சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய[தீபாஸ்-ன்]

அத்தியாயம்-08 

விமல் முன்பு நின்றபடி வாகினி  மொபைலில் சிம்மன் கூறிய, “நீ வருகிறாய், என்னிடம் தான் இனி நீ வேலை பார்க்கபோற, உன் அப்பா இப்போதான் அதுக்கான அட்வான்ஸ் வாங்கிட்டு போறாரு. வரமுடியாது என்று யாரிடம் சொல்ற..!” என்று கூறியதை கேட்டு,


இவன் கிட்ட நான் வேலை பார்க்க என் அப்பா அட்வான்ஸ் வாங்கினாங்களா…? என்கிட்டே எதுவும் சொல்லலையே…! இவன்கிட்ட வேலைனா என்ன வேலையா இருக்கும்..?


“இவன் உண்மையைத்தான் சொல்றானா?” என்று மனதிற்குள் எண்ணங்கள் ஓட


தன்னைப்போல தனது மொபைலில் தகப்பனுக்கு டயல் செய்தபடி எதிரில் நின்றுகொண்டிருந்த விமலை கண்டுகொள்ளாமல் அவள் பேசுவது அவனுக்கு கேட்காதவாறு தள்ளிநின்றாள்.


மகளின் அழைப்பை எடுத்த மூர்த்தி ,


“வாகினி அப்பாவே உனக்கு போன் பண்ணனும் என்று நெனச்சேன்.. நீயே பண்ணிட்ட, இன்னைக்கு தேஜாம்மாவை அவங்க அண்ணன் ஆபீசில் இறக்கிவிடப் போனேனா.


அப்போ என்னைய உள்ள வரச்சொன்னாங்களா.., சரி ஏதாவது லக்கேஜ் எடுக்க இருக்கும் என்று நினைத்து உள்ளப்போனேன்.


ஆனா அங்க இருந்த சின்னய்யா சிம்மன், நம்ம வீட்டில் உள்ள எல்லோரையும் பற்றி விசாரிச்சாரு.


அண்ணன் படிக்கிற காலேஜ் பத்தி கேட்டதும் நிறைய அங்க செலவாகுமே என்ன செய்றீங்க என்று கேட்டார்.


நான் கொஞ்சம் கடன் வாங்கி சமாளிச்சுட்டேன் சின்னையா.., இது கடைசி வருஷம் அவன் வேலைக்கு போயிட்டா கடனெல்லாம் அடைச்சிடுவேனு சொன்னேன்.


அதுக்கு அவர், “கடன் முழுவதையும் சின்னவரே செட்டில் பண்ணிடுவதாகவும் உன் அண்ணனை படிப்பு முடிச்சு அவர்கிட்டேயே வேலைக்கு வந்துடவும் சொன்னார்,


உன்னையும் அவங்க மில்லில் அறிமுகப்படுத்துற  சேலைக்கு மாடலா இருக்கச்சொல்லி கேட்டுகிட்டார்.


அவர் கேட்டதை என்னால் தட்ட முடியல. உன்னை நல்லபடி பத்திரமா பார்த்துக்குவேன் என்று சொன்னவரிடம் மறுத்து சொல்லமுடியல.


எனவே சரின்னு சொன்னேனா பொசுக்குன்னு ஒரு லட்சம் செக் போட்டு கையில் கொடுத்துட்டாரு.


இந்த வருஷத்துக்கு  உன் அண்ணன் ஹாஸ்டல் பீஸ் இன்னும் கட்டலியே தெரிஞ்ச எல்லா இடத்திலேயும் கை நீடியாச்சேனு நெனச்சுகிட்டு இருந்தேன்.


உன் மூலமா அப்பாவோட பிரச்சனை இப்போ தீர்ந்துடுச்சுடா… என்று படபடவென கொட்டினார் மகளிடம்.


ஏம்பா என்கிட்டே கேக்காம உங்க சின்னய்யாகிட்ட எதுக்கு என்னை வேலைக்கு சேர்த்தீங்க..? என்று கேட்க நினைத்தவளுக்கு அவரின் வார்த்தைகள் அவ்வாறு கேட்க விடாமல் தடைவிதித்தது.


கை நீட்டி தன் அப்பா கடன்வாங்காமல் இருக்க தான் சிம்மனிடம் வேலைக்கு போவதென்று முடிவெடுத்தால் வாகினி.


அப்பா இப்போதான் தேஜா போன் பண்ணினாள். அப்போதான் எனக்கே விவரம் தெரிஞ்சது அதை கேட்கத்தான் போன்பண்ணினேன்.நீங்களே சொல்லிடீங்க.


அவளோட மேரேஜ் பிக்ஸ் ஆனதுக்கு மாப்பிள்ளை யாதவ் பார்டி அரேஞ் செய்திருக்கிறாராம்.


என்னையும் கூட கூடிக்கொண்டு போக வருவேன் ரெடியாயிருனு சொன்னாள். நான் தட்டிக்கழிக்கப் பார்த்தேன்.


ஆனா அதுக்கு அவள் அண்ணன் அதுதான் அந்த சிம்மன் போனில் என் கூட பேசினார். நான் கட்டாயம் அவங்க கூட வரணுமாம்.


அதுதான் உங்ககிட்ட சொல்லிட்டு போகணும் என்பதற்காகவும் போன் பண்ணினேன்பா என்றாள் வாகினி.


அவளிடம் மூர்த்தி, “நாளைக்கு  வாகினிய நீங்க சொல்ற ஸ்டியோவில போய் நீங்க அனுப்புனதா சொல்லச்சொல்றேன்” என்று சின்னவர்ட சொல்லியிருந்தேன்மா.


ஒருவேளை நீ தேஜா கூட இப்போ போகிறபோதே வேலை பத்தி உன்கிட்ட பேசிட முடிக்க உன்னையும் கூட வரச்சொல்லியிருக்கலாம் வாகினி.


இன்னொன்னு வாகினி, நான் ஏற்கனவே சின்னவர்ட சொல்லிட்டேன். நம்ம மில்லில நெய்த சேலையை வாங்கச்சொல்லி என் மகள் பேசணும் அவ்வளவுதானே… உங்கள நம்பாம யார நம்பப்போறேனு.


சின்னவர் கொஞ்சம் கோவக்காரர்தான். ஆனா..! சின்ன வயசில் இருந்து நாம் பார்த்து வளர்ந்த புள்ள, அவர் மனசு தங்கம்.


இருந்தாலும் என்கிட்ட சொன்னமாதிரி சிம்மன் என்று பொட்டுல அடிச்சதை போல மத்தவங்க முன்னாடி பேரை சொல்லாதே, மரியாதையா அவரிடம் பேசு. கவனமா இருக்கணும் போற இடத்தில…


அவங்க எல்லாம் பெரிய இடத்து ஆளுங்க. சில விசங்களில் அவங்ககிட்ட இருந்து எட்டி இருக்குறதே நல்லதுடா, என்றார்.


ம்..சரிப்பா நான் கவனமா இருந்துக்குறேன். அங்க போனதுக்கு பிறகு போன் பண்றேன் வச்சுறேன்ப்பா என்று சொல்லி மொபைலை தனது பவுச்சில் வைத்துகொண்டே திரும்பியவள் அவளுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த விமலை பார்த்து அவளின் இயாலாதநிலையின் காரணமான கோவத்தை அவனின் மேல் கொட்டினாள்.


உங்களுக்கு டீசென்சியே கிடையாதா..? இப்படித்தான் மத்தவங்க பெர்சனலா போன் பேசும்  போது பின்னாடி வந்து நின்னு கேட்பீங்களா..?


அதுதானே ஒரு பொண்ணை பார்த்ததுமே பின்னாடியே சுத்தி டார்ச்சர் பண்ற ஆளுதானே நீங்க என்றாள்.


அவளின் வார்த்தைகளில் காயமுற்றவனின் முகம் கூம்பிப்போனது .


கழுவி வைத்திருந்த வாகினி டிப்பன் சம்படத்தையும் தன்னுடயதையும்  அவர்கள் ஹேன்ட் பேக்கில் வைத்து எடுத்துகொண்டு அவர்களின் அருகில் வந்த நிஷாவின் காதில் வாகினியின் வார்த்தையும் அதில் சுருங்கிப்போன விமலின் முகத்தையும் பார்த்தாள்.


ஏனோ இப்பொழுது தனது தோழியின் கோபத்தில் இருந்து அவனை கடத்திவிட தோன்றியது அவளுக்கு எனவே,


“விடுடீ..  உனக்குத்தெரிஞ்சவர்தானே சொன்ன பிறகு எதுக்கு இப்போ உன் பின்னால் வந்தவர் மேல கோபப்படுற?” என்றாள்.


அவளின் வார்த்தையில் காயமுற்றிருந்த விமல், வாகினியை பார்த்து நான் சொன்னேன்றதுக்காக விருப்பம் இல்லாமல் நீங்க வரவேண்டாம் என்றான்.


அவன் இப்பொழுது வேண்டாம் என்று சொன்னாள் மட்டும் நான் போகாமல் இருந்துவிடவா முடியும் என்ற நிதர்சனத்தில் ஓர் அளந்த மூச்சை உள்ளிழுத்து தன்னை நிதானப்படுத்தி பேசினாள்.


இங்க பாருங்க சார், “உங்க கூட நான் பேசணும் என்று நீங்களா ஒரு முடிவு செஞ்சு என்னை கூபிட்டதுக்காகவோ, இல்லை இப்போ உனக்கு இஷ்டமில்லை என்று நீங்க சொன்னதும் உங்களை சமதானப்படுத்துவதற்காகவோ நான் இப்போ என்னை கூப்பிட வரும் தேஜா கூட பார்டிக்கு வரல”.


தேஜா என்னோட பிரன்ட். அவளோட அண்ணன் மிஸ்டர் சிம்மன் என் அப்பாவோட முதலாளி மகன்.


இப்போ நான் அவரிடம் வேலை செய்பவள். எனவே அவங்க சொன்னதை தட்ட முடியாமல் இப்போ பார்டிக்கு வருகிறேன். வேறு எதுவும் எனக்கு உங்க கூட பேச இல்லை என்றாள்.


“எனக்கு இருக்கு வாகினி”.

 உங்க கூட பேச நிறைய இருக்கு. ஒரு நண்பனாக கூட என்னை நீங்க ஏத்துக்க தயங்குறது கஷ்ட்டமா இருக்கு.


நீங்க நினைப்பதுபோல எனக்கு உங்கமேல விருப்பம் இருக்குதுதான். ஆனால் உங்களுக்கு இஷ்டம் இல்லை என்றாள் தொந்தரவு செய்யமாட்டேன்.


ஆனா  என்னை பொண்ணுங்க பின்னாடி சுத்துற பொறுக்கிபோல நீங்க நினைப்பது எனக்கு கஷ்டமா இருக்கு.


ஒரு நாள் என்னை புரிஞ்சுப்பீங்க.. பாப்போம், என்று சொல்லியவன் திரும்பி விறு விறுவென்று வெளியேறினான்.


வாகினிக்கு இப்பொழுதே லேசாக தலை வலி டெண்சனால் ஏற்பட்டுவிட்டது.


ஏய்…யாரு இது பார்த்தா பெரிய இடமாத் தெரியுது. பாவம் நீ மூஞ்சியில் அடிச்சதுபோல பேசவும் அவன் முகமே விழுந்துருச்சு.


நல்லவன்னு தெரிஞ்சா லவ் பண்ணிட்டு செட்டில் ஆகிரு வாகினி என்றாள்.


ஏய்…நிஷா நீ வேற ஒரே நாளில் பார்த்துட்டு காதல் வந்துருச்சுன்னு சொன்னால் இது என்ன சினிமாவா.


ம்…கூம் பணக்காரங்க என்றாலே ஆபத்துதான். இப்போ என்னை கூப்பிட தேஜா வந்துருவா நான் இப்படியே கிளம்புறேன் என்றாள்.


ஏய் மேனேஜரிடம் பெர்மிசன் வாங்காம கிளம்புற! .அவன் பாட்டுக்கு சீட்டை கிழிச்சுடுவான்.இல்லாட்டி பத்துபேரு முன்னாடி நிக்கவச்சு திட்டபோறான் என்றாள்.


இனிமேல் என்னை அவனால் திட்ட முடியாது நிஷா! என்னை வேலையில் இருந்து ரிலீவ் பண்ணிடாங்க.


எனக்கு வேற புது வேலை கிடைச்சிருக்கு என்றாள் வாகினி.

என்னடீ திடீர்னு என்கிட்டே கூட நீ சொல்லவே இல்லை. அவ்வளவு அழுத்தமாடீ உனக்கு என்றாள்.


நீ வேற… எனக்கே இப்போதான் தெரியும். அதுவும் எனக்கு பிடிக்காத வேலை என்றாள் வாகினி.


“புடிக்காத வேலையா? பிறகு எதுக்குடி ஒத்துதுகிட்ட, அப்படி புடிக்காத அந்த வேலைதான் என்ன?” என்று கேட்டாள் நிஷா.


“மாடலிங்” என்று அவள் கூறிய ஒரே வார்த்தையில் என்னப்பா சொல்ற? அப்போ உன்னை கட்டாயபடுத்தி வேலையில் சேரவச்சது அந்த குமார்தானா. அவனுக்கு எல்லாம் எதுக்குடி பயப்படுற? போடான்னு போய்கிட்டே இருக்க வேண்டியதுதானே” என்றாள்.


ம்…கூம் அவன் கிடையாது. பிஸ்னஸ்மேன் சிம்மதேவன், அன்னைக்கு ஸ்டுடியோவில் பார்த்தோமே அவனே தான். பணக்காரங்க விருப்பத்தின் முன்னாடி ஏழைகளின் மனதும் சம்மதமும் அவங்களுக்கு இரண்டாம்பட்சம்தான். நம்மளுடைய இல்லாமையை அவங்களோட பணத்தை வைத்து விலைக்கு வாங்கிடுவாங்க.


ஏழைக்கு சூஸ் பண்ணுவதற்கு வாய்ப்பு அவங்க கொடுப்பதே இல்லை என்றாள்.


“என்னது சிம்மன் உன்னைய அவன் பிஸ்னஸ்க்கு மாடலா செலக்ட் செய்திருக்கான!”. அதை போய் பிடிக்காத வேலைன்னு சொல்ற.


லூசாடீ நீ. அன்னைக்கு உன்னை அவன் சரியாகூட ஏறெடுத்து பார்கல பிறகு எப்புடிடீ..?. அவனோட டிரைவர் கூட உன் அங்கிள்னு சொல்லி பேசிகிட்டு இருந்தியே.


அப்போ அந்த சிம்மனை ஏற்கனவே உனக்குத்தெரியுமா..?பிறகு ஏண்டீ அன்னைக்கு சொல்லல என்று சரமாரியாக கேள்வி தொடுத்தாள்.


அப்பொழுது அவளின் மொபலில் தேஜாவிடமிருந்து அழைப்பு வந்தது. ஏய் நிஷா என்னை கூப்பிட  வந்துட்டாங்க, நான் கிளம்புறேன் என்றாள் வாகினி.


ஏய் லூசு, கொஞ்சம் பேஸ் வாஷ்பன்னிட்டு லைட்டா தலை  சரிபண்ணிட்டு போடி பெரிய ஆளுககூட பார்டிக்கு போற இப்படியேவா போறது என்று அவளை தடுக்க முயன்றாள்.


நான் இப்படித்தான், என்னை பார்த்து ஏண்டா இவளை செலக்ட் பண்ணினோம் என்று அந்த கிரேட் சிம்மன் பீல் பண்ணனும், நான் போறேன் பிறகு உன்கூட போனில் பேசுறேன் என்று சொல்லிவிட்டு வாசலுக்கு பறந்தால் வாகினி.


வாசலில் நின்றிருந்த கார் ஜன்னலின் கண்ணாடியை இறக்கி விட்டு உட்கார்ந்திருந்த தேஜா காலையில் அலுவலம் வரும்போது உடுத்தியிருந்த அந்த நலுங்கிய காடன் புடவையிலும் வேகமா வந்ததால் அவள் உதட்டில் மேலும் மேனியிலும் தெரிந்த வியர்வை அடையாளங்களுடன் ஒப்பனை ஏதுமின்றி காதில் குட்டி ஜிமிக்கி கழுத்தில் புல் போன்ற ஒற்றை ஜெயின் மட்டும் போட்டிருந்தும் அவளின் நலுங்கிய  உடை களைத்த தோற்றம் அறிதாரமில்லா தேவதையாக ஜொலிக்கும் தனது தோழியை பார்த்தவள்,


“தன் அண்ணன் அவளை மாடலிங்காக தேர்ந்தெடுத்தது தவறே இல்லை” என்று நினைத்துகொண்டிருக்கும் போதே காரில் அமர்ந்திருந்த தேஜாவை கண்டு இளம் ரோஜா நிற உதட்டில் அரும்ப விட்ட சிரிப்புடன் அருகில் நெருங்கிஇருந்தாள்.


சிம்மன் தன் கண்ணுக்கு கூலிங்கிளாஸ் போட்டு அசால்டான பாவனையில் அவளை கண்டுகொள்ளாதது அமர்ந்திருந்தவன்  மனதில், எது எப்படியோ! இவளை மாடலாக நான் செலக்ட் செய்தது மட்டும் தவறே இல்லை. ம்..செமையா இருக்கிறாள்,என்று நினைத்துகொண்டான்.


காரின் அருகில் வந்த வாகினி உள்ளுக்குள் டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்த சிம்மனை ஏறெடுத்தும் பார்க்காமல் அப்படி ஒருத்தன் உள்ளே அமர்ந்திப்பதை கண்டுகொள்ளாமல்


தேஜாவிடம் இப்போதானே வந்தே..! ரொம்ப நேரம் காக்க வைக்கலேயே..! என்று கேட்டுவிட்டு பின்னால் உள்ள கதவை திறக்க முயன்றாள்.


இல்ல வாகினி இப்போதான் வந்தோம் என்று கூறிய தேஜாவிடம், டோர் லாக்காகியிருக்குப்பா என்றாள்.


அவள் அவ்வாறு சொன்னதும் தேஜா, “அண்ணா லாக் எடுத்துவிடு என்றாள்”.


அப்போதுதான் வாகினியும் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவனின் கூர் பார்வை தன்னை துளைப்பதுபோல் ஒரு பீல் வாகினிக்கு உண்டானது.


அவளை பார்த்துக்கொண்டே ஒரு விஸ் கூட உன் friend பண்ண மாட்டாளோ..? ம்…திமிரு என்று சொன்னான்.


சாரி…சார்.! குட் ஆப்டர்நூன், என்று அவள் உதடுகள் தானே வார்த்தைகளை உதிர்த்தது. அவள் அறியாமல் அவளின் புலன்கள் இனி அவனிடம் விழிப்பாக இருக்கணும் என்ற முடிவுக்கு வந்தது.


அந்த பயம் இருக்கணும் எனும் விதமாக பார்த்தவன் ம்…ஏறு என்றவன் டோர் லாக்கை எடுத்துவிட்டான்.


ஏனோ ஏறி அமர்ந்தவளுக்கு இலகுவாக பின் சீட்டில் சாய்ந்து உட்கார முடியாதவகையில் ஓர் அசவ்கரியம் தொற்றிக்கொண்டது.


சிம்மன் டிரைவர் இருக்கையில் அமர்ந்து கார் ஓட்டிகொண்டிருந்தாலும் தன்னை அவன் பார்ப்பது போலவே ஒரு பீல் வாகினிக்கு.


தேஜாதான் அவளிடம் இயல்பாக பேச்சுகொடுத்தாள். அவளுக்கு பதில் கொடுப்பவளின் குரல் மிகவுமே தணிந்திருந்தது.


தன்னவனை பார்க்கபோகும் கனவில் இருந்த தேஜா, வாகினியின் நெர்வஸ் கவனிக்க தவறினாள்.


ஏய்..வாகினி அண்ணன் உன்னை  எங்க மில்லில் இன்றடியூஸ் செய்ற சேலைக்கு மாடலா செலக்ட் செய்திருக்கிறார்.


மூர்த்தி அங்கிள் கிட்ட பேசிட்டார் அண்ணன். அவரும் சரி சொல்லிடாரு.

நான் அந்த சேரியை பார்த்தேன். செமையா இருக்கு. என் கல்யாணத்துக்கு கூட அந்த சேரிதான் வாங்கனும் என்று டிசைட் பண்ணியிருக்கேன்.


யாதவ்ட்ட இப்போவே சொல்லிடனும், என்று மூச்சுக்கு முன்னூறு யாதவ் பற்றிய பேச்சே அவளின் வாயில் வந்தது.


பாவம் வாகினி இந்நேரம் சிம்மன் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் தன் தோழி தேஜாவை கலாய்த்தே ஒருவழி ஆக்கியிருப்பாள். ஆனால் அவள் நிலைமையே இப்போ மோசமாய் இருந்தது.


சிம்மனுடன் இந்த கார் பயணமே இவ்வளவு கடினமாக இருக்கே இவனிடம் எப்படி வேலை பார்க்கிறது. மாடலிங் என்றால் அது ஆட் கம்பெனிதானே பார்த்துக்கும் இவனா பிலிம் சூட் பன்னபோறான் அப்பாடா என்ற எண்ணம் எழுந்தது.


ஆனால் மறுநிமிடமே ஒளிகளுக்கிடையில் பலபேர் சூழ்ந்திருக்க அநாதரவாக தான் நின்று போஸ் கொடுப்பதை நினைக்கும் போதே அவளுக்கு வெடவெடத்தது.


அய்யோ அப்படி தனியா என்னை விட்டுடுவானோ…! இந்த சிம்மன். இவன் இருந்தால் கொஞ்சம் மத்தவங்க பயந்து அடங்கி நடந்துக்குவாங்க என்று ஒரு மனம் நினைத்தது.


இவ்வாறாக அவள் பல யோசனையில் மூழ்கியிருக்க அந்த ஆடி கார் அலுங்காமல் குலுங்காமல் அந்த ஹோட்டலில் வந்து நின்றது.


கார் நின்றதும் இவர்களின் வருகைக்காக வாசலிலேயே காத்திருந்த யாதவ் முன்புறம் தனது  அண்ணனின் பக்கம் அமர்ந்திருந்த தேஜாவின் பக்கம் விரைந்து வந்து கதவினை திறந்துவிட கை வைத்ததும் சிம்மன் ஓர் தலை அசைவை சிரித்தபடி அவனுக்கு கொடுத்து சென்ட்ரல் லாக்கை விடுவித்தான்.


சிம்மனும் தனது பக்க கதவை திறந்தது இறங்கவும் வாகினியும் இறங்கினாள்.


யாதவுடன் கை கோர்த்தபடி தேஜா போவதை கண்ட வாகினி தனித்து விடப்பட்டதுபோல் உணர்ந்தாள்., ஒரெட்டு வைத்து தேஜாவின் மறுபக்கம் போக முயன்றவளை 


வா…கினி என்ற சிம்மனின் நீட்டி முழங்கிய அழுத்தமான  அழைப்பில் பிரேக் போட்டதுபோல் அடுத்த அடி எடுத்து வைக்காமல் அப்படியே நின்று அவனை திரும்பி பார்த்தாள்.


அவங்க நீயூ பேர், தனியா விடு டிஸ்டப் பண்ணாத என்றான்.

அவனின் வார்த்தை அவளுக்கு சே..! இப்படி இவன் கிட்ட பல்ப் வாங்குறதுபோல நடந்துக்க பார்த்தோமே என்று நினைக்கும் போதே.


விமல் வாகினியை நோக்கி ஹாய்…! வாகினி என்று கை அசைத்தபடி வந்தான்.


அவன் காரைவிட்டு வாகினி இறங்கியதுமே அவளை பார்த்ததுமே அவளின் மூலம் காயம்பட்ட மனது அதை மறந்து அவளின் மீதான அவனின் ஆர்வம் தலை தூக்கியது.


அதே நேரம் காரைவிட்டு இறங்கிய சிம்மனின் பார்வை வாகினிமேல் அழுத்தமாக படிவத்தை கண்டவனுக்கு மனதினுள் ஒரு எச்சரிக்கை மணி அடித்தது.


எனவே வேகமாக அவளை தன் பக்கம் வைத்துக்கொள்ளவேண்டும் என்ற உந்துதலில் அவன் அவளை நோக்கி வந்தபடி சத்தமாக ஹாய்…என்று அவளை பார்த்து கையாட்டியபடி நான் உனக்கு கம்பெனி தருகிறேன் என்றும் விதமாக அவளின் பெயர் சொல்லி அழைத்தான்.


அவன் அவளை நெருங்க இரண்டு எட்டு வைக்கும் தூரம் வந்ததும் இருவருக்கும் இடையில் வந்த சிம்மன் ஹாய்…என்றபடி அவனிடம் கை நீட்டினான் .


இதை எதிர்பார்க்காத விமல் சற்று மெய் மறந்தே போய்விட்டான். வேகமாக அவன் நீட்டிய கையில் தனது கை பத்தித்து குலுக்கியவன் ஹாய் சிம்மன் ஐ ஆம் விமல் என்றான்.


நீட்டிய அவன் கையை பிடித்து குளுக்கியவன், வாங்களேன் விமல்…! உள்ளே போய்கிட்டே பேசலாம் என்றவன் கையேடு அவனை அழைத்துக்கொண்டே உள்ளே நுழைந்தான்.


தன்னை நோக்கி ஹாய்.. என்றபடி வந்த விமலை பார்த்து, இப்போ இவனிடம் எப்படி ரியாக்ட் செய்ய என்று அதிர்ந்து நின்றவள்,  தங்கள் இருவருக்கும் இடையில் சிம்மன் வந்து விமலிடம் பேச்சு கொடுத்து முன்னால் அழைத்துச்செல்லவும் மெளனமாக அவர்களை பின் தொடர்ந்தாள்.

                   —-தொடரும்—-


Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *