உன் நினைவு என் சுவாசமடி.

This entry is part 16 of 21 in the series உன் நினைவு என் சுவாசமடி

உன் நினைவு என் சுவாசமடி

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

ஜெபா தன்  இருக்கையில்  இருந்தவாரேதான்  பேசினான்.
மோனலை  பார்த்து  இன்னும்  எதாவது  பேச  இருக்கா  சீக்கிரம்  பேசி  முடி  மச்சாங்க கிட்ட  கொஞ்சம்  தனியா  பேசவேண்டியது  இருக்கு என்று சொல்லவும்.
இந்த வீடு  எங்கப்பாம்மா  வாழ்ந்த வீடு  இது  யாருக்கும்  விட்டு தர மாட்டேன்.
என் பேர்ல எழுதி வச்சிருக்குற  கடைகளில்  உங்க  பேருக்கே  மாத்தி  வச்சிருக்கேன். மீதி  எல்லாமே  நான்  லீசுக்கு  விடப்போறேன். அத வக்கீல்  அங்கிள்  பார்த்துப்பாங்க.
நாயகி அத்தைக்கு  ஆச்சி தந்த  நகையை  குடுத்திடுறேன்  அப்படி சொல்லவும்.
நாயகி ” எனக்கு  நகையெதுவும்  வேண்டாம் நம்ம  வீட்ல இருந்து  வெளிய வாழப்போனப்பிள்ளைக்கிட்ட  இருந்து  வாங்கி பழக்கம் இல்லை  குடுத்துதான் பழக்கம்.
 
உன்ன கல்யாணம்  பண்ணிக்கிட்டா சொத்து வரும்னு  ஆசைப்பட்டுத்தான் 
பெரியவனுக்கும் உனக்கும்  கல்யாண ஏற்பாடு  பண்ணேன்.
ஒரு பிள்ளைய  துள்ளதுடிக்க  வாரிக்கொடுத்தாச்சு . இனி  எனக்கு  எதுக்கு  நகை,  சொத்து  இருக்கறது  போதும் தாயி  வாயும்வயிறுமா   வந்து நிக்க  இங்கெல்லாரும்  சொத்துக் கணக்கு  பேசுறானுங்க. இவனுங்களுக்கு  நீ இரக்கம் காட்டறதே  நல்லதில்ல.” அவரது  பணத்திமிரும்  ஆண்பிள்ளைங்க இருக்காங்க என்ற தெனாவட்டும்  இருந்த இடந்தெரியாமல்  அழிந்துப்போயிற்று
அப்படியே  ஒதுங்கி  அமர்ந்துவிட்டார்.
வக்கீல் ” தாயி  நாயகி மவன்  இரண்டாவதுள்ளவன்   இரண்டு  மாசத்துக்கு முன்னாடியே  என்கிட்ட  வந்து  பேசினான். இந்த  வீட்டு தாய்பத்திரத்தை வச்சு. அப்பவே  அவங்கிட்ட  எல்லாத்தையும்  சொல்லியாச்சே “
அது  தெரிஞ்சுத்தான்  மாப்பிள்ளைங்க இரண்டு பேரும் உத்தரபிரதேசத்துல கிடக்க  அடிமாட்டு பணம்  கொடுத்தாக்கூட  கொலை செய்யற கும்பல் கிட்ட  விலைபேசித்தான்  உன்னையும்  என்னையவும்  போட்டுத்தள்ள முடிவு செய்து  மதுரையில  இறக்குனது.
உனக்கு  மெசேஜ்  அனுப்பினது  வேற யாருமில்லை  உன்  அருமைத்தம்பி  சித்தப்பா பையன். என் பிள்ளைங்க  உன் வயித்துல  இருந்தனால  மயங்கி  விழுந்து  வெளிய வரமுடியாம  தப்பிச்சிட்ட.
உன்ன வெளியவரவச்சு  அங்கயே  ….
அந்தவார்த்தையக்கூட அவனுக்கு சொல்ல முடியல. அதுதான்  அவங்க  பிளான்
இவனுங்களுக்கு  நீ பாவம் பாக்குற.
இவ்வளவையும் கேட்டுக் கொண்டிருந்த  மோனலுக்கு  இப்படியுமா  மனுசங்க  குடும்பத்துல செய்வாங்க  என்றிருந்தது..
சரவணன் ” ஆமா சொத்து முழுதும் அவளுக்கு  எழுதி வச்சுட்டு  போயிட்டுதுங்க  பெருசுக இரண்டும், அத தெரிஞ்சித்தான்  மாமா  பையன்கிட்ட  பேசினேன், ரஞ்சிதா  அத்தையும்  இதுக்கு சம்மதிச்சுதான் அவன என்கூட அனுப்பினாங்க என்றான் ” 
நாயகி ரஞ்சிதாவைப் பார்த்து  அடியே கொலைகாரி  என் குடும்பத்துல  வந்த  பேய் நீ. என் தம்பியவும்  இப்படித்தான்  கென்றிருப்பா, தன்  தலையில்  அடித்து  அழுதார், சுப்பையா பாண்டியன் குடும்பம்  எப்படி வாழ்ந்துச்சு இப்படியா  நாசமாகபோகனும் என்று.
சரவணன்  ராஜபாண்டியனின்  மகனிடம் கண்ணசைக்கவும்,இருவரும்  வாள் போன்ற  கத்தியை வெளியெடுக்கவும்,ஜெபா எல்லாவற்றையும்  எதிர்பார்த்து  வந்தவன்  மோனலை சட்டென தன் பின்பக்கம்  இழுத்து நிறுத்திக் கொண்டான்.
அவன்களின்  முதல் இலக்கு அவள்தான் என்று  ஜெபாவிற்கு தெரியும்.
இப்போ  பேசினான். நீ  விசப்பாம்பிற்கு  பால் வார்க்க நினைச்ச  டாலி  அது  பார்த்தியா  எப்படி  கோரப்பல்ல  காமிச்சி
உன்ன  கொல்லத்துடிக்குது என்று  சொன்னவன் தன் கையில்  மடக்கி  வைத்திருந்த கணமான சிறு கத்தியை  விட்டெறியவும்  அது  சரவணனின்  மணிக்கட்டைத் தாக்கவும் அவன் கையிலிருந்த  வாள் போன்ற கத்தியை  கீழே  போட்டுவிட்டான் அவன்  கையிலிருந்து இரத்தம் பீறிட்டு வந்தது  இதைப் பார்த்த ராஜபாண்டியின் மகன்  சிறிது  பின்வாங்க, சட்டென கீழே படுத்து  அவனின்  முட்டியில் பின்பக்கம்  தாக்கவும்  முன்பக்கமா  கவிழ்ந்துவிழுந்தான்,  வெளியே  போலிஸ் சைரன்  சத்தம் ஒலிக்கவும்  சரியாக  இருந்தது.
ஜெபா தன் பிஸ்டலை எடுத்தான்.
நான்  உங்கள தற்காப்பிற்கு  சுட்டுட்டேன்னு  சொன்னாக்கூட  இப்போ  எனக்கு  பிரச்சனையில்லை. எல்லா  எவிடன்ஸும்  ரெடி பண்ணிட்டுத்தான்  வந்திருக்கேன்.
அந்த பாவத்தையும்  நினைச்சு நினைச்சி 
இவ அழுதிட்டிருப்பா. அதுக்காக மட்டுந்தான்  உங்கள கொல்லாம விடுறேன்.
இவன்  இப்படி  முன்  ஏற்பாடு செய்துக்கொண்டு வருவான்  என்று யோசிக்கவில்லை  கூட  வக்கீல்  இருக்காங்க என்ற மெதப்புல வந்தானுங்க.
இவர்களின் செயலைக் கண்ணால்  கண்டதும் மோனலுக்கு  இருந்த  கொஞ்ச பாசமும்  அப்படியே  அத்துப்போச்சுது.
போலிஸ்  உள்ள வர்றதுக்கு முன்னாடி  உங்கள வேற எதுவும்  பண்ணமாட்டேன். ஆனா ஆயுசுக்கும்  வெளியவரமுடியாதபடி  நிறைய கேஸ்ஸுங்க  உங்கமேல  இருக்கு  அதுவே  போதும் என்றான். அதற்குள்ளாக  இவர்களைக் கைது செய்ய போலிஸ்  உள்ளே  வந்திருந்தனர்.
நாயகி  அழுதார்  இரண்டு  பிள்ளைய பெத்தும்  இப்படியா  போகனும். நான்  செஞ்ச பாவம்போல   என  அழுது கரைந்தார்.
ரஞ்சிதா மோனலைத்தான்  வாய்  ஓயாமல் திட்டினார், இருந்த  அத்தனை வசைச் சொற்களையும்  பயன்படுத்தினார்.
ஜெபாதான்  அவர்களை  விலக்கி  போகச்சொல்லி சத்தமிட்டான் .
மேல உள்ள  தன்னுடைய  தகப்பனின்  அறைக்கு  வந்து  கட்டிலில்  தலைசாய்த்து  அழுதாள்.
” ஏம்ப்பா  நம்ம குடும்பம்  இப்படி  ஆகிட்டு. தாத்தா  நல்லதுதான  செய்தாங்க. நீங்க  இப்படி என்ன பாதியில விட்டுப்போயிட்டீங்க, சித்தப்பா  போயிட்டாரு  இருக்கவங்களும் சொத்துக்கு  ஆசைப்பட்டு  சொந்த அக்காவையே  கொல்ல துணிஞ்சு நிக்குறான். ” சத்தமா  சொல்லி  அழுதாள்.
கீழே  எல்லா  பார்மலிட்டீசும்  முடிந்து  வந்தவன்  கண்டது  அழுது புரளும்  மனைவியை.
மெதுவாக  வந்தவன்  அவளது  தோளை  ஆதரவாக  தட்டிக்கொடுத்ணான், இதுவும்  நன்மைக்குதான் என  மனச தேற்றிக்கோ.
இல்லன்னா இவங்க மேல இன்னும்  பாசம் வச்சுருப்ப. அவங்க ஒதுக்கித்தான்  வச்சிருக்காங்க  மனசளவில  இனி நீ  பிடிக்க நினைச்சாலும்  முடியாது.
என்னோட சொந்தம் அதுதான் உனக்கு நிஜம் அதமட்டும்  இனி  மனசுல நினைச்சுக்கோ ” என்று  சொல்லி  முடித்தவன்.
அவளது  மனநிலையை  மாற்ற நினைத்தவன் ” இதுதான்  உங்க  பேரண்ட்ஸ்  ரூமா, நல்லாயிருக்கு ,அதைவிட ரெம்ப அமைதியா  சாந்தமா  இருக்கு.” 
மோனல் நிமிர்ந்து  பார்த்து  ஒன்றும்  சொல்லாமல் கண்களை  துடைத்துக்கொண்டு   எழுந்து  கட்டிலில்  அமர்ந்தாள்.
அவனும்  அவள்  பக்கத்தில்  அமர  சரவணன்,தர்ஷனா போட்டோ  நேராக  மாட்டப்பட்டிருந்தது. அவ்வளவு  அழகா  இருந்தது இன்னும்  பொலிவு மாறாமல்.
அதையே பார்த்துக்கொண்டிருந்தவள் 
ஒன்றுமே  சொல்லாமல்  அப்படியே  அமர்ந்து இருந்தாள்.
அப்பாதான்  காரணம்  இவர்கள்  தன்னை  ஒதுக்கி  வைக்க  என நினைத்திருக்க. எல்லோரும் சுப்பையா பாண்டியின் சொத்து  தனக்கு வநதிருமோ  எனக் கவலைப்பட்டிருக்கின்றார்கள்  என்ற உண்மை  நெற்றியில் அறைந்து  உரைத்தது.
என்னக் கொல்ல வந்தாங்களா. என்  குட்டீசுங்கதான்  நான் உயிரோட இருக்கவே காரணமா. அன்றைக்கு  மயங்கி மட்டும்  விழலன்னா என்ன  வெட்டிப்போட்டு இருப்பாங்களா  என சிந்தனை  அவள் உடம்பு லேசாக உதறியது இதை நினைக்கும்போது .
அதை உணர்ந்தவன்  அவளை இன்னும்  ஆதரவாக அணைத்தவன்.
நீ  நேற்று  தனியா  வந்திருந்தா  உன்  நிலமை என்ன. என்னோட  நிலமை என்  பாரு. எல்லா ஆபத்துலயும் நம்மள கடவுளும்  உன் பெற்றோரின்  ஆசியும் தான் காப்பாத்தியிருக்கு. இவங்களோட உண்மையான  முகத்தை  உனக்கு  காமிச்சிக்கொடுத்திருக்கு.
அந்த  போட்டோவை  வேணா  நம்ம வீட்டுக்கு   கொண்டு  போயிடலாமா  எனக்  கேட்க மோனலின் கண்களில்  மின்னல் சரி  எனத் தலையைசைக்க .
அதைக் கழட்டி எடுக்க போக எங்க  அவனால  முடியல. முடியலடி  இந்த போட்டோ  யாரு  மாட்டினது  நீயா  எனக்கேட்டான்.
அவள்  இல்ல  நான் பிறந்ததுல இருந்தே  இங்கதான்  இருக்கு. ஒருவேலை எங்கப்பா  மாட்டி வச்சிருப்பாங்களாயிருக்கும் எனவும்.
ஓ என்  மாமனார்  மாட்டிவச்சதா. அவர் மாட்டுனத  நான் கழட்டிறேன் என்று  முயற்சிக்க  அவன்  கையில்  எதோ  கிழித்தமாதிரி  தோணக் கையை சட்டென உதறிக்கொண்டு  பார்த்தான் ஒரு துளி இரத்தம். 
அவனுக்கு  ஆச்சர்யம்  அவன் கையைப் பார்த்து  அப்படியே  நிற்க மோனல்தான்  எழுந்து கிட்டவந்தவள்  அவன்  கையைப்பிடித்து  பார்த்துவிட்டு.
ஐயோ இரத்தம் என்று தன் துப்பட்டாவை வைத்து துடைத்து  பார்க்க  கயம்பட்ட எந்த  தடமும்  இல்லை  ஆனால்  இரத்தம்  வந்திருந்தது.
மோனலுக்கு  புரிந்தது  ஜெபாவை பார்த்து  வலி  எதுவும் இருக்கா   எனக்கேட்க  அவன் ”   இல்ல டாலி  ஏதோ கீச்சது மாதிரி  இருந்தது  அதான் பார்த்தேன்  இரத்தம் இருக்கு காயமும் இல்ல  வலியும்  இல்ல “
 மோனல் ” வலிக்காது,  அந்த போட்டோ  இங்கயே  இருக்கட்டும் , “
ஜெபா ” ஏன் “
மோனல் ” அவங்களுக்கு  அது பிரியமில்ல அதனாலதான்  காயமில்லாம  இரத்தம். நீங்க  எடுத்ததுனால  இதோட  போச்சுது. 
ரஞ்சிதா  சித்தி  எப்பவும்  சொல்லுவாங்க  சரவணனும் தர்ஷனாவும்  இங்கதான் இருக்காங்க, எனக்கு  அந்த அறைக்கு  போக பயமா இருக்கு, இடிச்சு  வேற கட்டித்தாங்கனு  கேட்பாங்க, நான்தான்  சித்தி  அவங்க  தேவைக்கு  பொய் சொல்றாங்கனு நினைச்சேன். தாத்தவும்  ஆச்சியும்   அத  உணர்ந்த்தாங்கபோல.
தாத்தா சம்மதிக்கவே இல்லை இப்போதான்  எல்லாமே  எனக்கு  புரியுது. 
மருமகன் மேல  ரெம்ப  பாசம் போல அதான் காயமில்லாம  இருத்தம்   லேசாக  முறுவலித்தாள்.
ஜெபாவிற்கு ஆச்சர்யம்  போலிஸ் மூளையைக்கொண்டு  அங்கு  ஆராய்ந்த்தான்  அங்கு  ஒரே ஒரு  ஆணியில்தான்  அந்த போட்டோ  மாட்டப்பட்டிருந்தது.
அவனுக்கு  நம்பவும் முடியவில்லை, நம்பாலும் இருக்க முடியவில்லை 
அந்த  போட்டோவை அப்படியே விட்டுவிட்டான்.
மோனலிடம் வேற  எதுவும் இங்கயிருந்து  உனக்கு  எடுக்கனுமா  எனக் கேட்டான்.
அவள்  இல்லை என்க ” சரி  வா  நம்ம  கிளம்புவோம் ,பசிக்குது   போலிஸ் ஸ்டேசன்ல வேற எல்லா விவரத்தையும் எழுதி கொடுக்கனும் என  அவன்  முன் செல்ல அவள்  திரும்பி  அந்த  போட்டோவை  பார்த்து கைசைத்துவிட்டு வந்தாள். அவளுக்கு  இப்போ அங்கவுள்ளது எல்லாமே உயிருள்ளதாக  தோண்றியது.
இப்போ  ரெம்ப சந்தோசமாக  அவனுடன்  இறங்கி  நடந்தாள். தன் தாய் தகப்பனின்  மீதான  மனசஞ்சலமெல்லாம்  இல்லாது போல.
ஸ்டேசனுக்கு  போயிட்டு  கையெழுத்து  எல்லாம்  போட்டு  கொடுத்தவன்  அப்படியே ஊருக்கு  கிளம்புறோம்  என்று வக்கீலிடமும்  விடைபெற்று  இப்போது
ஹோட்டலில் சாப்பிட  உட்காரவும் 
அவன்  ஆர்டர் செய்தான், இவளும்  சில  ஸ்வீட்ஸ்  ஆர்டர் செய்தாள்  எல்லாம்  வடநாட்டு  ஸ்வீட்ஸ் அது, அவன் முழிக்கவும்.
 ” இதெல்லாம்  அம்மா  அப்பாவுக்கு  பிடிக்கும்னு  செய்து வச்சிட்டு  என்ன தொடவிடாமா  அப்பா வர்ற வரைக்கும் காத்திருப்போம்  அப்பா  எவ்வளவு  லேட்டா  வந்தாலும்  சேர்ந்துதான்  சாப்பிடுவோம் ” என சந்தோச கணங்களை நினைத்து  நினைத்து  சாப்பிட்டாள்.
அவள்  அதிகமா  இனிப்பு  எடுக்கவும்  கண்டித்தான். என்னோட  குட்டிஸ்ஸ நான்தான்  பார்த்துக்கனும் ,அதிகமா ஸ்வீட்ஸ் சாப்பிட்டா வேற மாதிரி  ஆகுமாம் என அவளைத் தடுத்தான்.
இப்படியாக  மதுரைவந்து  சேர  இரவு  ஆகிற்று  வரும்போது  அவன்  தோளிலயே  தூங்கிவிட்டாள். விடு வந்ததும்  அவளைத் தன் கையிலயே  மெதுவாக  தூக்கி  கொண்டு செல்ல 
அனுராதா  பயந்து கேட்டார்   
” என்னாச்சிடா பிள்ளைய இப்படித் தூக்கிட்டு வர்ற “
ஜெபா மெதுவாக சைகை செய்து  இருங்க வர்றேன்  என சொல்லிவிட்டு  அவளை  படுக்கையில் கிடத்திவிட்டு  தலையணை வைத்துவிட்டு வந்தான்.
வந்தவன்  ஒரு மூச்சு  அங்க  நடந்தவை  அனைத்தையும்  ஒன்றுவிடாமல்  சொன்னவன்.
இறுதியாக  மோனலின்  பெற்றோரின்  போட்டவும்  அங்கு  நடந்ததையும்  சொன்னான் ஆச்சர்யமாக.
அனுராதாவிற்கு  ஆச்சர்யம் அவன்  கையை பிடித்து  பார்த்தவர்  காயத்தை  தேடினார்.
” ஆச்சர்யம்  இல்ல ,காயமே  இல்ல  இரத்தம்  வந்துச்சா. எவ்வளவு  பாசம்  இல்ல  “
ஜெபா ”  ஆமாம்மா  ,அவங்க  உயிரோட இருந்திருந்தா  எவ்வளவு நல்லா  இருந்திருக்கும் மோனல  எப்படி  பார்த்திருப்பாங்க ,என்னையவும்  பாசமா  பார்த்திருப்பாங்க “
அனுராதா  சிரித்தார்  
” அம்மா  நான்  எவ்வளவு  வருத்தத்துல  பேசிட்டு  இருக்கேன். நீங்க என்னனா  சிரிக்கீங்க “
” டேய், அவங்க  உயிரோட இருந்தா  நல்லாயிருக்கும்தான், அவங்க  இருந்திருந்தா  மோனல  எப்படி  உனக்கு  கல்யாணம்  பண்ணி தந்திருப்பாங்க, உன்னைவிட  பெஸ்ட்டா  நல்ல  டாக்டரோ இஞ்ஜினியரையோ  பார்த்து  கட்டி வச்சிருப்பாங்க ” என சிரித்தவாறே  சொல்ல  
ஜெபா  கடுப்பாயிட்டான் உங்ககிட்ட வந்து சொன்னேன் பாருங்க ,அப்புறம்  நானும்  ஒரு இஞ்ஜினியர்தான்(மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங்க் முடிச்சிட்டுத்தான் ஐபிஎஸ் எழுதினான்) அத மறந்திடாதிங்க என சொல்லி  படுக்க சென்றுவிட்டான்.
அடுத்த நாள்  காலை  எழும்பிய  மோனல்  பார்த்தது அவள்  ஜெபாவின்  கைகளில்  படுத்திருந்ததைதான்.
அப்படியே  மெதுவாக  நகர்ந்து  எழும்ப முயற்சிக்க  அவன்  அவளைப் பிடித்து
” அப்படியே  படுடி, அசையாத  “
அவள்  அப்படியே படுத்தவள்  அவன்  முகத்தை பார்த்துக்கொண்டே  இருக்க 
 ” மச்சான்  முகத்துல  என்ன புதுசா  இருக்குனு  சைட்  அடிக்கறியா ” கண்ண மூடிக்கொண்டே  அவன் கேட்க 
அவள் கண்களை  இறுக மூடிக்கொண்டாள்..
நினைவு தொடரும்…
  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *