உன் நினைவு என் சுவாசமடி
தர்ஷனா சோர்ந்திருப்பதை பார்த்து வருத்தப்படுவான். அவளோடு சமாதானம் பேசுவான் மறுபடியும் எங்கயாவது போயிட்டு வந்தாள் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிடும் இப்படியாகத்தான் தர்ஷனாவின் வாழ்க்கை இருந்தது. இதில் வேறு மோனலை நல்லதொரு பள்ளியில் சேர்த்தான்.
அதுவும் தர்ஷனாவிற்கு தலைவலிதான், எப்போவாவது பள்ளிக்கு சென்றுவந்தாள் அதற்கும் பிரச்சனை பண்ணுவான்.
நன்றாக உடை உடுத்தி தனியாக செல்ல அனுமதிக்க மாட்டான். எல்லாமே அவளுக்கு அவன் வாங்கிக் கொண்டு வந்திருவான் சானிடரி நாப்கின்ல இருந்து எதுவாக இருந்தாலும் .
குவார்டஸ்ஸில் அத்தனைபேரும் மராத்தியர்கள்தான். மோனலுக்கும் தர்ஷனாவிற்கும் பழகுவதற்கும் எளிதாக இருந்தது. அதுவும் அவனில்லாத நேரத்தில் மட்டுமே.
ஒரு நாள் இப்படித்தான் ஒரு திருமணமாகத எஸ்.ஐ யிடம் குவார்டசில்
வைத்து பேசினாள் என்பதற்காக வீட்டிற்குள் வைத்து வெளியே கதவை பூட்டிச் சென்று விட்டான்.
அவன் வந்து கதவை திறக்கும் வரை வெளியே செல்லமுடியாது. சில நேரங்களில் மகளை வைத்துக்கொண்டு மௌனமாக கண்ணீர் வடிப்பாள். அவளுக்குத் தெரியும் அவள் இல்லையென்றாலும் அவனும் வாழமாட்டான்.
இப்போதெல்லாம் மறுபடியும் குடிக்க ஆரம்பித்துவிட்டான். எப்போதும் அவள் அவனின் அருகிலயே இருக்கவேண்டும் அவனிடம் மட்டுமே பேசவேண்டும் என்றால் அது சாத்தியமா..
மோனல்கூட இப்போது தகப்பனைப் பார்த்து மிரண்டுப்போவாள். சிறுபிள்ளைதான மறுபடியும் ஒட்டிக்கொள்வாள்.
அவனுக்கு வேறு நண்பர்களும் இங்கு கிடையாது. மனதில் இருப்பதை சொல்லவும் முடியாது.
தனியாக வந்தால் சந்தோசமாக இருக்கலாம் என்ற மனநிலை மாறி குடும்பத்தோடு இருந்திருந்தால் கூட பரவாயில்லை என்றே தோணியது தர்ஷனாவிற்கு. இங்க வந்து ஒரு வருசம் கழித்துதான் மும்பைக்கு சென்றார்கள்.
அதுவும் சுப்பையாவும் ராசத்தியும் அவனது ஸ்டேசனுக்கு அழைத்து பேசி பார்க்கனும்போல இருக்கு இந்த கண்பதிக்காவது வந்திட்டுப்போங்க என மிகவும் வருந்தி அழைத்த பின்பே மெதுவாக சொன்னான்.
ஊருக்குப்போக ரெடியாகி இருக்கும்போது தர்ஷனாவை அழைத்து அங்கு போனால் நம்ம விசயம் எதுவும் அம்மாகிட்ட சொல்லக்கூடாது என்று சொல்லியே அழைத்து சென்றான்.
ஊருக்கு சென்றதும் ராசாத்தி நிதானித்தவர் மோனலிடம் தனியாக கேட்டார். முகம் ஏன் வாடியிருக்கு என.
இல்ல அத்தை அலைச்சல் என சொல்லியிருந்தாள்.
அங்க சென்றதும் அவனிடம் அனுமதி பெற்று ஒருநாள் மட்டும் அவளது அம்மாவையும் தம்பி தங்கைகளையும் பார்த்து வந்தாள். எப்போது சென்றாலும்
பணம் கொடுத்து உதவுவாள் அதற்கெல்லாம் அவன் தடை செய்யவில்லை அவள் அங்கு சென்றும் தங்ககூடாது அவனது கண்பார்வையில் மட்டுமே எங்கும் செல்லமுடியும்.
அதற்காகவாது அனுமதிக்கின்றானே என்று சென்றுவருவாள். மோனலுக்கும் தன் மாமன்களையும் சித்தியும் ரெம்ப பிடிக்கும். சரவணன் வீட்டினரைப்போல முரடாக இருக்கமாட்டார்கள் அதனால் என்னவோ.
அங்கு இருந்த பத்து நாளும் தர்ஷனாவிற்கு அவள் தாய்வீடு போக ஒரு நாள்தான் அனுமதி கிடைத்தது.
தர்ஷனாவின் தம்பிகள் இரண்டுபேரும், மோனலின் தாய்மாமன்களோ தினமும் வந்து மோனலை அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
தர்ஷனா பயந்தாலும் மோனல் தகப்பனின் தாடையைப்பிடித்து ப்ளீஸ்ப்பா என சொன்னாலே போதும்
சரவணன் அப்படியே உருகிவிடுவான்.
சரி போயிட்டுவா என சொல்வான். ஆயிரும் பத்திரம் சொல்வான்.
ராசாத்தி எவ்வளவோ கெஞ்சினார் பிள்ளை, மனைவியையும் இங்க விட்டுட்டு போ என. அவன் அசரவில்லை தன்னோடு திரும்பி அழைத்து சென்றான்.
நாசிக் சென்றதும் தர்ஷனாவின் உடல்நிலையில் மறுபடியும் மாற்றம் வர கண்டுகொண்டவள் கனவனுக்கு விவரம் சொல்லி மருத்துவமனைச் சென்று பரிசோதித்து இரண்டாவதாக கர்ப்பம் தரித்திருப்பதை உறுதி செய்தனர்.
சரவணனுக்கும் சரி தர்ஷனாவிற்கும் முதல் தடவை மாதிரி ரெம்ப பூரித்து போகவில்லை எனினும் சந்தோசமே.
இப்போது குடியை தெடரவில்லை எனினும் எப்பவாவது பார்டிகளில் அல்லது விழாவில் குடிப்பான். அந்தவரைக்கும் தர்ஷனாவிற்கு சந்தோசம்.
அவள் வயிற்றை தள்ளிக்கொண்டு அலையும்போது அவனது சந்தேகம் மட்டுப்பட்டிருக்கும். மனைவி எங்கும் செல்லமாட்டாள் என்ற எண்ணமோ, அதனாலோ என்னவோ குடும்பமும் ரெம்ப அமைதியாக கழிந்தது.
மோனலை வண்டியில வைத்து சுத்துவான். என்னக்கேட்டாலும் வாங்கிக் கொடுப்பான். தர்ஷானா மட்டும்தான் சிறை பறவை போல இருந்தாள். இந்த தடவை உடலில் ரெம்ப சோர்வை உணர்ந்தாள்.
அதை உணர்ந்தவன் மறுபடியும் மருத்துவமனை அழைத்துச் சென்று காண்பித்தான். மருத்துவர் சொல்லிவிட்டார் உடல்நிலை நன்றாக இருக்கின்றது என்றும் கொஞ்சம் மன அழுத்தத்தில் இருப்பதில் நல்ல சூழல் வேணும் என்று.
நல்ல சூழ்நிலைக்கு எங்கப்போக கனவன் சரியாக இருந்தால் போதுமே என்றுதான் தர்ஷனா மனதில் நினைத்தாள்.
அன்றிரவு தர்ஷனாவை தன் மடியில் இருத்தி கொண்டு பேசினான். என் மேல ரெம்ப கோவமா இருக்கியா.
தர்ஷனா ஒன்றும் சொல்லாம அமைதியா இருந்தாள் .
” நீ அமைதியா இருக்கறதைப் பார்த்தா
கோவம் அப்படித்தான. என்ன கல்யாணம் பண்ணினதுக்கு வருத்தப்படுறியா. நான் உன்னை ரெம்பக் காய்ப்படுத்துறன்னு புரியுது.
ஆனா என்னால சில நேரத்துல முடியலடி
நீ என்னவிட்டு போயிடுவேயோன்னு அப்படி உயிருக்குள்ள இருந்து ஒரு பயம் வருது. நீ இல்லாம நான் எப்படி இருப்பேன். அப்படி நினைச்சாலே கண்ணெல்லாம் இருட்டிட்டு நெஞ்செல்லாம் படபடனு அடிக்குது. என்னைய என்னாலயே கட்டுப்படுத்த முடியல ”
தர்ஷனா ” அவனது கையை பிடித்துக்கொண்டு அவனது கைக்கு முத்தம் வைத்தவள். நீங்கதான எனக்கு எல்லாம் உங்களத்தவிர நான் யாரையும் கல்யாணம் பண்ணிருக்க மாட்டேன். அன்னைக்கு நீங்க வராமா இருந்திருந்தா கண்டிப்பா நான் உங்களத்தேடி வந்திருப்பேன். அதுவும் முடியலன்னா எதாவது செய்திட்டிருபேன்.”
அவளது வாயை முடியவன் வயித்துல பிள்ளைய வச்சிட்டு என்ன பேச்சு பேசற.
என்னைய புரிஞ்சிக்கோ. இனி குடிக்காம இருக்க முயற்சி செய்றேன். உன்னை கஷ்டப்படுத்தாம இருக்க பாக்கறேன் சரியா என அவளையும் அவனது மனதினையும் சமாதானப்படுத்தி இருந்தான்.
ஏழாவது மாதத்தொடக்கத்தில் வீட்டினுள் சமையல் வேலை செய்துக் கொண்டிருக்கும்போது கதவு தட்டற சத்தம் கேட்டதும் திறந்து பார்த்சவளுக்கு சந்தோசம். அவளது அப்பாவும் அம்மாவும் வந்திருந்தனர் அவளைப் பார்ப்பதர்க்கு .
அவர்களை உபசரித்து வார்த்தையாடிக் கொண்டிருக்கும் போதுதான் சரவணன் வந்தான். அவர்களைப் பார்த்தும் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக அறைக்குள் சென்றான் தர்ஷனாதான் அவன் பின்னாடியே சென்று நின்றாள் அவள் முகத்தில் பயத்தின் ரேகை. பார்த்தவன்
” அப்பா ஸ்டேசனுக்கு போன் பண்ணிருந்தாங்க. எனக்கு எல்லாம் தெரியும் அப்பாகிட்டதான் அட்ரஸ் வாங்கிட்டு வந்திருக்காங்க. உனக்கு என்ன விருப்பம் ” எனக்கேட்டான் .
அவள் நிதானித்து ” உங்க விருப்பம். நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படி இப்போ அவங்க உங்களுக்காகத்தான் காத்திருக்காங்க. வெளிய வந்து அந்த அழைப்பிதழை வாங்குங்க, எனக்காக ” என்க.
உடைமாற்றி வந்து அவர்களின் முன்பு அமர்ந்தவனின் மடியில் ஓடிவந்து மோனல் அமர்ந்துக் கொண்டாள்.
தர்ஷனாவின் தாய் தகப்பன் அவர்களது இளைய மகளின் திருமண அழைப்பிதழைக் கொடுக்கவும் பெற்றுக் கொண்டு சாப்பிட்டு போகச்சொன்னான்.
அதுவே தர்ஷனாவுக்கு பெரிய விசயம் சந்தோசத்தோட தாய்தகப்பனைக் கவனித்து. அவர்களுக்கு எதுவும் பணத்தேவை எதுவம் இருக்கா என்ன எனக்கேட்டு தெளிவுப்படுத்திக் கொண்டு பணம் கொடுத்தே வழியனுப்பினாள்.
அவர்களுக்குத் திருப்தி மகள் நல்லாயிருக்கா. மருமகன் நல்லா வச்சிருக்காங்க என அவளின் தலைமேல் கைவைத்து ஆசிர்வதித்து சென்றனர்.
அன்றையத்தினம் அவன் கேட்காமலயே அவனிடம் ஒன்றினாள் தர்ஷனா.
அடுத்த ஒருவாரம் கடந்து தங்கையின் திருணத்திற்கு செல்ல எல்லாம் தயார்செய்துக் ஙொண்டிருந்தாள்.
ஏற்கனவே சரவணன் அனுமதிக்கொடுத்திருந்தான் கல்யாணத்துக்கு போயிட்டு அடுத்த நாள் இங்க வந்திரனும் எனக்கு இப்போ வரமுடியாது என சொல்லியிருந்தான்.
இரயிலில் அனுப்பி வைத்தான். அவனுக்கும் மனசேயில்லை. வேற வழியில்லாம தனியா அனுப்பினான்.
இரயில் கிளம்புற வரைக்கும் சொன்னான். கவனம் மகளை கவனமா பார்த்துத்துக்கோ அங்க அப்பா கூப்பிட வருவாங்க. நாளைக்கழிச்சி இங்க வந்திரு நானும் கூப்பிட வந்திருவேன் என்று.
திட்டமிட்டவாறு வாழ்க்கை நகர்ந்தால் அது வாழ்க்கை இல்லையே.
தங்கையின் திருமணத்தில் ரெம்பவும் மகிழ்ச்சியாக காணப்பட்டாள். சரவணன்
குணம் மாறிட்டது எனவும், தாய் வீட்டு விசேஷம் என்பதாலும் அது அவளை இன்னும் அழகாக காண்பித்தது.
திருமணத்திற்கு ஒரு தொகை அவளிடம் கொடுத்து அனுப்பியிருந்தான். அவளின் தங்கைக்கு பரிசு வாங்கிக்கொடுக்க. அதை தன் தாயின் கைகளில்கொடுத்தவள், தனது தங்கைக்கு தனது நகைகளில் ஒன்றைக் கொடுத்தாள். அவள் மனதிற்கு இப்பொழுது முழு திருப்தி.
எல்லாம் நல்லபடியாக முடிந்து அடுத்த நாள் கிளம்பும்போது ராசாத்திப் பிடித்துக் கொண்டார். ஒரு நாள்கூட நம்ம வீட்ல தங்காம போற என சொன்னவர் .
இன்னும் ஒருவாரத்துல ராஜ பாண்டிக் குழந்தைக்கு பெயர் வச்சி இங்க கூட்டிட்டு வர்றோம் நீங்க இங்க இருங்க என்று சொல்லி மகனுக்கும் அழைத்து சொல்லிவிட்டார்.
ஒருவாரம் எப்படி சென்றது என்றே தெரியாது. தர்ஷனாவிற்கு சிறிதாக பயம் இருந்துக்கொண்டே இருந்தது. நாசிக் பேனதும் என்ன பிரச்சனை வரபோகுதோ என்று.
பெயர்சூட்டும் விழா நன்றாக சென்றது. ரஞ்சிதாவிடம் பேசுவதேயில்லை. இப்போதும் அப்படியே நின்றுக்கொண்டாள் கனவன் வருவான் என எதிர்ப்பார்த்து இருந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அடுத்த நாள் அவள் நாசிக் செல்ல வழியனுப்ப அவளது தம்பி இருவரும் அப்பா அம்மா எல்லோரும் வந்திருந்தனர் மோனல் அவர்களிடம் ஒட்டிக்கொண்டு தர்ஷனாவிடம்கூட வரவில்லை. அவளுக்கும் சரி அவளது குடும்பத்திற்கும் அவ்வளவு சந்தோசம்.
அவளது பெற்றோருக்கு அவளது நிறைவான வாழ்க்கை நினைத்து மகிழ்ச்சி.
இனி அவளைக் காணப்போவதில்லை என உள்ளுணர்வினால் வந்திருந்தனரோ என்னவோ. இரயில் கிளம்பியதும் தான் அவர்கள் திரும்பி வீட்டிற்கு சென்றனர்.
ஏற்கனவே ஸ்டேசனுக்கு அழைத்து சுப்பையா மருமகள் அங்கு வருவதாக தகவல் சொல்லியிருந்தார்.
இரயில்வே ஸ்டேசன்ல இறங்கி சிறிது நேரம் காத்திருந்தவள் சரவணன் வராது போகவும் பிள்ளை வேற தூங்கிவிட்டாள், இனி காத்திருக்க முடியாது என்று டேக்ஸி பிடிச்சி வீட்டிற்கு சென்றாள்.
அங்கே சென்று பார்த்தாள் வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது..
உள்ளதான் இருக்காங்கப் போல என ரெம்ப நேரம் கதவை தட்டிப்பார்த்துவிட்டு வீட்டின் வெளிவரண்டாவில் அப்படியே அம்மாவும் பொண்ணும் படுத்துக்கொண்டனர்.
மதியம் வந்தது இரவு ஏழு மணியாகிட்டது. மகளுக்கு வைத்திருந்த பிஸ்கட்ஸ் இருந்தது அதை எடுத்து சாப்பிட்டு பசியாறினர்.
மெதுவாக கதவு திறக்கும் சத்தம் கேட்டு தர்ஷனாவும் மோனலும் திரும்பி பார்க்க சரவணன் வீட்டினுள் இருந்து வெளியே வந்தான் பார்த்தவுடனே தெரிந்தது நல்ல
தண்ணியடிச்சி போதையில் அவனால் ஒழுங்கா நிற்ககூட முடியல மோனல் ஓடிப்போயி அவன் காலைப்பிடித்து அப்பா என் அழைக்கவும் தான் உணர்வு வந்து பார்த்தான்.
மகளை தன் கையில்
தூக்கிக்கொண்டான். மறுபடியும் உள்ளே சென்று அமர்ந்தவன் அப்படியே படுத்துக்கொண்டான்.
தர்ஷனாவிற்கு வீட்டினுள் செல்லும்போதே மதுவின் வாடை. மறுபடியுமா என நொந்தே போனாள் வீட்டை கழுவி சமையல் செய்துக் கொண்டிருந்தவளுக்கு சத்தம் கேட்டு எட்டி பார்க்க.
சரவணன் வெளியே கிளம்பினான்.
தர்ஷனா ஓடிவந்து அவன் கைகளைப்பிடித்துக் கொண்டாள்.
அவன் அவளைத்தான் தீர்க்கமாக பார்த்தான். சமையல் பண்ணிட்டேன் சாப்பிடுங்க வெளிய போகவேண்டாம் என்று சொல்ல.
அவளை அறைந்திருந்தான் தன் கன்னத்தை பிடித்துக் கொண்டு அப்படியே அதிர்ச்சியில் நின்றாள்.
இப்போ என்னடி அக்கறை ஒருவாரமா நான் இருக்கனா செத்தனானு பார்த்தியா. நீ நல்ல மினிக்குகிட்டு எவன் கிடைப்பான்னு அழைஞ்சிட்டு வருவ. உனக்கு நான் காத்திருக்கனுமா, சொல்லித்தானடி அனுப்பினேன் அப்போ நான் உனக்கு முக்கியமில்லை அப்படித்தான்.
ஒருவாரமா குடிக்கிறேன், இன்னும் குடிப்பேன் என சத்தம்போட அவள் அவனது வாயைப் பொத்தினாள்.
என்ன மச்சான் இதெல்லாம். நீங்கதான எனக்கு முக்கியம் என சொன்னவளைப் பார்த்து. உன்னத்தான்டி உயிரா நினச்சேன் ஆனா நீ அப்படியில்ல.
இனி உன்ன வெளியவிட்டாதான என அவளை இழுத்துச் சென்றவன் துணி வைக்கும் வார்ட் ட்ராப் திறந்து அதினுள் அவளைத் தள்ளி மூடிவிட்டு வெளிக்கதவையும் அடைத்துப்பூட்டி வெளியவே படுத்துக் கொண்டான்.
மோனல் வார்ட் டாராப்ல அம்மாவின் சத்தம் கேட்கவும், சிறுபிள்ளை பெரிய போராட்டத்திற்கு பின்னே அதன் கதவை திறக்கும் போதே குற்றுயிராய் வெளிய வந்து விழுந்தவளின் காலினூடே இரத்தம் வழிந்துக் கொண்டு மூச்சு விடாமல் உயிர் மூச்சிற்கு ஏங்கிக் கொண்டிருந்தாள்.
இதை சொல்லும்போதே மோனல் ஜெபாவின் சட்டையைப்பிடித்து ” அம்மா எப்படி உயிருக்கு போராடினாங்கத் தெரியுமா நான் அவங்க கடைசி மூச்சு விடும் வரைக்கும் பார்த்தேன்.
அம்மாவ அந்த நேரத்துல ஆஸ்பத்திரில சேர்த்திருந்தாக்கூட காப்பாத்தியிருக்கலாம். நான் அழுத சத்தம் கூட அப்பாவிற்கு கேட்கல.
மோனல் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளின் உடல்மொழி மாறிற்று.
ஜெபா கண்டுக் கொண்டவன் அவளைப் திருப்பி பார்க்க அவள் மூச்சுவிடக் திணறிக் கொண்டிருந்தாள்,
மோனல் இங்கப்பாரு இங்கப்பாரு ஒன்னுமில்லடா என அவள் கன்னங்களை தட்டியவன் உடனடியாக மருத்தவமனை ஆம்புலன்சிற்கு தகவல் சொல்ல, அவளுக்கு கை கால் உதறல் எடுத்து பிட்ஸ் வர ஆரம்பித்தது..
அவளை தன் கரங்களில் ஏந்திக்கொண்டு ஓடியவன் ஆம்பலன்சில் மோனலைக் கிடத்திவிட்டு தன் கரங்களைப் பார்க்க இரத்தம் . மோனலின் ஆடையையும் அது இரத்தத்தால் நனைந்திருந்தது.
அவனுக்கு புரிந்துவிட்டது இப்போதைய மோனலின் நிலை. ஜெபா தன் முகத்தில் அறைந்து கொண்டு அழுதான்.
நினைவு தொடரும்…..
