பிறந்த நாளில் நான் இறந்த நாள்..3

(பிறந்த நாளில் நான் இறந்த நாள்…(3)

“ஸாரி..அது முடியாது“

”ஏன்?தினசரி ஒருத்தரையொருத்தர் பாத்து வேதனைல வெந்து சாவறத விட அது பெட்டரில்லையா சுசி?”

“முடியாது”

”அதான் ஏன்னு கேக்கறேன்?”

எங் கண்ணுல இருந்து பார்வைய வெலக்கி சுத்தற காத்தடியப் பாத்துக்கிட்டே மெதுவா ..ஆனா அழுத்தமா சொல்றா..

“ஏன்னா…இன்னுங் கூட உங்கள லவ் பண்றேன்”

“நவக்கிரகம் மாதிரி திக்காலுக்கொருத்தரா வெறச்சிக்கிட்டு இருக்கறதுக்குப் பேரு லவ்வா?விசித்திரமான லவ்விது!”

“ஒட்டி உறவாடறது மட்டுமே லவ்வில்ல..சில சமயம் விட்டு விலகியிருக்கறது கூட லவ் தான்..நா உங்களுக்கு என்ன கொற வச்சிருக்கேன்…?சொல்லுங்க…ஒரு வேள………………….செக்ஸ்?அதப் பத்தி முன்னையே பேசியாச்சு…நானும் படுக்க மாட்டேன்…தள்ளியும் படுக்க மாட்டேங்கற அளவுக்கு கிராதகியில்ல..நீங்க யாரு கிட்ட வேணும்னாலும் போயிக்கலாம்…அதே சமயம் பக்கத்துலயே இன்னொருத்தி கூட படுக்கை போட்டுத் தர்ற அளவுக்கு மனசு பெரிசாயிடல…இந்த சுதந்திரா தேவி உயிரோட இருக்கற வரைக்கும் உங்களுக்குப் பொண்டாட்டி நாந் தான்..நா மட்டுமே தான்…அதுவுமில்லாம லவ்வுன்னா செக்ஸ் மட்டுந் தானா?இது இல்லாத லவ் இல்லையா?”

“என்னப் பொறுத்த வரைக்கும் காதலில்லாத
காமமும்.காம்மில்லாத காதலும் கிரிமினல் வேஸ்ட்…”

“ஆனா காதலுக்கு நீங்க மட்டுமே போதும்…காமத்துக்கு?ஒரு கை ஓசை அதுல சாத்யமில்லையே?இன்னொரு ஜீவனும் அந்த ஜீவனுக்குள்ளயும் கட்டுக்கடங்காம கரை பொரண்டு ஓடற ஆசையும் வேணுமே?எனக்குள்ள அது செத்துப் போச்சே?…………….”

லேசுல உணர்ச்சியைக் காட்டாதவ கண்ணு கலங்க முந்தானைல தொடைக்க நா இழுத்து அணைச்சு ஆறுதல் சொல்லத் துடிக்கற மனச அடக்கிட்டு சிகரெட் ஒண்ணப் பத்திக்கிட்டுச் சொன்னேன்

“இ.பி.கோவுல கூட தூக்கத் தவிர எல்லாத் தண்டனைக்கும் ஒரு கால வரையறை இருக்கு சுசி…ஏழரை வருசம் எனக்குக் குடுத்த தண்டனை போதாதா?

“அட ஆண்டவா…உங்களுக்கா தண்டனை குடுத்தேன்..அது எனக்குங்க..எங் கிட்ட இல்லாத ஒண்ணு..கெடைக்காத ஒண்ணத் தேடித் தான நீங்க இண்னொருத்திய தேடிப் போயிருக்கணும்?அப்ப… எனக்கு அது எதுக்கு?“

“இதுக்கு முடிவே இல்லையா?கட்டின பொண்டாட்டியவே ரகசியமா ரசிக்கற ஆம்பள ஒலகத்துலயே நா ஒருத்தனா தான் இருக்க முடியும் சுசி”

“நீங்க பேசறது உணர்ச்சிகளப் பத்தி..நாம் பேசறது உணர்வுகளப் பத்தி..ரெண்டுக்கும் மலையளவு வித்தியாசமிருக்கு..

“நடந்தது என்னன்னும் கேக்க மாட்டேங்கறே?”

“போதுங்க…உங்க கிட்ட நெறையக் கேட்டாச்சு…கேக்க ஆரம்பிச்சா உங்க வார்த்தை ஜாலத்துல ஏமாந்துடுவேன்னு தான் காத இறுக்க மூடிக்கறேன்…இது கூட உங்க பிறந்த நாளுங்கறதால பேசறேன்…நமக்குள்ள பந்தம் ஒண்ணத் தவிர எல்லாமே முடிஞ்சு போச்சுங்க..”

எனக்கு ஆத்திரம்..சொல்லவே விட மாட்டேங்கறாளே..அர்த்தம் கெட்ட ஆம்பளையோட கோவம் கடைசீல எதுல நிக்கும்?

“நீ இல்லாட்டி எனக்கு உலகமே இல்லையா சுசி?ஆண்டவன் புண்ணியத்துல அது ரொம்பவே பெரிசு..நெறைய பொண்ணுகளும் இருக்காங்க..“சொல்லிட்டு சிகரெட்ட ஆஸ்ட்ரேயில அழுத்திட்டு எந்திரிச்சு சட்டைய எடுத்தேன்..அவளும் எழுந்து பெட்சீட்ட மடிச்சிக்கிட்டே சொன்னா..

“அது எனக்கும் தெரியுங்க…அந்த ஒலகத்துல வினோதினி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *