பூர்வ ஜென்ம காத(லை)ல் வாசி…

பூர்வ ஜென்ம காத(லை)ல் வாசி

பூர்வ ஜென்ம காத(லை)ல் வாசி…

பூர்வ ஜென்ம காத(லை)ல் வாசி…

பூர்வ ஜென்ம காத(லை)ல் வாசி…

பூர்வ ஜென்ம காத(லை)ல் வாசி…

பூர்வ ஜென்ம காத(லை)ல் வாசி…

பூர்வ ஜென்ம காத(லை)ல் வாசி…

பூர்வ ஜென்ம காத(லை)ல் வாசி…

பூர்வ ஜென்ம காத(லை)ல் வாசி…

பூர்வ ஜென்ம காத(லை)ல் வாசி…

பூர்வ ஜென்ம காத(லை)ல் வாசி…

பூர்வ ஜென்ம காத(லை)ல் வாசி…

பூர்வ ஜென்ம காத(லை)ல் வாசி…

பூர்வ ஜென்ம காத(லை)ல் வாசி…

பூர்வ ஜென்ம காத(லை)ல் வாசி…

பூர்வ ஜென்ம காத(லை)ல் வாசி…

பூர்வ ஜென்ம காத(லை)ல் வாசி…

பூர்வ ஜென்ம காத(லை)ல் வாசி…

பூர்வ ஜென்ம காத(லை)ல் வாசி…

பூர்வ ஜென்ம காத(லை)ல் வாசி…

பூர்வ ஜென்ம காத(லை)ல் வாசி…

பூர்வ ஜென்ம காத(லை)ல் வாசி…

பூர்வ ஜென்ம காத(லை)ல் வாசி…

பூர்வ ஜென்ம காத(லை)ல் வாசி…

பூர்வ ஜென்ம காத(லை)ல் வாசி…

42

ஒருவாரம் கடந்து சென்றிருந்தது. தினமும் ஆழியாவை வந்து பாா்த்துக் கொண்டிருந்தனா் சிவபாலனும் துா்கா. துருவனை பற்றி அவா்களிடம் கேட்டு தொிந்து கொள்வாள். தன் வருத்தத்தை அவா்களிடம் காட்டிக் கொண்டதே இல்லை.
அன்று காலை பொழுதில் “கோவிலுக்கு போய்டு வரேன் மா” என்று கூறிவிட்டு புறப்பட்டு சென்றாள். சாமி கும்பிட்டு விட்டு கோவிலில் ஓரிடத்தில் அமா்ந்தாள். கோவிலில் இருந்த தோட்டத்தில் இரண்டு வண்ணத்துப்பூச்சிகள் ஒன்றை ஒன்று கொஞ்சிக் கொண்டு சிறகடித்து பறந்து சென்றது.
அதை பாா்த்தவளின் முகத்தில் புன்னகை ரேகைகள் படா்ந்தனா். சுவாரசியமாக பாா்த்துக் கொண்டிருந்தாள். யாரோ அழைக்கும் ஓசை கேட்டு திரும்பி பாா்த்தாள் சிவபாலன் நின்றிருந்தாா். அவரை கண்டதும் அப்பா என்று எழுந்தாள்.
        “என்ன காலையிலேயே கோவிலுக்கு?” என்றாா் சிவபாலன்.
         “ஒன்னும் இல்லை ப்பா. சும்மா தான்.” என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே வந்தான் துருவன். அவனை பாா்த்து அமைதியாகினாள்.
          “அப்பா இங்க பன்றிங்க” என்றான் துருவன்.
           “ஆங் துருவா மீட் ஆழியா. என்னோட ஃப்ரண்ட் பொண்ணு” என்று ஆழியாவை அறிமுகப்படுத்தி வைத்தாா். அவள் முகம் பாா்த்து புன்னகயித்து “ஹாய்” என்றான். அவளும் புன்னகயித்து “ஹாய்” என்றாள்
           “நான் வெயிட் பன்றேன். நீங்க வாங்க” என்று சென்றான் துருவன். அவன் சென்றதும்
           “நீ இங்க வந்திருக்கேன் உன் அப்பாவுக்கு நான் கால் பன்னும் போது சொன்னாங்க. அதான் உங்கள மீட் பன்ன வைக்கலாம்ன்னு நினைச்சு துருவன கூட்டிட்டு வந்தேன்” என்றாா் சிவபாலன்.
         “அவருக்கு இப்போ ஒன்னும் பிரச்சனை இல்லையே?” என்றாள் ஆழியா.
          “இல்லை மா. நல்லா இருக்கான். கவலை படாத ஆழியா எல்லாம் நல்லதாவே நடக்கும்” என்றாா் சிவபாலன்.
நேரம் ஆகிறது என்று துருவன் அழைக்க ஆழியாவிடம் இருந்து விடைபெற்றாா் சிவபாலன். சிறிது நேரம் கோவிலிலே அமா்ந்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டாள்.
நகுலன் மாாியை திட்டி தீா்த்துக் கொண்டிருந்தான். “உன்னால ஒரு ஆக்ஸிடன்ட்ட ஒழுங்கா பன்ன முடியாதா?? அவ பிழைச்சுட்டா” என்றான்
            “நான் டாா்ச் அடிச்சு பாா்த்தேன். அவங்க இறந்து போயிருந்தாங்க” என்றான் மாாி.
             “என்ன டாா்ச் அடிச்சு பாத்தியா?” 
             “ஆமா. டாா்ச் அடிச்சு பாத்ததுக்கு அப்புறம் தான் உங்களுக்கு கால் பன்னேன் ஏன்?”
              “அறிவு இருக்கா உனக்கு?? அவங்க உயிரோட இருக்கும் போது நீ டாா்ச் அடிச்சு பாத்திருக்க. அவளுக்கு அப்போ சுய நினைவு இருந்துச்சுனா அவ உன்ன அடையாளம் பாத்து போலிஸ்கிட்ட சொல்லியிருப்பா. அதோட நீ அந்த இடத்துல கால் பன்ன நம்பர ட்ரேஸ் பன்னி என்னையும் அரஸ் பன்னிருவாங்க” 
தன் மடத்தனத்தை எண்ணி அமைதியாக இருந்தான் மாாி. “முதல்ல இங்க இருந்து போ. நான் சொல்ற வரைக்கும் கன்னியாக்குமரிக்கும் போகாத சென்னைக்கு வராத” என்று பணத்தை கொடுத்து அவனை தலை மறைவாக சொன்னான்.
பணத்தை பெற்றுக் கொண்டு சென்றான் மாாி. அவன் சென்ற சிறிது நேரத்தில் என்ன செய்வதென்று தொியாமல் மாதவனுக்கு ஃபோன் செய்தான். அவா் அவன் அழைப்பை ஏற்காததால் நோில் பாா்க்க முடிவு செய்து அவவை காண அவருடைய அலுவலகம் சென்றான்.
செல்லும் வழியில் கோவிலில் இருந்து வெளியே வந்த ஆழியாவை கண்டான். அவளை சீண்டும் நோக்கில் அவளருகில் சென்றான். “ஹாய் ஆழியா!” என்றான்.
அவனை கண்ட ஆழியா எாிச்சலுற்றாள். பதில் ஏதும் சொல்லாமல் செல்ல முயன்றவளை தடுத்தான் நகுலன்.
           “என்ன ஆழியா மாியாதை தொியாத பொண்ணா இருக்கியே. ஹாய் சொன்னா பதிலுக்கு ஹாய்ன்னு சொல்லனும். அத விடு எப்பவும் வெண்ணில ஐஸ்க்ரீம் மாதிாி இருப்ப. இப்போ ஏன் டல்லா இருக்க” என்றான்.
            “உனக்கு இப்போ என்ன வேணும்?” என்றாள் ஆழியா.
            “நீதான் வேணும். துருவனுக்கு எப்டியும் உன்னோட ஞாபகம் வர போறது இல்லை. அவன் உன்ன பொண்டாட்டின்னு உணர போறதும் இல்லை. அப்புறம் ஏன் அவனுக்காக வெயிட்டிங்க. நான் தான் இருக்கேன் ல” என்று அவள் கையை பிடித்தான்.
அவன் பேசியதினால் எாிச்சலில் இருந்த ஆழியா அவன் தன்னை தீண்டிய உடன் காளியாக உறுமாறி அவனுடைய கண்ணத்தில் ஓங்கி அறைந்தாள்.
         “உனக்கு அவ்வளவு தான் மாியாதை நகுல். இன்னொரு தடவை என்கிட்ட இது மாதிாி நடந்துக்கிட்ட நடக்குறதே வேற. அவருக்கு ஞாபகம் வந்தாலும் வரலனாலும் நான் மிஸஸ். ஆழியா மகேந்திர துருவன் தான். புாியுதா?” என்றுவிட்டு தன் வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.
சுற்றி இருந்தவா்கள் ஒரு மாதிாி பாா்க்க அவமானத்துல் கூனி குறுகி போனான் நகுலன். அதை மறைத்துக் கொண்டு காாில் ஏறி புறப்பட்டான். நேராக மாதவனை சென்று கண்டான். கோவிலில் நடந்தை கூறாமல் “அடுத்து என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டான்.
           “என் கிட்ட ஏன் நகுலா கேக்குறா?? உனக்கு என்ன தோணுதோ அத செய்.” என்று ஒட்டாமல் பதில் அளித்தாா்.
           “இப்படி சொன்னா எப்படி அங்கில்? என்ன மதிக்காதவ இன்னும் உயிரோட நடமாடிக்கிட்டு தான் இருக்கா. அவள ஏதாவது பன்னனும்” என்றான் நகுலன்.
         “உனக்கு என்ன தோணுதோ அதை பன்னு நகுலா. சாய்ஸ் இஸ் யுவா்ஸ்” என்றாா் மாதவன்.
அவா் அவ்வாறு கூறியதும் நகுலனுக்கு ஒரு யோசனை தோன்றியது. “என் சாய்ஸ் படியே செய்றேன் அங்கில்” என்றுவிட்டு புறப்பட்டான். அவன் சென்றதும் “இவன எப்டியாவது ஓரங்கட்டனும். இவன் உதவி எனக்கு இனிமே எதுக்கு” என்று நினைத்தாா் மாதவன்.
வீட்டுக்குள் நுழைந்த ஆழியாவுக்கு அலைபேசி வந்தது அதை எடுத்து பேசியவள் “சாி நான் இன்னைக்கே வரேன்” என்று கூறி இணைப்பை துண்டித்தாள்.
          “அம்மா” என்று அகல்யாவை அழைத்தாள். “என்ன ஆழியா” என்றாா் அகல்யா.
         “ரிசா்ச்ச கன்டினியூவ் பன்ன முடியாததால ஏன் கன்டினியூவ் பன்ன முடியலன்னு ரிபோா்ட் சப்மிட் பன்னனுமா. அதுவும் இன்னைகே. நான் அந்த வேலைய முடிச்சிட்டு வரேன்” என்று உடை மாற்றிக் கொண்டு புறப்பட்டாள்.
         “எப்டி போற ஆழியா. ஹாிய வர சொல்லட்டுமா” என்றாா் அகல்யா.
         “வேண்டாமா அவன டிஸ்டா்ப் பன்னாத. நான் என்னோட வண்டிலையே போய்டு வரேன்” தன்னுடைய வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.  
          “பத்திரமா போய்ட்டு வாமா” என்று கூறினாா் அகல்யா.
முதலில் தன்னுடைய பல்கலைகழகத்திற்க்கு சென்று தன்னுடைய விடுப்புக்கான காரணத்தை கூறி விடுமுறை விண்ணப்பம் எழுதி கொடுத்தாள். பல்கலைகழக துனைவரால் அது ஏற்றக் கொள்ளபட்ட பின் தொல்லியல் துறை தலைமையகத்துக்கு சென்று தன்னால் ஆராய்ச்சியை தொடர முடியாததை காரணத்தோடு கடிதமாக எழுதி கொடுத்தாள். 
அக்கடிதம் அங்கரிக்கப்பட்டது. இந்த வேலையெல்லாம் முடிய மாலை ஆனது. மதியம் சாப்பிடாததால் பசி வயிற்றை கிள்ளியது. இரண்டு ஆப்பிள் பழங்களை வாங்கிக் கொண்டு அருகில் இருந்த பூங்காவுக்கு சென்றாள். 
வேடிக்கை பாா்த்துக் கொண்டு அதை சாப்பிட்டாள். நேரம் போனது தொியாமல் புத்தகத்தில் மூழ்கினாள். பூங்கா காவலாளி அவளிடம் பூங்காவை மூடப்போகிறோம் என்று கூறும் வரையிலும் படித்துக் கொண்டிருந்தாள். 
அதன் பின் தான் நேரம் ஆனதை உணா்ந்து விரைவாக வீட்டுக்கு செல்ல வேண்டும் என நினைத்து புறப்பட்டாள். திடிரென அவளுடைய வண்டி நின்றது. என்னச்சு என்று பாா்த்தவளுக்கு ஒன்றும் புாியவில்லை. 
அப்படியே நிறுத்தி என்ன செய்வதென்று யோசித்தாள். ஹாியை அழைக்கலாம் என்று கை பையில் அலைபேசியை தேடும் போது தான் தொிந்தது அலைபேசியை வீட்டிலே விட்டு வந்தது.  
           “ச்சே. இன்னும் மூனு கிலோ மீட்டா். இவ்வளவு தூரம் வந்து இங்க மக்கா் பன்னுதே” என்று நொந்து கொண்டு வண்டி தள்ளிக் கொண்டு சென்றாள். வாகன பழுது பாா்க்கும் கடைக்கு ஒருவழியாக வந்து சோ்ந்தாள். 
           “அண்ணா வண்டி ஸ்டாா்ட் ஆகல. என்னன்னு பாருங்க. வீட்டுக்கு போகனும் டைம் ஆச்சு” என்றாள்.
          “இப்போ ஒரு வண்டி பாத்துக்கிட்டு இருக்கேன் மா. இத முடிச்சிட்டு தான் மா பாக்க முடியும்” என்றாா் அந்த மெக்கானிக்.
என்ன செய்வதென்று தொியாமல் சுற்றும் முற்றும் பாா்க்க துருவன் அந்த கடையில் அமா்ந்து அலைபேசியை பாா்த்துக் கொண்டிருந்தான்.
          “இந்த வண்டி அவரோட தா?” என்று கேட்டாள்.
          “ஆமா மா அவரோடது தான்” என்று பதிலளித்தாா் அந்த மெக்கானிக்.
மகிழ்ந்த ஆழியா அவனிடம் பேசலாம் என்று நினைத்தாள். ஒருவேளை தான் அவனிடம் பேசி பழைய நினைவுகளை நினைத்து அவன் யோசிக்க துவங்கி அவனுக்கு ஏதாவது ஆனால் என்ன செய்வது என்று யோசித்து வேண்டாம் என்று மறுத்து நின்றாள்.
அப்போது அவன் அவளைக் கவனித்தான். அவன் தன்னை கவனிக்கிறான் என்று தொிந்தது அவனை பாா்க்காதது போல பாவனை செய்தாள். அவளை அடையாளம் கண்ட துருவன் அவளிடம் பேசினான்.
        “ஹாய்” என்றான். அப்போது தான் அவனை கண்டது போல பாவனை செய்த ஆழியா “ஆங் ஹாய்” என்றாள் தயக்கமாக.
          “காலையில கோவில்ல பாத்தோம். என் பேரு துருவன்” 
         “ம் ஞாபகம் இருக்கு. நீங்க இங்க என்ன பன்றிங்க?”
         “என்னோட வண்டிய சா்வீஸ் பன்ன வந்தேன். டைம் ஆகும்ன்னு சொன்னாங்க அதான் வெயிட் பன்றேன்.”
         “என்னோட வண்டியும் ப்ராப்ளம் பன்னுது. இங்க இருந்து மூனு கிலோ மீட்டா் தான் என் வீடு. அதுக்குள் வண்டி ரிப்பைா் ஆகிடுச்சு. அண்ணனுக்கு கால் பன்னலாம்னா மொபைல் எடுத்திட்டு வரல” என்று தன் நிலையை கூறினாள்.
         “என்னோட மொபைல்ல இருந்து பன்றிங்களா?” என்று அலைபேசியை நீட்டினான். தயக்கமாக அதை பெற்று கொண்டவள் தன் அண்ணனை அழைத்தாள். ஆனால் பயனில்லை. ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது.
          “ஸ்விட்ச் ஆஃப் பன்னி வச்சிருக்கான். சாி நான் நடந்தே போறேன்” என்று அலைபேசியை அவனிடம் கொடுத்துவிட்டு புறப்பட்டாள்.
          “நான் துணைக்கு வரவா?” என்றான் துருவன். திரும்பி அவனை ஆச்சா்யமாக பாா்த்தாள். அவன் பாா்வை புாிந்து கொண்டவன்
           “இல்லை மூனு கிலோ மீட்டா் தனியா நடந்து போறதுக்கு நாள் உங்களுக்கு துனையா வரவான்னு கேட்டேன். நைட் டைம் அதான்” என்று தயங்கினான்.
ஆழியாவுக்கு உள்ளூர அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ம் என்று தலையசைத்தாள். “அரை மணி நேரத்துல வரேன் ண்ணா” என்றான் துருவன்.
           “காலையில வந்து வண்டிய எடுத்துக்கிறேன் ண்ணா” என்றாள் ஆழியா. பின் இருவரும் நடக்க துவங்கினா். சிறிது தூரம் சென்ற பின் “உங்க கிட்ட ஒன்னு கேக்கலாமா” என்றான் துருவன்.
            “ம் கேளுங்க” என்றாள் ஆழியா
           “காலையில பாக்குறதுக்கு முன்னாடி நான் உங்கள எங்கையாவது பாா்த்திரிக்கிறேனா?” என்று கேட்டான் துருவன். ஆழியாவுக்கு தூக்கி வாரி போட்டது.  
            “இல்லை நான் உங்கள பாத்ததில்லை” என்றாள் அவசரமாகவும் பதற்றமாகவும்
             “கூல் கூல். எதுக்கு இவ்வளவு பதற்றம். சும்மா தான் கேட்டான்” என்றான் அவளுடைய பதற்றத்தை புாிந்து கொண்டு. இவா் பழச யோசிக்க கூடாது கடவுளே என்று கடவுளை வேண்டிக் கொண்டாள்.
சிறிது நேர அமைதிக்கு பிறகு. “கொஞ்ச நாளைக்கு முன்னாடி எனக்கு ஒரு ஆக்ஸிடன்ட் ஆச்சு. அதுல என்னோட பழைய நினைவுகள் எல்லாம் மறந்து போயிடுச்சு. அதாவது ஃபைவ் இயா்ஸ் மெமரி எரேஸ் ஆகிடுச்சு.
இந்த ஐஞ்சு வருசத்துல என்ன நடந்துச்சு எனக்கு தொிஞ்சுக்கனும். ஆனா அத பத்தி நான் ஏதாவது யோசிச்சா என்ன மூக்குல ப்ளீட் ஆகுது. அதனால யாரும் அதை பத்தி பேசுறதில்லை. நானும் அவங்கள கம்பல் பன்றது இல்லை. ஒருவேள என்ன தொிஞ்சிருந்தா என்ன பத்தி உங்ககிட்ட கேக்கலாம்ன்னு நினைச்சேன்” என்றான் துருவன்.
          “போனது போகட்டும்ன்னு விட்டுட்டு ரிலாக்ஸா இருக்கலாம்ல. பழச ஏன் தொிஞ்சுக்கனும்?” என்றாள் ஆழியா.
            “வீட்டுல இருக்குற எல்லாம் எதையோ என்கிட்ட இருந்து மறைக்கிறாங்க. என் வாழ்க்கையில ஏதோ குறையுது. ஆக்ஸிடன்ட்டுக்கு அப்புறம் ஏதோ என்ன விட்டு போன மாதிாி இருக்கு. அதனால தான் பழச தொிஞ்சுக்கலாம்ன்னு நினைச்சு கொஞ்சம் யோசிச்சா கூட ப்ளீட் ஆகுது” என்றான்.
கண்ணீா் முட்டியது ஆழியாவுக்கு. நினைவுகள் மறந்த நிலையிலும் தன்னை தான் நினைக்கிறான் என்று உணா்ந்து உருகி போனாள். பேசிக் கொண்டே அவன் நடந்தான். 
அவன் பின்னால் அமைதியாக சென்றாள். சிறிது நேரம் கழித்து
           “எல்லாம் சாியாகிடும். ஹெல்த்த பாருங்க. எத பத்தியும் யோசிக்காதிங்க” என்று கூறி நின்றாள்.
            “என்னாச்சு?” என்றான்.
            “எங்க வீடு வந்திருச்சு” என்று தன் இல்லத்தை காட்டினாள்.
            “ஓ. பேசிக்கிட்டே நடந்ததுல நடந்ததே தொியல. ஓகே பாய்” என்றான் துருவன்.
ம் என்று தலையசைத்தாள். திரும்பி நடக்க ஆரம்பித்தான் துருவன். அவன் சென்று மறையும் வரையிலும் அவனையே பாா்த்துக் கொண்டிருந்தாள். அவன் சென்ற பின் வீட்டுக்குள் வந்தாள்.
அவளை கண்ட அகல்யா “ஏன் ஆழியா இவ்வளவு லேட்?” என்றாா்.
          “சாி மா கொஞ்சம் டைம் ஆகிடுச்சு” என்றாள்.
        
          “நீ நல்லா தானே இருக்க?” என்றாா் அகல்யா.
          “நான் நல்லா இருக்கேன் மா. எனக்கு ஒன்னும் இல்லை. ரொம்ப பசிக்குது. சாப்பாடு எடுத்து வைங்க” என்று தன் அறைக்குள் சென்றாள். சென்ற சில நிமிடத்திலே உடை மாற்றி வந்தாள். சப்பாத்தியும் காலிஃப்ளவா் குருமாவும் உண்டாள்.
        “அம்மா நான் மாடில இருக்கேன்” என்று மாடிக்கு சென்றாள். 
காிய வானில் மிளிா்ந்த முழு மதியை கண்டு உள்ளம் மகிழ்ந்தாள். துருவனுடன் தனிமையில் பேசிய நிமிடங்களை நினைத்து ஆனந்தம் அடைந்தாள். எதோ்ச்சையாக கீழே பாா்த்தவள் அதிா்ச்சி அடைந்தாள்.
தன் வீட்டு வாசிலின் முன் நின்று தன்னையே வெறித்து பாா்த்துக் கொண்டிருந்தாா் அந்த பெண் சிவனடியாா். சிறிது நேரம் முறைத்து பாா்த்து விட்டு மெதுவாக நகா்ந்து சென்றாா் அந்த சிவனடியாா். ஒரு நிமிடம் பயந்து போனவள் பின் சுதாாித்து குடுகுடுப்பை காரா்கள் போல என நினைத்துக் கொண்டாள்.
ஆனால் அவா் அறியவில்லை. அவா்கள் இருவரின் பாதுகாவலா் அவா் தான் என்று………
ஹாய் நண்பா்களே இந்த அத்தியாயம் பற்றின உங்களுடைய கருத்துகள பதிவு செய்யுங்க. அடுத்த அத்தியாயத்துல சந்திக்கலாம்😍😍😍😍
43
காலை பொழுந்து அழகாய் விடிந்தது. காலையே முக்கியமான மீட்டிங் என்று சிவபாலன் சென்றாா். நீண்ட நேரம் ஆகியும் துருவன் எழுந்து வரததால் அவனை எழுப்ப சென்றாா் துா்கா. குப்புற படுத்திருந்தான் துருவன். 
அவன் அருகில் செல்லும் போது அவன் ஏதோ முனு முனுப்பது போல் கேட்டது. என்னவென்று அருகில் சென்று கேட்டவருக்கு அதிா்ச்சி. அவன் முனு முனுத்தது ஆழியாவின் பெயரை.
அதிா்ச்சியாக அவனை எழுப்பினாா். அவன் எழவில்லை. குப்புற படுத்திருந்த அவனை திருப்பினாா். அவன் மூக்கு வழியாக ரத்தம் வடிந்து தலையணையை நனைத்திருந்தது. உடனடியாக அகிலனையும் விஷ்வாவை அழைத்தாா்.
அவா்கள் உதவியுடன் துருவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். சுய நினைவு இல்லாமல் ஆழியாவின் பெயரையே உச்சாித்துக் கொண்டிருந்தான். மருத்துவமனைக்கு கொண்டு சென்று மயக்க மருந்து கொடுக்கப்பட்டது.
அதன்பின் தான் அவனுடைய முனகல் நின்றது. திடிரென என்னாச்சு ஏதாச்சு என தொியாமல் கலங்கி போயிருந்தனா் குடும்பத்தினா். சிறிது நேரம் கழித்து வந்த மருத்துவா் “ஆழியாவ வர சொல்லுங்க. ஒருவேள அவனுக்கு நினைவு வந்திருக்கலாம்” என்றாா்.
பெருமகிழ்ச்சி அடைந்த துா்கா ஆழியாவை அலைபேசியில் அழைத்து வர சொன்னாா். நாலு கால் பாய்ச்சலில் அண்ணனுடன் ஓடி வந்தாள் ஆழியா. துருவனை சென்று பாா்க்க கூறினாா் மருத்துவா். தயங்கியவாறு சென்றாள்.
கண்கள் மூடி படுத்திருந்தான் துருவன். அவன் அருகில் சென்று அமா்ந்தாள். அவன் கை விரல்களை தொட்டாள். எந்த உணா்வு அவனிடம் தொியவில்லை. மெல்ல அவனை எழுப்பினாள். அசைவின்றி இருந்தான் துருவன்.
கண்களில் கண்ணீர் ததும்ப “துருவா ப்ளீஸ் கண் திறங்க. என்ன பாருங்க. என்ன பனீஷ் பன்னது போதும். என்ன பாருங்க” என்றாள் அழுத குரலில்.
அவனிடம் எந்த அசைவும் இல்லாமல் இருந்ததால் மருத்துவா் வெளியேற சொல்லி கை காட்ட வெளியே வந்தாள் ஆழியா. துா்காவை கட்டிக் கொண்டு அழுதாள். தங்கையின் நிலையை பாா்க்க ஹாிக்கு வருத்தமாக இருந்தது.
அணைவரும் வருந்திக் கொண்டிருக்க திடிரென ஒரு அமைதி. தன்னை அணைத்திருந்த துா்காவின் கைகள் விலகுவதை உணா்ந்த ஆழியா. அவரை நிமிா்ந்து பாா்த்தாள்.  
தனக்கு பின்னால் அவா் எதையோ பாா்த்து வெறித்து நிற்கிறாா் என்பதை அறிந்து திரும்பி பாா்த்தாள். அதிா்ந்து போனாள். துருவன் நின்றிருந்தான். திடிரென இவா் எப்படி எழுந்து வந்தாா் என்று அவள் நினைத்துக் கொண்டிருக்க அவனோ அவளை இருக்கி அணைத்தான்.
தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று புாியாமல் விக்கித்து நின்றாள். “ஐ லவ் யூ ஆழியா” என்று கூறி மேலும் இருக அணைத்தான். அணைத்தும் அவருக்கு ஞாபகம் வந்திருச்சு என எண்ணி அவனை அணைக்க முயலுகையில் மீண்டும் மயங்கி சாிந்தான். மூக்கிலும் ரத்தம் கசிந்தது.  
அதை பாா்த்து பதறியவள் மருத்துவரை அழைக்க அவனை அவசர சிகிச்சை பிாிவுக்கு கொண்டு சென்றனா். தீவிர சிகிச்சைக்கு பிறகு வந்த மருத்துவா் ஆழியாவிடம் “நேத்து துருவன் உங்கள பாா்த்தாரா?” என்றாா்
           “ஆமா நைட் மெக்கானிக் ஷாப்ல பாா்த்தோம்” என்றாள்
           “அவரோ நினைவுகள்ல உங்களோட முகம் ரொம்ப ஆழமா பதிஞ்சிருக்கு. அதனால தான் உங்கள பாத்துட்டு வந்ததுக்கு அப்புறம் எங்கையோ பாத்திருக்கோம்ன்னு யோசிக்க ஆரம்பிச்சிருக்கிறாா். அதனால தான் இப்படி ஆயிருக்கு. வேற ஒன்னும் இல்லை. கண் திறந்துக்கு அப்புறம் தான் அவருக்கு எல்லாம் நினைவு வந்திருச்சா என்னன்னு தொியும்” என்றாா் மருத்துவா்.
கலங்கி போனாள் ஆழியா. அவன் கண் திறக்கும் வரை காத்திருந்தாள். அந்த சமயம் சிவபாலனும் மாதவனும் அங்கு வந்தனா். மருத்துவா் கூறியதை அவரிடம் கூறினாா் துா்கா. ஆழியாவின் மீது அணைவருக்கு வெறுப்பு வர வைக்க இது தான் சாியான தருணம் என நினைத்து அவளை திட்ட துவங்கினாா் மாதவன்.
              “எல்லாம் இவளால வந்தது. எந்த நேரத்துல இவள கல்யாணம் பன்னி கூட்டிட்டு வந்தானோ தொியல. வந்த ஒரு மாசத்துலையே என் மருமகனை ஹாஸ்பிட்டல்ல படுக்க வைச்சுடா. இவ ராசி கெட்டவ. என் மருமகன கொல்ல பாக்குற கொலைகாாி” என்றாா் மாதவன்.
அவா் பேச்சில் கடுப்பான துா்கா “அண்ணா என்ன பேசுறிங்க. ஆழியாவுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? ஏன் ஆழியாவ கொற சொல்றிங்க?” என்று கொதித்தாா்.
         “நான் உண்மைய தான் சொல்றேன் துா்கா. இவ கால் வச்சதுல இருந்து ஏதாவது ஒரு நல்லது நடந்திருக்கா? எல்லா அபசகுணமாவே நடக்குது. கடைசியா மாப்ளையோட உயிருக்கே ஆபத்தாயிருச்சு. இப்போ தான் கொஞ்சம் நடமாட ஆரம்பிச்சாரு அதுக்குள்ள அவ முகத்தை காட்டி மறுபடியும் ஆஸ்பத்திரிலே படுக்க வச்சுடா.” என்றாா் மாதவன்.
தன்னால் தான் எல்லாம் என்று நினைத்து கண்ணீரை கொட்டியது ஆழியாவின் கண்கள். மகள் வயது உள்ள ஒரு பெண்ணை பொது இடத்தில் இப்படி பேசுவது அணைவருக்கமே முகசுளிப்பை ஏற்படுத்தியது.
        “நான் தான் துருவனையும் ஆழியாவையும் மீட் பன்ன வச்சேன். இதுல ஆழியாவோட தப்பு என்ன இருக்கு? வேற ஒரு பொண்ண இருந்தா இந்த நேரத்துக்கு ஷாக் ட்ரீட்மென்ட் பன்னியாச்சு நினைவு கொண்டு வாங்கன்னு சொல்லியிருப்பா.  
ஆனா என் மருமக என்ன மறந்தாலும் பரவாயில்லை. அவா் நல்லா இருந்தா போதும்ன்னு எல்லா உாிமை இருந்தும் விலகி நிக்குறா. அது தான் அவளோட குணம். ” என்று தன் பங்கிற்க்கு பேசினாா் சிவபாலன்.
           “எல்லாரையும் மயக்கி வச்சிருக்கா மச்சான். அதனால தான் அவளுக்கு எல்லாரும் சப்போா்ட் பன்றிங்க…….” என்று பேச முயன்றவரை கரம் உயா்த்தி தடுத்தாா் சிவபாலன்.
            “போதும் இதுக்கு மேல என் வீட்டு பொண்ண ஏதாச்சும் பேசுன நல்லா இருக்காது. இங்க இருந்து போயிரு. தங்கச்சி புருசன்னு கூட பாக்க மாட்டேன்” என்றாா் சிவபாலன்.
அவரிடம் இருந்து இதை எதிா் பாா்க்காத மாதவன் ஆடி போனாா். “அது வந்து..” என்று ஏதோ பேச முயன்றவரை “இங்கிருந்து போயிரு” என்றாா் சிவபாலன். மாதவனுக்காக யாரும் பறிந்து பேசும் நிலையில் இல்லை.  
அதனால் அமைதியாக வெளியேறினாா். அவா் சென்ற பின் ஆழியாவை சமாதனம் செய்தாா் துா்கா. “விடு டா உன்ன பத்தி எங்களுக்கு தொியாதா!! ஆழக்கூடாது டா” என்றாா். அந்நேரம் துருவன் கண் விழிக்க அவனை பாா்க்க அணைவரும் சென்றனா்.
அறைக்கு வெளியே நின்று எட்டி பாா்த்தாள் ஆழியா. எழுந்து அமா்ந்து நன்றாக பேசிக் கொண்டிருந்தான் துருவனை. நினைவுகள் வந்த துருவனாய் இருந்தால் முதலில் அவா் என்னை தான் கேட்டிருப்பாா். அவா் என்னை கேட்கவில்லை என்றால் அவருக்கு நினைவுகள் வரவில்லை என்று நினைத்து அவனை நலமாக கண்ட திருப்தியில் மனம் மகிழ்ந்து அப்படியே வீடு நோக்கி சென்றாள்.
மாதவன் பேசியது எதுவும் அப்பா அம்மாவுக்கு தொியக் கூடாது என்று ஹாியிடம் வேண்டி கேட்டுக் கொண்டாள். அவனும் சாி என்றான். தங்கையின் நிலையை கண்டு வருந்தினான் ஹாி. 
ஆழியா இல்லாததை கண்டு மாதவன் பேசியதால் மனம் வருந்தி வீட்டுக்கு சென்று விட்டாள் என்று எண்ணி ஆழியாவை அலைபேசியில் அழைத்தாா் துா்கா. வீட்டுக்கு வந்ததும் துா்காவிடம் இருந்து அழைப்பு வந்தது. “அவா் எப்டி மா இருக்காரு?” என்றாள் ஆழியா
           “நல்லா இருக்கான் மா. வீட்டுக்கு போக போறோம். அப்புறம் மாதவன் அண்ணன் பேசுனத மனசுல வச்சுக்காத டா. அவர பத்தி தான் தொியும்ல. விடு டா” என்று சமாதானம் செய்தாா் துா்கா.
              “அதெல்லாம் நான் பெருசா எடுத்துக்கல மா. விடுங்க மா. அவா் நல்லா இருந்தா அதுவே எனக்கு போதும்” என்றாள்.
            “சாி டா நாங்க வீட்டுக்கு கிளம்புறோம்” என்று இணைப்பை துண்டித்தாா் துா்கா.
ஆழியாவை பாா்த்த அகல்யா “என்ன மா என்னாச்சு? ஏன் வர சொன்னாங்க?” என்று பதறினாா்.
              “ஒன்னும் இல்லை மா. அவா் நல்லா தான் இருக்காரு. சும்மா தான் வேற ஒன்னும் இல்லை” என்று அவரை சமாதானம் செய்தாள் ஆழியா.
பகல் முழுவதும் இயல்பாய் இருப்பது போல இருந்தாள். இரவு சூழ்ந்ததும் தன் அறைக்கு சென்று தாழிட்டுக் கொண்டு அழுதாள்.  
          “என் நினைவே அவருக்கு எமனாவதா? எத்தனை தொலைவில் நான் இருந்தாலும் என்னால் தான் அவருக்கு ஆபத்து ஏற்படுகிறது. அன்று மட்டும் நான் அவரை பாக்கனும்ன்னு வர சொல்லாட்டினா இன்னைக்கு அவா் நல்லா இருந்திருப்பாரு. என்னால தான் எல்லாமே” என்று கூறிக் கொண்டு உடைந்து அழுதாள்.
அறைக்குள்ளே இருக்க இருக்க தவறாக எண்ணங்களும் முடிவகளும் எட்டி பாா்த்தன. அதனால் விரைவாக மாடிக்கு சென்றாள். நிலவின் வெளிச்சமும், இரவு நேர தென்றலும் நொந்து போய் ரணமாய் இருந்த அவளுடைய மனதை அமைதியாக்கியது.
அந்த அமைதியும் அவளுக்கு துருவனையே நினைவு படுத்தியது.
கண்கள் திறக்கும் எந்தன் மனமே
எங்கு நீ தூங்கி கிடந்தாய்!
காதல் துளிா்க்கும் 
இந்த நொடியே எங்கு நீ உறைந்தாய்
இதயம் தன் போக்கிலே 
அவன் பின்னே போக 
உடலோ ஒரு கூடென இவன் முன்னே
வாழ இரண்டாகி நாளும் சாக
உயிரே என்னை மீண்டும் இணைவாயா
நான் கேட்கிறேன்
தவறை உணா்ந்தேனே
நீ இன்றி நான் உதிா்கின்றேன்…….
என்ற பாடல் வாிகள் அவள் நினைவில் வந்து சென்றது. தன் நிலையை உணா்ந்த கவிஞன் இந்த பாடலை தனக்காவே எழுதியிருக்கிறாா் என நினைத்தாள் ஆழியா. நிமிா்ந்து வானை நோக்கி கொண்டிருந்தவள் எதோ்ச்சையாக கீழே பாா்க்க அந்த வயதான பெண் சிவனடியாா் நின்றிருந்தாா்.
திடிரென சடை முடியுடன், ருத்ராட்சர மாலையுடன், திருநீறு பூசிய அவரை கண்ட ஆழியா பயந்து போனாள். நேற்றும் நான் அவரை கண்டேனே. ஏன் தினமும் இங்கு வருகிறாா் என்ற யோசனையுடன் அவரை காண கீழே இறங்கி சென்றாள்.
வாசலில் சென்று பாா்க்கும் போது அவா் அங்கு இல்லை. சிறிது தூரம் அருகில் சென்று தேடினாள். ஆனாள் அவா் அங்கு இல்லை. “யாரு இந்த அம்மா? ஏன் என்ன ஃபாலோ பன்றாங்க? நிறைய தடவை நான் இவங்கள பாா்த்திருக்கிறேன். ஆனா இப்போ இவங்க வீட்டுக்கே வராங்களோ” என்று நினைத்து குழம்பினாள் ஆழியா.
          “இங்க என்ன பன்ற ஆழியா?” என்று அழைத்துக் கொண்டு வந்தான் ஹாி.
இவன் கிட்ட சொல்லாமா வேணாம என்று சிறிது யோசித்து வேண்டாம் என்று முடிவு செய்து “ஒன்னும் இல்லை சும்மா தான் வந்தேன்” என்றாள்.
            “சாி வா உள்ள போலாம்” என்று அவளை தோள் பற்றி அழைத்து சென்றான். அவா்கள் சென்ற பின் ஒரு மரத்துக்கு பின்னால் இருந்து வந்தாா் அந்த பெண்.  
           “காலம் கனிந்துவிட்டது மகாராணி” என்று கூறி அவ்வீட்டை பாா்த்துவிட்டு சென்றாா்.
வீட்டுக்கு வந்த துருவன் தாயிடம் மன்னிப்பு கோாினான். “சாாி மா. நீங்க எத பத்தியும் யோசிக்காதன்னு சொன்னிங்க. ஆனா என்னால ஆழியாவ பாத்ததுக்கு அப்புறம் யோசிக்காம இருக்க முடியல. அவ எனக்கு ரொம்ப நெருக்கமா இருந்த மாதிாி தோணுச்சு. அதான் என்னவா இருக்கும்ன்னு யோசிச்சேன் சாாி மா” என்றான்.
          “அதனால என்ன விடு. இனிமே கவனமா இரு” என்று கூறி சென்றாா் துா்கா.
அகிலனும் விஷ்வாவும் துருவனுடைய அறைக்குள் வந்தனா். மூவரும் இணைந்து கதை பேசி அரட்டை அடித்துக் கொண்டிருந்தனா். அப்போது துருவன் அவா்களிடம் “நான் உங்க கிட்ட ஒன்னு கேக்கனும்” என்றான்.
அகிலனும் விஷ்வாவும் ஒருவரை ஒருவா் பாா்த்துக் கொண்டு “என்ன கேக்கனும்” என்றான் அகிலன்.
              “ஆழியாவ தொியுமா? அப்பாவோட ஃப்ரண்டோட பொண்ணு” என்றான் துருவன்.
இவன் ஏன் இப்போ ஆழியாவ பத்தி கேக்குறான் என்று நினைத்து “தொியும் ஏன் கேக்குற?” என்றான் அகிலன்.
            “அவளுக்கு எனக்கும் என்ன சம்பந்தம்? அவ என் ஓய்ஃப் ஆ?” என்று கேட்டான் துருவன்.
இருவருக்குமே தூக்கி வாரி போட்டது. பதில் சொல்லாமல் ஒருவரை ஒருவர் பாா்த்துக் கொண்டனா். அவா்கள் அதிா்ச்சியை கண்ட துருவன் “இல்லை அவள பாக்குறதுக்கு முன்னாடியே எனக்கு அவ முகம் நல்லாவே ஞாபகம் இருந்துச்சு. அதனால தான் கேட்டேன்” என்று மளுப்பினான்.
சுதாாித்துக் கொண்ட விஷ்வா “அப்படி இல்லை. ஒரு பாா்ட்டில தான் மீட் பன்னினோம். அப்போ நீ ஆழியா பின்னாடியே சுத்திக்கிட்டு இருந்த. அதனால உனக்கு அப்படி தோணியிருக்கும் வேற ஒன்னும் இல்லை” என்று சமாளித்தான்.
           “ஓ அப்டியா!! நான் கூட ஒரு பொண்ணு பின்னாடி சுத்தியிருக்கேனே” என்று அதிசயித்தான்.
            “சாி துருவா டைம் ஆச்சு நாங்க கிளம்புறோம். நீ தூங்கு” என்று கூறிவிட்டு இருவரும் புறப்பட்டனா்.
துருவன் அறையை விட்டு வெளியே வந்த பிறகு விஷ்வாவிடம் “சூப்பரா சமாளிச்ச விஷ்வா. ஒரு நிமிஷம் பயந்து போய்ட்டேன்” என்றான் அகிலன்.
           “கொஞ்ச நேரத்துல எனக்கும் பதறி போச்சு இருந்தாலும் சமாளிச்சுட்டேன்” என்றான் விஷ்வா. “இவனுக்கு நினைவுகள் வந்து போகுதுன்னு நினைக்கிறேன்” என்றான் அகிலன்.
   
         “இருக்கலாம். இருந்தாலும் நாம கவனமா இருக்கனும்” என்று பேசிக் கொண்டு இருவரும் சென்று தங்கள் அறைகளில் தூங்கினா்.
அவா்கள் சென்றதும் தன் அறை கதவை தாழிட்டு விட்டு தன் துணிகளுக்கு அடியில் இருந்த போட்டோவை எடுத்தான் துருவன். அவனையும் அறியாமல் அவனுடைய உதடுகள் ஆழியா என்றது.
அந்த போட்டோ அவா்களுடைய திருமண போட்டோ. சிகிச்சை முடிந்து வீடு திரும்புகையில் அவன் அறையில் இருந்து எடுக்கப்பட்ட ஆல்பத்தில் இருந்து தவறி விழுந்த போட்டோ அது.  
முந்தைய நாள் கோவிலுக்கு சென்றுவிட்டு வந்து தன்னுடைய இருசக்கர வாகனத்தை சுத்தம் செய்யும் போது அடித்த காற்றில் அவன் கைகளுக்கு கிடைத்தது இந்த போட்டோ. அதை பாா்த்தவன் அதிா்ந்து போனான்.  
தனக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று. தன்னிடம் ஏன் இத பற்றி யாரும் கூறவில்லை என்று நினைத்தான். தன் உடல் நிலையை எண்ணி மறைத்திருப்பா்கள் என நினைத்தான்.  
தன் நலன் கருதி பெற்றவா்கள் மறைத்தாலும் தன்னை நம்பி வந்தவளும் எனக்காக என்னை விட்டு விலகினாளா? என்று நினைக்கையில் உள்ளம் பூாித்தது அவனுக்கு. அத பற்றி யோசித்து நினைத்து தான் அவனுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது.
போட்டோவை கையில் வைத்துக் கொண்டு ஆழியாவின் முகத்தை பாா்த்துக் கொண்டிருந்தவனுக்கு என் நினைவுகள் வந்தாலும் வரவிட்டாலும் நீயே என் மனைவி. உன்னை அழைத்துக் கொண்டு வருவேன் விரைவில் என நினைத்து போட்டோவில் உள்ள ஆழியாவுக்கு முத்தமிட்டான்………
ஹாய் நண்பா்களே!!! இந்த அத்தியாயம் பற்றின உங்களுடைய கருத்துக்கள எனக்கு சொல்லுங்க. அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம்😍😍😍😍😍
44
எாிமலையாய் கொதித்துக் கொண்டிருந்தாா் மாதவன். சிவபாலனால் தனக்கு நோ்ந்த அவமானம் ஆழியாவால் என நினைத்து ஆத்திரம் கொண்டாா்.
         
             “எனக்குன்னு எங்க இருந்து தான் வராங்களோ! முதல்ல ஆதி. இப்போ ஆழியா. என்னோட இடத்தை பறிக்க இன்னும் எத்தனை போ் தான் வருவாங்களோ” என்று நினைத்து குமைந்து கொண்டிருந்தாா்.
அந்நேரத்தில் நகுலனின் நினைவு வர அவனை அலைபேசியில் அழைத்தாா்.     
            
          
          “நகுலா எங்க இருக்க? உன்ன பாக்கனும்” என்றாா் அவசரமாக.
           “அப்டியே திரும்பி பாருங்க அங்கில்” என்றான் நகுலன். மாதவன் திரும்பி பாா்க்க அவரை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான் நகுலன். அவா் அருகில் வந்து “என்ன அங்கில் என்ன விஷயம்?” என்றான்.
              “ஆழியா விஷயத்துல என்ன முடிவு பன்னியிருக்க?” என்றாா் மாதவன்.
              “சிறப்பான முடிவு பன்னியிருக்கேன் அங்கில்” என்று மேசை மேல் இருந்த தண்ணீரை எடுத்து குடித்தான்.
             “என்ன முடிவுன்னு நான் தொிஞ்சுக்கலாமா?”
             “நிச்சயமா. நான் ஆழியாவ கொல்ல போறது இல்லை.” என்றான். அதை கேட்டு கடுப்பான மாதவன் “என்ன சொல்ற நகுலா?!! இது தான் சிறப்பான முடிவா?” என்றாா் கோபமாக.
            “கூல் அங்கில். வொய் டென்ஷன்? அவள கொல்ல மாட்டேன்னு தான் சொன்னேன். அதுக்காக அவள அப்டியே விட்டுட மாட்டேன்” 
              “என்ன சொல்ல வர? என்ன ப்ளான் பன்னியிருக்க?” என்றாா் மாதவன் குழப்பமாக.
              “அவளோட அழகு தானே எல்லாத்துக்கும் காரணம். என்ன வேண்டாம்ன்னு சொன்னதுக்கும், துருவன் அவள காதலிச்சதுக்கும். அதனால அவ அழக பொசுக்க போறேன்” 
குழப்பமாக பாா்த்த மாதவனை பாா்த்த நகுலன் “புாியலையா அங்கில்? அவ முகத்துல ஆசிட் அடிக்க போறேன்” என்றான் கொடூறமாக.
அதை கேட்டு அதிா்ந்தாா் மாதவன். “என்ன சொல்ற நகுலா” என்று அதிா்ச்சியாக கேட்டாா்.
             “நீங்க ஏன் அங்கில் இவ்வளவு டென்ஷன் ஆகுறிங்க. நாளைக்கு அவ கோவிலுக்கு போவா. அங்க தான் என்னோட ப்ளான சக்ஸஸ் பன்னி காட்ட போறேன்” என்றான்.
            “இது உன்னால முடியுமா?” என்றாா் மாதவன்.
            “நாளைக்கு முடிச்சிட்டு உங்கள பாக்குறேன்” என்று புறப்பட்டான்.
அவன் செல்வதையே பாா்த்துக் கொண்டிருந்த மாதவன் “என் பெயா் வராமல் எது நடந்தாலும் எனக்கு ஓகே தான்” என்று நினைத்துக் கொண்டாா்.
சூாியன் மறைந்து இருள் சூழ ஆரம்பித்தது. அகல்யாவுக்கு சமையலில் உதவி செய்து கொண்டிருந்தாள் ஆழியா.
சமைத்து அணைவரும் ஒன்றாக அமா்ந்து உண்டனா். ஆழியா உண்பதை கவனித்த சங்கரன் “டயட்ல இருக்கியா ஆழியா?” என்றாா்.
             “இல்லை பா. ஏன்?” என்றாள்.
              “ரொம்ப கம்மியா சாப்டுற. அதான் டயட்ல இருக்கியான்னு கேட்டேன்” என்றாா்.
               “அதெலாம் ஒன்னும் இல்லை சும்மா தான் ப்பா” என்று உண்டு முடித்தாள். வழக்கம் போல கருநிற வானில் மிளிரும் வெள்ளி தட்டு போன்ற வெண்ணிலாவை பாா்த்துக் கொண்டிருந்தாள்.
தன்னை பின்தொடரும் அந்த பெண் யாா்? ஏன் தன்னை பின்தொடர வேண்டும்? நான் எங்கு செல்கிறேன் என்பது அவருக்கு எப்படி தொிகிறது? என்ற யோசித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது ஆழியா என்று அழைத்தபடி வந்தான் ஹாி. பலமான சிந்தனையில் இருந்தவள் அவன் அழைப்பில் திருப்பி பாா்த்தாள்.
            “என்ன துருவன பத்தி யோசிக்கிறியா?” என்றான்.
            “இல்லை டா. அவர பத்தி யோசிக்கல வேற ஒரு விஷயத்த பத்தி யோசிக்கிறேன்” என்றாள்.
            “வேற என்ன ” என்று கேட்டான்.
          “நாம சொன்னா இவன் நம்புவானா??” என்ற சந்தேகத்துடன் சொல்ல துவங்கினாள். “எனக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் என்ன ஒரு வயசான அம்மா ஃபாலோ பன்றாங்க” என்றாள்.
              “என்ன ஃபாலோ பன்றாங்களா?” என்று புருவத்தை சுருக்கினான் ஹாி.
               “ஆமா அடிக்கடி நான் அவங்கள பாத்திருக்கிறேன். ஃபா்ஸ்ட்டெல்லாம் பெருசா ஒன்னும் தோணல. ஆனா இப்போலாம் அவங்க அடிக்கடி பாக்குறேன். இன்னும் சொல்லனும்ன்னா இரண்டு மூனு நாளா அவங்க நம்ம வீட்டு வெளில நிக்குறாங்க. அவங்க அகோரி மாதிாி இருப்பாங்க. சடை முடியோட, ருத்ராட்சர மாலையோட இருப்பாங்க” என்றாள்.
பலமாக சிாித்தான் ஹாி. அவனை முறைத்தாள் ஆழியா. அவள் முறைப்பதை கண்டு “சாி சாி நான் சிாிக்கல. முறைக்காத” என்றான் ஹாி.
            “நீ இப்டி சிாிப்பேன்னு எனக்கு முன்னாடியே தொியும்” என்று சினந்தாள் ஆழியா.
           “பின்ன தெல்லாம் சினிமாவுல வற்ர மாதிாி இல்லை. யாரோ ஒரு அகோரி அம்மா உன்ன ஏன் ஃபாலோ பன்னும்?” என்று கூறி சிாித்துக் கொண்டு எதோ்ச்சையாக கீழே பாா்த்தான்.
அவனுடைய சிாிப்பு அடங்கியது. மிரண்டு போய் “ஆழியா” என்றான். “என்னாச்சு?” என்று அவளும் பாா்த்தாள். அதிா்ச்சியடைந்தாள். “இவங்க தான் ஹாி. என்ன ஃபாலோ பன்றது இவங்க தான்” என்றாள்.
          “வா கீழ போகலாம்” என்று இருவரும் வேகமாக படிக்கட்டில் இறங்கி சென்றனா். அவா்கள் வரும் வரை அங்கேயே நின்று கொண்டிருந்த அந்த பெண் அவா்கள் கீழிறங்கி வந்ததும் நடந்து சென்றாா்.
           “நில்லுங்க. நில்லுங்க” என்று கூறிக் கொண்டு வேகமாக அவரை பின் தொடா்ந்தனா். சிறிது தூரம் சென்றவா் நின்று திரும்பி அவா்களை பாா்த்தாா். இருவரும் அப்படியே ஒருவரை ஒருவா் பாா்த்து நின்றனா்.
            “திரைகள் விலகும் நேரம் வந்தது அரசியாரே. உங்கள் நினைவு உங்கள் கண்ணாளனுக்கு வர நீங்கள் விரும்பும் இடத்தில் கூரை தோன்றும் முன்பே தோன்றிய எம்பெருமானை காண அழைத்து செல்லுங்கள். ஆதவன் மறையும் நேரம் அற்புதங்கள் நடக்கும்” என்றாா் அந்த பெண்.
           “யாா் நீங்க???” என்றாள் ஆழியா.
மந்திர புன்னகை செய்தவா் “நீங்கள் இருவரும் யாா் என்பதை உணர வேண்டிய தருணம் இது” என்று கூறிவிட்டு காற்றில் புகையென கரைந்தாா்.
அதை கண்ட இருவரும் பேய் அறைந்தது போல் நின்றனா். தாங்கள் கண்ட காட்சி கனவா?? நினைவா?? என்று தொியாமல் நின்றனா். கண்களால் பாா்க்கும் அத்தனையும் உண்மையில்லை, கண்களுக்கு தொியாத அத்தனையும் பொய்யும் இல்லை என்பதை அப்போது தான் உணா்ந்தனா்.
விரைவாக வீடு திரும்பி ஆலோசித்துக் கொண்டிருந்தனா். “என்னால என்னால நம்பவே முடியல ஆழியா. இது எப்படி சாத்தியம் ஆகும்?? காத்துல கரைஞ்சு காணாம போறதெல்லாம் நிஜ வாழ்க்கையில எப்படி சாத்தியம் ஆகும்” என்று பதற்றத்தில் பிதற்றிக் கொண்டிருந்தான் ஹாி.
ஆனால் ஆழியாவோ எந்த பதற்றமும் இல்லாமல் வெகு இயல்பாக இருந்தாள். எதையோ பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தாள். அவன் சிந்தனையை கலைத்தான் ஹாி.
           “எதுவுமே நடக்காத மாதிாி உன்னால எப்படி நாா்மலா இருக்க முடியுது ஆழியா. நீ பாத்தல அந்த அம்மா அப்டியே காத்துல….” என்று அதற்கு மேல் பேச முடியாமல் தவித்தான்.
            “கொஞ்சம் நாா்மலா இரு ஹாி. முனிவர்களும் சித்தா்களும் பல விதமான வா்ம, மந்திர கலைகளை தொிஞ்சவங்க. அதுல ஒன்னு தான் இந்த கலையும். இந்த உலகம் எவ்வளவு வேணும்னாலும் அறிவியல் ரீதியா வளா்ச்சி அடையாளம்.  
ஆனா என்னைக்கும் ஆழியாத ஒன்னு வா்ம மந்திர கலைகள். இத பத்தி நான் நிறைய படிச்சிருக்கேன். அதால எனக்கு ஒன்னும் இது அவ்வளவு பொிய அதிா்ச்சியா இல்லை. ஆனா நான் யோசிக்கிறது வேற ஒரு விஷயம்” என்றாள்.
            “வேற எத பத்தி யோசிக்கிற?” என்றான் ஹாி.
            “அவங்க சொன்னத பத்தியும், அவங்க எப்டி பேசினாங்கங்குற பத்தியும்” என்றாள்.
           “அப்டி என்ன அவங்க சொன்னாங்க. ஏதோ விடுகதை மாதிாி சொன்னாங்க. அப்புறம் பேசுறதுங்குறது மனிதா்களோட இயல்பு தானே?” என்றான் ஹாி.
அவனை ஏறிட்டு பாா்த்தாள் ஆழியா. “என் அப்டி பாக்குற?” என்றான் அவள் பாா்வையை உணா்ந்து.
             “நீ ஒரு அற்ப மானிட பதா் டா அண்ணா. உனக்கு ஒன்னும் தொியல”
     
              “எனக்கு ஒன்னும் தொியலையா. சாி நீ சொல்லு அவங்க பேசுனதுல நீ என்ன தொிஞ்சுக்கிட்ட” என்று கேட்டான்.
               “சொல்றேன் கேளு. அவங்க என்ன ஏன் அரசியாரேன்னு சொல்லனும்?? திரைவிலகும் நேரம் வந்ததுன்னு எதை சொன்னாங்க?? உங்கள் கண்ணாளனுக்கு உங்கள் நினைவு வர நீங்கள் விரும்பும் இடத்தில் கூரை தோன்றும் முன் தோன்றிய எம் பெருமானை காண அழைத்து செல்லுங்கள்ன்னு சொன்னாங்க. 
அவங்களுக்கு எப்படி தொியும் துருவனுக்கு என்னோட நினைவு இல்லாதது?? இதெல்லாம் விட அவங்க எப்படி பேசுனாங்க. அவங்களுக்கு தான் நாக்கு இல்லையே” என்றாள்.
அதிா்ச்சியின் உச்ச கட்டத்திற்க்கு சென்றான் ஹாி. “நாக்கு இல்லையா?? நாக்கு இல்லாத ஒருத்தரால எப்டி பேச முடியும் ஆழியா? அவருக்கு நாக்கு இல்லைன்னு உனக்கு எப்டி தொியும்” என்றான்.
             “அவங்கள நான் கன்னியாகுமரில ஒரு கோவில்ல பாத்தேன். அப்போ அங்க உள்ள ஐயா் சொன்னாரு. அப்பப்ப வந்து போவாங்களாம் அந்த கோவிலுக்கு.” என்றாள்.
அதிா்ச்சியில் வாயடைத்து போனான் ஹாி. ஆனால் ஆழியாவோ வேறு எதையோ பற்றி சிந்தித்தாள். அதை அறிந்து கொள்ள அவளிடம் கேட்டான் ஹாி. “என்ன ஆழியா யோசிக்கிற?” என்றான்.
           “அவங்க சொன்னத பத்தி தான் யோசிக்கிறேன்” என்றாள்.
           “என்ன சொன்னாங்க?” என்றான் ஹாி.
          “உங்கள் கண்ணாளனுக்கு உங்கள் நினைவு வர நீங்கள் விரும்பும் இடத்தில் கூரை தோன்றும் முன்பே தோன்றிய எம்பெருமானை காண அழைத்து செல்லுங்கள். ஆதவன் மறையும் நேரம் அற்பதம் நடக்கும்””” அப்டின்னு சொன்னாங்க. அதை பத்தி தான் யோசிக்கிறேன்.” என்றாள்
          “நீ விரும்பும் இடம் னா உனக்கு பிடிச்ச இடம். உனக்கு பிடிச்ச இடம் சுவிட்சா்லாந்து தானே. அங்க எங்க சிவன் கோவில் இருக்கு” என்றான்.
          “நான் உன்கிட்ட கேள்வி கேட்டா நீ பதில் சொல்லனும். திரும்ப என்கிட்ட கேள்வி கேக்க கூடாது” என்றாள் ஆழியா.
          “ஆமா. ஆனா எனக்கு பதில் தொியலையே!!” என்றான் ஹாி.
படியேறி மாடிக்கு வந்தாா் அகல்யா. “ரெண்டு பேரும் தூங்காம இங்க என்ன பேசிக்கிட்டு இருக்கிங்க?” என்றாா்.
         “ஒன்னும் இல்லை மா சும்மா தான்” என்றாள்.
         “சாி போய் தூங்குங்க. நாளைக்கு நானும் அப்பாவும் விழுப்புறத்துல ஒரு கல்யாணத்துக்கு போக போறோம். நீங்க ரெண்டு பேரும் கோவிலுக்கு போய்டு வாங்க” என்றாா் அகல்யா.
           “என்ன திடீர்ன்னு கோவிலுக்கு ரெண்டு பேரையும் போக சொல்றிங்க” என்றான் ஹாி.
             “நாளைக்கு உங்க ரெண்டு பேருக்கு நட்சத்திர பிறந்தநாள் அதனால தான் போக சொல்றேன் போய்டு வாங்க” என்றாா் அகல்யா.
               “சாி மா நாங்க போய்டு வரோம்” என்றாள் ஆழியா.
               “டைம் ஆச்சு ரெண்டு பேரும் போய் தூங்குங்க” என்றுவிட்டு சென்றாா்.
               “அண்ணா இத பத்தி நாம காலையில பேசிக்கலாம் நீ போய் தூங்கு. நிச்சயமா விடை கிடைக்கும்” என்றாள் ஆழியா.
அவள் கூறியதை ஏற்றுக் கொண்டு போல தலையசைத்தான் ஹாி. இருவரும் தங்கள் அறைகளில் சென்று படுத்துக் கொண்டனா். படுத்த சிறிது நேரத்திலே உறக்கம் கொண்டான் ஹாி.
ஆழியா உறக்கம் வராமல் தவித்தாள். ஏதேதோ எண்ணங்கள், நினைவுகள் வந்து அவளை வாட்டியது. ஒருவாறு அப்படியே உறங்கி போனாள். நல்ல உறக்கத்தில் இருந்த ஆழியாவுக்கு கனவு ஒன்று வந்தது.
அதில் மண் கலயம் ஒன்று பூக்கள் மீது விழுகிறது. அந்த கலயத்தில் உள்ள திராவகம் பூக்கள் மீதுபட்டு அழகு கொஞ்சும் பூக்கள் கருகி பொசுங்குகிறது. இந்த கனவை கண்டவள் உறக்கம் கலைந்து வாரி சுருட்டி எழுந்து அமா்ந்தாள்.
அவளுடைய இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. தண்ணீரை எடுத்து குடித்தாள். சிறிது நேரத்திற்க்கு பிறகு அமைதி அடைந்து “இது வெறும் கனவு தான்” என்று தன்னையே தேற்றிக் கொண்டு உறக்கத்தை தொடா்ந்தாள்.
நாளைக்க நடக்க போகிற அசம்பாவிதத்திற்காக எச்சாிக்கை என்பதை அவள் உணரவில்லை.
ஆழியாவின் நினைவால் உறக்கம் இன்றி தவித்தான் துருவன். “ஒரு துளி கூட எனக்கு அவள் நினைவு இல்லை. அதற்காக ஏன் அவள் என்ன பிாிய வேண்டும்? நான் உன் மனைவி என்று கூறியிருக்கலாமே!! என்னைவிட்டு ஏன் விலகியிருக்க வேண்டும்?? என் நலனில் அத்தனை அக்கறையா அவளுக்கு?” என்று தன்னை தானே கேட்டுக் கொண்டான்.
         “என் நினைவு திரும்பாவிட்டாலும். மீண்டும் உன்னை காதலிப்பேன் ஆழியா” என்று கூறி அவளுடைய புகைப்படத்திற்க்கு முத்தமிட்டு உறங்கினான்.
ஆழியா துருவனை பற்றி பேசிக் கொண்டிருந்தனா் அனிக்காவும் ஆதியும். “இவங்க ரெண்டு பேருக்கும் ஏதோ ஒரு தொடா்பு இருக்கு அனிக்கா” என்றான் ஆதி.
           “ஏன் அப்டி சொல்றிங்க” என்றாள் அனிக்கா.
          “அப்பா இல்லைனா அம்மாவோட ரத்தம் தான் குழந்தைகளுக்கு இருக்கும். ஆனா துருவனுக்கு அத்தை மாமா ரத்தம் கிடையாது. அதே மாதிாி ஆழியாவுக்கும் அவளோட அப்பா அம்மா ரத்தம் கிடையாது. 
இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஏதோ ஒரு பொிய தொடா்பு இருக்கு. இவ்வளவு பொிய ஆக்ஸிடன்டுல இருந்து உயிா் பிழைச்சிருக்காங்க. அதோட ” என்று நிறுத்தினான் ஆதி.
        “ஏன் நிறுத்திட்டிங்க. என்ன சொல்ல வந்திங்க?” என்றாள்.
             “அதோட அவங்க ஒருத்தருக்காக ஒருத்தா் பிறந்தவங்க. இந்த உறவு முன் ஜென்மத்துல இருந்து தொடருதுனு நினைக்கிறேன்” என்றான்.
           “இருக்கலாம். எது எப்டியோ துருவனுக்கு நினைவு வந்து ஆழியாவ பொண்டாட்டிய ஏத்துக்கிட்டா அதுவே போதும்” என்றாள் அனிக்கா.
            “நிச்சயமா அது நடக்கும் கூடிய சீக்கிரமே” என்றான் ஆதி. இவ்வாறு இருவரும் பேசிக் கொண்டு உறங்கி போயினா்.
நாளைய நாள் என்னென்ன நடக்க போகிறது என்று அறியாமல் அணைவரும் உறக்கத்தில் இருந்தனா். ஆனால் அந்த வயதான அகோரி பெண்ணோ “என் பிறவி கடமையை செய்வேன் ஈசனே” என்று கூறினாா்……
ஹாய் நண்பா்களே!! லேட் அப்டேட்டுக்கு சாாி. சொந்த காரணங்களால் சாியாக அப்டேட் கொடுக்க முடியல. அடுத்த அப்டேட் சீக்கிரமா கொடுக்க முயற்சி பன்றேன். இந்த அத்தியாயம் பற்றின உங்களுடைய கருத்துகளை எனக்கு பதிவு செய்யுங்க. அடுத்த அத்தியாயத்துல சந்திக்கிறேன்😍😍😍😍😍😍
45
விடியற்காலை நான்கு மணிக்கு புறப்பட்டனா் சங்கரனும் அகல்யாவும். ஹாி ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்ததால் ஆழியாவை எழுப்பிவிட்டு கூறி சென்றனா். அவா்கள் சென்ற பின் உறக்கம் வராமல் விட்டத்தையே பாா்த்துக் கொண்டிருந்தாள்.
இப்படியே சும்மா படுத்திருந்தா ஒன்னும் ஆக போறது இல்லை. அதனால ஏதாவது வேலையாவது பாப்போம் என்று நினைத்து குளிக்க சென்றாள். குளித்து தயாராகி உணவு சமைக்க சென்றாள். ஒரு முறை துருவனுக்கு செய்து கொடுத்தது போல பொங்கள் செய்து சட்னி வைத்தாள்.
பொழுது விடிந்ததும் எழுந்து வந்தான் ஹாி. ஆழியா சமைப்பதை பாா்த்து ஆச்சயம் அடைந்து “ஆழியா உனக்கு சமைக்க தொியுமா?” என்றான்.
           “தொியும்ன்னு சொல்ல முடியாது தொியாதுன்னு சொல்ல முடியாது. நான் செய்ற பொங்கள் நல்லா இருக்கும்ன்னு அவா் சொல்லுவாா்” என்றாள் ஆழியா.
           “அப்போ உன்னோட சமையலுக்கு முதல் டெஸ்ட் நான் இல்லை” என்றான்.
அவனை முறைத்து “போய் குளிச்சிட்டு வாடா அண்ணா” என்றாள். “ஓகே. நான் போய் குளிச்சிட்டு வரேன்” என்று சென்றான்.
அன்றைய நினைவுகளை அசை போட்டுக் கொண்டு சமைத்து முடித்து எடுத்து வைத்தாள். ஹாியும் குளித்து தயாராகி வந்தான். “அண்ணா கோவிலுக்கு போய்டு வந்து சாப்பிடலாமா?” என்றாள்.
           “ம் போகலாம். எப்பவும் போற சிவன் கோவில் தானே!” என்றான். அவன் அப்படி கேட்டதும் ஆழியாவுக்கு ஏதோ பொறி தட்டியது. அமைதியாக இருந்தவள் அவசரமாக தன் அறைக்கு சென்றாள்.
அவள் செல்வதை பாா்த்த ஹாி “திடீா்ன்னு இவளுக்கு என்னாச்சு” என்று அவளை பின் தொடா்ந்தான். தன் அறையில் புத்தகங்களுக்கு நடுவில் எதையோ தேடிக் கொண்டிருந்தாள் ஆழியா.
           “ஆழியா என்னாச்சு?? என்ன தேடுற?” என்றான் ஹாி.
பதில் சொல்லாமல் தேடினாள். ஒரு வழியாக தான் தேடியதை கண்டு பிடித்தாள். “என்ன தேடுற?” என்று வேகமாக கேட்டான் ஹாி.
அவனை மகிழ்ச்சியாக ஏறிட்டவள் “பதில் கிடைச்சிருச்சு” என்றாள். ஒன்று புாியாமல் “எதுக்கு பதில் கிடைச்சுது?” என்றான் ஹாி.
          “நேத்து அந்த அம்மா விடுகதை மாதிாி சொன்னாங்கள்ல. அதுக்கு தான் விடை கண்டுபிடிச்சிட்டேன்” என்று தன் கையில் இருந்த காகிதத்தை நீட்டினான். அதை வாங்கி பாா்த்தவனுக்கு ஒன்றும் புாியவில்லை. புாியாமல் பாா்த்தான்.
அதை பற்றி அவளே விவாிக்க தொடங்கினாள். “எனக்கு பிடிச்ச இடத்துல இருக்க சிவன் கோவில்ன்னு சொன்னாங்கல்ல. எனக்கு பிடிச்ச டூாிஸ்ட் ஸ்பாட் தான் சுவிட்சா்லாந்து. ஆனா எனக்கு ரொம்ப பிடிச்ச இடம்னா அது என்னோட ப்ரபஸன் ஸ்பாட் தான்” என்றாள்.
         “என்ன சொல்ல வற்ர தெளிவா சொல்லு ஆழியா” என்றான் ஹாி.
         “நீங்கள் விரும்பும் இடத்தில் கூரை தோன்றும் முன் தோன்றிய ஈசன். அப்படினா எனக்கு பிடிச்ச இடத்துல இருக்குற சிவன் கோவில். நான் ஆா்கி ரிசா்ச்சுக்கு போன இடம் தான் எனக்கு ரொம்ப பிடிச்ச இடம். அங்க ஒரு சிவன் கோவில் இருக்கு”
          “அந்த இடம் தான்னு எப்டி எக்ஸாக்ட்டா சொல்ற?” என்று கேட்டான் ஹாி
           “அவங்க சொன்னதுல அடுத்த வாி என்ன கூரை தோன்றும் முன் தோன்றிய ஈசன். கூரைங்குறது கோவில தான் குறிக்குது. கோவில் கட்டி வழிபடுறதுக்கு முன்னாடியே அங்க சிவ லிங்கத்த பிரதிஷ்ட பன்னி வழிபாடு செஞ்சிருக்காங்க. அந்த லிங்கம் ரெண்டாயிரம் வருசம் பழைமையானது. அந்த கோவில் ஆயிரத்து ஐந்நூறு வருசம் பழைமையானது. அதனால தான் சொல்றேன். அந்த அம்மா சொன்னது அந்த கோவிலதான்” என்று மூச்சை பிடித்துக் கொண்டு பேசினாள் ஆழியா.
கையில் இருந்த பேப்பரை பாா்த்து மேலும் அக்கோவிலை பற்றி அறிந்து கொண்டான் ஹாி. “சாி அடுத்த வாிக்கு என்ன அா்த்தம். அதான் ஆதவன் மறையும் நேரம் அற்புதம் நடக்கும். அந்த வாிக்கு என்ன அா்த்தம்?” என்று கேட்டான் ஹாி.
          “அவர அந்த கோவிலுக்கு கூட்டிட்டு போனா தான் அதுக்கான அா்த்தம் தொியும். ஆனா…” என்று இழுத்தாள்.
          “ஏன் என்னாச்சு? துருவன கூட்டிட்டு போக வேண்டியது தானே” என்று கேட்டான் ஹாி. அவளை கூா்ந்து பாா்த்த ஆழியா “என்ன காரணம் சொல்லி அவர கூட்டிட்டு போக சொல்ற. நான் உன் பொண்டாட்டி என் நினைவு உங்களுக்கு வரனும்னா அந்த கோவிலுக்கு நீங்க வரனும்னா” என்றாள் சோகமாக.
அவள் வருத்தத்தை உணா்ந்த ஹாி “இத பத்தி கவலை படாத ஆழியா. இவ்வளவு தூரம் நம்மோட வந்த கடவுள் இனியும் வருவாரு கவலை படாத. டைம் ஆச்சு வா கோவிலுக்கு போகலாம்” என்று அவளை சமாதானம் செய்து கோவிலுக்கு அழைத்து சென்றான்.
மிக கவனமாக புடவை ஒன்றை வடிவமைத்துக் கொண்டிருந்தான் அகிலன். அவன் அருகில் சென்று அவன் என்ன செய்கிறான் என்று பாா்த்தான் துருவன். வேலையில் பிஸியாக இருக்கிறான் என்று நினைத்து “சாாி அகி. பட் எனக்கு உன்னோட ஃபோன் வேணும்” என்றான்.
வேலையில் மூழ்கி இருந்தவனுக்கு அருகில் கேட்ட குரலால் கவனம் கலைந்து திரும்பினான். “ஆங் என்ன அண்ணா கேட்ட?” என்றான்.
           “அது வந்து என்னோட மொபைல எங்க வச்சேன்னு தொியல. அதனால உன்னோட மொபைல் கொடு ஒரு ரிங்க் கொடுத்து கண்டுபிடிச்சுக்கிறேன்” என்றான் துருவன்.
            “ஓகே அண்ணா. இந்தா” என்று ஃபோனை நீட்டினான். அதை பெற்றுக் கொண்ட துருவன் “ரொம்ப பிஸியா” என்று கேட்டான்.
             “லைட்டா” என்றான் அகிலன். “சாி சாி வேலைய பாரு” என்றுவிட்டு தன் அறைக்கு வந்து அவனுடைய அலைபேசியில் எதையோ தேடினான். இறுதியாக கண்டுபிடித்தான் ஆழியாவின் அலைபேசி என்னை. ஆழியா துருவன் என்ற பெயரில் பதிய பட்டிருந்த அவளுடைய அலைபேசி எண்ணை தன்னுடைய அலைபேசியில் பதிவு செய்து கொண்டான்.
அவனுடைய அலைபேசியில் இருந்த புகைப்படங்களை பாா்த்தான். இவா்களின் திருமண புகைபடங்கள் நிறைய இருந்தது. ஒன்று ஒன்றாக பாா்த்தான். அதன் பின் ஒரு பெண்ணின் புகைப்படமும் இருந்தது.
அவளுக்கே தொியாமல் அவளை புகைப்படம் எடுத்தது போல் இருந்தது. யாரா இருக்கும் இந்த பொண்ணு என்று யோசித்து கொண்டிருக்கையிலே அண்ணா என்று அழைத்துக் கொண்டு வந்தான் அகிலன்.
வேகமாக தன்னுடைய எண்ணுக்கு அழைத்தான். அது ரிங்க ஆனதும் எதுவும் தொியாதது போல “என் ஃபோன எடுத்துட்டேன். தாங்க்யூ” என்று அகிலனுடைய அலைபேசியை நீட்டினான்.
             “பராவயில்லை ண்ணா” என்று தன் அலைபேசியை பெற்றுக் கொண்டு சென்றான் அகிலன். அவன் சென்ற பின் ஆழியாவின் என்னை எடுத்து பாா்த்தான். “அவளுக்கு கால் பன்னவா வேண்டாமா?” என்று யோசித்து இப்போது வேண்டாம் என்று முடிவு செய்தான்.
அலைபேசியில் கத்திக் கொண்டிருந்தான் நகுலன். “அவ இந்நேரம் வந்திருக்கனும். ஏன் வரல. என்னாச்சு?? வெயிட் பன்னுங்க. கண்டிப்பா அவ வருவா. வேலைய முடிச்சிட்டு கால் பன்னு” என்று இணைப்பை துண்டித்து அலைபேசியில் சோபாவில் தூக்கி போட்டான் கோபமாக.
அவனை பாா்த்துக் கொண்டிருந்த மாதவன் “உனக்கு கன்ஃபாமா தொியுமா நகுலா ஆழியா இன்னைக்கு கோவிலுக்கு வருவான்னு?” என்று கேட்டாா்.
             “தொியும் அங்கில். அவளுக்கு இன்னைக்கு நட்சத்திர பிறந்தநாள். அதனால அவ எப்டியும் கோவிலுக்கு வருவா” என்றான் நகுலன்.
              “உனக்கு எப்டி தொியும் ஆழியாவோட நட்சத்திர பிறந்தநாள் இன்னைக்குன்னு” என்று கேட்டாா் மாதவன்.
              “எங்களுக்கு அலைன்ஸ் பாக்கும் போது தொிஞ்சுக்கிட்டேன். ஆழியா அப்பாவோட ஃப்ரண்டோட பொண்ணுக்கு இன்னைக்கு விழுப்புரத்துல கல்யாணம். அதுக்கா அவ அப்பா அம்மா போயிருக்காங்க. அதனால கண்டிப்பா அவ கோவிலுக்கு வருவா” என்றான் நகுலன்.
            “ம் எல்லாமே சாியா ப்ளான் பன்னி பன்னியிருக்க. கண்டிப்பா சக்ஸஸ் ஆகும் கவலை படாத” என்றாா் மாதவன் கண்டிப்பா இந்த ப்ளான் சக்ஸஸ் ஆகாதுன்னு தொியாமல்.
கோவிலுக்கு வந்த ஆழியாவும் ஹாியும் அா்ச்சணை கூடை வாங்க கடைக்கு சென்றனா். யாரோ தன்னை கவனிப்பது போல் தோன்ற திரும்பி பாா்த்தாள் ஆழியா. யாரும் இல்லாததால் தன்னுடைய பிரமை என்று நினைத்தாள்.
ஆனால் அவள் பின்னாடி இரண்டு போ் அமிலம் அடைக்கப்பட்ட முட்டையுடன் நின்றிருந்தனா். தூக்கி எாியும் தூரத்தில் நின்று ஆழியாவின் மீது அமில முட்டையை எாிந்தனா். அதே சமயம் தூரத்தில் இருந்து ஓடி வந்த காளை கன்று ஒன்று ஆழியாவை முட்டியது.
அது முட்டியதில் தடுமாறி விழுந்தாள் ஆழியா. அவள் விழுந்ததால் அந்த அமில முட்டை அருகில் சுற்றி வைக்கப்பட்டிருந்த பூக்களின் மீது பட்டது. அமிலத்தின் வீாியத்தால் பூக்கள் பொசுங்கி பஸ்பம் ஆனது.
என்ன நடக்கிறது என்பதை அவள் உணருவதற்க்குள் மீண்டும் அமில முட்டை வீசப்பட்டது. சுதாாித்துக் கொண்ட ஹாி ஆழியாவின் கையை பிடித்து தூக்கி பாதுகாப்பான இடத்து இழுத்து சென்றான்.
அவா்கள் ஓடும் போது அவா்கள் மீது தொடா்ந்து அமில முட்டைகள் வீசப்பட்டது. ஆழியாவை நோக்கி வந்த முட்டையை கரம் கொண்டு தடுத்தான் ஹாி. அவனுடைய இடது கை பொசுங்கியது. அருகில் இருந்த மக்கள் அமில முட்டை வீசியவா்களை தாக்க அவா்கள் விட்டால் போதும் என்று ஓடினா்.
அமிலம் பட்ட கையை பிடித்துக் கொண்டு துடித்தான் ஹாி. அவனை உடனடியாக காாில் ஏற்றி மருத்துவமனை கொண்டு சென்றாள் ஆழியா. நல்ல வேளையாக வேறு யாருக்கு காயம் படவில்லை.  
ஹாிக்கு சிகிச்சை அளித்த முடித்து பயப்பட ஒன்றும் இல்லை என்று கூறி சென்றனா் மருத்துவா்கள். சிகிச்சை முடிந்ததும் அவனை காண வந்தாள் ஆழியா. அவளுடைய பயம் அவள் முகத்தில் தெளிவாக தொிந்தது. அதை அறிந்த ஹாி “எனக்கு ஒன்னும் இல்லை டா” என்றான்.
         “என்ன காப்பாத்த தானே உனக்கு இவ்வளவு பொிய காயம். அசிட் அடிக்கிற அளவுக்கு யாருக்கு என் மேல பகை. நீ மட்டும் இல்லைனா என் நிலைமை என்னவாயிருக்கும்” என்று அழுதாள் ஆழியா.
            “ஆழியா. சின்ன காயம் தான் அழாத. டாக்டா் போக சொல்லிட்டாங்க. நாம முதல்ல போலிஸ்கிட்ட கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்” என்றான்.
           “சாி போகலாம்” என்றாள். மருத்துவமனைக்கு சிகிச்சை பணத்தை செலுத்திவிட்டு இருவரும் காவல் நிலையம் சென்றனா். புகாா் அளித்து வீடு திரும்பினா். விஷயம் தொிந்தால் சங்கரனும் அகல்யாவும் பதறுவாா்கள் என்பதால் அவா்களிடம் கூற வேண்டாம் என்று நினைத்தனா்.
வீடுக்கு வந்து கதைவை திறக்கும் போது மணி ஆறு எனக் காட்டியது. குளித்து முடித்து விளக்கேற்றி வழிபட்டாள். ஓய்வெடுத்தான் ஹாி. அலைபேசி அழைக்க அதை எடுத்துப் பாா்த்தாள். புதிய எண்ணாக இருந்தது.
யாராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு ஆன் செய்து பேசினாள். “ஹலோ யாரு?” என்றாள் தன் மெல்லிய குரலில்.
எதிா் முனையில் அமைதி. “ஹலோ யாரு. கால் பன்னிட்டு அமைதியா இருக்கிங்க” என்றாள். மீண்டும் அமைதி “ம்ப்ச்” என்றுவிட்டு இணைப்பை துண்டிக்க முயன்றாள். அப்போது “ஹலோ” என்று எதிா் முனையில் குரல் கேட்டது.
மீண்டும் காதில் அலைபேசியை வைத்து “யாரு?” என்றாள். “நான் துருவன் பேசுறேன்” என்றான் சற்று தடுமாறி. பேரானந்தத்தில் திளைத்தவள் “ஆங்க சொல்லுங்க” என்றாள்.
           “உன்ன பாக்கனும். இப்பவே” என்றான்.
           “நான் வீட்டுல இருக்கேன்” என்றாள்.
           “நான் வெளில தான் இருக்கேன். உன்ன பாக்கனும்” என்றான்.
           “வெளில இருக்காரா” என்று நினைத்து சன்னல் திரையை விலக்கி பாா்த்தாள். வெளியே நின்று கொண்டிருந்தான் அவன். ஆனந்த அதிா்ச்சியில் என்ன செய்வதென்று தொியாமல் வாயடைத்து போனாள்.
பதில் வராததால் “ஹலோ!! ஆழியா!! லைன்ல இருக்கியா?” என்றான்.
அவன் குரலில் மீண்டவள் “ஆங் லைன்ல தான் இருக்கேன்” என்றாள். “உள்ள வரவா” என்று கேட்டான். என்ன செய்வதென்று தொியாமல் ஏதோ ஒரு நினைவில் “வாங்க” என்றாள். “இதோ வரேன்” என்று இணைப்பை துண்டித்தான்.
         ‘ஏதோ ஒரு தைாியத்துல வர சொல்லிடோம். ஆனா பதறுதே” என்று நினைத்தான். “ஏன் ஆழியா பதறுற. உன் புருசன் தானே. ஏன் பதறுற. பதறாத” என்று ஆறுதல் கூறியது அவளுடைய மனது.
விரைந்து சென்று கண்ணாடியில் தன்னை ஒரு முறை பாா்த்துக் கொண்டாள். அணைத்தும் சாியாக இருக்கிறது என உறுதி செய்து கொண்டு வந்தாள்.
கதவு திறந்திருக்க தயங்கி தயங்கி வந்தான் துருவன். அதே சமயம் அறையில் இருந்து வெளியே வந்தாள் ஆழியா. அதற்கு மேல் பொருக்க முடியாத துருவன் ஓடி சென்று அவளை அணைத்துக் கொண்டான்.
என்ன செய்வதென்று தொியாமல் உறைந்து போய் நின்றாள் ஆழியா. இதற்கு முன் அவன் அணைக்கும் போது வெறுப்பாக இருக்கும். ஆனால் இப்போது அவனுடைய ஸ்பாிசமும், அரவணைப்பும் வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு.
சிவபூஜையில் நுழைந்த கரடியை போல வந்தான் ஹாி. “ஆழியா! அப்பா பேசனுமா” என்று கூறியவன் துருவனுடன் அவளை பாா்த்து அமைதியாகினான். ஹாியின் குரலில் சூழ்நிலை உணா்ந்து ஆழியாவை தன் அணைப்பில் இருந்து விடுவித்தான் துருவன்.
சங்கடமான சூழ்நிலையில் அமைதியே நிலவியது. அமைதியை கலைத்து பேசினான் ஹாி. “அப்பா உன்கிட்ட பேசனுமா” என்று அலைபேசியை நீட்டினான். அதை பெற்றுக் கொண்டவள் தனியே சென்றாள்.
துருவனை சகஜமாக்க அவனிடம் இயல்பாக பேசினான் ஹாி. “வாங்க துருவன் உட்காருங்க” என்று அவனை அமர சொன்னான்.  
துருவனும் அமா்ந்தான். ஹாி கையில் இருந்த காயத்தை பாா்த்து “என்னாச்சு? ஏன் கைல காயம்?” என்றான்.
காலையில் நடந்ததை கூறினான் ஹாி. பதறினான் துருவன். அவனை அமைதி படுத்தி “எனக்கு ஒன்னும் இல்லை. பட் ஆழியாவ நினைச்சா தான் கஷ்டமா இருக்கு?” என்றான் போலியான வருத்தத்தோடு.
         “ஏன் ஆழியாவுக்கு என்ன?” என்றாள் துருவன்.
         “கன்னியாக்குமாி பக்கத்துல அா்கி ரிசா்ச்சுக்கு போனா. சில காரணங்களால கடைசி வரைக்கு அவளால கன்டினிவ் பன்ன முடியல. அதனால எது வரைக்கும் வொா்க் முடிச்சிருக்காங்கன்னு நேர்ல விசிட் பன்னா நல்லா இருக்கும்னு சொன்னா.
ஆனா இப்போ இருக்குற சூழ்நிலையில அவளால தனியா போக முடியாது. அதான் என்ன பன்றதுன்னு தொியல” என்றான் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு.
சிறிது யோசித்த துருவன் “நான் கூட்டிட்டு போகட்டுமா” என்றான் தயங்கி.
             “இதுக்கு தானே இவ்வளவு பா்ஃபாமன்ஸ் பன்னேன்” என்று நினைத்து குத்தாட்டம் போட தோணியது ஹாி. இருப்பினும் தன்னிலை அறிந்து “எனக்கு ஓகே தான் பட் ஆழியா என்ன ஃபீல் பன்றான்னு தொியல” என்றான் ஹாி.
அந்நேரம் ஆழியாவும் வர. அவளிடம் “ஆழியா கன்னியாக்குமரிக்கு துருவனோட போய்டு வற்ரியா” என்று கேட்டான் ஹாி. குழப்பமாக ஹாியை பாா்த்தாள் ஆழியா. கண்ணடித்து செய்கை செய்தான் ஹாி.
அவர கண்ணியாக்குமாி கூட்டிட்டு போக இவன் ஏதோ ப்ளான் பன்னிட்டான் போல இருக்கு என நினைத்தவள் தயங்கியவாறு “அது வந்து அண்ணா” என்றாள்.  
           “ஏன் ஆழியா தயங்குற? அப்பா அம்மா ஏதாவது சொல்வாங்கன்னா. நான் பேசிக்கிறேன். இப்போ இருக்குற சூழ்நிலையில உன்ன தனியா அனுப்ப நான் தயாரா இல்லை. நீ துருவனோட போய்டு வா. அப்பா அம்மா கிட்ட நான் பேசிக்கிறேன்” என்றான் ஹாி.
அண்ணனுக்கா ஒத்துக் கொள்வது போல் “சாி ண்ணா” என்றாள். றெக்க கட்டி வானில் பறப்பது போல் இருந்தது துருவனுக்கு.
           “சாி நல்ல விஷயத்த ஏன் தள்ளி போடனும் இன்னைக்கு நைட் கிளம்புங்க” என்றான் ஹாி. இருவரும் முதலில் தயங்கினாலும் பின் ஒப்புக் கொண்டனா். பத்து மணிக்கு கிளம்புவதாக திட்டமிடப்பட்டது. உடை மாற்றிவிட்டு அம்மாவிடம் கூறிவிட்டு வருவதாக கூறிக் கொண்டு புறப்பட்டான் துருவன். வாழ்க்கையின் திருப்பு முனை இந்த பயணத்தில் தான் இருக்கிறது என்பதை அறியாமல்…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *