காதல்!! கசடற கற்க…

This entry is part 6 of 24 in the series காதல்!! கசடற கற்க

காதல்!! கசடற கற்க

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

காதல்!! கசடற கற்க…

6
காதல்!! கசடற கற்க…
ஜியா ஜானவி ❤️
காலையில் தினப் பத்திரிகை பார்த்த உடனே மனம் வலித்தது ஹரிணிக்கு. பேனை பெருச்சாளியாக்கும் இக்கால ஊடகத்துறையை நன்கு அறிந்து வைத்திருந்தாலும் மனதிற்குள் ஏதோ ஒரு வலி.. தவிப்பு பெண்ணவளுக்கு. நேற்று திடீரென்று அவன் கிளம்பி சென்றது. ஒருவேளை அந்த நடிகைக்காக தான் சென்று இருப்பானோ? பின் ஏன் தன்னோடு அவ்வாறெல்லாம் இருந்தான்? என்று பலவித தாக்குதல் மனதை போட்டு அழுத்த.. இப்படி போட்டு குழம்புவதற்கு அவனிடம் நேரடியாகவே கேட்டு விடலாம் என்று நினைத்து வழக்கம்போல அக்கவுண்ட்ஸ் பார்க்கவேண்டுமென தந்தையிடம் கூறி  விட்டு, அவனது வீட்டை நோக்கி தனது காரில் சென்றாள் ஹரிணி!!
எப்படி ஆரம்பிப்பது ஏற்கனவே தன்னைக் கண்டாலே நான் அவனுக்கு துரோகம் செய்துவிட்டேன் என்று குறையா குறையாக கூறுபவன்.. என்ன நினைத்தாலும் சரி.. இது வாழ்க்கை பிரச்சனை கண்டிப்பாக கேட்டே ஆகவேண்டும் என்று வழக்கத்தை விட முன்னதாகவே சித்தார்த் வீட்டுக்கு சென்றாள் ஹரிணி.
இவளை பார்த்த உடன் பார்வதி தான் முதலில் அழைத்தார்.. “ஹாய் மேக்ஸ் கேர்ள்.. கணக்கு பண்ணி எல்லாம் முடிச்சிட்டியா?” என்று அவர் கேட்க..
“எங்க? உங்க புள்ளைய தான் கணக்கு பண்ண ட்ரை பண்றேன்.. ம்ஹூம்” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாலும் வெளியே அவரைப் பார்த்து “இப்பதானே ஆன்ட்டி ஆரம்பிச்சிருக்கேன்!! சீக்கிரமாவே முடித்து விடுவேன்!!” என்று இரு பொருளில் கூறினாள் ஹாலில் இருந்த சித்தார்த்தின் புகைப்படத்தை பார்த்தவாறு..
“குட் கேர்ள்.. எந்த வேலை ஆரம்பித்தாலும் லேசியா இருக்கக்கூடாது டக்குனு ஆரம்பிச்சு பட்டுன்னு முடிச்சிட்டனும் இடையில எவ்வளவு தடை வந்தாலும்” என்று அவர் பொதுவாக கூற, அவளோ இது அவளுக்காகவே சொன்னதுபோல நினைத்தவள், சட்டென்று அவரை அணைத்து “யூ ஆர் ஸோ ஸ்வீட் ஆன்ட்டி எனக்கு உங்களை ரொம்ப பிடித்து இருக்கு” என்றாள்.
அவரோ சிரித்துக் கொண்டே “என்னடா ஆச்சரியமா இருக்கு!! எல்லாரும் என் பிள்ளையை பார்த்து தான் இந்த வார்த்தையை சொல்லுவாங்க!! மொத மொத என்னை பார்த்து நீ தான் சொல்லி இருக்க.. அதுவும் ஒரு வயசு பொண்ணு. ஐம் ஹாப்பி” என்று கண்ணடித்து சிரித்தார் அவர்.
அவரிடம் சற்று பேசியது மனதுக்கு புதுவித தெம்பாய் உணர்ந்தாள் ஹரிணி. அன்னை இல்லாமல் வளர்ந்த அவளால் இம்மாதிரியான ஆதரவான வார்த்தைகளை தந்தையைத் தவிர யாரிடமும் இருந்து அறியாதவள். எனவே பார்வதியை ரொம்ப பிடித்துவிட்டது ஹரிணிக்கு..
அவரிடம் காலையில் பேப்பரில் வந்த செய்தியை பற்று கேட்கலாம் என்று எண்ணியவள், அதன் பிறகு எதா இருந்தாலும் டைரக்டா  அவனிடமே பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தவள்,
“ஓகே ஆன்ட்டி.. நான் என் வேலையை பார்க்க போறேன்” என்று அவள் மாடியில் சித்தார்த்தின் அலுவலக அறைக்குள் நுழைந்தாள். 
இவள் வந்த விஷயத்தை கைலாஷ் சித்தார்த்திடம் கூறியிருக்க, அப்போதுதான் ஜிம்மில் இருந்து வேர்க்க விறுவிறுக்க வந்தவன் சரியென்று தலையாட்டலுடன் தன் அறைக்குள் நுழைய போக, அவனையே பார்த்து ஏதோ பேச தயங்குவது போல நின்று கொண்டிருந்த கைலாஷை பார்த்து “என்ன டா?” என்றான்.
“சார்” என்றவன் நியுஸ் பேப்பரில் வந்த செய்தியை அவனிடம் காட்ட..
அவனோ எந்த அதிர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் மெலிதாக சிரித்து கொண்டே “பாரு என்ன ஒரு பாஸ்ட் மீடியா!! மிட் நைட்ல தான் எங்க சந்திப்பு நடந்தது. அதுக்குள்ள காலையில் நியூஸ் பேப்பரில் போட்டுட்டாங்க சுட சுட.. சூப்பர்ல” என்று வியந்தவாறே குளியல் அறையில் புகுந்து கொண்டான்.
இன்னும் எங்கு சீனியரை காணோம் என்று கணினியில் ஒரு கண்ணும் வாசலில் ஒரு கண்ணுமாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் ஹரிணி. அவனிடம் பேச வேண்டும் என்ற ஆர்வ கோளாறில் இவள் சீக்கிரமே கிளம்பி வந்து விட்டாள் என்பதை மறந்து விட்டாள்.
காலையில் உணவு உண்ண செல்லும்போது கைலாசத்திடம், “நியூஸை பேப்பரை அம்மாவின் கண்களில் காட்டாதே!!” என்று கட்டளையிட்டு விட்டு அன்னையோடு சேர்ந்து உணவை முடித்தான்.
“இன்னைக்கு என்ன அப்பாயிண்ட்மெண்ட்?” என்று கைலாஷிடம் கேட்க.. “சார் இன்னைக்கு காலையில் எந்த புரோகிராமும் இல்லை. மதியத்துக்கு மேல தான் சூட்டிங் போகணும். ஏழு மணிக்கு ஒரு ஆடியோ ப்ரமோ இருக்கு அதற்கு அப்புறம்..” என்று அவன் அடுக்கிக் கொண்டே செல்ல…
“டேய் கைலாசம்.. இரு இரு டா கொஞ்சம் கேப் விடு!! என்று பார்வதி கடுப்பாக..
“மம்மிமிமீ… இங்க பாருங்க என் பெயரை கைலாஷ்னு மாத்திட்டேன்” என்று கெஷட்டை
காட்ட.. “நிஜமாவே மாத்திட்டியா டா?” என்று அதிசயித்தார் பார்வதி. சித்தார்த் புன்னகையுடன் “பாவம் அவன விட்டுடுங்க மா” என்க..
“ம்ம்ம்” என்று அவனை ஏற இறங்க பார்த்து விட்டு, “மை சன் இப்படியே நைட் எல்லாம் சாமக்கோழி மாதிரி வேலை பார்த்தா எப்படி ரெஸ்ட் இருக்கும்?” என்று பார்வதி அன்னையாக அக்கறையை பட..
‘பாவம்!! இவர் பாக்குற ஜாமகோழி வேலையெல்லாம் இவங்களுக்கு தெரியல’ என்று சித்தார்த்தை அர்த்தம் பொதிந்த பார்வையில் பார்த்து முணுமுணுத்துக் கொண்டான் கைலாஷ்.  ‘அடங்குடா வாய தொறந்த தோலை உரித்து விடுவேன்’ என்று கண்களாலேயே அவனை அடக்கிய சித்தார்த் அன்னையின் பக்கம் திரும்பி “அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா!! இப்ப கூட காலையில நான் பத்து மணிக்குதான் எந்திரிச்சேன். அதுல இடையிடையே நான் ரெஸ்ட் எடுத்துப்பேன்.. நீங்க கவலை படாதீங்க” என்று அன்னையை தேற்றி விட்டு ஹரிணியை பார்க்க மாடிக்கு சென்றான்.
அவளோ மும்முரமாக கணினியில் தனது வேலையை செய்து கொண்டிருக்க அவளை பார்த்தபடியே எதிரில் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தான் சித்தார்த்..
மெதுவாக விழிகளை மட்டும் உயர்த்தி அவனைப் பார்த்தாள். அவனோ அப்படி எல்லாம் இல்லை அப்பட்டமாக அவளையே தான் வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்.
நேற்று நடந்த இச்சுக்களின் எச்சங்கள் இருக்கிறதா என்று பார்க்க அவளோ அப்படி ஒன்று நடந்ததாகவே காட்டிக்கொள்ளாமல் அமைதியாகவே இருந்தாள்.
“அப்புறம்ம்ம்…” என்றவன் அவளை பார்த்துக் கொண்டே இருக்கையில் அரை வட்டமாக அடித்துக் கொண்டிருந்தான். அவனைக் கேட்க ஆயிரம் கேள்விகள் நெஞ்சினில் நிற்க.. இவன் வேண்டுமென்றே நம்மிடம் வம்பு இழுக்க பார்க்கிறானோ என்று தோன்ற அமைதி!! அமைதி!! அமைதிக்கெல்லாம் அமைதி!! என்று சின்-சான் போல தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் ஹரிணி.
அடிக்கடி தன் மேல் படிந்து விலகும் பார்வைகளும்..  துடிக்கும் அதரங்களும்.. அலைப்புறும் கண் விழிகளும்.. அவள் ஏதோ தன்னிடம் கேட்க விழைகிறாள் என்று புரிந்து தான் அவளை சீண்ட ஆரம்பித்தான் சித்தார்த்.
“சொல்லுங்க ஜூனியர்!! ஒண்ணுமே வா இல்ல கேட்க?” என்று மறுபடியும் அவன் சீண்ட ஆரம்பிக்க.. குரலில் இருந்த இலகுத்தன்மை அவனது பார்வையில் இல்லை. நீரின் வெளியே துள்ளி வரும் மீனை லபக்கென்று பிடித்துச் செல்லும் நாரைப் போல அவனது கண்கள் அவளை கூர்ந்தவாறே இருந்தது. வேண்டுமென்றே சீண்டுகிறான் என்று புரிந்து தானிருந்தது ஹரிணிக்கும்.
எப்படி இருந்தாலும் இந்த விஷயத்தை தெளிவுப்படுத்தி தான் ஆக வேண்டும் என்று நினைத்தவள், ஒரு பெரு மூச்சோடு தன் கைப்பையில் கொண்டுவந்து இருந்த பேப்பரை அவன் முன்னே எடுத்து வைத்தாள்.
“இதற்கு என்ன அர்த்தம் சீனியர்?” என்றாள் அவன் முகத்தை பார்த்து தவிப்புடன்..
‘வாடி வா இந்த நாளுக்காக தான் நானும் காத்திருந்தேன்!! அன்று நீ என்னை பேசுனதுக்கு திரும்ப கொடுக்க வேணாம் நான்!!’ என்று கண்கள் மின்ன அவளைப் பார்த்தவன் பின்பு, “என்ன அர்த்தம் என்றால் ஏன் உனக்கு தமிழ் படிக்க தெரியாதா?” என்றான்.
“அர்த்தம் புரியுது!! அதற்கான விளக்கம் தான் உங்ககிட்ட கேட்கிறேன். காமெடி என்கிற பெயரில் மொக்கை போடாமல் விஷயத்தை சொல்லுங்க சீனியர்” என்றாள் ஹரிணி.
தன் கைகளை உயரே உயர்த்தி நெட்டி முறித்தவன், “செம டயர்ட்.. நைட்டு எல்லாம் சரியா தூங்கவே இல்லை” என்று தன் போல கூறிக்கொண்டு “என்ன கேட்ட விளக்கம் தானே? அதான் ஒரு வருஷத்துக்கு முன்னாடி நீயே தெளிவா சொல்லிட்டு போயிட்டியே!! அதுக்கப்புறம் நமக்குள்ள என்ன இருக்கு நான் உனக்கு விளக்கம் தருவதற்கு?” என்று தோளை குலுக்கி கொண்டான் அசட்டையாக..
“ஏன் சீனியர் நான் எந்த அர்த்தத்தில் சொன்னேன் கூடவா உங்களால புரிஞ்சுக்க முடியல? வலிக்குது சீனியர்!! ரொம்ப வலிக்குது!! இந்த மாதிரி உங்க கிட்டே என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.. ஏதோ புரிஞ்சுக்காம இருக்கீங்கன்னு தான் நினைச்சேன். ஆனா நீங்க புதுசாவே வாழ்க்கை ஆரம்பிக்க போற முடிவோடு இருப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை” என்றவளின் கண்களில் இருந்து இரண்டு கண்ணீர் துளிகள் உருண்டு செவ்விதழ் ஓரம் வந்து நிற்க.. ஏற்கனவே இருந்த டென்ஷனில் காலையில் சாப்பிடாமலே வந்திருந்தாள், கூடவே மருந்து எடுக்காமல் இருக்க, காலில் வலி வேறு அவ்வப்போது சுளீரென்று எல்லாம் சேர்ந்து அடக்கமாட்டாமல் தேம்பி தேம்பி அழுதாள் ஹரிணி!! எந்நிலையிலும் அவள் காதல் உண்மை தானே!! இனி அவன் கிடைக்கவே மாட்டேனோ என்கிற தவிப்பு!! எல்லாம் தான் கண்ணீராக வழிந்தது அவளையும் மீறி!!
இந்நிலையிலும் கூட அதனை ரசனையாக பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த்..
“பொண்ணுங்களுக்கு மட்டும் தான் கிளிசரின் போடாமல் டக்குனு கண்ணில் இருந்து தண்ணி கொட்டுது பா.. எனக்கு எல்லாம் கிளிசரின் போட்டா கூட வரமாட்டேங்குது.. உன்கிட்ட இருந்து கத்துக்க எனக்கு இன்னும் நிறைய இருக்கு” என்று அவள் வாழ்க்கையை பற்றி பேசிக் கொண்டிருக்க இவனோ வேடிக்கை செய்து கொண்டிருந்தான்.
அமர்ந்திருந்த நாற்காலியில் கையை தாங்கி அதில் தாடையை பதித்தவன் அவளை பார்த்து “இங்க பாரு இன்னும் உன்னை நினைச்சு கிட்டு தேவதாச மாதிரி சுத்திவேன்னு நெனச்சியா?? நீங்க மட்டும் உருகி உருகி காதலித்து அப்பன் பாக்குற மாப்பிள்ளைய வெளிநாட்டுல வேலை பார்க்கிறான்.. பணக்காரன்.. சொல்லிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டு போவிங்க.. அப்போவெல்லாம் உங்க காதல் எங்கடி போகுது?? இன்னைய தேதிக்கு உன்னவிட பணக்காரன் நான்!! அதுவும் நீ சொன்ன தகுதி இப்போ என்கிட்ட நிறையவே இருக்கு ஆனா இந்த தகுதியை பார்த்து தான் காதல் வரும்ன்னா அப்படிப்பட்ட காதல் எனக்கு தேவையே இல்லை போடி!!! போ.. போ உங்க அப்பா யாராவது முன் சொட்டை விழுந்த பேங்க் மேனேஜரையோ.. இல்லை தொப்பை விழுந்த ஐடி மாப்பிள்ளையோ பார்ப்பாரு கட்டிக் கொண்டு குடும்பம் நடத்தி புள்ள குட்டிய பெக்குற வழிய பாரு” என்று எள்ளலாக கூறியவன், எழுந்து வாயில் புறம் நோக்கி சென்றான்.
அவனது நக்கலில் சட்டென்று அவளுக்கு ரோசம் மிக கண்களை துடைத்துக்கொண்டு நிமிர்ந்தவள் “சீனியர்!!” என்று கத்தினாள்.
“சீனியர்!! இந்த நாள் உங்க மொபைல்ல குறிச்சி வெச்சுக்கோங்க.. உங்கள விட கலரா ஹைட்டா.. சிக்ஸ் பேக் உள்ள பையனா பார்த்து நான் லவ் பண்ணி.. கல்யாணம் பண்ணி.. புள்ள பெத்து அதுக்கு வினோத்னு பேர் வைக்கல” என்று அவள் சீரியசாக சபதம் போட..
“ஹா.. ஹா.. வினோத்னு வைக்கலையானா விரும்பாண்டினு வையுடி” என்று வயிற்ற பிடித்தப்படி சிரித்தவன் “லவ் பண்ற மூஞ்ச பாரு.. உனக்கெல்லாம் அதெல்லாம் செட் ஆகாது. அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வரமாட்ட” என்று அவளை இன்னும் இன்னும் வெறுப்பேற்றி விட்டு சென்றான் ஷூட்டிங்க்கு.
அவ்வளவு மட்டமா எண்ணி விட்டானே நம்மை பத்தி.. ஷேம்!! ஷேம்!! முதல்ல நாம அர்ஜெண்டா ஒரு பையனை பார்க்கிறோம்.. லவ் பண்ணுறோம் என்று நினைத்தவள். எங்கே போய் தேட.. சிவனேனு ஓஎல்எக்ஸ்.. அமேசான்.. பிப்ளிக்கிர்டுல போய் பார்ப்போமா?  என்று சிந்தித்துக் கொண்டே இருந்தவளுக்கு அதற்கு மேல் வேலைவோட மறுக்க அனைத்தையும் அணைத்து வைத்து விட்டு காரில் புறப்பட்டாள். 
இந்நேரத்திற்கு வீட்டில் கூட யாரும் இருக்க மாட்டாங்க.. தனியே உட்கார்ந்து மனதை இன்னும் குழப்பிக் கொள்வதற்கு வேறு எங்காவது செல்வோமா? என்று பார்வையை சுழட்டிக் கொண்டே வந்தவள் கண்களில் விழுந்தது அந்த பார்க்.
இங்கே செல்வோம் என்று பார்க்குள் நுழைந்தவள் சுற்றிப் பார்த்துக் கொண்டே வந்தாள். விதவிதமான மனிதர்கள், வகைவகையான பேச்சுக் குரல்கள், சிரித்து மகிழ்ந்து விளையாடிக்கொண்டிருக்கும் சிறார்கள் என மனதுக்கு சற்று ஆறுதலாக இருக்க அந்த இடத்தையே சுற்றி பார்த்து கொண்டே வந்தாள்.
அப்பொழுது ஓரிடத்தில் பிள்ளைகளின் இனிய குரல்கள் கேட்க “பாட்டு பாடுறாங்களோ?” என்று மெல்ல அந்த பக்கம் எட்டி பார்க்க.. பல்வேறு வயதுகளில் சிறுவர் சிறுமியர்கள் அமர்ந்து பாடிக் கொண்டிருக்க அவர்கள் எதிரே ஒருவன் நின்று அவ்வப்போது அவர்களோடு கூட  இவனும் பாடி தவறை திருத்திக்கொண்டும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான். பிள்ளைகளுக்கு அவனைப்போல லயம் பிடிபட வில்லை என்றாலும் அவர்கள் ஒருவித சந்தோஷத்தோடு பாடுவதை பார்த்து அவளுக்கும் மனது நிம்மதியாக இருக்க, அவர்களைப் பார்த்தவாறு எதிரில் இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
சிறிது நேரத்தில் அந்த சிறுவர் சிறுமியர்கள் எல்லாம் பாட்டை முடித்துக்கொண்டு கலைந்து சென்றுவிட “அதுக்குள்ள முடிந்துவிட்டதே!!” என்று நினைத்தவாறு மற்ற இடங்களில் விளையாடும் பிள்ளைகளை பார்த்துக் கொண்டிருந்தவளின் அருகில் யாரோ அமரும் அரவம் கண்டு திரும்பிப் பார்த்தவள் அதிர்ந்தாள்.
ஆம் அன்று அவளுக்கு காலில் வைத்தியம் பார்த்த அதே ஆள் தான் இப்பொழுது அருகில் அமரவும்.. சற்றுமுன் பின் பக்கம் மட்டுமே அவனை பார்த்து இருக்க இப்போது அதே சட்டையுடன் இருப்பவனை பார்த்து கையை நீட்டி “பிள்ளைகளுக்கு.. அங்க பாட்டு..” என்று இவள் திக்கித் திணற..
“நான்தான்” என்று தலையசைத்து ஆமோதித்தவன் “இப்போது உங்களுக்கு கால் பரவாயில்லையா? வலி எல்லாம் குறைந்து விட்டதா?” என்று கேட்டான். 
“ஆம் குறைஞ்சிடுச்சு.. லேசா வீக்கம் இருந்தது டாக்டர்கிட்ட காட்டுனேன். இப்போ ஓகே” என்றவள், “நீங்க பாட்டு டீச்சரா?” என்றாள் ஆர்வத்தோடு..
“இல்லை இல்லை நான் வந்து ஐ டி யில் ஒர்க் பண்றேன்.. பாட்டு என்னோட ஃபேஷன். பாட்டுல விருப்பமுள்ள பணம் கட்ட முடியாத குழந்தைகளுக்கு ஃப்ரீயா இங்கே பாட்டு சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருக்கேன்” என்றான் புன்னகையுடன்.
அவன் சொன்ன ஐடி சட்டென்று சித்தார்த் சொன்ன தொப்பை ஞாபகம் வர லஜ்ஜையே இல்லாமல் அவனை தலை முதல் கால் வரை ஆராய்ந்தாள் இவள்!! “சீனியர்.. சொன்னது போல எல்லாம் இல்லை. இவனும் நல்ல உயரத்துடன் ஏன் சீனியரை விட இன்னும் கலராகவும் உயரத்துக்கு ஏற்ற எடையுமாய்  பார்க்க நல்லாவே இருக்கிறான்” என்று நினைத்துக் கொண்டாள்.
அந்த கண நேரத்தில் ஹரிணியின் மூளைக்குள் ஒரு ஐடியா உதயம் ஆக..
“ஐ அம் ஹரிணி!!” என்று அவனை நோக்கி கையை நீட்டினாள். அவனும் “நான் விதுரன்” என்று அவளோடு கை குலுக்கினான்.
“நீங்க யாரையாவது லவ் பண்றீங்களா?” என்று சட்டென்று இவள் கேட்க அவனோ அதிர்ந்து விழித்தான். முதல் முறை ஆக்சிடெண்டில் பார்த்தது, இரண்டாம் முறை இப்போதுதான் இருவரும் பெயரைச் சொல்லி அறிமுகம் செய்து கொள்கிறோம் அடுத்த கேள்வி இப்படி கேட்பாள் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை..
அவனது திகைத்து முகத்தை பார்த்து “அச்சச்சோ தப்பா நினைச்சுக்காதீங்க உங்க கிட்ட ஒரு ஹெல்ப் கேட்கலாம் என்று தான் அது மாதிரி கேட்டேன்” என்றாள்.
ஆசுவாச மூச்சுவிட்டவன், “நானும் பயந்துட்டேங்க.. என்ன ஹெல்ப் வேணும் சொல்லுங்க?” என்றான் ஸ்நேக புன்னகையுடன்..
“உங்க ஸ்மைல் நல்லா இருக்கு” என்று விகற்பம் இல்லாமல் கூறும் அவளை பார்த்து புன்னகைத்தான் விதுரன்.
“பிரச்சனை என்னன்னா லவ்வு தான்” என்றாள் அவள் சோகத்தோடு!!
“லவ் ஃபெயிலியரா?” என்று ஆறுதலாக விதுரன் கேட்க..
ஆமாம் என்று தலையசைத்தவள், சித்தார்த் யார் என்று கூறாமல் சீனியர் சீனியர் என்று கூறியே அனைத்தையும் அவனிடம் கூறி முடித்தாள். இவனுக்கும் ஹரிணியின் தரப்பு நியாயமும் புரிந்தது.. சித்தார்த் தரப்பின் நியாயமும் புரிந்தது. இருவருமே காதலுக்கு வெவ்வேறு அர்த்தங்கள் கற்பித்துக்கொண்டு எதிர் எதிர் துருவங்களாக இருக்கிறார்கள். ஆனால் எதிர் எதிர் துருவங்கள் ஒன்றையொன்று ஈர்க்கும் என்பதை இருவரும் புரிந்துகொள்ளவில்லை என்று நினைத்தவன் அவளுக்கு உதவி செய்வதாக வாக்களித்தான்.. 
“ஆமாம்!! ஹெல்ப் ஹெல்ப்னு சொல்றீங்களே என்ன ஹெல்ப்?” பெரிதாக என்ன ஹெல்ப் கேட்பாள் தன் லவ்வரோட சேர்த்துவைக்க வேண்டும் என கேட்பாள் ஆக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே அவன் கேட்க..
“வேற என்ன எனக்கு லவ்வரா மாறனும்!!” என்றாள் ஹரிணி கூலாக..
விதுரனோ “என்னது??” அதிர்ந்து எழுந்தே விட்டான்.
கற்பார்களா காதலை??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *