ஈரம் பூத்த நிலா 9

This entry is part 6 of 7 in the series ஈரம் பூத்த நிலா

ஈரம் பூத்த நிலா

ஈரம் பூத்த நிலா

ஈரம் பூத்த நிலா

ஈரம் 2

ஈரம் 2

ஈரம் பூத்த நிலா 3

ஈரம் பூத்த நிலா 3

4. ஈரம் பூத்த நிலா

4. ஈரம் பூத்த நிலா

ஈரம் 5

ஈரம் 5

ஈரம் பூத்த நிலா 9

ஈரம் பூத்த நிலா 9

10 ஈரம் பூத்த நிலா

10 ஈரம் பூத்த நிலா

ஈரம் பூத்த நிலா 9
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

தொடர்ந்து பேசிக்கிட்டிருந்த அருக்காணி அம்மா ஆனான்னு இழுக்கவும் நளினி பரபரப்பா கேட்டா..

“சொல்லுங்கம்மா… ஆனா..?”

அம்மா ஒரு தடவ மகளப் பாத்துட்டு தன் டிரேட் மார்க் புன்னகை மாறாம சொன்னாங்க..

“அது ஒண்ணுமில்லம்மா.. மனுசங்க
போடற திட்டப்படி எல்லாமே நடந்துடுதா என்ன? மேல ஒருத்தன் இன்னார்க்கு இதான்னு எழுதி வச்சிருக்கானே? அதனால,என் திட்டம் நிறைவேற காலமும் கடவுளும் தான் கண்ணத் தொறக்கணும்.. சரிம்மா.. நீங்க பேசிட்டிருங்க.. எனக்கு சமையவ் கட்டுல கொஞ்சம் வேலை இருக்கு.. சரியா கால் மணி நேரத்துல டைனிங் டேபிள்ள எல்லாம் ரெடியா இருக்கும்.. மோகனா… இவங்களக் கூட்டிட்டு வந்துடு.. நான் போயி ஆக வேண்டியதப் பாக்கறேன்”

அம்மா அடுத்த கேள்வி கேக்க வாய்ப்பில்லாம டக்னு பேச்சத் துண்டிச்சுட்டுப் போக நளினி மோகனாவக் கேட்டா..

“அம்மா எதையோ சொல்ல வந்து நிறுத்திட்டாங்கன்னு நெனைக்கறேன்.. உனக்கு அதப் பத்தி ஏதாவது தெரியுமாடி?’

“எதப் பத்தி?”

“அதான்… கடைசியா ஆனான்னு நிறுத்தினாங்களே? அதப் பத்தித் தான்”

“ஆனா… அதப் பத்தி எனக்கெப்படித் தெரியும்?”

நளினி பல்லக் கடிச்சு மொறைச்சுப் பாத்தபடி சொன்னா…

“சொல்லப் பிரியமில்லேன்னா விட்ரு.. நீ இந்த ஒரு விசயத்த மட்டுமா மறைக்கறே? ஆரம்பத்துல இருந்தே நிறைய விசயங்கள மறைச்சுக்கிட்டுத் தான் இருக்கே..”

“இதென்னடி அபாண்டமா இருக்கு… எங்கே? உன் லிஸ்ட்ல இருந்து ஒவ்வொரு பூதமா எடுத்து விடு.. பாக்கலாம்.. அது பூதமில்ல.. புஸ்வாணம்னு நான் நிரூபிச்சுக் காட்டறேன்”

“உன் வார்த்தை ஜாலம் எங்கிட்ட வேணாம்.. ரெண்டு வருசம் எல்லாரும் ஒரே ஆபீஸ்ல வேலை செஞ்சோம்… அப்பவே நீ ஏன் வெற்றி உனக்கு நெருங்கின ரிலேஷன்னு சொல்லல?”

“இதென்னடி வம்பா இருக்கு? ரிலேஷன்னா பேசணும்.. பழகணும்… நாங்களோ ஒருத்தரையொருத்தர் எதுக்க கண்டா மொகம் திருப்பிக்கற சிட்சுவேஷன்.. இதுல எப்படி நான் ரிலேஷன்னு சொல்றது?”

“ஏன் சொல்ல முடியாது ? எனக்கு அத்தை பையன் தான்.. நியாயமா அவன் இந்த நேரத்துக்கு எங் கழுத்துல தாலி கட்டி ரெண்டப் பெத்து ஒண்ணத் தொட்டில்லயும் இன்னொண்ணத் தோள்லயும் போட்டுத் தாலாட்டுப் பாடிட்டிருக்கணும்.. ஆனா விதி எங்கப்பா பண்ணின கூத்தால பேசிக்கக் கூட முடியாம மனசுக்குள்ளயே அவனை நெனைச்சு உருகறேன்னு ஓப்பனாச் சொல்லி இருக்கலாமே?’

மோகனா சத்தம் வராமல் கை தட்டிச் சொன்னா..

“கதை நல்லா இருக்கே? இருவத்தஞ்சு வருசமா பகையால பிரிஞ்சு கெடக்கற எங்க குடும்பங்க எங்க கல்யாணத்தால ஒண்ணு சேரும்.. உடனே ஒரு பேமிலி சாங்க் பேக் ரவுண்ட்ல… ஸீன் சூப்பரா இருக்கு நளினி.. கதைக்கும் சினிமாவுக்கும் அது ஓ.கே.. ஆனா, வாழ்க்கைங்கறது வேற.. அது நிஜம்.. ஆசைப் படியும் கற்பனைப் படியும் அத எங்க வேணும்னாலும் இஷ்டத்துக்கு வளைக்க முடியாது”

“நீ ரொம்ப புத்திசாலின்னு எங்களுக்குத் தெரியும்டி.. ஆனா,அந்த புத்திசாலித் தனத்த வச்சு சுத்தமா மத்தவங்கள வடி கட்டின முட்டாளாக்க நெனைக்கற பாரு.. அதான் சகிக்கலடி”

மோகனா ஒரு புன்னகையுடன் நளினியின் தோளணைச்சுக் கேட்டா..

“என்னடி ஆச்சு உனக்கு? எதுக்காக நடக்கவே நடக்காததக் கற்பனை பண்ணிக்கிட்டு எங்கிட்ட வம்பிழுக்கற? இதுக்காகத் தான் ஊருக்கு வந்தியா?”

“நீ வேண்ணா பூனை பால் பாத்திரத்துல தலைய விட்டதும் கண்ண மூடிக்கற மாதிரி எல்லாத்தையும் மறந்துட்டு இந்தத் தோட்டத்துக்குள்ள மனசோட உன்னையும் சேத்தி நத்தையா சுருண்டுக்கலாம்.. ஆனா, நாங்க கண்ணையும் மூடிக்கல.. எதையும் மறக்கவும் இல்ல”

இப்ப மோகனா ஸ்டைலா தோள் குலுக்கி கௌதமப் பாத்துக் கேட்டா..

“டேய் தடியா.. வர்ற வழில இவளுக்கு சின்னக் கொத்து கீது பனங் கள்ளு ரெண்டு கலயத்த ஊத்தி விட்டுட்டாரா? சம்பந்தமே இல்லாம பேத்தறாளே?”

தனக்குச் சப்போர்ட்டா வருவான்னு இவ அவனப் பேச்சுக்குள்ள இழுக்க அவன் சொன்ன பதிலக் கேட்டதும் ‘இவனக் கூப்பிடாமையே இருந்திருக்கலாம்’னு தோணுச்சு மோகனாவுக்கு.. அவன் சொன்னது இதான்..

“அவ ஒளறலை மோகனா.. நீ தான் லாஜிக்கே இல்லாம கண்டபடி ஒளறிக் கொட்டறே”

“சரி தான்.. உனக்கும் அவளுக்காட்டம் மறை கழண்டு போச்சா? அவ கூடவே சுத்தறே.. இல்லையா? சகவாச தோசம்.. ஓட்டுவாரொட்டி ! உன்னையும் ஒளற வெக்குது”

அதுக்கு மேல பொறுக்க முடியாம நளினி மோகனா தோளப் புடிச்சுத் திருப்பி அவ கண்ண உத்துப் பாத்துக் கேட்டா..

“உம் மனசுல ஒண்ணுமே இல்லேன்னு எங்கள ஏமாத்தலாம்.. ஊர ஏமாத்தலாம்.. கடவுளையும் ஏமாத்த முயற்சி பண்ணலாம்.. ஆனா, உன்னையே நீ ஏமாத்திக்க முடியாதுடி.. ஏன்னா,மனசாட்சிக்கு வஞ்சனையோ சூது வாதோ தெரியாது”

நளினிய அதிசயமாப் பாத்துச் சொன்னா மோகனா..

“பேஷ்… டயலாக் நல்லா இருக்கு.. சீரியலுக்கு சூட் ஆகும்..பட்.. எனக்கு அது செட்டாகாது.. ஏன்னா.. நான் யார ஏமாத்தினேன்.. என்ன ஏமாத்தினேன்னு லாஜிக் இடிக்குதே? இந்த மர மண்டைக்குப் புரியற மாதிரி படம் போட்டு பாகம் குறிச்சு வெளக்கினா நானும் புரிஞ்சுக்குவேன்”

“நீ ஹாலிவுட்டுக்கே டயவாக் எழுதற அளவுக்கு சும்மா கிழி கிழின்னு கிழிக்கறியே.. நானெல்லாம் எந்த மூலை?’

“என்னடி இது மாமியார், மருமக சண்டையாட்டம் அர்த்தமே இல்லாம பேசிக்கிட்டு… எதா இருந்தாலும் ஓப்பனாக் கேளு”

அதிசயப் படற மாதிரி பாவிச்சு நெஞ்சுல கைய வச்சு கண்ண அகல விரிச்சுச் சொன்னா நளினி…

“அரே பாப்ரே.. இவ்வளவு நேரம் கதை கதையா பேசிட்டு.. இப்ப மறுபடியும் மொதல்ல இருந்தா? ஆள விடுடியம்மா.. உன்னோட குடித்தனம் பண்ண என்னால ஆகாது.. டேய் பேரல்… கெளம்பலாமாடா?”

அத்தனை வாதத்துக்கும் புன்னகை மாறாம பதில் சொல்லிட்டு வந்த மோகனா நளினி கௌதம ‘கெளம்பலாமா?’ன்னு கேக்கவும் மொகம் சுண்டிப் போனா.. உள்ள பொங்குன வேதனை வார்த்தைலயும் தொனிக்கக் கேட்டா..

“வந்து ஒரு வாய் கூடச் சாப்பிடல.. அதுக்குள்ள கெளம்பறேங்கறியே.. அப்படி என்னடி பாவம் பண்ணிட்டேன்? எங்க வீட்டுக்கு கெஸ்ட் வர்றதே ரொம்ப ரேர் தெரியுமா? அப்பா பக்கத்துல பெருசா சொந்தங்கள் இல்ல.. அம்மா சைடுலயோ அந்த சண்டைக்கு அப்புறம் பட்டும் படாம போயிருவாங்க.. இங்க ரெண்டு நாளாவது தங்கி இருப்பீங்கன்னு ரொம்பவே எதிர் பார்ப்போட இருந்தேன்.. ஊரு ஒதுங்கி, உறவுங்க ஒதுங்கி, கடைசில பிரண்ட்ஸ்ங்களும் ஒதுங்கறீங்க.. பரவால்ல.. இந்த மாதிரி ஏமாற்றங்கள் எனக்குப் புதுசில்ல.. பழகிப் போச்சு.. சாப்டாவது போவீங்களா? இல்ல.. இவ வீட்ல சாப்பிட்டாக் கூட பாவம்னு…..”

அதுக்கு மேல தாங்க முடியாம நளினி ஓடி வந்து வாயப் பொத்தி இன்னொரு கையால மோகனாவ அணைச்சுக்கிட்டா.. ரெண்டு பேரு கண்ணுலயுமே லேசா கலக்கம்.. அணைப்பு தந்த இதத்துல ஓயாம பேசின ரெண்டு வாயும் அடங்க கௌதம் ஆரம்பிச்சான்..

“ஸாரி மோகனா.. இந்த எருமைக்கு எங்க, என்ன பேசனும்னு இங்கிதம் கொஞ்சமும் தெரியாது.. நீ ஒண்ணும் மனசுல வச்சுக்காத”

நளினி கோபமா அவனப் பாத்துச் சொன்னா..

“உன் அண்டா வாய்ச் ஷட்டர கொஞ்சம் குளோஸ் பண்றியா? தோண்டித் துருவிக் கேளுன்னு என்னத் தூண்டி விட்டவனே நீ தான்.. இப்ப இங்கிதம் தெரியாதவளா? கொன்னுடுவேன்.. ஆமா”

அணைப்புல இருந்து விடுபட்டுக்கிட்டே மோகனா சொன்னா..

“ஹேய்.. இப்பத் தான் ஒரு சீன் முடிஞ்சிருக்கு.. நீங்க வேற தனி டிராக் போடாதீங்க.. ஒரு நாளைக்கு ஒரு சண்டை போதும்.. அதத் தாண்டினா இந்த ஒடம்புக்கு அலர்ஜி.. இதோட எல்லாத்தையும் மறந்துட்டு சாப்பிடப் போலாம்.. வாங்க”

இதக் கேட்டதும் உடனே உற்சாகமான கௌதம் சொன்னான்..

“இப்பச் சொன்னியே? இது நல்ல பேச்சு.. காதுல அப்படியே இன்பத் தேன் வந்து பாயுது மோகனா.. வா.. வா.. அம்மா வெயிட் பண்ணிட்டிருப்பாங்க.. என்ன மெனுன்னு சொன்னீன்னா இங்க இருந்தே என் வயித்த ரெடி பண்ணிக்குவேன்”

“வயிறாடா அது ? பேரல் ! போயி கொட்டிக்க போ..”

மோகனா செல்லமா அவ முதுகுல அடிச்சுச் சொன்னா…

“எதுக்கடி எப்பப் பாத்தாலும் அவனோட சண்டைக்கு நிக்கறே?”

“பாத்துட்டுத் தான இருந்தே? நாம எவ்வளவு முக்கியமா வாதம் பண்ணிக்கிட்டிருக்கோம் ? இந்தத் தீனிப் பண்டாரம் சோறுன்னதும் பேன்டத் தளத்திட்டு உடனே எந்திருக்கறதப் பாரேன்”

கௌதம் இதுக்கெல்லாம் அலட்டிக்காதவனா அலட்சியமா பதில் சொன்னான்..

“என்னவோ இந்த உலகத்துல.நான் ஒருத்தன் தான் தின்னு தீக்கற மாதிரி.. மத்தவங்க யாருமே இங்க திங்கறதில்லையா ? சரி .. நான் தின்னு தீக்கறதாவே வச்சுக்கோ.. அதுல என்ன தப்பு?”

“நாலாளு திங்க வேண்டியத நீ ஒருத்தனே தின்னு தீத்துட்டு என்ன தப்புன்னா கேக்கறே? அறைஞ்சே கொன்னுடுவேன் பாரு..”

இது விட்டிருந்தா பெருசாயிருக்குமோ என்னவோ? மோகனா குறுக்க பூந்து அதட்டலாச் சொன்னா..

“ச்சீ… என்னடி இது… திங்கறான்.. முழுங்கறான்னுட்டு.. அசிங்கமா இல்ல.. அவன் ஒடம்பு வாகு அப்படி.. கொஞ்சம் சேர்த்துச் சாப்பிடறான்.. இதப் போயி பெருசா பேசிக்கிட்டு…’

“கொஞ்சமா..?”

கேட்ட நளினி தமாசா வாயப் பொளந்தா..

“இவன் ஒரு வேளை திங்கறதக் கொண்டு ஒரு குடும்பத்துக்கே பசியாத்தலாம்.. தெரியுமா?”

“போதும்டி.. வாங்க.. போலாம்.. இனியும் போகலேன்னா அம்மா தேடிக்கிட்டு வந்துடுவாங்க”

பிடிச்சு இழுத்த அவ கைய பலவந்தமா ஒதறிட்டு நளினி கேட்டா..

“தாராளமா வந்து வயிறு போதும்னு அலர்ற அளவுக்கு கொட்டிக்கறோம்.. ஆனா, ஒரு கண்டிசன்.. சாப்பிட்டு வந்து நீ உன் மனசுல என்ன இருக்குங்கறத ஓப்பனாச் சொல்லணும்.. அப்படிச் சொல்றேன்னு பிராமிஸ் பண்ணினா நாங்க இப்படியே டைனிங் ஹாலுக்கு வர்றோம்.. இல்ல… அது முடியாதுன்னுட்டா இந்த வழில வெளிய போறோம்.. என்னடி சொல்றே ?”

“இது என்னடி பிடிவாதம்? ஒண்ணுமே இல்லாத ஒண்ணப் பத்தி சொல்லு.. சொல்லுன்னு உயிரெடுத்தா நான் எதைடி சொல்றது?”

“இது வேலைக்காவாதுடா தடியா… எடு பேக்க.. நாம கெளம்பற வழியப் பாப்போம்”

உண்மையாலுமே அவ பேக்க எடுத்து தோள்ல மாட்ட.. இதென்ன புதுக் கதைங்கற மாதிரி கௌதம் முழிக்க.. இதத் துளியும் எதிர் பாக்காத மோகனா என்ன பண்றதுன்னு தவிக்க..

குறுக்க அந்தக் குரல் கேட்டது..

“அவளே சொல்லணுமா நளினி? இல்ல.. நாஞ் சொன்னாப் போதுமா?”

ஒருத்தொருக்கொருத்தர் கோபமா வாதம் பண்ணின ஜோர்ல கதவு பக்கம் யாருமே கவனிக்கல.. திடீர்னு கேட்ட குரலுக்கு மூணு பேருமே பார்வையத் திருப்ப.. அங்க நெஞ்சுல கையக் கட்டி.. மொகத்துல மறையாத அந்தச் சிரிப்போட கம்பீரமா நின்னுக்கிட்டிருந்தது அருக்காணித் தங்கம்மா….

(இன்னும் பூக்கும்…

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *