நேசப் பூ விலங்கு

This entry is part 2 of 9 in the series நேசப் பூ விலங்கு

நேசப் பூ விலங்கு

நேசப் பூ விலங்கு

நேசப் பூ விலங்கு

நேசப் பூ விலங்கு

நேசப் பூ விலங்கு

நேசப் பூ விலங்கு

நேசப் பூ விலங்கு

நேசப் பூ விலங்கு

நேசப் பூ விலங்கு

நேசப் பூ விலங்கு

நேசப் பூ விலங்கு

நேசப் பூ விலங்கு

நேசப் பூ விலங்கு

நேசப் பூ விலங்கு

நேசப் பூ விலங்கு

நேசப் பூ விலங்கு

நேசப் பூ விலங்கு

நேசப் பூ விலங்கு

நேசப் பூ விலங்கு

அத்தியாயம் 16


சுகந்தனின் அம்மா 1 மாதம் வேலைக்கு விடுப்பு எடுத்து வர சொன்னார். என்னம்மா?? இப்படி திடீர்னு வர சொன்னா எப்படி?? அது என்ன நம்ம கம்பெனினு நினைச்சுட்டு இருக்கீங்களா? 1 மாசம்லாம் லீவ் கொடுக்க மாட்டாங்க. என்ன விஷயம்னும் சொல்ல மாட்டேன்கிறீங்க என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தான்.


அவன் அம்மாவிற்கு எரிச்சலானது. என்னடா புதுசா  இத்தனை கேள்வி கேக்குற? நா சொன்னா சரின்னு கேக்கணும் புரியுதா? அப்பாக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்ல. கம்பெனி வேலையெல்லாம் நீதான் பாக்கணும். அதனால சீக்கிரமா வரப் பாரு என்றுவிட்டு போனை வைத்தார் சுந்தரி.


சுகந்தனும் அவர் சொன்னதை உண்மை என்று நம்பி கம்பெனியில் 1மாதம் விடுப்பு சொல்லிவிட்டு ஏதேனும் அவசரம் எனில் தன்னைத் தொடர்பு கொள்ளுமாறு கூறிவிட்டு சென்னையிலிருந்து கிளம்பி கோவைக்கு வந்தடைந்தான்.


வீட்டிற்கு வந்ததும் அவனுக்கு அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது. டேய்! சீக்கிரம் குளிச்சுட்டு ரெடி ஆகு கோவிலுக்கு போகணும் என்றார் சுந்தரி. என்ன எதுக்குமா கூப்பிடறீங்க நீங்க போய்ட்டு வாங்க. நா கம்பெனிக்கு போய்ட்டு வரேன் என்று சுகந்தன் கூறினான்.


அதுக்கெல்லாம் ஆள் இருக்காங்க நீ சீக்கிரம் கிளம்பு என்றுவிட்டு சென்றார். சுகந்தன் இது என்ன என்று யோசித்து குழப்பத்துடனே குளித்து கிளம்பினான். கிளம்பிவிட்டு கோவிலுக்கு சென்றனர். சுகந்தன், அவனின் அம்மா, அப்பா மூவரும் சென்றனர். வண்டி நேராக அவர்களின் குல தெய்வம் கோவிலுக்கு சென்றது. அங்கே ஒரு தட்டில் பூ, பழம், வெற்றிலை, பாக்கு, தேங்காய் ஆகிய பூஜைப் பொருட்கள் அனைத்தும் வைத்து அதன் மேலாக திருமணப் பத்திரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.


அந்த தட்டை சுகந்தனின் தாய், தந்தை இருவரும் சேர்ந்து பூசாரியிடம்  கொடுத்தனர். என்ன விசேஷம்? என்று அவர் கேட்டபோதுதான் சுகந்தனுக்கு கல்யாணம் சாமி அதான் முதல் பத்திரிக்கை வைக்க வந்தோம் என்று சுகந்தன் தலையில் கல்லைப் போட்டார் சுந்தரி.


சுகந்தனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. எதையும் வெளிக்காட்டாமல் இருக்க அரும்பாடு பட்டான். கோவிலை விட்டு வெளியே வந்து காரில் ஏறியதும்தான் கேட்டான். என்னமா இது என்கிட்ட ஒரு வார்த்தைகூட கேட்காமல் பத்திரிகை வரைக்கும் வந்துடீங்க? பொண்ணு வீட்ல என்ன பாக்கணும்னு ஏதும் கேக்கலயா? என்றான் சந்தேகத்துடன்.


அவன் மட்டுமே பேசிக்கொண்டு வந்தான். அவன் தாய் எந்த பதிலும் கூறவில்லை. சென்றுகொண்டே இருந்த கார் ஓரிடத்தில் நின்றது. ம்ம் இறங்கு என்றுவிட்டு சுந்தரி முன்னே நடந்தார். தன் பேச்சுக்கு என்ன மரியாதை என்று யோசித்துக்கொண்டே நடந்தான் சுகந்தன்.


அங்கே வாங்க! வாங்க! சம்பந்தி எப்படி இருக்கீங்க என்று வரவேற்றுக்கொண்டே வந்தனர் பெண்ணின் தாயும், தந்தையும். ஓஹ் மாப்பிள்ளையும் வந்திருக்காரா?? வாங்க நல்லா இருக்கீங்களா? என்று பேசிக் கொண்டே அனைவரும்  ஹால் சோபாவில் அமர்ந்தனர்.


அந்த வீட்டின் அமைப்பே பணத்தை வாரி இறைத்திருக்கிறார்கள் என்று சொன்னது. அங்கே ஏராளமான கலைப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்தாலும் அவற்றை ரசிக்கின்ற மனநிலையில் சுகந்தன் இல்லை. 


அவர்கள் பேசிக்கொண்டிருக்க அங்கே ஒரு பெண் நடந்து வருவது சுகந்தனின் கடைக்கண்களுக்குத் தெரிந்தது. சட்டென்று நிமிர்ந்து பார்த்தவனுக்கு பேரதிர்ச்சி.

(ஒரு மனுஷன் ஒரு நாளைக்கு எத்தனை அதிர்ச்சியதான் தாங்கறது )


அங்கே ஷாலினியை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை என்பது அவனின் கண்களிலேயே தெரிந்தது. வாம்மா ஷாலு மாப்பிளை இன்னைக்குத்தான் நம்ம வீட்டுக்கு வந்திருக்கார். அவரை கூட்டிட்டுப்போய் வீட்டை சுத்திக்காட்டு என்றார் ஷாலுவின் அப்பா.


சுகந்தனும் வேறு வழியின்றி அவளுடன் வந்தான். மாடியில் அவளின் அறைக்கு அழைத்துச் சென்றாள். உள்ள வாங்க இதுதான் என் ரூம் என்றுவிட்டு உள்ளே சென்று அமர்ந்தாள் ஷாலினி.


சுகந்தனின் வீட்டின் ஹாலும் கிச்சனும் சேர்ந்தது போல இருந்தது அந்த அறை. அனைத்து வசதிகளும் அவளின் அறையில் இருந்தது.


நான்தான் கல்யாணபொண்ணா இருப்பேன்னு நீங்க எதிர் பாக்கல போல?? என்றாள். அதான் எதிர்பாக்கலனு தெரியுது? அப்புறம் எதுக்கு இந்த கேள்வி? என்று கேட்டான் சுகந்தன்.


உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னுதான் சொல்லல என்றாள் ஷாலினி. இதுக்கு பேர் சர்ப்ரைஸ் இல்ல ஷாக் என்றான் . 


அதற்குள் சுந்தரி,  சுகந்தா வா என்று அழைத்தார். நீங்க செஞ்சதிலேயே உருப்படியான விஷயம் இப்போதைக்கு என்ன இங்கிருந்து காப்பாத்தினதுதான் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.


பத்திரிக்கையை பெண் வீட்டாருக்கும் கொடுத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தனர். எப்போது வீடு வந்து சேர்வோம் என்று எதிர்பார்த்து அமர்ந்திருந்தான் சுகந்தன்.


வீட்டிற்கு உள்ளே நுழைந்த  அடுத்த நிமிடம், என்னமா இது என்கிட்ட சொல்லாம இவ்ளோதூரம் பண்ணிருக்கீங்க? என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல? இப்போ வந்து இதான் பத்திரிக்கை, இதான் பொண்ணுன்னு காட்டுறீங்க? என்று சிறிது கோபமாகவே கேட்டான்.


இப்போ என்னடா முன்ன பின்ன தெரியாத பொண்ணயா காட்டினேன்? அவ உங்க காலேஜ்லதான் படிச்சிருக்கா, இப்போ சென்னைலதான் வேலை பாக்கரா, நல்ல வசதி, ஒரே பொண்ணு, பாக்கவும் அழகாதான் இருக்கா, அதுவும் நம்ம ஜாதி இதை விட வேற என்ன வேணும்டா உனக்கு? அம்மா எனக்கு அவளை பிடிக்க வேணாமா?? அவங்க எல்லாருக்கும் உன்ன பிடிச்சிருக்கு அது போதாதா? அவங்க எல்லா சொத்துக்கும் நீதாண்டா வாரிசு என்று பெருமையாகக் கூறினார் சுந்தரி.


இப்போ எதுக்கு இவ்ளோ கேள்வி கேக்குற? உன் பிரண்ட்ஸ்க்கு எவ்ளோ பத்திரிக்கை வேணுமோ அதை எடுத்துக்கோ, தேவை இல்லாம பேசாம ஒழுங்கா கல்யாணத்துக்கு ரெடி ஆகப்பாரு என்றுவிட்டு சென்று விட்டார் சுந்தரி.


இவ்வளவு தூரம் வந்த பிறகு குடும்ப கௌரவம் முக்கியம் என்று திருமணத்தை சுகந்தன் நிறுத்த முயற்சிக்க மாட்டான் என்று சுந்தரி நன்கு அறிந்திருந்தார்.( என்ன வில்லத்தனம்)


கோவமாக அவனின் அறைக்குச் சென்ற சுகந்தன் கோகுலுக்கு போன் செய்தான்.டேய் எங்கடா இருக்க என்றான் சுகந்தன். அம்மாவும் அப்பாவும் ஒரு வேலையா சென்னை போறாங்கடா அதான் அவங்கள சென்ட் ஆஃப் பண்ணிட்டு வீட்டுக்கு போய்ட்டு இருக்கேன் என்று கூறினான் கோகுல்.


அப்படியே என்ன வந்து பிக்அப் பண்ணிட்டு போ என்று கட்டளையாக வந்தது சுகந்தனின் குரல். ம்ம் சரிடா நீ கிளம்பி இரு நா  10 நிமிஷத்துல வரேன் என்ற கோகுல் அதன்படியே வந்து சேர்ந்தான்.


சுந்தரியிடம் வீட்ல யாரும் இல்ல ஆன்ட்டி அதனால இவனை கூட்டிட்டு போறேன் நாளைக்கு கொண்டு வந்து விட்டுடறேன் என்றான் கோகுல். சுகந்தன் கொஞ்சம் தள்ளி இருந்தால் திருமணத்தில் எந்த பிரச்சனையும் வராது என்பதை சுந்தரி நன்கு அறிந்திருந்தார்.


சரி போய்ட்டு வா!  என்று சுகந்தனுக்கு அனுமதி வழங்கினார். இருவரும் கோகுலின் வீட்டுக்கு சென்றனர். வீட்டினுள் வந்ததும் சுகந்தன் கோகுலின் கையைபிடித்து அவனின் அறைக்கு இழுத்து வந்தான்.


டேய் இந்த கல்யாண விஷயம் உனக்கு தேடியுமாடா? என்று கேட்டான் சுகந்தன். எந்த கல்யாணாம்டா? நானே 4 நாள் முன்னாடிதான் லண்டன்ல இருந்து வந்தேன். என்கிட்ட இப்படி கேட்டா எனக்கு என்னடா தெரியும்? என்றான் கோகுல். 


அப்போ உனக்கும் ஏதும் தெரியாதா மச்சி?? அது சரி கல்யாண மாப்பிள்ளை எனக்கே ஏதும் தெரியலை, இதுல உனக்கு என்ன தெரியும் என்றான் சுகந்தன்.


என்னடா சொல்ற உனக்கு கல்யாணம் ஆ?? என்று அதிர்ந்தான் கோகுல். இன்னும் 15 நாள்ல கல்யாணம் ஆனா எனக்கே இன்னைக்கு காலைலதான் தெரியும். நானே எந்த சுவத்துல போய் முட்டிக்கலாம்னு இருக்கேன் என்றான் சுகந்தன்.


இவங்க கௌரவம் என்னால கெட்டுப் போகக்கூடாதுனு என்மேல ஆசைப்பட்ட பொண்ண வேணாம்னு ஒதுக்கி வச்சிருக்கேன். ஆனா இவங்க எனக்கு அந்த பொண்ண புடிச்சிருக்கான்னு கூட கேக்காம பத்திரிக்கை  வரைக்கும் அடிச்சு ரெடி பண்ணி வச்சிருக்காங்க.


நிஜமாவே இவங்கதான் என்னை பெத்தாங்கலா?? எனக்கே சந்தேகமா இருக்குடா. ஒரு மரியாதைக்கு கூட உனக்கு ஓகே வான்னு கேக்கல என்று அவன் மன வருத்தத்தை கோகுலிடம் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தான்.


சரி இந்த விஷயம் அந்த பெண்ணுக்கு தெரியுமா என்றான் கோகுல். எந்த பொண்ணு?? சுகந்தன் கேட்க, சௌமிக்கு தெரியுமாடா? இல்லடா இன்னும் தெரியாது, தெரிஞ்சா அவ ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு தெரில??


சரி ஈவினிங் அவளை இங்க வரசொல்லு இந்த கல்யாணத்தை பத்தி சொல்லிரலாம் என்றான் கோகுல். இது சரியா வருமாடா? என்றான் சுகந்தன். இல்லடா திடீர்னு சொல்லி அந்த பொண்ணு தப்பான முடிவு ஏதும் எடுத்துட்டா என்ன பண்றது? இப்போவே சொல்றது ரொம்ப நல்லது என்று கோகுல் கூறினான்.


ஆனா இப்போ நா கால் பண்ணினா பேசமாட்டா, எப்படி அவளை வர வைக்கறது? என்றான் சுகந்தன். 

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *