சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று பூத்த நெருஞ்சியே

சில்லென்று
பூத்த நெருஞ்சியே

அத்தியாயம்
– 12

 

செல்வியிடம் மாட்டி
கொண்ட தனது தாயின் நிலையை எண்ணி பதறிக் கொண்டு வந்தார் வள்ளி. அவர் எண்ணியது போல் தான்
நடந்தது செல்வி அவரிடம் அடம் பிடித்துக் கொண்டு இருந்தால் இருவரையும் பார்த்தவாறே வள்ளி
உள்ளே கால் எடுத்து வைக்க இருவரது உரையாடல் அவரை மேலும் முன்னேறாமல் தடுத்தது.

 

“ஆச்சி எனக்குப் பயமா
இருக்கு நான் போக மாட்டேன்”

 

“அப்படி சொல்லுக்கூடாது
கண்ணு உன் மாமன் தானே அவுக உன்ன ஆசைப்பட்டுக் கட்டி இருக்காக உங்கள சங்கடப்படுத்த மட்டாகக்
கண்ணு ஆச்சி சொல்லுறத கேப்பிக தானே”

 

அப்பொழுதும் செல்வியின்
முகம் தெளியாமல் இருக்க “இங்கன பாரு கண்ணு அவுக சொட்டு பசங்க எல்லாம் கல்யாணம் பண்ணி
அவுக பிள்ளைகள் எல்லாம் பருவத்துக்கு வழி விட்டு நிக்கறாக. இவுக மட்டும் தான் காலம்
தாழ்ந்து கல்யாணம் பண்ணது இன்னும் காலம் போன எப்படி நான் சொல்லுறது புரியுதா….. ஆச்சி
உங்க நலத்துக்குத் தான் சொல்லுறேன் புருஞ்சுக்கோங்க” தாடையைப் பற்றிக் கொஞ்ச அவரது
மென்மையான அன்பு பேச்சில் வீழ்ந்து தான் போனால் செல்வி

 

இருவரையும் நிகழ்ச்சியுடன்
பார்த்திருந்த வள்ளி தான் வந்த தடயமே இல்லாமல் திரும்பி சென்றார்.தான் இப்போது சென்றால்
அவர்களது பின்னிப்பில் இடையூர் வந்து விடும் மகளும் தன்னிடம் அதிகச் சலுகை சொல்வாள்
என்பதால் அவர்களைக் கலையாமல் சென்று விட்டார்.

 

முகம் கொள்ளப் பூரிப்புடன்
வரும் மனைவியை அழைத்த வீரான் “என்னடி ஆச்சி சும்மா பல பலன்னு இருக்க” என்றவர் அவரைக்
கட்டி அணைக்க ‘நடுக் கூடத்தில் வைத்து என்ன இது’ என்று பதறிய வள்ளி சுற்றும் முற்றும்
தங்களை யாராவது பார்த்து வைக்கப் போகிறார்கள் என்று பார்க்க அவரது பயம் சரியென்றது
போல் வாய் பிளந்து நின்றனர் சாலாவும் அவரது கணவரும் இருவரும் தங்களைப் பார்த்து அதிர்ந்து
நிற்க

 

ஐயோ அக்கா! விடுங்க
பண்ணை என்றவர் அவரது கையை வலிக்கக் கிள்ளிவிட்டு செல்ல ஏய் ! ஆச்சி என்று அவரைப் பின்
தொடர்ந்தார் வீரான் இருவரையும் பார்த்த சாலாவின் கணவன் ஏக்கமாகச் சாலாவை பார்க்க அவரோ
‘ஆள விடுங்க சாமி’ என்பது போல் செய்கை செய்து ஓடியே விட்டார்.


இவ்வாறு அந்த வீட்டில்
உள்ளவர்கள் அனைவரும் ஒரு மார்கமாகச் சுற்றி தெரிய மணமகனோ உச்ச பச்ச கடுப்பில் நின்று
கொண்டு இருந்தான்.ஒருவழியாகக் கெஞ்சி கொஞ்சி செல்வியை உறவினர் பெண்கள் சிலர் உதவியோடு
அறைக்குள் தள்ளிவிட்டு வர கடந்த சில மணி துளிகளாக அங்கையே நின்று கொண்டு இருந்தால்
செல்வி.

 

அவளும் வருவாள் வருவாள்
என்று அமைதி காக்க அவளோ சட்டமாக நின்று கொண்டு இருந்தால். பொறுமை காற்றில் இது வேலைக்கு
ஆகாது என்று தலையை இடமும் வளமும் குலுக்கி கொண்டவன் எழுந்து வந்த அவளை அலேக்காகத் தூக்கி
சென்றான்.அவனது அதிரடியில் மிரண்டவள் “லெச்சு… பிச்சு… என்ன சண்டி தனம் பண்ணுறீங்களா
கத்தி ஊற கூட்டுவேன்”

 

“தைரியம் இருந்தா கூட்டுடி பார்ப்போம்” என்றவன் அவளது
மீது அழுத்தமாக விழுந்து வைக்க முதுகு தண்டு சுளீரென்று வழி எடுத்தது

 

“யோவ் பெருசு மூச்சு முட்டுது முரட்டுத் தனம் பண்ணாதீங்க”

 

“இங்கன பாருடி இன்னொருத்தரம் பெருசுனா என்ன பண்ணுவேன்னு
தெரியாது என்னால விலக முடியாது இருபது ஆறு வருஷம் தவமிருந்து தட்டி தூக்கி இருக்கேன்
அதுவும் எல்லார் கண்ணுளையும் மண்ண தூவி”
அவனது பேச்சு புரியாமல்.

 

“என்ன சொல்லுறீங்க புரியல”

 

“இப்போ எதுவும் புரிய வேணாம் எல்லா ஒரு வாரம் செண்டு
சொல்லுறேன் பொறுமையா கேட்டு புருஞ்சுக்கோ” என்றவன் அவளின் மார்பின் மத்தியில் புதைய
உடல் சிலிர்த்து கூசி நின்றவள் அப்…பா…. அங்கன……கை…….. தப்பு …..பண்ணுறீங்க.

 

“சரியாத்தான் தாண்டி பண்ணுறேன்” என்றவன் ராசனாக நின்று
கொடுங்கோல் கொண்டு ஆட்சி புரிய ராணியாக அவனைத் தாங்கி நின்றாள் செல்வி அர்த்தமற்ற பேச்சுக்கள்
தந்த வெட்கத்தில் அவள் துள்ளி துடிக்க அவளது நிலையைக பார்த்து களிப்புற்றவன் அவளது
உடல் துளைத்து உள் சென்று உயிர் மீண்டான்.

 

பெண் கடலுக்கு நிகரானவள் என்பது உண்மை தான் போலும்
கடலின் ஆழத்தை யாரும் அளந்தது உண்டோ?….. அதே போல் தான் பெண்ணும் அவளின் ஆழத்தை எவராலும்
அளக்க முடியாது.அவள் உள்ளத்தை மட்டுமா? அவளுள் புதைந்து இருக்கும் உணர்வுகளையும்,உணர்ச்சிகளையும்
அறிய தான் போராடி கொண்டு இருக்கிறான் லெட்சுமணன்.

 

அவளது பயம், வயது அனைத்தும் மறந்து போயிற்று அவனுக்கு
அவளே சதமென்ற நிலையில் அவன்.அவளோ அவனது நெருக்கம் தந்த தவிப்பு ஒருபுறம் அவன் பேசி
வைத்த வார்தைகள் ஒருபுறமென அலைபாய்ந்து திரிந்தால்.

 

ஒருகட்டத்தில் தன் நிலையை இழந்த லெட்சுமணன் அவளை
முரட்டுத் தனமாக அனைத்து அவளுள் முற்றிலும் கலந்து கரைந்து போகத் துடித்து அடங்கினால்
பெண்.புனிதம் கொண்ட புரிதல் தருவது கூடல் என்பதால் அதனைக் கையாண்ட இருவரும் ஒருவித
நெருக்கத்தில் மயங்கி இருக்க இனிதே தொடங்கியது அவர்களது இல்லறம் (இனி தான் தரமான சம்பவம்
ஹா…ஹா…..)

 

இங்கே லெட்சுமணன் ஒரே குஜாலாக இருக்க அங்கே வீரான்
நாகப்பனிடம் மாட்டி கொண்டு முழித்துக் கொண்டு நின்றார்.


வள்ளியை
பிடிக்கப் போன மனிதன் நாகப்பனிடம் மோதி நின்றது வெகு சிறப்பு.


கணவனது பார்வையை வைத்தே எதுவோ சரியில்லை என்று அறிந்த
வள்ளி முதல் முறையாகத் தனது தயக்கத்தையும்,பயத்தையும் விட்டு தனது தந்தையிடம் பேசினார்.

 

“அப்பா அவுக என்ன பண்ணாக” தவிப்புடன் கேட்கும் தனது
செல்ல பிள்ளையை நீர் மறைத்த கண்களுடன் பார்த்துக் கொண்டு நின்றார் நாகப்பன் சரியாக
இருபத்தி ஏழு வருடங்கள் கடந்த நிலையில் மகளது அப்பா என்ற விழிப்பு.அவரது நிலை அறியாமல்
மீண்டும் அவரை அழைத்தவர்

 

“அப்பா சொல்லுங்களேன்”

 

“ஒண்ணுமில்ல” என்றவர் வீரானை பார்த்து உங்களுக்கும்
எங்க மகனுக்கும் ஆகாதுங்களே அப்புறம் எப்படி பொண்ணு கொடுத்தீக அதுவும் இம்புட்டு வயசு
இடைவெளி வேற இருக்கு…. ஒன்னும் புடிப்படலையே….. சொல்லுக கேட்போம்….”

 

அவரது கேள்வியில் அரண்ட வீரான் தனது மனைவியிடம் குனிந்து
“ஆனாலும் உங்க அப்பாரு இம்புட்டு விவரமா இருக்க வேணாமுடி ஆச்சி” என்று மனைவியின் காதில்
கிசு கிசுக்க

அவரும் அதே குரலில் “என்னத்த பண்ணை பண்ணி வச்சீக?
ஐயா ஏன் இப்படி கேக்குறாரு?”

 

“தெரியலடி”

 

“இல்ல எதுவோ இருக்கு இல்லனா ஐயா கேட்க மாட்டாரு”

 

“என்னடி வீட்டு மருமவனு ஒரு மரியாதை இல்லாம நிக்க
வச்சுக் கேள்வி கேக்குறீங்க” அவரது பேச்சில் வள்ளி ஒரு பார்வை பார்க்க மனிதன் கப் சிப்
(அன்புக்கு அடிமை போலும்)

 

“சொல்லுக” நாகப்பன் பதில்  வேண்டும் என்று நிற்க வேறு வழியில்லாமல் உளறி கொட்டினார்
வீரான்

 

“அதுங்க எம்புட்டு நாள் தான் முறச்சு கிட்டுத் திரியுறது
உறவு கூட வேண்டாமா அதேன் அதுவும் இல்லாம என் பொண்ணு இங்கன நல்ல பொழச்சுக்கிடக்குமே
அதேன்”

 

“உங்கள நம்புறேனுங்க” என்றவர் பார்த்த பார்வையில்
சாத்தியமா நான் உன்னை நம்பவில்லை என்ற செய்தி இருக்க அவர் முன்னிலையில் நிற்க முடியாமல்
“அப்புறம் நாங்க வூட்டுக்கு போயிட்டு நாளைக்கி வரோம்” என்றவர் இருகரம் கூப்பி விடை
பெற அவரும் அதே போல் செய்து “போயிட்டு வாங்க” என்று வழியனுப்பி வைத்தார்.

 

யோசித்துக் கொண்டே வரும் மனைவியைப் பார்த்தவர் “ஐயோ
யோசிக்கிறாளே என்று அலறியவர் அவரைத் திசை மாற்றும் பொருட்டு “ஆச்சி”

 

ஹ்ம்ம்…..

 

“கொஞ்சம் மல்லி எடுத்துக்கிட்டு வந்து இருக்கலாம்
தானே”

 

எதுக்கு?

 

“என்னடி எதுக்குன்னு கேக்குற எல்லாம் அதுக்குத் தான்”
என்று கண் அடுத்தவரை கொலை வெறியோடு பார்த்தவர் கண்ணில் அகப்பட்ட குச்சியைக் கையில்
எடுத்து அவரை அடித்தே விட்டார்

ஆ…. ஏண்டி அடிக்குற

 

“காடு வா வாங்குது உங்களுக்கு முதல் இரவு கேக்குது
ஹ்ம்ம்………… பத்து மாசத்துல தொட்டி பிடிக்குற கைக்கு மல்லிகை பூ கேக்குது” என்றவர்
தனது வயதையும் மீறி அவரை துரத்தி கொண்டே ஓடினார்…

 

காலையில் கண் விழித்த செல்வி துயில் கலைந்து எழும்ப
அவளால் இன்ச் கூடத் தன்னை நகற்றிக் கொள்ள முடியவில்லை.மலை பாம்பை போல் தன்னைச் சுருட்டுக்
கொண்டு படுத்துரங்கம் கணவனை அமைதியாகப் பார்த்திருந்தால் நேற்று பேசிய பேச்சுக்கள்
மறக்கும் அளவுக்கு அவனது அன்பு தன்னைச் சுருட்டி கொள்ள உரிமை தானாக வந்தது.

 

தனது நிலை உணர்ந்தும் வெட்கம் துறந்து அவனை அனைத்துக்
கொள்ள அவனும் அவளது நெருக்கம் உணர்ந்து தலையைக் குனிந்து பார்த்தவன் அவளது உச்சந்தலையில்
மென்மையாக இதழ் பதித்துக் கட்டி கொண்டான்..

 

அதன் பின் அவர்கள் குளித்து முடித்து வெளியில் எழுந்து
வர நேரம் மதிய உணவை எட்டியது விசாட்சியும் சாலாவும் செல்வியைத் தனியே அழைத்துக் கட்டி
கொள்ள அவர்களது செயல் அவளுக்குச் சொல்ல முடியாத உணர்வை ஏற்படுத்தியது.இருவரையும் அழைத்து
அடுத்தச் சடங்குள் நடைபெற அதில் நேரம் போனதே தெரியவில்லை.உள்ளுக்குள் உருகியவன் வெளியில்
தன்னைக் கண்டு கொள்ளாமல் சுற்ற கோபம் வந்தது பெண்ணுக்கு.

 

விருதின் போது இருவரும் அருகே அமர அவனிடம் சற்று
குனிந்து மெல்லிய குரலில் “யோவ் பெருசு என்ன.. என்ன கண்டுக்கவே மாட்டேங்கிறிங்க பொதுவா
ஆசை அறுபதுநாள் மோகம் முப்பது நாள் தானே? பெருசுக்கு என்ன ஒரே நாளுல…..” அடுத்து என்ன
பேசி இருப்பாளோ பயந்து கொண்டு வாயை அடைந்தவன்.

 

“என்னடி லங்கினி திமிரா வீட்ட சுத்தி உறவு அவுக முன்னாடி
உன்ன கொஞ்சிகிட்டு திரிய முடியுமா?”அவனது நியாயம் புரிந்தாலும் அவனிடம் வம்பு வளர்த்தே
தீருவேன் என்ற முடிவுடன்

 

“ஓ…  நான்
கூடப் பெருசுக்கு எதுவும் உடம்பு சுகமில்லையோன்னு நெனச்சேன்” அவள் நீட்டி முழக்க அவள்
சொன்னதின் செய்தி புரிந்தவன்

 

“கொழுப்பே என்ன தைரியமடி உனக்கு வாய்யா பேசுற”
அதன்
பின் ஓயாமல் சண்டை கட்ட

 

இருவரும் சண்டை போட்டு கொள்வதைப் பார்த்து எதுவோ
கொஞ்சி கொள்வது போலக் கண்ணில் ஆனந்த கண்ணீருடன் பார்த்துக் கொண்டு இருந்தனர் காத்தாயி
மற்றும் விசாலாட்சி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து…

 

“பாத்திகளா எம்புட்டு ஆசையா பேசிக்கிதுங்க நான் கூடத்
தம்பி வந்து செல்விய கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னப்ப பயந்து கிடந்தேன் ஆனா இப்போ
அதுக்கு அவசியமே இல்ல (விளங்கும்…………
அதுங்க கொஞ்சல விசா)

 

ஆமா தாயி செல்வி இம்புட்டு பதிவுசா நடந்து நான் பார்த்ததே
இல்லை என்ன பாந்தமா பேசுது (கண் விலக்கி பாரு காத்தாயி அது பந்தமாவா பேசுது அட கொடுமையே)

 

இத்தனை பாந்தமாகச் சுற்றி தெரியும் இவர்களது பிள்ளைகள்
ஒரு வாரம் சலிக்கச் சலிக்க உண்டு,உறங்கி,உறவு கொண்டு வாரத்தின் இறுதியில் பேட்டி படுக்கையைக்
கட்டி கொண்டு செல்வி வீரான் வீட்டுக்கு செல்ல விசாலாட்சி தலையில் கையை வைத்து அமர்ந்து
விட்டார்.எந்த நேரத்தில் ஒரு வாரம் என்ற கணக்கை சொன்னோம் என்று நொந்து கொண்டு அமர்ந்து
இருந்தான் லெட்சுமணன்.(
அடடே இனிதே தொடங்கியது இல்லறம்)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *