சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று
பூத்த நெருஞ்சியே

அத்தியாயம்
– 16

 

என்னவோ ஏதோவென்று அடித்துப் பிடித்துக் காரில் வந்து
வீடு சேர்ந்தவன் கண்டது வீட்டு வாசலில் நிற்கும் காரை தான் ‘இது சாலா அக்கா கார் ஆச்சே
அவுகளும் வந்து இருக்காங்களா? ஐயோ! என்ன ஆச்சுன்னு தெரியலையே வெளி ஊரில் இருந்து தனது
தமக்கையே வந்திருக்கிறாள் என்றால் பெரிய பிரச்சனை போலும்’ என்று எண்ணியவன் திக் திக்
மனதுடன் உள்ளே செல்ல

 

முதலில் தனது மனையாளை தான் பார்த்தான் முறைப்புடன்
அமர்ந்திருந்தாள் அவள் எதிரில் அவன்.அந்த அவன் தான் அவளுடைய நண்பன் பக்கத்து வீட்டு
பொடிசு அதுவும் அவளை முறைத்துக் கொண்டு நின்றது பொடிசு பக்கத்தில் அவனது தாய் கையைப்
பிசைந்த வாரே நிற்க செல்வி பக்கத்தில் நாகப்பன் அமர்ந்திருந்தார்.

 

சாலா,மீனாட்சி மற்றும் அழகப்பனிடம் சென்ற லெச்சு
“எப்போக்கா வந்தீக” என்க மூவரும் சொல்லி வைத்தது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டனர்.அவர்கள்
செய்கையில் என்னவென்று புரியாமல் தாயிடம் சென்று “என்னம்மா” என்க

 

“என்னத்த தம்பி சொல்ல” என்றவர் நடந்த நிகழ்வை சுருக்கமாகச்
சொன்னார். ஆகா இரு வேறு சர்ச்சைகளா லெச்சுக்கு கண்ணைக் கட்டி கொண்டு வந்தது பாவம்.காலம்
கடந்து திருமணம் செய்து நொந்தே போனான் அந்த அப்பாவி.முதலில் தனது மனைவியின் பஞ்சாயத்தை
முடிப்போம் என்று எண்ணியவன்.

 

“செல்வியிடம் நெருங்கி என்ன ஆச்சு” என்று கேட்க அவளிடம்
பதில் இல்லை என்றவுடன் தனது தந்தையைப் பாவமாகப் பார்த்தவன் “ஐயா என்ன ஆச்சு” என்க

 

“நானும் கேட்டு பார்த்துட்டேனுக சொல்ல மாட்டேங்கராக
அந்த பொடியானும் வாய் திறக்க மாட்டேங்கறாக என்ன செய்ய நீங்களே கேளுக பதில் வருதான்னு
பார்ப்போம்”
சொல்லியவர் கன்னத்தில் கை வைத்து வேடிக்கை பார்க்க
ஆரம்பித்து விட்டார் அவருக்குச் சுவாரசியமாக இருந்தது பேத்தியின் குறும்பு இன்று என்ன
சேட்டை என்பதை அறிந்து கொள்ள அத்தனை ஆர்வம் அவருக்கு.

 

தனது தந்தை சொன்ன பதிலில் கோபம் பொங்க அந்தச் சிறுவனைப்
பார்த்து “டேய் அரைக்காப்படி என்னடா சண்டை”

 

“மாமா என்னுட்டு நகையை அடவுள வச்சு முனி தாத்தா தோப்புல
மாங்காய் வாங்கிக் கொடுத்தேன் மாசம் நாலு ஆச்சு இன்னும் நகையைத் திருப்பி தரல இன்னக்கி
அம்மா குளிக்க வைக்கும் பொதுக் கேட்டுச்சு சொன்னேன் ஒரே அடி அதேன் திருப்பிக் கொடுக்கச்
சொன்னேன் அதுக்குச் சண்டை கட்டுது” என்ற அந்தப் பொடியனின் பேச்சில் பேய் முழி முழித்தான்
லெச்சு சத்தியமாக இதனை எதிர் பார்க்கவில்லை போலும்.

 

ஒன்றுக்கு மூன்று பங்கு பணம் கொடுத்து ஒரே நாளில்
ஓடி வந்து நின்றால் இங்கு நடப்பது என்ன பாவி பாவி என்று பல்லை கடித்தவன் பொறுமையா இழுத்துப்
பிடித்துக் கொண்டு “ஏண்டி லங்கினி என் உயிரை வாங்குற என்னடி சொன்ன போன் பேசும் பொது”

 

“என்ன எதுக்குத் திட்டுறீங்க எதா இருந்தாலும் அவனைக்
கேளுங்க எப்படி பேசுறான் பாருங்க .ஒரு தோழிக்கு மாங்காய் வாங்கிக் கொடுத்தத சொல்லி
காட்டி மானபங்கம் பண்ணுறான் இனி உனக்கும் எனக்கும் பேச்சே இல்ல”

 

அவளது பேச்சில் கோபம் கொண்ட பொடிசும் “உனக்கும் அதே
தான் இனி நானும் பேச மாட்டேன் என் நகையைக் கொடு” என்று நிற்க அனைவருக்கும் ஆர்வம் அது
என்ன நகை என்பதில்…….இருவரும் மல்லுக்கு நிற்பதை பார்த்து கோபம் கொண்ட லெச்சு


அடேய்! நீயாவது சொல்லி தொலைடா அப்படி என்ன வச்சு
காசு கொடுத்த

 

ஐயா நான் சொல்லேரனுக என்ற தனம் (பொடியனின் தாய்)
இந்தக் கலவரத்தின் வரலாற்றைத் தொடங்கினார் “சின்ன ஐயா பாப்பா தம்பி அருணா கவுத்துல
இருந்த நா காசு, தம்பி தோளான், குஞ்சு மணி அம்புட்டும் புடிங்கி அடவுள வச்சுதேன் மாங்காய்
வாங்கி தின்னு இருக்குதுங்க” என்றவர் மகனின் தலையை தட்ட

 

“இன்னக்கி மேலுக்குக் குளிக்க வைக்கறப்போ தான் பார்த்தேன்
எங்கடானு காணோம்னு கேட்டா பாப்பாவ சொல்லுறானுக” என்றவர் என்ன பேசுவது என்று தெரியாமல்
அத்தோடு நிறுத்தி கொண்டார் அந்த ஊரில் மரியாதையான குடும்பம் வேறு வேறு என்ன சொல்வது.

 

சண்டையின் ஆணி வேரை அறிந்த நமது லெச்சு தான் நிலை
குலைந்து போனான் இவள என்ன செய்யுறது என்ற நிலையில் அவன் முறைத்துக் கொண்டு இருக்கக்
குடும்ப மக்கள் அனைவரும் சிரிப்பை அடங்கிக் கொண்டு இருந்தனர் நாகப்பனால அது முடியவில்லை
போலும் வெடித்துச் சிரித்து விட்டார் அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் சிரிக்க லெச்சுவின்
நிலை சொல்லவா வேண்டும்.


“ஹா….ஹா…. 
அம்மாடி முடியல உங்க அப்பாரு கிட்ட இல்லாத பணமா தாயி ஏன் அவுக வீட்டு குஞ்சி
மணிய வித்தீக”


சிரிப்புடன் நாகப்பன் கேட்க மொத்த குடும்பம் இவர்களைத்
தான் வேடிக்கை பார்த்தது.வள்ளிக்கு தந்தையின் கனிவு அதுவும் தனது மக்களிடம் என்ற பொது
அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.வீரானுக்கு மகள் பேசாதது கவலையாக இருந்தாலும் மாமனாரின்
ஒட்டுதல் அவருக்கும் மகிழ்ச்சியே…..

 

தாத்தாவின் கேள்விக்கு “முனி தாத்தா மாங்காய் செம
ருசியா இருக்கும் தாத்தா காசு கொடுக்காம தர மாட்டாரு அப்பாகிட்ட கேட்டா வள்ளி கிட்ட
கேளுன்னு சொல்லுவாரு அதான்” என்றவளை என்னதான் செய்வது.

 

மேலும் குலுங்கி சிரித்தவர் தனது தவப் புதல்வனை நோக்கி
“நீக நாட்டாமை பண்ணி இந்த வம்புக்குத் தீர்ப்பு சொல்லுக என்ன என்றவர் எண்ணி எண்ணி சிரித்தவரே
“விசா சாப்பாடு எடுத்து வைக பிள்ளைக பசியோடு இருப்பாக என்றவர் மீனா அழகு அம்மாவ கூட்டிட்டு
சாப்புட வாகச் சாப்பிட்டதேன் தெம்பு வரும் அப்புறம் உங்க சங்கத்தீய கேட்போம் என்ன”
என்றவர் செல்ல

 

அவரது சொல்ல படி அனைத்து மக்களும் சென்றனர் எஞ்சி
முறைத்து நிற்கும் பொடியனின் அம்மாவிடம் இரண்டு ஐநூறு தாள்களைக் கொடுத்தவன் “இதை வச்சுத்
திருப்பிக் கொங்க” என்க


சரிங்க ஐயா என்று தனது மகனது முதுகில் இரண்டு அடி
வைத்து மெல்லிய குரலில் இனி அந்த ராட்சசி கூடக் கூட்டு சேர் அப்புறம் இருக்கு உனக்கு
கடிந்தவரே அழைத்துச் சென்றார்.அவரது மெல்லிய பேச்சு லெச்சுவை எட்ட அத்தனை நேரம் இருந்த
எரிச்சல் மட்டுப்படச் சிரித்தவரே தனது மனையாளிடம் திரும்பியவன்.

 

அவளிடம் மண்டியிட்டு அமர்ந்து “என்னடி லங்கினி புதுசு
புதுசா தினுசு தினுசா வம்பு இழுத்து வைக்கிற நான் வந்த பிளைட் டிக்கெட் ஏவுளோ தெரியுமாடி”

 

“அதெல்லாம் எனக்குத் தேவையில்ல எனக்கு முனி தாத்தா
தோட்டத்து மாங்காய் வேணும்”

 

“மாங்காய் தானே வாடி வண்டி வண்டிய வாங்கித் தரேன்”
என்றவன் அவளைக் கைகளில் அள்ளி தங்களது அறைக்குப் போங்க ஏனோ பெணின் கண்ணில் கண்ணீர்
அவளது கண்ணீர் அவனைக் கலவர படுத்த என்னடி …

 

“……………”

 

“ப்ச் செல்வி”

 

“………”

 

“பேச போறியா என்ன”அவனது அதட்டலில் அவனை நிமிர்ந்து
பார்த்தவளை வாஞ்சையாக அழைத்தான் “என்னம்மா”

 

“உங்களுக்குப் பொம்பள புள்ள சகவாசம் இருக்காமே தாத்தா
சொன்னாரு


என்னது!……………………. பொம்பள புள்ள சகவாசமா
ஐயா வா சொன்னாரு” என்று தனது நெஞ்சில் கையை வைத்தவன்.

 

“எங்க ஐயா நலத்தாண்டி இருந்தாரு என்னைக்கி உன்கூடக்
கூட்டு சேர்ந்தாரா அன்னைக்கே மனுஷன் பேச்சு

ம் நடத்தையும் சரியில்லை”

 

“எதுக்குத் தாத்தாவை திட்டுறீங்க அவர் ரொம்ப நல்லவர்”

 

“ஆமா! ஆமா! ரொம்ப நால்வர் நான் தான் கெட்டவன் இருந்துட்டு
போரேண்டி” என்றவன் அவளை வேகமாகச் சுற்றி வளைக்க முதலில் தடுமாறியவள் பின்பு தெளிந்து
“மாமா தள்ளி போ”

 

“முடியாதுடி”

 

“போய்க் குளிச்சுட்டு வா மாமா”

 

“முடியாது” என்றவன் சற்று வன்மையாக அவளது இதழ்களைக்
கொய்ய வார்த்தைகளற்ற கூடல் சண்டை அங்கே.சில இடங்களில் வல்லினம் மிக மெல்லினம் பேச்சற்றுப்
போனது அங்கு அந்த அளவிற்கு உயிர் வதை தந்தான் லெச்சு.சற்றுப் பொறுத்த பெண்மை வலி தாங்காமல்
அரற்றி எடுக்க அதனைக் கண்டு கொள்ளாமல் தனது லங்கினியை பதம் பார்த்தான் லெச்சு.

 

கூடல் முடிந்த களைப்பில் தன்னை விட்டு விலகியவனைப்
போலியாக முறைத்தவள் “யோவ் பெருசு கொஞ்சமாவது உனக்குக் கூறு இருக்கா”

 

“உன் பார்த்ததுல இருந்து இல்லாம போச்சுடி லங்கினி”

 

“பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை”

 

“என் பேச்சுக்கு குறைச்சல் இல்லத்தாண்டி” என்றவன்
சற்று நெருங்கி சற்று முன் அவன் பார்த்த அந்தரங்க இடங்களிலில் உள்ள சந்தேகத்தைக் கேட்க
அவனது பேச்சை தாங்கதவள் வேகமாக அவனைத் தள்ளி விட்டு எழுந்து சென்றாள்.சிரிப்புடன் அவளைப்
பிடிக்க வந்தவனை முறைத்து விட்டு அவன் கைக்கு அகப்படாமல் தொலைவில் நின்று கொண்டு.

 

“மாமா பார்க்க முத்தி போய் இருக்கியே எதுவும் முடியாதோனு
நெனச்சேன் பரவாயில்ல எல்லாம் நல்ல வேலை செய்யுது” என்று நக்கல் அடிக்க அவள் சொல்வதின்
பொருள் உணர்ந்தவன் அவளை அடிக்கப் பாயத் துள்ளி கொண்டு ஓடி விட்டால் செல்வி

 

******************************************

அதன்பின் இருவரும் குளித்து முடித்து உணவுக்கு வருகையில்
மீனாட்சி மற்றும் அழகப்பன் அமர்ந்திருக்க அவருக்கு எதிரில் அமர்ந்தவனுக்குச் சாலா பரிமாறவில்லை
தனது கையில் இருந்த உணவை தனது தாயின் கையில் திணித்து விட்டு தள்ளி நின்றார் அவரது
செயலில் புருவங்கள் இடுங்க என்ன அம்மா என்பது விசாலாட்சியைப் பார்க்க அவரோ கண்களால்
எதிர் அமர்ந்திருக்கும் பேத்தி மற்றும் பேரனை ஜாடை காட்டினார்.

என்ன செய்வது என்று தெரியாமல் அல்லாடியவனை பார்த்தவாறே
ஓர் நக்கல் சிரிப்புடன் ரசித்து உண்டாள் குணசெல்வி……………

 

அவளைப் பார்த்த லெச்சுக்கு தான் ஏக கடுப்பு வாய்
அசைவில் இருடி உனக்கு இருக்கு என்க

 

அவனது வாய் அசைவை படித்தவள் சாலாவிடம் திரும்பி பெரியம்மா
மாமாக்கு உங்கள விட அம்மா வா தான் புடிக்குமாமே இப்ப கூடச் சொன்னாரு ஏன் பெரியம்மா
மாமா வா சின்ன வயசுல அடிப்பீங்களா இமை தட்டி சிறு பிள்ளையைக் கேட்க……………..

 

லெச்சுவின் நிலை

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *