ஓ...காதல் நெஞ்சே
அத்தியாயம்-1
பெங்களூருவின் பிராதான சாலையில் உள்ள அந்த பெரிய வணிகவளாகத்தின்
உள்ளே உள்ள ஒரு பிரபல ஆயத்த ஆடையின் கடைக்குள் நுழைந்தான் ஷ்ரவனும் அவனுடைய நண்பன் அஜயும்…
அஜய் கேட்டான் டேய் யு.எஸ்.லயிருந்து வந்து இங்க ட்ரஸ் எடுக்கனு வந்திருக்கியே…உன்னை என்ன செய்ய…அங்கயிருந்தே நல்ல பிராண்டடு ட்ரஸ் எடுத்திட்டு வந்திருக்கலாம்…நீ என்னடானா லீவுலத் தூங்கிட்டிருந்தவனை எழுப்பி இங்க கூட்டிட்டு வந்திருக்க” என்று பேசியபடியே வர… ஷ்ரவன் தனக்கு ஏற்ற ஆடையைத் தேர்ந்தெடுக்க… அவன்பின்னே இவன் சுற்றி சுற்றி பேசிக்கொண்டிருந்தான்…
ஷ்ரவனோ தேர்ந்தெடுத்த ஆடையைப்போட்டுப் பார்க்க ட்ரையல் ரூமிற்குள் சென்றவன் ஒரு டீஷர்ட் போட்டுக்கொண்டு வெளியே வந்து அங்கே நின்ற அஜயிடம் எப்படிடா இருக்கு என்று கேட்க , அவனோ ஷ்ரவனைப் பார்த்தவிட்டு, அவனின் அடுத்தப்பக்கம் பார்வையைச் செலுத்த, திரும்பி பார்த்தவனுக்கு சிறு அதிர்ச்சி…
பக்கத்து ட்ரையல் ரூமிலிருந்து வந்தப்பெண் இவன் அணிந்திருந்த அதே கலர், அதே எழுத்துக்கள் கொண்ட டீஷர்ட் போட்டிருந்தவள் தனது தோழி காவ்யாவிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்
எப்படி இருக்கு நல்லாயிருக்கா என்று…
இருவரும் ஒருவரைவொருவர் பார்த்ததும், நம்மளை மாதிரியே ட்ரஸ் போட்டிருக்கான் என்ற யோசனையோடே… உள்ளே சென்று வேறுமாற்றி வந்து அவரவர் தோழமையிடம் காட்டிக் கேட்க…இப்போதும் காவ்யா மற்றும் அஜய் இருவரின் பார்வையும் பக்கத்தில் நின்றிருந்தவர்களை சுட்டிக்காட்ட….
மறுபடியும் இருவரும் திரும்பிப்பார்க்க…இப்போதும் இருவரும் அணிந்திருந்த சட்டையின் கலர், டிசைன் எல்லாமே ஒன்றுபோல பேட்டிருந்தனர்.
இப்போது அந்தப்பெண் ஷ்ரவனிடம் நேரடியாகவே கேட்டாள்…என்ன சார் பொண்பிள்ளைகளைத் தொடர்ந்து வருவீங்களோ…அதெப்படி நான் எடுத்ததையே நீங்க எடுக்க முடியும் என்று சத்தம்போட…
உன்னை எதுக்கு நான் பின்தொடரணும், நீயெல்லாம் அந்தளவுக்கு பெரிய அழகியில்ல சரியா…நான் அப்படிப்பட்ட ஆளுமில்லை என்று அவனும் எகிற…
கடையின் ஊழியர் வந்து…மேடம் மேடம் சத்தம்போடாதிங்க…நீங்க இரண்டுபேரும் எடுத்திட்டு வந்தது ஜோடிகளுக்கான கலெக்ஷன்ல இருந்து…அதுதான் ஒன்றுபோல இருக்கு…
உங்களுக்கு வேணும்னா எடுங்க… என்றதும்…
அந்தப் பெண்ணோ திரும்பிப்போய் அவன் எடுத்தமாதிரியானது எனக்கு வேண்டாம் என்று வைத்துவிட்டாள்…
ஷ்ரவனோ நான் போடுறமாதிரி வேறயாரும் போட்ருக்ககூடாது…என்றவன் எடுத்ததை அங்கயே ஊழியரின் கையில் கொடுத்துவிட்டு வெளியே வந்துவிட்டான்…
எப்படிச் சத்தம்போட்டுப்பேசுது பாரு பொது இடம்னு இல்லாம என்று பொருமியவன்..வெளிய வந்தவன் நடந்துக்கொண்டிருக்க…அஜய் அவன் கையைப்பிடித்து வா ரெஷ்ட்ராண்ட்க்குப் போவோம்…என்று அழைத்துச் சென்றான்…
இருவருக்குமே லேசாக பசியாகயிருந்தது, முதலில் ஜூஸ் ஆர்டர் பண்ணுவோம்…என்று ஷ்ரவன் தனக்குப் பிடித்த ஸ்ட்ராபெர்ரி ஜூஸை ஆர்டர் செய்தான், அஜயோ ஆப்பிள் ஜூஸ் ஆர்டர் செய்திருந்தான் …அவர்களின் ஆர்டரை சர்வர் கொண்டு வைத்ததும்…
ஸ்ரவன் ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் தனது கையில் எடுத்துக்கொண்டான், அஜயோ முழித்துக் கொண்டிருந்தான்… என்னவென்று பார்க்க அவன் ஆர்டர் செய்திருந்த ஆப்பிள் ஜூஸிற்குப் பதிலாக ஐஸ்கிரீம் வந்திருந்தது…
அதற்குள் பின்பக்கமாக இருந்த ஒரு டேபிளில் இரு பெண்கள் தங்கள் ஆர்டரில் ஐஸ்கிரீமிற்குப் பதிலாக ஆப்பிள் ஜூஸ் வந்திருக்கு என்று சர்வரிடம் புகார் செய்யவும்…
ஷ்ரவனும் அஜயும் திரும்பிப் பார்க்க, அங்கு துணிக்கடையில் சண்டையிட்ட அதே இரு பெண்கள் அங்கு இருந்தனர்…
அவர்களும் இவர்களைப் பார்க்க இருவருக்கும் புரிந்துப்போனது, அவர்கள் இருவரும் ஆடர் செய்த உணவு மாறி இருந்தது…
அந்தப் பெண்ணோ வேகமாக எழும்பி வந்தவள் “என்னடா நினைச்சுட்டு இருக்கீங்க போற இடமெல்லாம் வந்து கன்பியூஸ் பண்ணீட்டு இருங்கீங்க, என்று சத்தமிட்டு சண்டைப்போட்டாள்…
ஷ்ரவனுக்கோ இப்படி பொது இடத்தில் சத்தம் போட்டு பேசுவது பிடிக்காது…அதுவும் மரியாதை இல்லாமல் அவள் பேசியதும் கோபம் கொண்டான்.
தனது கையின் சட்டையை மேலே ஏற்றி விட்டவன் “என்னடி நினச்சிட்டு இருக்க பொது இடத்தில் எப்படி பேசணும் தெரியாது, அதுவும் மரியாதை இல்லாமல் பேசற…நாங்க போற இடமெல்லாம் பின்தொடர்ந்து வந்துட்டு , நீ எங்கமேலப் பழிபோடுறியா… கொஞ்சம் வாட்டசாட்டமா அழகா பசங்க இருந்தா இப்படித்தான் பின்னாடி வருவீங்களா?
மரியாதை இல்லாம பேசுற
… உங்க வீட்ல உனக்கு மரியாதையா பேசுவதற்கு சொல்லித் தரலையா?என்று எகிறி பேசினான்.
அந்தப் பெண்ணோ “ராஸ்கல் பொண்ணுங்ககிட்ட எப்படி பேசுறதுனு தெரியல… டி போட்டு பேசுற. கொஞ்சம் அழகான பெண்களை பார்த்த பின்னாடி வால் பிடித்து அலையுற, உனக்கு எதுக்குடா மரியாதை டொமாட்டோ என்று அவளும் சண்டைக்கு போக… அவளது தோழி காவியாவும் அவளதுக் கையைப்பிடித்து…ஹரிதா ப்ளீஸ் வேண்டாம்.
பொது இடத்தில் இப்படி சத்தம் போடாத… சண்டை போட வேண்டாம் நம்ம வெளியப்போவோம்..
எல்லோரும் நம்மளைத்தான் பார்க்கிறார்கள் வா… என்று அவளை பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே செல்ல முயன்றாள்.
ஷ்ரவனையும் அஜய் இழுத்து உட்காரவைத்தான்…
அவர்களது ஆர்டரை மாற்றிக் கொடுத்த சர்வர் வந்து மேம்…தப்பா நினைச்சுக்காதீங்க இரண்டுலயும் ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் இருக்கவும் மாற்றி வச்சுட்டேன்.. பிரச்சனை பண்ணாதீங்க என்று மன்னிப்புக் கோரவும்…. இரு பெண்களும் வெளியே வந்தனர்…
ஷ்ரவன் நினைத்தான் …ஓஓ .. இவ பெயரு ‘ஹரிதா’வா…இவளுக்கு யாரு இப்படி அழகான பேரை வச்சது, ஆளு அழகா இருந்தப்போதுமா, எப்படி வாய்ப்பேசறா என்று நினைத்தவன்….ரவுடி ரங்கம்மா.
நான் எதுக்கு இவளை நினைக்கிறேன் என்று தனது சிந்தனைக்கு தடைப்போட்டான்… மறுபடியும் இருவரும் ஆர்டர் செய்து சாப்பிட்டு முடித்து வெளியே வந்தனர்…இப்போதும் ஷ்ரவனின் முகம் கடுகடுவென்று இருக்க அதை பார்த்த அஜயோ “என்னடா மச்சான் இன்னும் கோவமா, அதையே நினைச்சுட்டு இருக்கியா? விடுடா… இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் தப்பா புரிஞ்சுகிட்டீங்க… இருந்தாலும் அந்த பொண்ணு பேசினது கொஞ்சம் அதிகம் தான் விடுடா …என்று வெளியே வந்தார்கள்.
ஷ்ரவனை சமாதனப்படுத்தியவன்…
இன்னைக்கு லீவை சந்தோசமாகக் கடத்துவோம்…நாளையிலிருந்து.. ஆபிசுக்கு ஓடணும்..என்று சொன்னான் அஜய்..
வாடா படம் பார்த்துட்டு போவோம் என்ற அஜய்; ஷ்ரவனையும் அழைத்துக்கொண்டு அந்த மாலில் இருக்கும் சினிமா ஹாலிற்குள் டிக்கெட் எடுத்து நுழைந்தனர்…
உள்ளே சென்று இருவரும் அமர்ந்து படத்தில் கவனத்தை செலுத்தினார்கள் இடைவேளை நேரத்தில் பாப்கார்ன் வாங்கிக்கொண்டு வந்து அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டே… சினிமா பார்க்க ஷ்ரவனின் இடது கை பக்கமாக யாரோ ஒருவர் வந்து அமரவும் …யாருன்னு சரியாக இருட்டில் கவனிக்கவில்லை.. “எப்படிடி இருட்டுக்குள்ள கரெக்டா வந்து உட்கார்ந்து இருக்க, இந்த இருட்டுல சீட்டு கண்டுபிடிச்சு வர்றதுக்குள்ள போதும் போதும் என்றாகிட்டுது… நீ எப்படி அதுக்குள்ள பாப்கார்ன் வாங்கிட்டு சரியா வந்து உட்காராந்த என்றவாறே… அவனின் கையிலிருந்த இருந்த பாப்கார்னை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள்.
இதைக்கண்ட ஷ்ரவன் என்னடா இது, யாரு என்கிட்டயிருந்து எடுத்து சாப்பிடுறது …அஜய் இந்தப்பக்கம்ல இருக்கான்…இது யாரு என்று திரும்பிப் பார்க்க இருட்டில் ஒன்றும் தெரியாததால்…. தன் மொபைலில் டார்ச் லைட்டை உயிர்ப்பித்து பார்க்க அங்கு அமர்ந்து இருந்ததோ ஹோட்டலிலும் துணிக்கடையிலும் சண்டையிட்ட அதே பெண்”ஹரிதா”…
இப்பொழுது ஷ்ரவன் தலையில் கை வைத்துக் கொண்டான்.. என்னடா இது எங்க போனாலும் இந்த பொண்ணு நம்மள சுத்திவந்து நிக்குது … அவளும் இப்பொழுது அந்த சிறு வெளிச்சத்தில் ஷ்ரவனின் முகத்தை பார்க்க அதிர்ந்து இருந்தாள்…
எந்த சீட்டு என்று பார்த்தவள்…தன் தோழி எங்கயிருக்காளோ என்று எழுந்துப் பார்க்க அவளுக்குத் தெரியவில்லை…
அதற்குள் “என்னங்க மேடம் …நான் உங்கப் பின்னாடி வர்றேனு அந்த எகிறு எகுறுனீங்க…பார்த்தால் நீங்கதான் எங்கப்பின்னாடியே வர்றீங்கபோல என்று சத்தம் போடவும், அஜய் என்னவென்று எட்டிப்பார்க்க…ஐயோ இந்தப்பொண்ணா…என்னங்கடா இது வேதாளம் மாதிரி எங்களையே சுத்தி வருது என்றவன்…
ஹரிதா இப்போ அமைதியாக “சாரி இருட்டுல சீட்டு மத்திவந்து உட்கார்ந்திட்டேன், கொஞ்சம் அந்த டார்ச் லைட்ட காண்பிக்க முடியுமா, என்று மென் குரலில் கேட்க…முறைத்துக்கொண்டே வெளிச்சம் காண்பிக்க எழும்பி காவ்யாவிடம் செல்ல…திரும்பி ஷ்ரவனைப் பார்த்து …போடா டேய் என்று கூறிவிட்டு ஓடிவிட்டாள்.
அஜய் அவனைப் பார்த்து சிரிக்க…திமிருப்பிடிச்சது ஒரு நன்றிக்கூட சொல்லாமா..போடானு சொல்லிட்டுப் போகுதுப் பாரு…
இதையெல்லாம் பெத்தாங்களா இல்ல ஆர்டர் பண்ணி வாங்கினாங்களோ…
என்று வாயில் வந்தக் கொஞ்சம் ஆங்கில நல்ல வார்த்தைகளால் அர்ச்சித்தான்…
கோபம் வந்தா இப்படித்தான ஆங்கிலத்தில் நல்ல வார்த்தைகளைப் பேசுவான்…
படித்ததெல்லாமே ஆங்கிலவழிக்கல்வி…தமிழ் பேசமட்டுமே வரும் அவனுக்கு…
படம் முடித்து வெளிய வரவும்… அஜயிடம் பேசியவன்…என்னோட ஃபிளாட்டுக்கு வந்திட்டுப்போறியா எப்படி…இல்ல அம்மாத் தேடுவாங்களா என்று பேசியளடியே வெளியே வந்தவன்…
தனது பி.எம்.டபுல்யூ… பைக்கை ஸ்டார்ட் பண்ணவும், பின்னாடி இருந்த அஜய்…இந்த பைக் ஓட்டுறதுக்கே தனியா சாப்பிடனும்டா…பேசாம என்னோடக் கார்லயே வந்திருக்கலாம் என்று பேசிக்கொண்டே பார்க்கிங்கிலிருந்து வெளியே வண்டியை எடுத்து வரவும்… ஒரு கார் அவனது பைக்கிற்கு முன் வந்து நிற்கவும், எரிச்சலடைந்தவன்: கார் ஓட்டத்தெரியாதவன் கையில் எல்லாம் காரெடுத்துட்டு வந்திடுறானுங்க என்று நக்கலடித்துவிட்டு…ஹார்ன் வேகமாக அடிக்கவும்…அந்தக் காரிலிருந்து எட்டிப் பார்த்து கொஞ்சம் பொறுங்க என்று கையைக் காட்டி சொல்லிய முகத்தைப் பார்த்தவன்…
டேய் என்னோட ராசிக்கு இன்னைக்கு என்னடா போட்டிருந்துச்சு என்று பின்னாடியிருந்தவனிடம் கேட்க..ஏன்டா இப்போ அதை கேட்குற…
அதுவா அங்க முன்னடிப்பாரு அந்த ரவுடி ரங்கம்மாதான் காரை பார்க்கங்கிலிருந்து ஒழுங்கா எடுக்கமுடியாம…நமக்கு நந்திமாதிரி நிக்கிறா…
அஜயோ என்னது! என்று ஷாக்கானவன்…
இவா எப்போ காரை எடுத்து நம்ம எப்போ போறது என்று தனது பைக்கில் இருந்தவன் தனது ஹெல்மெட்டோடு இறங்கியவன்…காருக்கு அருகில் சென்று தனது சைகையால் கேட்க. அவளும் அடையாளந்தெரியாமல்…வெளிய எடுக்க முடியல என்க…அவளைத் தள்ளி இருக்கச் சொல்லிவிட்டு காரை லாவகமாக ஓட்டி வெளியக்கொண்டுவந்து விட்டவனுக்கு…
ஹரிதா நன்றி சொல்லவும்…
தனது ஹேல்மெட்டை இப்போது கழட்டித் தனது முகத்தைக் காண்பித்து புருவம் உயர்த்தி எப்படியென்றுக் கேட்க…
ஹரிதாவின் முகம் போனபோக்கைப் பார்த்து…நக்கலாக சிரித்தவன்… தனது பைக்கை ஓட்டி அவளதுக் காரைத் தாண்டிச் சென்றான்…
பைக்கில் செல்லும்போதே ஷ்ரவன் சிரித்தான்…கடைசியில அவ முகத்தைப்பார்க்கணுமே…இஞ்சித்தின்னமாதிரி…ஹாஹாஹா…பல்பு வாங்கிட்டா நம்மக்கிட்டயே…
ஹரிதாவோ கடைசியில அந்த நெட்டக்கொக்குகிட்ட பல்பு வாங்கிட்டமே என்று தனதுக் கோபத்தைக் காரின் வேகத்தில் காண்பித்தாள்.
தொடரும்…
