உன் நினைவு என் சுவாசமடி.

This entry is part 12 of 21 in the series உன் நினைவு என் சுவாசமடி

உன் நினைவு என் சுவாசமடி

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

உன் நினைவு என் சுவாசமடி.

மோனல்  ஜெபாவையே  சுத்தி சுத்தி வரவும், அவளைப்பிடித்து நிறுத்தி  என்னடி  பண்ற  எதாவது  வேண்டுதலா என்னைய  சுத்திவரனும்னு.
மோனல் லேசாக சினுங்கியவள்
 ” என்னையவும்  கூட  கூட்டிட்டு போங்க “
ஜெபா அவளைப்பிடித்து தன்  மடியில்  இருத்தி ” உன் உடம்பு  இன்னும் சரியாகல   இப்படி  ட்ரவல் பண்ணி  ரிஸ்க்  எடுக்க வேண்டாம். அப்புறம் நீ  அங்க வந்தா  தனியா  இருக்கனும், இன்னும்  நல்ல  சரியான  பிறகு நான்  அங்க  கூட்டிட்டு  போவேனாம். அதுவும் இல்லாம  அங்க வீடு  எப்படி  என்ன எல்லாம்  பார்க்கனும் 
இப்போ  உன்ன அங்க  அழைச்சிட்டுப் போறது கஷ்டம்டா “
சமாதான வார்தைகள் எதுவும்  எடுபடல.
முகத்தை  உர்னு வச்சிருந்தா.
நேரா அனுராதாகிட்ட  போனவ ” அனும்மா என்ன  கூட்டிட்டு  போகச்சொல்லுங்க  என்க “
அனுராதா ” எங்கடா “
மோனல் ” அய்யோ  அனுமா  அவங்க  மதுரைக்கு  போறாங்க..
என்ன  கூட்டிட்டு  போகமாட்டுக்காங்க “
அனுராதா  ” அவன்  கூட்டிட்டு போறேன்னு  சொன்னாக்கூட  நான்  விடமாட்டேன்டா. இபபோதான்  எல்லா தத்தும் கழிஞ்சி  எங்களுக்கு  நல்லபடியா  திரும்ப கிடைச்சிருக்க. உன் உடம்பு இன்னும் சரியாகல ,நீ  இப்போதைக்கு 
எங்கையும் போகக்கூடாது “
மோனலுக்கு  அய்யோனு இருந்துச்சி, மீண்டுமாக  தன் அறைக்கு  வந்தவள்  கட்டிலில்  அமைதியாக  அமர்ந்தாள்.
ஜெபா  அவளையேத்தான்  பார்த்து கொண்டிருந்தான். சின்ன பிள்ளைபோல
அம்மாகிட்ட போயி  கம்ப்ளையின்ட்  செய்திட்டு  வர்றா  என்று நினைத்தவன்  எல்லாம்  எடுத்துவைத்துவிட்டு  அவளிடம்  அருகில்  வந்து  அமர்ந்தான்.
அவள்  அமைதியாக  இருக்கவும் ஜெபாதான்  அவளைத்தூக்கி  மடியில்  இருத்தி  வைத்து என்  டாலிக்கு என்ன கோபம் ஹான்.
” நீங்கதான் என்ன விட்டுட்டு போறீங்களே “
ஜெபா ” அதுக்கான  காரணமும்  சொல்லிட்டேன். நீதான் புரிஞ்சிக்காம 
கோவப்படுற “
 ” டாலி  மச்சான்  ஊருக்குபோறேன்  நல்லபிள்ளையா  அழாம  வழியனுப்பி  வைப்பியாம், நானும்  அங்கபோயி  உன்ன  ரெம்ப தேடத்தான்  செய்வேன் சரியா, எப்போலாம்  உன்ன பார்க்கனும்னு தோணுதோ  வந்திடுறேன்  சரியா, உனக்கும்  பார்க்கனும்போல இருந்தாலும்  வந்திர்றேன்  என்ன ” என்று அவளிடம்  கேட்க.
மோனல் தனக்குள்ளே  முனங்கினாள்
” தினமும் தான்  பார்க்க தோணுது “
ஜெபா இப்போ  நல்ல வாய்விட்டு  சிரித்தான். வர வர  என்  டாலி  என்னமா யோசிச்சு  பேசறா  என அவள்  தலையை  லேசாக பிடித்து  ஆட்டினான்.
அவள்  இப்போ  அவனோட  இன்னும்  நோருங்கி  அப்படியே  நெஞ்சோடு  சாய்ந்தாள் சிறிது நேரம்  அப்படியே  இருந்தவர்களை ,வெளிச்சத்தம்  கலைத்தது.
அவளது  கன்னங்களை  வருடி  யோகா  கிளாஸ்க்கு  ரெடி  பண்ணிட்டேன். தினமும்  போ, அப்புறமா உன்ன  அப்பா கொண்டுவிட்டு கூட்டிட்டு வந்திருவாங்க.
அப்புறம்  கராட்டே  கிளாஸ்  ஏற்பாடு பண்ணவா “.
மோனல் ” அது எதுக்கு  நான் கராட்டால பிளாக்  பெல்ட் , அதுக்கும் மனசு  ஸ்ட்ராங்கிற்கும்  சம்மந்தமே இல்ல “
ஜெபா ” அப்படியா  பார்டா எல்லாம்  தெரிஞ்சி  வச்சிருக்க வேற என்ன படிக்க போற “
” ஹான்,என் மச்சான  படிக்கனும்  முதல்ல “
ஜெபா  விழித்தான்  எப்பா  எப்படி  பேசுறா  பாரு என.
யோகா கிளாஸ்  போறேன் ,அப்புறம்  குக்கிங்க்  கிளாஸ்  போகட்டா …
ஜெபா  குக்கிங்க்  கிளாஸ்ஸா  அவன்  முகத்தின்  ரியாக்சன்  வச்சே  கண்டுப்பிடிச்சிட்டா அவனுக்கு  பிடிக்கல என.
ச்ச்.உங்களுக்கு பிடிக்கலைன்னா  போகல.
அது இல்லடா  டாலி  ஏற்கனவே  நீ  சமையல்  செய்து  ஒரு மாசம்  சாபபிட்ருக்கேன்டா  அத நினைச்சி  சொன்னேன்.
உனக்கு பிடிச்சிருக்குனா  போ. கொஞ்சநாள்தான் அப்புறமா  நீ  வேலைக்குபோக  ஏற்பாடு  பண்றேன்  சரியா. வீட்ல இருந்தா  கண்டதையும்  யோசிச்சிட்டிருப்ப….
அதுக்குதான்  இந்த  கிளாஸஸ் எல்லாம்.
அவனுக்கு  நேரமாகவும்  மெதுவாக  அவளை கீழே இறக்க. எங்க  மோனல்  அவனை இறுக்கி பிடித்திருந்தாள்.
ஜெபா ” நேரமாயிட்டுமா நாளைக்கு
காலையில  ஜாயின் பண்ணனும். இப்போ  கிளம்பினா  சரியா  இருக்கும்  ” என  சொன்னவன். அவளது கன்னங்களில்  முத்தம் வைத்து  அவளது  கைகைளை தன்னிடமிருந்து  பிரித்துவிட்டான்.
அவனைப்பார்த்து  தலையசைத்தவள்  அவனுடனே வெளியவந்தாள். அவன் தன் தகப்பனாரிடம்  சிறிது நேரம்  பேசிவிட்டு  கிளம்பி  போய்விட்டான்.
கொஞ்சநேரம்  அப்படியே  நின்றவள்  தன்  அறைக்குள்  வந்து முடங்கிவிட்டாள். கண்ணீர்  தானாகவரவும்  துடைத்துவிட்டு 
அவர்களின்  கல்யாண  ஆல்பத்தை  எடுத்து  பார்த்து  பார்த்து  இருந்தாள் .
ஃபோட்டோக்களில் அவனை  தொட்டு தொட்டு  பார்த்தாள்.
எப்போது தூங்கினாள்  என்றே  தெரியாது. அனுராதா  மெதுவாக  உள்ளே  வந்தவர் அவள் கையிலிருந்த  ஆல்பத்தை  எடுத்து ஒதுக்கி வைத்தவர் அங்கயே  கீழே  வேற பெட் போட்டு படுத்தார். ஜெபா  எல்லா விசயத்தையும்  பெற்றோரிடம்  சொல்லியிருந்தான்.
அதிகாலையில்  முழிப்பு வந்து  பார்த்தவள்  மாமியார் கீழே படுத்திருப்பதைப் பார்த்து  இறங்கி வந்து  அவரின்  பக்கத்தில்  வந்து படுத்து  அவரின் மேல்  கைபோட்டு  படுத்துக்கொண்டாள். 
அவரும்  அதை உணர்ந்தவர்  அமைதியாக இருந்தார். எவ்வளவு  தாய்க்கும்,தாய்பாசத்திற்கும் ஏங்கியிருப்பாள்  என்று  புரிந்துக்கொண்டார்.
காலையில்  எழும்பியதும்   முதல்  வேலையாக  ஜெபாவிற்கு  ஃபோனில் அழைத்துவிட்டாள். எப்போ போயி சேர்ந்தீங்க எங்க  இருந்தீங்க என அவனிடம்  மட்டுமே  ஒரு மணி நேரம் பேசியிருப்பாள்.
சரியாக  ஏழு மணிக்கு ஆனந்தராஜ்  அவளை  யோகா வகுப்பிற்கு  அழைத்து 
சென்றவர். அவளுக்காக  காத்திருந்து  அழைத்துவந்தார் .
இந்த சின்ன சின்ன விசயங்கள் கூட அவ்வளவு மகிழ்ச்சியைக்கொடுத்தது.
யோகா க்ளாஸ்  முடிச்சிட்டு  வரும்போது  அனிஷாவிற்கு  எப்படி  சாக்லேட்ஸ்  வாங்குவாறோ  அப்படியே  மோனலுக்கும்  கிடைத்தது..
இப்படியாக  நாட்கள்  செல்ல  அவளின்  மனநிலை  ரெம்ப ரெம்ப  மாறியிருந்தது.
இதுதான்  குடும்பம்  என்று  உணர்ந்தாள்.
ஜெபா  ஒரு மாதமாக  ஊருக்கு வரவேயில்லை. அங்க போயி  சார்ஜ்  எடுத்ததும்  அவனுக்கு  தலைக்குமேல  வேலை வரமுடியாத சூழ்நிலை .
எது  எப்படியாக  இருந்தாலும்  இரவு  அவளுக்கு  அழைத்து விடுவான்.
இப்போதெல்லாம்  மோனல்  நிறைய பேச ஆரம்பித்திருந்தாள் ஜெபா அதைக் கேட்டுக்கொண்டிருப்பான்.
அன்றைய  நாள்  தொடங்கி  முடியறவரைக்கும்  என்னென்ன நடந்தது  என்று. இவள்  என்ன செய்தாள் ஜீவாவின் இரண்டு  குட்டிப்பிள்ளைங்க என்ன சேட்டை செய்தாங்க என  எல்லாத்தையும்  பேசுவாள். அவனை  தேடுறத  மட்டும் சொல்லமாட்டா.
அவனும் அதுக்காகத்தான்  காத்திருந்தான். காதலை  இன்னும்  மனசுக்குள்ளதான பூட்டுறா,வெளிப்படையா  சொல்லட்டும்  எனக் காத்திருந்தான்.
ஜெபாவிடம்  கேட்காமலயே  அனுராதவின்  உதவியுடன்  குக்கிங்க்  கிளாஸ்  தனியா  போனாள்.
வீட்டுல வந்து  செய்து பார்ப்பாள். அவனுக்கு  சர்ப்ரைஸ் குடுக்கனுமாம்.
அதுமட்டுமல்ல  தன்  அம்மாவை நினைத்துக்கொள்வாள்  தர்ஷனா  எந்த சூழ்நிலையிலும் கனவருக்கும்  மகளுக்கும்  விதவிதமா  சமையல் செய்து  கொடுப்பாள். மராட்டிவகை  சமையல் நன்றாக  செய்வாள் அதனால  மோனலுக்கும்  ஆசை  நம்மளுக்கு  பாப்பா வந்தா நம்மளே சமைக்கனும் என்று அந்த வகையில் குழந்தையை  எதிர்பார்க்க ஆரம்பித்தாள்.
அதுவே  அவளுக்கு  நல்ல மாற்றம்தான் ஆனாலும்  ஒரு சிறு நெருடல்  இன்னும்  இருக்கு. 
டாக்டர்  பாரதி  கண்டுபிடித்தாங்களோ  இல்லையோ அதை  ஜெபா  சரியாக  கணித்தான் அதன் விளைவே  இந்த  விலகியிருத்தால்.
ஆமா மோனல்  தன்  காதலை  மறைத்ததற்கு  முக்கிய  காரணம்  ஒன்று  உண்டு.
அவள்  பயந்தது  சரவணனைப்போல  தானும்  இருந்திடுவமோ  என்ற பயம்  உண்டு. அதீத  அன்பு  மட்டுமல்ல சந்தேகமும்  அவளுக்கு வந்திருமோ, ஜெபாவக் கஷ்டப்படுத்திடுவோமோ  என இப்பவும்  பயப்படுறா.
அவங்களத் தேடுறேன்னு  சொன்னா  தப்பா நினைச்சிப்பாங்களோ  என  எண்ணவோட்டங்கள்  அடிக்கடி  வந்துப்போகும். எல்லா சூழ்நிலையையும் எதர்க்கொள்ளனும் என்ற தெளிவு இன்னும்  வரவில்லை.
கொஞ்சம்  தடுமாறியவள்  மறுபடியுமாக  சென்று  நின்றது பாரதியிடம்தான்.
பாரதியிடம்  பேசும்போது அவளுக்கு  ஒரு நல்லதொரு  எண்ண அலைகள்   உணர்வதாள்  அங்கு  சென்றாள்.
குறிப்பாக  ஜெபாவிற்கு  தெரியாமலயே..
பாரதி ” வாங்க  மோனல், என்ன  இந்தப்பக்கம் ,ஜெபா  வரலையா  நீங்க  எப்படி  தனியா வந்தீங்க. “
மோனல்  ” மச்சான்  வரல  நான்  மட்டுந்தான் தனியா வந்தேன் ,எனக்கு  உங்க கிட்ட  பேசனும் சில விசயங்கள் மனச உறுத்திக்கிட்டே  இருக்கு  அதான் “
பாரதி ” என்னப்பா இது , நீங்க நல்லா இருக்கீங்க  மனசலவுளவுலயும், உடலளவுலயும் , உங்கள நீங்களே
சரியில்லனு நினைக்க கூடாது “
மோனல்  ” ம்ம,சரி ” 
பாரதி  அவளுக்கு  குடிக்க  ஜூஸ் கொண்டுவந்துக் கொடுத்திட்டு  பேச  ஆரம்பித்தார்
” என்ன மனசுல  இருக்கு  இப்போ  “
மோனல ” அப்பா  மாதிரியே  நானும்  மச்சான  கஷ்டப்படுத்திடுவனோனு  
பயமா  இருக்கு , அவங்க  பக்கத்துல  இருக்கனும்போலவே  இருக்கு, 
அதுதான் நாள்  போகப்போக  அது அதிகமாயிட்டுனா  அதான் வந்தேன் “
 
பாரதி ” அப்படியா  இத மட்டும்  இப்போ  ஜெபா  கேட்கனும் , பறந்து வந்து  உங்கள அப்படியே  தூக்கிட்டுப் போயிடுவாரு  ” என சொல்லி  சிரிக்கவும் மோனலுக்கு  வெட்கமா  போச்சுது. அவளின்  நிறம்  அப்படியே செந்நிறமாக மாறியது.
பாரதி ” ஹப்பா  வெக்கத்துக்கே உங்க  கலர் மாறுதே  ,போங்க  ஜெபா  லக்கி தான் , இப்படி  ஒரு  பொண்ணு  மனைவியா  கிடைச்சதுக்கு ” என  பேச்சை  மாற்றினார்  பாரதி.
ஜெபா  உங்கள எவ்வளவு  லவ் பண்றாரு 
அவரு கண்ணு எங்க இருந்தாலும்  உங்களத்தான்  தேடுது. உங்க  ரிசப்ஷன்  அன்னைக்கே  பார்த்தேன்பா.
மோனல்  இன்னும்  அதிகமாக  சிவந்தாள்
ஜெபாவை நினைத்து.
பாரதி  ஜெபா  மோனலை எவ்வளவு  தேடுறாங்க என சொல்லி  அவளின்  எண்ணப்போக்கை மாற்றினார்.
இணை இணையைத் தேடுவது குற்றமல்ல அதுதான் இயற்கை.
நிறையே பேசினார்  பாரதி  மோனலிடம்
அவள்  ஓரளவு தெளிந்து  வீட்டிற்கு வந்தாள். 
வந்ததும் ஜெபாவிற்கு  அழைத்தாள்  அவன்  எடுக்கவில்லை.வேலையில் இருப்பாங்கப்போல  என  விட்டுவிட்டாள்.
மதியம்  நல்ல தூங்கி  எழும்பியவளுக்கு  மனசு  அவ்வளவு  லேசாக இருந்தது .
மறுபடியும்  ஜெபாவிற்கு  ஃபோனில்  அழைத்தாள்  அழைப்பு  எடுக்கபடவில்லை. கொஞ்சம்  பயம்  வந்தது , ஆனாலும்  அவங்க  எல்லாத்தையும்  சமாளிப்பாங்க  என்றிருந்தது. அவனோட வேலையை இப்போது சரியாக புரிந்திருந்தாள்.
இரவு   சமையலுக்காக  தயார் செய்துக் கொண்டிருந்த  சுனிதா மற்றும்  அனுராதா கிட்டபோய்  நான்  எதாவது  சமைக்கட்டுமா  என்று  கேட்கவும்  இருவரும்  சிரித்துவிட்டனர்.
மோனல்  ” போங்க க்கா ,நானும்  எதாவது  சமைச்சாதான  பழக முடியும், குக்கிங்க்  கிளாஸ்  போயி படிச்சத எங்க  அப்ளை  பண்ண. இங்கதான பண்ண முடியும் “
அனுராதா ” கொஞ்ச கொஞ்சமா  பழகலாம்  இப்போ  எல்லாத்தையும்  முடிச்சிட்டோம் நாளைக்கு  சேர்ந்து  செய்யலாம் ” என்றதும்  சமாதானமாகி அங்கயே பார்த்துக் கொண்டு நின்றாள்.
சுனிதா தான்  பேச்சை  தொடங்கினாள் ஜெபா  தம்பிக்கு  மீன் சமையல்னா  ரெம்ப  பிடிக்கும்  அதனால  முதல்ல  அது  பழகிக்கடா.
மோனல்  அப்படியா ஆனா புனேல   தீதி  என்ன சமைச்சாலும்  சாப்பிடுவாங்க 
நானும் கொஞ்ச நாள் சமைச்சேனா 
வெயிட் குறையிது  சமைக்காதன்னு  சொல்லிட்டாங்க என்க
சுனிதா  சிரிப்பை  அடக்க  முடியாமல் 
சிரித்தாள், மோனலின்  முகம் மாறவும் அனுராதா  அவளருகில்    வந்து  அவனுக்காக  சமையல்  கத்திட்டு  சமைக்குற  அதுவே  பெரிய விசயம்டா, பக்கத்துலயே  சமையல் எல்லாம்  தாய்மாருங்க  சொல்லிக்குடுத்தும்  கத்துக்காம இருக்காங்க, அனிஷாவப்பாரு  தனியா புனே போனப்பிறகு தான்  அறிவு  வந்து  சமையல்  பண்ண  ஆரம்பிச்சா.
ஜெபாதான்  குடுத்துவைச்சிருக்கனும்  என சொல்லவும்  அவள் முகம் சந்தோசத்துக்கு  மாறியது. சுனிதாவும்  அப்படியே சொல்லவும்  மூன்று பேரும் 
வேலையெல்லாம்  முடித்து  சாப்பிட்டு,சிறிது நேரம்  பிள்ளைகளோடு  விளையாடிவிட்டு  வந்து  படுத்தவள் அனுராதா  அவள் பக்கத்தில்  வரவில்லை  என்பதை  கருத்தில் கொள்ளவில்லை.
மூன்றாவது  முறையாக ஜெபாவிற்கு 
அழைத்தாள்  அது  அணைத்து வைக்கப்பட்டிருந்தது. மனசுக்குள்  ஒரு  தவிப்பு  என்ன  எப்பவும்  இராத்திரி பேசிடுவாங்க , இன்னைக்கு  பேசவும்  இல்லை  நம்ம  ஃபோன் பண்ணியும் எடுக்கலையே என அப்படியே தூங்கிப்போனாள் .
இரவு  மணி பனிரெண்டை  நெருங்கும் போது ,மோனல்  தூக்கத்தில், 
அவளை  அப்படியே  ஒரு கரம் தூக்கியது  அவள் மிரண்டு விழிக்க  அவள்  கண்களை  இறுக முடி  அப்படியே  தூக்கிக்கொண்டு வீட்டின்  ஹாலில்  நிறுத்தவும் எல்லா விளக்கும்  ஒளிர்ந்தது,
அவள்  கண்களை விடுவிக்கவும்  மணி  பனிரெண்டு  அவளின்  முன்பு , அவளின்
படம் பதித்த  பெரியகேக்  பிறந்தநாள்  வாழ்த்துக்கள்  என்று  எழுதியிருந்தது.  மோனல் நிமிர்ந்து பார்க்க ஜெபா  அவளைப் பார்த்து கண்சிமிட்டினான்,
கேக் வெட்ட சொல்ல  ஜீவா பிள்ளைகள் இரண்டு குட்டீஸ்க்கும்  பயங்கர சந்தோசம், அவள்  கேக் வெட்டி  முதல் துண்டை  எடுத்து கனவனுக்கு  ஊட்ட  அதற்குள்ளாக அவன்  அவளுக்கு  ஊட்டியிருந்தான்.
ஜெபாவின்  பெற்றோரின் காலில்  இருவரும்  ஒன்றாக  விழுந்து  ஆசிர்வாதம்  வாங்கினர்.
அனுராதா  அவளுக்கு  அழகான தங்கசெயின் ஒன்றை  பரிசளித்தார்.
குட்டீஸ்  இரண்டும்  சித்திக்கு தனித்தனி கிஃப்ட் குடுக்கவும்  மோனல்  அழவே  ஆரம்பித்துவிட்டாள்,ஜெபா  அவளை தோளில்  கைபோட்டு  பிடிக்கவும்  பிரேம்  அழகாக  போட்டோ எடுத்தான்  எல்லாம்  முடிந்ததும்.
மோனல் சொன்னாள்  இருபது  வருசத்திற்கு  மேலா தனியாவே இருந்திருக்கேன்  பிறந்தநாள் அன்று, கொண்டாடியதே இல்லை. 
அனிஷாதான்  என் பிறந்தநாளை கொண்டாட ஆரம்பித்து வைத்தாள்.
எல்லாருக்கும்  நன்றி என்று  கையெடுத்த  கும்பிட  அப்படி ஒரு நெகிழ்ச்சி  எல்லாருக்கும்.
தங்களது  அறைக்குள் வந்ததும்  ஜெபாவை  இறுக  கட்டிப்பிடித்து  அவ்வளவு  முத்தமிட்டாள்  கணக்கில்லாது.
அவன்தான்  முடிவில்  போதும்டி  கன்னம்  வலிக்குது  என்று  சொன்னான்
அதன் பிறகுதான் அவனை விட்டாள்.
தன் மனதிலிருந்து  முதன்முதலாக  ” ஐ லவ் யூ  மச்சான் ”  என சொல்லி  அவன்
உதடுகளை தன்  இதழால்  மூடியிருந்தாள். 
நினைவு தொடரும்….
 
  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *