மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

மகரக்கொடியோனின் ரூப சௌந்தரி

அத்தியாயம் 8

தீபாஞ்சலியின் கோபமெல்லாம் வசீகரனிடம் மட்டுமே.. மத்தபடி அனைவரிடமும் நன்கு பொருந்திக்கொண்டாள்.. வசீகரனின் அன்னை துர்கா பரமசாது.. மருமகளும் சாதுவாய் அமைந்திட இருவருக்கும் நன்கு ஒத்துப்போனது.. அம்புஜம் சொல்லவே வேண்டாம் தீபாஞ்சலியை தாங்கு தாங்கென தாங்கினார்… மார்த்தாண்டவர் கூட தீபாஞ்சலியிடம் நல்லவிதமாகவே நடந்துக் கொண்டார்.. ஆனால் தீபாவுக்கு அங்கிருந்த ஒரே பிரச்சனை அவளின் மூத்த நாத்தனார் பிந்தியா தான்.. திருமணத்தின் போது தீபாவின் சகோதரன் தன் கணவனை அடித்ததால்.. அவ்வப்போது கோபத்தை காண்பித்து விட்டு செல்வாள்.. வாரத்திற்கு இருமுறையாவது வருபவள்.. அம்மே எனிக்கி நண்டு மசால் வேனும்.. என்பவள் அடுத்த முறை மீன் பொலிச்சது வேனுமென்பாள்.. 

இப்படியே வருகிற போதெல்லாம் வீட்டில் அசைவம் சமைக்க வைத்து தீபா படும் அவஸ்தையை மகிழ்ச்சியாக பார்ப்பவள்.. கடைசியில் அண்ணி தான் தனக்கு பரிமாறவேண்டும் என வம்பு செய்வாள்.. அம்புஜத்திற்கு கோபம் வந்தாலும் எதுவும் பேசி மேற்கொண்டு பிரச்சனை வளர்க்க விரும்பவில்லை.. பிந்தியா ஒன்றும் இயல்பிலையே கெட்டவள் இல்லையே.. தன் கணவனை அடித்ததிற்காக தன்னுடைய கோபத்தை இந்த மாதிரி காண்பிக்கிறாள்.. அவ்வளவு தான்.. 

இப்பொழுது அவளைக் கண்டிக்கிறேன் என்று அவளின் கோபத்தை பெரிது படுத்தாமல் அமைதியாக இருந்தார்.. தீபாவின் ஜம்பமெல்லாம் தன் மணாளனிடம் மட்டுமே.. அதனால் அவளும் பிந்தியா என்ன சொன்னாலும் தேமேயென்று இருக்க.. சிறிது நேரத்தில் பிந்தியாவும் அமைதியாகி விடுவாள்.. 

காலையில் உணவு மேடையில் அமர்ந்த புருஷோத்தமனை புட்டும் கொண்டைக்கடலை கறியும் வரவேற்றது.. இப்பொழுதெல்லாம் உணவில் கண்டிப்பாக ஒரு மலையாள உணவும் இடம்பெற்றிருக்கும்.. ஓமனா வெளியில் பார்க்க குறும்புக்கார பெண்ணாய் இருந்தாலும் உள்ளுக்குள் செம்ம விவரம்.. தனக்கு வேண்டியவற்றை எப்படியாவது அடைந்து விடுவாள்.. 

அதே மாதிரி இந்த வீட்டின் பழக்க வழக்கங்களுக்கு ஒத்துப்போனவள்.. தன் வீட்டின் பழக்கங்களையயும் உள்ளே கொண்டு வந்தாள்… முதலில் உணவிலிருந்தே ஆரம்பித்தாள்.. தினமும் கண்டிப்பாக மூன்று வேளையிலும் ஒரு மலையாள உணவாவது அங்கு இருக்கும்.. வீட்டினரையும் அந்த உணவுகளுக்கு பழக்கியிருந்தாள்.. 

மாறன்.. ஓமனாவை வாரத்திற்கு ஒருமுறை அவர்களது ஹோட்டலிற்கு அழைத்துச் சென்று அவளுக்கு மட்டும் பிரத்தியேகமாக சமைத்த அசைவ உணவுகளை வருவித்தான்.. அவர்களது உணவகத்தில் அசைவம் சைவம் என இருவகை உணவுகளுமே கிடைக்கும்.. இரண்டுமே தனித்தனி அறையில் பாத்திரங்கள் முதற்கொண்டு அனைத்துமே தனியாக சமைப்பார்கள்.. வேலையாட்களும் அப்படியே.. அதனால் இவ்விஷயம் அவனுக்குப் பெரிதாக தெரியவில்லை.. அதுமட்டுமில்லாமல் புருஷோத்தமனின் காதிற்கு இவ்விஷயம் இன்னும் போகவில்லை.. அந்த மட்டும் தப்பித்தான்.. ஆனால் அதற்கும் வேட்டு வைக்கும் எண்ணத்தோடு.. புருஷோத்தமனின் ஒன்றுவிட்ட சகோதரி ரங்கநாயகி.. தன் பேத்தி ஆதிலட்சிமியுடன் வந்தார்.. ஆம் அவர்கள் தான்யாவின் சொந்த பாட்டியும் தங்கையும்தான்.. 

வாங்கக்கா.. வாம்மா ஆதி.. என்ன ரொம்ப நாளா ஆளேக்காணும் என புருஷோத்தமன் அவர்களை வரவேற்க.. மற்றவர்களும் அவரைத் தொடர்ந்து வரவேற்றனர்.. இப்போ என்ன களகத்தை கிளப்ப வந்திருக்காளோ என உள்ளுக்குள் நொடித்துக் கொண்டிருந்த அன்னம்.. வாங்கோ அண்ணி எப்படியிருக்கேள்.. வாம்மா ஆதி.. என உதட்டை சிரிப்பது போல் இழுத்து வைத்துக் கேட்க.. ஓமனாவிற்கு சிரிப்பு வந்தது.. 

அதைக்கண்டு கொண்ட ரங்கநாயகியின் விழிகள் அவளை உறுத்து விழிக்க.. அவளோ அசால்ட்டாக தோளை குலுக்கினாள்.. அதைக்கண்டு ரங்கநாயகியின் பிபி மேலும் எகிறியது.. 

புருஷோத்தமனிற்கு உடன் பிறந்தவர்கள் யாரும்மில்லாததால் தன் ஒன்று விட்ட சகோதரியின் மேல் அதிகப்பாசம்.. அதனால்  அவரின் பேத்திகளையே தன் வீட்டு மருகளாக்க விரும்பினார்.. மூத்தவன் அரவிந்திற்கு தான்யாவையும் இளையவன் மாறனிற்கு ஆதியையும் பேசி முடித்தனர்.. 

ரங்கநாயகிக்கும் ஒரே வீட்டில் தன் இரு பேத்திகளையும் கொடுப்பதில் அலாதி மகிழ்ச்சி.. இதன் மூலம் இன்னும் அதிகமாக தம்பியின் வீட்டில் ராஜ்ஜியம் செய்யலாம் என அவர் கனவு கண்டிருக்க.. மாறனும் ஓமனாவும் அதில் மண்ணள்ளிப்போட்டனர்.. அதனால் மண்டபத்தில் பிரச்சனையானவுடன் அதை பெரிது படுத்தி ஓமனாவை அவர்கள் வீட்டிற்கு அனுப்புமாறு செய்தார்.. 

ஹ்ம்ம்ம் தம்பி நாங்க எல்லோரும் நல்லாயிருக்கோம்.. என புருஷோத்தமனின் கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டிருத்தவர்.. மெல்ல தன் களக வேலையை ஆரம்பித்தார்… என்ன தம்பி வீட்டுல புது புது பழக்கமெல்லாம் வருது போல.. நம்ம வீட்டு மாட்டுப்பொண்ணு அசைவமெல்லாம் சாப்பிடுதாம்.. நீ எப்படிப்பா இதுக்கெல்லாம் ஒத்துக்கிட்ட.. நம்ம ஆச்சாரத்தை நீதான் நல்லா கடைபிடிக்கிறேன்னு நினைச்சேன்.. என அவர் ஆதங்கமாய் கூறுவது போல் கூற.. புருஷோத்தமனின் நெற்றியில் முடிச்சுக்கள்… என்ன சொல்றிங்க அக்கா.. என கேட்க.. 

ஹ்ம்ம்ம் என்னத்த சொல்ல சொல்ற எல்லாம் அந்த ரங்கநாதனுக்குத்தான் வெளிச்சம்.. உன் வீட்டுல உனக்கே தெரியாம இன்னும் பல விஷயம் நடக்கிறது போலயே.. நேத்து நம்ம ஆதியும் அவ தோழி பிள்ளைகளும் நம்ம ஹோட்டலுக்கு சாப்பிட வந்துருக்காங்க.. அப்போதான் மாறன் ஆம்படையா அசைவம் சாப்பிட்டதை பார்த்திருக்கிறா.. அத என்கிட்ட சொல்லி வருத்தப்பட்டுண்டுருந்தா.. என அவர் கூறியவுடன் புருஷோத்தமனின் முகத்தில் அக்கினியின் ஜுவாலை தெரிந்தது… 

புருஷோத்தமனை தவிர வீட்டில் உள்ள அனைவருக்கும் இவ்விஷயம் தெரியுமென்பதால்.. யாரும் பெரிதாக அதிரவில்லை.. ஆனால் மாறன் இல்லாத நேரத்தில் பெரியவர் ஓமனாவை எதாவது கூறிவிடுவாரோ என உள்ளுக்குள் பயந்துக் கொண்டிருந்தனர்.. ஆனால் பயப்பட வேண்டியவளோ ரங்கநாயகியையும் ஆதிலட்சுமியையும் ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.. 

எல்லோரும் பயத்தில் முகம் வெளிறி இருக்க.. பயப்படவேண்டியவாளோ தன்னை மெத்தனமாய் பார்த்து வைத்ததில் அவரின் பிபி மேலும் அதிகமாக.. இவளை ஒரு கை பார்க்காமல் விடக்கூடாது என்ற முடிவுடன்.. மேலும் தன் சகோதரனுக்கு கொம்பு சீவும் வேலையை செய்ய ஆரம்பித்தார்.. 

நம்மாத்து வாரிசு வயித்துல வச்சுண்டு கண்டது கழியதெல்லாம் சாப்புடுறா நீ ஒரு வார்த்தைக் கேட்க கூடாதா தம்பி என்று அவர் கூறியதும் புருஷோத்தமன் கோவமாய் ஓமனாவின் பக்கம் திரும்பினார்.. அப்பொழுது சரியாய் அவளின் போன் ஒலியெழுப்ப ஆன் செய்தவள்.. 

ஹலோ சேச்சி.. எப்படி இருக்க.. அங்க எல்லோரும் சுகம்தன்னே.. 

….

ஹான் ஞான் இங்கு பர்ஸ்ட் கிளாஸ இருக்கு.. அம்மே மூத்தச்சன் எல்லாரும் என்னைய தங்களோட மோளாக கவனிக்கிறது.. 

……

உனிக்கி ஒரு விஷயம் அறியுமோ மூத்தச்சன் எனிக்கு வாரம் ஒரு நாள் நான்-வெஜ் சாப்பிட அனுமதி தந்திருக்காங்க.. இப்போ ஞான் ப்ரெக்னன்ட்டா இருக்கிறதால என்னோட எல்லாம் ஆசையும் மூத்தச்சன் நிறைவேத்துறாங்க தெரியுமா… என புருஷோத்தமனை புகழ்ந்தவள்.. அவர் ஒற்றை சோபாவில் அமர்ந்திருந்த சோபா கைப்பிடியில் அமர்ந்து.. அவரின் தோளில் கைபோட.. வீட்டினர்கள் மூச்சடைத்து போயினர் என்றால் ரங்கநாயகியும் ஆதிலட்சுமியும் அதிர்ச்சியுடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தனர்.. புருஷோத்தமனோ என்ன ரியாக்ஷன் காட்டவேண்டுமென்பது கூட தெரியாமல் திரு திருவென விழித்தார்.. 

வீட்டில் உள்ளோர் எல்லோரையும் கதி கலங்கச்செய்திருக்கிறோம் என்று அறிந்தும்.. அறியாதது போல் தன்னுடைய உரையாடலை தொடர்ந்தாள்..

சேச்சி.. மூத்தச்சன் அப்படியே நம்ம சேட்டா மாதிரிதான்.. பாசம் காட்டுறதுல கண்டிப்பை காட்டுறதுல அரவணைப்பு கொடுக்கிறதுன்னு எல்லாமே சேட்டா மாதிரிதான்.. சேட்டன் இதுவரை எனிக்கு அச்சனாவும் இருந்திருக்காங்க.. பட்ஷே இனிமே அந்த போஸ்ட் எண்ட மூத்தச்சன்க்கு மட்டும்தான்.. அவர் தான் இனி எனிக்கு அச்சனும் கூட என சற்று நெகிழ்ந்த குரலில் கூறினாள்.. அதுதான் உண்மையும் கூட.. அனைவரும் புருஷோத்தமனிடம் பயம் கலந்த மரியாதையுடன் தள்ளிநிற்க இவள் மட்டும் அவரை தந்தையாக பார்த்தாள்.. அந்த எண்ணம் கொடுத்த உரிமை தான் அவரிடத்தில் தைரியமாக பேசவும் சீண்டவும் செய்தது.. 

எந்தா சிரிப்பு.. இரு உனிக்கு போட்டோ எடுத்து காண்பிக்கிறேன் என்றவள்.. சட்டென்று புருஷோத்தமன் தோளில் சாய்ந்தவாறு செல்ஃபீ எடுத்தாள்.. மூத்தச்சன் குறைச்சு ஸ்மையில் செய்யுங்க என போனை பார்த்தவாறு கூற.. புருஷோத்தமனின் இதழ்கள் தானாக புன்னகை சிந்தியது.. இருவரும் சிரித்தவாறு எடுத்த செல்ஃபீயை அவரிடத்தில் காட்டியவள்.. உடனே தன் தமக்கைக்கு அதனை அனுப்பினாள்.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க அப்பொழுது வந்த மாறன்.. ஓமனா அமர்ந்திருந்த இடத்தைக் கண்டு சற்று அதிர்ந்தான்.. 

தாத்தா எதாவது திட்டி விடுவாரோ என பயந்தவன்.. ஓமனா என்ன இது இப்படி உட்கார்ந்திருக்க எழுந்திரி என அதட்ட.. ஓமனா முகம் சுருங்கியவாறு எழுந்தாள்.. டேய் வந்ததும் ஏண்டா குழந்தைய படுத்துற.. அவ பாட்டுக்கும் தானே உட்கார்ந்திருந்தா என புருஷோத்தமன் அதட்ட அனைவரும் அவரைப்பார்த்து வாய் பிளந்தனர்.. 

நீ உட்கார்ந்துக்கோட என ஓமனாவைப் பார்த்துக்கூற.. அவள் மகிழ்ச்சியுடன் புருஷோத்தமனின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.. அவள் விழிகளில் சிறு கண்ணீர்த் துளிகள் விழ.. புருஷோத்தமன் அவளை திசை திருப்பும் நோக்கத்தோடு பாகிம்மா இன்னைக்கு என்ன சமைக்கப்போற.. அன்னைக்கு நீ வச்சிருந்த பரங்கி பூசணி புளிப்பச்சடி ரொம்ப நல்லாயிருந்தது… அத இன்னைக்கு செய்யுறியா என்றவுடன் இதோ என வேகமாய் சமயலறைக்குள் போக ஓட.. குடும்பத்தினர்கள் அனைவரும் ஒன்றாக ஓமனா பார்த்து… பார்த்துப்போடி.. என ஒவ்வொரு மாடுலேஷனில் கூற ரங்கநாயகியும் ஆதிலட்சுமியும் காதில் புகை வராத குறையாய் அமர்ந்திருந்தார்.. 

ஓமனா அசைவம் சாப்பிட்டது மட்டும் புருஷோத்தமனிற்கு தெரிந்தாள் அவன் எல்லோர் முன்னாடியும் கண்டிப்பான்.. மாறன் கோபம் கொண்டு சண்டையிடுவான்.. அதனால் அனைவரும் ஓமனாவை தள்ளி நிறுத்துவார்கள் என எதிர்பார்ப்போடு வந்திருக்க.. ஆனால் இங்கோ ஓமனாவின் உபயத்தால் அனைத்தும் தலைகீழாகிவிட்டது.. அதில் அவர் தலைவலியுடன் அமர்ந்திருக்க.. புருஷோத்தமன்.. அக்கா ஓமனா நன்னா சமைப்பா நீங்க அவ சாப்பாட சாப்பிட்டுத்தான் போகனும் என்று கூறி அவரின் தலைவலியை அதிகமாக்கினார்.. 

புருஷோத்தமனிற்கு ஓமனா தன்னிடம் இவ்வளவு உரிமை எடுத்துக்கொண்டதில் அவருக்கு மகிழ்ச்சியே… தன் குடும்பத்தினர் அனைவரும் பயமும் மரியாதையுமாய் அவரை விட்டு சற்று தள்ளி நிற்பார்கள்.. அன்னம் மட்டுமே அவரிடத்தில் உரிமையாக பேசுவது அதட்டுவது எல்லாம்.. அதுவும் தங்களின் அறையில் மட்டுமே.. ஆனால் ஓமனா பயப்படாமல் அவளின் இயல்புபோல் அவரிடத்தில் நடந்துக்கொண்டது புருஷோத்தமனிற்கு மிகவும் பிடித்துவிட்டது.. அதனால் அவள் தான் இனி அவர் செல்லமாக இருப்பாள் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.. 

இரவு மொட்டை மாடியில் வானில் பவனி வரும் நிலவைப் பார்த்தவாறு மாறனும் ஓமனாவும் படுத்திருந்தனர்.. மாறன் இன்று ஹோட்டலில் நடந்தவைகளெல்லாம் கூற.. ஓமனா வீட்டில் செய்தவற்றையெல்லாம் கூறினாள்.. அதாவது அன்னத்தின் மடியில் படுத்துக் கதை கேட்டது.. ஐஸுக்குட்டியுடன் ஓடி பிடித்து விளையாண்டது.. அவளின் சாக்லேட்டை பிடிங்கித் தின்றது.. தான்யாவுடன் சேர்ந்து இரு மாமியார்களையும் கலாய்த்தது.. அடுத்து மாமியார்களுடன் கூட்டு சேர்ந்து மாமானார்களை கலாய்த்தது என எல்லாவற்றையும் கூறியவள் கடைசியில் ரங்கநாயகி ஆதி லட்சுமியிடம் வந்தாள்.. 

ஏட்டா.. தான்யா சேச்சி தங்கச்சி நிங்களையே முறைச்சு முறைச்சு பார்த்தது.. அப்போ எனிக்கி எப்படியிருந்தது தெரியுமா.. அப்படியே அந்த முறைக்கிற ரெண்டு கண்ணு முழியையும் பிடுங்கனும் போல இருந்துச்சு என தன் அழகிய தனங்கள் கோபமூச்சில் ஏறி இறங்க கூற.. அதில் சொக்கியவன்.. தன்னவளை சீண்டும் பொருட்டு.. ஹ்ம்ம்ம் இப்போ பார்த்து என்ன பிரயோஜனம் அதான் எல்லாம் கை மீறி போயிடுச்சே என போலி அலுப்புடன் கூறியவன்.. அவ என்னா ஸ்லிம்மா இருக்கா… ஹ்ம்ம்ம் அவ சூப்பரா டான்ஸ் வேற ஆடுவா அதுனாலதான் அவ இடுப்பு கொடி போலயிருக்கு போல.. ஆனா உனக்கு பாரு கொஞ்சம் தொப்பை போட்ருக்கு என சற்று மேடிட்டிருந்த அவளின் வயிற்றை தடவியவாறு கூற… ஓமனா கோபம் கொண்டு அவன் கரத்தை தள்ளிவிட்டாள்… 

நிங்கள் எந்தா பரஞ்சது.. ஞான் தொப்பை போட்டு அசிங்கமாயிருக்கேனா என அவன் தலை முடியை ஆட்டியவாறு கேட்க.. அவனோ தன் முன் முகம் சிவந்து தனங்கள் ஏறி இறங்கி மூக்கு விடைத்து.. அதரம் துடிக்க கேட்டவளின் அழகில் மயங்கினாலும்.. பின்ன கல்யாணத்துக்கு முன்னாடி எப்படியிருந்த இப்போ எப்படியிருக்க என தாம்பத்ய பூரிப்பில் முகம் மேலும் பளபளப்பாகி அங்கங்கள் மேலும் எடுத்துக்கொடுக்க.. சற்று சதைப்போட்டு இருந்தவளை பார்த்து தாபத்தோடு கூற.. அவனின் தாபம் புரியாத நங்கை.. 

இங்க பாருங்க.. என்னைய ரொம்ப கேலி பண்றிங்க.. அப்புறம் அவ்வளவு தான் என ஒரு விரல் நீட்டி சிறு பிள்ளை போல் மிரட்டியவள்.. ஞானும் நல்லா டான்ஸ் ஆடுவேன்.. நீங்க பாட்ட போடுங்க நான் ஆடி காண்பிக்கிறேன்.. என சிலிர்த்துக் கொண்டு கூற.. கள்வனின் கண்கள் மின்னியது.. அவன் சில நாள் முன்பு எதேச்சையாக கேட்ட பாடலை டவுன்லோட் செய்து போட.. பெண்ணவள் பாடலுக்கேற்ற பாவத்தை முகத்தில் கொண்டு ஆடினாள்… 

தேன் குடிச்ச நிலவு விழி மயங்கும்  இரவிது

தினம் தோறும் திரு ஓணம் தான்

கைபிடிச்ச உறவு கதை எழுதும் அழகிது

திருச்சூரில் திரு கோலம் தான்

கிளி இரண்டும் இணையும் போது கிளிப்பாட்டல்லே

சிறகடிக்கும் விழியினோடு குயில் பாட்டல்லே

மயில் கழுத்து வளையும் போது மழைப்பாட்டல்லே

மழைத் துளிகள் வழியும் போது உயிர் பாட்டல்லே

என மாறனைப் பார்த்தவாறு ஆட.. மாறனும் அவளுடன் இணைந்துக் கொண்டான்.. 

மோகச் சுழல்களில் மோகச் சுழல்களில்

படகு போல் மனம் உன்னைச் சுத்துதே

சுத்துதே சுத்துதே

மூச்சுக் குழல்களில் மூச்சுக் குழல்களில்

சுகத்தின் வாசத்தில் உயிர் சொக்குதே

சொக்குதே சொக்குதே

என்று அவள் கழுத்தில் உள்ள சுகந்தத்தை நுகர… பெண்ணவள் விழிகள் கிறக்கத்தில் மூடியது.. 

நேந்திர வாழைகளை ஏந்திய கால்களிலே

நான் கொஞ்சம் தழுவ நீ கொஞ்சம் நழுவ

இளமை நனைய சிறகு விரிய

என்னமோ செய்யுது என்னமோ செய்யுதடி

காதல் கதகளி காதல் கதகளி

கிளிகள் கூடுது முதல் ராத்திரியில்

ராத்திரியில் ராத்திரியில் 

ஒதுங்கும் வயல்களில்

வீட்டு சுவர்களில் 

சொர்கத்தின் வாசத்தில் 

உயிர் சொக்குதே சொக்குதே

சொக்குதே சொக்குதே சொக்குதே

ஏ வாழை இலைகளில் சாரல் மழைத்துளி

கவிதை பாடுது சுகயாத்திரையில்

யாத்திரையில் யாத்திரையில்

அஞ்சன கண்களிலே கொஞ்சிடும் பூஞ்செடியே

சந்தனம் சிவக்க குங்குமம் கலக்க

இதழும் இதழும் அமுதம் குடிக்க 

தேக்கடி கொட்டுது தேக்கடி கொட்டுது

தேக்கடி கொட்டுது தேக்கடி கொட்டுதடி..

என ஓமனாவின் இதழ் தேன் குடித்து.. 

மந்தார மலரே மந்தார மலரே சீரடி முடித்தாயோ

மன்மத காலையில் ஆனந்தக் கூடத்தில் நீ கூட வருவாயோ

என அவளை கீழே கிடத்தியவன்.. அவள் மேல் கொடிமேனியவளில் பரவிப்படர்ந்தான்… ஊடலில் ஆரம்பித்த பாடல் கூடலில் முடிந்தது… 

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *