நேசப் பூ விலங்கு
அத்தியாயம் 17
சுகந்தனும் கோகுலும் சௌமியை எப்படி அழைத்து சந்திப்பது என்று திட்டமிட்டுக்கொண்டிருந்தனர். நீ கூப்பிட்டா பேசமாட்டா நா வரச்சொல்லி கூப்பிட்டா வருவாலாடா?? என்று கோகுல் கேட்டான்.
நீ கூப்பிட்டாலும் கண்டுபிடிச்சிருவாடா நா பேசதான் வர சொல்றோம்ன்னு கெஸ் பண்ணிருவா என்று சுகந்தன் கூறினான்.
இப்போ என்னடா பண்ணலாம் நீயே ஒரு ஐடியா சொல்லு என்று கோகுல் சுகந்தனிடம் கேட்டான்.
டேய்! அவ பிரண்ட் கிருத்திகாகிட்ட சொல்லி அவளை கூப்பிட்டு வர சொல்லலாம் சுகந்தன் கூறி விட்டு கிருத்திகாவுக்கு போன் செய்தான்.
ஹலோ கிருத்தி எங்க இருக்க? சென்னைலயா? இல்ல கோவைலயா? என்றான் சுகந்தன்.
என்ன அண்ணா போன் எடுத்ததும் எப்படி இருக்கானு கேக்காம எங்க இருக்கன்னு கேக்கறீங்க? இவ்ளோதானா உங்க தங்கச்சி பாசம்??? என்று நேரங்காலம் தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்தாள்.
அய்யோ! கிருத்தி நா இருக்க நிலைமையில் எதும் விளையாட்டு காட்டாம நா கேக்கரதுக்கு மட்டும் பதில் சொல்லு ப்ளீஸ் என்க, அண்ணா ஏதாவது பிரச்சனையா? நா கோவைலதான் இருக்கேன் அண்ணா என்றாள்.
கிருத்தி! எனக்கு நீ ஒரு ஹெல்ப் பண்ணனும் ப்ளீஸ் என்றான். என்ன அண்ணா ப்ளீஸ் எல்லாம் எதுக்கு என்ன விஷயம்னு சொல்லுங்க என்றாள்.
இன்னைக்கி ஈவினிங் சௌமியாவை நா சொல்ற என் பிரண்ட் வீட்டுக்கு கூட்டிட்டு வரணும். ஆனா நான் தான் வரசொன்னேன்னு அவகிட்ட சொல்லாம கூட்டிட்டு வரணும். ஒரு முக்கியமான விஷயம் ரொம்ப அவசரம் கூட அதுக்குத்தான் உன்கிட்ட சொல்றேன் என்று சுகந்தன் கூறினான்.
சரி அண்ணா நா கூட்டிட்டு வரேன் நீங்க அட்ரஸ் மட்டும் அனுப்புங்க நா பாத்துக்கறேன். வரும்போது கால் பண்ணிட்டு வரேன் என்று போன் ஐ வைத்து விட்டாள்.
அவ சும்மாவே என்ன ஓங்கி ஓங்கி அறைவா, அதும் இப்போ ரெண்டு பேருக்கும் ஏதோ பிரச்சனைல பேசிக்கரதே இல்ல, நா மட்டும் பொய் சொல்லி கூட்டிட்டு போனா என்ன என்ன செய்வாளோ?? இந்த அண்ணனும் பாவம் கெஞ்சி கேக்குறாங்க என்ன பிரச்சனைனு தெரிலை, ம்ம் கூட்டிட்டு போவோம் என்ன நடக்குமோ பாத்துக்கலாம் என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு சௌமிக்கு போன் செய்தாள்.
ஹலோ! சௌமி இன்னைக்கு ஈவினிங் வெளியே போலாமா? நீ ஃபிரீயா? ம்ம் போலாம்டி எனக்கும் எங்கயாவது போகணும் போலத்தான் இருந்துச்சு என்றாள். ஆமாம் போனாதான் அவ ரீயாக்ஷன் என்னனு தெரியும் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள் கிருத்திகா.
மாலை வேளையில் இருவரும் கிளம்பி கோவிலுக்கு சென்றனர். சௌமியா மனமுருகி கடவுளை வேண்டினாள். கிருத்திகாவோ சௌமியாவிடம் உதை படாதிருக்க வேண்டினாள்.
கடவுளை தரிசித்த பிறகு இருவரும் கோவிலை விட்டு வெளியே வந்ததும் கிருத்திகா, சௌமி பக்கத்துலதான் என் பிரண்ட் வீடு அவ கிட்ட நோட்ஸ் வாங்கணும் அப்படியே வாங்கிட்டு போலாமா என்று கேட்டாள். ம்ம் சரிடி வாங்கிட்டு போலாம். உடனே சுகந்தனுக்கு செய்தி அனுப்பிவிட்டு ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்தாள்.
வழி சொல்லி ஒரு வழியாக கோகுலின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். யாரு இந்த பிரண்ட், இவ்ளோ பெரிய வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்க என்று கேட்டுக் கொண்டே இறங்கினாள் சௌமி. எல்லாம் நமக்கு தெரிஞ்சவங்கதான் உள்ள வா என்று கேட்டிலிருந்து கதவு வரைக்கும் தப்பி ஓடி வந்து விட்டாள் கிருத்திகா.
அழைப்பு மணியை அடித்துவிட்டு நின்றாள். அதற்க்குள் சௌமியும் அவளருகில் வந்து நின்று விட்டாள். கோகுல்தான் வந்து கதவைத் திறந்தான். சௌமி அதிர்ந்து நின்றாள். ஹாய்! நீங்க இங்க என்ன பண்றீங்க? என்றாள்.
உள்ள வாங்க என்று அழைத்தவன் இருவரையும் சோபாவில் அமர வைத்தான். சௌமியா, கிருத்திகாவை கேள்வியாகப் பார்த்தாள். அவளும் கண்டும் காணாமல் இருந்தாள்.
சௌமி தப்பா நினைக்காதீங்க ஒரு நிமிஷம் அந்த ரூம்ல வெய்ட் பண்ணுங்க என்று அவளை ஒரு அறைக்கு அனுப்பினான். என்ன விஷயம்னு ஏதும் சொல்லலியே என்றாள். வெய்ட் பண்ணுங்க தெரிஞ்சுரும் என்று பொடி வைத்துப் பேசினான்.
சௌமி கோகுல் காட்டிய அறையில் உள்ளே இருந்த சேரில் யோசனையுடன் அமர்ந்திருந்தாள். அப்போது கதவு திறக்கும் ஓசை கேட்க திரும்பியவள் அதிர்ந்து நின்றாள். அங்கே சுகந்தன் கதவை அடைத்து விட்டு உள்ளே வந்து கொண்டிருந்தான்.
சௌமி எதுவும் பேசாமல் வெளியே செல்லப் பார்க்க சட்டென்று அவளின் கைப் பிடித்து நிறுத்தினான். இப்போ எதுக்குடி வேகமா வெளிய போர? நா என்ன பேச வந்தேன்னு கேக்கக்கூட மாட்டேங்குற? என்று சற்று அதட்டலாகவே கேட்டான்.
உங்க கிட்ட பேச எனக்கு ஒன்னும் இல்ல என்று அவன் கையை வெடுக்கென்று உதறிவிட்டு வெளியே வந்தாள். இவள் இப்படித்தான் வருவாள் என்று முன்கூட்டியே அறிந்தவன் கோகுலை முன்புறமாக நிறுத்தி வைத்திருந்தான்.
சௌமி ஒரு நிமிஷம் நா சொல்றத கேளு என்றான் கோகுல். அவனின் வீட்டில் அவனை மதிக்காமல் செல்வது தவறு என்று உணர்ந்தவள் அவன் சொல்ல வருவதை கேட்க தயாராகினாள்.
வா வந்து இங்க உட்காரு என்று அமர வைத்தான். அதற்க்குள் சுகந்தனும் அங்கே வந்தமர்ந்தான்.
கோகுல்தான் விஷயத்தை ஆரம்பித்தான். சௌமி, சுகந்தனுக்கு இன்னும் 15 நாள்ல கல்யாணம், பொண்ணு அந்த ஷாலினிதான், இந்த விஷயம் சுகந்தனுக்குக் கூடத் தெரியாது. இன்னைக்கு ஊருக்கு வந்தப்போதான் தெரியும் என்று தேங்காய் உடைப்பதுபோல் உடைத்து விட்டான்.
ஓஹ்!15 நாள்ல கல்யாணம்னு அவருக்கே தெரியாது இதை நா நம்பனும் என்று நக்கலாக கேட்டாள். அவரை லவ் பண்ண பொண்ணுதான, அவருக்கும் புடிச்ச பொண்ணுதான பேசாம கல்யாணம் பண்ணிக்க சொல்லுங்க கோகுல் அண்ணா என்றாள் சௌமி எவ்வித கோவமா, வருத்தமோ இன்றி இவ்வார்த்தைகளை கூறினாள்.
இதனைக் கேட்ட கிருத்திகாவிற்க்கு திக்கென்று இருந்தது. சௌமியின் கோபம் கூட சமாளித்து விடலாம். அவளின் அமைதிக்கு பின்விளைவுகள் அதிகம் என்பதை நன்கு அறிந்தவள் அவள்.
ஓகே அப்போ நா அவளை கல்யாணம் பண்ணிக்க போறதுல உனக்கு எந்த பிரச்னையும் இல்ல அப்படித்தான? என்று கேட்டான் சுகந்தன். உங்களுக்கு புடிச்ச பொண்ண நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்க, அதுவும் உங்க அம்மா, அப்பா சம்மதத்தோடு இதுல எனக்கு என்ன பிரச்சனை வரப்போகுது? என்றாள் நிமிர்வுடனே.
கிருத்திகாவுக்கு புரிந்தது கல்நெஞ்சக்காரி எதையும் வெளிக்காட்டாமல் சமாளிக்கிறாள். சரி அவ்ளோதான் முடிஞ்சதுதானே? கிருத்தி போலாமா இல்ல நீயே போக முடியுமா? என்றாள் சௌமி.
கிருத்திகா , அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. எனவே என்னவென்று சுகந்தனைப் பார்க்க நீ இரு நா ட்ராப் பண்றேன் என்றான். அவளுக்கும் உடனே கிளம்பும் மனநிலை இல்லை.
கிருத்திகா திரும்ப அமரவும், சௌமி கிளம்பி விட்டாள். அதன் பிறகு சிறிது நேரத்துக்கு பிறகுதான் கிருத்திகா அங்கிருந்து கிளம்பினாள்.
சௌமியா எந்த வகையிலும் யாரிடமும் மன வருத்தமோ எதையும் வெளிக்காட்ட வில்லை. சுகந்தனும் அதன் பிறகு அவளை தொடர்புகொள்ள முயற்சிக்கவில்லை.
கிருத்திகா மட்டும் அடிக்கடி போன் செய்து பேசுவாள். அவளை சிரிக்க வைக்க, முடிந்த மட்டும் முயற்சி செய்வாள்.
இப்படியே நாட்கள் நகர்ந்தன. வார இறுதி நாட்களில் கிருத்திகா வருவதை வழக்கமாக மாற்றியிருந்தாள் சௌமிக்காக. சுகந்தனின் திருமணத்திற்கு இரண்டு நாட்களே இருந்தன. கிருத்திகா சௌமியின் வீட்டிற்கு வந்தாள்.
சௌமியின் அறைக்கு சென்றாள் கிருத்திகா. ஏய்! என்னடி இப்படி அமைதியா இருக்க? எனக்கு மண்டையே வெடிச்சிடும்போல இருக்கு. ஆஃபீஸ்ல வேலையே செய்ய முடில.
ஆனா நீ என்னடான்னா எனக்கென்னனு இருக்க? ஏண்டி இந்த கல்யாணத்தை நிறுத்துங்கன்னு கூட சுகந்தன் அண்ணகிட்ட சொல்லிருக்கலாம்ல? அவங்க என்ன லவ் பண்றேன்னு சொல்லி இருந்தா அவங்க சட்டையை பிடிச்சு கேட்டிருப்பேன்.
அவங்கதான் என்ன லவ் பண்றேன்னு சொல்லவே இல்லையே?? அதுக்காக நீ அந்த அண்ணாவை விட்டு கொடுத்திருவியா? என்றாள் கிருத்தி.
தேவை இல்லாம அதையும் இதையும் பேசாதடி. கல்யாணத்துக்கு வந்துரு. உனக்கும் பொண்ணுகிட்ட இருந்து இன்விடேஷன் வந்திருக்கும்ல. சோ நீயும் வந்திருடி.
சௌமி! நீ இப்படி கூல் ஆ இருக்கறதுதான் பயமா இருக்குடி என்றாள் கிருத்திகா. அப்பொழுதும் ஒரு மௌனப் புன்னகையை வீசினாள் சௌமியா. கிருத்திகாவின் பயம் இன்னும் அதிகரித்தது.
அவளின் மௌனம் அறிந்தவள் இன்னும் 2 நாட்களுக்கு அவளுடன் தாங்கிக்கொள்ள முடிவெடுத்தாள்.
திருமண நாளும் வந்தது. காலையில் வீட்டில் அனைவரும் கிளம்பினர். சௌமியா வழக்கம்போல எளிமையான அழகில் ஆகாய நீல நிறத்தில் புடவை அணிந்து பேரழகியாக திகழ்ந்தாள்.
சுகந்தன்- ஷாலினி?????
சுகந்தன்- சௌமியா????
