சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று
பூத்த நெருஞ்சியே

அத்தியாயம்
– 15

 

லெட்சுமணன் கெஞ்ச அவனது லங்கினி மிஞ்ச அவளைச் சமாளிக்க
முடியாமல் “இப்போ என்னதாண்டி சொல்ல வர”

 

“நான் ஒன்னும் சொல்லல சாமி அது எப்படி…. எப்படி….
மாமனுக்கு மச்சான் வருஞ்சுகட்டிக்கிட்டு வரது என்ன…… மச்சான் மாமனுக்கு வருஞ்சுகிட்டு
வரது என்ன….. தாங்க முடியல சாமி அப்படியே உருகி கரைரீங்க,

 

அது மட்டுமே நான் எங்க அக்கா வள்ளிக்கு செஞ்சேன்
சரி ஒதுக்குறேன் உங்க பாசமலர் சாவித்திரிய பிரியா முடியாம நீங்க தவிச்சதும் சரிதான்
உங்க சைடு நீங்க செஞ்சது நியாயம்”

 

“அந்தப் பண்ணையாருக்கு அவர் லைலா தான் முக்கியம்”

“அது யாருடி லைலா”

 

“வேற யாரு உங்க அக்கா தான் பண்ணையார் மஜுன்னு உங்க
அக்கா லைலா அவர் காதலி சந்தோஷத்துக்காக என்ன வேணாலும் செய்வார்.ஆக திரு.லெட்சுமணனுக்கும்
வள்ளி முக்கியம் திரு.
வீரானுக்கும் வள்ளி முக்கியம் அப்போ
நான் யாருக்கு முக்கியம்?என்ன எதுக்குக் கல்யாணம் பண்ணீங்க?,

 

மாமனும் மச்சானும் கட்டிக்க வேண்டியது தானே என்ன
எதுக்குக் கட்டிக்கிட்டீங்க?” என்றவளை என்ன செய்வது அவளது கோணத்தில் யோசித்துப் பார்த்தால்
அனைத்தும் தவறாகத் தெரிய தன்னை அவள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற தவிப்பில் மேலும்
சொதப்பி வைத்தான்.

 

“அப்படி இல்லடி செல்ல குட்டி நீ குட்டியா இருக்கும்
போதே உன்ன ரொம்பப் புடிக்கும் பிங்க் நாட் வச்சு அழகா டிரஸ் பண்ணிட்டு குண்டு கன்னம்
ரோஜா பூ உதடுனு அழகா இருக்க அக்கா மக மேல அப்பவே எனக்கு……………”  என்றவனை முடிக்க விடாமல் வாயில் அடித்துக் கொண்டு
ஒரே அலப்பறை

 

ஐயோ!…. ஐயோ!… ஐயோ!…………….. யோவ் பெருசு
நீ செஞ்சது காதல் இல்ல பாலியல் குற்றம் பால் குடிக்கிற பிள்ளைய ப்ராக்கெட் போட்டு இருக்க
நீ… ஐயோ கடவுளே இந்த அநியாயத்த கேட்க ஆளே இல்லையா நான் என்ன பண்ணுவேன்………..”
என்று ஒப்பாரி வைக்கப் பாய்ந்து போய் அவனது வாயை அடைந்தவன்

 

“அடி லங்கினி கத்தி ஊற கூட்டாதடி சத்தியமா உன்ன எனக்கு
ரொம்பப் புடிக்கும் பிடுச்சு தான் கட்டிகிட்டேன் ஏன் எப்புடின்னு சொல்ல தெரியலடி புடிக்காம
வாழ்க்கை முழுமையும் கூட வர உறவை ஏற்க முடியுமா சொல்லு அதுவும் எங்க ஆசை அக்கா பெத்த
பொண்ணு நீ எப்போதும் எனக்கு ஸ்பெஷல் தான்”
அவன் என்னவோ உருகி
பேச அவனது மனையாலோ

 

“யாரை வேணாம் நம்புவேன் ஆனா பெருசு உனைய நம்பவே மாட்டேன்”
என்றவள் அவனை நெருங்கி கழுத்தை ஒட்டி தங்கத்தில் மெல்லிய சங்கிலி அதில் ருத்ராட்சம்
கட்டி போட்டு இருந்தான்.அதனை வெளியில் எடுத்தவள் இறுக்கப் பற்றிக் கொண்டு “ஊருல இருக்க
அம்புட்டு பேரும் லெச்சு தம்பியா? அவர் அப்படி இப்படின்னு கதை அளந்துக்கிட்டு திரியுதுங்க
ஆனா பெருசு ருத்ராட்சம் ஒன்னு போட்டுக்கிட்டு போலி சாமியார் கணக்கா சுத்தி வர நல்லதுக்கே
காலமில்லை போ..”

 

 

“வாய் ஊர் பட்ட வாய் எங்க அக்கா பேசவே பேசாது ஆனா
நீ பேசாம இருக்கவே மாட்டேங்கற.சொல்ல வரத காது கொடுத்து கேட்க மாட்டியா நீ லங்கினி”
என்றவனைப் பார்த்து

 

“இதோ அடுத்து அதுக்குத் தான் வரேன்”

 

“எதுக்கு”

 

“இந்த லங்கினி க்கு”

 

அய்யோ! என்று மனதுக்குள் அலறியவன் வெளியில் மிடுக்காக
அதுக்கு “என்னடி”

 

“என்ன? என்ன என்னடி? சரி நம்ப மாமா ஆசை பட்டு தான்
நமக்குச் செல்ல பெரு வச்சு கூப்புடுதுனு பார்த்தா அது ஒரு அரக்கியாமுள்ள என்ன பார்த்தா
அரக்கி மாதிரி தெரியுதா?” அடுத்தச் சண்டைக்கு அடித்தளமிட்டவளை பாவமாகப் பார்த்தவன்
தனது ஜீவன் வற்றும் அளவிற்குக் கெஞ்சி சோர்த்துப் போனான்.

 

“அம்மாடி செல்வி சத்தியமா முடியலடி உனக்கு யாரு சொன்னது
அரக்கினி”

 

“அம்மாச்சி தான் சொன்னாங்க ஏன் தம்பி உன்ன பார்த்து
அரக்கினு கூப்டாகனு கேட்டாங்க” நான் அது அரக்கி இல்ல லங்கினி..னு கூப்புடுவாங்கனு பெருமையா
வேற சொன்னேன்”

 

“அதுக்கு அவுங்க சிரிச்சுகிட்டே அது ஒரு அரக்கி பெயர்
கண்ணுனு சொல்லுறாங்க என்று அழுத்தவளை சமாளிக்க முடியாமல்”

 

“தங்கம் அழுகாதடி மூச்சு வாங்குது பாரு”

 

“போயா பெருசு” என்றவள் அதன் பின் அவன் எத்தனை சமாதானம்
சொல்லியும் கேட்கவில்லை

 

அவளை நெருங்க முடியாத கோபத்தில் இருந்தவன் தொழில்
நிமித்தம் ஒரு இயந்திரத்தை இறக்குமதி பண்ணும் விடயமாக வெளி நாடு பறந்து விட்டான்.வீட்டில்
யாருடனும் பேசாமல் இருந்த செல்வியைப் பார்க்க பாவமாகி போனது நாகப்பன் செட்டியாருக்கு.

 

அவரது கோபமெல்லாம் லெச்சுவிடம் திரும்ப விசாலாட்சியிடம்
காய்ந்தார் மனிதர் “என்ன விசா உன் மகனுக்கு ஊருக்கு வர இஷ்டமில்லையா என்ன வேலை முடுஞ்சா
வர வேண்டியது தானே” விசாலாட்சியிடம் கடிய அவருக்கு என்ன தெரியும் பாவம்.

 

விசாலாட்சியின் மென்மை குணம் செல்விக்கு மிகவும்
பிடிக்கும் அதனால் தான் அவரிடம் எளிமையாக ஒட்டி கொண்டால்
 நாகப்பன் அவரை சாடுவதைத் தாங்காதவள்
“இப்போ எதுக்குத் தாத்தா அம்மாச்சியத் திட்டுறீங்க போனவருக்கு வர தெரியாத விடுங்க வருவாரு”

 

“பேத்தி தன்னிடம் பேசியதை எண்ணி முகம் கொள்ளா பற்களுடன்
அதில்ல பாப்பா அவுக போன வேல இரண்டு நாளுக்கு முன்னே முடுச்சு போச்சு இன்னும் அவுக அங்கன
என்ன பண்ணுறாகனு தெரியல அதேன் அந்த ஊருல தான் மேற் படிப்பு முடுச்சாக சினேகம் போட்டு
சுத்திகிட்டு இருக்கப் போராக அதேன் சொன்னேன்”

 

என்னது கூட்டாளியா வாய் பிளந்த பேத்தியை சிரிப்புடன்
பார்த்தவர் மேலும் தனது பேத்தியிடம் குறும்பு பண்ண எண்ணி ஆமாங்க பாப்பா அம்புட்டும்
பொம்பள புள்ள சக வாசந்தேன் தனது மகனை தானே புகழ்ந்து தள்ளி கொளுத்தி போட நல்ல பிரகாசமாக
எரிந்தது.


நல்ல நாகத்தைப் போல் மூச்சு வாங்கியவள் அவ்விடம்
விட்டு தனது அறைக்கு விரைந்தவள் தனது கணவன் தந்து போன எண்ணை தேடி.வெளி நாடு செல்லும்
அன்று ஒரு சிறு காகிதத்தில் தன்னைத் தொடர்பு கொள்ள விரும்பினால் இந்த எண்ணை பயன் படுத்து
என்று தன்னிடம் கொடுத்த சீட்டை அலட்சியமாகத் தூக்கி எரிந்து விட்டால் அன்று தேவை படாது
என்று எண்ணியவள்.

 

இன்று தனது தாத்தன் பேசிய பேச்சில் இனி லெச்சுவை
வேலைக்கே அனுப்ப கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டால்.

வாய்
ஓயாமல் அவனை வசை படி கொண்டே தேடி கொண்டு இருந்தால்…

*****************************************

அங்கு விசாலாட்சி தனது கணவனின் பரிமாணத்தை பார்த்து
அதிர்ந்து நின்றார் கிண்டலும் கேலியும் அவர் வயதில் செய்திருந்தாலும் பெண் பிள்ளைகள்
பெற்றவுடன் அதனை விடுத்து அமைதியாகி போனவர் அது மட்டுமா பிள்ளைகள் இருக்கும் பொதுத்
தனது அருகில் கூட வந்து பேச மாட்டார் அவர் தேவைகளைத் தவிர.

 

அப்படி இருக்க இன்று தனது பேத்தியிடம் அவரது குறும்பு
பேச்சை கண்டு அதிர்ச்சியாக நின்றார்.மீனாட்சியிடம் கூட ஓர்  இரு வார்த்தைகள் தான் அதுவும் முக்கியமான விடயங்களாக
இருந்தால் மட்டுமே அந்த இரண்டு வாக்கியம் இல்லையென்றால் ஒரே வார்த்தை தான்.


இளைய மகள் என்றால் நாகப்பனுக்குச் சற்றுப் பிடித்தம்
கூடுதல் தான் அப்படி இருக்கத் தனது மகளின் மகளைப் பிடிக்கக் காரணம் வேண்டுமா என்ன…..
இளமை கூடியது போல் பேச்சும் துள்ளலுமாக இருக்கும் கணவனைக் காணும் பொது மகிழ்ச்சியாகத்
தான் இருந்தது விசாலாட்சிக்கு

 

உடனே தனது பெரிய மகளிடம் அனைத்தும் போன் மூலம் சொல்ல
அவரோ சிறுது மௌனத்திற்குப் பிறகு “என்ன இருந்தாலும் அப்பாக்கு அவ தானே செல்லம்” சாலாவின்
பேச்சில் திகைத்தவர்

 

“இது என்ன சாலா சின்னப் பிள்ளை மாதிரி பிள்ளைகள்ல
வேறு பாடே கிடையாது எல்லாரும் ஒன்னுதான்.அவள பிரிஞ்சு இருந்த தாக்கம் வேற ஒண்ணுமில்ல
நீ மாப்பிள்ளைக்கிட்ட சொல்லிட்டு வந்து இரண்டு நாள் இருந்துட்டு போக மீனாட்சியும் கூட்டிட்டு
வா என்ன”

 

“சரி மா செல்வி எப்படி இருக்கா”

 

“அதயேன் கேக்குற சாலா” என்றவர் நடந்த அனைத்தையும்
சொல்லி முடிக்கச் சாலா போனை வைத்து விட்டார்.ஏற்கனவே தந்தையின் பாசம் முழுவதும் வள்ளியிடம்
என்பதற்கே சலனம் கொண்டவர் தம்பியும் செய்த வைத்திருக்கும்  வேலையில் முற்றிலும் தளர்ந்து போனார்.


‘அப்போ  நான்’
 என்ற கேள்வி சாலாவிடம் இது பொறாமை அல்ல அன்பு
போராட்டம் ஒரே வயிற்றில் கரு கொண்டு உயிர் பெற்றவர்களின் உரிமை போராட்டம்.யாரிடம் உரிமையும்
அன்பும் அதிகம் என்பதே இங்கு முதன்மையாகக் கொண்டு செல்வியில் தொடங்கிச் சாலா வரை தொடர்கிறது.

 

போனை வைத்தவுடன் திகைத்த விசலாட்சி “பெருசுல இருந்து
சிறுசு வரை பிரச்சனை பண்ணராக என்னத்த சொல்ல” என்று புலம்பி கொண்டே வேலையை தொடர்ந்தார்

****************************

லெட்சுமணன் கொடுத்து சென்ற போன் எண்ணை ஒருவழியாகக்
கண்டு பிடித்த செல்வி அவனது போனுக்கு வாட்ஸ அப் கால் செய்ய மறுமுனையில் லெட்சுமணனோ
முறைத்துக் கொண்டே இருந்தான் எடுத்தால் வம்பு செய்வாள் எடுக்காமல் விட்டாலும் வம்பு
செய்வாள் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே போனை வெறிக்க அது இரண்டு மூன்று முறை
கத்தி ஓய்ந்தது.

 

மனது கேட்டமால் அவனே போனில் அழைக்க எடுத்தவுடன் கத்த
தொடங்க போனை சற்றுக் காதில் இருந்து தள்ளி வைத்துக் கொண்டு அப்…பா…. மீண்டும் காதில்
வைத்து “எதுக்குடி லங்கினி கத்துற”

“முதல கிளம்பி வாங்க இங்க ஒருத்தன் ரொம்பப் பண்ணுறான்
மாமா” அழுவது போலச் சொல்ல பதறியவன் “யாருடி அது உடனே கிளம்பி வரேன்” என்றவன் துரிதமாகச்
செயல் பட்டான்

 

இங்குப் போனை வைத்தவள் எதிரில் இருப்பவனைத் தீ பார்வை
பார்த்து வைக்க செல்வியும் பதிலுக்கு முறைத்து நிற்க பேத்திக்கு அரணாக நாகப்பன் செட்டியார்
வேறு.

 

இந்தக் கூத்தை பார்க்க முடியாமல் விசலாட்சி தனது
மகளுக்கு அழைக்க அவரோ குடும்பத்துடன் கூடி விட்டார்.அது போகச் சாலா அன்பு சண்டை பிடிக்கக்
குடும்பத்துடன் வந்து கொண்டு இருக்கிறார்.ஆக லெட்சுமணன் இந்திய மண்ணில் கால் எடுத்து
வைக்கும் சமயம் தரமான சம்பவம் ஒன்று உண்டு.

 

அடித்துப் பிடித்துக் கூடுதல் பணம் கொடுத்து விமானத்தில்
வந்து இறங்கியவன் பதறிக் கொண்டு வந்தவன் தனது வாழ்க்கையே வெறுத்துப் போனான் ஓடவும்
முடியாமல் ஒழியவும் முடியாமல் அல்லாடினான்.

 

 

 

 

 

 

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *