எனைச்சுடுமோ வெண்பனி…

This entry is part 1 of 20 in the series எனைச்சுடுமோ வெண்பனி

எனைச்சுடுமோ வெண்பனி

எனைச்சுடுமோ வெண்பனி…

எனைச்சுடுமோ வெண்பனி…

எனைச்சுடுமோ வெண்பனி…

எனைச்சுடுமோ வெண்பனி…

எனைச்சுடுமோ வெண்பனி…

எனைச்சுடுமோ வெண்பனி…

எனைச்சுடுமோ வெண்பனி…

எனைச்சுடுமோ வெண்பனி…

எனைச்சுடுமோ வெண்பனி…

எனைச்சுடுமோ வெண்பனி…

எனைச்சுடுமோ வெண்பனி…

எனைச்சுடுமோ வெண்பனி…

எனைச்சுடுமோ வெண்பனி…

எனைச்சுடுமோ வெண்பனி…

எனைச்சுடுமோ வெண்பனி…

எனைச்சுடுமோ வெண்பனி…

எனைச்சுடுமோ வெண்பனி…

எனைச்சுடுமோ வெண்பனி…

எனைச்சுடுமோ வெண்பனி…

எனைச்சுடுமோ வெண்பனி…

எனைச்சுடுமோ வெண்பனி…

எனைச்சுடுமோ வெண்பனி…

எனைச்சுடுமோ வெண்பனி…

எனைச்சுடுமோ வெண்பனி…

எனைச்சுடுமோ வெண்பனி…

எனைச்சுடுமோ வெண்பனி…

எனைச்சுடுமோ வெண்பனி…

எனைச்சுடுமோ வெண்பனி…

எனைச்சுடுமோ வெண்பனி…

எனைச்சுடுமோ வெண்பனி…

எனைச்சுடுமோ வெண்பனி…

எனைச்சுடுமோ வெண்பனி…

எனைச்சுடுமோ வெண்பனி…

எனைச்சுடுமோ வெண்பனி…

எனைச்சுடுமோ வெண்பனி…

எனைச்சுடுமோ வெண்பனி…

எனைச்சுடுமோ வெண்பனி…

எனைச்சுடுமோ வெண்பனி…

எனைச்சுடுமோ வெண்பனி…

எனைச்சுடுமோ வெண்பனி…

எனைச்சுடுமோ வெண்பனி…

 

சுடும் வெண்பனி: 1

 

“வணக்கம்
பிரெண்ட்ஸ், நமக்கு
சோறுதான்
முக்கியம்
சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்பது
உங்கள் மணிமாறன்..இன்று ஸ்பெஷல் சிக்கன்
தம் பிரியாணி சுமார் நூறு பேர்
சாப்பிடும் அளவிற்கு எப்படி செய்வதென்று பார்க்கலாம்…அதற்குத் தேவையான பொருட்கள்…..” என மொபைலில்
வீடியோ எடுத்தபடியே பேசிக் கொண்டிருப்பவன்தான் நம்
கதையின் நாயகன்….மதிய உணவு வேலை
முடிந்து, இரவு நேரத்திற்கான சமையல்
நடந்து கொண்டிருக்கும் அச்சிறு இடைவெளியில் தனக்கான
அடையாளத்தைத் தேடிக் கொண்டிருந்தான் மணி
என அனைவராலும் பாசமாக அழைக்கப்படும் அன்பானவன்….நெடுநெடுவென ஆறடி உயரத்தில், கடுமையான
உழைப்பில் உரமேறி வைரம்பாய்ந்த கட்டுடலும்,
கள்ளமில்லா விரிந்த சிரிப்பும், மூன்றாம்
மனிதரிடம் கூட அக்கறை காட்டும்
கனிவான பேச்சும் கொண்ட ஆணழகன்….

 

கர்ணனின்
கவசகுண்டலம் போல, எப்பொழுதும் வெள்ளைநிற
வேஷ்டி,சட்டையும் முறுக்கு மீசையுமென கண்ணியமான தோற்றத்துடன் தன் கடமையை நோக்கியே
ஓடிக் கொண்டிருக்கும் இருபத்தேழு வயது காளையவன்…

 

சமைத்த
உணவுகளின் சுவை பார்த்து, தேவையான
மாற்றங்களை செய்யச் சொன்னவனை கடையில்
வேலை செய்யும் பையன் வந்தழைத்தான் “மணியண்ணே!
முதலாளி உங்களை வரச் சொன்னாரண்ணே….”

 

“என்ன
விஷயமுங்க மாமா, வரச்சொன்னீங்களாம்..”

 

“நான்
கேட்டதைப்பற்றி என்ன முடிவு பண்ணியிருக்க?”

 

எதைப்பற்றி
கேட்கிறார் எனப் புரிந்தவன், வேண்டுமென்றே”
எதைப்பற்றிங்க மாமா…”

 

“ஹ்ம்ம்ம்,
ரேணுகாவை நீ கல்யாணம் பண்ணிக்
கொள்வதைப்பற்றி தான்…”

 

சிறிது
தயங்கியன் “அது சரிவராதுங்க மாமா…நம்ம பாப்பாவுக்கு நல்ல
பெரிய இடமாப் பார்க்கலாம்….” என நழுவப்
பார்க்க…

 

“இதென்ன
பதில் மணி, உன்னை மதித்து
என் பொண்ணைக் கட்டிக்கிறாயானு கேட்டதுக்கு நீ நல்ல மரியாதை
பண்ணிட்டே!!” எனக் கோபத்தில் சத்தமிட…

 

பொறுமையாக,
ஆனால் அழுத்தமான குரலில் “அதைத்தான் நானும் சொல்லறேனுங்க மாமா,
என் பொண்டாட்டியும் பிள்ளையும் என்னை மதிக்கணும்னு எதிர்பார்க்கிறேன்…எங்கம்மா மாதிரி என் வாழ்க்கையும்
ஆகிடுமோனு பயமாயிருக்குங்க….”

 

மருமகன்
ஏன் இப்படி சொல்லுகிறான் என்று
தன் கையிலாகாத நிலையையெண்ணி வருந்தியவர் “உங்க அத்தை, பாப்பாவை
உனக்கு கட்டிக்கொடுக்க நினைத்ததே, வீட்டோட மாப்பிள்ளையாய் நீ
இருப்பாயென்றுதான்….மேலும், தொழிலிலும் நீ
கில்லியாக இருக்கிறாய்…உன்னைவிட்டால் இப்படி ஒரு அடிமை
குடும்பத்திற்கு உழைத்துக்கொட்ட
கிடைக்குமா?? அதான், இந்த கல்யாண
ஏற்பாட்டின் ரகசியம்…..” என பெருமூச்சுவிட்டபடி “ஆரம்பத்துலயே உங்க
அத்தையை நான் கண்டிச்சு வச்சிருக்கணும்….தப்புப்பண்ணிட்டேன்டா…இப்பயெல்லாம் அக்கா அடிக்கடி கனவுல வந்து
உன்னை நினைத்து அழுகிறமாதிரியே இருக்கு…என் பிள்ளையாவது
ஒழுங்கா பார்த்துக்குவியானு கேட்குற மாதிரி தோணுது…
அக்காவைத்தான் நான் சந்தோஷமாக வைக்கலை….நீயாவது ஆசைப்பட்ட வாழ்க்கையை
வாழணும்….ரேணுகாவை நீ கட்டிக்க மறுத்தால், இங்கே
உன்னால் நிம்மதியாக இருக்க முடியாது….அக்கா
என்கிட்ட கொடுத்த நகைகளை விற்றுத்தருகிறேன், மேலும் என்னால் முடிந்தவரை
ஒரு தொகையையும் ஏற்பாடு பண்ணித்தருகிறேன்….நீ
எங்கேயாவது ஒரு வேலையை வாங்கிட்டுப்
போயிடுடா……உன் நல்ல மனசுக்கு
எங்கிருந்தாலும் நீ நல்லாயிருப்பே!!!….”என மருமகனின்
கையைப் பிடித்துக்கொண்டு கண்கலங்கினார்…

 

மணிக்கு
ஐந்து வயதாக இருக்கும்பொழுது, பங்காளிகளுக்குள்
நடைபெற்ற சொத்துத் தகராறில் இவனின் தந்தை வெட்டிக்கொல்லப்பட்டார்….இதனால் கணவனை இழந்த
வசந்தி, கொன்றவர்களுக்கு தண்டனைவாங்கிக் கொடுக்க கேஸ் போட்டார்…கொலைசெய்தவர்கள் தலைமறைவாகிட, வாய்தா மேல் வாய்தா
என வழக்கு ஐந்தாண்டுகள்வரை இழுத்தது…..இறுதியில், எதிர்க்கட்சியினர் லம்பாக ஒரு தொகையை
கைமாற்றியதால், போதிய சாட்சியில்லையெனக் கூறி
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக வழக்கு தீர்ப்பானது….

 

இத்தனை
ஆண்டுகளில், கோர்ட், கேஸ் பங்காளிகள்
ஏற்படுத்திய நஷ்டமென மொத்த சொத்தும்
கரைந்து, விடுதலை பெற்ற கொலையாளிகள்
தொந்தரவும் அதிகரிக்கவே, மொத்தமாக எல்லாத்தையும் விட்டுவிட்டு தன் தம்பியிடம் தஞ்சம்
புகுந்தார் வசந்தி….எஞ்சிய ஒரு சில
நகைகளைத் தவிர அவரிடம் வேறொன்றுமில்லை….
சேலத்திற்கு அருகேயுள்ள தலைவாசல் என்ற கிராமத்தில் சற்றே
விசாலமான ஓட்டுவீடும், சேலம் பைபாஸ் ரோட்டில்
ஒரு சிறிய உணவகமுமே வசந்தியின்
தம்பி சண்முகத்திற்கிருந்த சொத்தாக இருந்தது….  

 

முதலில்
வசந்தியை ஒழுங்காக நடத்திய தம்பி பொண்டாட்டி,
போகப் போக அவரை முழுநேர வேலைக்காரியாகவே
மாற்றிவிட்டார்…..வீட்டு வேலை, ஹோட்டல்
வேலை என ஓய்வில்லாத வேலை,
தேவைக்கு குறைவான தூக்கமும், அதிகப்படியான
உழைப்பும் அவரின் உடம்பை தளர்ந்து
போக வைத்தது… தன் அம்மாவின் உடம்பை
கவனிக்க வேண்டும் என மணி முடிவெடுக்கும்
பொழுது, எல்லாமே கை மீறியிருந்தது….

 

நல்ல மதிப்பெண்கள் பனிரெண்டாம் வகுப்பில் எடுத்திருந்தாலும், மணியினால் தனக்குப் பிடித்த கணினிப்பொறியியல் படிப்பை
படிக்க முடியவில்லை…அத்தை படித்தது போதும்
ஹோட்டலைக் கவனியென பேயாட்டம் ஆடவே,
மாமா தான் அத்தையை நம்ம
தொழிலுக்கு இந்தப்படிப்பு அவசியமென மனைவியிடம் வாதாடி மூன்று வருட
பி.எஸ்.சி கேட்டரிங்
மற்றும் ஹோட்டல் மானேஜ்மென்ட் படிப்பில்
சேர்த்து விட்டார்…

 

மணியும்,
கிடைத்த படிப்பில் தன் திறமையை நன்றாக
வளர்த்துக் கொண்டான்…காலேஜ் நேரம் முடிந்து,
மாமாவின் ஹோட்டலில் வேலை என எப்பொழுதும்
தன்னை சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டான்….

 

படிப்பு
முடிந்து, மாமனிற்கு ஓய்வு கொடுத்துவிட்டு பொறுப்பைத்
தான் எடுத்துக் கொண்டான்….சிறு உணவகமாகயிருந்ததை தன்
கடின உழைப்பால், இந்த ஐந்து வருடத்தில்
ஏசி வசதியுடன் கூடிய பெரிய பேமிலி
உணவகமாக மாற்றியிருந்தான்….இரு வருடங்களுக்கு முன்,
தன் அன்னையும் மஞ்சள்காமாலை முற்றிப்போய்  கடைசி
கட்டத்தில் ஒன்றுமே செய்யமுடியாத நிலையில்
இறந்துவிட, உணவகமே அவனது முழுநேர
இருப்பிடமானது…

 

கடந்த இரு வருடமாகத்தான் யூ–டியூபின் மூலம் சற்று கணிசமான
வருமானம் கிடைக்கத் தொடங்கி இருந்தது…அதுமட்டுமில்லாமல்,
ஆன்லைன் குக்கரி ஒர்க் ஷாப்
மூலம் வகுப்புகளும் அவ்வப்போது நடத்துவான்….தன்னுடைய சேனல் மூலம், அவனுக்கென
பெரிய பேன்ஸ் கூட்டத்தையே பெற்றிருந்தான்….முதலில் எங்கு செல்லலாம்
என யோசித்தவன், பின்னர் தமிழ்மக்கள் அதிகம்
வசிக்கும் பெங்களூர் செல்லலாம் என முடிவெடுத்தான்….சேனல்
பாலோயர்ஸ் உதவியுடன், தங்குவதற்கு தனக்கென ஒரு இடத்தை
தேர்ந்தெடுத்தவன், அத்தையின் சாபத்துடனும், ஹோட்டலில் வேலை செய்யும் அனைவரிடமும்
கலங்கிய கண்களை மறைத்தபடி பிரியாவிடை
பெற்றான்…பஸ் ஏற்றிவிட வந்த
மாமன், ஐந்து லட்சம் பணத்தைக்
கொடுத்து “இது முதன்முதலில் உங்க
அப்பா எங்க அக்காவுக்காக ஆசையாகப்
போட்டது….எவ்வளவு கஷ்டம் வந்தபோதும்
இதை அக்கா கூடவே வைத்திருந்தாள்…உன் அப்பா, அம்மா
ஆசிர்வாதம் எப்பவும் உன்கூடவே இருக்கும்….”எனச் சொல்லியபடி மூன்றுபவுன்
தங்கச்சங்கிலியை தன் மருமகனின் கழுத்தில்
மாட்டிவிட்டார்….இவ்வாறாக, கிராமத்துக் காளையான மணியின் பயணம்
தனக்கான வாழ்க்கையைத் தேடி பெங்களூர் நோக்கி  நகர்ந்தது….

 

சென்னை
ஈசிஆரில் கடற்கரையை ஒட்டி அமைத்துள்ள, ஆடம்பரமான
விசாலமான அபார்ட்மென்டில் தனது கருப்புநிற ஆடி
காரை
பார்க் செய்துவிட்டு, மூன்றாம் மாடியிலுள்ள 303 எண்ணிட்ட பிளாட்டிற்குள் நுழைந்தாள் நம் கதையின் நாயகி
அதிதி தேவ்….அதிதியைப் பார்த்ததும்
“ஹாய் பேபி, வா..வா..சீக்கிரம் வொய் சோ லேட்?”
என்றபடியே அதியின் கையிலிருந்த பேகை
வாங்கியவள் “கூலிங்கா இருக்கா…” என்றவள் அதனை சோதித்துப்பார்த்து
“கூலிங் கம்மியாத்தான் இருக்கு…மது வர்ற வரைக்கும்
பிரீஸரில் வைக்கிறேன்…” என்றபடியே எழுந்தாள் சிமி அகர்வால்….(கூலிங்
வேணும்னு கேட்டது ஐஸ்கிரீமுக்கு என்று
நீங்கள் நினைத்தால் அதற்கு சங்கம் பொறுப்பில்லை
மக்களே!!!)

 

சிறிது
நேரத்தில் போன் பேசியபடியே நேரமாகி
விட்டதே என அரக்கப்பரக்க நுழைந்தவள்,
போன்காலை மியூட்டில் போட்டுவிட்டு “சாரி செல்லோஸ், அம்மா
ஏதோ அலையன்ஸ் பார்த்திருக்கிறார்களாம்…இப்பவே பேசச்சொல்லி ஒரே
டார்ச்சர்….இவன்வேற நேரங்காலம் புரியாமல்
ரொம்ப மொக்கை போடறான்….சீக்கிரமா
கட் பண்ணிட்டு வரேன்…”என்றவள் அறைக்குச்சென்று ம்ம்
போட்டபடியே உடைமாற்றி வந்தாள்…மதுவென தோழிகளால் அழைக்கப்படும் மதுமிதா கிருஷ்ணன்…

 

இந்த வளாகத்தை பராமரிக்கும் வாட்ச்மேனின் மனைவி சுந்தரிதான், இவர்களுக்கு
ஆல்இன்ஆல் அழகுசுந்தரி…தோழிகள் மூவருக்கும், சமைப்பது,
துவைப்பது, சுத்தப்படுத்துவதென முழுநேரம் இவர்களுக்காகவே வேலை செய்யும் மெய்ட்….அவ்வப்போது, பொறித்த கோழி, வறுத்த
முந்திரி என சைடு டிஷும்
செய்து கொடுப்பார்….

 

கூலிங்
பியரும், சூடான சைடு டிஷும்
மூவருக்கும் நடுவில் வைத்திருக்க, இன்னும்
மது போனில் ம்ம் கொட்டிக்
கொண்டிருந்தாள்….கடுப்பான அதி, மதுவிடமிருந்து போனைப்
பிடுங்கியவள் “ஹலோ பாஸ், நான்
மதுவுடைய பிரென்ட் பேசறேன்…இன்னைக்கு ஃப்ரைடே நைட்…பியருல
வேற கூலிங் போயிட்டிருக்கு, பொறித்த
சிக்கன் வேற வா வாங்குது ….சூடு ஆறிப் போச்சுனா நல்லாயிருக்காது
பாஸ்…சோ, உங்க கடலையை
நாளைக்கு கன்டினியூ பண்ணிக்கோங்க…ஆங், காலையில் கூப்பிடறதாக
இருந்தா
ல் 11 மணிக்குமேல கூப்பிடுங்க….அப்பத்தான் எங்களுக்குத் தெளியும் என்றவள் போனை அணைத்து
ஷோபாவின் மேல் தூக்கி எறிந்தாள்…. 

 

அதற்குப்பின்,
வேற எந்தத் தொல்லையுமில்லாமல் பேச்சு,
பியர், சிக்கன், ராக் மியூஸிக்குடன் டான்ஸ்
என விடியக்காலை 2 மணிவரை சென்றது இவர்களின்
ஆட்டம்…அவர்கள் தெளிந்து எழுவதற்குள்
அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்
….

 

அதி, மது, சிமி மூவரும்
ஐந்தாம் வகுப்பு முதல் ஒன்றாகவே
இருக்கும் உயிர்த்தோழிகள்….பெங்களூரில் இருந்த புகழ்பெற்ற ரெசிடென்ஷியல்
ஸ்கூலில் ஒரே ரூமில் தங்கிப்
படித்தவர்கள்….சிமியின் அப்பா, மும்பையின் பிரபலமான
வைர வியாபாரி…தோழிகளை விட்டு பிரிய
மனமில்லாத சிமி, சென்னையிலேயே, தங்க,வைர
நகைகளுக்கான தனிப்பட்ட வடிவமைப்பு கொண்ட ஷோரூம் ஒன்றைத்
தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறாள்….3 பெட்ரூம்
கொண்ட இந்த ஆடம்பரமான பிளாட்டும்
சிமியுடையதுதான்…மதுவின் அம்மா, அப்பா
இருவரும் துபாயில் வேலை பார்க்கும் மருத்துவர்கள்…மகளின் விருப்பப்படி, பணத்தைத்
தண்ணீராக செலவு செய்து மத்திய
சென்னையில் மிகப்பெரிய மகப்பேறு மருத்துவமனையை கட்டித்தந்துள்ளனர்….ஆம், சென்னையில் ராசியான
கைனகாலஜிஸ்ட் டாக்டர்களில் மதுவும் ஒருத்தி….ஹாஸ்பிடல்
நிர்வாகத்தையும் பார்ப்பதால், விஐபி பேசன்ட் மற்றும்
கிரிட்டிகல் கேஸ்களை மட்டுமே பார்க்கும்
மிகவும் பிஸியான, காஸ்டலியான டாக்டர்…..

 

பெற்றோர்
எதிர்ப்பை மீறி, காதலித்து திருமணம்
செய்துகொண்ட தேவேந்திரன் மற்றும் ஜெஸ்னாவின் ஒரே
மகள் தான் அதிதி…தந்தை
சென்னை தலைமையகத்தில் உயரதிகாரி, தாயோ கஸ்டம்ஸ் டிபார்ட்மென்டில்
உயர்பதவி வகிக்கிறார்…..ஆரம்பத்தில் நன்றாக சென்ற அவர்களின்
காதல் வாழ்க்கை, அதிதி பிறந்தபிறகு யாருடைய
உதவியும் இல்லாமல் ஜெஸி குழந்தை வளர்ப்பில்
தடுமாற, கணவனின் ஒத்துழைப்பு சிறிதும்
இல்லாததால் ஆரம்பித்த சின்ன சின்ன சண்டைகள்
பெரிதாகி, பின்னர் இருவரும் வீட்டிலிருந்தாலே
சண்டை என்றாகிப் போனது……மனதில் அன்பிருந்தால், வீட்டில்
பூகம்பம் வெடித்தாலும் சமாளித்து மீண்டு வரலாம்….ஆனால்,
மனதில் வெறுப்பிருக்கும் பொழுது, சின்ன விஷயம்
கூட பூதாகரமாகி விஸ்வரூபம் எடுக்கும்…. ஒரே இனத்தில் திருமணம்
செய்தாலே, பல பிரச்சனைகளை சமாளிக்க
வேண்டியிருக்கும்….இதில் இந்து தந்தைக்கும்,
முஸ்லீம் தாய்க்கும் பிறந்த அதி, இருவேறு
கலாச்சாரத்திற்கிடையே அவர்களின் சண்டையினால் பந்தாடப்பட்டாள்…ஒரு கட்டத்தில், அதிக்காககூட
சேர்ந்து வாழ விருப்பமில்லாமல் டிவோர்ஸ்
வாங்காமலே தனியாக பிரிந்து வாழத் தொடங்கினர்…அதற்குப்பிறகு, கல்லூரிப் படிப்பு முடியும் வரை,
விடுமுறையில் இங்கு பாதி நாட்கள்,
அங்கு பாதி நாட்களெனக் கழித்தாள்…அப்பொழுதும், நீ என்ன செய்தாய்,
நான் செய்கிறேன் பார் என மகளுக்கு
யார் அதிகமாக செய்ததென போட்டி
போட்டனரே தவிர, அவளுக்கு தேவையான
அன்பை, அக்கறையைக் காட்டவேயில்லை….. கல்யாணம், குடும்ப வாழ்க்கை என்பது
சுத்த அபத்தம் என அதியின்
மனதில் வலிக்க வலிக்க பதிய
வைத்தார்கள்…வேலைக்கு சென்றபின், முற்றிலுமாக தாய் தந்தையிடமிருந்து விலகிக்
கொண்டாள்…..

 

படிப்பாளி
குடும்பத்தில் பிறந்ததாலோ என்னவோ, படிப்பில் கெட்டிகாரியான
அதி கணிணிப்பொறியியல்
படிப்பில்
கோல்ட் மெடல் வாங்கி தேர்ச்சி
பெற்றவள், உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டுக் கம்பெனியில்
அதிகப்படியான சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டாள்…வேலையென்று வந்தால், வெள்ளைக்காரியாக மாறிவிடும் அதி, மற்றநேரத்தில் தமிழ்நாட்டுப்
பெண்ணாக மாறி வகை தொகையாக
தனக்குப்பிடித்த உணவுகளை ஒரு பிடி
பிடிப்பாள்…..தொடர்ச்சியான வேலையினாலான மனஅழுத்தத்தைக் குறைக்க பலர் தூங்குவது
, புத்தகம் வாசிப்பது, சமைப்பது, படம் பார்ப்பது, ஷாப்பிங்
போவது, தண்ணியடிப்பது என தங்கள் அழுத்தத்தைக்
குறைத்துக் கொள்வார்கள்….அதுபோல, அதிக்கு விதவிதமான
உணவுகளை உண்பதுதான் அவளின் ஸ்ட்ரெஸ்பஸ்டர்….(நம்ம
இனமடா நீ….)

 

வஞ்சகம்
இல்லாமல் உண்ணுவதாலோ, என்னவோ அதி சற்று
பூசின உடல்வாகுடன், மென்மையான சருமத்தில் பச்சைநரம்புகள் தெரிய கொழுக் மொழுக்கென
இருப்பாள்….வெள்ளாவியில் முக்கி எடுத்தார்களோ! என
பெண்களே பொறாமைப்படும் அளவுக்கு நவநாகரீகமான, நவீனயுக அழகி…

 

திங்கள்கிழமை காலை
எட்டு
மணி

 

ஆபிஸில்,
அதி தனக்கென ஒதுக்கப்பட்ட தனியறையில்
அமர்ந்து, தீவிரமாக கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்….கிட்டத்தட்ட, ஆயிரம்பேர் வரை பணிபுரியும் பெரிய
அக்கௌன்ட்டில் தான் அதி வேலை
செய்கிறாள்…பணியில் சேர்ந்த, இந்த
ஐந்து வருடத்தில் சிலபல சர்டிபிகேஷன் செய்து,
இன்று ஆறு வெவ்வேறு ப்ராஜெக்ட்டிற்கு
ஆர்க்கிடெக்ட்டாக பணிபுரிகிறாள்….புதிய ப்ரொஜெக்ட்டை, கிளைன்ட்டின்
தேவைக்கேற்ப கணினியில் வடிவமைத்து எங்கெங்கே எந்த டெக்னாலஜியை பயன்படுத்துவது,
எத்தனை டெவலப்பர், டெஸ்டர் வேண்டும், எத்தனை
நாளில் முடிக்கலாம் என்பது போன்ற ப்ளூபிரிண்ட்
தயாரித்து கொடுப்பதுடன், மிகவும் கடினமான நேரத்தில்
டெவெலப்மென்ட் டீமிற்கு டெக்னிக்கல் ஹெல்ப்பும் செய்யவேண்டும்…அவ்வப்போது, டெக்னிக்கல் க்ரூமிங் செஷனும் எடுப்பாள்….

 

வேலையின்
நடுவே இண்டர்காம் ஒலியெழுப்ப,”ஹலோ,அதி ஹியர்….”

 

“ஹாய்
அதி, நான் முகுந்த் பேசறேன்மா,
கொஞ்சம் ஜிஎம்(ஜெனரல் மானேஜர்)
ரூம் வரைக்கும் வரமுடியுமா? இட்ஸ் அர்ஜெண்ட்…” என
டெலிவரி மானேஜர் அழைப்புவிட….

 

“ஓகே
முகுந்த், ஐ வில் பி
தேர் சூன்….” என்றவள் ஜிஎம் ரூமை
நோக்கிச் சென்றாள்….

 

“மே
ஐ கம் இன்
சார்?”

 

“யெஸ்,ப்ளீஸ்..”என்றபடியே சேரில் அமரச் சொன்னவர்…முகுந்திடமும், அதியிடமும் பேச ஆரம்பித்தார்…

 

“பெங்களூர்
பிராஞ்சுக்கு ஒரு நியூ ப்ராஜெக்ட்
வந்திருக்கு, கொஞ்சம் பெரிய பட்ஜெட்
அதுக்கு யாரைப் போடலாம்னு அனலைஸ்
பண்ணி, நம்ம அதியை அங்கே
அனுப்பச் சொல்லியிருக்காங்க ஒரு வருடத்திற்கு…..”

 

முகுந்த்
“சார், ஆல்ரெடி அதி இங்கே
ஆறு ப்ரொஜெக்ட்டை ஹாண்டில் பண்ணிட்டு இருக்காங்க…இவங்க இருக்கிறதுனாலதான் எந்தப்
பிரச்சனையும் இல்லாமல் சரியான நேரத்தில் டெலிவரி
பண்ண முடியுது…அதியை அனுப்ப முடியாதுனு
சொல்லிடுங்க…”

 

“இங்க
பாரு முகுந்த், அதியை இங்கேயிருந்து விடுவிப்பது
உனக்கு மட்டுமில்லை, நம்ம அக்கௌன்ட்டுக்கே பெரிய
இழப்புதான்….அதியை அங்கே அனுப்புமாறு
தனிப்பட்ட முறையில் எனக்கு ரெக்வெஸ்ட் பண்ணுனது
நம்ம பிராஞ்சு ஹெட் பாஷ்யம் சார்…என்னால் மறுப்பு சொல்ல
முடியாத நிலை….மேலும், இது
அதிக்கு ஒரு நல்ல வாய்ப்பு,
அடுத்த படிக்கு எடுத்துச் செல்லும்…நீ என்னம்மா சொல்லறே??”

 

“ஹ்ம்ம்
பாஷ்யம் சார் ரெக்வெஸ்ட், நீங்களே மறுக்க முடியாதபொழுது
நான் என்ன பண்ண முடியும்
சார்….பட், ஒர்க் ரொம்ப
சேலஞ்சிங்கா இருக்கும்னு தோணுது சார்…அதுக்காகவே
இந்த ஆபரை அக்ஸெப்ட் பண்ணறேன்….நான் எப்ப அங்கே
ஜாயின் பண்ணனும் சார்?”

 

“இன்னும்
2 வீக்ஸில்…பி ரெடி…”என்றபடி
விடைகொடுத்தார்…

 

அப்படி
இப்படியென நாட்கள் வேகமாக ஓட,
அதி பெங்களூர் கிளம்பும் நாளும் வந்தது…தோழிகள்தான்
ஒருவரையொருவர் பிரிய முடியாமல் மிகவும்
தவித்துப் போயினர்….பெங்களூரில்தான் மூவரும் பள்ளிப்படிப்பை முடித்ததால்,
அங்கே எல்லா இடமும் அதிக்கு
அத்துப்படி …. எனவே புதுஇடமென்ற பயமில்லை…மேலும், ஸ்கூல் பிரெண்ட்ஸின்
மூலம் தனக்கென ஒரு பிளாட்டையும்
முன்பதிவு செய்திருந்தாள்…..இவ்வாறாக, தனது வாழ்க்கைப் பயணத்தை
பெங்களூர் நோக்கி ஆடி காரில்
தொடங்கி வைத்தாள்…

 

கிராமத்துக்
காளைக்கும், மாடர்ன் மங்கைக்கும் நடக்கும்
காதல் கலாட்டாவை இனிவரும் அத்தியாயங்களில் பார்ப்போம்…

 

வெண்பனி சுடும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *