மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி
அத்தியாயம் 10
ஹாலில் அரவிந்தனும் மாறனும் மும்மரமாக பேசிக்கொண்டிருக்க.. மற்றவர்கள் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்.. ஓமனா மட்டும் வெட்டியாய் அமர்ந்திருந்தாள்..
ச்ச.. என்ன இப்படி போரடிக்குது.. யாரும் எதுவும் செய்யக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க.. என்ன பண்ணலாம் என யோசித்துக் கொண்டே பார்வையை சுழற்றியவளின் விழிகளில் ஹாலில் தீவிரமாக பேசிக்கொண்டிருந்த மாறன் விழ.. ஓமனா முகம் குறும்பை தத்தெடுத்தது… அவள் போனிலிருந்து மாறன் போனிற்கு ஒரு மெசேஜை தட்டிவிட..
மெசேஜ் வந்த சத்தத்தில் பேசிக்கொண்டே வாட்ஸப்பை ஓபன் செய்தவன்.. ஓமனாவிடமிருந்து இறுக்கியணைச்சு ஓர் உம்மா தருமோ என்ற மெசேஜை பார்த்து விழித்தான்.. உடனே சுற்றி பார்க்க.. டைனிங் டேபிள் அருகில் அமர்ந்திருந்தவள் தன்னவன் பார்த்ததும்.. இதழை சுளித்து கரங்கள் கொண்டு தன்னையே இறுக்கியணைத்து முத்தம் வேண்டும் என்பது போல் இதழை குவிக்க.. மாறனின் முகம் சிவந்தது..
அதைக்கண்டு மயங்கிய பெண்ணவள்.. அச்சோ எண்ட ஏட்டா அழகு சுந்தரனாக்கும் என காற்றில் திருஷ்டி கழித்து முத்தம் கொடுக்க.. மாறன் தன்னைக் கட்டுப்படுத்த மிகவும் சிரமப்பட்டான்.. ஓமனா இன்னும் 5 நிமிடம் என்பது போல் சைகை செய்ய.. மாறனிற்கு நேற்றைய நியாபகங்கள்…
மூச்சடக்கி வன்மையாக தன்னவளின் இதழ்களை சுவைத்துக் கொண்டிருந்தவன்.. தன் கோபம் மோகம் எல்லாம் வடிந்ததும் அவளிடமிருந்து விலகினான்… இருவரும் சற்று நேரம் மூச்சுவாங்கிக் கொண்டிருக்க.. முதலில் தெளிந்த ஓமனா.. ஏட்டா ஞான் தான் ஜெயிச்சு.. நிங்க ஞான் என்ன பரஞ்சாலும் கேட்குறேன்னு சொல்லிருக்கீங்க.. என காரியமே கண்ணாய் ஒப்பந்தத்தை நினைவுப்படுத்த.. மாறன் அவளை பொய்யாக முறைத்து.. அடிபாதகத்தி சும்மா இருந்த மனுஷன உசுப்பேத்தி விட்டுட்டு இப்போ தோத்துட்டேன்னா சொல்ற என அவளின் இதழை விரல் கொண்டு அழுத்தி இழுக்க..
ஹ்ம்ம்ம் ஞான் பேசுன மாதிரி நிங்களும் பேச வேண்டியதுதானே.. அப்பையும் ஞான் கண்ண சிமட்டவில்லையாக்கும்.. சும்மா சப்பைக்கட்டு கட்டாம ஞான் சொல்றதையெல்லாம் செய்யுங்க.. என குழறலாக கூற..
தன் மனையாட்டியின் வில்லத்தனங்களையும் சேட்டைகளையும் பற்றி தெரிந்தும்.. அவளின் சொல்லுக்கு ஒப்புக்கொண்ட தன் மடத்தனத்தை நொந்துக் கொண்டு.. என்ன என்பது போல் பார்க்க..
ஓமனா… உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச விஷயம் தான் ஏட்டா.. எனிக்கி எப்பயெல்லாம் உங்களுக்கு முத்தம் கொடுக்கனும்னு தோனுதோ.. அப்போயெல்லாம் இறுக்கியணைச்சு ஓர் உம்மா தருமோன்னு கேட்பேன்.. நீங்களும் 10 நிமிஷத்துக்குள்ள.. எனிக்கு உம்மா தரனும்.. அது கன்னம்மா இருக்கலாம் இல்லை உதடா இருக்கலாம் இல்லை கழுத்தா இருக்கலாம்.. எங்கவேன்னா இருக்கலாம் ஆனா.. நிங்க மட்டும் கொடுக்கலை மூனு நாள் என்கிட்ட கூட நெருங்க கூடாது.. என்றதும்.. கரும்பு திண்ண கூலியா என வாயெல்லாம் பல்லாக தலையாட்டினான்…
நம் மக்கு மண்ணாந்தை ஹீரோ இப்பொழுதும் ஓமனாவை பற்றி தெரிந்தும்.. முத்தம் என்றதும் பித்தாகி போனான்..
மறுபடியும் மறுபடியும் தன் மடத்தனத்தை நொந்துக் கொண்டவன்.. இப்போ எப்படி கொடுக்க முடியும்டி எல்லாரும் இருக்காங்க.. ரூம்க்கு வா என மெசேஜ் அனுப்ப..
அதெல்லாம் இல்லை ரூல்ஸனா ரூல்ஸ் தான்.. என இவள் கராறாய் கூற..
போடி அதெல்லாம் பண்ண முடியாது.. என முறுக்கிக் கொள்ள..
ok பைன்.. நான் மூனு நாள் மூத்தாட்ஷி கூட உறங்க போறேன்.. என கோப ஈமோஜியை அனுப்ப..
மாறனின் முகம் அஷ்டகோணலாகியது.. சரி உன்னால இத்தனை பேர் இருக்கும் போது கொடுக்க முடியுமா.. அப்படி நீ மட்டும் கொடுத்துட்டா.. நானும் கொடுக்கிறேன்.. என்க..
ஓமனா… ஒஹ்ஹ சவால் விடுறிங்களா மிஸ்டர் மாறன் வரகுணன்..
ஹ்ம்ம்ம் அப்படியும் வச்சுக்கலாம் மிஸ்ஸஸ் மாறன் வரகுணன் என்று மிதப்பாக கூறவும்.. அவனை நேரடியாய் முறைத்தவள்.. சுற்றி முற்றியும் பார்த்தாள்… அன்னம் பூக்கட்டிக்கொண்டிருக்க.. தேவகியும் யசோதையும் சமையலறையில் இருக்க.. தான்யா தன் மகளுடன் போராடிக் கொண்டிருந்தாள்.. வீட்டின் மூத்த ஆண்மக்கள் மூவரும் வெளியே சென்றிருந்தனர்.. அனைவரையும் ஒரு முறை பார்த்தவள்…. மெல்ல அன்னநடையிட்டு மாறனை நெருங்கினாள்..
மாறன்… ஓமனா என்ன செய்ய போகிறாளோ என்று பதட்டமும் ஆவலுமாய் இருக்க.. அவளோ அவன் கிட்ட வந்தவுடன் ஏதோ கேட்பது போல் குனிந்தவள்.. பேலன்ஸ் தவறியது போல் அவனின் மடியிலையே விழுந்து.. அவன் கழுத்தில் முகம் புதைத்து சத்தமில்லா ஓர் முத்தத்தை கொடுத்து.. மெலிதாய் கடித்து விலகினாள்.. கண்ணிமைக்கும் நேரத்தில் இவையனைத்தும் நடைப்பெற்று விட்டது..
அருகே மற்றொரு சோபாவில் அமர்ந்திருந்த அரவிந்தன்.. இவளின் சேட்டை அறியாமல்.. என்னம்மா பார்த்து வரக்கூடாதா.. என மெலிதாய் கடிந்துக் கொண்டு அங்கிருந்து விலக… மாறன் இன்னும் அதிர்ச்சி விலகாமல்.. என்ன நடந்தது என புரியாமல்.. மனதிற்குள் நடந்தவைகளை ரீவைன் பண்ணி பார்த்துக் கொண்டிருக்க.. ஓமனா பழையபடி டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தாள்..
ஆடவனின் கழுத்தில் உள்ள ஈரப்பதம் நடந்தவையனைத்தும் உண்மையென கூற.. தன் மனையாளைப் பார்த்து வாய் பிளந்தான் மாறன் வரகுணன்.. ஓமனா.. முதல் தடவைங்கிறதால பாவம் பார்த்து விடுறேன்.. அடுத்த தடவை இப்படி சின்ன புள்ள மாதிரி காரணம் சொல்லிற்றுக்க கூடாது.. என சிரிப்பு ஈமோஜியை தட்டிவிட்டு வழக்கம் போல் அன்னத்தின் மடியில் படுத்து கதை கேட்க சென்றுவிட்டாள்..
ஓமனாவின் மெசேஜை படித்த மாறனோ.. அடேய் எப்போ பார்த்தாலும் அந்த குள்ளகத்திரிக்காய் கிட்ட பல்பு வாங்குறதே நமக்கு வேலையாப்போச்சு.. நீ ஆம்பள சிங்கம்டா.. இவ என்ன பிஸ்கோத்து.. கழுத்துல தானே கொடுத்தா.. நீ உதட்டுல கொடுடா.. என்று அவனுக்கு அவனே சபதமிட்டுக் கொண்டிருந்தான்… அடுத்து அவள் எப்பொழுது கேட்பாள் என தவங்கிடக்க.. அவனவள் கண்டுகொள்ளவேயில்லை..
***************************************
கன்னத்தில் ஏற்பட்ட குறுகுறுப்பில் உறக்கம் கலைந்த தீபாஞ்சலியின் விழிகள் தனக்கு குறுகுறுப்பை ஏற்படுத்திய.. தன் மன்னவனின் நெஞ்சத்தின் மெல்லிய சிறு சிறு முடிகளை கண்டு.. ஆச்சரியத்தில் விரிந்தது…
அடுத்து அவை காதல் பார்வையாக மாற.. அவனையே விழிகள் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.. ஒருவேளை விழியை திருப்பினாள் கனவாக மறைந்து போவானோ என்று பயந்தாளோ என்னவோ..
வசீகரனுக்கு தன்னவளின் ஏக்கப்பார்வை புரிந்ததோ என்னவோ.. அவனின் விழிகளும் மெல்ல திறந்தன.. அப்பொழுதும் விழிகளை எடுக்கும் எண்ணமின்றி அவனையே பார்த்தாள்…வசீகரனுக்கும் தன்னையே இமைக்காமல் பார்க்கும் தன்னவளின் விழிவீச்சில் முகம் புன்னகையை தத்தெடுக்க.. வசீகரமாய் புன்னகைத்தவன்.. அஞ்சுக்குட்டிக்கு என் மேல உள்ள கோபம் போயிடுச்சா.. என்று அவன் கேட்டதும் தான் தாமதம் விழிகள் கலங்க.. பாய்ந்து அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்..
அஞ்சும்மா.. என்னடா என்னாச்சு..
ஹ்ம்ம்ம் போங்கோ.. நீங்க வேணாம்.. என்னைய விட்டுட்டு போனீங்கத்தானே.. என கோபச்சினுங்களுடன் அவனை விட்டு விலகப்போக.. அவனோ அவளை மேலும் இறுக்கி சரி போ.. எனவும்.. அவளும் மேலும் அவனை இறுக்கி.. ஹ்ம்ம்ம் போறேன்.. என இருவரும் சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாய் இருந்தனர்..
அப்பொழுது தான் நியாபகம் வந்தவனாக அஞ்சுக்குட்டி.. நகரு நான் என் பட்டுக்குட்டிய கொஞ்ச மறந்துட்டேன் என்றவாறு கீழே தலையை கொண்டு சென்றவனின்.. முடியை பிடித்து இழுத்தவள்.. இனிமே நீங்க என்ன மட்டும் தான் கொஞ்சனும்.. இவ்வளவு நாளும் உங்க பிள்ளைய மட்டும் தானே கொஞ்சுனேள்.. இப்போ என்னைய கொஞ்சுங்கோ என மிரட்டலாய் கேட்க..
அவனும் உள்ளுக்குள் துள்ளிக்குதித்தாலும்.. வெளியில் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு.. எண்ட செல்ல பட்டம்மா என அவளின் கன்னத்தில் முத்தமிட்டு லேசாக கடித்தவன்.. தங்கக்குட்டி என நெற்றியில் முத்தமிட்டு.. அடுத்து தொடர்ச்சியாய் கண் மூக்கு என முத்தமிட்டு.. செவிமடலை கடித்து சப்பி அவளை துடிக்க வைத்தவன்… மெல்ல மெல்ல அவளின் அமுதூரும் இதழை நெருங்கும் வேளை… இதற்கு மேல் தாங்காது என நினைத்த தீபா.. அவனை விட்டு விலக முயல.. அவனோ உடும்புப்பிடியாய் அவளை இருக்கி.. மேலும் முன்னேறத் தொடங்கினான்.. இரு இதழ்களையும் தனக்குள் அதக்கி அவளின் ரசப்பானங்களை திகட்ட திகட்ட அருந்தியவன்.. தன் கரங்களை அவளின் மேனியில் விட்டு விளையாட.. பெண்ணவள் துடித்துப் போனாள்.. தெவிட்ட தெவிட்ட மன்மத பானத்தை அருந்தி அவளுக்குள் தன்னை சங்கமித்துக்கொண்டு ஈறுடல் ஓருயிராய் மாறியவன்.. இத்தனை நாள் ஏக்கத்தையெல்லாம் அவளிடத்தில் கொட்டிக்கொண்டிருந்தான்.. கடைசியில் தீபா இவனைப் பற்றி தெரிந்தும் தானே வாயைக்கொடுத்ததை எண்ணி சுகமாய் அலுத்துக்கொண்டு.. அவனின் வன்பிடிக்குள் விரும்பியே தன்னை நுழைத்துக் கொண்டாள்…
இருவரும் காலை உணவு நேரம் முடிந்த பிறகு தான் அறையை விட்டே வெளி வந்தனர்.. தீபாஞ்சலி மற்றவரின் முகம் பார்க்க சங்கோஜம் கொண்டு.. தலை குனிந்தவாறு வர.. வசீகரனோ வசீகர சிரிப்புடன் வளைய வந்தான்… அவர்கள் இருவரையும் கண்ட அம்புஜத்திற்கு அப்பொழுது தான் மனநிறைவாக இருந்தது…
******************************************
மாறனும் ஓமனா எப்பொழுது அழைப்பாள் என டென்க்ஷனோடு காத்திருக்க.. அவனின் அவஸ்தை புரிந்தாலும்.. தானுண்டு தன் கதையுண்டு என வீட்டு பெண்களின் மத்தியில் அமர்ந்து அவர்களோடு வளவளத்துக் கொண்டிருந்தாள்..
இந்த ஓமனாக்கிட்டயே உங்க கோபத்தை காண்பிக்கிறீங்களா ஏட்டா.. அதுக்குத்தான் கேம்ன்னு பேருல உங்கள நல்லா மாட்ட வச்சேன்.. யாருக்கிட்ட என ஓமனா மனதிற்குள் சிலிர்த்துக் கொள்ள.. அவளின் விஷமம் புரியாமல் மாறனும் தவித்துக் கொண்டிருந்தான்..
அன்னம் மட்டுமே அங்குயிருக்க மற்றவர்கள் உள்ளே சென்றுவிட்டனர்.. ஓமனாவும் மாறனை பாவம் பார்த்து.. இறுக்கியணைச்சு ஒரு உம்மா தருமோ என மெசேஜை தட்ட.. அவன் வேகமாக போனை பார்த்து விட்டு அவளிடம் நெருங்கும் சமயம்.. அவனின் கெட்ட நேரம் புருஷோத்தமனும்.. கோபால் சகோதரர்களும் வந்துவிட்டனர்.. அதுவும் அவர்கள் ஹாலிலேயே அமர்ந்துகொண்டு.. இன்று நடந்த புதிய ஒப்பந்தந்தத்தை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்..
மாறன்.. ஓமனாவைப் பார்த்து பாவமாய் முழிக்க.. அவளோ உதடு பிதுக்கி.. மூன்று விரல் காண்பித்து.. கட்டை விரலை கீழ் நோக்கி காண்பித்தாள்.. நிமிடங்களும் ஓடிக்கொண்டே இருந்தது.. டேய் மாறா ஏதாவது செய்யுடா.. உதட்டுல கொடுக்க முடியலைன்னா கூட கன்னத்துலயாவது கொடுக்கனும்.. இல்லைன்னா மானமே போயிடும் என உள்ளுக்குள் புலம்பிக் கொண்டிருந்தவனுக்கு ஒரு யோசனை வர.. சோபாவில் சாய்ந்தமர்ந்தவன்.. ஓமனா தலை ரொம்ப வலிக்குது.. காஃபி கொண்டு வாயேன் என சோர்வான குரலில் கூற.. இல்லை இல்லை அவ்வாறு நடிப்பு வைக்க..
ஓமனா அவனை சந்தேகமாக பார்த்தவாறு உள்ளே சென்றாள்.. அவள் காஃபிக் கொண்டு அவனருகே வர.. மெல்ல தன்னைச் சுற்றிப் பார்த்தவன்.. எல்லாரும் அவரவர் வேளையில் மும்மரமாக இருக்க.. அருகே வந்தவளிடம் காஃபி வாங்குவது போல் முன்னே வந்தவன்.. நொடி நேரத்தில் அவளின் புடவை விலகிய வெற்றிடையில் அவள் போலவே சத்தமில்லா ஓர் முத்தத்தை விடுத்தான்..
ஓமனா அவனின் இச்செய்கையில் சிலையாய் சமைந்துவிட.. மாறன் அவளை கண்டு எழுந்த சிரிப்பை இதழுக்குள் மறைத்து.. பிறகு அவனே ஒன்றுமறியாதவன் போல் என்னாச்சு ஓமனா ஏன் அப்படியே நிக்கிற என்று கேட்க வேறு செய்ய.. ஓமனா முறைத்தவாறு அங்கிருந்து நகர்ந்தாள்..
********************************************
தீபாஞ்சலி தலைவிரி கோலமாய் அமர்ந்திருக்க.. அம்புஜம் வீட்டில் தயாரித்த சுத்தமான தேங்காய் எண்ணெய்யை அவள் தலையில் தடவி மென்மையாய் மசாஜ் செய்ய.. தலையின் இதமான தடவலில் தூக்கத்தில் சொக்கிக் கொண்டிருந்தாள்.. தீபாஞ்சலி.. அப்பொழுது அங்கு வந்த வசீகரன்.. அஞ்சுக்குட்டி சீக்கிரம் கிளம்பு நம்ப ஒரு இடத்துக்கு போகனும்.. மூனு நாளுக்கு வேண்டிய துணிகளெல்லாம் எடுத்துக்கோ என அவசரமாக கூற..
தீபாஞ்சலி.. எழுந்திரிக்க மனமில்லாது.. எங்கண்ணா போறோம் என்று சோம்பலாய் வினவ.. வசீகரனோ.. ப்ச் அதெல்லாம் போம்போது சொல்றேன்.. சீக்கிரம் ரெடியாகு.. என அதட்ட.. அவனுடைய அஞ்சுக்குட்டி மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டு கிளம்பினாள்..
வீட்டினரிடம் கூறிவிட்டு இருவரும் காரில் ஏறினர்.. வசீகரன் காரை ஓட்ட.. தீபாஞ்சலி அருகில் அமர்ந்திருந்தாள்.. அவளும் அவன் ஏதாவது சொல்லுவான் என அடிக்கடி அவன் முகத்தையே பார்க்க.. அவனோ கர்மசிரத்தையாய் வண்டியோட்டிக் கொண்டிருந்தான்.. அதில் வெறுத்துப்போன தீபா.. போடா என்ற வாயசைவுடன்.. கண்களை மூடியவள்.. சிறிது நேரத்திலேயே உறக்கத்திற்கு சென்றுவிட்டாள்.. அப்பொழுது அவளை நோக்கி மெல்லிய புன்னகையை சிந்தியவன்.. மீண்டும் காரோட்டுவதில் கவனத்தைச் செலுத்தினான்..
ஒன்றறை மணிநேரத்தில் கார் ஓரிடத்தில் நிற்க.. உறக்கம் கலைந்த தீபாஞ்சலியின் விழிகள்.. தான் இருக்கும் இடத்தைக் கண்டு ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் விரிந்தது.. விழிகள் மலர பார்த்துக் கொண்டிருந்தவளைக் கண்டு வசீகரனிடத்திலும் மென்னகை..
