மீமிகை அரக்கனே
மீமிகை அரக்கனே – 27
அகிலுக்கு அன்று நிறைய வேலை இருப்பதால் மியூசிக் இன்ஸ்டியூட் அவனால் இன்னைக்கு ராப் பண்ண முடியாததால், இன்னைக்கு மட்டும் டிரைவருடன் காரில் போறியா வெண்பா என்று கேட்டான்.
அவளும் சரி நான் போறேன் நீங்க ஒர்க்கை பாருங்க என்றால். கார் வரும் வழியில் கார் டயர் பஞ்சர் ஆனதால் கார் டயர் சேஞ்ச் பண்ண ஒன் ஹவர் ஆகும் சார், என்று அகில் கிட்ட என்று இன்பார்ம் பண்ணார்.
அகில் வெண்பாவை போன் பண்ணி வரும் வழியில் கார் பஞ்சராம் நீ வெயிட் பண்ணு நான் வேற கார் அனுப்புறேன் என்றான். அதற்கு வெண்பா இல்ல அகில் வேற கார் வரதுக்குள்ள டைம் ஆயிடும், நான் ஆட்டோல போறேன் கார் ரெடியானதும் இன்ஸ்டியூட்ல இருந்து பிக்கப் பண்ணிக்க சொல்லுங்க என்றாள்.
அகில் ஆட்டோவா என்று யோசித்தான், அதற்கு வெண்பா நான் இதற்கு முன்னாடி ஆட்டோல்ல போய் இருக்கான் பயம் இல்லை என்று அவனை சமாதானப்படுத்தி ஆட்டோவில் கிளம்பினாள்.
இது இன்னும் நடராஜனுடைய ஆட்களுக்கு வசதியாக போனது. வெண்பா காலேஜ் முன்னாடி நிற்பதால் இப்ப எதுவும் செய்ய வேண்டாம். ஆட்டோவ பாலோ பண்ணிட்டு எதுனா சந்து திரும்பும் போது அவளை கடத்திட்டு போய் பாசுக்கு சப்ரைஸ் பண்ணுவோம் என்று அந்த ஆடியாட்களில் ஒருவன் சொன்னான்.
இது அங்கு இருந்த அடியாட்களுக்கு அனைவருக்கும் ஏற்கும் வகையில் இருந்தது. அதனால் அந்த ஆட்டோவை அவர்கள் ஃபாலோ பண்ணினார்.
இது எதுவும் தெரியாத வெண்பா தன்னுடைய கிளாசை நினைத்து சந்தோஷமாகவும், இன்று புது சங்கதி கத்து கொடுக்கணும், கத்துபாங்களா, பதட்டமாகவும் அதே நேரம் பசங்க எப்படி சுலபமா சொல்லி கொடுக்கலாம் என்று பல்வேறு சிந்தனையில் இருந்தால்.
ஆட்டோ குயில் பாட்டு இன்ஸ்டியூட் நெருங்க அஞ்சு நிமிஷம் நேரம் இருக்கையில், ஒரு சந்துக்கள் திரும்பி இன்னொரு சந்தைக்குள் திரும்பினால் இன்ஸ்டிடியூட் வந்துவிடும்.
இது அந்த அடியாட்களுக்கு சாதகமாக அமைந்து விட்டது உடனே தங்களுடைய காரை வேகமாக அந்த ஆட்டோவின் முன்னாடி நிப்பாட்டி. ஆட்டோ டிரைவரை கீழே தள்ளி அடித்து வெண்பாவை மயக்க மருந்து கொடுத்து தங்களுடைய காரில் ஏற்றினார்.
இதை நடராஜ்க்கு செல்லவும் நடராஜ்க்கு இன்னும் சந்தோஷமாக இருந்தது. நான் அவளை கொலை பண்ண நினைச்சேன் ஆனா இவளை வச்சு மிரட்டியே, என் பொண்ணு கழுத்துல அந்த அகிலை தாலி கட்ட வச்சிடுவேன்.
எனக்கு என் பொண்ணு வாழ்க்கை தான் முக்கியம் அவளை நம்ப இடத்துக்கு கொண்டு வாங்க என்றார் நட்ராஜ் .
நேரம் இரவு எட்டு ஆகியும் வெண்பா வீட்டிற்கு வரவில்லை, ஒன்பதாகியும் வரவில்லை அமுதாவுக்கு சிறு பதட்டமாக இருந்தது. தன்னுடைய தோழி சுகன்யா என்பதால் அவருக்கு நேரடியாக போன் பண்ணினார்.
சுகன்யா போனை எடுத்ததும் நல்லா இருக்கியா அமுதா, வெண்பா இன்னைக்கு புது சங்கதி எடுக்க போரனு சொன்னா, இன்னைகு வரலையே ஓடம்பு எதும் செரில்லாய நான் அவளுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன் என்றார்.
இதைக் கேட்டதும் அமுதா அதிர்ச்சியாகி எனது வெண்பா வரலையா, வீட்டுக்கு வரலையா என்று பதட்டம் ஆகினார் . தினேஷ் கண்ணன் வீட்டிற்கு சீக்கிரம் வந்ததால் அமுதா பேசியதை அவரும் கேட்டுக் கொண்டிருந்தார்.
அமுதா பேசியதை கேட்டு அதிர்ச்சியான தினேஷ் கண்ணன் போனை வாங்கி சுகன்யாவிடம் என்னம்மா சொல்லுற வெண்ப அங்கு வரலையா, வீட்டுக்கு வரலாமா காலேஜ்ல இருந்து அமுதாக்கு போன் பண்ணி இருக்கா மியூசிக் இன்ஸ்டிட்யூட் கிளம்பிடேனு போன் பேசிட்டு தான் வந்தா.
நீ அங்க வரலைன்னு சொன்னது, எங்களுக்கு பயமா இருக்கு சரிம்மா நீ அங்க பாரு. நாங்க அகிலுக்கு போன் பண்றோம் என்று அகிலுக்கு போன் பண்ணினார் தினேஷ் கண்ணன்.
அகில் வீட்டுக்கு கிளம்பலாம் என்று ஆபீஸ் வெளியே வரவும் தினேஷ் கண்ணன் போன் வந்தது, எதுக்கு அப்பா இந்த நேரத்துல போன் பண்றாங்க. எமர்ஜென்சியா இருக்குமோ, என்று உடனே அவருடைய போனை எடுத்தான்.
அகில் போனை எடுத்தவுடன் வெண்பா இன்னும் வீட்டுக்கு வரல, மியூசிக் இன்ஸ்டியூட் ஃபோன் பண்ணினால் அவங்களும் வெண்பா இங்க வரலைன்னு சொல்லுறாங்கபா.. என்னன்னு கொஞ்சம் பாரு நான் இப்பவே இன்ஸ்டியூட் கிளம்புறேன், போலீஸ்க்கு எதனா இன்பார்ம் பண்ணுமா என்று கேட்டக…
அகிலுக்கு உலகமே ஒரு நிமிடம் நின்றது போல் இருந்தது. என்னப்பா சொல்றீங்க இன்னும் வரலையா டிரைவர் அண்ணாவை பிக்கப் பண்ண சொல்லி இருந்தேனே. அவ எங்கனா ஷாப்பிங் போயிருக்கப் போறா… டிரைவர் அண்ணா கிட்ட கேளுங்கப்பா என்றான்!!!
தினேஷ் கண்ணன் அகிலிடம் எல்லா டிரைவரும் வந்துட்டாங்க… நீ யாருகிட்ட பிக்கப் பண்ண சொன்ன என்று கேட்டார். நம்ம சண்முகா அண்ணாவை தான் பிக் அப் சொன்னேன்ப்பா. தினேஷ் கண்ணன் நான் சண்முகத்துக்கு கிட்ட கேட்டு உனக்கு சொல்றேன் என்றார்.
தினேஷ் கண்ணன் டிரைவர் சண்முகத்திற்கு போன் பண்ணினார், சண்முகம் பல வருடமாக தினேஷ் கண்ணனிடம் டிரைவர் வேலை பார்க்கிறார். நம்பிக்கையானவர் அதனால் அவரிடம் போனில் விசாரித்தார்!!
சண்முகம் சொல்லுங்கய்யா இந்த நேரத்துல போன் பண்ணி இருக்கீங்க கார் எடுக்க வரணுமா என்று கேட்டார். அதற்கு தினேஷ் கண்ணன் இல்ல சண்முகம் வெண்பாவ நீங்க கூட்டிட்டு வர இன்ஸ்டியூட் போகலையா என்று கேட்டார்.
இல்லையா அகில் தம்பி தான், வெண்பா பாப்பாவை பிக் பண்ணிக்கிறேன்னு சொன்னாங்க . கார் பிரேக் டவுன் ஆயிடுச்சு அதனால கார் டயர் சரி பண்ணிட்டு நான் வீட்டுக்கு வந்துட்டேன் என்றார்.
என்னையா எதனா பிரச்சினையா நான் வரட்டுமா என்று கேட்டார். அதற்கு தினேஷ் கண்ணன் ஆமா சண்முகம், வெண்பாவ காணல நீங்க கொஞ்சம் வாங்க என்று அழைத்தார்… உடனே வரேன் ஐயா என்று அவர் போனை கட் பண்ணினார்!!
தினேஷ் கண்ணன் அகிலுக்கு போன் பண்ணி வெண்பவ, நீ தான் பிக்கப் பண்ணிக்கிறேன்னு சொன்னதால சண்முகம் வீட்டுக்கு வந்து காரை விட்டுட்டு, அவர் வீட்டுக்கு போயிட்டாராம்.. அதுக்கப்புறம் தான் அவனுக்கு நியாபகம் வந்தது!!
வெண்பாவிற்கு சப்ரைஸ் பண்ணுவதற்காக, சண்முகத்தை நீங்க வீட்டிற்கு கார் ரெடி பண்ணிட்டு போங்க, நானே போய் கூப்பிடுகிறேன் என்றான். தினேஷ் கண்ணன் சொன்னவுடன் தான் அவனுக்கு ஞாபகம் வந்தது, எப்பயும் வெண்பா கிளாஸ் நடுவில் போன் பண்ணுவாள். அதனால் அவள் போன் பண்ணும் போது கிளம்பலாம் என்று நினைத்து. அவள் போன் பண்ணாததால், இவனும் வேலையில் பிஸியாக இருந்ததால் அதை மறந்து விட்டான்.
அவனுடைய சிறு அலட்சியத்தால் இப்பொழுது அவளை ரோடு ரோடாக தேடி அலைகிறான்…
Sorry sisss……. Easter work athan konjam busy Wednesday la irunthu correct ah ud poturuva then story 2 r 3 epi tha iruku.. again sorry………….
