடம் நகர்ந்தனர்…
வீட்டுக்கு வந்த சுமோவின் பின்னாலே சுற்றி கொண்டு இருந்த ஸ்ரீயை அவன் எதுக்கு சுற்றுகிறான் என்பதை அறிந்த சுமோ…”சும்மா என் பின்னாடியே சுத்தமா போய் தூங்கு “..என்றாள்..
அவனோ அவள் கையை பிடித்து ,”நீயும் வா டி போய் தூங்கலாம்”.. என்று தன் விஷமம் நிறைந்த விழிகளில் அழைக்க அவன் முகம் பார்த்தால் தாம் சென்று விடுவோம் என்பதை அறிந்த சுமோ …”போ டா எனக்கு வேலை இருக்கு” என்றாள்..
அவனோ “ப்ளீஸ் டி’ என்று கெஞ்சி கொண்டே சுற்ற அவளோ ,”நான் சொன்னதை கேக்காமல் குடிச்சில போ …குடிச்சா என் பக்கத்தில் வராத “..என்று கூறி அவனை மறுத்து கூறினாள்..
அவனோ ஒரு கட்டத்தில் “குடிச்சா அப்போ உன்கிட்டே வர கூடாதா”.. என்று கூறி கொண்டே முன்னோக்கி நகர்ந்து வந்து கொண்டு இருந்தான்..
அவளோ , “ஆமா குடிச்சா என்கிட்டே வராத “..என்று பின்னோக்கி நகர்ந்து கொண்டு இருந்தாள்..
அவனோ அவள் அருகில் வந்து நெருங்கி நின்று, சிரித்து கொண்டே, ” அப்போ நான் குடிச்சுட்டு தான் முதல் இரு முறை உன் அருகில் வந்ததே” என்று கூறி ..தன் சொந்த வாயால் அவனுக்கு ஆப்பு வைத்து கொண்டு அவள் நிலையை அறியாமல் அறிந்து கொள்ள விருப்பம் இல்லாமல் அவளை விடாமல் தூக்கி கொண்டு அறைக்குள் சென்று விட்டான்…
அவளோ எத்தனை முயற்சி செய்தும் அவன் விடவில்லை… அவன் கூறியது அவள் செவிக்குள் இருந்து மறைய மறுத்து அவன் கூறியது கேட்டு கொண்டே இருக்க அவனை மறுத்தாள்… ஆனால் அவன் நினைத்ததை செய்து விட்டே அவன் அடங்கினான்…அவனோ அவளை விடாமல் கட்டி பிடித்து உறங்குவதை பார்த்து அவளுக்கு பல யோசனைகள் உருவானது…
அவன் கூறியது என்ன முதல் இருமுறை குடித்து விட்டு தான் வந்தேன் என்றா ..அப்போ பிளான் செய்து தான் என் அருகில் வந்தானா… அப்போ இவனுக்கு எல்லாம் தெரிஞ்சு இருக்கு…நம்ம கிட்டே பொய் சொல்லி இருக்கான்…இவன் என்னை பத்தி என்ன நெனைச்சுட்டு இருக்கான் நான் அன்று நடந்ததை எண்ணி எத்தனை முறை வருத்தப்பட்டு விலகி இருக்கேன்..நான் தான் தப்பு பண்ணிட்டேன் னு எத்தனை நாள் எனக்கு கஷ்டமா இருந்துச்சு…இவன் என்னை இப்படி ஏமாற்றி விட்டானே…
அவளால் ஆற்றி கொள்ள முடியவில்லை…தன்னை சமாதானம் செய்து கொள்ள முடியவில்லை… அவன் எப்படி இந்த மாதிரி தன்னுடன் நடந்து கொள்ளலாம்…அவனோ உறங்கி கொண்டு இருக்க அவளோ உறங்காமல் காலை புலர காத்து இருக்கிறாள்…அவனிடம் இதை பற்றி கேட்டே ஆக வேண்டும் என்று முடிவு எடுத்து கொண்டாள்… மேலும் சில முடிவுகளை அவன் கை வளைவில் படுத்து கொண்டே எடுத்து கொண்டு இருக்கிறாள்…
நாளைய விடியல் இருவருக்கும் எப்படி இருக்கும்….
இது மீமிகை நேசமடி சகியே……
