மீமிகை அழகானது நம் நேசம் – 15

மீமிகை அழகானது நம் நேசம்

மீமிகை அழகானது நம் நேசம்

மீமிகை அழகானது நம் நேசம்

மீமிகை அழகானது நம் நேசம் – 1

மீமிகை அழகானது நம் நேசம் – 1

மீமிகை அழகானது நம் நேசம் – 2

மீமிகை அழகானது நம் நேசம் – 2

மீமிகை அழகானது நம் நேசம் – 3

மீமிகை அழகானது நம் நேசம் – 3

மீமிகை அழகானது நம் நேசம் – 4

மீமிகை அழகானது நம் நேசம் – 4

மீமிகை அழகானது நம் நேசம் – 5

மீமிகை அழகானது நம் நேசம் – 5

மீமிகை அழகானது நம் நேசம் – 6

மீமிகை அழகானது நம் நேசம் – 6

மீமிகை அழகானது நம் நேசம் – 7

மீமிகை அழகானது நம் நேசம் – 7

மீமிகை அழகானது நம் நேசம் – 8

மீமிகை அழகானது நம் நேசம் – 8

மீமிகை அழகானது நம் நேசம் – 9

மீமிகை அழகானது நம் நேசம் – 9

மீமிகை அழகானது நம் நேசம் – 10

மீமிகை அழகானது நம் நேசம் – 10

மீமிகை அழகானது நம் நேசம் – 11

மீமிகை அழகானது நம் நேசம் – 11

மீமிகை அழகானது நம் நேசம் – 12

மீமிகை அழகானது நம் நேசம் – 12

மீமிகை அழகானது நம் நேசம் – 13

மீமிகை அழகானது நம் நேசம் – 13

மீமிகை அழகானது நம் நேசம் – 14

மீமிகை அழகானது நம் நேசம் – 14

மீமிகை அழகானது நம் நேசம் – 15

மீமிகை அழகானது நம் நேசம் – 15

மீமிகை அழகானது நம் நேசம் – 16

மீமிகை அழகானது நம் நேசம் – 16

மீமிகை அழகானது நம் நேசம் – 17

மீமிகை அழகானது நம் நேசம் – 17

மீமிகை அழகானது நம் நேசம் – 18

மீமிகை அழகானது நம் நேசம் – 18

மீமிகை அழகானது நம் நேசம் – 19

மீமிகை அழகானது நம் நேசம் – 19

மீமிகை அழகானது நம் நேசம் – 20

மீமிகை அழகானது நம் நேசம் – 20

மீமிகை அழகானது நம் நேசம் – 21

மீமிகை அழகானது நம் நேசம் – 21

மீமிகை அழகானது நம் நேசம் – 22

மீமிகை அழகானது நம் நேசம் – 22

மீமிகை அழகானது நம் நேசம் – 23

மீமிகை அழகானது நம் நேசம் – 23

மீமிகை அழகானது நம் நேசம் – 24

மீமிகை அழகானது நம் நேசம் – 24

மீமிகை அழகானது நம் நேசம் – 25

மீமிகை அழகானது நம் நேசம் – 25

மீமிகை அழகானது நம் நேசம் – 26

மீமிகை அழகானது நம் நேசம் – 26

மீமிகை அழகானது நம் நேசம் – 27

மீமிகை அழகானது நம் நேசம் – 27

மீமிகை அழகானது நம் நேசம் – 28

மீமிகை அழகானது நம் நேசம் – 28

மீமிகை அழகானது நம் நேசம் – 29

மீமிகை அழகானது நம் நேசம் – 29

மீமிகை அழகானது நம் நேசம் – 30

மீமிகை அழகானது நம் நேசம் – 30

மீமிகை அழகானது நம் நேசம் – epilogue

மீமிகை அழகானது நம் நேசம் – epilogue

அத்தியாயம் : 15

மீமிகை அழகானது நம் நேசம்

ஸ்ரீராம் அவளை விட்டு எழுந்து குளியலறைக்குள் போவதை பார்த்ததும் அவளுக்கு மேலும் அழுகை வந்தது…அவள் முடிவே செய்து விட்டாள் அவனுக்கு ஒன்றும் நியாபகம் வர போவது இல்லை… அவனுக்கு தனக்கு முத்தம் கொடுத்ததையே மறந்தவன் இப்போது நடந்து இருப்பதை பார்த்து அவன் என்னை பற்றி என்ன நினைப்பான்…அவன் முன்னே இந்த கோலத்தில் படுத்து கிடக்கிறேனே அவன் என்னால் தான் எல்லாம் நடந்தது என்று கூறி விட்டாலோ….

சுமோ பயந்த சுபாவம் கொண்டவள் அல்ல அதிலும் ஸ்ரீயிடம் அவளுக்கு பயம் என்ற சொல்லுக்கே இடம் இல்லை……அழுது கரையும் ஆளும் அல்ல சுமோ…ஆனால் இந்த அதிர்ச்சி அவள் எதிர் பார்க்காததில் அவள் ஊமையாகி அழுது கொண்டு இருக்கிறாள்….ஸ்ரீராம் என்ன சொல்லுவானோ என்பதே அவளுக்கு பெரிய பிரச்சனை யாகி இருக்க அந்த கட்டிலில் இருந்து இறங்கி மெல்லே வேறு உடை எடுத்து உடுத்தி அமர்ந்தாள்…

அவளும் அவனை பற்றி தான் சிந்தித்து கொண்டு இருந்தாள்…அவன் தன்னை முத்தமிட்டதும் இனி இது போல ஆக கூடாது என்று தான் அவள் அவனிடம் இருந்து விலகி இருந்தது…ஆனால் அவன் ஹரிசை கண்டு பிடித்து விட்டேன் என்று கூறினாலும் அவனை காண செல்லலாம் என்ற சந்தோசத்திலும் இருந்த சுமோ ஆனால் ஸ்ரீராம் ஏன் இப்படி இருக்கிறான் என்று புரியாமல் இருக்க , பயணத்தின் போது அவன் முகத்தை பார்த்து ஏதேனும் கண்டு பிடிக்க முடியுமா என்றால் அதும் முடியவில்லை….இந்நிலையில் இரவும் அவன் அவளை கண்டு கொள்ளாமல் செல்ல ஸ்ரீக்கு என்ன ஆகிற்று என்று புரியாமல் யோசித்து கொண்டே அவள் உறங்கி போனாள்….

ஹரிஷை கண்டதும் அவனை காண தானே நான் இந்த அளவுக்கு இறங்கி இங்கே வந்தேன் என்று நினைத்து தான் அவள் அழுதது….அப்போதும் ஹரிஷ் நிதானமாக இருக்க அதற்குள் சுமோ சொல்ல சொல்ல கேக்காமல் ஸ்ரீ வெளியேறி விட அவன் செல்வதையே பார்த்து கொண்டு இருந்த சுமோவை தொட்டு நினைவுக்கு கொண்டு வந்தான் ஹரிஷ்….

இருவரும் அந்த ஓபன் கஃபே யில் அமர்ந்து காபி ஆடர் செய்து குடித்து கொண்டு இருக்கும் போது அவளோ வார்த்தைக்கு நூறு வார்த்தை ஸ்ரீயை பற்றி கூற அதை எல்லாம் பொறுமையாக கேட்டு கொண்டு இருந்தான் ஹரிஷ்….

ஹரிஷ் , “நீ எப்படி இங்கே வந்தே என்ன சொல்லி வந்தே “…என்று தன் கேள்விகளை அடுக்க அவனது சந்தேகம் உண்மையா என்று அறிய அவன் அந்த கேள்வியை கேட்டதே…

அவன் கேள்விகளில் அதிர்ந்த சுமோ ஒரு வழியாக தைரியத்துடன் தனக்கும் ஸ்ரீக்கும் திருமணம் நடந்து விட்டது எனவும் தங்களுக்குள் இருக்கும் அக்ரிமெண்ட் பற்றியும் பொறுமையாக அவள் அவனுக்கு விளக்க அதை எல்லாம் கேட்டு முடித்தவனோ

ஹரிஷ், “மேதி உனக்கு என்னை பற்றி நல்லா தெரியும் …என் தங்கைகளின் வாழ்க்கை க்கு வேண்டி நான் இங்கே வந்து இருக்கேன்…அது போல தானே உன் பெற்றோர்க்கும் இருக்கும்…திருமணம் செய்து நீ நல்ல வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறாய் என்று அவர்கள் நினைத்து கொண்டு இருக்க அவர்களை ஏமாற்ற உனக்கும் உன் கணவனுக்கும் எப்படி மனது வந்தது…அப்படி என்ன காதல் உன்னுடையது…உன் குடும்பத்தை எல்லாம் விட்டு உனக்கு உன் காதல் தான் பெரிதாகி போனதா….

நான் உன்னிடம் கூறினேன் ..எனக்காக காத்து இரு..என் குடும்ப நிலையை மேடு ஏற்றி விட்டு வருகிறேன் என்று ஆனால் அதை எல்லாம் கேக்கும் அளவுக்கோ புரிந்து கொள்ளும் அளவுக்கோ உனக்கும் பக்குவம் இல்லை அதாவது என் குடும்பத்துக்கு பிறகே எனக்கு நீ என்று உனக்கு நன்றாக தெரியும்… உனது காதல் பைத்தியகாராத்தனமானது….

ஆம் இதை சொல்லும் போது உனக்கு கோபம் வரலாம்…நீ கோபம் கொண்டாலும் எனக்கு கவலை இல்லை..நான் சொல்ல வந்ததை சொல்லுவேன்.. நீ என்மேல் வைத்து இருப்பது காதலே அல்ல…ஒரு வித கவர்ச்சி…நீ என்மேல் வைத்து இருப்பது காதல் என்றால் நீ இந்த யோசனை யை முடிவு செய்து அதை செயல் படுத்தி இருக்கமாட்டாய்…இப்படி வேறு ஒருத்தனின் மனைவியாக என் கண்முன்னே அமர்ந்து கொண்டு இருக்க மாட்டாய்…

உனக்கு எல்லாமே அவசரம் காதலிலும் அவசரம் எல்லாத்திலும் அது மட்டுமே உன்னை இது வரை கொண்டு வந்து வைத்து இருக்கிறது…உனக்கு உன் கணவன் மேல் தான் காதல் இருக்கிறது என்று ஹரிஷ் கூற அதை கேட்டு அவள் அதிர

முழிக்காதே ஆம் அவன் மேல் உனக்கு இருப்பது காதல் தான் அதற்கு சிறு உதாரணத்தை கூறுகிறேன்..நீங்கள் வந்தது முதல் உன் கணவன் போவது வரை உன் கண்கள் அவனை மட்டுமே தழுவியது….அதன் பிறகும் நீ அவனை பற்றி தான் என்னிடம் கூடுதல் பேசியது…அதுமட்டுமில்லமால் அவன் கண்ணில் உனக்கான தவிப்பை நான் பார்த்தேன் என்று கூடுதல் அவளை குழப்ப…அவளோ குழம்பி , “அப்படி ஒன்றும் இல்லை…அவனுக்கும் எனக்கும் இடையில் ஒன்றும் இல்லை “..என்று கூற அவன் அவளின் தாலியை சுட்டி காட்டி அப்போ இதற்கு என்ன பதில் என்று கேட்க அவளிடம் பதில் இல்லை…

இதோ போறானே சொந்த மனைவியை அவன் காதலனுக்கு வேண்டி விட்டு கொடுத்து விட்டு உங்கள் அளவுக்கு தைரியம் எனக்கு இல்லை…உங்களை போல என்னால் என் வாழ்க்கை யை இப்படி எளிதாக கருத முடியாது…உன் பெற்றோரை வதைத்து அவர்கள் கண்ணீரில் என் வாழ்க்கை யை தொடங்க எனக்கு விருப்பம் இல்லை… அதே போல காதல், கல்யாணம், விவாகரத்து உங்களுக்கு எளிதாக இருக்கலாம் ..எனக்கு அப்படி இல்லை…என்று முகத்தில் அடித்தது போல அவன் கூற அவள் அதை கேட்டு தான் அதிர்ந்து அழ ஆரம்பித்தாள்…

பின் ஹரிஷ் தான் தயங்கி தயங்கி அவள் தோள் தொட்டு அணைத்து ஆறுதல் அளிக்க அவள் கேவினாள்… அவன் கூறிய ஒவ்வொரு விஷயமும் உண்மை தானே என் சுயநலத்துக்காக என் குடும்பத்தை அழிக்க பார்த்தேனே என்று நினைக்க அவளுக்கு அழுகை முட்டியது…

ஹரிஷ் மேலும் தொடர்ந்து நான் ஏன் குடும்பம் குடும்பம் என்று கூறுகிறேன் என்று நினைக்கலாம்…ஏன் என்றால் நான் குடும்பத்தில் வாழ்பவன்…அதன் இனிமை எனக்கு தெரியும்..என் தங்கைகள் நாளை இந்த பணியை செய்தால் என் வீட்டில் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன்..நினைக்க கூட என்னால் முடியவில்லை… அதே போல நான் உன்னை இந்த சூழ்நிலையில் திருமணம் செய்வது போல நினைத்து பார்த்தேன் அப்போது என் தங்கைக்கு நான் என்ன முன்னுதாரணத்தை கொடுத்து இருக்கிறேன் என்று என்னால் அதையும் யோசிக்க முடியவில்லை… எனவே உனக்கு ஏற்றவன் ஸ்ரீராம் உன் கணவன் தான் அவனோடு சேர்ந்து உன் வாழ்க்கை யை பார்”..என்று பேசி முடிந்தது போல எழுந்து கொண்டான்…

அவன் கூறுவதை கேட்டு அழுவதை பார்த்து அழட்டும் என்று நினைத்து வேடிக்கை பார்க்க தொடங்கினான்…

ஹரிஷ் அவனால் நினைக்க முடியவில்லை…ஆனால் அவனுக்கும் வருத்தமே என்ன செய்வது இது இயற்கை… என் காதலி அவன் மனைவி ஆகலாம் …ஆனால் அவன் மனைவி என் காதலி ஆக முடியாது என்று நினைத்து அவள் வாழ்வை விட்டு ஒதுங்க நினைத்து விட்டான்…முடிவும் எடுத்து விட்டான்…அது தான் இருவருக்கும் நல்லது…இப்போது ஸ்ரீ மற்றும் சுமேதா சேர்ந்து வாழாமல் இருக்கலாம் பின்னாளில் அவர்கள் ஒருமித்த தம்பதிகள் ஆவார்கள் என்று நினைத்து அவளை சமாதானப்படுத்தி அவனுக்கு காண வேண்டிய நபரை காண சென்றனர்….

ஹரிஷ் கூறுவது சரி…அனைத்தும் உண்மை…நாளை நான் ஸ்ரீயை விட்டு ஹரிஷை மனம் புரிந்தால் அது தெரிந்து வீட்டில் உள்ளவர்கள் நிலைமை…ஹரிஷை பார்த்து கற்று கொள்ள வேண்டும்…அவனுக்கு அவனது குடும்பம் மட்டுமே வாழ்க்கை…அதனால் தான் அவன் காதலே வேண்டாம் என்று என்னை ஒத்துகினான்.. நான் தான் பிடிவாதமாக அவன் வேண்டும் என்று கூறினேன்…இப்போதும் அவன் எனக்கும் என் குடும்பத்துக்கும் வேண்டி யோசித்து இருக்கிறான் என்று சிறு மகிழ்ச்சி அவள் மனதில் தோன்றியது…

அது போல நான் எந்த அடிப்படையில் ஸ்ரீராமை திருமணம் செய்து இருந்தாலும் இனியாவது என் குடும்பத்தார் அனைவருக்கும் வேண்டி ஸ்ரீராம் உடன் என் வாழ்க்கையை தொடங்க வேண்டும்..இனியேனும் என் வாழ்க்கை அவனோடு என்று நினைத்து கொண்டாள்….ஆனால் ஹரிஷ் கூறிய விஷயங்கள் எல்லாம் சரி ஒன்று மட்டும் தவறு எனக்கும் ராம் க்கும் இடையில் காதல் என்ற ஒன்று இருப்பது ஹரிஷ் சொல்லி தான் எனக்கு தெரிகிறது இதை மட்டும் தவறாக கணித்து விட்டான் என நினைத்து கொண்டாள்…. ஆனால் காதல் என்ற வார்த்தை கூட ஸ்ரீக்கு ஆகாது என்று ஹரிஷுக்கு தெரியாது என்று நினைத்தாள் சுமோ….

ஆம் அப்படி ஒன்றும் இல்லையே…எதுவுமே இல்லை ஆனால் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது…இனி ஹரிஷ் கடந்த காலம் ஆகி விட்ட நிலையில் நிகழ்காலத்தில் நடந்த இந்த நிகழ்வை ஸ்ரீ எப்படி ஏற்று கொள்வான்…என்னை குறை சொல்லுவனோ…அவன் போதம் இல்லாத நிலையில் இருந்தான் என்றால் நான் அப்படி இல்லையே சுயநினைவு எனக்கு இருந்ததே..அவன் ஏதாவது கூறி விடுவானோ என்ற பயத்தில் உழன்று கொண்டு இருக்க இதற்கு எல்லாம் காரணம் ஆன ஸ்ரீ வந்தான்…வந்தவன் அவளை ஏறிட அவள் அழுது கொண்டு இருப்பது தெரிய…

ஸ்ரீ க்கு கோபம் வந்தது இவள் இப்போ இங்கே என்ன நடந்தது என்று இப்படி அழுது வடிந்து கொண்டு இருக்கிறாள் …ஒரு வேளை அவள் காதலனை நினைத்து அழுகிறாளோ இனி அவன் உடன் வாழ்க்கையை வாழ முடியாது என்று அழுகிறாளோ…எப்படி இருந்தாலும் இனி அவளை எங்கேயும் விடும் எண்ணம் எனக்கு இல்லை…அவள் எனக்கானவள்…நான் திருந்துவேனா என்று தெரியாது ஆனால் என் வாழ்க்கையில் இருந்து அவளை விடும் உத்தேசம் எனக்கு இல்லை….அவளிடம் உண்மையை கூறி விடலாம் அவள் அடித்தாலும் வாங்கி கொள்ளலாம் என்று நினைத்து அவள் அருகில் அவன் வரும் அரவம் கேட்டதும் அவனை வந்து கட்டி கொண்டு ராம் என அழுதாள்…

“ராம் என்னை மன்னிச்சுடு டா…நான் தடுத்து பார்த்தேன் டா.. நீ விடல… இப்படி ஆச்சு …நான் மட்டும் காரணம் இல்லை டா”….என்ன சொல்ல வந்தாலோ …அதை கூற முடியாமல் தவித்து கொண்டு பாதி கூறியும் கூறமாலும் உளறி கொண்டு இருந்தாள்…அவள் கூறுவதை கேட்டவன் ஐயோ இதுக்கு தான் இவள் இப்படி அழுகிறாளோ என்று நினைத்து உண்மையை கூறி விடலாமா என்று யோசித்து அதை கை விட்டான்…வேண்டாம் இப்படியே இருக்கட்டும் என்று நினைத்து கொண்டு அவள் முதுகை ஒன்றும் கூறாமல் தடவி கொடுத்து கொண்டு இருந்தான்…

ஸ்ரீராம் க்கு உள்ளுக்குள் ஒரு குத்தாட்டம் போடும் அளவுக்கு சந்தோசம் பின்னே அவன் அவளிடம் உண்மையை கூற வேண்டி வந்தால் அவள் என்னமோ தானும் ஒரு காரணம் …என்னை மன்னித்து விடு என்று கூறினாலோ…அவனோ அதையே மையின்டைன் பண்ணி கொள்ளலாம் என்று முடிவு எடுத்து , “அழுகாத டி பரவாயில்ல விடு நடந்தது நடந்து போச்சு விடு “…என்று கூறி கொண்டே அவளை கட்டி கொண்டு அவள் முதுகில் கோலம் போட்டு கொண்டு இருந்தான்…. அது எல்லாம் உணராமல் அவள் மார்பில் சாய்ந்து கொண்டு ஆறுதல் தேடி கொண்டு இருந்தாள் சுமோ…இவன் ஆறுதல் அளிக்க வில்லை முதுகில் கோலம் தான் போட்டு கொண்டு இருக்கிறான் என்பதை சுமோ அறிந்தாலோ…ஸ்ரீயின் நிலைமை…

ஆனால் ஒரு காலத்தில் சுமோக்கு உண்மை தெரிந்தால் ஸ்ரீயின் நிலைமை என்ன ஆகும்….காதலே இல்லமால் ஒரு கல்யாணம்… காதலே இல்லாமல் ஒரு தாம்பத்தியம்….ஆனால் இவர்கள் இருவரும் தங்கள் ஆழ் மனதை சிந்தித்து பார்த்தால் இவர்களுக்கே புரியும்…ஸ்ரீ க்கு அவள் வேண்டும் எனக்கானவள் என்று நினைக்கிறான்… யாருக்கும் விட்டு கொடுக்கமாட்டேன் என்று இருக்கிறான் ஆனால் தான் எதனால் அவளை விட்டு கொடுக்க முடியாமல் இருக்கிறோம் என்று உணர்வான்னா ஸ்ரீ…

இப்போது தான் ஹரிஷ் யை விட்டு இவனிடம் தன் வாழ்க்கையை வாழ வேண்டும் தன் குடும்பத்துக்காக என்று முடிவுக்கு வந்து இருக்கும் சுமோ இவன் வேண்டும் என்றே தான் அவளை நாடியது என்ற உண்மையை அறிந்தால் காளி அவதாரம் எடுத்து ஸ்ரீயை மிதித்தாலும் ஆச்சர்ய படுவதற்கு இல்லை…

இது மீமிகை நேசமடி சகியே……

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *