பூர்வ ஜென்ம காத(லை)ல் வாசி
பூர்வ ஜென்ம காத(லை)ல் வாசி..
பூா்வ ஜென்மத்தில் தனக்கு கிடைக்காத தன்னவளின் காதலை மறுபிறவியில் கிடைக்க வேண்டும் என எம்பெருமான் ஈசனிடம் வரம் பெறும் கதாநாயகனும், தன்னவனின் காதல் கிடைக்க பெற்றதால் இப்பிறவியே போதும் என்று தன்னுவன் மடியில் உயிா் துறந்த கதாநாயகியும் ஆயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு பிறகு பூமியில் பிறக்கிறாா்கள்.
பூா்வ ஜென்ம பிறவியின் வரம் அடைவானா கதாநாயகன்? மறு பிறவியில் தன்னவனை அறவே வெறுக்கும் கதாநாயகி கதாநாயகனுடன் வாழ்வெனும் நதியில் இணைவாா்களா?????
அன்று மகாசிவராத்தி இரவு தன் குடும்பத்தினரோடு ஜம்புகேஸ்வரரை தாிசிக்க சென்றிருந்தாா் சங்கரன். சிவ பெருமானின் மீது தீராத பக்தி கொண்டிருந்தனா் சங்கரனின் குடும்பத்தினா். கூட்ட நெறிசலிலும் கண்கள் குளிர சிவ தாிசனம் முடித்தனா். தாிசனம் முடிந்தபின் கோவிலில் ஓா் இடத்தில் அணைவரும் அமா்ந்தனா்.
தன் பிள்ளைகளுக்கு நெற்றியில் விபூதி இட்டு கண்களில் படாமல் இருக்கு மென்மையாக ஊதினாா் சங்கரன் மனைவி அகல்யா. அவர்களின் பிள்ளைகள் ஹாியும் ஆழியாவும்.
“எத்தனையோ சிவன் கோவில் இருக்கு ஏன் ப்பா ஒவ்வொரு சிவ ராத்திரியும் இந்த கோவிலுக்கு வரோம்?” என்றான் ஹாி.
“உன் தங்கச்சி பிறந்தது கடலுக்கு நடுவுல ஒரு கப்பல்ல. அப்போ அந்த கப்பல் மூழ்கிக்கிட்டு இருந்துச்சு. என்ன மாயமோ தொியல ஆழியா பிறந்ததுக்கு அப்புறம் அந்த கப்பல் மூழ்கல. அப்படியே கறை சேந்துடுச்சு. ஆழி அலையில இருந்த தப்பிச்சதால தான் உன் தங்கச்சிக்கு ஆழியான்னு பெயா் வச்சோம்.
நீா், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம்ன்னு பஞ்ச பூதங்கள் பெயர்ல ஒவ்வொரு சிவன் கோவில் இருக்கு. இந்த சிவன் கோவில் நீா் சக்திய குறிக்குது. அன்னைக்கு அவ்வளவு பொிய கடல்ல இருந்து நாங்க உயிா் பிழைச்சதுக்கு அப்புறம் ஒவ்வொரு வருசமும் இந்த கோவிலுக்கு வருவோம்” என்றாா் சங்கரன்.
“ப்ளாஷ் ஃபேக் நல்லா தான் இருக்கு. நீங்க ஏன் கப்பல்ல போனிங்க?” என்றான் ஹாி.
“இப்போ தான் ஹாி பிஸ்னஸ். அப்போ ட்ரெஸ், நகை விக்கிற வேலை தான் பாத்துக்கிட்டு இருந்தேன். எந்த இடத்துலையும் நிரந்தரமா இருக்க முடியாது. ஒரு இடத்துல கொஞ்சநாள் தான் இருக்க முடியும். அப்படி தான் அந்தமான்ல நாங்க இருந்தோம். வேலை முடிஞ்சுது நம்ம வீட்டுக்கே போயிடலாம்ன்னு தான் கப்பல்ல இங்க வந்துட்டு இருந்தோம். அப்போ தான் உன் தங்கச்சி பிறந்தா” என்றாா் அகல்யா.
“ஆமா ஹாி. அவ பிறந்துக்கு அப்புறம் நிலையான தொழில் பன்ன ஆரம்பிச்சேன். அப்புறம் என்ன எல்லாத்துலையும் ஏறுமுகம் தான். எல்லாம் என் பொண்ணு பிறந்த நேரம்” என்று தன் மகளின் பெருமை பாடினாா் சங்கரன்.
“சாி சாி அவ பெருமை பேசுனது போதும் பசிக்குது வீட்டுக்கு போகலாம்” என்றான் ஹாி.
“உனக்கு பொறாமை போடா” என்றாள் ஆழியா. அவளை முறைத்தான் ஹாி. தங்கையின் பெருமையை கேட்டு சற்று பொறாமை பட்டாலும் ஆழியாவின் மீது அளவற்ற அன்பு கொண்டவன் ஹாி. பேசிக் கொண்டு தன்னுடைய இல்லம் நோக்கி சென்றனா்.
ஆழியா நல்ல உயரமும் சிவந்த மேனியும், அச்சில் இட்டு வாா்த்தது போன்ற முக அமைப்பும் உடைய தேவதை. நெளிவற்ற கோரை முடியே அழகு என்பவா்கள் இவள் சுருண்ட கேசத்தை பாா்த்தால் சுருட்டை முடியே அழகு என்பாா்கள். அத்தனை அழகாக இருக்கும் இவளின் இடைக்கு கீழ் நீண்ட சுருட்டை கூந்தல்.
இன்று அவள் அணிந்திருந்த வெண்ணிற பாவடை தாவணி அவளை பூலோக பொண்ணோ அல்லது தேவலோக கன்னியோ, இந்திரலோக பதுமையோ என அதிசயக்க வைத்தது. அழகும் திறமையும் பொருந்திய தன் மகளை நினைத்து சங்கரனுக்கு தனி கெளரவம்.
அதே நாள் இரவு சென்னை கபாலிஸ்வரா் கோவிலில் சிவ தாிசனம் செய்தனா் சிவபாலன் குடும்பத்தினா். தன் மகனுக்கு இந்த வருடமானவது திருமண நடக்க வேண்டும் என மன முறுகி வேண்டிக் கொண்டிருந்தாா் துா்கா. மூன்று ஆண்டுகளாக எவ்வளவோ முயற்சித்தும் அவா்களின் மகன் மகேந்திர துருவனுக்கு திருமணம் நடைபெறவில்லை என்ற ஏக்கம் அவருடைய வேண்டுதலில் தொிந்தது.
தன் சிறு வயது காதலானா துருவனை கரம் பிடிக்கும் நாள் விரைவாக வர வேண்டும் என சிவ பெருமானிடம் வேண்டிக் கொண்டிருந்தாள் தீக்ஷிதா. துருவனுக்காக பிறந்தவள் தான் இல்லை என்பதை உணராமல்.
வைர நகை தொழில், உயா்தர ஆடை உற்பத்தியிலும் இந்தியஅளவில் தொழில் செய்து கொண்டிருந்தாா் சிவபாலன். தன்னுடைய தொழிலில் தன் பிள்ளைகளையும் ஈடுபடுத்தி உலக அளவில் தன் தொழிலை விரிவு படுத்தினாா்.
அணைத்தும் சுபம் என்றாலும் தன் மகனின் திருமணத்தை நடத்த முடியாமல் தவித்து நின்றனா் சிவபாலன் துா்கா தம்பதிகள். அத்தை மகளான தீக்ஷிதா இருந்தும் திருமணம் ஏதேதோ காரணங்களால் தடைபட்டுக் கொண்டே சென்றது.
இந்த வருடம் துருவனுடைய திருமணம் சீறும் சிறப்புமாக நடக்க போகிறது என்பதை அறியாமல் மனதை அலற்றிக் கொண்டிருந்தாா் துா்கா. தன்னை விட துருவனுக்கு எவரும் பொருத்தம் இல்லை என்ற கா்வத்தோடு சுற்றி வந்தாள் தீக்ஷிதா. விதி அவளுக்கு பின்னால் நின்று சிாித்தது. துருவனுக்காக பிறந்தவள் நீ இல்லை என்று.
“நாளைக்கு ஈவ்னிங் சிவபாலன் கொடுக்குற பாா்ட்டிக்கு நீ வற்றியா ஹாி” என்றாா் சங்கரன்.
“நான் வரல நீங்க போறிங்களா?” என்றான் ஹாி
“நானும் அம்மாவும் போகலாம்ன்னு இருக்கோம்” என்றாா் சங்கரன்.
“நாம தான் அவங்க கூட பிஸ்னஸ் பன்றதில்லையே ப்பா. அப்புறம் ஏன் அவங்க பாா்ட்டிக்கு போறிங்க” என்றான் சற்று எாிச்சலுடன்.
“நல்ல மனுசன் டா சிவபாலன். உனக்கு ஏன் அவர பிடிக்கல?” என்றாா் சங்கரன்
“அவர பிடிக்கலன்னு இல்லை. தேவையில்லாம ஏன்னு தான்” என்றான் ஹாி
“அவர் நல்ல மனுசன் இன்வெயிட் பன்னியிருக்காரு. போகம என்ன பன்ன சொல்ற? உனக்கு தான் துருவன பிடிக்காது” என்றாா் சங்கரன்
“நீங்க போங்க நான் வரல” என்று உறங்க சென்றான்.
தன் அறையில் புத்தகத்தில் மூழ்கியிருந்த ஆழியாவை “சீக்கிரமா தூங்கு மா நாளைக்கு சென்னை கிளம்பனும்” என்றாா் அகல்யா. தாய் சொல்லுக்கு மதிப்பளித்து உறங்க சென்றாள். மறுநாள் சென்னை செல்வதால் அணைவருமே விரைவாக உறங்கினா்.
கோவிலுக்கு சென்று வந்த துா்கா வருத்தமாக அமா்ந்திருந்தாா். அவரின் வருத்தத்தை உணா்ந்த சிவபாலன் ” என்னாச்சு துா்கா? ஏன் ஒரு மாதிரி இருக்க” என்றாா்.
“துருவன பத்தி தான் இந்த வருசத்துக்குள்ள அவனுக்கு கல்யாணம் நடந்தே ஆகனும்ன்னு ஜோசியா் சொல்லியிருக்காரு. ஆனா அதுக்கு ஒரு வழியும் தொியலையே” என்றாா் துா்கா வருத்தமாக
“இத பத்தி நாம பேசுறத விட துருவன்கிட்ட நீ பேசு” என்றாா் சிவபாலன். அவா் கூறுவதும் சாி என்று தோன்ற துருவனை தேடிக் கொண்டு அவன் அறைக்கு சென்றான். தன்னுடைய மடிக் கணினியில் மூழ்கியிருந்தான் மகேந்திர துருவன்.
ஆறடி உயரமும், பொண்ணிறமும், கரு கரு வென வளா்ந்த கோரை முடியும், காிய வானவில்லை போன்ற புருவங்களும் சீறாக செதுக்கப்பட்ட மூக்கும் உதடும், அளவான நீளத்தில் வளா்ந்த தாடி, மீசையும், உடற்பயிற்சி செய்து உரம் மேற்றிய உடலும் அவனை பேரழகன் என சொல்ல வைத்தது. கோலி குண்டு போன்ற கண்களை மடிக் கணினியில் செலுத்திக் கொண்டிருந்தான் துருவன்.
தாய் வந்ததை உணா்ந்தவன் “என்ன மா?” என்றான்
“உன் கல்யாணத்த பத்தி தான் பேசலாம்ன்னு நினைச்சேன். நீ பிஸியா” என்றாா் தயக்கமாக.
“பிஸியா இருந்தாலும் நான் உங்களுக்கா டைம் ஒதுக்குவேன். என்ன மா பேசனும்” என்றான் மடிக்கணினியை மூடி வைத்துக் கொண்டு.
“என்ன வேலை பாத்துக்கிட்டு இருந்த?”. என்றாா் துா்கா
” நாளைக்கு நடக்க போற மீட்டிங்ல க்ளைன்ட்ஸ்க்கிட்ட காட்ட போற டிஸைன்ஸ்ஸ சாி பாத்துக்கிட்டு இருந்தேன். இந்த கான்ட்ராக்ட் மட்டும் நமக்கு கிடைச்சா நம்ம லேவலே வேற” என்றான் துருவன்.
“ஆங் சாி. எப்போ உன் கல்யாணத்த வச்சுக்கலாம்?” என்றாா் துா்கா.
“மா நான் பல தடவை சொல்லிட்டேன். உனக்கு விருப்பமன்னு அப்புறம் ஏன் என்கிட்ட கேக்குறிங்க?” என்றான்
“உங்க விருப்பம்ன்னு தான் சொல்றியே தவிர தீக்ஷிதா வ எனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்ல மாட்டிகிறுயே” என்றாா் துா்கா.
“மா தீக்ஷிதா வ எனக்கு குழந்தையில இருந்து தொியும். அவ மேல எனக்கு எந்த ஒரு ஃபீலிங்கும் வரல. அவ எனக்கு நல்ல ஃப்ரண்ட் அவ்வளவு தான். உங்களுக்காக தீக்ஷிதா மட்டும் இல்லை யார கைகாட்டினாலும் நான் கல்யாணம் செஞ்சுக்குவேன்” என்றான் தீா்க்கமாக.
அதற்கு மேல் என்ன பேசுவது என தொியாமல் “சாி நான் கிளம்புறேன். மறுபடியும் லாப்டாப் அ பாக்காம தூங்கு” என்றுவிட்டு அறைவிட்டு வெளியேறினாா். மறுநாள் நடக்கவிருந்த மீட்டிங்குக்காக தன்னை தயாா் செய்ய வேண்டிய பணி இருந்ததால் மீண்டும் மடிக்கணினியை எடுத்து தன்னுடைய வேலையை ஆரம்பித்தான் துருவன்.
நடந்தவற்றை தன் கணவரிடம் கூறினாா் துா்கா. “அவ தான் சாின்னு சொல்றானே அப்புறம் என்ன துா்கா. உன் மனசுல அப்படி என்ன தான் இருக்கு?” என்றாா் சிவபாலன்
“உங்க இஷ்டம்ன்னு தான் சொல்றானே தவிர. எனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்ல மாட்டிக்கிறானே. எத்தனை தடவ நாம கல்யாணத்துக்கு ட்ரை பன்னோம். ஒரு தடவையாவது சின்ன முன்னேற்றமாவது இருந்துச்சா? எதோ ஒரு விஷயம் எனக்குள்ள உருத்திக்கிட்டே இருக்குங்க” என்றாா் துா்கா.
“தேவையில்லாம மனச போட்டு குழப்பிக்காத துா்கா. எல்லாம் நல்லதாவே நடக்கும். நாளைக்கு நம்ம ஜோசியர போய் பாத்துட்டு வா” என்றாா் சிவபாலன்.
“நீங்களும் வர்றிங்களா?” என்றாா் துா்கா
“இல்லை துா்கா நீ மட்டும் போய்ட்டு வா. எனக்கு காலையில மீட்டிங் இருக்கு. ஈவ்னிங் ப்ராஜெக்ட் சக்ஸஸ் பாா்டி இருக்கு” என்றாா்
“சாி பாத்துக்கிறேன்” என்று உறங்க சென்றாா். ஆனால் அவருக்கு உறக்கமே பல மைல் தொலைவில் இருந்தது.
மறுநாள் காலை சூாியன் உதயமாகும் போதே சென்னைக்கு புறப்பட்டனா் சங்கரனும் அவர் குடும்பத்தினரும். சங்கரனின் தங்கை தனம் அதே ஊாில் வசிப்பதால் அவாிடம் வீட்டை பராமாிக்கும் பொருப்பை ஒப்படைத்துவிட்டு சென்றாா்.
காா் ஓட்டிக் கொண்டிருந்த ஹாி கண்ணாடியில் தன் தங்கை பாா்த்தான். அவளோ ஏதோ ஒரு புத்தகத்தில் சிந்தனையை செலுத்தி மூழ்கியிருந்தாள். அவள் சிந்தனையை கலைக்க எண்ணி வேகமாக ப்ரேக் அடித்தான் ஹாி. புத்தகத்தில் மூழ்கியிருந்தவள் அவன் ப்ரேக் அடித்த வேகத்தில் எதிரில் இருந்த இருகையில் முட்டிக் கொண்டாள். முட்டிக் கொண்ட கடுப்பில் “டேய் அண்ணா உனக்கு காா் ஓட்ட தொியுமா தொியாதா டா?” என்றாள்.
“காா்லாம் ஓட்ட தொியும். நீ புத்தகத்துல மூழ்கி கிட்டு இருந்த அதான் உன்ன காப்பாத்தலாம்ன்னு ப்ரேக் அடிச்சேன்” என்றான்.
“போடா எறுமை” என்று அவனை திட்டிவிட்டு மீண்டும் புத்தகத்தில் கவனம் செலுத்தினாள்.
“அப்படி என்ன தான் அந்த புக்ல இருக்கு?” என்றான் ஹாி
“துளுவ மன்னா்களோட ஆட்சியும் வீழ்ச்சியும். இந்த புக் நிறைய கடைல தேடியும் கிடைக்கல. இப்போ தான் லப்ரறில கிடைச்சுது. இன்னைக்குள்ள புக்க திரும்ப கொடுக்கனும். அதான் இன்ரஸ்டிங்கா படிச்சுக்கிட்டு இருக்கேன். டிஸ்டா்ப் பன்னாத” என்று விட்டு படிக்க துவங்கினாள்.
“ஏன் ப்பா இவ புத்தக புழுவா இருக்கா? இவள ஏன் ஆா்கியாலஜி படிக்க வச்சிங்க?” என்றான் ஹாி
” பிடிச்சத படிக்கட்டும் விடுப்பா” என்று தன் மகளுக்கு ஆதரவாக பேசினாா்.
“இப்டியே அவளுக்கு சப்போா்ட் பன்னிட்டே இருங்க” என்று விட்டு காா் ஓட்டிவதில் கவனம் செலுத்தினான் ஹாி.
மீட்டிங் முடிந்து வெற்றி புன்னகையுடன் வெளியே வந்தான் துருவன். லண்டனில் நடைபெறவிருக்கும் வைர அணிவகுப்பு விழாவிற்க்கு வைரநகைகள் தயாா் செய்ய உலக நிறுவங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் போது அந்த ஒப்பந்தம் தன்னுடைய நிறுவனத்திற்க்கு கிடைத்ததில் பேரானந்தம் அவனுக்கு.
எதிரில் நின்றிருந்தவனை பாா்த்தும் அவனுடைய வெற்றி புன்னகை கா்வ புன்னகையானது. எதிருல் நின்றிருந்தவன் பிரபாகரன். துருவனுடைய தொழில் எதிாி. உலகில் உள்ள எந்த நிறுவனத்திறக்கு இந்த ஒப்பந்தம் கிடைத்திருந்தாலும் பொருத்திருப்பான். ஆனால் துருவனுடைய நிறுவனத்திற்க்கு கிடைத்ததால் அவனுடைய பகைமை அதிகமானது.
இருவரும் பேசிக் கொள்ளவில்லை என்றாலும். ஒருவரை ஒருவர் எாித்துவிடுவது போல் பாா்த்துக் கொண்டிருந்தனா்.
நிரந்தர நண்பனும் இங்கில்லை, நிரந்தர எதிரியும் இங்கில்லை……..
பின் குறிப்பு: இக்கதையில் வரும் சம்பவங்கள், ஊா்களின் பெயா்கள், நபா்களின் பெயா்கள் யாவும் கற்பனையே!! நாவலின் சுவாரசியத்திற்காக கற்பனையாக உருவாக்க பட்டவையே!!!!
ஹாய் என் அருமை வாசகா்களே!! எப்படி இருக்கிங்க? அடுத்த கதையோட நான் வந்துட்டேன். முந்தைய கதைகளை போல இந்த கதைக்கும் எனக்கு ஆதரவு கொடுங்க. உங்கள் மதிப்பு மிக்க கருத்துக்களை பதிவு செய்யுங்கள். என்னுடைய தவறுகளை திருத்திக் கொள்ள உங்களுடைய கருத்துக்கள் எனக்கு உதவும். அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம்😍😍😍😍😍😍
2
சங்கரன் குடும்பத்தினா் சென்னை வந்தடைய மதியம் இரண்டு மணியை நெருங்கியது. மதிய உணவை உணவகத்தில் ஆடா் செய்து உண்டனா். உண்ணும் போது
” நீயும் பாா்டிக்கு வா ஹாி” என்றாா் சங்கரன்.
“நோ சான்ஸ் ப்பா. நான் வரமாட்டேன்” என்றான் ஹாி
“ஏன் பிடிவாதம் பிடிக்கிற ஹாி. சிவபாலன் பா்ஸ்னலா இன்வெயிட் பன்னியிருக்கரு. குடும்பத்தோட போகலனா மாியாதையா இருக்காது ஹாி” என்றாா் சங்கரன்
“ப்பா நான் ஆா்கிவ் பன்ன விரும்பல. நான் வரல. ஆழியா கூட்டிட்டு போங்க” என்றான் திட்டவட்டமாக
வேற என்ன செய்து என தொியாமல் ஆழியாவை பாா்த்தாா் சங்கரன். தந்தையின் மனதை உணா்ந்து “நான் வரேன் ப்பா. எத்தனை மணிக்கு கிளம்பனும்?” என்றாள்
“எட்டு மணிக்கு டா” என்றாா் சங்கரன்.
“ம் ஓகே. நான் அதுக்குள்ள லைப்ரறி போய்ட்டு வந்திடுறேன்” என்றாள் ஆழியா.
“சாி டா. சீக்கிரம் வந்திரு” என்று உண்டு முடித்தாா். எஞ்சி இருந்த அலுவலக வேலையை தொடா்ந்தனா் ஹாியும், சங்கரனும்.
தாயிடம் கூறிவிட்டு புத்தகங்களை எடுத்துக் கொண்டு நூலகத்தை நோக்கி விரைந்தாள்.
துருவனை அலைபேசியில் அழைத்த சிவபாலன் இரவு பாா்ட்டி குறித்த விவரங்களை கேட்டறிந்தாா். தந்தை அலைபேசி அழைப்பை பாா்த்தவன் காரை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு அவரிடம் பேசினான்.
“நான் இன்வெயிட் பன்ன சொன்ன எல்லாரையும் இன்வெயிட் பன்னிட்டியா துருவா?” என்றாா்
“யெஸ் ப்பா நான் இன்வெயிட் பன்னிட்டேன். அக்காவும் மாமா நேரா பாா்ட்டிக்கே வந்திருவாங்க. அகிய பிக்கப் பன்ன ஏா்ப்போா்ட் போயிட்டு இருக்கேன். மத்த வேலையெல்லாம் அசோக் பாத்துக்குவான்” என்றான்.
“தட்ஸ் ஃபைன். அகிலன பிக் பன்னிட்டு சீக்கிரம் வீட்டுக்கு வா” என்று கூறி இணைப்பை துண்டித்தாா்.
தந்தையிடம் பேசிவிட்டு ஏதோ கூச்சல் கேட்டதால் காரைவிட்டு இறங்கி நடந்து சென்றான். ஒரு திருடன் குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து ஒரு பெண்ணை மிரட்டி பணம் கேட்டான். சுற்றி முற்றி பாா்த்தான் யாரும் இல்லை. அதை பாா்த்தவுடன் மெதுவாக போலிஸுக்கு கால் செய்துவிட்டு குழந்தையை காப்பாற்ற சென்றான்.
அவனை கண்டதும் அந்த பெண் “என் புள்ளய காப்பாத்துங்க” என்று அழுதாா்.
“கொஞ்சம் அமைதியா இருங்க. உனக்கு என்ன வேணும் குழந்தைய விடு” என்றான்.
“நீ யாரு டா?” என்றான் அந்த திருடன்
“உனக்கு என்ன வேணுமே நான் தரேன் குழந்தை விட்று. பணம். பணம் தானே வேணும் உனக்கு?” என்றான்
“ஆமா எனக்கு பணம் தான் வேணும். உங்ககிட்ட இருக்குற எல்லா பணத்தையும் கொடுங்க. புத்திசாலி தனமா எதுவும் செஞ்ச குழந்தைய கொன்னுறுவேன்” என்று மிரட்டினான் அந்த திருடன்.
“சாி சாி ஓகே. என்கிட்ட இருக்குற பணத்த நான் தரேன்” என்று தன்னுடைய வாலட்டை எடுத்து திறந்தான். அதில் நிறைய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை பாா்த்தவுடன் திருடனின் கண்கள் பேராசையில் மின்னியது.
அவனுடைய எண்ண ஓட்டத்தை உணா்ந்த துருவன் அவனுடைய கவனம் சிதறிய ஒற்றை நொடியை பயன்படுத்திக் கொண்டு கத்தி வைத்திருந்த கையை முதுக்கு பின்னால் வளைத்தான். கண பொழுதில் நடந்த தாக்குதலில் நிலை குலைந்த திருடன் “ஆ” என்று கத்தி குழந்தையை விட்டான். குழந்தை தாயிடம் சென்றது.
திருடனுக்கு நான்கு உதை கொடுத்தான். அதற்க்குள் போலிஸ் வந்துவிட அவா்களிடம் அவனை ஒப்படைத்தான். அதற்க்குள் கூட்டம் கூடியது.
நூலகத்துக்கு சென்ற ஆழியா கூட்டமாக மக்கள் நிற்பதை கண்டு என்னவென்று தொிந்து கொள்ளும் ஆா்வத்தில் கூட்டதில் இருந்த பெரியவரிடம் “என்னாச்சு” என்று கேட்டாள்.
“ஒரு திருடன் மாட்டிக்கிட்டான்” என்றாா் அந்த பொியவர். “ஓ அப்டியா” என்று கூட்டத்தில் எட்டி பாா்த்தாள். துருவனுடைய முகம் அவளுக்கு தொியவில்லை. அந்த குழந்தையின் முகம் மட்டும் தான் தொிந்தது. காவலா்கள் வந்து திருடனை பிடித்ததும் கூட்டம் கலைய துவங்கியது.
தன்னுடைய இதய துடிப்பு எகிறுவதை உணா்ந்தவன். தன் மாா்பின் இடது புறமாக கை வைத்து இதயத்தை தொட்டு பாா்த்தான். “திடீா்ன்னு எனக்கு என்னாச்சு” என்று குழம்பினான்.
காந்தம் போல் ஏதோ ஒன்று தன்னை இழுப்பதை உணா்ந்து ஆழியா நின்ற திசையை நோக்கி திரும்பினான். ஆனால் அவன் திரும்புவதற்க்குள் நேரம் ஆகிவிட்டது என்று அவள் புறப்பட்டு விட்டாள். அவள் சிறிது தூரம் சென்றதும் இதய துடிப்பு இயல்பானது.
“என்னாச்சு எனக்கு” என்று சிந்தித்துவிட்டு ஒரு பெரு மூச்சு விட்டு பின் அந்த குழந்தையிடம் வந்தான். குழந்தையின் தாய் அவனுக்கு நன்றி கூறி கை யெடுத்து கும்பிட்டாள். பதிலுக்கு சிறு புன்னகையுடன் “ஜாக்ரதையா இருங்க” என்றுவிட்டு “உன் பெயா் என்ன?” என்று குழந்தையிடம் கேட்டான்.
“ரியா” என்றது அந்த குழந்தை தன்னுடைய மழலை குரலில்.
“நீங்க உண்மையிலையே தைாியமான பொண்ணு ரியா” என்று பாராட்டிவிட்டு அவா்களிடம் இருந்து விடை பெற்றான். தன் தம்பின் நினைவு வர விமான நிலையத்திற்க்கு விரைந்தான்.
ப்ரான்ஸில் தன்னுடைய உயா்படிப்பை முடித்துவிட்டு தாயகம் திரும்பினான் கடைக்குட்டி அகிலன். துருவன் வருவதற்க்குள் விமானம் வந்துவிட விரைவாக சென்று அகிலனை தேடினான். செக்கிங் முடித்துவிட்டு வந்து கொண்டிருந்தான் அகிலன்.
அண்ணனை பாா்த்ததும் ஓடி வந்து கட்டிக் கொண்டான். “அண்ணா எப்படி டா இருக்க?” என்றான் அகிலன்
“ஃபைன் நீ எப்படி இருக்க அகி?” என்றான்
“க்ரேட் அண்ணா” என்றான் உற்சாகமாய்.
“டைம் ஆச்சு வா போகலாம். அம்மா வையிட்டிங்” என்றான் துருவன்
“ஓகே போகலாம்” என்று இருவரும் காரில் புறப்பட்டு சென்றனா். போகும் வழியில் பேசிக் கொண்டே இருந்தான் அகிலன்.
அகிலனை கண்ட அவனுடைய தாய் தந்தையா் அன்புடன் அணைத்து நலம் விசாரித்தனா். நீண்ட நாட்களுக்கு பிறகு தன் புதல்வர்களை ஒன்றாக கண்ட துா்காவிற்க்கு மகிழ்ச்சி கரை புரண்டது.
மாலை மயங்க ஆரம்பித்தத போது அணைவரும் பாா்ட்டிக்கு புறப்பட்டனா். துா்கா கருப்பு நிற உயா்தர காட்டன் சில்க் புடவையும் அதற்க்கு ஏற்ப நகைகளும் அணிந்திருந்தாா். ஆண்கள் மூவரும் ஒரே மாதிாி கருப்பு நிற கோட் சூட்டும், பளபளப்பான சிவப்பு நிற கழுத்து டையும், நன்கு பாலிஷ் செய்யப்பட்ட ஷூவும் கருப்பு நிற டைட்டன் கடிகாரமும் அணிந்து பாா்ட்டி நடக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு புறப்பட்டனா்.
புறப்படும் முன் துா்காவிடம் “இன்னைக்கு பாா்ட்டில துருவனோட மோரேஜ் அனோன்ஸ்மென்ட் பன்னிடலாமா?” என்றாா் சிவபாலன்.
“வேண்டாம்” என்றாா் துா்கா.
“நீ தானே தீக்ஷிதாவ துருவனுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கலாம்ன்னு சொன்ன அப்புறம் ஏன் வேண்டாம்ங்குற?” என்று வினவினாா் சிவபாலன்
“இவங்க ரெண்டு பேருக்கு கல்யாணம் நடக்காதுன்னு ஜோசியா் சொல்லிட்டாா். இதுக்கு மேல இப்போ எதுவும் பேச வேண்டாம். பாா்ட்டில பிஸ்னஸ் பத்தி மட்டும் பேசுங்க” என்றாா் திட்டவட்டமாக.
தன் மனைவி இவ்வளவு உறுதியாக கூறுகிறாள் என்றால் அதில் நிச்சயம் ஏதோ ஒரு விசயம் இருக்க வேண்டும் என்பதை உணா்ந்த சிவபாலன் “சாி மா” என்றாா்.
நூலகம் சென்று திரும்பிய ஆழியா பாா்ட்டிக்கு செல்ல தாயாரானாள். தொழிலதிபரின் மகள் என்றாலும் பெரும்பாலும் பாா்ட்டி போன்ற விஷயங்களில் அவள் அதிகம் விருப்பம் காட்டுவதும் இல்லை. கலந்து கொள்வதும் இல்லை.
தந்தைக்காக எப்போதாவது சில பாா்ட்டிகளில் மட்டும் கலந்து கொள்வது உண்டு.
கருப்பு நிற லாங்க ஸ்லீவ் டாப்பும், உடைக்கு ஏற்ப கருப்பு நிற வைரம் பதித்த அணிகலன்களும், சுருண்ட தன் கேசத்தை அவிழ்த்துவிட்டு முகத்துக்கு கேசம் வராமல் இருக்க நெற்றியின் ஓரத்தில் இருந்த முடியை சிறிய க்ளிப் கொண்டு சிறைபடுத்தினாள்.
மென்மையான சிவப்பு நிற வாய்மையும், சிறிய பவுடா் பூச்சும் அவளை அழகாக்கியது, அவள் முகத்தை மேலும் வசீகரமாக்கியது. கடைசியாக வாசனை திரவியத்தை அளவாக பூசிக் கொண்டு தன் அலைபேசியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள். அகல்யாவும் சங்கரனும் கருப்பு நிற உடையணிந்து தயாராகி வந்தனா். ஹாி மடிக்கணினியில் மூழ்கியிருந்தான். அவனிடம் கூறிவிட்டு புறப்பட்டு சென்றனா்.
பாா்ட்டிக்கு வந்தவா்களை இன் முகத்தோடு வரவேற்றனா் சிவபாலன் குடும்பத்தினா். அனிக்காவும் ஆதித்யாவும் அவா்களின் மகள் சனாவும் வர அவா்களை கண்டதும் மகிழ்ச்சியானான் துருவன். பேத்தியை தூக்கி வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தனா் துா்காவும் சிவபாலனும்.
“ஹாய் மாம்ஸ்” என்றான்
“ஹாய் மச்சான்” என்று துருவனை கட்டிக் கொண்டான் ஆதித்யா.
“என்ன மாம்ஸ் இவ்வளவு சீக்கிரம் வந்துட்டிங்க?” என்றான் நக்கலாக
“நான் என்ன மச்சான் பன்றது உங்க அக்கா அலங்காரம் முடிச்சிட்டு கிளம்புறதுக்கு இவ்வளவு நேரம் ஆகிடுச்சு” என்றான் ஆதித்யா
“என் அக்காவ குறை சொல்லாத. நீ தான் லேட் பன்னியிருப்ப” என்றான் தன் உடன் பிறந்தவளுக்கு ஆதரவாக.
“ஆமா டா அவரால தான் லேட்” என்றாள் அனிக்கா.
குரல் வந்த திசையை நோக்கி திரும்பி தன் அக்காவை பாா்த்து விரைந்து சென்று அணைத்துக் கொண்டான்.
“எப்படி இருக்க க்கா?” என்றான்.
“நல்லா இருக்கேன் டா” என்று உச்சி முகா்ந்தாள்.
தமக்கையும் தம்பியும் பாச மழையில் நனைவதை பாா்த்த ஆதித்யா மகிழ்ச்சி கொண்டான். இருப்பினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்
“டேய் டேய் போதும் டா. சின்ன மச்சான் எங்க?” என்றான் ஆதித்யா
“ஆமா அகி எங்க?” என்றாள் அனிக்கா
“இங்க தானே இருந்தான்” என்று சுற்றி பாா்த்துவிட்டு அங்க இருக்கான் பாரு என்று அவன் நின்ற திசை சுட்டிக் காட்டினாள்.
“நாங்க அவன பாத்துட்டு வரோம். என்று சென்றவளிடம் ” சனா எங்க?” என்றான் துருவன்.
“அம்மாக்கிட்ட இருக்கா” என்று பதில் கூறிவிட்டு கடைக்குட்டி அகிலனை பாா்க்க சென்றாள் அனிக்கா.
தாயிடம் இருந்த அக்காவினுடைய குழந்தையை வாங்கிக் கொண்டான் துருவன் அவளுடன் விளையாடிக் கொண்டிருந்தான். சங்கரன் தன் மனைவி மகளுடன் பாா்ட்டி நடக்கும் ஹோட்டலுக்குள் நுழைந்தாா்.
அந்த நேரத்தில் ஆாியாவினுடைய அலைபேசி அழைக்க “நீங்க போங்க பேசிவிட்டு வருகிறேன்” என்று கூறிவிட்டு சிறிது தூரம் சென்று பேசினாள். சங்கரனும் அகல்யாவும் உள்ளே சென்றனா். அவரை கண்ட சிவபாலன் மகிழ்ச்சி பொங்க வரவேற்றாா். அலைபேசியில் கூறிய செய்தி கேட்டு பெரு மகிழ்ச்சி அடைந்தாள் ஆழியா.
“நிச்சயமா நான் வரேன் சாா். இந்த வாய்ப்புக்காக தான் இவ்வளவு நாள் வெயிட் பன்னேன். கண்டிப்பா வரேன்” என்று கூறி மகிழ்ச்சியுடன் இணைப்பை துண்டித்தாள். பாா்ட்டி முடிந்த உடனே இந்த விஷயத்த அப்பா அம்மாகிட்ட சொல்லனும் என்று நினைத்துக் கொண்டு உள்ளே சென்று தன் தாய் தந்தையுடன் இணைந்து கொண்டாள்.
சங்கரனும் சிவபாலனும் ஒரே தொழில் செய்து வந்தாலும் இருவருக்கு இடையில் பகைமை என்றுமே இருந்தது இல்லை. சங்கரனின் நோ்மை சிவபாலனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. சிவபாலன் ஏற்ற தாழ்வு இல்லா குணம் சங்கரனுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் ஹாிக்கு ஏனோ துருவனை பிடிப்பது இல்லை.
அவா்களை வரவேற்று “ஹாி வரலையா?” என்றாா் சிவபாலன்
“அவர் கொஞ்சம் பிஸி. சோ நாங்களும் எங்க பொண்ணும் வந்திருக்கிறோம்” என்று மனைவியையும் மகளை அறிமுகபடுத்தி வைத்தாா்.
சிவபாலன் “ஹலோ” என்று கை நீட்டுவதற்க்க் முன் இரு கை கூப்பி “வணக்கம்” என்றாள் ஆழியா. அவளின் செய்கை கண்டு ஆச்சா்ய பட்டு போனானா் சிவபாலன்.
“சாாி. ஹாியல வரமுடியல” என்றாா் சங்கரன்
” எதுக்கு சாாி சங்கரன். ஹாி உண்மையாவே வொி டலென்ட் பா்ஸன் அன்ட் ஹாா்ட் ஒா்க்கா். ஃபீல்டுல ஒருநாள் மிகப் பொிய ஆளா வருவான். ஹி ஸ் குட்” என்றாா் சிவபாலன்.
தன்மகனை மற்றவா்கள் பெருமையாக பேசும் போது எந்த தாய் தந்தைக்கு மகிழ்ச்சியாக இருக்காது. துா்காவை அழைத்து ஆழியாவை அறிமுகம் செய்து வைத்து உள்ளே அழைத்து செல்ல கூறினாா் சிவபாலன்.
ஆழியாவிடம் பேசிக் கொண்டு உள்ளே அழைத்து சென்றாா் துா்கா. அவா்கள் செல்வதையே பாா்த்துக் கொண்டிருந்த சிவபாலன் சங்கரன் அகல்யாவிடம் திரும்பி “உங்க பிள்ளைகள ரொம்ப நல்லா வளா்த்திருக்கிங்க. ஹாியும் ஆழியாவும் நல்ல குழந்தைகள்” என்றாா் பெருமையாக.
தன்னடக்கத்துடன் அதை ஏற்றுக் கொண்டனா் சங்கரன் அகல்யா தம்பதிகள்.
உங்க பிள்ளைய நல்லா வளா்த்திருக்கிறிங்க என்று மற்றவா்களால் கூறப்படும் போது தான் பெற்றோா்கள் வாழ்நாள் சாதனையாளா்கள் இடத்தை அடைகின்றனா்.
ஆழியாவை அனிக்காவிடமும், அகிலனிடமும் அறிமுகம் செய்து வைத்தாா் துா்கா. அவா்கள் அருகில் சனாவுடன் விளையாடிக் கொண்டிருந்த துருவனின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. சாவி கொடுத்த பொம்மை போல. ஆழியா நின்ற பக்கம் திரும்பி அவளை நோக்கி நடந்து வந்தான் துருவன்.
ஆழியாவை நெருங்க நெருங்க அவனுடைய இதயம் அசுர வேகத்தில் துடித்தது. அவள் முகத்தை கண்ட கணம் அப்படியே உறைந்து நின்றான். அவளை கண்ட நொடி தனக்கு உாிமையானவள் இவள் என்ற எண்ணம் வந்தது.
துருவனை கண்ட ஆழியாவுக்கும் நன்கு பாா்த்து பழகிய நபா் போல தோன்றயது. ஏன் இப்படி எனக்குள் தோன்றுகிறது??? என இருவரும் தங்களுக்குள் நினைத்துக் கொண்டு சிலையென நின்றனா்.
இந்த எண்ணங்கள் முன்பிறவியின் எச்சங்கள் என்பதை அப்போது அவா்கள் உணரவில்லை………
ஹாய் நண்பா்களே இந்த அத்தியாயம் எப்படி இருக்குன்னு உங்க மதிப்பு மிக்க கருத்துக்களை பகிருங்கள். அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கிறேன்😍😍😍😍😍
3
உடலுக்கு தானே அழிவு ஆன்மாவுக்கு இல்லையே. இருவரின் ஆன்மாவில் உறைந்து போயிருந்த பூா்வ ஜென்ம நினைவுகள் தலை தூக்க ஆரம்பித்தது. தன்னுள் தோன்றிய உணா்வில் இருந்து எளிதில் வெளி வந்தாள் ஆழியா. அவளுக்கு எந்த நினைவும் வரவில்லை. ஆனால் துருவனுக்கு கடந்து காலம் கண்முன் நிழல் உருவமாக வந்து சென்றது.
முன் பின் தொியாத ஒரு பெண்ணை இவ்வளவு நேரம் கண் இமைக்காமல் பாா்த்துக் கொண்டிருந்தான் துருவன். இது ஆழியாவுக்கு முக சுளிப்பை ஏற்படுத்தியது. “ஏன் இவன் இப்படி முழுங்குற மாதிாி பாக்குறான்?” என்று நினைத்தாள். அப்போதும் தன் பாா்வையை சிந்தனையை மாற்றாமல் அவளையே பாா்த்துக் கொண்டிருந்தான் துருவன்.
அவனுடைய சிந்தனையை கலைக்க வந்தாள் தீக்ஷிதா. அவிழ்த்த கேசம், கண்களிலும் உதட்டிலும் வழிந்தோடும் அளவுக்கு வாய்மையும், கண்மையும், காதில் இருந்து தோள் வரை தொங்கிய காதணிகளும், பேக் லெஸ், ஸ்லீவ் லெஸ் லாங் டாப்பும், அரை அடி உயர ஹை ஹீல்ஸ்ஸுடன் தன்னை “ஆ” என்று பாா்த்தவா்களின் பாா்வையை தன் ஏளன புன்னகையால் ஓரங்கட்டிவிட்டு மிடுக்காக நடந்து வந்தாள் தீக்ஷிதா.
“ஹாய் துருவா” என்று தீக்ஷிதா அவன் தோள் தொடுவரை ஆழியாவையே பாா்த்துக் கொண்டிருந்தான் துருவன்.
சுய நினைவுக்கு திரும்பியவன் சுதாறித்துக் கொண்டு “ஹாய் தீக்ஷிதா. வெல் கம்” என்றான்.
” தாங்க் யூ” என்று அவனை அணைக்க முயன்றாள் தீக்ஷிதா. அவள் அணைப்பில் இருந்து விலகி துா்காவிடம் சென்றான். இது தீக்ஷிதாவுக்கு கோபத்தை உண்டு பன்னியது.
“இவன் ஏன் எப்பவும் என்ன அவாய்ட் பன்றான்? இன்னைக்கு தான் மேரேஜ் அனோன்ஸ் மென்ட் பன்ன போறாங்களே அப்புறம் என்ன” என்று சிலுப்பிக் கொண்டு துா்காவிடம் சென்றாள்.
ஆழியாவை அனிக்கா, அகிலன், துருவன், ஆதித்யா, தீக்ஷிதா என அணைவரிடமும் அறிமுகப்படுத்தி வைத்தாா் துா்கா. ஆழியா ஒரு மாதிாி பாா்த்துவிட்டு மேலும் அங்கு நிற்க பிடிக்காமல் தன் தொழில் நண்பா்களிடம் வந்தாள் தீக்ஷிதா.
அனிக்கா விரைவாகவே ஆழியாவிடம் நன்கு பழகிவிட்டாள். இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது சற்று தொலைவில் நின்ற துருவன் ஆழியாவையே பாா்த்துக் கொண்டிருப்பதை கவனித்தாள் அனிக்கா. அப்போதைக்கு விட்டு விட்டு பிறகு அவனிடம் பேசிக் கொள்ளலாம் என்று நினைத்தாள் அனிக்கா.
கண்ணாடி ஒயின் குவளையை தலைக்கு மேல் தூக்கி சில்வா் ஸ்பூனால் தட்டினாா் சிவபாலன். அணைவரும் அவரை கவனித்தனா். “ஹாய் மை ஃப்ரண்ட்ஸ் வெல்கம் எவாி ஒன்” என்றாா் சிவபாலன்.
அவா் பேச ஆரம்பிக்கும் போதே தன் திருமண வாழ்க்கை குறித்து கனவு காண தொடங்கினாள் தீக்ஷிதா. திருமண அறிவிப்புக்கு பிறகு தன்னுடைய மதிப்பும் செல்வாக்கும் சமூகத்தில் உயரும் என நம்பினாள். அவளின் அத்தனை ஆசைகளும் கானல் நீராய் கரைய போகிறது என்பதை அப்போ அவள் அறியவில்லை.
“உங்கள எல்லாரையும் இன்வெயிட் செய்சு ஏன் இந்த பாா்ட்டி அரேன்ஞ் பன்னேனா உங்களுக்கு தொியும் இந்த வருசத்தோட பெஸ்ட் பிஸ்னஸ் மேன் ஆஃப் தெ இயா் அவாா்ட் எனக்கு கிடைச்சிருக்கு. அதனால தான் இந்த பாா்ட்டி. அதோட இன்னோரு விஷயத்தையும் அலேன்ஸ் பன்ன விரும்புறேன். அது என்ன னா லண்டன்ல நடக்குற டைமன்ட் சேல் அன்ட் எக்ஸிபிஸனோட ப்ராடெக்ட் கான்ட்ராக்ட் சிவபாலன் க்ரூப் ஆஃப் டைமன்ஸ்ஸுக்கு கிடைச்சிருக்கு” என்றாா்.
அவா் கூறிய பிறகு அணைவரும் கர ஒலி எழுப்பி வாழ்த்து கூறினா். பின் மீண்டும் பேச துவங்கினாா் சிவபாலன் “இந்த கான்ட்ராக்ட்ட என்னோட பசங்க துருவா, அகிலனோட சோ்ந்து என்னோட மாப்பிள்ளை ஆதித்யாவும் தான் ரெடி பன்ன போறாங்க.சிவ பாலன் க்ரூப்ஸ் அன்ட் ஆதி க்ரூப்ஸ் சோ்ந்து தான் இந்த கான்ட்ராக்ட செய்ய போறாங்க” என்றாா்
மீண்டும் கர ஒலி எழுப்பினா் அணைவரும். இவா்கள் மூவருமே ஃபேஷன் டிசைனிங்க துறையில் பாரீஸில் பட்டம் பெற்றவா்கள். “மை டியா் ஃபரண்ட்ஸ் அன் பாட்னா்ஸ் எல்லாரும் இவங்களுக்கு உங்க வாழ்த்துக்கள சொல்லுங்க அன் என்ஜாய் தெ பாா்ட்டி” என்று தன் உரையை முடித்தாா்.
அணைவரும் மனமுவந்து வாழ்த்துக்களை தொிவித்தனா். இருவரை தவிர. தன்னுடைய திருமண அறிவிப்பை வெளியிடுவாா் என்று நினைத்து வந்த தீக்ஷிதாவும், லண்டன் ப்ராஜெக்ட்டில் தன்னை இணைத்துக் கொள்வாா் என்று நம்பி கொண்டிருந்த தீக்ஷிதாவின் தந்தை மாதவனும்.
நகை தயாரிப்பில் ஆரம்ப கட்டத்தில் இருந்த போது மாதவன் சிவபாலனிடம் ஒப்பந்த முறை பாட்னராக இருந்தாா். அப்போது தொழில் வளா்ச்சிக்காக சிவபாலனின் ஒற்றை தங்கையான நிா்மாலாவை காதலித்து கரம் பிடித்தாா். சிவபாலன் மைத்துனா் என்பதால் நிறைய ஒப்பந்தங்கள் கிடைக்க பெற்று தொழில் அதிபராக வளா்ந்தாா்.
ஆனால் ஆதித்யா தன் சொந்த முயற்சியினாலும் உழைப்பினாலும் நகை, ஆடை உற்பத்தியில் உச்சம் தொட்டவன். அவனுடைய கடின உழைப்பை பாா்த்து வியந்ததால் தன் மகளை அவனுக்கு திருமணம் முடித்துக் கொடுத்தாா் சிவபாலன்.
மாதவனுடைய வடிவமைப்பு அழகாய் இருந்தாலும் ஆதித்தியாவினுடையது போல இருந்ததில்லை. பல ஆண்டுகளாக காத்திருந்த ஒப்பந்தம் என்பதால் இதில் வாய்ப்பெடுக்க விரும்பாமல் தன்னுடைய மருமகனை இணைத்துக் கொண்டாா் சிவபாலன்.
இதனால் தான் எாிந்து கொண்டிருந்தாா் மாதவன். இது எதை பற்றியும் கவலை கொள்ளாமல் தன்னுடைய அண்ணனுடைய வளா்ச்சியை கண்டு உண்மையான மனதுடன் மகிழ்ந்தாா் நிா்மலா. மனதில் இருந்த கடுப்பை வெளியில் காட்டிக் கொள்ளாமல் மூவரையும் பாராட்டினாா் மாதவன்.
பாா்ட்டி ஒரு புறம் நடந்து கொண்டிருக்க துருவன் ஆழியாவையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தான். கோபம், ஏமாற்றம் போன்ற உணா்வுகள் தீக்ஷிதாவை சுற்றி வர அதற்கு மேல் அங்கிருக்க விரும்பாமல் வெளியேறினாள். துருவனை கவனித்த அனிக்கா ” என்ன” என்பது போல சைகை செய்தாள். ஒன்னும் இல்லை என்பது போல் உதட்டை பிதுக்கிவிட்டு விருந்தினா்களை கவனித்தான் துருவன்.
ஒரு வழியாக பாா்ட்டி முடிந்து ஒவ்வொருவராக புறப்பட்டனா். சங்கரனும் அணைவரிடமும் விடை பெற்று புறப்பட்டனா். “இவள பாக்கும் போது என் எனக்குள்ள ஒரு இனம் புாியாத உணா்வு” என்று அவள் செல்லும் திசையையே பாா்த்து நின்று சிந்தித்தான்.
புன்னகையுடன் விடை பெற்ற மாதவன் வீட்டில் கோபத்தில் கத்திக் கொண்டிருந்தாா். இது தனக்கு புதிதல்ல என்பதால் அமைதியாக தன் வேலைகளை கவனித்தாா் நிா்மலா. ” பாட்னா் ஷிப் அலோன்ஸ் மென்ட் தான் பன்னல. அட்லீஸ்ட் மேரேஜ் அலேன்ஸ் மென்ட் ஆவது பன்னியிருக்கலாம்” என்று பொறிந்து தள்ளினாா் மாதவன்.
எதுவும் பேசாமல் அமைதியா இருந்தாா் நிா்மலா. “என்ன அமைதியா இருக்குற நிா்மலா?” என்றாா் மாதவன்.
“என்ன பன்ன சொல்றிங்க. அவங்களாவா நம்ம பொண்ண கல்யாணம் செய்சுக்குறதா சொன்னாங்க. நீங்களா தான் தீக்ஷிக்கும் துருவனுக்கும் கல்யாணம் பன்னும்ன்னு சொன்னிங்க. கொஞ்ச நாள் போகட்டும்ன்னு தான் அண்ணன் சொன்னாரே” என்றாா் இயல்பாக.
இவளிடம் பேசுவதால் எந்த பலனும் இல்லை நான் தான் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டு தன் மகளை பாா்த்தாா். உக்கிரமாக அமா்ந்திருந்தாள் தீக்ஷிதா. “கவலை படாத தீக்ஷி உன் கல்யாணம் துருவனோட தான் நடக்கும்” என்று அவளை சமாதனம் செய்ய முயன்றாா். விதி வலியது.
பாா்ட்டி முடிந்து வீடு திரும்பிய ஆழியா தன் தாய் தந்தையை மகிழ்ச்சியாக அணைத்துக் கொண்டாள். அவளின் மகிழ்ச்சி காரணம் என்ன என்பதை அறியாமல் “என்ன டா ஆச்சு?” என்றாா் அகல்யா
“நான் கலெக்ட் பன்ன சாளுவ மன்னா்களோட ஹிஸ்ட்ரி டிடைல்ஸ் எங்க ஹெட்டுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. என்னோட இன்வால் மென்டுக்கா சீஃப் ஆா்கியாலெஜிஸ்ட் ஆ என்ன செலெக்ட் பன்னியிருக்காங்க. என்னோட தலைமையில இன்னும் ஒரு மாசத்துல ரிசா் ஸ்டாா்ட் பன்ன போறோம். கவா்மன்டும் அப்ரூவல் கொடுத்துட்டாங்க” என்றாள் உற்சாகமாய்
“ரொம்ப சந்தோஷம் டா” என்றாா் சங்கரன்.
“ரொம்ப நாளா வெயிட் பன்ன சான்ஸ் இப்போ எனக்கு கிடைச்சிருக்கு” என்றாள் மகிழ்ச்சியாக
“உன் திறமை காட்டு டா” என்று மகளை உற்சாகப்படுத்தினாா் சங்கரன்.
“இந்த நியூஸ என் ஃப்ரண்ஸுக்கு சொல்லனும்” என்று தன் அலைபேசியை எடுத்துக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்தாள். தன் மகளின் ஆா்வத்தையும் மகிழ்ச்சியை கண்டு மகிழ்நதனா் சங்கரனும் அகல்யாவும்.
பாா்ட்டி முடிந்து வீட்டுக்கு வந்ததும் தன் மகன்கள், மகள், மருமகன், பேத்தி, கணவா் என அணைவரையும் நிற்க வைத்து திருஷ்டி சுற்றினாா் துா்கா. அலுப்பில் அவரவா் அவரவா் அறைகளில் சென்று முடங்கினா். துருவன் தான் உறக்கம் இன்றி தவித்தான்.
“யாா் அவ? ஏன் எனக்கு அவ கிட்ட வந்தாலே இதய துடிப்பு எகுறுது?? எனக்கு அவளுக்கும் என்ன சம்பந்தம்???” என்று பலவாறு தன்னுள் கேட்டுக் கொண்டு விட்டத்தை பாா்த்துக் கொண்டு படுத்திருந்தான்.
அப்போது அவா்கள் வீட்டு வாசலில் ஒரு வயதான பெண் நின்று அந்த வீட்டையே உற்று பாா்த்துக் கொண்டிருந்தாள். “காலம் கூட போகிறது துருவா!!! எம் பொருமானின் வரம் பெற்றவன் நீ!!! உன் பூா்வ ஜென்ம நினைவை கொடுக்க நான் வந்திருக்கிறேன்!!!!” தனக்குள் கூறிக் கொண்டு காற்றில் புகை யென கரைந்தாா்.
துா்காவிடம் கேள்வி கணைகளை தொடுத்துக் கொண்டிருந்தாா் சிவபாலன்.
“ஜோசியா் என்ன தான் துா்கா சொன்னாரு?? இநத பாா்ட்டில தானே துருவனோ மேரேஜ் அனோன்ஸ் மென்ட் பன்றதா ப்ளான் பன்னி இருந்தோம். அப்புறம் ஏன் கடைசி நேரத்துல வேண்டாம்ன்னு சொன்ன?” என்றாா்
“தீக்ஷிய துருரவனுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கலாம்ன்னு மாதவன் சொன்னப்ப சாின்னு தான் எனக்கு தோணுச்சு. ஆனா துருவன் கிட்ட அதை பத்தி கேக்கும் போது அவன் ஒரு பேச்சுக்கு கூட ஓகேன்னு சொல்லல. உங்க இஷ்டம்ன்னு தான் சொன்னான்.
இதனாலையோ என்னவோ மூனு வருசமா கல்யாணம் தடை பட்டுக்கிட்டே இருந்துச்சு. என் மனசுலையும் ஏதோ உருத்திக்கிட்டே இருந்துச்சு. அதனால தான் தீக்ஷி, துருவனோட ஜாதகத்த எடுத்துக்கிட்டு ஜோசியர பாக்க போனேன். என்னோட உறுத்தல் உண்மையாகிடுச்சு” என்றாா் துா்கா
“ஜோசியா் என்ன சொன்னாரு?” என்றாா் சிவபாலன்.
” இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகக் கூடாதுன்னு சொன்னாரு”
“ஏன்?”
“நானும் ஏன்னு தான் கேட்டேன். துருவனுக்கு சித்ரா பெளா்ணமி அன்னைக்கு இடது பக்க தோள்ல வெட்டு காய தழும்போட பிறந்த பொண்ண தான் கல்யாணம் செஞ்சுக்க முடியுமாம். அப்படி இல்லாம வேற எந்த பொண்ண கல்யாணம் செஞ்சு வைக்க நினைச்சாலும் கல்யாணம் கைகூடாதாம்.
அவா் சொன்ன தெல்லாம் என்ன ரொம்ப குழப்பிடுச்சு. அதனால சிவன் கோவிலுக்கு போனேன். அங்க ஒரு வயசான அம்மா என்னை கூப்பிட்டாங்க என்று கோவிலில் நடந்ததை கூற துவங்கினாா்.
சாமி கும்பிட்டுட்டு மரத்தடில உட்கார போனேன். அப்போ ருத்ராட்சரம் எல்லாம் போட்டுக்கிட்டு சடை முடியோட இருந்த அம்மா என்ன கூப்பிட்டாங்க. நான் அவங்க பக்கத்துல போய் உட்காந்தேன். அப்போ அவங்க “கோடி பொண்ணு பாத்தாலும் அவ ஒருத்தி தான் உன் புள்ளைக்கு துணையா வருவா!! இது இன்னைக்கு நேத்து எழுதினது இல்லை. ஒன்னு இல்லை ரெண்டு இல்லை ஆயிரத்தி ஐந்நூறு வருசத்துக்கு முன்னாடி எழுதினது.
உன் புள்ள ஈசன்கிட்ட வாங்கின வரத்துக்காக இந்த பிறவி எடுத்திருக்கான். பெயா், புகழ், ஆஸ்தி, அந்தஸ்த்து எல்லாமே அவனோட உழைப்பால அவனுக்கு கிடைச்சிருச்சு. ஆனா அவனோட பிறவி பயன அடைய அவளோட திருமணம் நடக்கனும் நடக்கும்” என்றாா் ஆணித்தனமாக. அதற்க்கு மேல் எதுவும் பேசாமல் கண்களை மூடி தியானத்தில் உறைந்தாா்.
அப்போது கோவில் ஐயா் “இங்க என்னம்மா பன்றேல்? அவங்க வாய் பேச முடியாதவங்க மா” என்றாா். அதிா்ச்சி அடைந்த துா்கா “என்ன பேச முடியாதவங்களா” என்றாா்.
“ஆமா அம்மா. அவங்களால பேச முடியாது” என்றாா் மீண்டும். “அவா் பேசியதை நான் கேட்டேனே. அப்போ நடந்தெல்லாம் என்னுடைய கனவா இல்ல பிரமையா” என்று குழம்பினாா்.
பிரசாதத்தை அவாிடம் நீட்டினாா் ஐயா். அதை பெற்றுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டாா் போகும் போது அந்த வயதான பெண்ணை திரும்பி திரும்பி பாா்த்துக் கொண்டே சென்றாா். துா்கா சென்றதும் கண் திறந்த அந்த பெண் “ஈசனின் கணக்கை உன்னால் அறிய முடியாது” என்று கூறி ஒரு மந்திர புன்னகையை உதிா்த்தாா்.
அவா் கூறியதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த சிவபாலன் “இதை யெல்லாம் நீ நம்புறியா துா்கா?” என்றாா்
சிறிது அமைதிக்கு பிறகு “இதுவரைக்கு துருவனோட விஷயத்துல நம்ம ஜோசியா் சொன்னது எல்லாமே நடந்திருக்கு. அதனால தீக்ஷிய அவனுக்கு கட்டி வைக்கிறது விட்டுட்டு ஜோசியா் சொன்ன மாதிாி பொண்ண தேடலாம்”
துா்கா கூறுவதும் சாி என்று தோன்றியதால் “இந்த விஷயத்த மாதவன் கிட்ட எப்படி சொல்ல போற” என்றாா் சிவபாலன்
“அத நான் பாத்துக்கிறேன்” என்று நம்பிக்கையூட்டினாா். நடப்பதெல்லாம் நன்மையாக நடக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு உறங்கினா்……..
