ஓ...காதல் நெஞ்சே
அத்தியாயம்-2
ஷ்ரவனும் அஜயும், அதே புன்னகையுடன் ஷ்ரவனுடைய ஃபிளாட்டுக்கு வந்திருந்தனர்…
அங்கயோ ஹரிதா காரை வேகமாக ஓட்டிச்செல்ல…ஏன்டி என்ன பரலோகம் அனுப்பனும்னு முடிவோடதான் என்னைக்கூட்டிட்டு வந்தியா…அப்படி என்னடி இவ்வளவுக்கோபம்…
நான் ஒரே பொண்ணு, அதுவுமில்லாமல் என்னை நம்பி நிறைய பேஷன்ட்ஸ், உங்க ஹாஸ்பிட்டல்லதான் காத்திருக்காங்கம்மா…பார்த்து வண்டியோட்டுமா தாயே!
மெதுவாக காரின் வேகத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தவள்…கடைசியில் அந்த நெட்டக்கொக்குகிட்ட பல்பு வாங்கிட்டனே…அதுதான்.
அவனும் அவன் மூஞ்சியும், என்னையவே டி போட்டுப் பேசுறான்…கல்ட்சர்லஸ்.
நீமட்டும் ஏன் பொதுயிடத்துல அவ்வளவு சத்தம்போட்ட;ஏன்டி எல்லாரையும் கூலா சமளிக்குற நீயேன் இப்படி ஹாட்டா பேசின.
தெரியலை அவனுக்கும் எனக்கும் எதோ வைப்ஸ் செட்டாகலடி…
இன்னைக்கு முழுவதும் அவனைத்தான் பார்த்திருக்கேன்…அவனைப் பார்த்தாலே எரிச்சலாயிருக்கு… இனி இவனை வாழ்க்கையில எங்கயும் பார்க்ககூடாது கடவுளே..என்று தன் தலையை ஆட்டிக்கொண்டாள்…( நீ வேண்டும்போது கடவுள் கொஞ்சம் பிஸியாகிட்டாரும்மா…
உன் வேண்டுதல அவர் கேட்டகவேயில்லை…அதனால இனி தினமும் அவனைப் பார்க்கப்போற)
உள்ளே நுழைந்ததும் அஜயோ அப்படியே முன்னறையில் இருந்த சோபாவில் ஹாயாகப்படுத்துவிட்டான்.
ஷ்ரவனோ உள்ளே சென்று ஃபிரஷ் அப் ஆகிவரவும், அஜய்க் கேட்டான்…
ஏன்டா யு.எஸ்ல யிருந்து நம்ம ஊருக்கு வந்த…அங்க நல்ல சம்பளத்துல வேலை அதைவிட்டுட்டு இங்க வந்திட்ட…எவளாவது வெள்ளைக்காரிகிட்ட மாட்டிக்கிட்டு தப்பிக்க இங்க ஓடிவந்துட்டியோனு நினைச்சேன்…இதைக்கேட்டதும் கையிலிருந்த துண்டை அவன் மேல வீசியெறிந்தவன்…
மேகா அக்கா எப்படிடா உன்னை இங்கவிட்டாங்க?
ஷ்ரவனோ அவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் ஒதுக்கியவன்.
ஃப்ரிட்ஜிலிருந்து இரண்டு பீர் பாட்டிலை எடுத்து ஒன்றை அஜயிடம் கொடுத்துவிட்டு, தானும் அப்படியே சோபாவில் அமர்ந்தவன்…
இங்கயே இருந்திரேன்…நாளைக்கு எப்படியும் ஒரே ஆபிசுக்குத்தான் ஒன்னாப் போகப்போறோம் ….
அஜயோ “ஐயயோ…கீதாம்மா அடி பின்னிடுவாங்க…ஏன்டா நான் நல்லாயிருக்கது உனக்குப் பிடிக்கலையாடா? வீட்டுக்கு போகிறவரைக்கும் அம்மா காத்திட்டிருப்பாங்க…
ஓ…சரி நான் கொண்டுவிடவா எப்படி என்க.
ஆஹான்…நீ கொண்டுவந்துவிட்டா யாரு என்னோட வண்டியை எடுத்துட்டுவருவா?அதுக்கும் ஆள் வைப்பியா நாளைக்கு அதுலதான்டா ஆஃபிஸ்க்கு வரணும், கர் எடுத்துட்டுவந்தா ட்ராஃபிக்ல மாட்டிக்கிட்டு முழிக்கனும்…சரி நான் கிளம்புறேன் என்று சென்றுவிட்டான்.
தனக்கு உணவை ஆர்டர் செய்துவிட்டு அறைக்குள் சென்றவன்…தனது போனை எடுத்துப்பார்த்தான் அதில் ஏகப்பட்ட தவறிய அழைப்பு இருக்க; எடுத்துப் பார்த்துவிட்டு இரண்டு அக்காவும், அவங்கம்மாவும் அழைத்திருந்தனர்…
முதல்ல தனது அம்மாவிற்கு அழைத்தவன்…அம்மாவிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தான்…
ஷ்ரவன் இரண்டுப் பெண்குழந்தைகளுக்கு பின் பிறந்தவன்…வீட்டில் எல்லோருக்குமே செல்லம்…
தேவானந்த் சென்னையில் பெரியபுள்ளி. அவருடைய மனைவி நிருபமா. மூன்று குழந்தைகள் மூத்தது அக்க்ஷரா, அவளை தனது அக்காள் மகனுக்கே கட்டிக்கொடுத்து தன்னோட கம்பேனியிலயே எம்.டி பதவிக்கொடுத்து தன்னுடனே வைத்துள்ளார்…
இரண்டாவது மகள் மேகாவை அமெரிக்காவில் பெரிய பிஸ்னஸ்மேனான
ஆத்விக்கிற்கு கல்யாணம் செய்துக்கொடுத்துவிட்டார், அவள் அங்கயே இருக்கின்றாள்.
அங்கு தங்கித்தான் தன்னுடைய மேல்படிப்பை முடித்து வேலையும் செய்தான் ஷ்ரவன்.
அம்மாவிடமும் தன் பெரியக்கா அக்ஷ்ராவிடமும் பேசிவிட்டு வைத்தவன்…
மேகாவிற்கு அழைக்கைவேயில்லை…அப்படியே சாப்பிட்டுப் படுத்துவிட்டான்…
இங்கு ஹரிதாவோ அவங்கம்மா சுமித்ராவிடம் பாட்டுவாங்கிக்கொண்டிருந்தாள்…
இன்னும் சின்னபிள்ளைனு நினைப்பு ஒரு கம்பெனியில பெரிய பொசிஷன்ல இருக்கறவா மாதிரியா நடந்துக்குறா…என்று…
அவளோ அவங்கப்பாவின் அருகில் சோபாவில் அமர்ந்து சாப்பாட்டுத் தட்டை கையில் வைத்துக்கொண்டு,ர
கொறித்துக்கொண்டிருந்தாள்…
அவங்கம்மா கல்லூரியின் விரிவுரையாளர் எல்லாவற்றிலும் சரியாக நடக்கவேண்டும் என்று இருப்பவர்…அப்பா கிருஷ்ணாவோ… மருத்துவர் ஒரு மருத்துவமனையிருக்கு பெரிசாகவும் இல்லாமல் சிறியதாகவுமில்லாமல்…
அங்குதான் காவ்யாவும் வேலைசெய்கிறாள்…இருவரும் பள்ளிக்காலத்திலிருந்தே தோழிகள்.
கிருஷ்ணா-சுமித்ரா தம்பதிகளுக்கு இரு பெண்குழந்தைகள். பெரியவள் சஹானா திருணம் முடித்து பெங்களூருவிலயே இருக்கின்றாள்.
இப்போது ஹரிதா வெளியே போய் சுற்றிவிட்டு வந்ததிற்குத்தான் சுமித்ரா திட்டிக்கொண்டிருந்தார்…அதெற்கெல்லாம் அசரவேமாட்டாள்…
தனது தகப்பனைப் பார்த்து “நீங்க பொண்ணுப் பார்க்கப்போகும்போதே கொஞ்சம் யோசிச்சிருக்கலாம் டாடி…
இப்போ பாருங்க எப்படி வாய்ப்பேசுறாங்க என்றவள் தனது தட்டிலிருந்த சப்பாத்தியை பிய்த்து வாயில் வைக்கவும்…
ஆமாடி நான் வாய்தான் பேசுறேன்…நீ எங்கப்போய் சுத்திட்டு வந்த…அதை உங்கப்பாகிட்ட சொன்னியா…
சென்னைலயிருந்து வந்தியே உன்னோட பொருட்களையெல்லாம் அடுக்கி வச்சியா?
அப்படியே போட்டுட்டுப் போயிட்ட…
நாளைக்கு வேலைக்குப்போகணுமே எல்லாம் எடுத்து வைக்கணும்னுத் தோணுச்சா உனக்கு…
மம்மி ப்ளீஸ்…எனக்குத் தோணும்போது செய்துக்கறேன்…உங்க ரூல்ஸ்க்கு என்னைக்கொண்டு வரணும்னு முயற்சிப்பண்ணாதிங்க… என்றவள் எழும்பி சென்றுவிட்டாள்.
சுமித்ரா போகும் மகளையேப் பார்த்துக்கொண்டிருக்க…கிருஷ்ணாவோ என்னம்மா இது எப்பவும் நீங்க இருண்டுபேரும் எதிரும்புதிருமா இருக்கீங்க…மாமியார் மருக சண்டைக்கூட நம்ம வீட்ல இப்படியில்ல…என்றதும்…
சந்தடி சாக்குலா உங்கம்மாவ நல்ல மாமியாருன்னு சொல்லறீங்க அப்படித்தான…என்று முறைக்க.
நான் ஒன்னுமே சொல்லலைத் தாயே…
உன்னோட பேச்சுத்திறமையை என்கிட்ட காட்டாத…என்றவர் தொலைக்காட்சியில் கவனம் வைத்தார்.
சுமித்தராவோ நான் பேசினாமட்டும் முகத்தை திருப்பிருங்க…அப்பாவும் மகளும் இவ்வளவு நேரமா பேசிட்டுதான இருந்தீங்க…என்று நொடித்தவர் தனது வேலையைப் பார்க்க சென்றுவிட்டார்.
ஹரிதாவோ தனதறைக்குள் வந்தவள் வாங்கி வந்தப்பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தவளுக்கு காலையில் நடந்த நிகழ்வுகள்தான் மனதில் ஓடியது…
எப்படி அவன்கிட்ட பொது இடத்துல வச்சு சண்டைபோட்டேன். ச்ச என்று தன் தலையைத் தட்டியவள்…ஆனாலும் அந்த நெட்டக்கொக்கு ரொம்பதான்…என்று வேறு கடையில் வாங்கிய துணிகளையும், நாளைக்கு போடவேண்டியத் துணியையும் எடுத்து தனியாக வைத்தாள்…
அவளும் நாளைக்கு புது ஆஃபிசிற்கு போவதால் சீக்கிரமாக போகவேண்டும் என்று படுத்துக்கொண்டாள்…
நன்கு தூக்கத்தில் மொபைலில் அழைப்பு சத்தம்கேட்க…ஷ்ரவன் எடுத்துப் பார்த்துவிட்டு அழைப்பை எடுக்கவில்லை…மறுபடியும் மறுபடியும் அழைப்பு வந்துக்கொண்டிருந்தது…
இவளுக்கு வேற வேலையே இல்லையென்று போனை அணைத்துப் போட்டுவிட்டு மறுபடியும் தூங்கினான்.
காலையில் வைத்த அலாரச்சத்தம் கேட்கவும் எழும்பியவன், மெதுவாக சென்று தனக்கு கெட்டிலில் காபி வைத்துவிட்டு குளித்துமுடித்து அவசரமாகக் கிளம்பி தனது மொபைலை உயிர்ப்பித்து, அம்மாவிற்கு அழைத்தான்…
அம்மா…என்னைக்கு வேலைக்கு சேரப்போறேன்…எனக்காக உங்க கடவுள் கிட்ட வேண்டிக்கோங்க என்று பேசிக்கொண்டிருக்கும்போதே…நிருபமா கேட்டார் ” மேகா நேத்து உனக்குப் போன் பண்ணினதுக்கு எடுக்கலையாம், அவ மேலக்கோபமா இருக்கியா என்ன?
அம்மா காலையிலயே சந்தோசமா இருக்கேன்…பாளீஸ் மூட மாத்தாதிங்க, நான் நைட் கால் பண்றேன்மா” என்றவன் அழைப்பைத் துண்டித்துவிட்டான்.
அஜயிற்கு அழைத்தவன் நான் கிளம்பிட்டேன், வர்றவழியில சாப்பிட்டு வந்திர்றேன் என்று முடித்தவன்…தனது வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
பெங்களூருவின் பிரபலமான ஐ.டி ஆபிஸ்ற்கு சென்றுக்கொண்டிருந்தான்…
ஹரிதா காலையில் எழும்புவதற்குள் சுமித்ரா மூன்று முறை அறைக்குள் வந்து அவளின் முதுகில் தட்டிவிட்டு சென்றார், அம்மு எள
எழும்பு என்று.
பின்பு அவசரவசரமாக எழும்பி அவங்கம்மாகிட்ட போனவள் காபிக் குடித்துக்கொண்டே அவரிடம் பேசியபடியிருந்தவளிடம், ஆபிஸ் எப்படி போவ என்று கேட்க…
கார்ல போறேன் என்றதும்…சுமித்ரா சொன்னார் நேத்தே கார் வேண்டாம்னு சொன்னதுக்கு கேட்காம எடுத்துட்டுப்போன…ரொம்ப நாளு ஆச்சுது…வேண்டாம், நீ ஸ்கூட்டி எடுத்திட்டுப்போ…என்றார்.
இதை சொல்லும்போதே நேத்து மாலில் கார் பார்க்கிங்கில் கார் எடுக்கமுடியாமல் திணறியதும், அந்த நெட்டக்கொக்கு வந்து எடுத்து லாவகமாக ஓட்டியதும் நினைவுக்கு வந்ததும் தலையை உலுக்கினாள்… காலையிலயே
அவனோட நியாபகம் நமக்கு எதுக்கு.
“மா, நான் ஸ்கூட்டியிலப்போகல, ஆட்டோவிலயே போயிக்கிறேன் என்று குளிக்க சென்றவள் …தயாராகி வந்து சாப்பிட ஆரம்பித்தாள்.
சுமி வந்தவர் “வீட்ல காரும், வண்டியும் இத்தனை இருந்தும், நீ வேற ஆட்டோவிலப்போறியா வேண்டாம்டா…அப்பாவ கொண்டு விட்டுட்டுப்போகச்சொல்றேன்..என்றதும் சரியென்று தலையசைத்தவள் எல்லாம் எடுத்துக்கொண்டுவர உள்ளே சென்றாள்…
பார்க்கத்தான் சுமித்ராவை ஹரிதா எதிர்த்துப்பேசுற மாதிரி இருக்கும்…ஆனா அப்படியில்லை…அம்மாவை டென்சன் படுத்துனாதான் அவளுக்கு தூக்கம் வரும்…ஆனா இரண்டுப்பிள்ளைகளும் பெற்றோர் சொன்னாக்
கேட்டுக்கொள்வார்கள்….
ஒருவழியாக ஹரிதா கிளம்பி சுமியிடம் சொல்லிக்கொண்டு காரில் ஏறியவள் தந்தையின் அருகில் அமர்ந்துக்கொண்டாள்.
கிருஷ்ணா “அம்மு, நீ அங்கயிருந்து இங்க வந்தது எனக்கு ரொம்ப சந்தோசம்டா…இங்கயும் உனக்கு நல்ல சூழல் அமைய டாடியோட வாழ்த்துக்களடா, ஆனா ஒன்னுமா கொஞ்சம் அவசரப்பட்டு கோபப்படுறது மட்டும் குறைச்சிக்க, யாரோடக் குணத்தையும் முதல்லயே எடைப்போடாத, அதவச்சித்தான் உனக்கு பிரச்சனையே, அதுதான்டா நீ செய்யுற பெரிய தப்பு…சரியா கவனமாயிரும்மா” அவளும் சரிப்பா என்றவள் இறங்கிக்கொண்டாள்…
அங்கே நுழைவுவியில் எல்லா விசாரிப்பும் முடித்து, அவள் செல்ல வேண்டிய கட்டிடத்திற்கான வழியையும் சொல்லி அனுப்பினர்…
உள்ளே வரவும்…மெதுவாக நடந்து அங்கவுள்ள அந்த சூழலை ரசித்துக்கொண்டே நடந்தாள்…இன்று மட்டுமே ரசிக்கமுடியும், நாளையிலிருந்து
இந்தயிடத்தைக் கடந்துப்போறதுக்கூடத் தெரியாது என்று யேசித்துக்கொண்டே சென்றாள்.
அவள் போகவேண்டிய கட்டிடத்திற்குள் நுழைந்தாள். அங்கயும் இதைப்போன்றே ஸ்க்ரீனிங்க் செய்து உள்ளேப் போவதற்கு கிட்டதட்ட ஒருமணிநேரமாகிற்று…அதன் பின்பு அனுமதிக் கிடைத்ததும் , அவள் சந்திக்கவேண்டிய நபர் இருக்கும் மூன்றாவது தளத்திற்குப் போக லிப்டிற்குள் செல்ல அங்கு நின்றிருந்தவனைப் பார்த்து ஒரு நொடி அதிர்ச்சியானவள் அது காண்பித்துக்கொள்ளாமல், ஒன்றும் பேசாமலயே நின்றாள்…இப்போது முதல் தளத்தில் கொஞ்சம்பேர் ஏற லிப்ட்டிற்குள் இருவரும் நெருங்கி நிற்க வேண்டிய சூழல், நெருங்கி நிற்கும்போதே ஹரிதா அவனை முறைத்துப்பார்க்க, ஷ்ரவனோ அவளைக்கண்டுக்கொள்ளவேயில்லை தன்னுடைய மொபைலில் கவனமாக இருந்தான்…
மூன்றாவது தளம் வந்ததும் ஹரிதா இறங்கி திரும்பி பார்த்தாள், ஷ்ரவன் பின் தொடருகின்றானா என்று…இல்லை என்றதும், நாமதான் அவனைத் தப்பா நினைச்சிட்டமோ என நினைத்தவள்…அவன் எதுக்கும் இங்க வந்திட்டுட்டு போறான் நீ ஏன் டென்சனாகுறடி என்று தனக்குத்தானே சொல்லிகாகொண்டு, அவர் பார்க்கவேண்டிய நபரின் அனுமதிக்காக காத்திருந்தாள்.
ஷ்ரவன் ஐந்தாவது தளத்தில் இறங்கி தான் சந்திக்கவேண்டிய நபரை பார்ப்பதற்கு அமர்ந்திருந்தான்…
இருவரும் அவரவர் வேலையில் சேர்ந்தனர்…அதற்கே மதியமாகிற்று.
ஷ்ரவனுக்கோ பசி புட்கோர்ட் சென்று தனக்கு தேவையானைது வாங்கிக்கொண்டு அமர்ந்தவன் அஜய்யை அழைத்து விசயத்தைச் சொல்லி அங்கே வரச்சொன்னான்…
அஜயும் ஷ்ரவனும் பேசிக்கொண்டே சாப்பிட…திடீரென்று அவனருகில் ஒரு பெண் கையில் சாப்பாடுடன் தடுமாறுவதைப் பார்த்து சட்டென்று பிடித்து தனது அருகிலிருந்து சேரில் இருத்தினான்…அந்தப்பெண் இவனுக்கு நன்றி சொல்லிவிட்டு முகத்தைப்பார்க்க இவனும் திரும்பிப்பார்க்க…
இருவரும் முறைத்துக்கொண்டனர்…அஜய் அந்தப்பெண்ணைப் பார்த்ததும்…ஷ்ரவன் சொன்னமாதிரி இவ வேதாளமா இருப்பாளோ…ஐயோ எங்க முதுகுலத் தொங்கிட்டு வர்ற மாதிரி நேற்றிலிருந்து பின்னாடியே வர்றாளே…என்று நினைத்தவன்…
மிஸ்…நீங்க இங்கதான் வேலைப் பார்கறீங்களா? என்று யேசனையாக வார்த்தைகளை இழுக்க…
எஸ்…இன்னைக்குத்தான் இங்க ஜாயின் பண்ணேன்..டேடா அனலிஸ்ட் டீ.எல் என்க…அஜய்க்கோ ஒரு நிமிடம் தலைசுத்தல்…கடவுளே எனக்கே பாறையா வந்து நிற்காளே என்று…
ஷ்ரவனுக்கோ…அப்படியா வாடி என் குரங்கே…எப்படினாலும் என்கிட்ட வந்த்துதான ஆகனும்…என்று நினைத்தவன் சாப்பிட்டு முடித்து அஜயிடம் தலையசைத்து விட்டு சென்றான்…
அஜயோ ஹரிதாவின் முன்பாக அமர்ந்திருக்க முடியாமல் அவனும் எழும்பி சென்றுவிட்டான்…
அவளுக்கு அங்கு யாரையும் தெரியாது, அதனால தனியாகவே சாப்பிட்டு சென்றாள்.
ஹரிதாவிற்கு கம்ப்யூட்டருடன் சின்னதாக ஒரு கேபின் கொடுத்திருக்க, அதில் வேலை செய்துக்கொண்டிருக்க…
எல்லோருக்கும் குறிப்பாக டீம் லீடர்களுக்கு தகவல் வந்தது…
மீட்டிங்க் இருக்கு…அதனால கான்ஃபரன்ஸ் ஹாலிற்கு வருமாறு என்று…
வந்த முதல் நாளே மீட்டிங்கா? என்று யோசித்தவள்…இது சகஜம்தான…என்று நினைத்தவள்…எழும்பி சென்றாள்…
அங்கு மற்ற டீம் லீடர்களும் அமர்ந்திருக்க…உள்ளே வந்தது ஷ்ரவன், மற்றும் மேனஜர் உள்ளே வந்திருந்தனர்…
ஹரிதாதான் திரு திருவென விழித்தாள்…மேனஜர் ஷ்ரவனை அறிமுகப்படுத்தி வைத்தார்….
இது மிஸ்டர்.ஷ்ரவன் எம்.எஸ்.,எம்.பி.ஏ .யு.எஸ்.ஏ.லயிருந்து, நம்ம கம்பேனியில் ஐ.டீ.டைரக்கடரா வந்திருக்காக…
இனி ஷ்ரவன்தான் உங்களை கைடு பண்ணுவாங்க…என்றதும்.
ஷ்ரவன் எழுந்து மேனஜருக்கு நன்றி சொல்லிவிட்டு தங்களது வேலை சம்பந்தமாக பேசிவிட்டு…எல்லாரையும் அறிமுகப்படுத்த சொல்லி விபரங்களை கேட்டுக்கொண்டு மீட்டிங்கை முடித்துக் கொண்டான்.
ஹரிதாவோ தன் இடத்திற்கு வந்தவள்…இந்த நெட்டக்கொக்கு எனக்கு மேலயா இருக்கான்…ச்ச…என டென்சன் ஆனால்…
உடனே காவ்யாவிற்கு அழைத்து விபரம் சொன்னவள், சிறிது நேரம் அப்படியே தலையில் கைவைத்து அமர்ந்தாள்…
தொடரும்…
