சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய-01

சுனையானேன் உன் வெம்மைதணிய[தீபாஸ்-ன்]

                  அத்தியாயம்-06

                             

வாகினியின் அப்பா மூர்த்திக்கு தனது முதலாளி தேவமாறனின் மகளுக்கும் தன்னுடைய மகளுக்கும் உள்ள சிநேகிதத்தை அறிந்தவரே என்றாலும் தன் மகளிடம் தங்கள் இரு குடும்பத்திற்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வையும் எடுத்துகூறி மேலும் சின்னம்மா தேஜா உன் கிட்ட எவ்வளவு உரிமை எடுத்து பழகினாலும் அவங்க உன் அப்பாவுக்கு முதலாளி என்பதை மனசில் வைத்து ஒரு படி தள்ளி நின்றே பழகணும் என்று அடிகடி போதித்திருக்கிறார்.


மேலும் பெரிய வீட்டு முதலாளி பிள்ளைகளுடன் தன் பிள்ளைகளுக்கு சிறு வயதில் உண்டான நட்புக்கு கூட அப்பெரிய வீட்டில் இருந்த சிறியமனம் படைத்தவர்களால் அதை இயல்பாக எடுத்துகொள்ள முடியாமல் ஏழை என்ற காரணத்திற்காக கூறக்கூடாத மொழிகளை திட்டி தங்கள் குழந்தைகளை அவர்களுடன் சேராமல் தள்ளி நிற்க முனைந்தவர்கள் என்பது வடுவாக அவரின் மனதில் பதிந்தே இருந்தது..


இருந்தாலும் சிம்மதேவனின் அப்பாவாகிய தேவமாறனால் பணியமர்த்தப்பட்டு அவர் தன்னை டிரைவராக பார்க்காமல் தன்னை நண்பரைப்போல் நடத்தும் தேவமாறனின் இயல்புக்காக அவரின் விசுவாசமான டிரைவராக மாறிப்போன மூர்த்தியால் அவ்வேலை விட்டும் அதன் மூலம் தனது குடும்பத்திற்கு வரும் வருமானத்தையும் இழக்க மனதில்லாமல் தன் குடும்பத்தை மட்டும் அவர்களின் கண் பார்வையை விட்டு தள்ளி குடியிருக்க வைத்து இன்னும் தேவமாறனின் டிரைவர் மட்டுமில்லாது அவரது வலதுகையாகவும்  பணியாற்றி வருகிறார்.


தேவமாறனோ தன்னுடன் தனது மகளை டிரைவர் மூர்த்தியுடன் ஷாப்பிங் கோவில் என்று வெளியிடத்திற்கு கூப்பிட்டுகொண்டு போகும் போது தேஜாஸ்ரீ மூர்த்தியிடம் இன்னைக்கு வாகினிக்கும் லீவ் தானே அங்கிள்  கூட அவளையும் கூட்டிட்டு போவோம் எனக்கு அவ வந்தா ஜாலியா இருக்கும் என்று முரண்டு செய்து அவள் வெளியில் போகும் போதெல்லாம் கார் எடுக்க வரும் மூர்த்தியிடம் தான் வெளியில் போகும் பொது வாகினியை கூட்டிகொண்டுவருமாறு  அன்பு கட்டளை இடுவாள்.


முதலாளி தேவமாறனின் முன் தேஜாஸ்ரீயின் வார்த்தையை தட்ட முடியாமல் வெளியில் தேஜா போகும் போது வாகினியையும் மூர்த்தி எப்பொழுதும் உடன் கூப்பிட்டுகொண்டு போவது வழக்கமாகியிருந்தது.

ஆனால் தேஜாஸ்ரீ அவளின் திருமண நிச்சயத்தன்று வாகினியை வருமாறு சொல்லும்போதே மூர்த்தி தேஜாவிடம் “தேஜாம்மா வெளியில உங்களுக்கு துணையா வருவது வேற,


ஆனா உங்கள பொண்ணு பார்க்க பெரிய இடத்தில் இருந்து வருவாங்க ”மனதிற்குள் தன மகளும் வயது பெண் சபையில் அவள் கூட நிற்கிறது சரியாக இருக்காது என்று நினைத்து அதனை சொல்லமுடியாமல்” டிரைவரோட பொண்ணு தோழியா உங்க பின்னாடி நிக்கறது நல்லா இருக்காது அதனால் அவ இங்க வரவேண்டாமே என்று சொன்னார்.


அவர் அவ்வாறு சொன்னதும் தேஜாஸ்ரீ, “போங்க அங்கிள் ஏன் டிரைவரோட பொண்ணா வாகினி இருந்தாலும் அவள் தானே என்னோட பெஸ்ட் பிரன்ட் என் பிரண்ட யாராவது ஒரு வார்த்தை நான் குறைவாக பேச விட்டுடுவேனா நீங்க கண்டிப்பா அவளை என் கூட துணைக்கு இருக்க வரச்சொல்றீங்க” என்று கூறிவிட்டாள்.


அவளின் வார்த்தையை தட்ட முடியாமல் கூட்டிக்கொண்டு வந்த மூர்த்திக்கு பெரியவரின் பிடித்தமில்லா பார்வையும் சற்று தள்ளி தான் நிற்கும் போதே வாகினியை வழி மறித்து தங்கேஸ்வரி  ஏய்..? அவதான் அறிவில்லாம சொல்றான்னா உனக்கு எங்க போச்சு புத்தி ஏன்..?கார் அனுப்பி அதில்தான் மகாராணி வருவீங்களோ..? என்று அவளை நிற்க வைத்து தங்கேஸ்வரி கேள்விகேட்டுக் கொண்டிருந்தவள்


தேஜா வருவதைப்பார்த்து அவளை முறைத்துப் பார்த்து ஏதாவது சொன்னே என்று அடிக்குரலில் கூறிவிட்டு வாடிமா பொண்ணு நீ மேல இருக்க அங்க போன்னு சொல்லிட்டு இருந்தேன் நீயே வந்துட்டயா…! என்ற அனைத்தும் கவனித்தும் கனத்தமனதுடன் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்த மூர்த்திக்கு,


தேஜா வாகினியை தனது சித்தியிடம் கூட விட்டுகொடுக்காமல் அழைத்து சென்றது மனதிற்கு இதமாகவும் தேஜாவின் மீது தனது முதலாளி போலவே அவரின் மகளும் அன்புள்ளவளாக இருப்பதால் அவளுக்காக எதையும் செய்யலாம் என்ற எண்ணத்தையும் மேலும் அழுத்தமாக மூர்த்தியின் மனதில் பதித்தது.


டிரைவர் என்ற முறையில் தேஜாஸ்ரீயின் நிச்சய விழாவில் ஒதுங்கி நின்று கொண்டிருந்த மூர்த்திக்கு தனது கண் முழுவதும் தேஜாவினுடன் இருந்த மகளின் மீதே இருந்தது


எனவே அவருக்கு விமலின் வாகினியின் மீதான ஆர்வமான பார்வையும் அவளுடன் அனாவசியமாக பேசமுயல்வத்தையும் கண்டு பயம் எழுந்தது.


அதேநேரம் சிம்மன் இடையிடையே விமலின் ஆர்வமான தனது மகளின் மீதான பார்வையினை கண்டு கொண்டு விமலை ஒன்ன்றும் சொல்லாமல் தன மகள் வாகினியை கோபமாக பார்ப்பது போன்று அவருக்கு பட்டது.


ஆனால் தன மகள் விமலை தவிர்க்கவும் ஒதுங்கவுமே பார்ப்பதை கண்டுகொண்ட மூர்த்தி,. என் மக மேல தப்பு இல்ல, ஆனா பெரிய இடத்தில் அந்த நியாயம் எடுபடாதே என்ற எண்ணமும் அவருக்கு கலக்கத்தை கொடுத்தது.


இனி தேஜாம்மா கல்யாண ஏற்பாட்டுக்கு எதுவும் வாகினியை கூப்பிட்டா ஏதாவரது சாக்கு சொல்லி வாகினியை அனுப்பக்கூடாது  என்று நினைத்துகொண்டார்.


மேலும் ஏனோ சிம்மனின் பார்வை தன் மகளை கோபமாக பதிவதாக நினைத்தவர், எதுக்கு வம்பு, வாகினி இனி பெரிய வீட்டு படியை மிதிக்காமல் வைத்துகொள்வோம் என்றே முடிவெடுத்தார்.


சிம்மன் மனதில் வாகினியை மாடலாக போடவேண்டும் என்று எண்ணம் உதித்த வேலையில் கணினியில் திரும்பத்திரும்ப ஓடிக்கொண்டிருந்த ஜெஸிலாவை வைத்து எடுத்த அந்த வீடியோ ஓடிக்கொண்டிருக்கையில் அண்ணா என்ற சத்தத்துடன் அவனின் கேபினை திறந்துகொண்டு உள்ளே நுழைந்தால் தேஜாஸ்ரீ.


அட குட்டி பூசணி அதுக்குள்ளே வந்துட்ட என்று நேரத்தை பார்த்தான். அது சரியாக மதியம் 12.35எனக் காட்டியது .


என்னது இதுவே லேட்டு அவர் ஹோட்டலுக்கு கிளம்பிட்டாராம் வா..வா…போலாம் போலாம் என்று பரபரத்தவள் கணினியில் ஓடிக்கொண்டிருந்த ஜெஸிலாவின் வீடியோவை கண்டவளுக்கு மனதிற்குள் திகுதிகுவென எரிந்தது.,


அச்சோ இவ எனக்கு அண்ணியா வந்துட கூடாதுன்னு அம்மா கவலை பட்டுகிட்டு இருக்காங்க. அண்ணன் என்னடான்னா அவ நடிச்சுகிட்டு இருக்கிற வீடியோவை போய் தனியா உட்கார்ந்து பார்த்துட்டி இருக்கானே என்று யோசனையுடன் அதை பார்த்தாள்.


தனது தங்கை யோசனையுடன் அதை பார்ப்பதை கண்ட சிம்மன், தேஜா  இன்னும் ஒன் வீக்கில் இன்டடியூஸ் ஆகபோகிற நம் மில்லின் நியூ முகூர்த்த பட்டு புடவை மாங்கல்யா கலெக்சனை மார்கெட்டில்  இன்ரடியூஸ் செய்ய எடுக்கப்பட்ட அட்வர்டைசிங் வீடியோ இது.


நான் சில பைலில் சைன் செய்யணும், அதுக்குள்ள நீ இதை பார்த்து நல்லா இருக்கா இந்த விளம்பரம் என்று பாரு.

இல்ல  ஏதாவது மாற்றம்  பண்ணனும  என்று தோணினாலும் சொல்லு என்றபடி அவளுடன் ஹோட்டலில் யாதவ் கொடுக்கும் பார்டிக்கு இருவரும் போக வேண்டும் என்பதற்காக கிளம்பும் முன் சில பைகளின் தேவையான கையெழுத்தை போட்டுகொண்டிருந்தான்.


இரண்டு கையெழுத்துத்தான் போட்டிருப்பான் பட்டென்று ம..கூம் நல்லாவே இல்லை என்ற வார்த்தை தேஜாஸ்ரீயின் வாயிலிருந்து உதிர்ந்ததும் டக்கென்று அவளை நிமிர்ந்து பார்த்து


எது நல்லாயில்ல தேஜா…! என்று கூர்மையுடன் அவளை பார்த்தபடி கேட்டான் சிம்மன்.


தனது அண்ணனின் இப்பார்வை அவளை ஒரு நிமிடம் ஆழமாய் தாக்கியது. இருந்தாலும் வரவழைத்துக்கொண்ட தைரியத்துடன் சேலை சூப்பரா இருக்கு. ஆனா… கல்யாணப்பொண்ணா வருற இந்த ஆக்டர் உடுத்தியிருகிறது டிரெடீஸ்னல் புடவைக்கு எத்ததுபோல் அவங்க ஆட்டிடியூட் இல்லை.


இந்த அட்வர்டைஸ்மென்டுக்கு இந்த ஆக்டர் சூட் ஆகல, ஆம் கல்யாணப் பெண்களுக்கே உள்ள கண்ணின் படபடப்பும் பூரிப்பும் நளினமும் இந்த ஆக்டரிடம்  இல்லை.

இவங்களோட கிரக்கமான பார்வையும் அசால்டான உடல் மொழியும் முகூர்த்தபுடவையை காட்டியிருந்த பாங்கும் எனக்கு பிடிக்கவில்லைண்ணா என்று பட்டென்று கூறிவிட்டாள் தேஜா .


அவள் அவ்வாறு கூறியதும் ஆழ்ந்த குரலில் அப்போ இந்த விளம்பரத்துக்கு யார் பொருத்தமா இருப்பாங்க என்று நீ நினைக்கிற என கேட்டான் .


யாரச்சொல்லாம் என வாய்விட்டே சொல்லியபடி யோசித்த தங்கையிடம் சிம்மன் கூறினான், புதுசா யாரையாவது இதில நடிக்க வைப்போமா தேஜா என்று கேட்டான்.


ம்…சூப்பர்ணா அப்படியே செய்யலாம் என்று தான் இந்த விளம்பரம் பிடிக்கவில்லை என்று சொன்னதும் தன் அண்ணன் சரி என்று கூறி வேறு மாற்ற முயல்கிறானே என்ற சந்தோசத்தில் மகிழ்ச்சியுடன் கூறியவளை பார்த்து,.


அப்போ “வாகினியை இதில் மாடலா நடிக்க வைக்கலாமா” என்று கேட்டான் சிம்மன்.


என்னண்ணே சொன்னே…! யாரை சொன்ன வாகினி வாகினியையா…! மாடலா நடிக்க வைக்கலாம் என்கிற.. ஆனா அவ ஒத்துக்குவாளோ என்னவோ! ஏனென்றாள் என்று விளக்கம் சொல்லபோனவளை,


“ஏய்! குட்டி பூசணி அவள் நல்லா இருப்பாளா இல்லையான்னு மட்டும் சொல்லு மத்ததெல்லாம் நான் பார்த்துப்பேன்” என்றான் சிம்மன்.


ஒரு நிமிடம் கணினி திரையை பார்த்தவள் வாகினிக்கே நெய்த மாதிரி இருக்கு இந்த புடவை ஆனா…என்று மேற்கொண்டு பேசப்போனவளை ஒரு நிமிஷம் தேஜா என்று  பேசவிடாமல் செய்தவன் தனது மொபைலில் யாதவை அழைத்தான்.


அட்டன் செய்யத யாதவிடம் ஒரு அரைமணிநேரம் நாங்க வர லேட் ஆகும். வெயிட் பண்ண முடியுமா இல்ல இப்போவே வரவா என்று கேட்டான் சிம்மன்.


அதற்கு யாதவ் சொல்லிய பதிலில் சிரித்தபடி ரொம்ப நேரம் ஆகாது. சொன்ன நேரத்தோட அரைமணி நேரம் தான் லேட் ஆகும் என்று கூறியவன்.போனை அனைத்து வைத்துகொண்டே வாகினி அப்பா மூர்த்தி தானே உனக்கு டிரைவரா வந்திருக்கிறார் என்று கேட்டான்.


“ம்…ஆமாண்ணே” என்றவளிடம் அவரை உள்ள வரச்சொல்லு என்று கூறியவனின் தோரணையே வேறு எதுவும் என்னிடம் இப்போ பேசாதே சொன்னதைச் செய் என்பதுபோன்ற கட்டளையாக இருந்ததால் அதை மீர முடியாமல் டிரைவர் அங்கிள் கொஞ்சம் உள்ள வாங்க அண்ணா கூப்பிடுகிறார் என்று கூறிவிட்டு மொபைலை வைத்தாள் தேஜா.


தன்னை எதுக்கு உள்ளே கூப்பிடுறாங்க..! ஏதாவது காரில் வைக்க லக்கேஜ் இருக்குபோல அதை தரத்தான் கூப்பிடுகிறார்களோ என்று நினைத்துதான் உள்ளே வந்தார் மூர்த்தி .


மூர்த்தி கதவை திறந்ததும் சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்த சிம்மன் எழுந்து வந்து வாங்க மூர்த்தி எப்படி இருக்கீங்க என்று கேட்டபடி டேபிளில் அமர்ந்து பேலன்சுக்கு ஒரு காலை யூன்றி மற்றோருகாலை ஆட்டியபடி கையில் பேப்பர் வெயிட்டரை உருட்டிக்கொண்டே சிம்மன் கேட்டான்.


டேபிளில் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த தேஜாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு நீண்ட வருடங்களுக்குப்பின் தனது முதலாளியின் மகனுடன் பேசுகின்ற எக்சைடிங்கில் அவனின் தற்போதைய தோற்றம் மற்றும் ஆளுமையை அறிந்ததால் உண்டான பெளயத்துடன் நல்லா இருகிறேன் சின்னவரே எதுவும் லக்கேஜ் எடுத்துட்டுபோய் காரில் வைக்கவா என்று கேட்டார்.


அதெல்லாம் இல்ல மூர்த்தி உங்க பையன் பாலாஜி என்ன படிக்கிறான்..? எங்க படிக்கிறான்..? அப்பறம் உங்க பொண்ணு  வாகினி இப்போ என்ன பண்றா..? பாட்டு டீச்சர் நல்லா இருக்காங்களா…? என்று கேள்விகேட்டான்.


மனதிற்குள் எதுக்கு கேக்குறார் என்ற படபடப்பு எழுந்தாலும், தன் மகன் படிக்கும் கல்லூரியின் பெயரையும் இந்த ஆண்டோடு படிப்பு முடியுது என்ற கூடுதல் தகவல்களையும் சொன்னதுமே,


அங்க படிக்க வைக்கிறீங்கன்னா நிறைய செலவு ஆகுமே மூர்த்தி! எப்படி சமாளிச்சீங்க என்று கேட்டதும், அது கொஞ்சம் கடன் வாங்கித்தான் சின்னவரே படிக்க வைக்கிறேன். படிச்சு ஒரு வேலைக்கு போயிட்டா  சமாளிச்சுடலாம் என்றார்.


நீங்க என்ன செய்றீங்க இந்த வருஷம் படிப்பு முடிஞ்சதும் என் கிட்டேயே அவனை வேலைக்கு வரச்சொல்லிடுங்க. அவனோட படிப்புக்கு வாங்குன கடனை நான் செட்டில் பன்ணிடுறேன் என்று அவன் கூறியதும்  மலர்ந்தது மூர்த்தியின் முகம் ஏனெனில் .கடன் பட்டவர்களுக்கே அதில் இருந்து மீளும் வழி தென்பட்டால் உண்டாகும் மலர்ச்சியது


ரொம்ப சந்தோசம் சின்னவரே என்ற அவரின் வார்த்தையை காதில் வாங்காமல் தொடர்ந்து சிம்மன் பேசினான்,  உங்க பொண்ண அன்னைக்கு ஸ்டுடியோவில் பார்த்தேன் என்று அவன் கூறியதும் மூர்த்தியின் மனதில் ஒரு நெருடல் டக்கென்று வந்து போனது பெண்களை பெற்ற தகப்பன்களுக்கு இருக்கும் ஒரு முன்னெச்செரிக்கை அது.


என்னதான் தன முதலாளியின் மகன் என்றாலும் கல்யாணம இன்னும் செய்யாமல் இருக்கும் ஒரு வாலிபன் தன் மகளை பற்றி கேட்டதும் தவறுதலாக எதுவும் அவன் புரிந்துகொள்ளகூடாதே என்ற அவசரத்தில்,


ஆமா..ம் சின்னவரே பாட்டு குரூப்பில் கோரஸ்க்கு கூப்பிட்டிருப்பாங்க அவளுக்கு பாட்டு படிக்கிறது என்றால் ரொம்ப இஷ்டம். அதனால நானும் போயிட்டுவா என்று சொல்லிடுவேன் என்று கூறினார்.


அவர் கூறியதை கேட்டவன் அதற்கு எதுவும் பதில் கூறாமல் மேலும் தொடர்ந்து பேசினான் “என் மில்லில் தயாரிச்சு மூகூர்த்த புடவைக்கு உங்க மகளை மாடலா போட முடிவெடுத்துருக்கேன் மூர்த்தி . நாளைக்கு அவளை அந்த பிலிம் ஸ்டூடியோ போய் மேனேஜரை பார்க்க சொல்லுங்க. நான் உங்க பொண்ணு அங்க வருவதை போன் செய்து சொல்லிடுவேன் என்று கூறினான்.


மூர்த்தி அவன் சொன்னதை கேட்டு தயக்கத்துடன் அது…வந்து…சின்னவரே அவ பாட்டுதான் படிப்பா. நீங்க சொல்றமாதிரி மாடலா எல்லாம் நடிக்க அவங்க அம்மாவுக்கும் எனக்கும் அனுப்பும் எண்ணம் இல்லைங்க என்று பயந்தபடி மறுத்து சொல்வதால் அவனுக்கு  கோபம் வந்துவிடுமோ என்று தயங்கியபடி கூறினார்.


அவர் அவ்வாறு கூறியதும் சிம்மன் கூறினான், அப்போ உங்க முதலாளி  மகன் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்ல அப்படிதானே, உங்க மகளை என்னை நம்பி விடமாட்டீங்க..!


என் அப்பாவின் விசுவாசி அவருக்காக எதையும் செய்வீங்க நீங்க. அவரது வலது கை மூர்த்தின்னு சொல்றதெல்லாம் சும்மாதானோ? என்று யாரிடம் எப்படி பேசினால் தனக்கு ஏத்த பதிலை அவங்க வாயில் இருந்து வர வைக்க முடியும் என்ற தேர்ந்த பிஸ்னஸ்மேனாக வார்த்தையிலேயே காய் நகர்த்தினான் அவரிடம்.


அவன் அவ்வாறு சொன்னதும் என்ன சின்னவரே இப்படி சொல்லிட்டீங்க அய்யா என்னை வெறும் டிரைவரா மட்டுமா  நடத்துறாரு… அவர்கிட்ட நான்  வேலை பார்க்கிறது வெறும் சம்பளத்துக்காக இல்ல. அவர் என் மேல காண்பிக்கிற பாசத்துக்கு விசுவாசமா வேலை பார்கிறேன்.


அவரோட புள்ள நீங்க. இப்போ என்ன…! நம்ம மில்லில நெய்த சேலையை வாங்கச்சொல்லி என் மகள் பேசணும் அவ்வளவுதானே உங்கள நம்பாம யார நம்பப்போறேன் நாளைக்கு  வாகினிய நீங்க சொல்ற ஸ்டியோவில போய் நீங்க அனுப்புனதா சொல்லச்சொல்றேன் என்று கூறியே விட்டார்.


அவர் அவ்வாறு கூறியதும் மனதிற்குள் வாகினியை வாடி..வா..! கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாலும் நடிக்க மாட்டேனா சொன்ன. இதோ உன் அப்பாவே உன்னை நாளைக்கு என் கிட்ட மாடலா நடிக்க அனுப்புவார் என்று கூறிகொண்டவன்  வேகமாக தனது செக் புக் எடுத்து அதில் ஒரு லட்சத்திற்கு செக் எழுதி இந்தாங்க மூர்த்தி இதை அட்வான்சா வச்சுகோங்க.


அக்ரீமன்ட் நாளைக்கு உங்கள் மகள் சைன் பண்ணும் போது மத்ததெல்லாம் டிசைட் செய்துக்கிடலாம் என்று கூறினான்.


வீட்டிற்கு போனதும் அவள் மகள் மாட்டேன் என்று கூறிவிட்டால் தன்னிடம் வந்து மறுப்பு சொல்லாமலிருக்க கை நீட்டி காசுவாங்கியாச்சு. இந்த ஒருதடவை மட்டும் நம்ம முதலாளிக்காக நடித்து கொடுத்திடு என்று அவரே தனது மகளை கன்வீனியன்ஸ் செய்து அனுப்பிவிடுவார் என்பதை மனதில் கொண்டு அவரிடம் அச்செக்கை நீட்டினான்.


இங்கு இவ்வாறு நடந்து கொண்டிருக்க அவள் வேலை பார்க்கும் எக்ஸ்போர்ட் கம்பெனியில் கம்ப்யூடர் அக்கவுண்ட்ஸ் செக்சனில் பனிரெண்டாயிரம் ரூபாய்க்கு சம்பளத்தில் வேலை பார்க்கும் வாகினியும் அவளுடன் வேலை பார்க்கும் நிஷாவும் மதிய உணவாக கொண்டுவந்திருந்த டிபன் பாக்சை அந்த கம்பெனி காம்பவுண்டுக்குள் இருக்கும் அப்பெரிய வேப்பமரத்தின் கீழே போடபட்டிருக்கும் கல் பெஞ்சில் எப்பொழுதும் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு அருகில் இருந்த அந்த எக்ஸ்போர்ட் கேண்டியனில் முன்னாள் இருந்த கைகழுவும் தொட்டியில் பேசிக்கொண்டே கைகழுவிகொண்டிருந்தவர்களின் காதில் ஹாய் வாகினி என்ற விமலின் சத்தத்தில் திரும்பிப் பார்த்தார்கள் இருவரும்.


விமலை பார்த்த வாகினி அவன் சொன்ன ஹாய்க்கு பதில் சொல்லவா வேண்டாமா என்ற பதட்டத்திலேயே அதிர்ந்துபோய் விழித்து பார்த்துகொண்டிருக்க அவளின் உடன் இருந்த நிஷா யாரு வாகினி இது ஹலோ சார் என்ன வேணும் உங்களுக்கு? ஒரு பொண்ணு மூக்கும் முழியுமா இருந்தா உடனே பேரத்தெரிஞ்சுகிட்டு பேசவந்துடுவீங்களே….! என்று வாகினியின் அதிர்ந்த தோற்றத்தை கண்டு அவளை காப்பாற்ற களம் இறங்கினாள் நிஷா.

                  —-தொடரும்—–


Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *