(பிறந்த நாளில் நான் இறந்த நாள்…(4)
இப்பச் சொல்லுங்க…எது கம்பீரம்?அவளுக்குப் பின்னாலயும் எங் கிட்டத் தேடலுண்டு…சில பொண்ணுங்களப் பாத்தேன்…இந்த நிமிசம் வரைக்கும் அந்தக் கம்பீரத்த தரிசிக்க முடியல..இது உங்க மனசப் பாதிக்குதுன்னா இது உண்மைங்கற காரணம் ஒண்ணு மட்டுமில்ல…அவளோட கம்பீரமும் காரணம்!
காதல் திருமணத்துக்கு 87ல திருட்டுக் கல்யாணம்னு பேரு…செவ்வாக் கிழம எஸ்கேப்னு முடிவு பண்ணி இராத்திரி 11 மணிக்கு ரெட்டப் பனை மரத்தடில வந்து நில்லுன்னு அவளுக்குத் தகவலும் சொல்லியாச்சு…செவ்வாக் கிழம காலைல 11 மணிக்கு ஆக்ஸிடெண்ட் ஆயி கால முறிச்சுக்கிட்டேன்…இன்னிக்கு மாதிரி 87ல ஒரு ஆளு கைக்கு நாலு போனா? லேண்ட் லைனே ஊருக்கு ஒண்ணு தான் இருக்கும்…பொதுவான நண்பர் கிட்ட விசயத்தச் சொல்லி
