எந்நாளும் உன் மோகம் தான்…

எந்நாளும் உன் மோகம் தான்

எந்நாளும் உன் மோகம் தான்…

எந்நாளும் உன் மோகம் தான்…

எந்நாளும் உன் மோகம் தான்…

எந்நாளும் உன் மோகம் தான்…

எந்நாளும் உன் மோகம் தான்…

எந்நாளும் உன் மோகம் தான்…

எந்நாளும் உன் மோகம் தான்…

எந்நாளும் உன் மோகம் தான்…

எந்நாளும் உன் மோகம் தான்…

எந்நாளும் உன் மோகம் தான்…

எந்நாளும் உன் மோகம் தான்…

எந்நாளும் உன் மோகம் தான்…

எந்நாளும் உன் மோகம் தான்…

எந்நாளும் உன் மோகம் தான்…

எந்நாளும் உன் மோகம் தான்…

எந்நாளும் உன் மோகம் தான்…

எந்நாளும் உன் மோகம் தான்…

எந்நாளும் உன் மோகம் தான்…

எந்நாளும் உன் மோகம் தான்…

எந்நாளும் உன் மோகம் தான்…

எந்நாளும் உன் மோகம் தான்…

எந்நாளும் உன் மோகம் தான்…

எந்நாளும் உன் மோகம் தான்…

எந்நாளும் உன் மோகம் தான்…

எந்நாளும் உன் மோகம் தான்…

எந்நாளும் உன் மோகம் தான்…

எந்நாளும் உன் மோகம் தான்…

எந்நாளும் உன் மோகம் தான்…

எந்நாளும் உன் மோகம் தான்…

எந்நாளும் உன் மோகம் தான்…

25

எந்நாளும் உன் மோகம் தான்…
ஜியா ஜானவி ❤️
அக்னி தனது அபார்ட்மெண்ட் வந்து சேரும்வரை கொஞ்சம் கூட பேசவில்லை ஆழியிடம்.. தனக்குள் ஏதோ யோசித்துக் கொண்டு இருக்கிறான் என்று இவளும் அமைதியாகவே வந்தாள். 
வீட்டுக்குள் நுழைந்தவன் சோபாவில் அமைதியாக கைகளை கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தான். அவன் மனநிலை இப்பொழுது என்னவாக இருக்கும் என்று ஆழியாலும் கணிக்க முடிந்திருந்தது.
இன்று மட்டுமல்ல ஆதிகாலத்திலிருந்தே தொடங்கியது இந்த பங்காளி பிரச்சனை.. இந்த வாரிசு உரிமை போர்!! சொத்துக்கும்.. உரிமைக்கும்..
உரிமைக்காக.. நயமாகப் பேசி நாக்கினில் நஞ்சு கொண்டு புறமுதுகில் குத்தும் துரோகிகளை வரலாறு பல காலங்களில் பல விதமாக பார்த்துக் கொண்டுதான் வருகிறது!!
மனிதனின் நடை உடை பாவனை பழக்க வழக்கங்கள் மாறினாலும் நெஞ்சம் கொண்ட வஞ்சமது இன்னும் மாறாமல் தான் இருக்கிறது!!
கல்லூரிக்காக இவர்கள் கொலை வரை செய்வார்கள் என்றும்.. அக்னியை எப்படி ஒரு வலையில் சிக்க வைப்பார்கள் என்றும்.. அக்னி திகம்பரன் நினைத்ததே இல்லை!! எப்படியும் சித்தப்பாவிடம் இருந்து இவன் கைக்கு மாறும் பொழுது பிரச்சனைகள் செய்வார், தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்துவார்.. இப்படி எல்லாம் தான் அவன் அப்போது கணக்கு வைத்திருந்தான்!! ஆனால் இது.. காம பிசாசாய் அவனை.. அவனுள் ஒரு தாங்கிக்கொள்ளவே முடியாத உணர்வு எழுந்து அவனை அழுத்தியது.
ஒருவேளை அவர்கள் திட்டப்படி நடந்திருந்தால்… அவர்கள் அனுப்பிய பெண்ணுடன் இவன் உறவு கொண்டிருந்தால்… அதை இவர்கள் வெட்டவெளிச்சமாகி இருந்தால்… நினைக்கவே நெஞ்சம் எல்லாம் நடுங்கியது!!
அன்னையையும் தங்கையையும் இவன் கண்கொண்டு பார்த்திருக்க முடியுமா??
ஆசையாசையாய் படித்த இந்த ஆசிரியர் தொழிலைத்தான் அவன் மேற்கொண்டு செய்திருக்க முடியுமா??
அப்படியே செய்து இருந்தாலும் இவனிடம்‌ படிக்க பெண்களைப் பெற்றவர்கள் நம்பி அனுப்புவார்களா??
எண்ணங்களின் தாக்கத்தினால் தலைவலிக்க அழுத்திப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான்!!
வெங்கடாசலம் பேசப்பேச அப்படி ஒரு கோபம் கணன்றது அக்னிக்குள். நாம் இவர்களுக்கு என்ன பாவம் செய்தோம்?? நம்மை இப்படியெல்லாம் செய்து இருக்கிறாரே என்று!! ஆனால் அதை எதையும் அங்கே அவரிடம் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அவர்களை அப்படியே விடவும் மனது வரவில்லை!! எஸ்பியிடம் ஸ்பெஷலாக கவனிக்க சொல்லிவிட்டே வந்தான்.
சிறிது நேரம் அவனைத் தனியாக விடுவோம் என்று நினைத்தாள் ஆழி. ஆனால் அவன் இன்னும் தன் எண்ணங்களில் உழன்று கொண்டு கஷ்டப்படுவதை பொறுக்காமல் அவன் முன்னே நின்று குனிந்திருந்த அவனின் கைக்கட்டிக் கொண்டு நின்றாள் முறைத்துக்கொண்டு..
விழிகளை மட்டும் உயர்த்தி அவளைப் பார்த்தவனுக்கு அப்போது தான் நினைவில் வந்தது!!
“இவ நம்மிடம் சண்டை போட்டுக்கொண்டு அல்லவா போனா?? இப்போது எந்த நிலையில் இருக்கிறா?” என்று அவளைப் பார்க்க அவளது கண்களில் லவ் இல்லை!! லாவா பொங்கி வருவதற்கான அறிகுறியே தெரிந்தது!!
“ஆழி..” என்று‌ மெல்லமாக அவன்‌ அழைக்க..
வாடி வாசலில் காத்துக் கொண்டிருக்கும் காளை போல புஸு புஸு வென்று மூச்சை விட்டுக்கொண்டிருந்தாள் ஆழி!!
“சாரிடி!! நெஜமாலுமே அப்போ உன் கிட்ட பேசி இருந்தேனா.. என்னால ட்ரீட்மெண்ட் ஒழுங்கா எடுத்திருக்க முடியாது! அதனால்தான் பேசல..” என்று அவளது கைகளை பற்றி கொண்டவன், “அதுவுமில்லாம அன்னைக்கு உன் கூட..” என்று அவன் இழுக்க..
ஓரளவு அவனைப்பற்றி புரிந்தாலும் “அப்போ அந்த விஷயம்.. உங்களுக்கு தெரியாதா? எங்க அம்மா.. உங்க அம்மா..” என்று கண்களில் ஏக்கத்தோடு அவனிடம் அவள் கேட்க..
“என்ன விஷயம்? எங்க அம்மாவுக்கும் உங்க அம்மாவுக்கும் என்ன?” என்று அவன் புரியாமல் கேட்க..
எப்படி சொல்வது? புதிதாக வெட்கம் வேறு வந்து தொலைத்தது ஆழிக்கு!!
“அது.. அது.. மூணு மாசம்..” என்றாள் சிறு குரலில் நாணத்தோடு..
“ஆமாண்டி.. மூணு மாசமா உன் கிட்ட பேசவே இல்லை.. சாரிடி!!” என்றவனின் மண்டையில் பல்பு எரியவில்லை.
“ஹையோ..!!!” என்றானது ஆழிக்கு.
வாத்திக்கு நடு மண்டையில் நச்சென்று அடிச்சு சொன்னால்தான் புரியும் போல என்றவள், “நான் இப்போ மூணு மாசம்!!” என்றாள் அவனது கண்களைப் பார்த்துக் கொண்டே..
“ஓஓ.. ஓஓஓ… ஓஹோ… ஓய்… நிஜமாவா?” ஓ என்று புரியாமல் ஆரம்பித்தவன் புரிந்தபின் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து முகம் முழுவதும் மத்தாப்புக்கள் பொங்க மனைவியை பார்த்து கேட்டான்.
ஆமாம் என்று அவள் வெட்கத்துடன் தலையை அசைக்க..
“அது எப்படி ஒரே நாள்ல..??” என்று அவன் சந்தேகம் கேட்க..
அதுவரை இருந்த நாணம் தள்ளிப்போக “ஒரு நாள்ல தான்!! ஆனா உங்க உடம்புல அவனுங்க கொடுத்த மருந்தோட வீரியம் 27 குதிரைக்கு சமம்!! தெரியுமா??” என்று அவள் விழி விரித்து கோபத்தோடு கேட்க..
“என்னது 27 குதிரையா??” என்று வாயை பிளந்த வாத்தியின் மூளையோ ஒரு குதிரைக்கு எவ்வளவு வேகம் இருக்கும் என்று மன கணக்கில் கணக்கு போட..
“ரொம்ப கஷ்டமா இருந்துச்சாடா??” என்று பரிவாக கேட்டான் மனைவியை பார்த்து..
“அப்படி ஒன்றும் மோசமா இல்லை!! என்று இவள் கன்னங்கள் குழைய சிரிக்க..
நிமிர்ந்து பார்த்தவன் அவள் கண்களில் தெரிந்தது கிறக்கத்தில் மயங்கித்தான் போனான். 
ஆனாலும் அவளை நெருங்க இவனுக்குமே பயம்!! ஆம்!! பயமே தான்!! மீண்டும் அவளை கஷ்டப் படுத்த விடக்கூடாதே என்று!! அதனால் “போடி.. போக்கிரி!!” என்று கூறியவனிடம், “எனக்கு பசிக்குதுங்க” என்றாள்.
இருவருக்கும் பாலை சூடாக்கி கொண்டு வந்தான்.
இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியிருந்தது. திடுமென ஆரம்பித்த மழை நேரம் செல்லச் செல்ல பலத்த காற்றுடன் வெளுத்து வாங்க.. ஜன்னலை திறந்து மழையை வெறித்துப்படி நின்றிருந்தாள் ஆழி.
ஜன்னல் வழியே வந்த ஈர காற்று அவள் மேனியை தழுவி செல்ல..
அவளின் மெல்லிடையை மூடியிருந்த புடவை விலக.. அவள் ஆலிலை வயிற்றின் நடுநாயகமாக சுழிந்திருந்த ஆழியின் நாபி சுழி.. ஆழி சுழலாய் சுழன்றடித்து அவனை இழுத்தது. கண்களை விலக முடியாமல் அசையாமல் நின்றிருந்தான் அக்னி..
அச்சுழிக்கு கீழே லேசாக ஓடிய மெல்லிய ரோமங்களை பார்த்தவனுக்கு ஜிவ்வென மோகம் கிளர்ந்து எழ.. மெல்ல எட்டுக்கள் எடுத்து வைத்து ஆழியை நெருங்கினான்.
பிள்ளை உண்டாகி இருக்கா என்றதும் உச்சி முத்தம் கொடுத்து நெகிழ்ந்து நின்றான் சில நிமிடங்கள்..
அவன் கண்கள் அவள் முகத்தை தாபத்தோடு பார்க்க.. அவன் பார்வையின் பொருள் உணர்ந்தவளின் மெல்லிய உணர்ச்சிகளை தட்டி எழுப்பப்பட.. 
அவள் நாடி நரம்புகளில் வேகமாக ரத்த ஓட்டம் பாய்ந்து தேகம் தகிக்க ஆரம்பிக்க… அத்தகிப்பில் உதடுகள் கூட உலர… நாக்கை நீட்டி உதடுகளை தடவி ஈரப்படுத்திக் கொண்டாள். அவனின் கண்கள் இப்போது மாம்பழ வண்டென அவள் செவ்விதழ்களை மொய்த்தது.
கையிலிருந்த பாலை அவளிடம் நீட்ட.. பாலை பருகியவளை இவன் பருகினான்.
அவளை நெருங்கி அவள் கையை தன் கைக்குள் எடுத்து ஒவ்வொரு விரல்களாய் நீவினான். இதழ்களுக்குள் வைத்து முத்தமிட.. அவள் உடல் சிலிர்த்து சிணுங்கியது. அவனிடம் சரிய உள்ளம் துடிக்க… அவளை நெருக்கமாக இழுத்து, இறுக்கமாக அணைத்தான். மிருதுவான கன்னத்தில் அழுத்தி அழுத்தி முத்தமிட்டான். 
“கொஞ்சம் பயமாதான் இருக்கு ஆழி??” என்றான் அன்றைய நினைவில்… அவள் கண்களால் ஏனென்று கேட்க..
“தொடும்‌ வரை கூட கட்டுபாடா இருந்திடுவேன்.. ஆனால் தொடுவதை தொடர ஆரம்பித்தால்.. அன்னைக்கு மாதிரி.. என்னை என்னாலேயே கட்டுப்படுத்திக்க முடியாதோன்னு பயமா இருக்கு டி!!
எனக்குள் அந்த ட்ரக்ஸின் தாக்கம் இன்னும் இருக்கோ என்னவோ??” என்றவனை பார்த்து..
“பயந்தா லவ் பண்ணவும் முடியாது. குடும்பமும் நடத்தவும் முடியாது!!” என்றாள் கிசுகிசுப்பாக..
“ம்ஹீம்..” என்றான் அதே கிசுகிசுப்புடன்.
“எதுக்கும் டாக்டர்கிட்ட கேட்போமா??” என்று தயங்கி தயங்கி அக்னி கேட்க..
“போயா.. போ.. போய் தலையணையை கட்டி பிடிச்சிட்டு தூங்கு!!” என்று அவள் விலக இன்னும் இறுக்கி அணைத்தான் அவனோடு.
ஒரு கை அவளை பின்னாலிருந்து இடையை வளைத்து அணைத்திருக்க.. இன்னொரு கை அவளின் வயிற்றைத் தடவி ஆதுரமாக!! பெற்றோராய் நாம்!! இனித்தது இருவருக்கும் அந்த தருணம்!!
மெலிந்த இடையும்.. வழவழப்பான வயிறும்.. மடிப்பில்லாத வயிற்றில் குட்டியான கவர்ச்சியான நாபியும்.. அவனை நிலைகுழைய செய்ய.. 
கூடவே அந்த வயிற்றில் இருக்கும் அவனுடைய மகவு!!
சட்டென்று அவளை அள்ளி படுக்கையில் கிடத்தியவன், சேலையை விலக்கி அவள் வயிற்றில் முகத்தை புதைத்தான்.
அளவில்லாத முத்தத்தை வாரி வழங்கினான்!! அதில் கிறங்கி நின்றாள் மாது!!
தேகம் சிலிர்க்க..
வயிறு நடுங்க… 
அவன் மூக்கை தேய்க்க.. 
அவள் கிளுக்கி சிரிக்க..
சிரித்தவளை சிணுங்க வைத்தான் குட்டி குட்டியாக நாபியை சுற்றியும் அழுத்தி முத்தமிட்டு.. இதழ்கள் விடுத்து நா அந்த இடத்தை ஆக்கிரமித்து கொள்ள.. குட்டி தடாகத்தில் அள்ள அள்ள தெவிட்டாமல் தேனை பருகினான் மாயவன்!!
கூச்சத்தில் நெளிந்து.. அவன் முத்தத்தில் பித்தாகி..
தீண்டலில் உருகி..
சீண்டலில் சிணுங்கி..
உரசலிலா உயிர் வரை கரைந்து..
துடிக்க வைத்தவனை.. கைகளால் அவன் முகத்தை பிடித்து தூக்கினாள். அவனும் அவள் முகத்தை காதலாகப் பார்த்தான்.
“ஷல் ஐ ப்ரொசிட்??” கிறக்கமாக கேட்டான்.
தயக்கம் இல்லாமல் அவன் நெற்றியில் முத்தமிட்டு ஆமோதித்தவளை கண்டு தாபம் பற்றிக் கொள்ள.. அதனை உறுதிப்படுத்த அவன் உதடுகளை குவித்து காட்ட.. புரிந்தவள் மெல்லிய வெட்கத்துடன் சிறிது தயங்கி.. பின் மயங்கி.. சற்றே முயங்கி.. அவன் உதட்டில் தன் ஈரமான மெல்லிதழ்களை பதித்து முத்தமிட்டு அவனை கிறக்கினாள்.
அவன் கைகள் அவள் இடுப்பை பிசைந்து இறுக்க… அவன் முகமோ அவளின் மென்மைகளுக்கிடையில் புதைந்தது புதையல் தேடியது!!
வெளியே காற்று பலமாகி மழையும் வலுவானது. மழையைத் தொடர்ந்து இடியும் மின்னலும் மழைக்கு சுருதி சேர்க்க.. அறையினுள் மழையின் ஈரக் காற்று பரவி ஜில்லென்று ஆக.. ஜோடிகளுக்கு அதில் ஜிவ்வென்று‌ மோகம் ஏற.. அவள் மார்பின் மத்தியில் மெல்ல இதழ்களால் உரசியவன், பின் மெல்ல கடித்து வைக்க.. அந்த சுகவலியில்.. அவள் தவிப்புடன் அவன் தலையை பிடித்து.. தலை முடியை பிண்ணி இறுக்கினாள். 
இவர்கள் தேகங்கள் இங்கே ஒன்றோடு ஒன்று பிண்ணி பிணைந்து இறுக.. வெளியே அதற்கு மத்தளமாய் இடிச் சத்தம் பலமாக இசைக்க.. அவள் உடம்பு நடுங்கிச் சிலிர்த்தது. மெல்ல அவள் முகத்தை பார்த்தவனின்‌ கண்கள் வீச்சில் அவள் முகத்தை மூடிக் கொண்டாள் நாணம் கொண்டு!! அவனோ மீசையால் இம்சை செய்ய.. அவனை கிறக்கமாகப் பார்த்தாள்.
அதற்கு மேல் அங்கே மௌன பாஷைகள் போய்.. சிணங்கலும்.. முணங்கலும்.. இருளில் பேசியது.
மழை மெல்ல மெல்ல வலுவிழந்தாலும்.. காற்றில் குளிர் குறையாதே!! அது போல மோக ராகங்கள் உச்சஸ்தாயியில் சென்றாலும்.. காதல் ஆலோபனைகள் குறையவில்லை.
மழை விட்டு மெல்லிய தூரல் போட்டுக் கொண்டிருந்தது..
இடியும் மின்னலும் மெலிதாக பக்கத்தில் தொடர்ந்து கொண்டிருந்தது. இங்கே மௌனங்கள் ஆட்சி செய்ய.. தேகங்கள் சுக அயர்வில் துவண்டு கிடந்தது.
காலை விடிந்ததுமே அங்கயற்கண்ணியும் அலமுவும் பதறி அடித்து கிளம்பினர் ஆழி கடத்தப்பட்ட விஷயம் கேள்வி பட்டு!!
அப்போது தான் எழுந்திருந்த அக்னி.. வெற்று மார்போடு சமையலறையில் அவனுக்கு தெரிந்த முட்டை பிரட் போட்டு கொண்டிருந்தான்.
காலிங் பெல் சத்தத்தில் கதவை திறந்தவன், அங்கே ராம்பிரசாத் ஆர்த்தியும் நின்றிருக்க..
மெல்ல தலை அசைவில் அவர்களை உள்ளே வரவேற்றான். ராம்பிரசாத் கலைந்த தலையும் சிவந்த கண்களுமாய் நின்றிருந்த அக்னியைத்தான் கண்களில் ஸ்கேனர் கொண்டு பார்த்திருந்தான்.
மென் இஸ் ஆல்வேஸ் எ மென்!!
பார்த்த மாத்திரத்திலேயே அக்னியின் சோர்ந்த முகமும் களைந்த தோற்றமும்.. அவன் தியேட்டரில் படத்தை நன்றாகவே ஓட்டி இருக்கிறான் என்பது மிக நன்றாகவே புரிந்தது ராம்ப்ரசாத்துக்கு!!
சோபாவில் அமர சொல்லிவிட்டு இருவருக்கும் இன்ஸ்டன்ட் காபி கலந்து கொண்டு வந்து கொடுத்தவன், “கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. ஆழி இன்னும் எழல. எழுப்பிட்டு வர்றேன்!!” என்று அறைக்குள் நுழைந்தான்.
அருகிலிருந்த ஆர்த்தியின் இடுப்பை நறுக்கென்று கிள்ளி வைத்தான் ராம்ப்ரசாத்!! அவள் துள்ளி எழ கையில் இருந்த காபி மொத்தமும் ராம்பிரசாத் மேலேயே அபிஷேகம் ஆனது.
அவன் முறைப்புடன் பார்க்க “என்ன இதுக்கு முறைக்கிறிங்க? நீங்க சும்மா இல்லாம கிள்ளி வைத்ததனாலதான் காபி கொட்டுச்சு.. என் மேல ஒன்னும் தப்பு இல்லை!!” என்று அவன் திட்ட முன் இவள் முந்திக் கொண்டாள்.
“ஏண்டி.. இந்த மூணு மாசமா என்னை பக்கத்துல நெருங்கிவிட்டியா?? என் தங்கச்சி பாவம்.. என் தங்கச்சி பாவம்.. என்று சொல்லி சொல்லியே என்னை சபரிமலைக்கு மாலை போட்டவன் மாதிரியே கோவில் கோவிலா சுத்த விட்ட.. இதோட நேத்து ராத்திரி உன் தங்கச்சி நல்லபடியா கிடைச்சுட்டானு சொன்னதை கேட்காமல்.. அக்னியே போன் பண்ணி சொல்லியும்.. நீயும் உங்க அம்மாவும் புலம்பிக்கிட்டே இருந்தீங்க.. ஆனால் இங்கே வந்து பாத்தா.. அவ்வா!! அவ்வா!!” என்று வாயில் கை வைத்தான் ராம் பிரசாத்.
ஆர்த்திக்கும் அவன் சொல்வது புரிந்தது. ஆனாலும் தங்கையை விட்டுக் கொடுக்க மனமில்லை. “அவர்களே மூணு மாசத்துக்கு அப்புறம் இப்பதான் பிரிஞ்சுகிட்டு சேர்ந்திருக்கிறாங்க.. சின்ன சிறுசுகள் சந்தோஷமாக இருக்கட்டுமேனு தோணாம.. அத போய் ஒரு பேச்சுனு பேசுறீங்க? பாருங்க!! நீங்க எல்லாம் என்ன மனுஷன்??” என்று இவள் விழி உருட்டி உருட்டி கேட்டாள்.
“என்ன மனுசனா?? நானும் சராசரி மனுஷன் தாண்டி!! பெரிய மாப்பிள்ளை நான் ஒருத்தன் பட்டினியோடு இங்கு இருக்கேன்.. இவன் பந்தியில தலைவாழை இலை போட்டு திருப்தியாக சாப்பிட்டு இருக்கான்!! அதுவும் என் கண் முன்னாடியே.. அப்பப்போ டெசர்ட் ஐஸ்கிரீம்னு எடுத்துக்கிறான்.. ஆனா எனக்குத்தான் தியேட்டர்ல படமும் ஓட மாட்டேங்குது.. பந்தியும் நடக்க மாட்டேங்குது..” என்று பெருமூச்சு விட்டவனைப் பார்த்த ஆர்த்தியும் நாணம் கொள்ள முகம் சிவந்தது. “பேச்சை பாரு பேச்சை!! எங்க வந்து என்ன பேசிட்டு இருக்கீங்க??” என்று கணவனை கடிந்து கொண்டாள் ஆர்த்தி.
“நான் வெறும் பேச்சு மட்டும் தான் டி!! அவன்..” என்று மனைவியை தாபத்தோடு பார்த்து பெருமூச்சு விட அந்த அனல் மூச்சில் ஒரு அண்டா துணி காய்ந்து விடும் போல..
அங்கே அக்னி ஆழியை எழுப்ப முயன்று தோற்று ஒருவழியாக அவள் உள்ளங்காலில் கிச்சுகிச்சு மூட்டி என்று ராம்பிரசாத் சொன்னது போல மீண்டும் ஒரு மினி மசாலா படத்தை ஓட்டி மனைவியை எழுப்பி இருந்தான் அக்னி.
“ஏந்திரி டி.. கும்பகர்ணி உங்க அக்கா உங்க மாமா வந்து ரொம்ப நேரமாச்சு!!” என்று சொல்ல அவசர அவசரமாக எழுந்தவள் அருகே அவசரத்துக்கு கிடைத்த அக்னியின் டி-ஷர்ட்டை மாட்டி.. அவனின்‌ தொளதொள ட்ராக் பேண்டை போட்டுக் கொண்டு வந்தவளை பார்த்ததும் இன்னும் ஆர்த்தியை அதிகமாக முறைத்தான் ராம்.
அக்னியை தெரிந்திருந்தாலும்.. தங்கையின் பாசத்தில் ஓடிவந்து இருந்தாள் ஆர்த்தி. ராம் அப்பவே சொன்னான். “இப்போ போக வேண்டாம் மதியத்துக்கு மேல் போகலாம் ஆர்த்தி” என்று!! ஆனால் தங்கையை கண்ணால பார்த்தே ஆக வேண்டும் என்று ஆர்த்தி அடம்பிடிக்க அனந்தராமன் வசந்தியும் கூட கொஞ்ச நேரம் கழித்து போகலாம் என்று சொல்வதைக் கேட்காமல் அணர்த்தி படுத்தி அழைத்து வந்திருந்தாள்.
“அது நேத்து ராத்திரி பெய்த மழையில் அவ ட்ரஸ் எல்லாம் ஈரமாயிடுச்சு!!” என்று சம்பந்தமில்லாமல் அக்னி ஆழியின் உடையைப் பற்றி உளர..
“இப்போது நாம் தான் பூஜை வேளை கரடி!!” என்று கண்களாலேயே ராம் சொல்ல.. அசட்டு சிரிப்பை கணவனுக்கு பார்சல் செய்தவள் தங்கையின் ஷேமத்தை விசாரித்து விட்டு அடுத்த பத்து நிமிடத்தில் கிளம்பி விட்டார்கள்.
“ஐயோ.. ஐயோ..!! என்று தலையில் அடித்துக் கொண்டாள் ஆழி. “கொஞ்சமாவது உங்களுக்கு இருக்கா சார்.. என்ன நெனச்சிகிட்டு போயிருப்பாங்க அக்காவும் மாமாவும்!!”
“யாரு காலங் காலையில அவங்களை கிளம்பி வர சொன்னா? இல்ல உன்னைய யாரு என் ட்ரஸை எடுத்து போட்டு சொன்னா?? செய்றதெல்லாம் நீயும் உன் குடும்பமும்!! பேரு மட்டும் எனக்காடி!! என்றான்.
“ஐயையோ.. எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல அத்தையும் வந்துருவாங்க.. என்னை ஆள விடுங்க சாமி!!” என்று அவசரமாக இவள் குளியல் அறைக்குள் நுழைந்து கொள்ள..
பின்னோடு நுழைந்தவன் அங்கேயும் ஒரு ஜலக்ரீடையை நடத்தி விட்டே அவளை குளிக்கவே அனுமதித்தான்.
இருவரும் குளித்து முடித்து வர இவன் ஏற்கனவே ஆர்டர் செய்திருந்த சாப்பாடு வந்திருக்க மதியம் சாப்பிட்டு கொண்டிருக்கும் போதே அங்கயற்கண்ணியும் அலமுவும் வந்துவிட்டனர்.
காலையிலேயே சென்னைக்கு வந்தவர்கள் நேராக சூரியபிரகாஷை சந்தித்துவிட்டு நேற்று நடந்தவற்றையெல்லாம் கேட்டுவிட்டு தன் மகனையும் மருமகளையும் காண வந்திருந்தார்.
மருமகளை நன்றாக பார்த்து அணைத்து ஒரு அழுகை அழுதே விட்டார். என்ன இருந்தாலும் அவர்கள் குடும்பத்தினரால் தானே அவளுக்கு இப்படி ஒரு ஆபத்து என்று!! அதுவும் எப்படிப்பட்ட ஆபத்திலிருந்து தப்பித்து வந்திருக்கிறாள் என்று அழுகை வேறு!! பெண்ணைப் பெற்ற அன்னைக்கே உண்டான பயம்!!
“அம்மா போதுமா.. அண்ணன் கண்ணல ஃபயர் ஸ்டேஷன் தெரியுது.. நீ அண்ணிய கொஞ்சினா!!” என்று அலமு பரிகாசம் செய்தாலும்.. அது தான் உண்மை என்பது போல தலையை குனிந்து உதட்டை கடித்து சிரித்த மகனைப் பார்த்தவருக்கு அப்படி ஒரு நிறைவு!!
அவனுக்கு நடந்ததை எதையும் அன்னைக்கும் ஆழியின் பெற்றோருக்கும் சொல்ல வேண்டாமென்று சொல்லியிருந்தான் ஆழியிடம்!!
“இந்த விஷயம் எல்லாம் கேள்விப்பட்டா.. எங்க அம்மா மட்டும் இல்ல உங்க அம்மாவும் அப்பாவும் யாராலுமே ஜீரணிக்க முடியாது!! இன்னும் வேற ஏதாவது நடந்திடுமோனு ஒவ்வொரு கணம் என்னை பார்க்கும்போதெல்லாம் அவங்க பயப்படுவாங்க.. கூடவே என்னால உனக்கு ஏதும் துன்பம் வந்திருமோனு அதுக்கும் பயப்படுவாங்க!! நாம இதெல்லாம் கடந்து வந்துவிட்டோம் என்று தெரிந்தாலும் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும் அவங்க மனசுல.. இதெல்லாம் தேவையா? இந்த விஷயம் நம்ம ரெண்டு பேருக்கு மட்டுமே தெரிந்ததா இருக்கட்டும்!!
மேகாவின் மோகத்தில் இருந்து மகனைக் காப்பாற்றிய மருமகளாகவே உன்னை என் அம்மா நினைக்கட்டும்!!” என்று அவன் சொல்லி சிரிக்க..
“அப்போ அப்படி இல்லையா ஆபீஸர்??” என்று அவளும் சிரிக்க..
“மேகா கிட்ட காப்பாத்திட்ட.. ஆனால்.. இனி.. எந்நாளும் உன் மோகம் தான்!! நீ மட்டும் தான்!!” என்றவன் அதன்பின் அவள் மீதான மோகத்தைக் காட்ட அங்கே கணவனின் காதலில் கசிந்துருகி நின்றாள் அணங்கவள்!!
காதலின்றி வரும் மோகம் மேகம் போலத்தான்!! நிலையின்றி போகும்!!
அதை நினைத்து கொண்டே இருவர் விழிகளும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டு நிற்க அங்கயற்கண்ணி மெதுவாக அலமுவை அழைத்துக்கொண்டு காஞ்சிபுரம் வந்துவிட்டார்.
முதலில் மனைவியை நேசத்தோடும் பாசத்தோடும் பார்த்து கொள்ளலாம் என்று அந்த அபார்ட்மெண்ட்லேயே அவன் தங்கியிருக்க ஆனால் படுத்தி வைத்தாள் மனையாள் அவனை!!
அரை மணி ஒருதரம் பசிக்கிறது என்பாள்.. ஆனால் அடுத்த நிமிடமே அதை வாந்தி எடுப்பாள்.. பின்பு தலை சுற்றுகிறது என்று அவனை தலை சுற்ற வைப்பாள்!! தலையை அவன் பிடித்துவிட்டால் கால் நோகுது.. இடுப்பு பிடிக்குது.. என்று அவனை இம்மியும் நகர விடவில்லை!!
“ஏண்டி இந்த மூணு மாசம் எப்படிடி உங்க அம்மா உன்னை சமாளித்தாங்க??” என்று அவன் விழி பிதுங்கி நிற்க..
“அதுதான் உங்கள் தலையில் என்னை கட்டி விட்டு ஓட்டம் பிடித்துவிட்டார்களே!! அப்பவே நீங்க சுதாரிக்கலையா ஆபீசர்?!” என்று இவள் கேட்டு சிரிக்க..
இவர்களைப் பார்க்க வந்த வசந்தியிடம் “நான் பார்த்துக்கொள்கிறேன் அத்தை!!” என்றதும் சரி என்று அவர்கள் கிளம்பியதும் ஞாபகத்துக்கு வர.. ‘வான்டட்டா நாமே வந்து சிக்கிட்டோமோ??’ என்று வருத்தப்பட்டான் வாத்தி!!
அதன்பிறகு ஒட்டுமொத்தமாக அவர்களது ஜாகையை காஞ்சிபுரத்தைத் மாற்றிவிட்டான்.
இப்பொழுது முழுமூச்சாக கல்லூரி நிர்வாகத்தை பார்த்துக்கொள்வது அக்னி திகம்பரன் தான்!!
ஆழிக்கு டீச்சிங் சைடு சுத்தமாக விருப்பம் கிடையாது. “மீதி இருக்கும் செமஸ்டரை முடி!!” என்று இவன் வாத்தியாராய் வீட்டுக்குள்ளேயே பாடம் எடுக்க..
அவளோ தூங்கி வழிந்தாள். “புள்ளதாச்சி பொண்ணு கூட பாக்காம இப்படி கொடுமை படுத்துறீங்களே!!” என்று மூக்கைச் சிந்தினாள்.
“நீதானடி ஆர்வமா ப்ராஜெக்ட் செய்ய வந்த? இந்த நிலைமையிலும்!!” என்று இவன் கேட்க..
“யார் வந்தா?? மூணு மாசமா நான் காலேஜ் பக்கமே திரும்பி பார்க்கல.. நோட்ஸ் எல்லாம் நிஷா கொண்டு வந்து கொடுத்திடுவா.. பிராஜக்ட் என்னோட ப்ராஜெக்ட் மெட்’ஸ் பார்த்துக்கிட்டாங்க..‌நீங்க அன்னைக்கு காலேஜ் போகனும் சொன்னதால்.. உங்கள வம்பு இழுக்கிறதுக்காகத்தான் வந்தேன்!! இல்லேன்னா நானாவது காலேஜ் பக்கம் கால் வைக்கிறதாவது!! நெவர்!!” என்று தோளை குலுக்கிவளை அவன் விழி விரித்துப் பார்க்க.. “இன்னுமா ராசா நீ என்னை நம்புற!!” என்று வடிவேல் பாணியில் சிரித்து வைத்தாள். 
சிரித்து வைத்தவளை தன் அம்மாவோடு சிக்க வைத்தான் அக்னி.
அலமுவோடு ஜாயிண்ட் போட்டு விட்டான். புது புது வகையான டிசைன்களும் அந்த டிசைன்கள் அழகான சேலைகளாக உருமாறுவதை பார்க்கப்பார்க்க திகட்டவில்லை ஆழிக்கு.. அதனால் அக்னி காலையில் கல்லூரி கிளம்பியதும் இவளை அலமுவோடு நெசவு பட்டறைக்கு அனுப்பி விடுவான். அதன் பின் மாலை போல் வருபவன், அவளுடன் அவ்வப்போது கோவில் அருகே உள்ள சுற்றுலா தளம் என்று சுற்றி வந்து கொண்டிருந்தான். இரவிலும் திகட்டத் திகட்ட தங்கள் இரவுகளை தின்று களித்துக் கொண்டிருந்தனர்.
அன்று ஞாயிற்றுக்கிழமை.. காஞ்சிபுரத்துக்கு ஆழியின் வீட்டினரை வரவழைத்து விருந்து வைத்திருந்தார் அங்கயற்கண்ணி. 
அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது “நீங்கள் இன்னும் ஹனிமூன் போகலை அண்ணா.. எப்போ அண்ணியை அழைச்சிட்டு போக போறீங்க? அண்ணிக்கே ஐந்து மாசம் ஆயிடுச்சு!!” என்று அலமு எதார்த்தமாக கேட்க..
“போகணும் அலமு!! உனக்கு மாப்பிள்ளை பார்த்திட்டு இருக்கேன். முடிஞ்சதும் உன்னையும் கூட்டிட்டு சேர்ந்தே போறேன் உன் வீட்டுக்காரரோட” என்று அவன் கூறி சிரிக்க..
“ஆள விடுங்க!! இப்பதான் என்னோட வேர்ல்டு ரெக்கார்டுக்காக ஒரு புதிய முயற்சி ஒன்றை எடுத்து இருக்கேன். அதை முடிச்சுட்டு தான் மத்தது எல்லாம்!! குறைஞ்சது ஒரு வருஷத்துக்கு என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க!!” என்று அவள் நழுவிக் கொள்ள.. அப்படியெல்லாம் தங்கையை விட்டுவிடுவானா அக்னி!! அவன் ஏற்கனவே மாப்பிள்ளையை முடிவு செய்துவிட்டான். அதை பற்றி கூறவில்லை அவளிடம் அவ்வளவே!!
“ஏன் சகலை.. நாம ரெண்டு பேரும் நம்ம ஃபேமிலியோட ஏன் ஹனிமூன் போக கூடாது?” என்று ராம்ப்ரசாத்தை பார்த்து இவன் கேட்க..
அதில் பதறியே விட்டான் ராம்!!
“இல்ல சகல.. நீங்க போயிட்டு வாங்க!! இன்னும் ஒரு ரெண்டு மாசத்துக்கு எனக்கு டைட் செடில்யு. அதனால அதற்குப் பிறகு வேணும்னா நாம எல்லாரும் ஒரு பேமிலி டூர் போகலாமே!!” என்று அவனும் நழுவிக் கொண்டான்.
அடுத்து வந்த நாட்களில் அக்னியும் ஆழியும்.. கேரளாவை அடுத்து உள்ள ஒரு குட்டித் தீவில் உள்ள ரிசார்ட்டில் தங்கள் தேனிலவை இன்பமாக கழிக்க சென்றனர்.
ஆர்த்தி ராம் பிரசாத்தை திட்டிக் கொண்டிருந்தாள். “நாமளும் அவங்க கூட போயிருக்கலாம்.. அவர் அவ்வளவு ஆசையா கூப்பிட்டார் தானே!!” என்று..
“அடி ஏண்டி.. உன் தங்கச்சி புருஷன் கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் பார்க்க மாட்டான்! நம்ம கண்ணு முன்னாடியே கலர் கலரா படத்தை ஓட்டுவான். அதுல மூடாகி நான் உன் கிட்ட வந்தா.. நீ எனக்கு சரியான பல்பு கொடுப்ப!! இது எனக்கு தேவையா? அவன்கிட்ட நான் வேலை இருக்குன்னு பொய் தான் சொன்னேன். இங்க பாரு” என்று அவன் ஒரு கவரை காட்ட அதில் கொடைக்கானல் பக்கத்தில் ரிசார்ட்டில் இவர்களுக்கு அறை புக் செய்திருந்தான் ராம்ப்ரசாத்.
“அவன் அளவுக்கு இல்லைன்னாலும் ஏதோ என் அளவுக்கு.. உன் ஆசைய நான் நிறைவேத்துறேன்” என்று சொல்லி முடிக்குமுன் தாவி கணவனை கட்டிக்கொண்ட மனைவியை விசித்திரமாக பார்த்தான் ராம் பிரசாத்!!
ஆம்!! அக்னியை பார்த்து பார்த்து இப்பொழுது ராம்பிரசாத்தும் அவனை அறியாமலே அவனிடம் பல மாற்றங்கள். இதோ இந்த தேன்நிலவு பாக்கேஜ்ஜே அதற்கு ஒரு சான்று!!
“நான் உங்கள இப்படி பார்க்க தான் ஆசைப்பட்டேன். மனைவியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டாம்!! ஆனால் அவளையும் சக மனுஷியாய் பாருங்க.‌ அவளின் ஆசைகளையும்.. கோபங்களையும்.. நியாயங்களையும்.. ஏக்கங்களையும்.. கொஞ்சம் மதிங்க!! அது போதும் எங்களுக்கு!!” என்றவள் இதுவரை ராம்பிரசாத் எதிர்பார்த்ததை திகட்டத் திகட்ட கொடுத்தாள் அவனுக்கு!! ஹனிமூன் பேக்கேஜ் வேஸ்ட் ஆகி விடுமோ என்ற அளவிற்கு இருந்தது அவர்களின் ஹனிமூன் அறைக்குள்ளேயே!!
வருமோ மோகம்!!

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *