எந்நாளும் உன் மோகம் தான்
18
எந்நாளும் என் மோகம் தான்…
ஜியா ஜானவி ❤️
சிறுது நேரம் புடவையையும் அவளையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தான் அக்னி. ஆராய்ச்சி பார்வை தான்!! ஆனா ஆயா சத்தியமாக அந்தப்பார்வை அவளிடம் எங்கே தொடங்குவது என்று தான் ஒழிய அந்தரங்க பார்வை இல்லை!!
ஒருவழியாக வாத்தி புடவையை கட்டும் பகுதியை கண்டுபிடித்து விட.. அதை அடுத்து அவளுக்கு எப்படி கட்ட தொடங்குவது என்று இப்போது பேய் முழி முழித்தான்!!
உதட்டுக்குள் முகிழ்த்த சிரிப்பை மென்று முழுங்கிய ஆழியோ அமைதியாக இல்லையில்லை அப்பாவியாக முகத்தை வைத்து “என்ன சார் என்னை குறுகுறுன்னு பார்க்கிறீங்க.. எனக்கு ஷை ஷையா வருது!!” என்று நெஞ்சுப்பகுதியில் பெருக்கல் குறி போட்டுக்கொண்டு திரும்பிக் கொண்டாள். வெட்கமாம்!!
அட ஆண்டவா!! என்று தலை அடித்துக்கொண்ட அக்னி “ஒழுங்கா நேரா.. நில்லுடி!!” என்று திரும்பி நின்றவளின் தோளைப் பற்றி நேராக நிற்க வைத்தான்.
இதுவரை அந்த யூடியூப் சேனலில் சேலை கட்டும் முறையை பத்துக்கும் மேல் தர ஓடவிட்டு பார்த்துவிட்டான். எப்படி பார்த்தாலும் அவளைத் தொடாமல் கட்ட முடியாது என்று தெள்ளத்தெளிவாக வாத்தியின் மண்டையில் நச்சென்று சுத்தியால் அடித்தது போல புரிய.. நடுங்கும் விரல்களோடு புடவையின் ஓரத்தை அவளது இடுப்பில் பட்டு படாமலும் சொருகினான்.
அக்னி கொஞ்சமாக குனிந்தவன், வழவழப்பான அவள் மெல்லிடையில் கை வைத்து புடவை ஓரத்தை சொருகினான்.
இறுக்கி கட்டி தடம் பதித்திருந்த அவளின் விளிம்பை அவனின் விரல்கள் வருடி சென்றது மெலிதாக.. அதிலேயே சிலிர்த்து சிவந்தாள் பெண். ஆழி தன் இடது கை விரல்களை அழுத்தமாக மூடி சிலிர்ப்பை அடக்கினாள். அவளது மூச்சுக்காற்று எக்கு தப்பாக ஏறி ஏறி இறங்க.. அதற்கு ஏற்றார்போல் மெல்லிய வயிறு உள்ளே வெளியே என்று நடனம் ஆடியது.
மெல்ல குனிந்து அவன் சேலையை சுற்ற.. அவனது மூச்சுக் காற்று மெல்லிடையாளில் வெம்மையாய் வந்து இறங்க.. வயிற்றின் மையத்தில் அழகாய் சுழிந்திருந்த அவள் நாபிக் குழியைச் சுற்றி மெல்லிய ரோமங்கள் சிலிர்த்திருந்து எழுந்தன…
கவர்ச்சியாக சுழிந்திருந்த அவள் நாபி சுழி அவன் உதடுகளை முத்தமிட தூண்ட… மெல்ல அவள் இடுப்பை பிசைந்து இல்லை பிடித்து.. பிசைந்தானா? பிடித்தானா? அது அவனுக்கே வெளிச்சம்!!
ஒரு சுற்று சுற்றி வந்தபின் அவனது விரல்கள் எதேச்சையாக அவள் நாபி குழியில் இறங்கி ஏற.. அதில் சிலிர்த்தவள் அவன் தோளை இறுக்கி, கண்களை மூடி கிறங்கினாள். அவன் விரல்கள் அவள் இடையை சுற்றி சுற்றி உலா வந்தது.. அவ்வப்போது அந்த குட்டி தடாகத்தில் இறங்கி நீந்தியது.
அவனை தூண்டிவிட என்று இவள் தொடங்கிய விளையாட்டு கடைசியில் அவள் உணர்ச்சிகளை மொத்தமாக தூண்டிவிட.. அதை அடக்க உதடு மடித்து கடித்து கடித்து அந்த இடமே அவளுக்கு சிவந்தது போனது.
அவன் தலை முடிக்குள் விரல்களை விட்டுக் கோதி அவனை தன்னோடு அணைத்துக் கொள்ள அவளது ஒவ்வொரு அணுவும் தவித்து தகித்தது. அவள் பெண்மையின் ஏக்கம் இப்போது முழுதாக வெளிப்பட்டு அவளை இம்சித்தது தன்னவனின் தீண்டலில்…
தவித்த அவளது மனசும் உடம்பும் தன் மணவாளனிடம் பரிபூரண சரணாகதி அடைந்து.. அவனை முழுக்க தனக்குள் வாங்கி ஏக்கம் தணிக்கத் துடித்தது கிளர்த்தது.
கீழே மடிப்பு வைத்தவன் அடுத்து அவளது மாராப்பை போட அழகாக யூடியூப் பார்த்து அவனுக்கு தெரிந்தவரை பட்டி வைத்து அவன் நிமிர.. அழகிய அமிர்த கலசங்களின் திவ்ய தரிசனம்!! தரிசனம் மட்டுமல்ல ஆசிர்வாதமும் கூட.. அவன் தலையில் மெல்லமாக செல்லமாக இடித்து!!
//மெல்லிடையை பார்த்தேன்
அடடா.. பிரம்மன் கஞ்சனடி!!
சற்றே நிமிர்ந்தேன்…
தலை சுத்தி போனேன்..
ஆஹா.. அவனே வள்ளலடி!!//
ஸ்ரீனிவாஸ் அவன் தலைக்குள் வந்து பாட.. தலையை சிலுப்பிக் கொண்டான்.
நீண்ட செயினும் அவன் கட்டிய தாலியும் மார்பு மத்தியில் ஊஞ்சலாட.. அதை பார்த்தவனுக்கு இதுவரை இருந்த ஆராய்ச்சி பார்வை.. அவஸ்தை பார்வையாக மாறியது. அது எப்போது ஆளத்துடிக்கும் அந்தரங்க பார்வையாக மாறும்?
ஆனால் ஒரு தலை குலுக்களில் அதையெல்லாம் தவிர்த்தவன், அவளது புடவை மாராப்பை ஜாக்கெடோடு பின் செய்து விலக..
இப்போது அவள் கைகள் மெல்ல அவன் இடுப்பைச் சுற்றி படர்ந்து அவனைத் தன்னுடன் சேர்த்து அணைத்தன இறுக்கமாக!! அவளின் மெத்தென்ற மென்மைகள் அவனது வெற்று மார்பு மீது அழுத்தமாக படர..
விழிகளை மட்டும் உயர்த்தி அவள் மோகன புன்னகை சிந்த, அந்த விழி மொழியில்.. வசியத்தில்.. கட்டுண்ட காளையன் தனை மறந்து அவள் விழிகளில் அழுத்தமாக முத்தம் பதித்தான்.
ஆழி கண்களை மூடி கிறங்கி நிற்க..
கண்களிலிருந்து ஊர்வலம் சென்ற அக்னியின் இதழ்கள் செழுமையான கன்னங்களை சோதனை செய்து கனிந்து சிவந்து துடித்துக்கொண்டிருந்த பெண்ணவள் இதழ்களில் தஞ்சமடைய பார்த்து காத்திருக்க..
தன் கைகளை இறுக்கி சட்டென அவன் உதட்டில் தன் உதட்டை வைத்து அழுத்தினாள் ஆழி. அவனுக்குள் ஜில்லென ஒரு குளிர்ச்சியான உணர்ச்சி பரவியது. அவள் அவனை இன்னும் இறுக்கி நெருக்கமாக்கினாள் இதழ்கள் அழுத்தமாக நெருங்கிட..
இருவர் உதடுகளும் பொருந்திக் கொண்டன. அவள் மூக்கு அவன் மூக்கை முட்டி மோதி நெருக்கியது அவர்களது நெருக்கத்தில்.. அவள் மூச்சு காற்று அவன் மூக்கில் நேரடியாக மோதி அவனது சுவாசத்தில் கலந்தது, மனதை நிறைத்தது.
“ஹலோ.. ஹலோ.. மேடம் என்ன கனவா?” என்று அவளது தோளை அக்னி உலுக்க.. அப்போதுதான் கண் திறந்தவள் கனவுலகத்தில் இருந்து மீண்டு இருக்கவில்லை.
சட்டென்று தனது உதடுகளை ஆழி தொட்டுப் பார்த்துக் கொள்ள.. அங்கே அவள் இதழ்களை சிறை செய்து கொண்டிருந்த இதழ்களை காணவில்லை..
“ச்ச.. கனவா??” தன் தலையில் தானே தட்டிக் கொண்டு நிமிர்ந்து பார்க்க.. அங்கே மார்பின் குறுக்கே கைகளை இறுக்க கட்டிக்கொண்டு அவளைத்தான் கூர்மையாக பார்த்தான் அக்னி. கண்ணில் அக்னி ஃபால்ஸ் வேறு வழிந்தது!!
“என்ன கனவா?? ஓவர் கனவு உடம்புக்கு ஆகாது!! முதல்ல ஒழுங்கா படிக்கிற வழியைப்பாரு!!” என்று கோபத்தோடு மொழிந்தவன், அவள் பின்னந்தலையில் வேகமாக ஒரு தட்டு தட்டி “இப்படித்தான் உன்னை எல்லாம் தட்டி வைக்கணும்!!” என்று விட்டு தனது உடைகளை எடுத்துக் கொண்டு உடைமாற்றும் அறைக்கு சென்று விட்டான்.
“மானம் போச்சே!!” என்று அசடு வழிந்தவள், “வாத்தி தானே வேற யாரு.. ஆனாலும் கனவு நல்லா தான் இருந்துச்சு!!” என்று வெட்கப்பட்டுக் கொண்டே தனது அலங்காரத்தை முடித்தவள் கீழே சென்றாள்.
உடைமாற்றும் அறையில் குறுக்கும் மறுக்காக நடந்து கொண்டிருந்தான் அக்னி. மேகாவை விட்டு வேறு ஒரு பெண்ணை தீண்டியதை நெஞ்சம் தாங்கவில்லை.
மோகத்தோடு இல்லை..
காதலோடு இல்லை..
தாபத்தோடு கூட இல்லை..
வெறும் புடவை கட்டுவதற்காக ஆராய்ச்சியாக அங்கே எங்கே பார்த்தாலும் பட்டாலும்.. பட்டது பட்டது தானே!!’ என்று மனம் அல்லாடியது அவனுக்கு.
“இந்த குட்டி பிசாசு வேணும்னே நம்ம கிட்ட வம்பு வழக்குறா.. ராட்ஷசி!! ஸ்டே ஸ்டாரங் அக்னி!!” என்று வலது கையால் இடது புற நெஞ்சை தட்டி கொடுத்து கொண்டவன் கீழே இறங்கி அவனும் சென்றான்.
அதற்குள் பூஜை அறையில் விளக்கு ஏற்றி அங்கமற்கண்ணி கொடுத்த சர்க்கரை பொங்கலை வைத்து பூஜை செய்து ஆரத்தி காட்டி முடித்திருந்தாள் ஆழி.
“புதுசா கல்யாணமாகி ரெண்டு பேரும் சேர்ந்துதான் இந்த பூஜையை நடத்தணும்னு நேத்திக்கு சொன்னேன்.. பொம்பள பிள்ளை புடவை கட்டி அலங்காரம் பண்ணி வந்துட்டா.. நீ இந்த ஒரு பேண்ட் சட்டை மாத்திட்டு வரதுக்கு இவ்வளவு நேரமா?” என்று அங்கயற்கண்ணி என்று நொடித்துக்கொள்ள..
ஆழிக்கு அப்படி ஒரு சிரிப்பு மாமியாருக்கு நேராக சிரிப்பை மறைத்து முகத்தை அவள் திருப்பிக் கொள்ள..
“ஆமா நீங்க பார்த்தீங்க.. அவ புடவை கட்டுனதை!!” என்று முணுமுணுத்தான் அக்னி.
“என்ன சொல்ற? காதுல விழவே இல்லை.. வயசு ஆயிடுச்சு இல்ல. கொஞ்சம் சத்தமா பேசு!!” என்று அங்கயற்கண்ணி அவன் புறம் காதை நீட்ட..
“இப்ப என்ன?? அதான் வந்துட்டேன்ல.. இருங்க ஒரு எட்டு போய் உங்க சாமிக்கு ஒரு வணக்கம் வச்சுட்டு வந்திடுறேன். போதுமா?” என்றவன் பூஜை அறை வாசலில் ஒருநிமிடம் நின்று விட்டு வந்து விட்டான்.
‘இவனை திருத்த முடியாது!! விட்டு தான் பிடிக்கணும்!!’ என்றவர் இருவரையும் அருகருகே அமர வைத்து விருந்து போல பரிமாற அவசரகதியில் உண்டவன் “சரி நான் காலேஜ் கிளம்பறேன்!!” என்று வாசல் புறம் திரும்ப..
“டேய் மகனே.. இன்னைக்கு தான்டா உனக்கு கல்யாணம் ஆகி இருக்கு. இன்னைக்கே காலேஜ் போய் நிற்கிற என்று சொல்ற.. உன் ஸ்டூடண்ட்ஸ் கூட உன்னை பார்த்து சிரிப்பானுங்கடா!!” என்று அங்கயற்கண்ணி கூற..
“எனக்கு கல்யாணம் ஆனது காலேஜில் பிரின்சிபாலுக்கு மட்டும் தான் தெரியும். வேற யாருக்கும் தெரியாது!! நான் வேற யாரையும் இன்வைட் பண்ணல.. அதனால அவங்க எல்லாம் ஒன்னும் இதுகுறித்து அதிசயப் பொருள் என்ன பாக்க மாட்டாங்க.. சரியா? தீசிஸ் போயிட்டு இருக்கு நான் போயே ஆகணும்!!” என்று அவன் நிற்க..
“கொஞ்சம் இருங்க சார்.. நானும் வந்துடுறேன்” என்று பின்னோடு ஆழியும் ஓடிவர..
“நீ எங்க வர?” என்று எரிந்து விழுந்தான் அவளிடம்..
“பின்ன.. ஒரு வாத்தி.. வாத்தியார் நீங்களே இவ்வளவு பொறுப்பா காலேஜுக்கு போறீங்க. ஒரு ஸ்டூடண்ட் நான். உங்களை விட நான் பொறுப்பாக இருக்க வேணாமா?? நானும் யாருக்கும் சொல்ல எனக்கு மேரேஜ் நடந்ததை.. அதனால நானும் காலேஜுக்கு போறேன். என்னை காலேஜில் ட்ராப் பண்ணிடுங்க” என்று நின்றவளை பார்த்தவனுக்கு அவ்வளவு ஒரு கோபம் வந்தது.
“மா.. இவளுக்கு கொஞ்சம் சொல்லி புரிய வையுங்க அம்மா” என்று அவன் அலுப்புடன் கூற..
“ரெண்டு பேரும் சேர்ந்து இன்னைக்கு அவங்க வீட்டுக்கு மறு வீட்டுக்கு போகணும்.. ஆனா நீங்க ரெண்டு பேரும் காலேஜுக்கு மறு வீட்டுக்கு போறேன் நிக்கிறீங்க.. இதுல அவளை மட்டும் என்னால எப்படி தடுக்க முடியும்? அவளோட பெரியவன்.. நான் பெத்த மகன்.. நீயே என் சொல் பேச்சு கேட்க மாட்டேங்கிற.. அப்புறம் எப்படி நாளபின்ன உன் பொண்டாட்டி என்னை மதிப்பா??” என்று மீண்டும் சென்டியாக அங்கயற்கண்ணி பேச..
“ச்சை..!!” என்று வந்த கோபத்தை தன் கையில் வைத்திருந்த சாவியில் அவன் காட்டி தூக்கி எறிய..
“அலமு.. சீக்கிரம் வா!! வந்து நீனும் உங்க அண்ணனோட மறு வீட்டிற்கு போயிட்டு வந்துடுங்க.. அங்க எல்லாம் ஏற்பாடு பண்ணி இருப்பாங்க” என்று மகனின் எரிச்சலில் தன் காரியம் சாதித்துக் கொண்டார் அன்னை
மூவரையும் சுமந்துகொண்டு அக்னியின் ஆடி ஆழியின் வீட்டுக்கு வீட்டுக்கு சென்றது.
இன்று புதுமணமக்கள் மறுவீடு வருகிறார்கள் என்று காலை முதலே தடபுடலாக விருந்து வசந்தி செய்து கொண்டிருந்தார். இன்னும் திருமணம் முடிந்து சில உறவுகள் சென்றுவிடவில்லை. கூடவே பெரிய மாப்பிள்ளையும் அங்கேயே தங்கிவிட.. அனைவருக்கும் காலையில் விருந்து முடித்து, மதியத்துக்கு சமைத்துக் கொண்டிருந்தனர் வசந்தியும் ஆர்த்தியும்.
இவர்கள் வந்தது வாசலில் சத்தம் கேட்க ஆலம் எடுத்து வந்து சுற்றி இருவரையும் உள்ளே வரவேற்றனர் வசந்தியும் ஆர்த்தியும்.
நம் ரூல்ஸ் ராமானுஜம் மிதப்பாகவே கூடவே கொஞ்சம் கடுப்பாகவே சோபாவில் அமர்ந்து நியூஸ் பேப்பரில் ஒரு வார்த்தை விடாமல் படித்து கொண்டிருந்தான்.
அந்தக் கடுப்புக்கு காரணம் நேற்று அவன் பிளான் செய்து முதலிரவு.. இல்லை இல்லை எத்தனையாவது இரவென்று சாரி அவனுக்கே மறந்து விட்டது. அந்த கிளுகிளுப்பு இரவுக்காக ஏகப்பட்ட கனவுகளுடன் ஆசைகளோடு இவன் காத்திருக்க.. திருமண களைப்பில் வந்த ஆர்த்தி படுத்ததும் உறங்கிவிட.. இவனது பலவித முத்தங்கள்.. அதாங்க முயற்சிகளாலும் அவளை எழுப்ப முடியவில்லை.
அதில் தான்
எத்தனை வகை..
எத்தனை விதம்..
ஆசையாக ஒன்று…
அவசரமாக ஒன்று..
அழுத்தமாக ஒன்று..
அவளை எழுப்ப ஒன்று..
அணைத்த வாக்கில் ஒன்று..
கட்ட கடைசியில் கடுப்போடு ஒன்று..
ம்ஹூம்.. அனைத்திற்கும் அசைந்து கொடுக்கவில்லை ஆர்த்தி!!
அதில் தான் காலையில் இருந்து கடுப்போடு முறைப்போடு அமர்ந்திருக்கிறான். இதில் புதுமணமக்கள் வேறு வருகை தந்திருக்க..
“கல்யாணம் முன்னமே இங்கிலீஷ் படம் ஓட்டுனவன், லைசன்ஸ் வேற கொடுத்தாச்சு.. நேத்து நைட்டு என்னென்ன படம் ஓட்டுனானோ.. நம்ம தியேட்டர் வெறும் காத்து தான் வாங்கிச்சு!!” என்று பொறுமலோடு தன் எதிரில் அமர்ந்திருந்த அக்னியை பார்த்தான் ராம் பிரசாத்.
அலமு ஆழியோடு உள்ளே சென்றுவிட்டாள். அனந்தராமன் தனது சொந்தங்களை எல்லாம் மீண்டும் ஒரு முறை அவனுக்கு அறிமுகப்படுத்தினார். நேற்று திருமணத்தின் போது பல பேரை மறந்திருக்கக்கூடும். இனி அவர்களையெல்லாம் அடிக்கடி சந்திக்க வேண்டும் அல்லவா அந்த நினைப்போடு.
அவனும் அவசரமாக உதடுகளில் ஒட்டவைத்த சிரிப்போடு அனைவருக்கும் தலையாட்டிக் கொண்டு அமைதியாக அமர்ந்து இருந்தான். ஆனால் இந்த அமைதி எப்போது பறக்கப்போகிறது என்று அவனுக்கே தெரியவில்லை.
நிஜமாகவே டாக்ட்ரேட் பண்ணும் மாணவர்களில் சிலருக்கு சீக்கிரம் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் வேறு இருக்கிறான்.
“இது சொன்னால் இவர்கள் புரிந்து கொள்வார்களா?” என்று அவ்வப்போது நெற்றியை நீவிக் கொண்டே இருந்தான்.
அவனின் அவஸ்தையைப் பார்த்து அனந்தராமனுக்கு புது இடத்தில் இருக்க சங்கோஜப்படுகிறார்.. கூச்சப் படுகிறார் மாப்பிள்ளை என்று நினைத்தார். இது எல்லாம் புது மாப்பிள்ளைக்கு வழக்கம் தானே போகப் போக பழகிவிடும் அவருக்கு என்று சிரிப்போடு சின்னமகளை அழைக்க உள்ளே சென்றார்.
அங்கே இளம் பெண்களாக குசுகுசுவென்று பேசிக் கொண்டிருந்தனர். பெரும்பாலும் ஆழியை ஓட்டுவதே.. அதுவும் நேற்று இரவு என்ன நடந்தது? சொல்லு? சொல்லு? என்று அவரது உறவு பெண்கள் வேறு அவளை படுத்தி எடுத்துக் கொண்டிருந்தனர்.
அவளோ வெட்கப்பட்டு சிரிப்போடு தலையாட்டிக் கொண்டே இருக்க ஆர்த்தியோ அவள் இடுப்பில் நறுக்கென்று கிள்ளி வைத்து “இப்ப சொல்ல போறிய இல்லையாடி?” என்று கேட்க..
அலமுவுக்குத்தான் அண்ணனைப் பற்றி தெரியுமே.. அதனால் ஜிப்பு போட்டதுபோல வாயை இறுக்க மூடிக்கொண்டாள்.
“நீங்க கொஞ்சம் பேர்தான் இருக்கீங்க.. இன்னும் நம்ம சொந்தக்காரவங்க எல்லாரையும் வர சொல்லுங்க.. எல்லாருக்கும் மேடை போட்டே சொல்றேன். போவியா.. இதெல்லாம் பர்சனல்.. இதெல்லாம் உன்கிட்ட சொல்லக் கூடாது!!” என்று அவள் கண்ணடிக்க..
“அடிப்பாவி!! என் கல்யாணம் முடிஞ்சு உடனே இப்படிதானே டி கேட்டீங்க நான் எல்லாத்தையும் சொன்னேனடி!!” என்று ஆர்த்தி அப்பாவியாக விழிக்க..
“நீ உளறுனா.. நானும் உளறுனுமா அக்காஆஆஆ” என்று கேட்டவள் சிரிப்புடன் வெளியே வர எதிரில் வந்த தந்தையைப் பார்த்து வெட்கம் கொண்டு தலை குனிந்து கொள்ள..
“ஆழிமா.. மாப்பிள்ளைக்கு இங்கே ஹாலில் இருக்கிறது கொஞ்சம் சங்கோஜமா இருக்கு போல.. நீ போய் அவரை கொஞ்ச நேரம் உன் ரூம்ல ரெஸ்ட் எடுக்க சொல்லு. இன்னொரு அரை மணி நேரத்தில் சாப்பிடலாம்..” என்று கூறினார்.
“இதோபா..” என்றவள், அலமுவை திரும்பிப்பார்க்க.. எனக்கு ஒன்னும் பிராப்ளம் இல்ல அண்ணி.. நீ போய் அண்ணனை கவனிச்சுக்கோ” என்றாள்.
“அவ உங்கள விட சின்ன பொண்ணுதானே.. சும்மா பேர் சொல்லியே கூப்பிடுங்க!!” என்று ஆர்த்தி கூற..
“அது முறையாகாது அண்ணி.. அவங்க எங்க அண்ணனோட மனைவி!! தம்பி மனைவியா இருந்தா பேர் சொல்லி கூப்பிடலாம். அது எங்க அண்ணனுக்கு செய்யுற மரியாதை ஆகாது. சின்னவங்க என்பதால் தான் வா போ என்று கூப்பிடுகிறேன்” என்று அழகாக சிரித்தாள் அலமு. ஆர்த்தி அவளை மெச்சுதலாக பார்த்தாள்.
அக்னி அருகே சென்று அவனை எப்படி அழைப்பது என்று கையை பிசைந்து கொண்டிருந்தாள். இதே மற்ற நேரமாக இருந்தால் சார் என்றோ.. வேறு எப்படியோ கூப்பிட்டுயிருப்பாள். எதிரில் வேறு அக்கா கணவன் இருக்கிறாரே.. என்று “என்னங்க..” என்று மெதுவாக அழைக்க அது காதில் விழவே இல்லை அக்னிக்கு..
அவன் தன்னுடைய எண்ணங்களில் சுழன்று கொண்டிருக்க அவள் மெதுவாக கூறியது அவன் காதில் கேட்கவில்லை என்பது ஒருபுறம்.. தன்னைத்தான் அழைக்கிறாள் என்று அவனுக்கு தெரியவில்லை.
மெல்லமாக அவனின் தோள்களில் சுரண்ட.. திடுக்கிட்டு திரும்பியவனிடன், “வாங்க.. நீங்க என் ரூம்ல இருப்பீங்களாம். இன்னும் கொஞ்ச நேரத்தில் சாப்பாடு ரெடியாகிடும். அப்புறம் சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கலாம்!!” என்று அவனை அழைத்து சென்றாள்.
இந்த கும்பலில் இருந்து தப்பித்தால் போதும் என்று எழுந்தவன் அவள் பின்னாலேயே சென்றான்.
“இப்ப வந்த இவன் பொண்டாட்டியோட தனியா போறான். ஆனா நான் இங்கே உட்கார்ந்து இவங்களுக்கு கம்பெனி கொடுக்கணுமா?? முடியாது!! நானும் என் பொண்டாட்டியை கூட்டிகிட்டு ரூமுக்கு போவேன்!!” என்று வீம்புக்கு இவனும் எழுந்து இவர்கள் வந்தால் தங்கும் அறையை நோக்கி சென்றவன், “நம்ம பொண்டாட்டியையும் கூட்டிட்டு போவோம்!!” என்று சமையல் அறையை நோக்கி “ஆதிஇஇஇ” என்று அழைத்த வண்ணம் சென்றான் ராம்.
ஆழி அறைக்கு அவனை அழைத்து சென்றாள். “கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க.. வந்திடுறேன்!!” என்றாள்.
“இங்க பாரு டி.. சீக்கிரம் கிளம்ப வேண்டி இருக்குனு வீட்டிலேயே சொன்னேன். உனக்கு புரியலையா?” என்று அவன் கடுப்படிக்க..
“ஒரு ஹாப்ன ஹவர் தான்!! ப்ளீஸ்..” என்று அவள் கதவை திறந்து கொண்டு வெளிய வர.. “நான் சொல்லிக்கிட்டே இருக்கேன்.. நீ காதுல வாங்காம போற” என்று கடுப்பில் அவன் கையில் கிடைத்த
அவள் முந்தானையை பிடித்து இழுக்க.. அது பின்னோடு கழண்டு கொண்டு வர..
‘அவளுக்கு தான் புடவை கட்டத் தெரியாதே.. ஐயையோ.. இந்த நிலைமையில் யாராவது நம்மை பார்த்தார்கள் என்றால் அவ்வளவுதான்!!’ என்று சட்டென்று அவளை அணைத்து வாக்கில் அறைகள் நுழைந்து படாரென்று கதவை சாத்தினான் அக்னி.
தன் மனைவியை பார்க்க வந்து ராம் பிரசாத்துக்கு இந்த காட்சி கண்ணில் பட.. “ஆதிஇஇஇ… என்று அழைத்து கொண்டே வந்தவன்.. “ஆத்தீஇஇஇ… அவ்வா… அவ்வா.. நேத்து நைட்டு பூரா மசாலாப்படம் ஓட்டிட்டு இன்னிக்கு காலைல திரும்ப மார்னிங் ஷோ.. ஓட்ட போறானே… சொக்கா!!! சொக்கா!!!” என்று வாய்பிளந்து நின்றான்.
“நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா…!!” என்று அடுத்த நிமிடம் ராம் எனும் ஆண் சிறுத்தை சீறிக் கொண்டு சென்றது சமையலறையை நோக்கி..
அவ்வா!! அவ்வா!!
வருமோ மோகம்…
