மீமிகை அரக்கனே
மீமிகை அரக்கனே – 22
தினேஷ் கண்ணனும், அமுதாவும் அவர்கள் தனியாக காரில் வந்ததால் அவர்கள் முதலில் வீட்டிற்கு சென்றனர் , மாலாவுக்கும் அவளுடைய அம்மா போன் பண்ணதால் அவளும் எல்லார்கிட்டயும் சொல்லி கிளம்பினாள். பாட்டியை அவர் வந்த காரில் அகிலன் பத்திரமாக அனுப்பினான்.
பாட்டி வெண்பாவிடம் நாளைக்கு நான் வீட்டுக்கு வரேன் உன்கிட்ட பேசணும் என்று சொல்லி சென்றார்.
இவர்கள் இருவரும் தங்களுடைய காரில் கிளம்பினர், வெண்பா தான் அகிலை பார்த்துக் கொண்டே வந்தாள். அவளைப் பார்த்து என் என்று புருவத்தை தூக்கினான். அவள் தயங்கி எச்ஓடி டிஸ்மிஸ் பண்ணதுக்கு நீங்கதான் காரணமா என்று தயங்கி கேட்டால்.
அவன் முகம் சற்று கடுமையாகி அவங்கள வெறும் டிஸ்மிஸ் மட்டும்தான் பண்ணி இருக்கேன், ஆனா இந்த விஷயம் நடக்க யார் காரணமோ எனக்கு தெரியல, தெரிஞ்ச அன்னைக்கு அவங்கள நான் சும்மா விடமாட்டேன் .
அகில் பத்தி பேசுறது ஒன்னு தான் அகில் மனைவியை பத்தி பேசுறதும் ஒன்னு தான். நீயும் நானும் வேற வேற இல்ல.
கோபப்படாதீங்க அகீல் யாரா இருந்தாலும் மன்னிச்சிடலாம், நாம நம்ப வாழ்க்கை வாழலாம் என்றால்.!!
நான் ஹாப்பி மூடுல இருக்கேன். மைண்ட் அப்செட் ஆகிடும், இத பத்தி பேச வேண்டாம் ஃப்ரீயா விடு நான் பாத்துக்குறேன் என்றான்.
இருவரும் பேசிக்கொண்டே தங்கள் வீட்டிற்கு வந்தனர். அவர்களை வாசலிலே நிப்பாட்டி அமுதா திருஷ்டி எடுத்தார்.
இதுக்கு அப்புறம் உங்க வாழ்க்கையில எந்த ஒரு கண்ணும் படாமல் சந்தோஷமா நீங்க ரெண்டு பேரும் வாழனும் என்று ஆசீர்வதித்தார்.
ரூமிற்கு வந்ததும் அகில் வெண்பாவை கட்டி அணைத்தான், வெண்பாவிற்கும் அது தேவைப்பட்டது.
ஊட்டியில் வந்ததுல இருந்து மாத்தி.. மாத்தி.. ஏதோ ஒன்று அவர்கள் வாழ்க்கையில் நடந்து கொண்டே இருந்தது!!
அதனால் அகீல் இன்று வெண்பாவை நெருங்கினான்,
அவளை அவளுக்கு நெற்றியில் முத்தம் கொடுத்து சம்மதமா என்று அவள் கண்ணை பார்த்து கேட்டான்…
அவளும் வெட்கப்பட்டு அவனுக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்து தன்னுடைய சம்மதத்தை தெரிவித்தால்…
தங்கள் இருவரின் காதலின் அளவை அந்த கூடலில் காட்டினர் நிலவு மகளும் இவர்களின் கூடலில் வெட்கம் கொண்டு மேகத்தின் நடுவில் மறைந்தால்.
அடுத்த நாள் காலை இருவருக்குமே அழகாக விடிந்தது. விடிந்ததுமே அகிலின் நேற்றைய இரவு மிச்ச, சொச்சங்கள் காலை மோகத்துடனே அவளை பார்த்தான், அவனைப் பார்த்த வெண்பா பாட்டி வறான்னு சொன்னாங்க அகீழ் அதனால நான் போய் ரெடியாகிட்டு வரேன் என்று அவனிடம் தப்பித்து ஓடினாள்.
எங்கடி தப்புச்சி ஓடுற இரு நானும் வரேன் என்று அவள் பின்னாடியே ஓடினான் அவனும். அவன் வருவதற்குள்ளே அவள் பாத்ரூம் கதவை மூடி இருந்தால். உன்ன நைட்டு பாத்துக்குறேன் இரு என்று மற்றொரு பாத்ரூமில் குளித்து அவனும் ரெடியாகி வந்தான்.
அகில் கிளைன்ட் மீட்டிங் இருப்பதால், பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டு கிளம்பினான். வெண்பா பாட்டி வரேன்னு சொன்னாங்க போன் பண்ணலாம், என்று தன்னுடைய போனை எடுத்து வெளியே வரும் பொழுது விமலா பாட்டி ஆட்டோவில் வந்து இறங்கினார்.
அவரைப் பார்த்ததும் கட்டி அணைத்து முத்தம் கொடுத்தால் என்ன பாக்க அடிக்கடி பார்க்க வருவேன்னு சொல்லிட்டு , வரவே மாட்டிகிற பாட்டி என்று கோபித்துக் கொண்டாள்.
அமுதா விமலா பாட்டியை வரவேற்று , அவருக்கு டீ கொடுத்து அமர வைத்தார், சிறிது நேரம் அவருடன் பேசிவிட்டு, வெண்பாவிற்கும் விமலா பாட்டிற்கும் தனிமை கொடுத்து சென்றார்.
தன் பேத்தி செல்லமாக கோபித்துக் கொண்டிருப்பதை பார்த்த விமலா பாட்டி, இல்லடா செல்லம், நீ கஷ்டப்படுற நேரத்துல உன் கூட இருக்கலாம் என்று தான் நான் அன்னைக்கு கிளம்பலாம்னு இருந்தேன், ஆனா உன்னோட அம்மா உன்ன பாக்க வரவிடல, எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.
நியூஸ் சேனல்ல உன்ன பத்தி சொல்லும்போது எனக்கு ரொம்ப வருத்தமா இருந்துச்சு, ஆனா உங்க அம்மா காரிக்கு அவ்வளவு சந்தோஷம்..
அவதான் உன்ன பெத்தால இல்லாட்டி ஹாஸ்பிடல் மாத்தி தூக்கிட்டு வந்துட்டாளான்னு எனக்கு தெரியல? உன் அப்பன்காரனும் எதுவும் சொல்லாம கம்முனு உக்காந்துட்டு இருக்கான்…
ஆனா அகில் தம்பி உன்னையும், அவரையும் பற்றி நியூஸ்ல சொன்னப்போ எனக்கு அவ்ளோ மனசு நிறைவா இருந்துச்சு!! உன் அம்மாக்காரிக்கு மூஞ்சில கறி பூசின மாதிரி இருந்துச்சு.. உன் அப்பா அதுக்கும் எதுவும் சொல்லாம ரூமுக்கு போயிட்டான்.
எனக்கு அங்க இருக்கவே பிடிக்கல என்றார் விமலா பாட்டி, வெண்பாவிடம் நா திருச்சிகு போக போறடா, உன் அம்மா, அப்பா தொல்லை தாங்கல. நான் உனக்காக தான் எல்லாம் பொறுத்து போன, சென்னை வந்ததும், உனக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சிடுச்சு அதனால் நான் நம்ப தாத்தா வாழ்ந்த விட்டுகே போலாம்னு இருக்கேன்..
இதைக் கேட்டதும் அதிர்ந்த வெண்பா நீ அங்க எப்படி தனியா இருப்ப பாட்டி, முன்னாடி நான் உன் கூட இருந்த பரவால்ல, இப்போ நான் இங்கே இருக்கேன் என்னால வர முடியாது!! அங்க உன்னை நான் எப்படி தனியா விட்டுறது என்று அழுதால்..
அவளைப் பார்த்து முறைத்த விமலா பாட்டி , நான் என்ன சின்ன குழந்தையா நீ என்ன பார்த்துக்கிறதுக்கு. எனக்கு உன்ன நெனச்சு தான் வருத்தம் நீ சந்தோஷமா இருக்கும்போது எனக்கு என்னடி கவலை, எங்க இருந்தாலும் உன்னை நினைச்சுட்டு சந்தோஷமாவே இருப்பேன்..
இங்கே இருக்கிறது பாட்டிக்கு சந்தோஷம் இல்லடா, தாத்தா கூட வாழ்ந்த அந்த வீட்டில் இருந்தால் தான் பாட்டிக்கு சந்தோஷம் என்ன இங்க இருக்க சொல்றியா நீ என்றார்..
இல்ல… இல்ல பாட்டி…
நீ எங்க இருந்தாலும் சந்தோஷமா தான் இருக்கணும், நீ தனியா இருக்கிறது தான் எனக்கு கஷ்டம் நான் எங்கடி தனியா இருக்கேன்.
பக்கத்து வீட்ல வனஜா இருக்கா, அப்புறம் நான் போனதும் நம்ம பழைய வேலைக்காரியை வர சொன்னா வந்துருவா, அப்புறம் நான் எங்க தனியா இருக்க…
நம்ம தோட்டம் அது இதெல்லாம் பார்த்துட்டு என்னோட கடைசி காலத்தை நான் அங்கே சந்தோஷமா வாழ்ந்துருவேன் என்றார்..
இப்படி எல்லாம் பேசாத பாட்டி, நீ தான் எனக்கு எப்பயும் கூட துணைக்கு இருக்கணும். உன்னோட நிம்மதிக்காக தான் இப்ப நான் சம்மதிக்கிறேன், ஆனால் டெய்லி எனக்கு போன் பண்ணிடனும், இல்ல வீடியோ கால் ஆவது பண்ணி என்கிட்ட நீ பேசிடனும்.
இதுக்கு சம்மதாமான நீ தாராளமா போலாம், அவரும் சரிடா செல்லம் என்று அமுதா விடமும், தான் நாளை திருச்சி போவதாக கூறி வெண்பாவை பத்திரமா பாத்துக்கோங்க, அகில் தம்பி கிட்டயும் சொல்லிடுங்க என்று கிளம்பினார்…
