சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மை தணிய (தீபாஸ்-ன்)


                                   அத்தியாயம்-14


                                                             

மூன்று மணிக்கு தன் வீட்டுக்கு சிம்மன் ஏற்பாடு செய்திருந்த காரில் வந்து இறங்கிய வாகினியிடம்,”மேடம் மார்னிங் எத்தனை மணிக்கு உங்களை பிக்கப் செய்துகொள்ள வர?” என்று டிரைவர் கேட்டு தெரிந்துகொண்டு  சென்றபின் வீட்டிற்குள் வந்தாள்.


கார் சத்தத்திலேயே தனது  மகள் வந்துவிட்டதை உணர்ந்துகொண்ட உமையாள், அவள் சாப்பிட தான் சமைத்ததை தட்டில் போட்டு கொண்டுவந்தாள்.


அவ்வளவு நேரம் அவளை பற்றியும் அவளின் எதிர்காலம் பற்றியும் அலசிக்கொண்டிருந்த அவளின் வீட்டவரிடம் வாகினியின் அப்பா, வாகினி வந்துட்டான்னு நெனக்கிறேன்.


உமையாள், அவ வந்ததும் அவட்ட நோண்டி நோண்டி கேக்காத ஆற அமர சாப்புட்டு முடிச்சுட்டு பொறுமையா கேளு என்றார்.


அவர் அவ்வாறு சொன்னதும் “நல்லா இருக்குதே நீங்க சொல்றது வந்த புள்ளைகிட்ட வேலைக்கு போன இடம் எப்படி, பிரச்சனை எதுவும் அங்க இல்லையில்ல என்னு இரண்டு வார்த்தை நான் கேட்பேன்.


வேற என்னத்த நான் கேக்க போறேன் என்று சொல்லும் போதே உள்ளே வந்த வாகினியை பார்த்த உமையாள், அவள் முன்பு வேலைக்குச் சென்ற இடத்தில் இருந்து வரும் போது இருக்கும் களைத்த தோற்றம் இப்பொழுது இல்லாமல் மேலும் மேருகேரித்தெரியும் அவளின் தேஜஸில் மனம் கொஞ்சம் சந்தோசமும் இதமும் ஒருங்கே அடைத்தது.


வந்துட்டியா…போய் கை கால் அலம்பிட்டு வா,  உனக்கு நாலு வடை தட்டுல சட்னி வச்சு எடுத்துட்டு வாறேன்.


உங்க அண்ணன் வந்துருக்கானேனு உளுந்த வடை போட்டேன். சூடா இருக்கு என்றார்.


அவர் அவ்வாறு சொன்னதும் அவளின் நினைவில் மோகி கொடுத்த அவளின் உணவு கட்டுப்பாட்டு சார்ட் வந்து போனது.


ம்…கூம் வேணாம்மா எனக்கு சாப்பாடு அங்கேயே முடிஞ்சுடுச்சு என்றாள்.

மதிய சாப்பாடு இத்துனூண்டு டிபன்ல கொண்டு போனது என்று உமையாள் கூறியதும் வாகினி “அம்மா இதோ நீங்க கொடுத்த சாப்பாடு அப்படியே கொண்டுவந்துட்டேன்”எனக்கு அவங்களே சாப்பாடு கொடுத்துட்டாங்க என்றவளிடம்.


அப்போ இனி நீ  போகும் போது டிபன்ல சாப்பாடு கொண்டு போக வேணாமா! ஆமா வாகினி, வேலை எப்படி இருந்தது .அவங்க உனக்கு ஒன்னும் சிரமம் இல்லையே!.


“அதெல்லாம் இல்லைமா, நான் கை கால் அலம்பிட்டு டிரஸ் மாத்திட்டு வந்து உனக்கு ஒவ்வொன்னா சொல்றேன்” என்றவள் உள்ளே போய் விட்டாள்.


உள்ளே சென்றவளுக்கு மனம் முழுக்க அங்கு ஸ்டுடியோவில் கண்ணீருடன் நின்ற ஜெஸிலாவின் முகமும் அவள் அம்மா கூறிய வார்த்தைகளுமே அவளுக்குள் ஒலித்தது.


அந்த சிம்மனுக்கும் எனக்கும் போய் முடிச்சு போட்டு பேசிட்டாங்களே .

அதுவும் அந்த ஜெஸிலாவுக்கும் சிம்மனுக்கும் இடையில் நான் வருவதா  அத்தனை பேர் முன்னாடி பேசிட்டாங்க.


ஆனா அதை மறுத்து பேச கூட முடியாம நான் ஏன் பயந்து போய் இருந்துட்டேன். அங்கிருக்கிற சூழல் என்னை மிரட்டிடுச்சு.


சிம்மன் அந்த ஜெஸிலாட்ட ஏன் அவளை இந்த அட்வர்டைஸ்மெண்டில் இருந்து விலகினார் என்பதை சொன்னார் தானே.


ஆனால் அவருக்கும் எனக்கும் ஒன்னும் இல்லைன்னு சொல்லல ,இனி அவர் கூட நான் சகஜமா பேசுனா பேப்பரில் நடிகர் நடிகைகளுகிடையே கிசுகிசு வருமே அதே போல என்னைய பத்தி அப்படி வந்திடுமோ..? என பயந்தாள்.


ஆனால் அவள் பயப்படும் விஷயம் எழுத்துகளாக மக்களின் பார்வைக்கு வர தேவையான எல்லா சூழலும் அமைந்துவிட்டதை பேதை அவள் உணரவில்லை.

இதற்கிடையில் சிம்மனின் கோபத்திற்கு பயந்து ஜெஸிலா தனது அம்மா சுலோச்சனாவை வெளியில் கூட்டிக்கொண்டு வந்தவளிடம்.


வாசலில் நின்று சத்தம் போட்டு கொண்டிருந்தாள் ஜெஸிலா .இப்போ என்னத்துக்கு என்னை பேச விடாமல் இழுத்துகிட்டு வந்த என்று கேட்டவளிடம்.

ம்…மா நீவேற ஓவரா ஆக்ட் குடுத்து எல்லாத்தையும் நீ சொதப்பிட போறேன்னுதான் இழுத்துட்டு வந்தேன்.


சிம்மனை பொறுத்தவரை நீ மட்டும்தான் ஸ்பாயில்டு உமன். என்னையும் நீ பெத்தவனையும் கொஞ்சம் நம்பிட்டுதான் இருக்கு.


இப்போ நான் உன்னை பேசவிட்டு வேடிக்கை பார்த்தேனா பிறகு அலார்ட் ஆகிடும் அப்போ நம்ம அண்ணனை வச்சு இன்னைக்கு செய்யபோற வேலை பிளாப் ஆகிடும் என்று கூறினாள்.


அவங்க இரண்டு பெரும் பேசுவதை அவர்களின் பின்னாடியே வெளியில் வந்த குமார் நோட்டமிட்டதில் காதில் விழுந்ததால், அவங்க என்ன செய்யபோறாங்க என்பதனை அவர்கள் அறியாமல் பின் தொடர்ந்து கண்காணிக்க ஆரம்பித்தான்.


அவர்கள் கார் வீட்டிற்கு போகும் வழியில் கதிரை ஒரு லக்சூரியஸ் ஆனா பார் வசதியுல் ஸ்டார் ஹோட்டளிண்  முன்னாள் இறக்கிவிடத்தை கண்டவன் கதிர் பின்னால் போகவா இல்லை அவர்களது காரை பின்தொடரவா என்ற யோசனையில் இருந்த குமாரின் காதில்.


சுலோச்சனாவின் வார்த்தை விழுந்து அவன் கதிரை பின் தொடர ஆரம்பித்தான்.

ஆம் காரில் இருந்து இறக்கிய கதிரை அவனின் அம்மா டேய் கதிர், இந்தா இதை வாயில் போட்டு மென்னுகிட்டே இரு, கொஞ்சம் இன்னைக்கு மட்டும் அளவோட இருந்தாத்தான் அந்த சிம்மன் மட்டையானதும் உன்னால நம்ம வீட்டுக்கு தூக்கிட்டு வர முடியும், சொல்றது புரியுதுல்ல என்று கூறியபடி அவனின் கையில் ரூபா நோட்டுகளை  திணித்தாள்.


அவர்கள் சொல்வதை வைத்தே நடக்கபோவதை  ஓரளவு ஊகித்ததுடன், கதிரின் சந்தேகமான நடவடிக்கை ஒவ்வொன்றையும் அவன் அறியாமல் குமார் தனது மொபைலில் வீடியோவாக  எடுத்து வைத்துகொண்டான்.


சிம்மனின் முன் அமர்ந்து தனது காலுக்கடியில் மறைத்து வைத்திருந்த மது பாட்டிலை  டேக்டீசா மாத்தி வைத்தது முதல் குமார் மறைந்திருந்து  வீடியோவும் எடுதுகொண்டவன். சிம்மனை அவனது காரிலேயே மயக்க கலந்த போதை நிலையில் இழுத்துச்சென்று அமரவைத்து வரை  ரெகார்ட் செய்துகொண்டான்.


அவனின் பின்னே குமார் பின்தொடர்ந்து சென்றான். அவர்களை எதிர்பார்த்து வாசலில் காத்திருந்த ஜெஸிலாவும் அவள் அம்மாவும் அவர்கள் வந்தவுடன் போதையின் மயக்கதிலிருந்த  சிம்மனை வீட்டிற்குள் இழுதுச்செல்லும்பபோது, அவர்களின்   முன்பு வந்து நானும் வரலாமா? என்று கேட்டான் குமார்.


குமார் பேசியதை கேட்ட சுலோச்சனா  கோபத்துடன் யாருப்பா நீ?.இவர் யாருன்னும், என் மகளுக்கும் இவருக்கும் உள்ள பழக்கம் என்னென்னும் உலகத்துக்கே தெரிந்த விஷயம் தானே, உனகெல்லாம் நான் பயப்பட மாட்டேன் கிளம்பு இங்கிருந்து என்று சொல்லியவளிடம்.


குமார் ஹ…ஹ…ஹ…என்று சத்தமாக சிரித்தபடி ஆதாரம் இல்லாம இப்படி உங்க முன்னாடி வருவேனா! என்றவன் தனது மொபைலை இயக்கி காட்டினான்  


பாட்டிலில் சிம்மன் வருவதுக்கு முன் எதோ ஒன்றை கலந்து மறைத்துவைத்து சிம்மனுக்கு அவன் வந்ததும் அதை ஊத்தி கொடுத்து இங்கு தூக்கி அவனை கொண்டு வந்ததுவரை தனது மொபைலில் வீடியோ எடுத்து வைத்ததை காண்பித்தான்.


அதில் அரண்டு விழித்த அவளிடம், பயப்பட வேண்டாம்! உங்க ஐடியா எனக்கு புரியுது. நா செய்யபோற காரியமும் நீங்க செய்ய போகிற விஷயமும் ஒரு வகையில் சம்மந்தம் இருக்கு .


உள்ளபோய் பேசலாமா…?என்று குமார் அவளிடம் இப்பொழுது கேட்டதும் வா என்று தலை அசைவுடன் முன்னே நகர்ந்த சுலோச்சனாவின் உடன் குமாரும் உள்ளே சென்றான்.


அந்த மயக்கத்திற்கும் விழிபிற்கும் உள்ள நூலளவு சுரனையிலேயே சிம்மனுக்கு அது தன்னுடைய வீடு  இல்லை என்ற உணர்வு தாக்கியது.


கதிர் எங்கடா என்னை கூட்டிட்டு வந்திருக்க என்று கேக்க நினைத்தான் ஆனால் அவனின் உள்ளக்கிடங்கை செயல்படுத்த ஆர்டரை உறுப்புகளுக்கு அனுப்பி  ஒருங்கிணைக்க அவன் மூளைக்கு உட்கொண்ட போதை தடையாக இருந்ததால் தெளிவாக அவனால் சொல்ல முடியவில்லை.


அவன் குளறுவதை கண்ட கதிர், “எப்பா இவனுக்கு குடுத்திருக்கிற டிரக்குக்கு வேற ஒருத்தனா இருந்தா இந்நேரம் பிணம் போல கிடப்பான்.


ஆனா இவன் இன்னும் உளறிகிட்டு இருக்கான். இதுக்கு மேல கொடுத்தா கோமாவில் விழுந்து பரலோகம் போயிடுவான் என்றான்.


அவன் சொன்னதை கேட்ட சுலோச்சனா டேய் அப்படி எதுவும் ஆகிடாம, தங்க முட்டையிடுற வாத்தை அறுத்து வயித்த பாத்தா கதையா ஆகிடும். நாமளும் ஜெயிலுக்குள்  போக வேண்டியதாகிடும் என்றாள்.


அப்பொழுது குமார், அப்போ உங்க ஐடியா…?”என்று கேள்வியுடன் ஆராய்ச்சி பார்வையாய் அவர்களின் இல்லத்தை சுற்றியது.


ட்ரிபிள் பெட்ரூம் மெயின் கால் பறந்து விரிந்து ஆடம்பரமாக இருந்தது. அந்த மாஸ்டர் பெட்ரூமின் வாசலில் ஏசி காற்று முகத்தில் மோத கதவை திறந்து வைத்துகொண்டு அவர்களின் செயலை வேடிக்கப் பார்த்தபடி கேட்ட குமாரை நோக்கி.


இப்போ உனக்கு என்ன வேணும் நீ எதுக்கு எங்களை பாலோ பண்ற என்று கேட்டாள் சுலோச்சனா.


அதற்கு அவன் உங்களுக்குத்தேவை இந்த சிம்மன்.

எனக்குத்தேவை உங்க வழியில் இப்போ குறுக்க நிக்கிற மிஸ் ஜெஸிலாவோட கால்சீட்டை தட்டிப்பரிச்ச வாகினி என்றான்.


அவன் அவ்வாறு சொன்னதும் ஜெஸிலா அவனை டக்கென்று திரும்பி நோக்கி “அதுக்கு நீங்க அவ பின்னாடில்ல போயிருக்கணும் என்றாள்.


அவள் அவ்வாறு கேட்டதும் மிஸ் ஜெஸிலா நான் உங்க கூட எதிரிக்கு எதிரி நண்பன்னு கூட்டு சேரலாம்னு தான் நினைக்கிறேன்.


உங்களுக்கு என் உதவி தேவையில்லைன்னா எனகொன்றும் நஷ்டம் இல்லை, என்று கூறியபடி உள்ளே வந்தவன் அங்கிருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தான்.


அவன் அவ்வாறு சொன்னதும் கதிர் அப்படி நாம கூட்டு சேர்ந்தால் எங்களுக்கு என்ன பெனிபிட்..?என்று கேட்டான்.


அவன் அவ்வாறு கேட்டதும் சுலோச்சனாவை பார்த்து, உங்க மகன் பாய்ண்டுக்கு வந்தாச்சு.


என் கிட்ட இன்னைக்கு உங்க மகள் ஜெஸில்லா கண்ணீரும் கம்பலையுமா ஸ்டுடியோவில் நிக்கிறதும்,  அந்த சிம்மனிடம் நீங்க ஆர்கியூ பண்றதும் என் கிட்ட வீடியோவா இருக்கு.


அதில் கொஞ்சம் ஆடியோவை நம்ம இஷ்டத்துக்கு மாத்தி வீடியோவையும் கூடவே இப்போ நீங்க எடுக்கபோற சிம்மனும் ஜெஸிலாவும் நெருக்கமா இருப்பது போல போட்டோசும் பத்திரிகை சோசியல் மீடியாவிலேயும் பரப்பி விடுவது என் பொறுப்பு.


நாளைக்கு விஷயம் தெரிஞ்சு சிம்மன் விசாரிச்சா உங்க பேரு வெளிய வராது.

எனவே மிஸ் ஜெஸிலாவோட  நேம் ஸ்ப்பாயில் ஆகிடுச்சுன்னு நீங்க நெனச்சது போல டிராமா செய்து,  நீங்க நெனச்சதை சாதிச்சுக்கல்லாம்.


அதேபோல அந்த வாகினி மிடில் கிளாஸ் பொண்ணு ரொம்ப ரோசம் மானம் மரியாதைன்னு தூக்கி சுமக்குற ஆள்.


சிம்மனை ஜெஸிலாவிடம் இருந்து தட்டி பறிக்க அவள் நினைக்கிறதாவும் உனக்கெல்லாம் மனசாட்ச்சி இல்லையா என்றும் என் ஆட்களை விட்டு அவளிடம் பேச வைத்தால் அவளுக்கு அவமானமா இருக்கும்.


அழையிரவன்னு சொன்னா…! மிடில் கிளாஸ்கே உள்ள ரோசத்தில் சிம்மனை விட்டு அவளே தள்ளி வருவா, அப்படி வந்துட்டா நான் நெனச்சதை சாதிச்சுகுவேன் என்றான்.


அவன் கூறியது அவர்களுக்கும் ஏற்புடையதாக இருந்ததால் மூவரும் சேர்ந்து மயக்கத்தில் இருக்கும் சிம்மனும் ஜெஸிலாவும் படுக்கையில் நெருக்கமாக இருக்குமாறு போட்டோஸ் எடுத்தனர்.


சிம்மனின் புலன்கள் அவனது கட்டுபாட்டில் இல்லை என்றாலும் அவனுக்கு ஒரு அசவ்கரியமான பீல், அதனை  தன்னை சுற்றி கிரகிக்க முயன்று தோற்று குளறலில் கிடந்தான், கதிர் அவன் குடிக்கும் வொயினில் கலந்த வஸ்துவின் செயலால்.


அன்று மாலையில் வெளிவரும் பத்திரிக்கையிலும் சோசியல் மீடியாக்களிலும் குமார் பரப்பிவிட்ட சற்று இட்டுகட்டிய வசனங்களுடன் ஸ்டுடியோவில் அவன் எடுத்த வீடியோவைத்தான் ரஞ்சிதா அவளது அம்மா தங்கேஸ்வரியிடம் காட்டி சிம்மனுக்கு எதிராக அவளின் தந்தையிடம் பேசி தன் மேல் உள்ள தவறை திசை திருப்ப நினைத்து கிளம்பிகொண்டிருந்தாள்.


அப்பொழுது கபிலன், தங்கேஸ்… தங்கேஸ்… என்று மாலை பேப்பருடன் அங்கு நுழைந்தார்.


அவர் கையில் இருந்த பேப்பரில் சிம்மனும் ஜெஷிலாவும் படுக்கையில் நெருக்கமாக இருப்பதுபோன்ற படம் இருந்தது.


அதே வேளையில் தேஜாவிடம் யாதவ், சிம்மன் பற்றிய விஷயம் காட்டு தீ போல மீடியாக்களில் பரவிக்கொண்டிருப்பதாகவும் உடனே சிம்மன் அதை தடுத்து நிறுத்த ஏதாவது செய்ய சொல்லியும் கூறிக்கொண்டிருந்தான்.

தேஜாவிற்கு தனது அண்ணன் வாழ்க்கை திசை மாறிவிடுமோ என்ற பயம் உண்டானது, ஜெஸிலாவோடு  சிம்மனை இணைத்து கேள்விப்படும் சமயங்களில் எல்லாம் தன் அண்ணனிடம் அவள் வேண்டாம் என்று சொல்ல தோன்றும்


ஆனால் அவ்வாறு தான் கூறினாள் தன் மீது மட்டுமே கொஞ்சம் பாசமும் பிடிப்பும் உள்ள சிம்மன் முற்றிலும் அதையும் துறந்து தனது குடும்பத்திற்கும் அவனுக்கும்  தொடர்பே இல்லாமல் போய்விடுமோ என்ற பயத்திலேயே பேசாமல் இருந்துவிட்டாள்.


ஆனால் அவ்வாறு பேசாமல் இருந்தது தவறோ! என்ற எண்ணம் இப்பொழுது உண்டானது.


மேலும் வாகினியோடு சிம்மனை இணைத்து தவறாக பேசுவதுபோல் கொஞ்சம் மாற்றம் செய்து அப்லோடு செய்யப்பபட்டிருந்த வீடியோவை கண்ட தேஜா முதல் நாளே வாகினிக்கு இப்படி ஒரு நிலையா…?என்ற கேள்வி எழுந்தது.


மேலும் எத்தனையோ நாள் அவர்கள் இருவரும் பழகுவதுபோல் இன்னும் இன்னும் புரளிகள் கமெண்டாக அந்த வீடியோ பதிவின் கமென்ட் செக்சனில் வருவதை கண்டவள் அதனை தொடர்ந்து ஜெஸிலாவோடு சிம்மனின் நெருக்கமான போட்டோச்களை கண்டவளுக்கு அத்தனை அதிர்ச்சியாக இருந்தது.


இனியும் பொறுமையாக இருக்க கூடாது எதுவாக இருந்தாலும் இப்படி மீடியாக்களில் அவனின் தனிப்பட்ட வாழ்க்கை வேறு விதமாக சித்திகரித்து பரவிக்கொண்டிருப்பதை தடுத்து நிறுத்தாமல் சிம்மன் என்ன செய்துகொண்டிருக்கிறான் என்ற கோபத்துடன் அவனுக்கு டயல் செய்தாள்.


ஆனால் அவனின் மொபைல் சுவிட்ச் ஆப் என்றே வந்தது. அவனின் பி.ஏவிற்கு போன் செய்து விசாரித்தபோதுதான் தெரிந்தது இன்னைக்கு ஸ்டுடியோவில் ஜெஸிலா வந்து தகராறு செய்த விஷயம் சற்று திரிக்கப்பட்டு பேசபடுவதை.


மேலும் அதனை தொடர்ந்து சிம்மன் கோபத்துடன் தனித்து காரை எடுத்துக்கொண்டு போனவர்தான் மேம் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை என்று கூறினான்.  

                                                 —-தொடரும்—

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *