சுந்தரரின் செல்லம்மா
7. செல்லம்மா….
“இங்க பாருங்க சின்ன மாமா. நான் உங்களை மாதிரி எல்லாம் பொறுமையா இருக்க மாட்டேன். பெரிய மாமாக்கு கல்யாணம் முடிந்ததும், நேரா எங்க அப்பா கிட்ட போய், எனக்கு சின்ன மாமாவை தான் பிடித்து இருக்கு. அவரை தான் கல்யாணம் செய்துப்பேன்” இப்படி சொல்லிடுவேன்.
“நீ இது மாதிரி சொன்னால் பரவாயில்லை. ஆனால் முன்பு சொன்னீயே அதை தான் என்னால் ஏத்துக்க முடியல” இன்னும் அவனுக்கு அதிர்ச்சி நீங்கவில்லை.
“அதுவா அது அவர் எதுக்கும் ஒத்துக்கலைனா? இப்படி தான் சொல்லுவேன்” தீவிரமாக சொன்னாள்.
“ஏண்டி இப்படி?”
“மாமா உங்களுக்கு எங்க அப்பாவை தெரியாது. நான் சொன்னா உடனே கல்யாணம் செய்து வைப்பாரா? வா மா மகளே, இதோ உன் அத்தை பெத்த ரத்தினம், கைய பிடித்து கொடுப்பாராக்கும். யாராவது மாப்பிள்ளைனு கூட்டிட்டு வந்தால் எனக்கு ஏற்கனவே என் சின்ன மாமாவோடு கல்யாணம் ஆயிச்சுனு சொல்லுவேன்” அவள் சொன்னதும்,
“அப்பவும் அவர் கேட்கலைனா?”
“இது பாய்ண்ட். அவர் கேட்கமாட்டார். அப்போ தான் உங்க பிள்ளை என் வயித்துல வளருதுனு சொல்லுவேன்” சொன்னவள் அங்கு விற்ற நாவல் பழத்தை வாங்கி ருசிக்க ஆரம்பித்து விட்டாள். அவள் இதை மறுபடியும் சொல்லவும், அவனுக்கு இதயம் எங்கேயும் வெளியே குதித்து விடுமோ என்று பயத்தில் அந்த இடத்தில் கையை வைத்து பிடித்து கொண்டான்.
“அடியே அடங்காதவளே, அதிரடியா இப்படி ஏதும் செஞ்சுடாத. அண்ணா கல்யாணம் முடியட்டும். ஏற்கனவே அப்பாக்கு விசயம் தெருஞ்சுருச்சு”
“இது எப்போ மாமா?”
“நான் இப்போ இங்க பேசுறது கூட நான் வீட்டுக்கு போறதுக்குள்ள அவருக்கு விசயம் போயிடும்”
“மாமா ஒன்னும் சொல்லலையா?”
“அவருக்கு சந்தோசம் தான். நல்லதே நடக்கட்டும் சொன்னார்”
“எங்க மாமானா மாமா தான். உங்க மாமாவும் தான் இருக்காரே” அவ அப்பாவையே குறை சொன்னாள்.
“அதனால் தான் அவர் வீட்டு மருமகள்னு உனக்கும் அண்ணிக்கு எடுத்த மாதிரியே புடவை கூட எடுத்தாச்சு”
“அப்படியா மாமா?”
“ஆமா அப்பா தான் அம்மா கிட்ட உன் அண்ணன் மகளுக்கும் எடு. அதுவும் நமக்கு மருமகள் தான். ஒரே மாதிரி எடுக்க சொன்னார்”
“அத்தைக்கு சந்தேகம் வரலையா?”
“அப்பா எது சொன்னாலும் அம்மாக்கு வேதவாக்கு தான்”
“ஏன் மாமா நான் ஒன்னு கேட்கட்டுமா?”
“எதா இருந்தாலும் கொஞ்சம் இதமா கேளு தாயே. நீ என்ன நேரத்தில் எந்த இடியை இறக்குவனு தெரிய மாட்டேங்குது” அவனுக்கு அவள் சொன்ன செய்தியை இன்னும் ஏற்க முடியல.
“எனக்கு அந்த அத்தையை பார்க்கனும்”
அவள் சொன்னதும் இவனுக்கு கண்கள் விரிந்தது.
“என்ன மாமா முழிக்குறீங்க?” அவளின் கைகளை பற்றி கொண்டு,
“அச்சு நீ இப்படி கேட்டது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா. நீ எதுக்கு பார்க்கனும்னு சொன்னேனு தெரியாது. ஆனால் அதில் எந்த கோபமோ, வெறுப்போ இருக்காது.
எங்களால் எப்பவுமே எங்க ரதிம்மாவை விட முடியாது. எங்களுக்கு எப்படி அவுங்க முக்கியமோ, அதே மாதிரி எங்கள கட்டிட்டு வர பொண்ணுங்களும் நினைப்பாங்கனு சொல்ல முடியாது. ஆனால் நீ இப்படி கேட்டதே எனக்கு பிடித்து இருக்கு” அவனுக்கு அவுங்க ரதிம்மாவை நினைத்து குரல் கூட பிசறியது.
தனது கைகளை பற்றி கொண்டு பேசிய சின்ன மாமாவின் மனநிலை புரிந்து கொண்டாள். சற்று நேரம் முன்பு, இவள் பேசிய பேச்சுக்கு கூட இவ்வளவு மனம் நெகிழ்ந்து பேச வில்லை. ஆனால் ரதியை சொன்னவுடன் அவனின் குரல் மாற்றமே அவளுக்கு தெரிந்தது, அவர் இந்த குடும்பத்தில் எந்த உயரத்தில் இருக்கிறார் என்று.
அவனை சகஜமாக கொண்டு வர நினைத்து, “கவலையே படாதீங்க மாமா.
அந்த அத்தை கிட்ட சண்டை போட்டு கூட நான் நம்ப கூட கூட்டிட்டு வந்துரேன்”
“யம்மா பரமதேவதையே. என் லெஷ்மி அம்மா கூட ஏதோ நீ பேசுனா திருப்பி பதில் பேசுவாங்க. எங்க ரதிம்மா ரொம்ப அமைதி வாயே திறக்க மாட்டாங்க. அதனால் உன் அதிரடியை அங்கு காட்டாதம்மா” கொஞ்சவே தொடங்கி விட்டான்.
அவன் இப்படி சொல்லவும் அவளுக்கு சிரிப்பு வந்துட்டு, அவளுடன் அவனும் சிரிக்க தொடங்கினான்.
ஆனால் எதற்குமே வாய் திறக்காத ரதி இவர்கள் விசயத்தில் அமைதி காப்பாளா?
இல்லை மருமகள் போல் அதிரடியை காட்டுவாளா? எல்லாம் இந்த அல்லிராணியின் ஆட்டத்தை பொறுத்து அமையும்.
சிரிப்பை கைவிட்டவன், “அர்ச்சனா நீ எனக்கு மட்டும் தான். அதை யாராலும் மாற்ற முடியாது. அப்படி நினைப்பவர்களையும், நான் விட மாட்டேன். எனக்கு என் குடும்பம் எவ்வளவு முக்கியமோ, அந்த குடும்பத்தில் சேர போகின்ற நீயும் எனக்கு முக்கியம். நம்ப வாழ்கை நல்ல படியாக ஆரப்பிக்கனும். அதற்கு தடையாக யார் வந்தாலும் நான் விட மாட்டேன். நீ கவலை படாதே” அவளுக்கு தைரியம் அளிப்பது போல் அவனுக்கு அவனே தைரியம் சொல்லி கொண்டான்.
சுந்தரமும், லெஷ்மியும் மருமகளுக்கு தாலி மற்றும் சில நகைகளை வாங்க சென்றனர். முதன் முதலாக நடக்கும் சுபநிகழ்ச்சி அல்லவா? அதனால் ஊரையே கூட்டி, தேர் இழுக்க அனைத்தும் துரித கதியில் நடந்தேறியது.
ஊரை மட்டும் தான் கூட்டுவார். ஆனால் தேரை இவர்கள் குடும்பம் மட்டும் தான் இழுப்பார்கள். அதில் யாரையும் உள்ளே நுழைந்து பிரச்சினைகள் செய்ய இடமளிக்க மாட்டார்கள்.
“எத்தனை பவுனில வாங்கனும் லெஷ்மி?”
“நீங்க பார்த்து சொல்லுங்க அத்தான்.
உங்களுக்கு தெரியாததா?”
பின் இருவரும் கலந்தாலோசித்து நகைகள் வாங்கினார்கள். பின் அங்கு இருந்த ஒரு அட்டியலை பார்த்தவுடன் அதை லெஷ்மிக்கு வாங்க நினைத்தார்.
“உனக்கு அது மாதிரி போட்டால் அழகா இருக்கும் வாங்கிக்க” எத்தனை வயது ஆனால் என்ன, அப்பவும் ஒருவருக்கு ஒருவர் அழகு தானே.
“போங்க அத்தான். அதெல்லாம் சின்ன குமரிகள் போடுறது. எனக்கு போய் அதை போட சொல்லுறீங்க” சிணுங்கிய மனைவியை காதலுடன் பார்த்து,
“நீ எப்பவும் குமரி தான் எனக்கு. மற்றவர்களை ஏன் நினைக்குற. நான் என் பொண்டாட்டி க்கு வாங்கி தரேன். இதுல எவன் என்ன சொல்லுறது. ஆனாலும் நீ இப்படி சிணுங்குறது கூட அழகாதான் இருக்க”
“அய்யோ அத்தான் எங்க வந்து என்ன பேச்சு பேசுறீங்க. சத்த சும்மா இருங்களேன்” அவருக்கு தனது அத்தானை நினைத்து வெட்கம் வந்தது.
அவரும் மனைவியின் வெட்கத்தை பார்த்து சிரித்துக் கொண்டே அந்த நகையையும் வாங்கி கொண்டு தான் வீடு வந்தனர்.
“செல்லம்மா” இந்த அழைப்பு காதில் விழுந்தது தான் தாமதம், எங்கு இருந்தாளோ அந்த குரலுக்கு வில்லில் இருந்து புறபட்ட அம்பை போல ஓடிடோடி வந்தாள் அவரின் மாமி.
வந்தவள் நான்கு நாட்களாக பார்க்காத ஏக்கம், தன் தலைவனை காணாத தலைவி பசலை நோய்க்கு உட்பட்டு, காணப்பட்டது போல பொலிவிழந்து காணப்பட்டாள்.
வந்தவள் நடுகூடத்திலே அவரின் நெஞ்சிலே சாய்ந்து, அவளது இரு கை கொண்டு அவரை இறுக்கி கொண்டாள்.
ஊருக்கு சென்ற தனது தகப்பன் நாலு நாட்கள் கடந்து வீட்டுக்கு வரும் போது அந்த குழந்தைகள் எப்படி தனது தந்தையை ஓடி வந்து கால்களை கட்டிக்கொள்ளுமோ அப்படி இருந்தது இரதியின் செய்கை.
இரதியின் தவிப்பு புரிந்தது அந்த மீசை காரருக்கு. தனது கைகளில் உள்ள பையை அப்படியே வைத்துவிட்டு தானும் தன்னுள் இறுக்கி,
தனது செல்லம்மாவை!!
தனது மாமியை!!
தனது குட்டி பொண்ணை!!
நான்கு நாட்களாக வந்து பாராததை!! பார்த்தவுடன் பரவசமடைந்தார்!!!!
பட்டு மேனியும்!!
பவள வாயும்!!
பார்க்க துடிக்கும்!!
பச்சை நரம்புகள் தெறிக்கும்!!
பார்த்தாலே!!
பட்டென்று சூழும் காமமும்!!
பட்டாடை அணிந்த!!
பேரிளம் பெண்ணை!!
பார்த்தவுடன்!!
பரவசமடைந்தார்!!!!
தன்னை எங்கும் நகரவிடாது செய்த மனைவியின் செயலை கண்டவருக்கு, இனி எத்தனை வேலையாக இருந்தாலும் வந்து பார்க்காமல் இருக்க கூடாது என்று முடிவெடுத்தார்.
அப்படியே நெஞ்சில் சாய்ந்தவளை நெஞ்சோடு அணைத்தபடியே, வந்து அமர்ந்து தனது மடியில் சாய்த்து கொண்டார். இருவரும் வெகு நேரம் பேசவே இல்லை. இரதியின் வாடிய முகத்தை கண்டவருக்கு அவர் மேலே அவருக்கு கோபம் வர தான் செய்தது.
“செல்லம்மா எனக்கு அதிக வேலை ரொம்ப அலைச்சல் அதனால் தான் வர முடியல” தான் வராததுக்கு காரணத்தை சொன்னார்.
“அய்யோ நேக்கு தெரியாதான்னா. ஆனாலும் உங்களை பார்க்காதது ரொம்ப கஷ்டமாயிடுத்து. நம்ப பிள்ளை கல்யாணம் நாம செய்யாமல் யார் செய்வா? ரொம்ப அலைஞ்சேளா? கால் நோகுதோனோ? இருங்க வரேன்” என்றவள் சுந்தரத்தின் மடியில் இருந்தவள் ஓடி சென்று கால்வலி மருந்தை கொண்டு வந்து, அவருடைய கால்களை தனது மடியில் வைத்து நன்றாக தேய்த்து விட்டார்.
அவரின் வலிக்கு இதமாக இருந்தது. இது தான் இரதி. தன்னுடைய தேவை முதலாக வந்து விட்டாலே அவளுடைய வேதனையை பின்னோக்கி அனுப்பி விடுவாள். யாருக்கு கிடைக்கும் இந்த வரம். இந்த புண்ணியவானுக்கு கிடைத்தது.
இது தான் நேரம் என நினைத்து “முதல் கல்யாணமா அது தான் கொஞ்சம் தடுமாற்றம். எப்படி செய்வதுனு”
“இதுல தடுமாற என்ன இருக்குன்னு சொல்லுறேள்” அவள் இன்றே வலியை போக்கும் முயற்சியில் கணவனது முகத்தை கூட பார்க்காமல் பேசினாள்.
“நானும் அவளும் தான் எவ்வளவு வேலை பார்க்கிறது?”
“நம்ப பிள்ளை கல்யாணம் இப்படி சொல்ல லாமானோ?” நிமிரவே இல்லை.
“அது தான் நானும் சொல்லுறேன். நம்ப பிள்ளை கல்யாணம் நீயும் வந்து எங்களோடு வந்து வேலை பாரு” அவள் வார்த்தையை வைத்தே அவளை மடக்கினார். அவர் சொன்னதும் தேய்ப்பது நின்று விட்டது, ஆனாலும் தலை நிமிரவே இல்லை.
அவரும் அவளை பார்ப்பதை விட வேறேதும் இல்லை என மனைவியை பார்த்து கொண்டு இருந்தார்.
“கண்ணாணா” இந்த அழைப்பு அவரை கொஞ்சம் அசைத்து தான் போட்டது.
கலங்கிய கண்களுடன் துடித்த உதடுகளுடன், அவள் நிமிர்ந்து அவள் அழைத்த இந்த அழைப்பு, அந்த இரும்பு மனிதனை இல்லாமல் ஆக்கும் சக்தி படைத்தது.
“மாமி” இதற்கு மேல் பொறுக்காமல் அவளை இழுத்துக்கொண்டார்.
இவளை எப்படியாவது இதில் எல்லாம் கலந்து கொள்ள செய்ய வேண்டும் என்று தான் அவர் பேசியது. அவருக்கு மட்டும் அந்த ஆசை இருக்காதா? இந்த கல்யாணமே இவள் வந்ததால் தானே.
பிறகு அவள் கலக்காமல் இப்படி இருப்பது அவரால் தாங்க முடியவில்லை.
சுந்தரம் வராத இந்த நாட்களில் தவித்தவள், அவர் இவ்வாறு பேசவும் அவர் இழுத்தவுடனே அப்படியே அவர் மேலே சாய்ந்து கொண்டாள். சாய்ந்தவளை அணைத்தபடியே சயன கோலத்தில் படுத்தார்.
“செல்லம்மா இங்கு பாரேன்” தனது கண்களை பார்க்க முகத்தை நிமிர்த்தினால், அவளது முகத்தை அவரது நெஞ்சில் இருந்து அசைப்பேனா என்றாள்.
“இங்கு பாருடி உன் கண்ணாவை” இப்படி சொல்லவும் ஆசையாக நிமிர்ந்தாள்.
“நம்ப பிள்ளைகள் விசேஷம் நீ இல்லாமல் எப்படி டி நடக்கும். அன்னைக்கு துணி எடுக்க கூப்பிட்டதுக்கும் வரல. நகை எடுக்கவும் வரல. இப்படியே இருந்தா எப்படி. எல்லோருக்கும் நீ வந்து நின்று செய்யனும்னு ஆசை இருக்காதா? இல்லை உன் கண்ணனுக்கு உன் கையை பிடித்து சபையில் நிற்க தான் ஆசை இல்லையா?” இவ்வளவு அவர் பேசினாலும் அவள் வாயை திறக்காமல் சுகமாக அவருடைய கழுத்து வளைவில் முகத்தை பதித்து கொண்டு, அவரது நெஞ்சில் விழும் தங்க சங்கிலியை பிடித்து அவரது நெஞ்சு முடியோடு கோலம் போட்டு கொண்டு இருந்தாள்.
“இந்த கிழவனோடு உனக்கு வெளியே வர பிடிக்கலையா மாமி” இதை சொன்னது தான் தாமதம் எங்க இருந்து வேகம் வந்ததோ மாமிக்கு, அவரது முடியை பிடித்து ஆட்டி, அவரை அடித்து,
முகத்தில் கடித்து, மடியில் அமர்ந்து கொண்டு தண்டனை கொடுக்கிறேன் என்று சுகத்தை வழங்கினாள்.
அந்த தண்டனை அவர்களின் நான்கு நாட்கள் ஏக்கத்தை பூர்த்தி செய்யும் விதமாக அமைந்தது. “இனி அப்படி சொல்லாதீங்கோன்னா. நான் அப்படி நினைப்பேனா. ஏன் இப்படி பேசுறேள்.”
“நீ அப்படி நினைத்தால் தான் பரவாயில்லை யே. உன் கிட்ட வந்து யாராவது அப்படி சொன்னா கூட ஒத்துக்க மாட்ட”
“வயதுங்குறது ஒரு எண் தான். அதுக்கும் மனதிற்க்கும் குணத்திற்க்கும் என்ன சம்பந்தமோ இல்லை. இன்னொரு தடவை அப்படி பேசினேள் நான் என்ன செய்வேனு தெரியாது பார்த்துங்கோங்கன்னா”
“இப்போ செஞ்ச மாதிரி தண்டனையா மாமி” அவளுக்கு தான் வெட்கமா இருந்தது.
“நானும் வரனும்னு தான் நினைக்கிறேன். ஆனால் ஏதோ தடுக்குதுன்னா” குழந்தை போல் சொல்பவளை என்ன செய்ய.
“மாமி முதலில் நீ என்னோடு தனியா வெளியே வா. பிறகு எல்லோருடனும் சேர தானாக வரும்” கணவன் சொல்லியதை யோசித்தாள்.
“உனக்கு பட்டு எடுத்துட்டேன். நகை வாங்கல இன்னும். இப்போ நீயும் நானும் வெளியே போறோம் கிளம்பு” அப்பவும் அவள் அசையவில்லை.
“ஏண்டி நான் கிளப்பி விடவா அவளுடைய காதில் இன்னும் கொஞ்சம் பேசவும்” அதன் அர்த்தம் புரியவும் அங்கு இருந்த அவரது வேட்டியை எடுத்து தன்னை சுற்றி கொண்டு குளியலறையில் புகுந்து கொண்டாள்.
இவளை இனி விட கூடாது. இதுவரைக்கும் போதும் என்று நினைத்து
சுந்தரம் செய்த செயல் அவளை மனம் மாற்றுமா? இல்லை மன வருத்தம் ஆகுமா?
